Advertisement

அத்தியாயம்… 22 
“எதுக்கு தீபா பத்தி கேட்கிறிங்க…?” 
ஸ்ரீமதிக்கு நவீன் திபீகாவை பற்றி விசாரிப்பதில் ஏதோ புரிவது போல்  தான் இருந்தது.  இருந்தும் என்ன என்று தெளிவு படுத்திக் கொள்ளாது நாமே ஏதாவது நினைத்துக் கொள்ள கூடாது என்று நினைத்து.. தான் ..
“எதுக்கு தீபாவை பற்றி விசாரிக்கிறிங்க…” என்று ஸ்ரீமதி கேட்டது..
அவளின் கேள்விக்கு நவீன் பதில் அளிக்கும் முன் அகில ரூபன்… “வேற எதுக்கு …? இது வரை ஒன்னாவே இருந்த தோழிங்க இனியும் ஒன்னாவே இருக்கட்டும் என்று தான்…” என்ற கணவனின் பேச்சில் முறைத்த ஸ்ரீ..
நவீனை பார்த்து… “நீங்க சொல்லுங்க…” என்று கேட்டதும்..
ஒரு சிரிப்புடன்..  “இல்லே நேத்து பேஸ் புக்ல தீபா பிரண்ஸ் ரிக்வெஸ்ட் கொடுத்து இருந்தா..நானும் அக்செப் பண்ணிட்டேன்…” என்று அவன் பேச்சில்..
“ தீபாவை பத்தி விசாரிக்க இவ்வளவு காலையில் வந்து இருப்பதை பார்த்தா இது வெறும் பேஸ் புக்கோடு  நிற்பது போல இல்லையே..
உங்க பேஸ் புக்குல இருக்க பிரண்ஸ் லிஸ்ட்ல இருக்க எல்லோரையும் பத்தியுமா நீங்க விசாரிச்சிட்டு இருப்பிங்க…” என்று ஸ்ரீமதி தன்னை  குறு குறு என்று பார்த்து  கொண்டே கேட்ட கேள்வியில்…
“இல்ல எனக்கும் அவளுக்கும் ஏதோ இருக்கு போல  மதி…” என்று நவீனின் சொன்னதும்..
“ஒரே நாள் பேஸ் புக் சேட்டிங்கில் எப்படிடா செட்டாகிடும் என்று நீ நினைக்கிற….?” என்று அகில ரூபன் கேட்டான்.
“ம் நான் ஒரே நாள் எல்லாம் இல்லை.. அனிதா கல்யாணம் அன்னைக்கு நான் பார்த்தேன்..அதோடு ஒரே நாள் சேட்டிங் இருந்தாலும்  விடிய விடிய சேட்டிங் செய்துட்டு தான்  எனக்கு அவளை பிடித்து இருக்கு..
ஆனா நீங்க… மதியை  ஒரே நாள் அதுவும் நேருல கூட இல்ல… போட்டோவில் பார்த்தே…” என்ற நவீனின் பேச்சை, மதி முதலில் ஏதோ சொல்கிறான் என்று அசட்டையாக கேட்டுக் கொண்டு இருந்தவள்..
அகில ரூபனை பார்த்து… “ஆனா நீங்க நேரில் இல்லாது போட்டோவிலேயே….” என்று சொல்ல ஆரம்பித்தவன் முழுவதும் சொல்லாது பாதியில் விட்ட பேச்சில்.. மதிக்கு தான் மண்டை காய்ந்து போய் விட்டது…
நவீன் தன்னை பற்றி தான் பேசுகிறான்  என்று புரிந்து இருந்தது..ஆனால்  அது என்ன என்று பாதியில் விட்டவனின் பேச்சில்…
“என்ன போட்டோ…? யார் போட்டோ…? “ என்று ஆவளோடு  தன்னை விசாரிக்க ஆரம்பத்த மதியிடம்…
“இது எல்லாம் நான் சொன்னா அவ்வளவு நல்லா இருக்காது மதி.. இது எல்லாம் அண்ணன்  தான் உங்க கிட்ட சொல்லனும்…” என்று நவீன் சொன்னதும்..
மதி… “அப்படியா…?” என்பது போல் கை கட்டிக் கொண்டு நவீனை பார்த்து தெனவெட்டாக ஒரு பார்வை பார்த்தாள்.
பின்… “அப்போ தீபு பத்தி  நான் சொல்வதை விட அவளே உங்க கிட்ட சொன்னா நல்லா இருக்கும்.. என்ன நான் சொல்வது…?” என்று போக பார்த்த மதியின் கை பிடித்து தடுத்து நிறுத்திய நவீன்…
“மதி மதி… நிஜமா சொல்றேன்.. நான் இங்கு இருந்து போனப்ப வீட்டில் ரொம்ப  லோன்லியா பீல் பண்ணேன் மதி.. 
ஆனா தீபு கிட்ட சேட் செய்த அந்த கொஞ்ச நேரத்துக்கு எல்லாம்…” என்று சொல்லிக் கொண்டு வந்த நவீன் . அடுத்து  பேசாது மதியின் முகம் பார்த்தான்.
“சீ நான் சும்மா சொன்னேன் நவீன்.. தீபு ரொம்ப  நல்ல பெண்…ஆனா வசதி… “ என்று பேசிக் கொண்டு வந்தவளை தடுத்து நிறுத்திய நவீன்..
“வசதி எல்லாம் எனக்கு தேவையில்ல மதி.. இப்போ எனக்கு தேவை ஒரு நல்ல துணை தான்…” என்று நவீன் சொன்னதும்..
“அப்போ சரி… “ என்று தீபிகாவை பற்றி அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தாள்.
“அவளுக்கு யாரும் இல்ல நவீன்…” என்ற மதியின் பேச்சை..தடை செய்வது போல் அகில ரூபன்..
“ அ[ப்படி சொல்லாதே மதி..இனி அவளுக்கு எல்லாமாக நான் இருப்பேன்…” என்று அவனின் பேச்சில்,  நவீன் மதி அதிர்ந்து போய் அவனை பார்த்தனர்..
“அப்படின்னு என் தம்பி சொல்வான்… “ என்று அகில ரூபனின் பேச்சில்..அவனின் முதுகில் ஒரு போடு போட்ட மதி…
“கல்வி துறை..அந்த வேலையை மட்டும் பார்க்காது வேறு எல்லாம் வேலையும் பார்க்குது…” என்ற மதி சொல்ல..
“ஆமாம் ஆமாம்…” என்று  நவீனும்  மதியின் பேச்சுக்கு ஒத்து ஊதினான். 
இப்படி இவர்களின் கலாட்டா இங்கு நடைப்பெற… காதலித்து மணந்த அனிதாவும்,  அஷ்வத்தும் எலியும், பூனையுமாக எதிர் எதிரில் அமர்ந்துக் கொண்டு முறைத்துக் கொண்டு இருந்தனர்..
“எப்படி..? எப்படி…?  எங்க அண்ணன் உங்க தங்கை பத்தி பேசினா நீங்க என்னை அம்போன்னு விட்டு விட்டு வந்துடுவிங்க..அப்படி தானே…? அப்படி தானே…?”
ஒரே ஒரு விசயத்தை வித விதமாய் கேட்டு கேட்டு அஷ்வத்தின் காதில் ரத்தம் வராத குறையாக அதை கேட்டுக் கொண்டு இருந்தாள்
 அதற்க்கு… “இல்லடா நீயே பார்த்த தானே…?” என்று அஷ்வத் தன் பக்க நியாயத்தை  பேச ஆரம்பீத்தால் போதும்..
“பேசாதிங்க.. நீங்க பேசாதிங்க… “ என்று அஷ்வத்தின் பேச்சை தடுத்து நிறுத்தி விட்டு மீண்டும் அனிதா தன் பேச்சை தொடர ஆரம்பித்து விடுவாள்.
“எப்படி என்னை விட்டு விட்டு வரலாம்…? வரும் போது என்னையும் தானே கூட்டிட்டு வரனும்…
நீங்க கூப்பிட்டு நான் வராம போனா பரவாயில்ல..ஆனா நீங்க என் பக்கம் பார்வை கூட திருப்பாது… அப்படி எப்படி போகலாம்.. .? அப்போ இனியும் அது போல் என் அண்ணன் உங்க தங்கையை ஏதாவது பேசினா என்னை அப்போன்னு விட்டு விடுவிங்க..? லே.. என்று கேள்விக்கு..
“இல்ல அனி… “ என்று அஷ்வத் தன் பேச்சை ஆரம்பித்தால் போதும்..
“நீங்க பேசாதிங்க…” என்று அஷ்வத்தை  எதுவும் பேச விடாது செய்து விட்டு…
“அதுவும் இப்போ அவங்க கணவன் மனைவி…  குடும்பம் என்று இருந்தா எதாவது பிரச்சனை வரும்.. அப்போ என் அண்ணன் உங்க  தங்கையை ஏதாவது சொல்வார்..
அப்போ என்னை இங்கு இருந்து விரட்டி விட்டுடுவிங்கலா…? இப்போவாவது நான் மட்டும் தான் இருக்கேன். என்னை விரட்டினா பாதிப்பு எனக்கு மட்டும் தான்..
நாளைக்கு ஏதாவது குழந்தை வந்தா.. அப்போ என்னை வீட்டை விட்டு விரட்டினிங்கனா… பாதிப்பு என் குழந்தைக்கும் தானே…சொல்லுங்க  சொல்லுங்க…?” என்று அனிதா கேட்க..
இந்த த்டவை அஷ்வத் வாய் திறந்து அனிதாவிடம் பேசவில்லை..ஆனால் மனதுக்குள்.. எங்கேடி குழந்தை வரும்..? நீ என்ன குந்தி தேவியா வானத்தை அன்னாந்து பார்த்து மந்திரம் சொன்னா கையில் குழந்தை இருக்கிறதுக்கு..
முதல் நாள் அவ்வளவே அதுக்கு அடுத்து  உங்க அண்ணன் பேசிய பேச்சுக்கு  அடுத்து ஒன்னும் நடக்காம நானே இருக்கேன்..இதன் லட்சனத்தில், என்னால குழந்தை பாதிகப்படுமான்னு …?கேட்கிறாள்.
அது தெரியிறதுக்கு முதல்ல குழந்தை பிறக்கனும் டீ.. அதுக்கு நான் உன் பக்கத்தில் வரனும்.. எங்கே வர விடுற…? என்று அஷ்வத் மனதுக்குள் புலம்ப..
“நான் கேட்டுட்டே இருக்கேன் பதில்  சொல்லாம இருக்கிங்க..வாயில் என்ன  கொழுக்கட்டையா இருக்கு…? வாயை திறந்து பேசுங்க…” என்று கத்திக் கொண்டு இருக்கும் மனைவியையே  அஷ்வத்  பார்த்துக் கொண்டு இருந்தான்.
பின் மெல்ல மெல்ல அவளையே பார்த்த வாறு அனிதாவிடம் நெருங்க… “இப்போ எதுக்கு என் கிட்ட வர்றிங்க..?  இப்போ எதுக்கு என்னையே பார்க்கிறிங்க…?” என்று திக்கி திணறி அனிதா கேட்டாள்.
கணவன் இடை வெளிவிட்டு அமர்ந்திருந்த போது குற்றால அருவி போல் கொட்டிய அனிதாவின் வார்த்தைகள்.. இப்போது தண்ணீர் பற்றாக் குறையால் பார்த்து பார்த்து தண்ணீரை செலவு செய்யும் இல்லத்து அரசிகளை  போல.. அனிதாவின் வார்த்தைகளுக்கும் பஞ்சம் ஏற்ப்பட்டு போனது…
அதுவும் அஷ்வத்தை பேச விடாது… “ நீங்க பேசாதிங்க..நீங்க பேசாதிங்க…” என்று சொல்லி அவனை பேச விடாது  பேசிக் கொண்டு இருந்த அனிதா கணவனின்  அருகாமையில் வாய் அடைத்து போய் விட்டாள்.
ஆம் அனிதா வாய் அடைத்து தான் போய் விட்டாள்… அஷ்வத் தன்  வாயால் அனிதாவின் வாயை அடைத்ததால் வாய் அடைத்துப் போனவள்..
அவள் மூச்சு முட்ட அவள் காற்றுக்கு திண்டாடியதில்  அவளை விட்ட அஷ்வத்..
“இப்போ என் வாயில் கொழுக்கட்டை இல்லை என்று தெரியுதா…? ஆ இன்னொன்னும் குழந்தை பிறந்தா தான் நான் உன்னை வீட்டை விட்டு அனுப்பினா என்ன ஆகுமுன்னு தெரிய முதலில் குழந்தை பிறக்கனும்.. அதற்க்கு நான் உன்னை நெருங்கனும் என்று அவளிடம் அவள் விலக விலக இவன் நெருங்க  நெருங்க  நெருங்கினான்.
ஊர் பெயர் தெரியாத ஏதோ  ஒரு குக்கிராமத்தில் எந்த வசதியும் இல்லாது செல் போனில் கூட டவர் விட்டு விட்டு கிடைக்கும் அந்த இடத்தில் வாழ்வது என்பது..
அதுவும் பிறந்ததில் இருந்தே.. வெளி வெளிச்சத்தில் அதாவது மக்கள் பார்த்ததும் அடையாளப்படும் அளவுக்கு வாழ்ந்த பவானியம்மாவுக்கு அந்த கிராமத்தில் ஒரு நாள் தள்ளுவது ஒரு யூகம் தள்ளுவது போல் இருந்தது.
சீதாராமன் வேலையாள் வாங்கி தந்த பத்திரிக்கையில் பார்வை இட்டுக் கொண்டு இருக்க..அவர் பக்கத்தில் வந்து அமர்ந்த பவானியம்மா…
“ எதுக்கும் ஒன்னொரு தடவை நாம அகில் கிட்ட பேசி  பார்க்கலாமா ராம்…?”  என்று கண்ணில் ஒரு எதிர்ப்பார்போடு  தன்னை பார்த்து கேட்ட பவானியம்மாவை பார்த்த சீதாராமனுக்கு..
மூன்று மாதத்தில் இந்த அளவுக்கு வயோதிகம் கூடி விடுமா…? கூடி விடும் என்பதற்க்கு எடுத்துக்காட்டாய் தன் பக்கத்தில் அமர்ந்திருந்த தன் மனைவியே சாட்சி என்பது போல் இருந்தவளை பார்த்தவருக்கு என்ன சொல்வது என்று  தெரியவில்லை..
ஆனால் தன் மனைவியில் இந்த கோலத்தை பார்த்து தன் கண்கள் மூடிக் கொண்டு தான் அமர்ந்திருந்த இருக்கையின் பின் பக்கம் சாய்ந்த வாறே…
முன் கம்பீரமாய் தன் முன் வலம் வந்த அந்த பழைய பவானியாம்மாவின் தோற்றம் அவர் கண் முன் தோன்றி மறைந்தது… காதல் செய்து மணந்த தன் மனைவியின் இப்போதைய நிலையை பார்த்து கணவனாய்  சீதாராமன்  பதறினாலும், அவராலும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தானே அவரும் இருக்கிறார்…
“நான் அகில் கிட்ட பேசி இருக்க மாட்டேன்னா… பேசிட்டேன் ஒரு முறை இல்ல எத்தனையோ முறை..ஆனா அவன் வேண்டாம் பவா நாம் செய்த தப்புக்கு தண்டனை இது.. 
அப்போ எல்லாம் பாவம் செய்தா அடுத்த ஜென்மத்தில் தான் தண்டனை கிடைக்கும் என்று சொல்வாங்க..ஆனா இப்போ எல்லாம்  வாழும் காலத்திலேயே அனுபவித்து தான் போய் சேரனும்..
காதல் செய்த போது  நாம்  செய்த தப்பை விட,  பதவிக்காக நாம் செய்த தப்பு ரொம்ப பெரிது பவா… காலம் போன பின் தான் நம்மல மாதிரி இருக்கிறவங்களுக்கு ஞானோதையம் தோனுது..விடு விடு…” என்று சொல்லி விட்டு  தான் படித்துக் கொண்டு இருந்த செய்திதாளில்  இருந்து பாதி  பக்கத்தை மனைவியிடம் கொடுத்து விட்டு..
“படி… “ என்றவர் மீதி பக்கத்தில் வந்த செய்திகளை அவர்  பார்வையிட்டுக் கொண்டு இருந்தார்.
ஒரு காலத்தில் தலைப்பு செய்தியே இவர்களை பற்றியதாய் தான் இருக்கும்..அதை படிக்க ஏன் பார்க்க கூட நேரம் இல்லாது  தன் பி..ஏ விளக்கமாய் சொல்ல ஆரம்பித்தாலும் கை நீட்டி தடுத்து விட்டு..
“சொல்ல வேண்டியதை சுருக்கமா சொல்.. “ 
முழுவதுமாய் கேட்க கூட நேரம் இல்லாது பறந்துக் கொண்டு இருந்த அந்த தம்பதியர்கள், இன்று செய்திதாள்களில் வந்த இன்டு இடுக்கில் உள்ள செய்திகளை படித்து விட்டு..
நேரம் போக வேண்டுமே என்று நினைத்து செய்திதாள்களில் வேறு ஏதாவது விட்டு விட்டோமா என்று கண்ணில் மாட்டியது..ராசி பலன்..அதில் மிதுனம் எப்படி என்று பார்க்க..அதில் அஷ்டம சனி ஆடிக் கொண்டு இருக்கிறது என்று இருந்தது…
நவீன்.. “நீ எப்போ சென்னை வர்ற…? “
இப்போது நவீன் தீபிகாவின் பேச்சுகள்… மெசஞ்சர் போய் பின் போனில் பேசி இப்போது வீடியோ காலில் வந்து நிற்க்கிறது..
“ம் வர்றேன்…” என்று தீபிகா சொல்ல..
“எப்போ…?”
 நவீனின் பார்வை தீபிகா போட்டுக் கொண்டு இருந்த இரவு உடையை ஒரு மார்க்கமாய் பார்த்துக் கொண்டே கேட்டான்..
“ம் இங்கு கொஞ்சம் வேலை இருக்கு..அதான்…” என்று தீபிகா தன் பேச்சை பாதியில் நிறுத்த..
“ அடுத்த மாதம் நமக்கு கல்யாணம்..அதுக்குள்ள வந்துடுவலே…”
நவீனின் பேச்சு என்னவோ ஸ்டிட் ஆபிசர் போல் தான் வந்து விழுந்தன..ஆனால் அவனின் பார்வையோ… ஸ்டைட்டா இல்லாது தீபிகா சமையல் அறையில்  இருந்து தனக்கு காபி போட்டுக் கொண்டே வீடியோ காலில் பேசிக் கொண்டே..
சர்க்கரை எடுக்கிறேன் என்று  வலது கையை நீட்டும் போது நவீனின் பார்வை இடது பக்கமாய் சாயா..காபி தூள் எடுக்கிறேன் என்று தீபிகா இடது பக்கம் போகும் போது நவீனின் பார்வை வலது பக்கம் போக இதை பார்த்த தீபிகா…
“உங்களை அங்கு வந்து வெச்சிக்கிறேன்..” என்று சொல்லி வீடியோ காலை கட் செய்யும் போது..
நவீன் சொன்ன… “அதுக்கு தான் காத்துக் கொண்டு  இருக்கேன் ராசாத்தி…” என்ற  சொல்லோடு அவன் கொடுத்த பறக்கும் முத்தத்தையும் பெற்றுக் கொண்டாள். 
 
 

Advertisement