Advertisement

அத்தியாயம்…21
இந்த கதை முடித்து விட்டது என்று நினைத்தேன்..ஆனால் முடியவில்லை. இன்னும் ஏதோ இருக்கிறது என்ற வாசகர்களின் கருத்தை ஏற்று, இதோ…நெருங்க நெருங்க இன்று உங்களுடன்.
அதற்க்கு முன் போன அத்தியாயத்தில், அதாவது இருபதாவது அத்தியாயத்தில், மூன்று மாதம் பின் என்று எழுதி இருப்பேன்..அதை படித்தவர்கள் உங்கள் மனதில் இருந்து அதை அழித்து விடுங்கள்…
மூன்று பதிவு கொடுக்கிறேன்..அதன் பின் அந்த மூன்று மாதத்தை சேர்த்தால் உங்கள் முன் நெருங்க நெருங்க கதையின் முழுவடிவம் கிடைக்கும்…நன்றி..
***************************************************************************************************************8
படுக்கையை விட்டு முதலில் எழுந்த மதிக்கு, தான் இருந்த கோலத்தில் தான் நேற்று நடந்த நிகழ்வு ஏதோ கனவு போல் கண் முன் வர…எப்படி இது…? என்பது தான் மனதில் தோன்றியது.
படிக்கும் போது அது எப்படி கல்யாணம் ஆன முதல் நாளே அப்படி…? என்று அவள் தோழிகளிடம் இதை பற்றி  அவளே பல முறை பேசி இருக்கிறாள்..இவர்களுக்கிடையே உண்டான உறவு முதல் நாள் இல்லை என்றாலும், அது எப்படி நான்..?
அதுவும் அவனே ஒதுங்கி போக நினைக்க..நானே அவனிடம் நெருங்கியதை நினைத்தால்..அது நானா…? அதை நினைத்து ஒரு பக்கம் அவளுக்கு வெட்கம் என்றால், மறுப்பக்கம் என்ன இது …? எப்படி நான்..
இப்படி நான் எப்படி…? என்று அவள் இதையே அத்தனை முறை நினைத்ததில் அவளுக்கு கிடைத்த பதில். அவள் கழுத்தில் தொங்கிய மாங்கல்யம்..
தன் கழுத்தில் இருந்த மாங்கல்யத்தை எடுத்து அதையே பார்த்துக் கொண்டு இருக்க… 
“என்ன இது மட்டும் தான் நம் உடம்பில் இருக்கு…என்று பார்த்துட்டு இருக்கியா…? நையிட் எனக்கு அது ரொம்ப டிஸ்ட்டப் பண்ணிச்சி தான்.. சரி அதையும் கழட்டலாம் என்று நினைத்தேன்.. ஆனா உனக்கு அது மேல் ஏதாவது சென்டிமென்ட் இருந்து.. சுகமா கழிய வேண்டிய ராத்திரி, சோகமா கழிஞ்சிடுமோ என்று நினைத்து தான் அதை மட்டும் உன் உடம்பில் விட்டு வைத்தேன்.”  என்று அகில ரூபனின் குரல் அவள் காதில் விழுந்த நொடி தன் மேல்  போர்த்தி இருந்த போர்வையை தன் மேல் முழுவதும் மறையும் மாறு போர்க்க பார்த்தாள்.
ஆம் போர்க்க பார்த்தவளுக்கு, அவளின் உடலின் பாதி பாகம் தான் மறைக்க முடிந்த்து.. மீதி பாகம் அவன் கண்களுக்கு விருந்தாக காட்சி அளித்ததில்..
நீங்களாவது இங்கு இருந்து போங்களேன் என்பது போல் ஸ்ரீமதி அகில ரூபனை பாவமாக ஒரு பார்வை பார்த்தாள். அந்த பார்வைக்கு அர்த்தம் அகில ரூபனுக்கு தெரிந்தாலுமே,  நான்  இங்கு இருந்து போவேனா…? என்று அடம் பிடிப்பது போல்..
மல்லாக்காக படுத்திக் கொண்டு இருந்தவன், தன் ஒரு கையை, தன் தலைக்கு ஸ்டேண்ட் ஆக்கி அவளை பார்க்க ஏதுவாக ஒருகலித்து படுத்துக் கொண்டான்.
“நான் அப்படி தான் பார்ப்பேன்..” என்பது போல் அவள் உடம்பில் அவன் கண்களை மேய விட்டான்.
“என்ன இது இவனும் இங்கு இருந்து போக மாட்டேங்கிறான் ..இந்த போர்வையும் பத்த மாட்டேங்குது…” என்று இன்னும் இன்னும் அந்த போர்வையை அவள் மேனியில் மூட பார்த்தாலே ஒழிய..அந்த போர்வை ஏன் பத்தல என்று அதை பார்க்காது..
அவள் பார்வை மொத்தமும் அகில ரூபன் பக்கமே இருக்க..அவள்  கை மட்டும் போர்வையை சரி செய்யும் வேலையை  செவ்வனே செய்து கொண்டு இருந்தது.…
“ஏய் இந்த மாமனை அப்புறம் பார்க்கலாம். முதல்ல  உன் மேல என்ன இருக்குன்னு பாருடீ..” என்று அகில ரூபன் சொன்னதில், ஸ்ரீமதி பதறி போய் அய்யோ சரி செய்கிறேன் என்று நினைத்து,  உடம்பை  கொஞ்சம் நஞ்சம் மூடி இருந்ததையும், முழுவதும் விலக்கி விட்டேனோ என்று பார்த்தவளுக்கு அய்யோ என்று ஆனது..
விளக்கு எண்ணையை  குடித்தது போல் மூஞ்சி இருக்கு என்று சொல்வாங்க..அது எப்படி இருக்கும் என்று தெரியாதவர்களுக்கு, இப்போது ஸ்ரீமதியின் முகம் பார்த்தால் தெரிந்து விடும்..
அப்படி அசடு வழிந்து கொண்டு… அவனின் மேல் இருந்த போர்வையை, தன் மேல் இருக்கும் அந்த பத்தாத லுங்கியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மறு கைய்யால் அவனின்  போர்வையை சுட்டி காட்டினாள்.. 
ஆம் அவள் இது வரை போர்வை என்று தன் மேல் போர்த்திக் கொண்டு இருந்தது.. அகில ரூபனின் கைலியை தான்…
அவசரத்தில் அண்டாக்குள் கை மட்டும் நுழைய முடியாமல் போகாது.. ஆத்திர அவசரத்துக்கு, பக்கத்தில்  போர்வையா…? கைலியா…?  என்று கூட பார்க்க முடியாது போய் விடும்… 
“ப்ளீஸ் அதை  கொடுங்க…” என்று கெஞ்சியவளிடம் அகில ரூபன் பேரத்தில் இறங்கினான்..
“சரி எடுத்து தர்றேன்…” என்று சொல்லி அந்த போர்வையின் மீது  கைய் வைத்து விட்டு பின்  எடுத்து விட்டு …அவளை பார்த்து…
“உனக்காவது உன் மேல் நான் கட்டுன தாலியாவது இருக்கு..ஆனா என் மேல ஒன்னும் இல்ல…நான் எப்படி தர முடியும்…?” என்று அகில ரூபன் கேட்டதும்…
 இப்போ என்ன செய்வது…?  என்பது  போல் பக்கத்தில் வேறு ஏதாவது இருக்கா… ? என்று சுற்றியும், முற்றியும் தன் பார்வையை செலுத்தியளின் கண்ணுக்கு ஒன்றும் மாட்டாது போனது..
அகில ரூபன்.. தன் பக்கம் இருந்த கப்போடை காண்பித்து…. “அதில் இருக்கு…” என்று சொன்னான்..
அதை எப்படி எடுப்பது…? என்று தயங்கி  ஸ்ரீமதி எழாமல் அப்படியே அமர்ந்து இருந்தாள்.
“என்ன ஸ்ரீ… அங்கு தான் இருக்கு.போ எடுத்து கொடு..எனக்கும் டைம் ஆகுது..நானும்  கிளம்பனும் …” என்று அகில ரூபன் சொன்னான்..
உடனே மதியின் மதி உடனே  அவளுக்கு ஒரு ஐடியாவை வாரி வழங்க… ஸ்ரீமதியும் அதை  உடனே செயல் படுத்த …
 “நீங்க போங்க..  நீங்க போங்க…” என்று மிகவும் பெறுந்தன்மையாக அவனை அந்த அறையில் இருந்து போக இவள் அவனுக்கு அனுமதி வழங்கினாள்.
“அது எப்படி…? கணவனும் மனைவியும்  சோபன அறையில் இருந்து போகும் போது, அதுவும் இது போல எல்லாம்…” என்று தங்கள் இருவரையும் சுட்டி காட்டியவன் தொடர்ந்து…
“போகும் போது ஒன்னா தான் போகனும்.. அப்போ தான் நம்ம தலை முறை கால காலத்துக்கும் ஒற்றுமையா இருக்கும்மா…” என்ற அவன் பேச்சில் இது உண்மையா …? பொய்யா…? என்று குழம்பி போய் பார்த்தாள்.
அகில ரூபன்… “தோ பார் ஸ்ரீ.. எனக்கு டைம் ஆகுது ..ஒன்னு என் லுங்கி என் கிட்ட கொடுத்தா..இந்த போர்வையை உன் கிட்ட கொடுக்கிறேன்..இல்லேன்னா நீயே அங்கு இருக்கும் போர்வையை எடுத்துக்கோ..
ஏதாவது ஒன்னு  சீக்கிரம் செய்.. இப்போவே டைம் எட்டை கடந்துடுச்சி.. என்ன தான் நாம் தனியா இருந்தாலும், எல்லாத்துக்கும் ஒரு முறை இருக்கு தெரியுமா…?
சீக்கிரம் சீக்கிரம் முடிவு செய்…” என்று சொன்னவன்..சட்டமாய் படுத்த இடத்தை விட்டு நகராது இருக்க…
ஸ்ரீமதிக்கோ எப்படி போவது என்று யோசித்தவளை தன் போர்வைக்குள் இழுத்துக் கொண்டவன் அவளை விடும் போது மணி பத்தை கடந்து இருந்தது…
இருவரும் குளித்து முடித்து கீழ் இறங்கும் போதே, ஹாலில் நவீன் அமர்ந்து இருப்பதை பார்த்து ஸ்ரீமதிக்கு சங்கடமாய் ஆகி விட்டது.. ஆனால் அகில ரூபனுக்கு அது போல் ஏதும் இல்லை போல்..
அவன் பக்கத்தில் போய் அமர்ந்தவன்.. நவீனின் யோசனை படிந்த முகத்தை பார்த்து விட்டு… 
“என்ன நவீன் ஏதாவது பிரச்சனையா…?” என்று கேட்டுக் கொண்டே அவனின் முகத்தை ஆராய்ந்தான்..
“ஒன்னும் இல்லே அண்ணா…” என்று அகில ரூபனிடம் சொன்னவன்.
மதியின் பக்கம் பார்வையை செலுத்தி.. “இன்னும் நீங்க சாப்பிடலே… முதல்ல போய் சாப்பிடுங்க.. மணி ஆயிடுச்சி…” என்று சொல்லி அவர்களை சாப்பிட அனுப்பியவன்.. அங்கு இருந்து போகாது இருந்தான்.
அவன் ஏதோ சொல்ல வருவதும் பின் தயங்குவதுமாய் இருப்பதை பார்த்து விட்டு அகில ரூபன் மனைவியின் பக்கம் பார்வையை செலுத்தி ..
“ வா சாப்பிடலாம்…” என்று அழைத்தவன் தன் தம்பியை பார்த்தும்..
“ நீயும் வாடா…” என்று   அகில ரூபன் நவீனையும் சாப்பிட அழைத்தான்..
“நான் சாப்பிட்டேன் அண்ணா…” என்று சொல்லி விட்டு தன் முன் இருந்த பத்திரிக்கையை கையில் எடுத்தவன் படிப்பது போல் பாவனை செய்தான்..
ஆம் அவன் பாவனை தான் செய்தான்..ஏன் என்றால் அவன் பத்திரிக்கையை தலை கீழாக பிடித்து  கொண்டு இருந்தான்.
அகில ரூபன் அதை கவனித்தாலுமே, அதை அவனுக்கு சுட்டி காட்டாது..
“சரி சரி..நீ உன் வீட்டில் கிளம்பும் போது சாப்பிட்டு இருப்ப..இப்போ கொஞ்சம் லைட்டா சாப்பிடலாம் வா…” என்று அகில ரூபன், நவீனை  மீண்டும்   உணவு உண்ண அழைத்தான்.
“இல்ல அண்ணா நான் இங்கு  வந்து தான் சாப்பிட்டேன்…” என்று சொல்லி விட்டு மீன்டும் தன் பழைய பாணியான பத்திரிக்கையில் தன் முகத்தை புதைத்துக் கொள்ள..
அகில ரூபன் அவனை யோசனையுடன் பார்த்துக் கொண்டே…
“நீ எப்போ வந்தே…?” என்று கேட்டான்..
“நான் ஆறு மணிக்கே வந்துட்டேன் அண்ணா…”  என்று சொல்லும் நவீனின் கண்  இப்போது    பத்திரிகையை விடுத்து தன் அண்ணனை பார்த்தது.
“நவீன் ஏதாவது  பிரச்சனையாடா…? பொய் சொல்லாம சொல்…” என்று கேட்டுக் கொண்டே சாப்பிட போகாது அவன் பக்கத்தில் அமர்ந்துக் கொண்டான்..
இப்போது ஸ்ரீமதிக்கு நான் சாப்பிட போவதா…? வேண்டாமா…? என்று தயங்கிய வாறு  நின்றவளின் கண்ணுக்கு அங்கே இருந்தே பார்த்தால் தெரியும் படி இருக்கும் சாப்பிடும் இடத்தில் வைத்திருந்த, உணவு வகைகளை பாரத்ததும்…
ஏற்கனவே சிறுகுடலை பெரும் குடல் சாப்பிடலாமா…? வேண்டாமா…?  என்று இருக்க..அந்த உணவு வகைகளை பார்த்ததும்,..
“இப்போ நீ அங்கு போகல அவ்வளவு தான்…” என்று அவளை அதட்டுவது போல் அவளின்  வயிறு  கட முடா என்று  சத்தம் இட ஆரம்பித்து விட்டது.
அய்யோ காலை.யில் எழவும் விடாது இப்போ சாப்பிடவும் விடாது. என்ன மதி உனக்கு இது சோதனை என்று அவள் நினைக்க… அவளை எழ விடாது செய்தவனுக்கு சாப்பிட விடாது செய்யும் எண்ணம் இல்லை போல்..
அதனால்… “ ஸ்ரீ நீ சாப்பிட்டு விட்டு எனக்கு இங்கு  கொண்டு வா…” என்று சொன்னதும் தான் அவசர அவசரமாய் ஒரு இரண்டு அடி உணவு இருக்கும் இடத்தை நோக்கி  தன் காலை எடுத்து வைத்திருப்பாள்..
அதற்க்குள் நவீன்.. “அண்ணி நீங்களும் இங்கேயே எடுத்து வாங்கலேன்..அண்ணாவும் நீங்களும் ஒன்னா சாப்பிடலாம்…” என்று அவளுக்கு இலவச ஆலோசனை வழங்கினான்..
“அடப்பாவீ… உன் பாசத்தில் தீயை வைக்க…” என்று  நினைத்துக் கொண்டு  மதி தன் கணவனை பார்த்தாள்.’
.அகில ரூபன் “நீ முதலில் சாப்பிடு. .அப்புறம் எனக்கு எடுத்துட்டு வா…” என்று  சொல்வான் என்று..
ஆனால் அவனோ இரண்டு நாள் மழிக்கப்படாத தாடியை மெல்ல தடவிய வாறு… இருந்தான்..ஏதோ யோசிக்கிறாராம்…
இந்த தாடியை முதல்ல ஷேவிங் பண்ணனும்.. நையிட்டும் இது எனக்கு தொந்தரவா  தான் இருக்கு..இப்போவும் இது எனக்கு தொந்தரவா இருக்கு என்று நினைத்துக் கொண்டாள்.
தாடியை தடவிக் கொண்டே அவன் யோசிதத்தில் அவனுக்கு கிடைத்த விடையான..
“ இரண்டு பேருக்கும் இங்கேயே கொண்டு வந்துடு ஸ்ரீ…” என்பதே…
“போங்கடா போங்க… உங்க பாசத்தில் என் வயித்தை தான்டா காய போடுறிங்க…” என்று அண்ணன் தம்பி இருவரையும் திட்டிக் கொண்டே உணவுகளை இரு தட்டில் எடுத்துக் கொண்டு  இருந்தாள்.
மதி அந்த இடத்தை விட்டு போனதும் அகில ரூபன்  நவீனிடம் …..
“அவங்களை விட்டு தனியா இருக்கிறது கஷ்டமா இருந்தா… நீ அவங்களை இங்கே அழச்சிக்கடா.. எனக்கு ஒன்னும் இல்ல..என்னாலே நீ கஷ்டப்பட வேண்டாம்.” என்று  அகில ரூபன் சொல்ல..
நவீன் .. “யாரை…?” என்று கேட்கவில்லை.
அகில ரூபன்  யாரை குறிப்பிடுகிறான் என்று தெருந்துக் கொண்டவனாய்… “தனியா இருக்கிறது கஷ்டமா தான் இருக்கு… ஆனா அதுக்காக கூட அவங்களை இங்கு அழச்சிக்க மாட்டேன்..
அவங்க செஞ்சது சின்ன தப்பு இல்ல.. மன்னிக்க… எந்த அப்பா அம்மாவும் செய்யாத தப்பு… நானே சில சமயம் உங்கள பார்த்து  நானும் இவனும் ஒன்னா…? என்று  எல்லாம் நினச்சிட்டு இருக்கேன்..
நீ எனக்கு அனைத்தையும் விட்டு கொடுக்கனும்.. எங்கேயோ இருக்க வேண்டியவன் இப்படி வசதியா இருக்க என் அப்பா அம்மாவின் பெரிந்தன்மை தானே காரணம்..
இவன் இது என்ன எல்லாம் கூட  எனக்காக  விட்டு தரனும் என்று கூட யோசிச்சி இருக்கேன்… ஆனா இப்போ…” என்று சொல்லிக் கொண்டு வந்தவன் அதற்க்கு மேல் பேச  முடியாது..
தொண்டை அடைக்க… “சாரி அண்ணா… சாரி அண்ணா…” என்று சொல்லி அகில ரூபனிடம் மன்னிப்பு கேட்டான்..
இரு கையிலும் உணவு தட்டடோ அந்த இடத்திற்க்கு வந்த மதி, நவீனின் பேச்சை முழுவதுமாய் கேட்டதால், அவள்  என்ன மாதிரி உணர்கிறாள் என்று அவளாள் சரியா கணிக்க முடியவில்லை என்றாலும், மகிழ்ச்சியான உணர்வு இல்லை..
அதுவும் தத்து குழந்தை தான் தன் வீட்டில் அப்படி வளர..சொந்த வீட்டில் தன் கணவன் நடத்தப்பட்ட   நிலையை நினைத்து கோபமும் ஆதாங்கமும், அவள் மனதை  போட்டி போட்டு  கொண்டு  தாக்கியது.
இப்போது இவன் இப்படி மன்னிப்பு கேட்டாலுமே.. இவன் எப்படி என் கணவனை அப்படி பார்க்கலாம். நினைக்கலாம்.. என்று நினைத்துக் கொண்டு  நவீனை கோபமாக முறைத்து பார்த்தாள்.
மதியில் கையில் இருந்த தட்டை வாங்கி தன் முன் இருந்த டீபாவின் மீது வைத்த நவீன்..
“அண்ணி அண்ணி சாரி.. நான் அப்போ தெரியாம செய்துட்டேன்.. என் மேல கோபப்படாதிங்க.. நான் உங்களை  நம்பி தானே விடிந்தும் விடியாத காலையில் எழுந்து இங்கு வந்தேன்.” என்று தான் இங்கு வந்த காரணம் என்ன என்று  சொல்ல வில்லை என்றாலும்,
அவன் பேச்சில், அகில  ரூபன் புரிந்துக் கொண்டது.. “ஓ ஸ்ரீயிடம் பேச வந்து இருக்கான்.. என்ன விசயம்…? என்று புரியவில்லை என்றாலும், நாகரிகம் கருதி..
“என்ன நவீன் ஸ்ரீ கிட்ட பேசனுமா…? இதோ நான் சாப்பிட்டு போயிடுறேன். எனக்கும் கொஞ்சம் வேலை இருக்கு… “ என்று சொன்ன அகில ரூபனை முறைத்த அவனின் ஸ்ரீ..
“உங்களை  விட்டு பேச உன் தம்பி கிட்ட எனக்கு ஒன்னும் இல்ல…” என்று சொல்ல நவீனும்..
“நீங்களும் இருங்க அண்ணா.. நான் ஒரு விசயம்..ஒரு விசயம் தெரியனும்…” என்று  திக்கி திணற..
“என்ன நவீன்…? என்ன விசயம்.. ? எது என்றாலும்  கேள்… “ என்ற அகிலனின் அதட்டலில்..
“அது வேறு ஒன்னும் இல்லே அண்ணா.. எனக்கு அண்ணியோட பிரண்ட் தீபிகாவை பத்தி கொஞ்சம் தெரியனும்.”
காலை வரை தீபிகாவிடம் மெசஞ்சரில் பேசிக் கொண்டு இருந்தவன் விடிந்ததும், தன் வாழ்க்கை விடியலாக்க எண்ணி தன் அண்ணியை தேடிக் கொண்டு வந்து விட்டான்…
  
 

Advertisement