Advertisement

அப்போதும் வெற்றி மாறன்… “உனக்கு தனியா எல்லாம் பாதுகாப்போட தனி கார் ஏற்பாடு செய்ய முடியாது. அவங்க கூடவே வா…” என்று சொன்னவர்..
பவனியம்மாவுக்கும் சீதாராமனுக்கும் மரியாதை நிமித்தமாய் சல்யூட் அடிக்க கை வைக்க பார்க்க… அந்த கையை தடுத்து நிறுத்திய சீதாராமன்…
“குடும்பமாக இருக்கும் போது நீங்க என் சம்மந்தி..அந்த முறையில் தான் நம் பேச்சுகள் எல்லாம் இருக்கனும்… பதவி நிமித்தம் பேசும் போது இது போல் செய்ங்க போதும்.” என்று சீதாராமன் சொன்னதும்.. அதே ஒரு புன்னகை பூசியவராய் அவர் பணியான பாதுகாப்பு ஏற்பாடு  அனைத்தும்  சரியாக இருக்கிறதா என்று பார்க்க சென்று விட்டார்.
எதையும் மறுக்க முடியாது ஏன் தன் எதிர்ப்பையும் காட்ட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட ஸ்ரீமதி எப்போதும் போல் தன் முகத்தில் போலி புன்னகை பூசியவளாய் அவர்களோடு காரில் ஏறி அமர்ந்தாள் கூடவே தீபிகாவும்..
அனைவரும் ஏதோ ஒரு மீட்டிங்கிள் இருப்பது போல் அப்படி ஒரு அமைதி..முன் இருக்கையில்..முன் இருக்கை என்பது ஓட்டுனர் இல்லாது அதற்க்கு பின் பக்கமாய் இருவர் மட்டுமே அழகாக வடிவமைத்த இருக்கையில்  அண்ணன் அண்ணி அமர்ந்து இருந்தனர்.
அவர்களுக்கு பேச்சு தேவையில்லை போல்..எங்களுக்கு பார்வை ஒன்றே போதும் என்ற வகையில் அவர்கள் கண்ணால் காதல் பாடம் நடத்திக் கொண்டு வந்தனர்.
அவர்களுக்கு பின் இருக்கையில் தான் ஸ்ரீமதி அமர்ந்து இருந்தாள். அந்த இருக்கை  எதிர் எதிர் பக்கமாய் அமர்வது போல் இருந்தது  பவனியம்மா சீதா ராமன் கூடவே அகில ரூபன் அமர்ந்து இருக்க..அவர்களை பார்த்த படி எதிர் இருக்கையில் தான் நடுவிலும் இந்த பக்கம் தீபிகா தன் பக்கத்தில் நவின் அமர்ந்த படி வந்த அந்த பயணம் ..அது என்ன என்று சொல்ல…
இப்படியும் அமைதியாக வர முடியுமா…?அதுவும் திருமணம் செய்து பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் தனியாக கார் கொடுக்காது அவர்களோடு அனைவரும் வருவதே ஒரு மாதிரி இருக்க.. இதில் எதுவும் பேசாது கடவுளே… 
ஸ்ரீமதி வாய் ஓயாமல் பேசுபவள் இல்லை.அதே சமயம்  உம்முனா மூஞ்சி என்றும் சொல்ல முடியாது…நேரத்துக்கு தக்கப்படி நடந்துக் கொள்வாள். திருமணம் என்றால் கலாட்டா தானே..ஆனால் இந்த திருமணத்தில் என்ன நடந்தது…? 
பாதுகாப்பு பாதுகாப்பு என்று தன் தந்தை சொல்லிக் கொண்டு இருக்க…பெரிய வீட்டு ஆளுங்க ஒரு குறையும் வந்துட கூடாது என்று அம்மா ஒரு பக்கம் பார்த்து பார்த்து நடக்க..
இடையில் தான்…தன் தோழிகளை கூட கூப்பிட முடியாது…பலத்த பாதுகாப்போடு நடக்கும் சொந்த அண்ணன் திருமணத்திற்க்கு அப்பா சொன்ன..
“உன் பக்கம் யார் யார் வர்றாங்க சொல்லு..அதுக்கு முன்ன அவங்க ஆதார் கார்ட் எனக்கு வேண்டும்.” என்ற அவர் பேச்சில்…. யாரையும் கூப்பிடாது விட்டு விட்டாள்.
இதோ இப்போது தன் பக்கத்தில் அமர்ந்து எதிர் இருக்கையில் இருப்பவனை சைட் அடித்துக் கொண்டு வரும் தோழிக்கு கூட அழைப்பிதழ் வைக்கவில்லை. 
தன்னிடம் இருந்த அழைப்பிதழை திருடி விட்டு  நேற்று தான் போன் செய்து… “நான் வர்ற போறேன்…” என்று சொல்லியவளிடம் ஆயிரம் முறை மண்டபத்தின் வாசலுக்கு வந்ததும் எனக்கு போன் பண்ணு நான் அழைத்துக் கொள்கிறேன் என்று சொன்னாள்.
ஆனால் இதோ அவள் எதிர் இருக்கையில் அமர்ந்து இருக்கும் அவளின் ஹீரோ தயவில் உள்நுழைந்து விட்டாள். தோழி என்று ஒரு கலாட்டா இருக்கா…? ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஒன்றும்  இல்லாது இதோ போகிறோம் ஒரு பயணமாய்…
அவள் இப்படி நினைத்தது பக்கத்தில் அமர்ந்து வந்த நவினுக்கு கேட்டது போல… “ஒரு கல்யாணம் போலவே இல்லலே…?” என்று ஸ்ரீமதியிடம் கேட்டாள்.
இவ்வளவு நேரமும் அவளும் அதை தான் நினைத்துக் கொண்டு வந்திருந்தாள். ஆனால் அவன் அப்படி கேட்டதும் ஆமாம்..என்று பதில் அளிக்க வந்தவள்..இவ்வளவு நேரமும் தன் பேசியில் மும்முரமாய் ஏதோ  பார்த்துக் கொண்டு வந்த அகில ரூபன் இந்த பேச்சில் தலை நிமிர்ந்து தன்னை பார்த்தான்.ஏனோ அவன் பார்வையில் பதில் அளிக்க வந்தவளின் வாய் தன்னால் மூடிக் கொண்டது…
கேட்டவனுக்கு பதில் அளிக்காது ஒரு சின்ன புன்னகை சிந்தியவள்..எப்போதும் போல் இருக்க தொடர்ந்து 
நவின்… “நீங்க ரொம்ப அமைதியோ…” என்று அவன் பேச்சை தொடர்ந்தான்.
அதற்க்கு என்ன பதில் சொவது என்று அவள் யோசிப்பதற்க்குள் அடுத்த கேள்வியான… 
“உங்களுக்கு அப்பான்னா பயமா…?” என்ற நவினின் கேள்விக்கு மட்டும்..அவனை திரும்பி ஏன் என்று பார்வை பார்த்தாள்.
அவளின் பார்வையில் “உங்க ஐய்ஸ் பவர் புல் ஐய்சுங்க…” என்ற வார்த்தையில் அவள் எதிர் இருக்கையில் அமர்ந்து இருந்த பவனியம்மாவையும் சீதாராமனையும்  பார்த்தாள்.
இருவரும் ஒரு சேர புன்னகையுடன் தங்கள் பேச்சை தவறு தவறு அவர்களின் மகன் பேச்சை ரசித்துக் கேட்டுக் கொண்டு இருந்தனர்…அவர்கள் பக்கத்தில் அமர்ந்து இருந்த கல்வி இலக்கா மட்டும் ஆராய்ச்சி பார்வையில் பார்த்துக் கொண்டு இருந்தான். இப்போது இவன் கேள்விக்கு என்ன பதில் சொல்வாள்..?  யோசித்தவள் பின் எப்போதும் தான் செய்யும் புன்னகை புரிந் சிந்தி குனிந்து விட்டாள்.
குனிந்தவளுக்கு சீதாராமன் தங்கள் பேச்சை ரசித்து பார்த்துக் கொண்டு இருப்பது போல் தான் தோன்றியது..ஆனால் இந்த பவனியம்மா மட்டும்  ரசிப்போடு கூட ஏதோ ஒன்று இருப்பது போல் தோன்ற..அசந்தர்ப்ப சமயமாய்…தீபிகா சொன்ன..அவங்களே பெண் கேட்டால் என்ற அந்த வார்த்தை நினைவில் வர..
அய்யோடா…” என்று அவள் நினைக்கும் வேளயில்… தங்கள் வண்டியை தொடர்ந்து வந்த அந்த ஹாரன் ஒலி மண்டையை பிளப்பது போல் இருந்தது.
எப்போதும் இந்த பாதுகாப்பு ஒலி அவள் கேட்டுக் கொண்டு இருப்பது தான்..ஆனால் இன்று மிக மிக அதிகமாய்..பின் சும்மாவா முதலமைச்சருக்கு இந்த  கூடுதல் பாதுகாப்பு  இருக்க தானே செய்யும்.
ஸ்ரீமதி நினைப்பது போல் தான் பவானியம்மா அவளை பார்வையிட்டு கொண்டு இருந்தார். ஒரே முறை தான் பெண்ணுக்காக அவர்கள் வீட்டுக்கு சென்றது அப்போது ஸ்ரீமதியை பவனியம்மா பார்க்கவில்லை.
இதோ இப்போது தான் இந்த திருமணத்தில் பார்க்கிறாள்..பார்த்த உடன் ஏனோ இந்த பெண் தன் வீட்டுக்கு மருமகளாய் வந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் வந்து விட்டது.
அதனால் தான் ஸ்ரீமதி வணக்கம் என்று தன்னை பார்த்து கை கூப்பியதும்… அவள் தலை மீது கைய் வைத்து ஆசீர்வாதம் செய்தார்..பின் அந்த நினைப்பு வராது அடுத்து அடுத்து  வேலை இல்லை என்றாலும்…கடமை இருக்கிறது இல்லையா..அதை நிவிர்த்தி செய்வதில் ஸ்ரீமதியை மறந்து விட்டார்.
ஸ்ரீமதியும் தனக்கு என்று கொடுக்கப்பட்ட  அறைக்குள் தன்னை புகுத்திக் கொண்டதால் பவனியம்மாவுக்கு ஸ்ரீமதி நினைவு வ்ராது போய் விட்டது.
ஆனால் இப்போது  இந்த பயணத்தில் ஆராம்பம் முதலே தன் எதிரில் அமைதியாக அமர்ந்து இருக்கும் ஸ்ரீமதியையே ஆராய்ந்துக் கொண்டு இருக்கிறார். தங்கள் பதவி தெரியும்..தங்கள் குடும்பம் தெரியும்..
தெரிந்தும் தன் எதிரில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்கும் அந்த தோரணை… திமிர் என்று சொல்ல முடியாது ஆனால்  அவளின் அந்த செயல்  மிக இயல்பாய் இருந்தது…உறவு என்று சொல்லிக் கொண்டு அதிகப்படியான பேச்சு..இந்த அதிகப்படியான புகழ்..என்று இல்லாது இயல்பாய் அவள் அமர்ந்து இருந்ததே அவரை அவ்வளவு ஈர்த்தது.
இப்பெண் தங்கள் வீட்டு மருமகளாய் வந்தால் நன்றாக இருக்கும் அந்த எண்ணம்..இப்போது இப்பெண் தான் வர வேண்டும் என்ற முடிவோடு ஸ்ரீமதியையே பார்த்துக் கொண்டு வர..
சீதாராமனோ பவனியம்மாவின் காதருகில் … “பொம்மி பசங்க விருப்பம் தான் முக்கியம்.” என்று தன் மனைவியின் நோக்கம் புரிந்தவராய் சொன்னார்.
இப்போது தன் இளைய மகனின் இந்த ஆர்வமான பேச்சை ரசித்துக்  கேட்டுக் கொண்டு இருக்க..ஏதோ முடிவு செய்தவராய் தன் பெரிய மகனின் பக்கம் பார்வையை  செலுத்தினார்.
அப்போது தான் அகில ரூபன் ஸ்ரீமதியை ஆராய்ச்சி பார்வையை பார்த்துக் கொண்டு இருந்தது… அப்போது சீதாராமன்… “அவனுக்கு நம்ம பார்த்து வெச்சா தான்.” என்று முன்பு போலவே அவள் காதில் கிசு கிசுக்க..
“என்னையே தான் பார்த்துட்டு வர்றிங்களா…?” என்ற பவனியம்மாவின் கேள்வியில்..
“என் மனைவியை பார்க்க இன்று தானே என்னால் முடிகிறது.” என்று அவர் சொல்லும் போது அவர் குரலில் என்ன இருந்தது…? என்று பவனியம்மா யோசிக்கும் வேளயில்…அவர்கள் வர வேண்டிய ஆசிரமம் வந்து விட்டது.
பின் அனைத்தும் உரிய பாதுகாப்போடு உணவு பரிமாறினார்கள்..பவனியம்மா இரு குழந்தைகளின் இலையில் உணவு இடுவதை ஊடகம் படம் பிடித்துக் கொண்டு இருக்க..அவரை சுற்றி பாதுகாவர்கள் சூழந்துக் கொண்டு பவனியம்மா முதலில்  அந்த இலையில் இனிப்பை வைத்ததும்..
அக்குழந்தை ஆவளோடு அந்த இனிப்பின் மீது கை வைக்க பார்க்கும் போது  பவனியம்மா பக்கத்தில் இருந்த ஒருவர் அக்குழந்தையிடம் “ம் சாப்பிடாதே சாப்பிடாதே…” என்று சொன்னவர் பவனியம்மாவை காண்பித்து…
“அவங்க முகத்தை  ஆசையாக பார்ப்பது போல பாரு பாப்பா…” என்று சொன்னவர் ஊடகத்திடம்..
“இது தான் தலைப்பு பக்கத்தில் வர வேண்டும்.” என்று சொன்னார்..
அக்குழந்தையோ இப்போது ஆசைக்கு பதிலாய் பவனியம்மாவை பயத்தோடு பார்த்தது…திரும்பவும் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்தவர்..
“இப்படி பார்க்க கூடாது பாப்பா…”  என்று  எதோ விவரித்துக் கொண்டு இருப்பதை எதிர் பக்கத்தில் இருந்த குழந்தைகளுக்கு உணவை பரிமாறிக் கொண்டு இருந்த ஸ்ரீமதி இதை பார்த்து ஏனோ பொறுமையாக இருக்க முடியவில்லை.
அப்போது ஸ்ரீமதியும் மற்ற குழந்தைகளுக்கு இனிப்பு தான் இலையில் வைத்துக் கொண்டு இருந்தாள்…தன் கையில் இருக்கும் இனிப்பை எடுத்துக் கொண்டு பவனியம்மாவின் பக்கம் சென்றவள்..வாயை பிளந்துக் கொண்டு ஒரு வித பயத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த அக்குழந்தையின் வாயில் ஊட்டியவள்…
 பவனியம்மாவின் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்தவரிடம்… “ம் இப்போ நடிக்க சொல்லி கொடுங்க.” என்று அவள் பேசும் போது அந்த இடத்திற்க்கு கோபமாக வெற்றி மாறன் வந்தார்.

Advertisement