Advertisement

மூன்று மாதம் பின்…
மேடையில் நவீன் அமர்ந்து இருக்க ..ஐய்யர் சொன்ன…
”பெண்ணை அழைத்து வாங்க….” என்ற அழைப்பில் நவீன் ஐய்யர் சொன்ன மந்திரத்தை விட்டு விட்டு மூன்று மாதமாய் பகலும் இரவுமாய் படித்துக் கொண்டு இருந்த மந்திரமான தீபிகா என்ற நாமத்தை உதிர்த்தான்.
அதில் அந்த ஐய்யர் காண்டாகி நவீனை பார்க்க .அவனோ ஐய்யர் பக்கம் பார்வையை பார்த்தால்  தானே.. அவரின் முறைப்பு எல்லாம் அவனுக்கு தெரிய..அவன் தான் மணப்பெண் வரும் வழியே தான் விழி பதித்து இருந்தானே…
நவீன் பின் நின்றுக் கொண்டு இருந்த  அஷ்வத் தன் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த அனிதாவிடம் இந்த மூன்று மாதமாய் படித்த அதே பாடமான..
“காதலித்து திருமணம் செய்துக் கொண்டது நம்ம…ஆனா காதல் செய்தது உன் இரண்டு அண்ணன்… பெரியவன் காதலின் ஆதாரம் மதியின் வயிற்றில்…இவன் காதல் செய்ததின் பலன்… இதோ மணமேடை..ஆனா நாம….முயற்ச்சி முயற்ச்சி அவ்வளவே… என்று படிக்க..
அனிதாவோ… “உங்களுக்கு சாமர்த்தியம் பத்தலேன்னு சொல்லுங்க..இதில் மனச புரிந்து அவங்களுக்கு வைத்தியம் செய்யும் மனோதத்துவ டாக்டர்.போங்க போங்க அந்த பக்கம்.” காத்து வரட்டும் என்ற ரீதியில் பேசினாள்.
மதி தன் தோழியும் இப்போது உறவுமாய் ஆக போகும் தீபிகாவை…( முதல் அத்தியாயத்தில் வந்த மதியின் தோழி.) மணமேடையில் நவீன் பக்கத்தில் அமர வைத்தாள்.
தீபிகாவை அமர வைத்து விட்டு நிமிர்ந்தவளின் பக்கத்தில் வந்த அகில ரூபன்… “எதுக்கு நீ உடம்பை ஸ்டேயின் பண்ணிக்கிற….” என்று கடிந்துக் கொள்ள…
அதை பக்கத்தில் நின்றுக் கேட்டுக் கொண்டு இருந்த அஷ்வத்தோ… “இதோ இங்க இருக்க பெண் ரூமில் இருந்து ஒரு எட்டு எட்டு எடுத்து வைத்தா..இதோ இந்த மணமேடை வந்துடும்…
அங்க இருந்து கூட்டிட்டு வந்தது..அதாவது தீபிகாவை மதி தூக்கிட்டு வரல..கூட்டிட்டு வந்தது உடம்பு ஸ்டேயினா ஆயிடுமா…?  அப்பாவா ஆனாலும் ஆன…உங்கல கையில் பிடிக்க முடியல…
எனக்கும் ஒரு காலம் வரும்..அப்போ என் மனைவிய நான் எப்படி தாங்குறேன் என்று எல்லோரும் பாருங்க…” என்று அஷ்வத் சபதம் எடுக்க..அதுக்கு… “அண்ணி உங்க கூடவே இருக்கனுமே அண்ணா….”
ஆம் சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்…? மனைவி பக்கத்தில் இருந்தால் தானே இவன் இட்ட சபதம் நிறைவேறும்..அனிதா தான் மாதத்தில் பாதி நாள் சின்ன அண்ணன் தனியா இருக்கான் என்று அவன் கூட இருப்பது.
பெரிய அண்ணனுக்கு இத்தனை வருடம் நாங்க எல்லோரும் சேர்ந்து அவனை கஷ்டப்படுத்திட்டோம் என்று சொல்லியே மாதத்தில் பாதி நாள் அவனிடம் பாச மழை பொழிகிறேன் என்று அகில ரூபனிடம் சென்று விடுவது.. இப்படி இருந்தால்..அனைவரும் கேட்க தானே செய்வாங்க… அதை தான் மதி குறிப்பிட்டு கேட்டாள்.
“பார்த்தியா நீ பண்றதால நான் என்ன என்ன எல்லாம் கேட்க வேண்டி இருக்கு.” என்று அஷ்வத் மனைவியிடம் குற்ற பத்தரிக்கை வாசித்துக் கொண்டு இருக்க..
அவளோ அதை காதில் வாங்கதவளாய் கீழே குனிந்து சிறிய அண்ணியிடம் ஏதோ கேட்டவள் பின் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த பெரிய அண்ணியிடம் சின்ன அண்ணி சொன்னதை சொல்லி சிரித்துக் கொண்டு இருந்தாள்.
“போ நான் கோவிச்சிட்டு போறேன்.” என்று சொல்லி மேடையை விட்டு கீழே இறங்க போனவனின் முகத்தில் அதிகப்படியான வெளிச்சம் படர..
என்ன என்று நிமிர்ந்து பார்த்தால் நம் மீடியா…?ஓ இப்போ நான் கீழே இறங்கினா..நாளைய செய்தியா எனக்கும் அனிதாவுக்கும் விவாகரத்து செய்து விட்டுடுவாங்க..என்று நினைத்தவனாய்..நல்ல பிள்ளையாய் தன் மனைவியின் பக்கத்தில் நின்றுக் கொண்டான்.
ஐய்யர் சொன்ன “ பெண் கையை புடிங்கோ என்ற வார்த்தை கேட்டதும்..தீபிகாவின் கை பற்றிய நவீன்…அவர் சொன்ன சாஸ்த்திர சாங்கியம் செய்த பின்.. அடுத்து சம்பிரதாயம் செய்ய வேண்டி பெண் கை “விடுங்கோ…” என்று சொன்னவரின் வார்த்தையை காதில் வாங்காதவனாய் தீபிகாவை பார்த்து நவீன் ஊத்திய ஊத்தலில்..
அகில ரூபனே… “அவ கைய்ய விட்டா தான்டா தாலி கட்ட முடியும்.” என்று சொன்ன பின் தான்  நவீன் தீபிகாவின் கைய்யையே  விட்டான்.
இந்த குறுகிய காலத்தில் நவீனுக்கு தீபிகா மேலும். தீபிகாவுக்கு நவீன் மீதும் எப்படி இந்த அளவுக்கு  அப்படி காதல் வந்தது என்று அனைவரும் நினைக்கும் படி தான்  அவர்களின் பார்வை  பறிமாற்றம் இருந்தது…
தீபிகாவின் கழுத்தில் தாலி கட்டிய பின் அவள் வகுட்டிலும் நெற்றியிலும் திலகம் இட்ட பின் நவீனின் மனம் ஏனோ நிறைந்து… அம்மா அப்பா இல்லாது அவனால் இருக்க முடியவில்லை என்று சொல்வதை விட..அவ்வீட்டில் அவ்னால் தனித்து இருக்க முடியவில்லை என்று சொன்னால் சரியாக இருக்கும்..
அகில ரூபன் வீட்டில் இருந்து தாங்கள் முன் அனைவரும் இருந்த வீட்டுக்கு வந்த நவீனின் மனம் வெறுமையாய்…அந்த வெறுமையில் தன் பேசியை நோண்டிக் கொண்டு இருந்தான்..
அதில் முக நூல் பக்கத்தில் அழைத்த நட்பு அழைப்புகளை பார்வை இட்டுக் கொண்டு இருந்தவன்..ஒரு பெண் முகம் பரிச்சயமாய் யார்… என்று பார்த்தவனுக்கு முகநூல் நட்பில் ஸ்ரீமதியும் இருப்பதை பார்த்து தான்..
“ஓ இவள் மதி தோழில…நமக்கு நட்பு அழைப்பு விட்டு இருக்கா…” என்று நினைத்தாலுமே அவளின் நட்பு ஏற்றுக் கொண்டான்..
இவன் ஏற்றுக் கொண்ட அடுத்த நொடி தீபிகாவிடம் இருந்து மெசஜ்சர்..
“ஹாய்…” அந்த ஹாய்யில் ஆரம்பித்து பின் ஒரே வாரத்தில்…
“டோலி..” என்று செல்ல பெயர் வைத்து இவன் அவளை அழைக்க..அவள் இவனை காதல் கிறுக்கா என்று அழைத்து பின் படி படியாய் முன்னேறி ஒருவரை விட்டு ஒருவர் இல்லை என்ற நிலை வந்த பின்..
நவீன் தீபிகாவிடம்… “நான் தனிமையைய் உணர்கிறேன்.” என்றது தான் அடுத்த ப்ளைட் பிடித்து தீபிகா நேராக இறங்கிய இடம் நவீன் இல்லம்..
பின் அகில ரூபன் தான்… “ திருமணம் முன்  இருவரும் தனியா  இருக்க  கூடாது.” என்று சொன்னது தான் இருவரும் ஒரு சேர…
“அப்போ சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க…” என்று..
அதன் அடுத்து அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் இதோ..பணம் இருந்தால் போதும் எவ்வளவு விரைவாக வைத்தாலும், அனைத்தும் நடத்தி விடலாம் என்று இதோ இந்த ஆடம்பர திருமணம் எடுத்துரைத்தது.
அகில ரூபன் சொன்ன..அவங்கள வெச்சி கல்யாணம் நடத்திக்கோ…” என்ற வார்த்தையில் நவீன் சொன்ன…
“நீங்க இருங்க அவங்க வேண்டாம்…” என்று நவீன் நான்கே வார்த்தையில் அவர்களின் பெற்றோர்களை மிக தூரமாகவும்..அகில ரூபனை நெருங்கியும் வைத்து விட்டான்.
இதோ வெற்றி மாறன்.புவனேஷ்வரி முன்நிலையில் நவீன் தீபிகா திருமணம் இனிதே நடந்து முடிந்தது…
மறுநாள் செய்தியில் முன்னால் முதலமைச்சர் இல்லத்திருமணத்தில் முன்னால் முதலமைச்சர் இல்லை..காரணம் என்ன…?என்று பல தரப்பினரும் பலவகையான கற்பனையை  பேசினர்..
ஆனால் அதில் ஒருவர் கூட உண்மையாந காரணம் சொல்லவில்லை..ஏன் என்றால் இவர்கள் செய்தது கற்பனைக்கும் அப்பாற்ப்பட்டது… அப்போ அனைவருக்கும் அப்பால் தானே இருக்க வேண்டும்..
அது தான் யாரோ போல் வீட்டில் இருக்கும் டிவியிலும், செய்தியிலும் தங்கள் மகன் திருமணத்தை பார்த்திருந்தனர்…
அகில ரூபன் கல்விக்கு அடுத்து முதலமைச்சர் ஆகிறானோ இல்லையோ…அவனின் ஸ்ரீ…
“ரூபன்…” என்று அழைத்தால் போதும் அவளிடம் நெருங்கி விடுவான்..அவளும் நெருங்க..பின்..என்ன நெருங்க நெருங்க தான்….
 

Advertisement