அத்தியாயம்…20
அந்த சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டு நவீன் இரு ஜோடிகளையும் பார்த்து… “ஒரு சின்ன பைய்யன் கல்யாணம் ஆகாதவன் எதிரில் இப்படி ரொமன்ஸ் பண்ணிட்டு இருக்கிங்களே.. இது உங்களுக்கே நல்லா இருக்கா…?
ஒழுங்கா எனக்கு ஒரு ஜோடியை சேர்த்துட்டு, அப்புறம் உங்க ரொமான்ஸை கண்டினிய்யூ பண்ணுங்க…” என்று நவீன் சொல்லி முடிக்கவில்லை..
அகில ரூபன்… “கல்யாணம் பண்ணியும் நானும்  கன்னி பைய்யன் தான்டா….” என்று அவன் சொல்ல மற்றோருவனோ….
“நான் பேருக்கு தான் காதல் கல்யாணம் செய்துக்கிட்டேன். ஒரே நாள் தான்…” என்று நிறுத்திய  அஷ்வத் அனிதாவின்  முறைப்பையும் கண்டு கொள்ளாது…
“ஒரே நாள் தான் ரொமான்ஸே நடந்தது… அதுக்குள்ள உங்க குடும்ப பஞ்சாயத்தை இடையில் புகுத்திட்டு, அதுக்கு அப்புறம் எங்கே என்னை ரொமான்ஸ் செய்ய விட்டிங்க…” என்று ஆள் ஆளுக்கு பேசிய பேச்சில்  அங்கு இருந்த பெண்கள் தான் காதை மூடிக் கொள்ளும் படி ஆகி விட்டது.
நவீன்  சொன்ன எனக்கு ஒரு ஜோடியை சேர்த்து வைத்து விட்டு..அதுக்கு அகில ரூபன் அவனுக்கு பதில் அளித்தாலும், ஏனோ அவன் மனதில் ஒரு குற்றவுணர்வு… அது என்ன என்று அவன் மனது அறிந்தாலும், ஏனோ அதை மற்றவர்களிடம் சொல்லவில்லை..
இன்று தன் மனைவி..அவளை ஆசையாக ஒருவன் பார்த்தான். அது தன் தம்பியானாலும், அதுவும் தன் திருமணத்திற்க்கு முன் என்றாலும் அதை சொல்ல அவனுக்கு பிடிக்கவில்லை.
அதனால் அதை விடுத்து அனைத்தையும் பேசியவன் தன் அறைக்கு சென்று விட்டான்..தம்பிக்கு ஒரு பெண்ணை பார்த்து முடிக்கவேண்டும் என்று நினைத்தவன் தன்னோடு தங்கி கொள் என்று ஒரு பேச்சுக்கு கூட அகில ரூபன் நவீனிடன் சொல்லவில்லை…
மாலையில்  அஷ்வத்..அனிதா..வெற்றி மாறன், புவனேஷ்வரி   நவீனை தவிர அனைவரும் சென்று விட்டனர். அனைவரும் சென்ற பின் தான் நவீன் அடுத்து தான் போக வேண்டும் என்று நினைக்கும் போதே ஒரு வெறுமை அவன் மனதில்..
தன் தந்தை தாய் பாட்டிமார்கள் செய்த தவறுக்கு அவர்களுக்கு இந்த தண்டனை தேவை தான் என்று நினைத்தான் தான்..ஆனால் இது வரை அந்த வீட்டில் ஆட்கள்  சூழ இருந்தவனுக்கு, இப்போது தான் மட்டும் அங்கு தனியே அங்கு செல்ல ஏதோ போல் இருந்தது.
வெற்றி மாறன் குடும்பம் செல்லும் போது அனிதாவை தன்னோடு வா என்று அழைக்கலாமா என்று நினைத்து அவன் தங்கையை பார்க்கும் போது..
அஷ்வத்தும், அனிதாவும் ஒருவர் கை விடாது பற்றிக் கொண்டு அவர்கள் கண்கள் பேசிய காதல் பாழையும், சற்று முன் அஷ்வத் சொன்ன காதல் திருமணம் முடிந்து ஒரே நாள் தான் ரொமான்ஸ் என்ற அந்த பேச்சும், அனிதாவை அழைக்காது விட்டு விட்டான்…
அகில ரூபனும் அறைக்கு சென்ற பின் அந்த ஹாலில் ஸ்ரீமதியும், நவீனும் மட்டும் தனித்து இருந்தனர்… நவீன் முகத்தில் ஸ்ரீ என்ன கண்டாளோ…
“நவீன் பேசாமல்  நீ இங்கேயே இருந்து விடேன்.. நீ கேட்டது போல உனக்கு ஒரு  ஜோடி சேர்ந்த பின்னே நீ அங்கு போகலாம்.” என்று ஸ்ரீ கேட்டதும்..
நவீன் பேசாது… “மதி சொன்னது போல இருந்து விடலாமா…?என்று யோசித்தவனுக்கு அகில ரூபன் இந்த வார்த்தை சொல்லவில்லை என்று உரைக்க…
“பரவாயில்ல  மதி… நான் கிளம்புறேன். அண்ணா கிட்ட சொல்லிடு…” என்று சொல்லி  விட்டு அவன் விடைப்பெற்று சென்று விட்டான்..
தான்  நவீனை பார்த்து பேசாது  இங்கேயே இருந்து விடு என்று கேட்டதும் அவன் முகத்தில் வந்து போன அந்த பாவனையில், அவனுக்கு இங்கு தங்க விருப்பம் தான்.
அவன் அண்ணன் ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் கண்டிப்பாக தங்கி இருப்பான் என்று நினைத்த ஸ்ரீ..எப்போதும் மனதில் நினைத்தால் அதை மனதோடு வைத்து போராடாது சம்மந்தப்பட்டவர்களிடம் கேட்டு தெளிவுப்படுத்தி விடும் பழக்கம் உள்ள மதி..
அந்த பழக்கத்தில் தன் கணவன் முன் வந்து நின்றவள்….
“நவீன் அங்கு தனியா தானே இருப்பார்.” என்று ஸ்ரீமதி கேட்டதற்க்கு, அவள் வரும் போது தன் கணினியில் ஏதோ பார்வை இட்டுக் கொண்டு இருந்தவன், மனைவியின் பேச்சில் அதை தன் முன் வைத்து விட்டு…
“ஆமா  அவங்க அப்பா..அம்மா..பாட்டிங்க ஊருக்கு போய் விட்டதாலே… அவன் தனியா தான் இருக்கனும்.”
ஸ்ரீமதி எதற்க்கு சொல்கிறாள். என்ன சொல்ல வருகிறாள் என்று தெரிந்துக் கொண்டே அகில ரூபன் இப்படி  பேசினான்.
ஸ்ரீமதியோ இவன் புரிந்து பேசுகிறானோ..புரியாது பேசுகிறானோ…என்று சந்தேகத்துடன் அவனை பார்த்தாள்.அப்போது அகில ரூபனும் ஸ்ரீமதியையே தான் பார்த்துக் கொண்டு இருந்தான்.
“நான் என்ன…” என்று பேசிக் கொண்டு இருந்த மதியை மேலும் பேச விடாது…
“நீ என்ன சொல்ல வர்றேன்னு புரியாத அளவுக்கு நான் மக்கு இல்ல..” என்று அகில ரூபன் சொன்னதும்..
“அப்போ ஏன் நீங்க அவரை இங்கு தங்க சொல்லலே….?” என்ற ஸ்ரீமதியின் கேள்விக்கு…
“எதுக்கு தங்க சொல்லனும்…?” என்ற அகில ரூபனின் பதிலில் இப்போது ஸ்ரீமதி நிஜமாகவே  குழம்பி தான் போனாள்.
இவன் என்ன…? கொஞ்ச நேரம் முன் புரிந்தது என்று சொன்னான்..ஆனால் இப்போ ஏன் தங்க சொல்லனும் என்று கேட்கிறான்…  என்ற அவளின் குழப்பத்தை இன்னும் குழம்பும் வகையாக தான் அவன் பேச்சு இருந்தது.
“அவன் தனியா இருப்பது கஷ்ட்டம் தான். அதுவும் அவன் சொந்த அப்பா ..அம்மா தங்கை பாட்டிகள் என்று ஒரு உரிமையோடு இருந்த அந்த வீட்டில் யாரும் இல்லாம தனியா இருப்பது கொஞ்சம் இல்ல..ரொம்பவே கஷ்டமா தான் இருக்கும்…
அதுக்கு அவனுக்கு ஒரு துணை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்… அதை விட்டு இங்கு நமக்கு இடையே அவனை தங்க சொல்ல கூடாது..இப்போ அவனுக்கு துணை சேர்க்கும் வேலையில் தான் இருக்கேன்.” என்று சொன்னவன் தன் முன் இருந்த கணினியை  ஸ்ரீ பார்க்கும் வகையாக நகர்த்தி விட்டு…
“நீயே பார்.” என்று சொன்னான்.
அவன் காட்டிய கணினியில் மேட்ரிமோனி வெப்சைட் இருக்க… “இது எல்லாம் சரி தான். அது வரை.” என்று மேலும் ஏதோ பேச வந்த மதியின் பேச்சை தடுத்து நிறுத்திய அகில ரூபன்..
“கொஞ்ச நாள் இல்ல. ஒரு நாள் கூட யாரும் நமக்கு இடையே இருக்க கூடாது.” என்ற அகில ரூபனின் பேச்சில்..
“இது என்ன…?” என்பது போல் மதி அகில ரூபனை பார்த்திருந்தாள்.
மதியின்  திகைத்த அந்த  தோற்றத்தை பார்த்து அகில ரூபனுக்கு என்னவோ போல் இருக்க… அவளின் அருகில் சென்றவன்…
“என்ன ஸ்ரீ .. ஒரே குழப்பமா இருக்கா…?” என்று கேட்ட்தற்க்கு..
ஸ்ரீமதி முதலில் இல்லை என்று சொல்லி மறுத்து விட்டு பின் மெல்ல அவன் பக்கம் பார்வையை செலுத்தியவள்…
“ஆமாம்.” என்பது போல் தலையாட்டினாள்.
அவளின் அந்த செய்கையில் அவனின் மனதில் இது வரை இருந்த அந்த வெறுமை கொஞ்சம் கொஞ்சம் மறைய…. ஆட்டிய அவளின் தலையை பிடித்து நிறுத்தி விட்டும், அவள் தலையில் இருந்த கையை எடுக்காது…
தன் கையை அங்கேயே வைத்திருந்தவன்… “உனக்கு என்னை பிடிக்குமா ஸ்ரீ….?” என்று கேட்டான்.
அதற்க்கு ஸ்ரீமதி… “ரொம்ப சீக்கிரமா  தான் கேட்டிங்க…” என்று சொன்னவள் பின்..
“இப்போ பிடிக்கலேன்னு சொன்னா என்ன செய்ய போறிங்க…?” என்ற அவளின் கேள்விக்கு அகில ரூபன் வாயால் பதில் சொல்லாது, செயலால் அவனுக்கு பிடித்த வகையாக பதில் அளித்தவன்..அதை அவளுக்கும் பிடிக்கும் படியும் செய்தான்.
அந்த பிடித்தம் இருவருக்கும் மிக மிக பிடித்திருந்தும் அதை கடைசி வரை செல்லாது பாதியில் நிறுத்தியவனின் செய்கையில் கேள்வியாக ஸ்ரீமதி அகில ரூபனை பார்த்தாள்.
அவளின் அந்த தோற்றம் அகில ரூபனுக்கு பிடித்ததிற்க்கும் மேல் சென்று இன்னும் இன்னும் போக அவன் மனது விழைந்தாலும், ஏனோ அவன் மனது இதை மேலும் தொடர முடியாது அவன் மனம் ஏதோ ஒரு கணக்கில் அவளை விட்டு கொஞ்சம் தள்ளி நின்றுக் கொண்டவன்..
அவளை பார்த்து ஏதோ சொல்ல ஆரம்பித்தவன் அவளின் கலைந்த தோற்றத்தில், அது கலைந்த விதம் அவன்  மனது நினைத்தது என்றால், அவனின்  விரல் அவன் அவள் மேனியில் தீண்டிய பாகங்கள்  வந்து அவனை இம்சை செய்ய…தன் கைய்யையே பார்த்திருந்தவனுக்கு..
தன் கை செய்த பாக்கியம் தன் உதடு பெற காலம் எப்போது வரும் என்று மனது ஏங்கி தவித்தாலும், அவளை பார்க்க பார்க்க நம் மனது நம் பேச்சை கேட்க விடாது செய்து விடும் என்று முடிவு செய்தவனாய்…
அவளுக்கு தன் முதுகை காட்டியவனாய்…  கண் மூடிக் கொண்டு தன் உணர்ச்சிக்கும் உணர்வுக்கும் இடையே போராடியவனாய்… “ட்ரஸ்ஸ சரி செய்துக்கோ ஸ்ரீ…” என்று சொல்லியவனின் குரல் கர கரத்து எதிர் ஒலித்தது.
பின் சிறிது நேரம் கழித்து கண் திறந்தவன் முன்  ஸ்ரீமதி நின்றுக் கொண்டு இருந்தாள். அதுவும் தான் எந்த தோற்றம் தன் மனது தடுமாற வைத்ததோ அதே தோற்றத்தில், அதோடு கூடுதல் எழில் கூடும் வகையாக அவள் முகம் கோபத்தில் சிவந்து, கீழ் மூச்சு மேல் மூச்சு வாங்கியதில்..
அவன் கை செய்த மாயத்தில் விலகி இருந்த அவளின் சேலையின் விலகலில் இந்த கீழ் மூச்சு மேல் மூச்சு வாங்களில் அவன் மனமும் மேலும் கீழும்  ரங்கராட்டினம் போல் ஆடி தான் போனது.
அதுவும் கோபத்தில் அவள் சொன்ன… “நீங்க கேட்டது தான் நான் உங்கல திருப்பி கேட்கிறேன். உங்களுக்கு பிடிக்கலயா…?” என்று  கேட்டுக் கொண்டே அவனுக்கு மிக அருகில் அவள் பேசும் போது அவள் மூச்சு காற்று அவன்  சட்டையின்  இரண்டு பட்டன் போடாத இடைப்பட்ட இடத்தில்  பட்டு மேலும் அவனை சூடேற்றும் வேலையை செய்தது.
தன் முன் இருப்பவனின் மனநிலையை அறியாதவளோ… “என்ன பிடிக்கலையா…?” என்று திரும்பவும் ஸ்ரீமதி கேட்டாள்.
பிடிக்கும் ரொம்ப பிடிக்கும் என்று கொஞ்ச நேரம் முன்  செய்த்து போல் செயலால் அவளுக்கு உணர்த்த தான் அவன் மனம் சொன்னது. ஆனால் மூளையோ…
“வேண்டாம்.பொறு…நவீனுக்கு ஒரு துணையை தேர்தெடுத்து கொடுத்து அவனின் தனிமையை போக்கிய பின்…வாழ்க்கையை ஆரம்பி…மனதில் குற்றவுணர்ச்சியோடு உன்  வாழ்க்கை ஆரம்பிக்க தேவையில்லை என்ற முடிவோடு திரும்பவும் மதிக்கு முதுகு காட்டி நின்றுக் கொண்டவன்.
“ட்ரஸ் சரி செய்துக்கோ…” என்று அகில ரூபன் அதே கர கரப்பு மாறாத குரலில் சொன்னான்.
ஸ்ரீமதியும் மீண்டும் அவன் முன் வந்து… “அப்போ நீங்க எங்க அப்பா சொன்ன அந்த பாதுகாப்புக்கு தான் கல்யாணம் செய்துட்டிங்களா…?” என்று கேட்கும் போதே அவள் குரல் அழுகைக்கு ஆயுத்தம் ஆகி விட்டது என்று அகில ரூபன் உணர்ந்தாலும், அவன் மூடிய கண்ணை முன் போல் திறக்கவில்லை.
இப்போது அகில ரூபன் முன் போல் மதி தன் முன் வந்ததை உணராது இருக்கவில்லையே…. இரண்டு முறை அவளின் நலுங்கிய தோற்றத்தை பார்த்தும், தறிகெட்டு ஓடும் ம்னதை ஒரு நிலைக்கு நிறுத்தியதே பெரிய விசயம்.
அப்படி இருக்க திரும்பவும் அவளின் இந்த திருகோலத்தை பார்த்து தன் மனது கட்டுக்குள் இருக்கும் என்றோ… தன் மனது நிலையாக இருக்கும் என்றோ அவனுக்கு அவன் மீதே நம்பிக்கை இல்லை.
அதனால் கண் மூடிய வாறே…  “நவீனுக்கு கல்யாணம் செய்துட்டு எனக்கு உன்னை எவ்வளவு  பிடிக்கும் என்று அப்போ சொல்றேன்..இப்போ இல்ல…” என்ற அகில ரூபனின் பேச்சு ஸ்ரீமதிக்கு மேலும் மேலும் குழப்பத்தை தான் கொடுத்தது…
அந்த குழப்பத்தில் மதி அவனிடம் இன்னும் நெருங்கி … “ நவீன் துணைக்கும் நம்ம இதுக்கும் என்ன சம்மந்தம்…?” என்று கேட்ட மதியின் அந்த இதுவிலும், அவளின் மூச்சு காற்று இன்னும் இன்னும் அவனின் உடலை சூடுபடுத்தியதிலும், கண் திறந்தவன் முன்னே அனைவருக்கும் மதியும் தனக்கு ஸ்ரீயுமாய் இருக்கும் ஸ்ரீமதி நின்றுக் கொண்டு இருந்தாள்.
அவன் நினைத்தது போலவே அவ்வளவு நெருக்கத்தில் தன் மதியின் மதி முகம் பார்த்து மயங்கி போனவனாய்,  இன்னும் இன்னும் அவளை  தன் அருகில் நெருக்கத்தில் வைத்துக் கொண்டவனாய்…
“சொன்னா கேட்க மாட்டியாடி….” என்று அகில ரூபன் கேட்கும் அந்த குரலின் வேறு பாட்டிலும், அவன் அப்படி கேட்கும் போது அவன் மூச்சு காற்று இப்போது அவள் முகத்திக்கு வெப்பத்தையும், மனதுக்கு குளுமையும் ஒரு சேர கொடுத்ததில்..அவளின் கண் தன்னால் மூடிக் கொண்டது.
“கண்ணை திறடி…” என்று அகில ரூபன் அவனின்  ஸ்ரீயைய் இன்னும் நெருங்கியவனாய் நெருக்கியவனாய் சொன்னான்.
“ம்…ம்ம்..” என்று மறுத்தவள். கண் திறக்கவில்லை.
திரும்பவும் அவனின் மூச்சுக்காற்று பட்டதா…? அவனின் எச்சி துளி தன் முகத்தில் படிந்ததா…? என்று மதி அனுமானிக்க  முடியாத அளவுக்கு அவளிடம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு கேட்ட பின்னும் மதி கண் திறப்பதாய் இல்லை.
“சும்மா இருந்தவனைய் உசுப்பி விட்டுட்டு நீ பாட்டுக்கு கண் மூடிட்டு இருந்தா உன்னை விட்டுடுவேனா…?” என்று சொன்னவன் மேலும்…
“சரி நீ கண் திறவாமல் இருப்பதும் எனக்கு வசதி தான். உன்னை நான் எப்படி எல்லாமும் பார்க்கலாம்..” என்று சொல்லிக் கொண்டே அவளின் உடம்பில் தன் கையை படர விட்டவனுக்கு, அனுமதிக்கும் வகையாக வாகாக அவளும் அவனின் விடுப்பட்ட பட்டனின் இடையில் தன் கையை நுழைத்தாள்..
இருவரில் யார் நெருங்கினார்கள்… என்று  பிரித்து பார்க்க முடியாத அளவுக்கு அங்கு ஒரு  அழகான கூடல் நிகழ்ந்தது.