Advertisement

அத்தியாயம்…2
தனக்கு என்று கொடுக்கப்பட்ட அறைக்கு தன் தோழியை இழுத்துக் கொண்டு வந்த ஸ்ரீமதி… “ஏய் எப்படி உள்ள வந்த…மண்டபம் வெளியில் வந்ததும் எனக்கு போன் பண்ணு என்று  தானே சொன்னேன்…முதலில் எப்படி உன்னை உள்ளே விட்டாங்க….?” என்று தீபிகாவிடம் தன் கேள்வி கணைகளை தொடுத்துக் கொண்டு இருக்க…
“ஏய் இருடி இரு. முதல்ல கல்யாணத்துக்கு யாராவது வந்தா..வாங்க..சாப்பிடிங்களா…?சாப்பாடு நல்லா இருந்ததா…? என்று இப்படி தான் கேட்பாங்க…ஆனா நீ என்னை எப்படி உள்ளே விட்டாங்கன்னு கேட்குற..என்னை பார்த்தா எப்படி இருக்கு….?” என்று  தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு கோபம் போல் பேசியவளை இழுத்து தன் அருகில் அமர வைத்துக் கொண்ட ஸ்ரீமதி…
“உனக்கு இந்த கோபம் எல்லாம் செட்டாகலே…சொல்லு செக்யூருட்டி ரொம்ப பலமா இருந்ததே அதான்.” என்ற ஸ்ரீமதியின் கேள்விக்கு இப்போது தீபிகா ஒழுங்காக பதில் அளித்தாள்.
“நான் வரும் போது தான் நம்ம  கல்வித்துறை அமைச்சரும் வந்தார்…அப்போ நான்  ஒரு போலீஸ் கிட்ட  பத்திரிக்கை காட்டினா…அவர் இது எல்லார் கிட்டேயும் தான் இருக்குன்னு சொன்னார். அப்புறம்  என்  செல்போனில்  இருக்கும் நம்ம கேங்கு போட்டோவை காண்பிக்கும் போது தான் நம்ம ஹீரோ அகிலன் சார்…இவங்க  ரொம்ப வேண்டியவங்க தான் உள்ளே அனுப்புங்கன்னு சொன்னதும் தான் அவர் என்னை அனுப்பினார்.
நான் நம்ம ஹீரோ கூடவே நடந்து வந்தேன்னா அப்போ எல்லாரும் பார்த்தாங்க பாரு என்னை… நான் அப்படியே வானத்தில் தான் பறந்தேன்னா பார்த்துக்கேன்.” என்று  அவள் பேச பேச அவள் கண்கள் எங்கோ மிதக்க… நிஜமாகவே அவள் கற்பனையில்  வானத்தில் தான் பறந்து கொண்டு இருக்கிறாளோ என்று நினைத்த ஸ்ரீமதி…
“பார்த்து பார்த்து ஏதாவது பத்திரிகைக்காரன் கண்ணில் நீங்க மாட்டி நாளைய செய்தியாக…கல்வித்துறை அமைச்சர் தன் காதலியோடு தங்கை திருமணத்தை முன் நின்று நடத்தினார் என்று வந்துட போகுது.” என்று சொல்லி அவளை தட்டி நிகழ் காலத்திற்க்கு கொண்டு வந்தாள்.
தீபிகா அப்போதும் விடாது… “ஏய் அப்படி வருமாடி…?” என்று கண்கள் பள பளக்க கேட்டவளை பார்த்து ஒரு பரிதாப லுக் விட்டவளாய்..
“வரும் வரும்..கூடவே ஆப்பும் வரும்.” என்று ஸ்ரீமதி கடுப்புடன் சொன்னாள்.
“ஆப்பா என்னடி சொல்ற….?” என்று தீபிகா குழம்பி போய் கேட்டாள்.
“இந்த அமைச்சர் யார் யாருக்கு என்ன என்ன செய்து இருக்காரோ…அதற்க்கு நேரிடையாக அவரை பழி வாங்காம உன்னை  தான் போட்டு தள்ளுவாங்க… இப்போ கற்பனையில் வானத்தில் பறந்தியே அப்போ நீ நிஜமாகவே வானத்தில் பறக்கலாம்.” என்ற ஸ்ரீமதியின் பேச்சில் தீபிகா கொஞ்சம் அரண்டு தான் போய் விட்டாள்.
“இல்ல பார்க்க ஹீரோ போல் இருக்காரே…” என்று தீபிகா தன் பேச்சை பாதியில் முடித்தாள்.
அதற்க்கு ஸ்ரீமதியோ… “பார்க்க ஜீரோ போல் இருந்தாலும்,  ரிஸ்க்கான வேலை செய்யாம இருப்பவனை கட்டி கிட்டா நம்ம உயிருக்கும், சுதந்திரத்திரத்திற்க்கும் எந்த வித பிரச்சனையும் இருக்காது.” என்று தீபிகாவின்  பேச்சை இவள் முடித்து வைத்தாள்.
தீபிகா அப்போதும் விடாது… “இல்ல ஒரு வேள அவங்க வீட்டில் உன்னை கேட்டா நீ அந்த வீட்டுக்கு மருமகளா போக மாட்டியா….?”என்று சிறிது நேரமாய் தன் மனதில் அறித்துக் கொன்டு இருந்த கேள்வியை கேட்டு விட்டாள்.
“சான்சே இல்ல..”  என்று ஸ்ரீமதியிடம் இருந்து பதில்  உடனே வந்தது.
“இல்ல அவங்களே விருப்ப பட்டு கேட்டா….?”  என்று தீபிகா அப்போதும் விடாது தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்துக் கொள்ள கேட்டாள்.
“ தீபி உனக்கு ஏன்  இந்த சந்தேகம் வந்ததுன்னு தெரியல..ஆனா என்னை பத்தி நல்லா தெரிஞ்சி நீ என் கிட்ட கேட்ட பாரு.. தோ பார் இது முதல்ல லவ் மேரஜ்…என் அண்ணன் மட்டும்  அண்ணிய லவ் பண்ணலேன்னா இந்த இடம் எங்களுக்கு சாத்தியமே இல்லேன்னு நான் உனக்கு சொல்ல வேண்டாம். உனக்கே புரியும்.
அடுத்து இந்த லவ் மேரஜே வேண்டாமுன்னு நான் தடுத்தேன் என்பது உனக்கு புரியும்…என் அண்ணனே அந்த வீட்டுக்கு மருமகனா போவதில் எனக்கு துளி கூட விருப்பம் இல்லை..இதில் நான்..அதுவும் அவங்க வந்து கேட்பாங்க… ஜோக்கு அடிக்காதே தீபி…” என்று ஸ்ரீமதி பொறுமையாக பேசிக் கொண்டு வந்தவள் இறுதியில் தன் பேச்சை முடிக்கும் போது கொஞ்சம் சலிப்போடு தான் முடித்தாள்.
தீபிகா திரும்பவும்  விடாது… “இந்த பதவி தான் பிரச்சனை என்றால் சின்ன மகனுக்கு கேட்டா ஒகே சொல்லுவியா….?” என்று என்னவோ நாளையே தன்னை பெண் கேட்பார்கள் என்பது போல் பேசியவளின் வாயை அடைக்க…
“அவங்க சின்ன மகனுக்கு என்றால் யோசிக்கலாம்..ஆனால் அதிலும் சில பல கன்டிஷனோடு…ஒன்னு எங்க அப்பா அசிஸ்டெண்ட் கமிஷனர் என்பதால நான் பெங்களூரில் இருந்துட்டேன்..ஆனால் அவங்க குடும்பம் அதுக்கும் மேல இல்ல..அதனால இந்தியாவே வேண்டாம் வெளிநாட்டுக்கு என்னோடு வருவதா இருந்தால் எனக்கு ஒரு பிரச்சனையும் இருக்காது.” என்று தீபிகாவின் வாய் அடைக்க பேசியவளின் இந்த பேச்சு தன் வாழ் நாள் முழுவதும் தொடரும் என்று உணராது பேசி வைத்தாள்.
அப்போது அங்கு வந்த புவனேஷ்வரி… “ஏன்டி சமஞ்ச புள்ள போல அ[ப்போ அப்போ ரூமுக்கு வந்து பதிங்கிக்கிற….?” என்று கேட்க..
அதற்க்கு தீபிகா… “ஆன்ட்டி மது சமஞ்ச புள்ள தானே ஆன்ட்டி….?” என்று கேட்டு  வைக்க ஏற்கனவே கடுப்பில் இருந்த புவனேஷ்வரி  அவள் கேள்விக்கு பதில் அளிக்காது..
ஸ்ரீமதியிடம்… “எல்லோரும் ஆசிரமத்துற்க்கு கிளம்புறாங்க நீயும் அவங்க கூட போ…”
புவனேஷ்வரி ஆசிரமம் என்றதும் எழுந்துக்  கொள்ள பார்த்த ஸ்ரீமதி அவர் அடுத்து சொன்ன “அவங்க கூட போ…” என்ற வார்த்தை கேட்டதும் இன்னும் சட்டமாக அந்த கட்டில் மீது அமர்ந்துக் கொண்டவள்…
“நான் போகல…” என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட்டாள்.
“தோ பாருடி உங்க அப்பா ஏற்கனவே ரொம்ப டென்ஷனில் இருக்கார்..இப்போ நீ இது போல் அடமா பேசிட்டு இருந்தா எல்லோர் எதிரிலும் கத்தி விடுவார்..அப்புறம் நீ எனக்கு மானம் போச்சி மரியாதை போச்சின்னு என் கிட்ட வந்து குதிக்க கூடாது சொல்லிட்டேன்.” என்று அவர் சொல்லி வாய் மூடும் முன்..
எப்போதும் போல் சரியாக அந்த இடத்திற்க்கு வந்த வெற்றி மாறன்…”இன்னுமா கிளம்பல அங்கு பெரிய பெரிய வி.ஐ.பி எல்லாம் ரெடியாகி காத்துட்டு இருக்காங்க..இன்னும் நீங்க கிளம்பாம கதை பேசிட்டு இருக்கிங்க…” என்று கத்தினார்.
வெற்றி மாறன் எப்போதும் அப்படி தான் வேலையில் நேர்மை.அதனால் அவருக்கு பல நெருக்கடிகள்…அதனால் வெளியில் காட்ட முடியாத கோபத்தை எல்லாம் வீட்டில் தான் காட்டுவார். அவருக்கு அனைத்தும் நேரத்துக்கு நடக்க வேண்டும்..
இது போல் அமைச்சர்கள் பங்கு பெரும் வெளி விழாவுக்கே வெற்றி மாறன் பாதுகாப்பு விசயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக தான் இருப்பார். இப்போது தான் நடத்தும் தம் வீட்டு விழாவில் வரும் அனைவரும் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள்..
அப்போது அவர்கள் பாதுகாப்பை வெற்றிமாறன் எந்த அளவுக்கு செய்து இருப்பார்..ஒரு வாரமாய் இதே அலச்சல் தான் அவருக்கு… யாருக்கும் எந்த வித பிரச்சனையும் வந்து விட கூடாது என்பதில் அவ்வளவு கவனமாய் இருந்தார். அதனால் இந்த ஒரு வாரமாய் அவர் கோபத்தோடு தான் இருக்கிறார்.
இன்னும் கேட்டால் பாதுகாப்பு மட்டும் தான் அவருடையது . மற்ற அனைத்தும் புவனேஷ்வரி தான் பார்த்துக் கொண்டது. புவனேஷ்வரியின் குடும்பம் மிக செல்வாக்கு வாய்ந்த்து. வீட்டுக்கு ஒரே பெண்.. அதனால்  இது போல் விழாவை அவர் எந்த வித டென்ஷனும் இல்லாமல் சாதரணமாக அனைத்தையும் செய்து முடித்தார்.
இருந்தும் வெற்றி மாறன்.. “என்ன இது..? ஏது இது…?2 என்று புவனேஷ்வரியிடம் கேட்டு கேட்டு நச்சரித்து விட்டார். இப்போதும் அதே கோபத்தோடு பேச… எப்போதும் போல் ஸ்ரீமதி எந்த வித பதிலும் அளிக்காது அமைதியாக தலை குனிந்துக் கொண்டாள்.
புவனேஷ்வரி தான்.. “தோங்க கூட்டிட்டு வரேன் நீங்க முன்னாடி போங்க.” என்று சொல்லி அவரை அனுப்பியவர்..
தன் மகளிடம் திரும்பி. “வாடி இன்னும் எனக்கு திட்டு வாங்கி வைக்காதே…” என்று சொல்லவும்..
ஸ்ரீமதி சரி என்பது போல் எழுந்து நின்றவள் தீபிகா பக்கம் திரும்பி .. “நீயும் வா…” என்று அவளையும் கூட அழைத்தாள்.
அதற்க்கு தீபிகாவும் உடனே  எழுந்து நின்று… தன் புடவை சரியா இருக்கிறதா என்று சரி பார்க்க..புவனேஷ்வரியோ யோசனையுடன் தன் மகளை பார்த்தார். உன் அப்பா பற்றி நன்கு தெரிஞ்சும் இது போல் செய்யறியே என்பது போல் அவளை ஒரு பார்வை பார்த்தார். 
அதற்க்கு ஸ்ரீமதி நேரிடையாகவே… “அவ இப்போ தான் வந்தா…சாப்பிட்டாளா என்று கூட தெரியல..அங்கு எங்க ஓட்டல்  பத்தி கூட எதுவும் பேசல..இங்கு அவளுக்கு என்னை தவிர உங்களையும் அஷ்வத்தையும் தான் தெரியும்..நாம எல்லோரும் அங்கு போக இங்கு இவ என்ன செய்வா….?” என்று கேட்டாள்.
மகள் கேட்பது நியாயமான கேள்வி தான்.ஆனால் இதை எல்லாம் இவள் அப்பா கிட்ட சொல்லிட்டா இருக்க முடியும்…அவருக்கு அவர் வேலையில் எந்த பாதிப்பும் வந்துட கூடாது…அவர் இந்த பெண்ணை பார்க்கும் பார்வையே  இந்த  பெண்ணால் அமைச்சர்களுக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமான்னு ஏதோ ஒரு  தீவிரவாதியை பார்ப்பது போல தானே பார்த்து வைப்பார்.
புவனேஷ்வரி நினைத்த படி தான் ஸ்ரீமதி தீபிகாவோடு காரின் அருகில் வந்து நிற்கவும்…வெற்றி மாறன் தீபிகாவை சந்தேகத்துடன் பார்த்தார். புவனேஷ்வரி தான்… “இவள் நம்ம மதியோடு பிரண்டுங்க…இவளும் இன்னொரு பெண்ணும் சேர்ந்து தான் ரெஸ்ட்டாரெண்ட் நடத்துறாங்க…” என்று சொன்னதும்..
இப்போது வெற்றி மாறனின் பார்வை மனைவி பக்கம் வந்தது..ஆசையோடு இல்லை கோபத்தோடு… புவனேஷ்வரியோ மனதில்… “உங்களை கட்டிக்கிட்டதுக்கு எனக்கு தான் ஒரு பிரண்டும் இல்லாம போயிட்டாங்க…அதே போல் மகளும் இருக்கனுமுன்னா முடியுமா…? என்று நினைத்தவர்..
கூடவே… “அப்போ கூட அவர் மகளை தானே முறைக்கனும்…? அது தானே இளச்சவன் பொண்டாட்டி எல்லோருக்கும் மச்சினிச்சியாம் அது போல தான் ஆவுன்னா என்னை தான் முறைப்பது. ஊரு எல்லாம் இவரை பார்த்து பயந்தா இவர் மகளை பார்த்து பயப்படுவார்..எல்லாம் என் நேரம்…” 
அனைவரும் இருக்க தலையில் அடித்துக் கொள்ள முடியாது… மதுவிடம்… “நீ போம்மா…” என்று தன்னோடு கூட வராது தன்னை அவர்களோடு தள்ள பார்த்த தன் அன்னையை அனைவரின் முன்னும் முறைக்க முடியாது…
ஆனால் அவர்களோடு தனியாக போகவும் ஒரு மாதிரி இருக்க…. “அம்மா நீங்க வரலையா…?” என்று கேட்டாள்.
அதற்க்கு புவனேஷ்வரி  பதில் அளிக்கும் முன் வெற்றி மாறன்… “அம்மா நம்ம கூட வந்துட்டா இங்கு மீதி  இருக்க வேலை எல்லாம் யாரு பார்ப்பா…?” என்று  தன் தந்தை கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்காது எ[ப்போதும் போல தலை குனிந்துக் கொண்டாள்.
இந்த பேச்சு வார்த்தைகள் அனைத்தும் அனைவரின் முன்நிலையில் அதாவது பெண் மாப்பிள்ளை, பெண்ணின் குடும்பமான பவனியம்மா சீதாராமன் அகில ரூபன் நவின் இவர்களின் முன்நிலையில் தான் நடந்தது.
வெற்றி மாறனின் அந்த தோரணையான பேச்சும், அதற்க்கு மதியின் அமைதியையும் பார்த்து அனைவரும் வீட்டில் கூட இவர் போலீஸ் தான் போல என்று நினைத்துக் கொண்டனர்.
சீதாராமன் நினைத்ததை  தன் சம்மந்தியிடம் கேட்டே விட்டார்… “வீட்டில்  கூட போலீஸ் தான் போல…” என்று கேட்டதற்க்கு…
அதற்க்கு அவர் ஒரு புன் சிரிப்பே பதிலாய் கொடுத்தவர். அப்போது கூட அவர் கண் சுற்றிலும் வட்டமிட்டு கொண்டே இருந்த வண்ணம் தான் இருந்தது.
ஸ்ரீமதியும் அவள் தோழி தீபிகா  மட்டுமே வருவதால் சீதாராமனின் உயர்ந்த வகை  புல்லட் துளைக்காதே பிரத்தியோகமான  காரிலேயே அவளையும் வருமாறு பவனியம்மா சொன்னதற்க்கு.. மதி தயங்கி தன் அன்னை முகத்தை பார்த்து நின்றாள்..

Advertisement