Advertisement

அத்தியாயம்… 19
அவர்கள் இருவரும் வெளியேறும் வரை அன்னையும் மகனும் பொறுமையாக எதுவும் பேசாது அமைதியாக இருந்தார்கள். அவர்கள் வெளியேறி உடன்..
பவானியம்மா அகில ரூபனை பார்த்து… “நடந்ததில் உன் பங்கும் இருக்கா..?” என்று  தன் மகனை பார்த்து நேரிடையாகவே கேட்டு விட்டார்.
பவானியம்மா கேள்விக்கு பதில் அளிக்காது அங்கு இருக்கும் டேபுல் அருகில் நின்றவனின் அந்த தோற்றம்..அதுவும் அந்த டேபுல் மீது சாய்ந்து தன்னுடைய ஒரு காலின் மீது மறுகாலை சாய்த்த வாறு அவன் நின்ற அந்த  தோரணையை பார்த்து அதற்க்கு அடுத்து அவனிடம் என்ன கேள்வி கேட்பது என்று வாய் அடைத்து இருந்தவரின் கண் முன்னே..
முன்பு எல்லாம் தன் முன் நிற்க்கும் போதும், உட்காரும் போதும், அவன் உடல் மொழியில் தெரியு அந்த பணிவு சுத்தமாய் இல்லாது..அதற்க்கு மாறாய் மிக தெனவெட்டாக நின்றுக் கொண்டு அவன் தன்னை பார்த்த அந்த பார்வையில் மீண்டும் அவன் முகம் பார்க்க அஞ்சியவராய்  பவானியம்மா தலை குனிந்துக் கொண்டார்.
அந்த டேபுல் மீது சாய்ந்து தன் அன்னை முகத்தின் மீதே பார்வை இட்டுக் கொண்டு இருந்த அகில ரூபனுக்கு அன்னையின் கேள்வியில் தெரிந்த அந்த புத்திசாலி தனத்தில்..
இவரின் இந்த புத்திசாலி தனம் தானே… ஒரு தாயாய்  தன் மனது படி நடக்காது. அன்று  அந்த முடிவுக்கு சம்மதம் தெரிவிக்க தூண்டியது… என்று அவன் நினைத்துக் கொண்டே தன் அன்னையின் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு பின் அவர் தன்னை பார்த்ததும் அவரின் முகம் யோசனைக்கு சென்றது..பின் தலை குனிந்து கொண்டது என்று அனைத்தையும் அமைதியாக ஒரு அளவிடும் நோக்கத்தோடு பார்த்துக் கொண்டு இருந்த அகில ரூபன்..
தன் அன்னை இப்போது பேச மாட்டார் என்று புரிந்தவனாய்… “என்ன பார்க்குறிங்க… மாண்புமிகு  முதலமைச்சர் அவர்களே…” என்ற அகில ரூபனை மேலும் பேச விடாது…
“போதும் அகிலா போதும்… ப்ளீஸ்  அகிலா…” என்று மன்றாடும் குரலில் தன் அன்னை தன்னிடம் கெஞ்சியும் அவன் தன் பேச்சை விடுவதாய் இல்லை.
“என்ன போதுமா…? இரண்டே வார்த்தையில் என் பேச்சை முடித்துக் கொள்ள நீங்க என்னை ஒரு நாளோ.. இரண்டு நாளோ… ஏமாற்றவில்லை. வருடங்கள் நீண்ட நெடிய வருடங்கள். முப்பது வருடங்கள்..
சொந்த பிள்ளையை  தத்து பிள்ளையாக  வளர்த்து இருக்கிங்க..அதுவும் அந்த தத்து எடுத்தது கூட நீங்க ஓட்டுக்கலா  மாத்தி இருக்கிங்க…” என்ற அகில ரூபனின் பேச்சில் பவானியம்மா இன்னும் இன்னும் தான் தலை குனிந்து போய் விட்டார்.
ஆம் பவானியம்மாவின் இந்த தத்து கூட அவருக்கு ஒரு விதத்தில் சாதகமாய் தான் அப்போது போய் விட்டது.. பவானியம்மாவின் தந்தை இருக்கும் போதே தன் மகளை ஒரு தொகுதியில் வேட்பாளராய் நிற்க வைத்தார்…
அப்போது பிரசாரத்தில்  அவரின் முதல் தகுதியாய் பவானியம்மாவுக்கு வாக்கு சேகரிக்க பேசப்பட்ட விசயம்..
“இந்த காலத்தில் யார் திருமணம் முடிந்த அன்றே குழந்தையை தத்து எடுப்பார்கள்… ? யாரும் எடுக்க மாட்டார்கள்… இது போல் செய்ய ஒரு பரந்த மனப்பான்மை தேவை..அந்த பரந்த மனப்பான்மை நம் பவானியம்மாவுக்கு இருக்கிறது..
அடுத்த இரண்டு ஆண்டுகளில் தனக்கே ஒரு குழந்தை பிறந்த பின்னும், தன் சொந்த குழந்தையோடு தத்து குழந்தைக்கு தான்  அவர் அதிகம் முக்கியத்துவம் தந்து இருக்கிறார் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்..”
ஆம் தெரியும் படி தான் பவானியம்மாவின் செயல்கள் அனைத்தும் இருக்கும்..பவானியம்மாவின் தந்தை ஒரு முதலமைச்சர் என்பதாலும், பவானியம்மா சிறுவயது முதலே கட்சியில் இருந்ததாலும், எந்த ஒரு விசேஷத்துக்கு பவானியம்மா சென்றாலும் மீடியா முழுவதும் இவர்கள் குடும்பத்தின் மீது தான் இருக்கும்.
தந்தை முதலமைச்சர் மகள் அரசியலில் அவருக்கு  அடுத்த வாரிசு… மருமகன் கலெக்ட்டர் என்று பதவியில் இருக்கும் இவர்கள் குடும்பத்தை பற்றி எப்போது செய்தியில் வந்த வண்ணம் தான் இருக்கும்.
அப்போது மிகவும் பேசப்பட்ட விசயத்தில் ஒன்று… பவானியம்மா  எந்த விசேஷத்திலும் தன் சொந்த குழந்தையை  தனக்கு உதவியாக வரும் பெண்மணியிடம் விட்டு  விட்டு… அகில ரூபனின் கையை பற்றிய படி தான் இருப்பார்.. 
அப்போது செய்திதாள்களை பார்த்தால் இந்த பிம்பம் தான்..பவானியம்மாவின் கை பிடியில் அகில ரூபன்.. குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பெண்மணியின் கை பிடியில் நவீனும்.. தூக்கி வைத்தப்படி அனிதாவும் தான் இருப்பார்கள்… 
அப்போது அதை வைத்து தான் பவானியம்மாவுக்கு வாக்குகளை அள்ளினார்கள்… அதாவது அவர்கள் அன்று  செய்த அந்த பாவச்செயலே இவர்களுக்கு வெற்றிக்கு வித்திட்டது எனலாம். 
என்று அதை எல்லாம் சுட்டிக் காட்டிக் கொண்டு ஒரு வித கம்பீரக் குரலில் பேசிக் கொண்டு இருந்த அகில ரூபன்..  “ இந்த பதவியில் அந்த நாற்காலியில் உட்காரும் போது உங்க மனசாட்சி குத்தலயா…?குறைந்தது என்னை பார்க்கும் போது இதோ அப்போ எல்லாம் உங்க முன் இது போல் நிற்காம விசுவாசமா..ஒப்பான சொல்லனுமா நன்றி உள்ள நாய் மாதிரி..
உங்க பக்கத்தில் நவீனும், அனிதாவும் உரிமையோடு உட்கார்ந்துட்டு இருப்பதை ஏக்கத்தோடு பார்த்துட்டு நிற்ப்பேனே..அப்போ கூட உங்களுக்கு உங்க மனசு குத்தலயா…?” என்று அவன் பேச பேச அவனின் அந்த குரல் கர கரப்புக்கு கத்து எடுத்துக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும்.
பின் என்ன நினைத்தானோ அதில் இருந்து வெளி வந்தவனாய் திரும்பவும் மிக தெனவெட்டாக… “அது எல்லாம் சாதரண பெண்களுக்கு இருக்க வேண்டியது..உங்க போல பெரிய ஆளுங்களுக்கு இது போல் சில்லிக்கு எல்லாம் கவலைப்பட்டா  பின் பெரிய ஜில்லாவை யார் கட்டி ஆளுவது…?” என்று பேசியவனின் பேச்சில் இப்போது பவானியம்மாவுக்கு  ஏதோ புரிவது போல் இருந்தது.
“நான் செஞ்ச தப்புக்கு நீ என் கிட்ட இருந்து என்ன எதிர் பார்க்குற அகிலா…?” என்று கேட்டதும்..
ஒரு நிமிடம் தம் பேச்சை நிறுத்து விட்டு தன் அன்னையை பார்த்தவன்… பின் தனக்கு தானே…  “ம் இது கூட இல்லேன்னா இத்தனை வருடங்கள்..ஆட்சியில் இருக்க முடியுமா…?” என்ற பேச்சின் மறை பொருளை புரிந்தவராய்..
“நான் பதவி விலகனுமா…?” என்று பவானியம்மா நேரிடையாகவே கேட்டு விட்டார்.
அவனும் ஒரே வார்த்தையில்.. “ஆம்.” என்று சொன்னதும்..
“சரி நாளையே என் பதவி விலகலயும்..நீ என் மகன் என்ற உண்மையையும் சொல்லிடறேன்.” என்று பவானியம்மா சொல்லி விட்டார்.
போதும்.. இனி தாங்காது… வயதில்  மனதில் தெம்பும்..சாதிக்க வேண்டிய அந்த வெறியும் இருந்த போது செய்த செயல்கள் அனைத்தும் இப்போது தன்னையே தாக்கும் போது வயதான காலத்தில் அதை தாக்கு பிடிக்க அவரால் முடியவில்லை.
அதுவும் இல்லாது இப்போது எல்லாம் அகில ரூபன் தன்னை பார்க்கும் அந்த பார்வையில்,  இவனின் இந்த பார்வை தழுவலுக்கு பதில் மரணம் தன்னை நழுவி விட்டால் கூட பரவாயில்லை போல என்ற வகையாக தான் அகில ரூபனின் பார்வைகள்  இருந்தது…
அன்று அப்போது தன் பார்வையில் அவருக்கு சரியாக தெரிந்தது அனைத்தும் இப்போது அகில ரூபனின் பார்வையில் தவறாக தெரிந்தது…என்ன தான் நவீனோடு இவனிடம் ஆசை கொட்டி வளர்த்தாலும், நாம் அவனை தத்து பிள்ளையாக தானே வளர்த்தோம்.
அப்போது அவனின் நிலை..இப்போது புரிகிறது..ஆனால்  இப்போது புரிந்து என்ன பயன்..? என்பது தான் அகில ரூபனின் கேள்வியாக இருந்தது.
பவானியம்மாவின் பேச்சில்..அதாவது பதவி விலகலும், தன்னை சொந்த மகன் தான் என்ற அறிக்கையையும் ஒன்றாக கொடுக்கிறேன் என்று சொன்ன தாயின் பேச்சில்..
“வேண்டாம் பதவி விலகல் மட்டும் போதும்..இனி எப்போதும் போல் நான் தத்து பிள்ளையாகவே இருந்து விடுகிறேன்..” என்ற அகில ரூபனின் பேச்சில் பவானியம்மா அதிர்ந்து போனவராய்.
“அகிலா என்ன சொல்ற…? அப்போ எதுக்கு இது எல்லாம்..?” என்று கேள்வி கேட்டவரைய்..
முதலில் நானும் அனைவரின் முன்நிலையிலும், உங்க முகத்திரை கிழித்து தொங்க போடனு என்று தான் நினைத்தேன்..ஆனால் உங்க முகத்திரை கிழித்து தொங்க போட கூட நான் உங்க சொந்த மகன் என்று சொல்வதில் எனக்கு துளியும்  விருப்பம் இல்லை..
அதற்க்கு பதில் உங்க பதவில் நான் அமரனும்…ஊரில் சொந்த பிள்ளை இருக்க தத்து பிள்ளைக்கு தான் அந்த பதவியில்   யோகம் கிடைச்சது என்று எல்லோரும் சொல்லனும்… அப்போ உங்க மனசு கதறுமே..இல்ல இல்ல இவன் தான் என் சொந்த மகன் என்று எனக்கு அது தான் வேண்டும்..” என்று சொன்னவன் ..
கூடவே.. “அப்படியே உங்க புருஷனையும் ராஜனாம பண்ண சொல்லிடுங்க…”
என்னவோ சாம்பாரோடு வத்தக்குழம்பையும் வெச்சிடுங்க என்று சொல்வது போல் சொன்ன அவன் பேச்சில்…
“அகிலா அவரை எதற்க்கு…” என்று பவானியம்மா தன் பேச்சை முடிக்கவில்லை..
“ஏன் ஏன்..இதில் அவர் தவறு இல்லையா…? உங்க புருஷனுக்கு அவர் அந்த பதவியில் இருப்பது எவ்வளவு பெருமைன்னு எனக்கு தெரியும்… அந்த பெருமைக்கு அவர் லாயக்கு இல்லாதவர்…
சொந்த  குழந்தைய எவனோ பெத்த பிள்ளன்னு சீ…சீ நினைக்கவே அசிங்கமா இருக்கு…  ஒரு நல்ல ஆம்பிள்ளையா இருக்க கூட தகுதி இல்லாத அவருக்கு எந்த பெருமையும் இருக்க கூடாது..
அதோடு இன்னொன்னும்… இது வரை இந்த ஊர் உலமே உங்களை பார்த்துட்டு இருந்தது..இனி ஊருக்கு போய் யாருக்கும் தெரியாது எங்காவது ஒடுங்கி போய் தான் நீங்க இருக்கனும்..
ஆ இன்னொன்னும் சொல்ல மறந்துட்டனே போகும் போது அந்த இரண்டு தாய் கிழவியையும் கூட்டிட்டு போயிடுங்க… இனி நான் என் தங்கை தம்பி கூடவே என் ஆசை பொண்டாட்டியோடு நிம்மதியா இருக்கனும்.. புரிதா…?” என்று அகில ரூபன் சொன்ன அனைத்திற்க்கும் பவானியம்மா ..
சரி..சரி..” என்பது போல் தான் தலையாட்ட மட்டும் முடிந்தது..
அதுவும் சீதாரமன் தன் குற்றத்தை ஒப்புக் கொண்டு தன் பதவியில் இருந்து விலகுகிறார்… சீதாராமன் சொல்லாததை சொன்னதாய் அனைத்து ஊடகத்திற்க்கும் தெரியப்படுத்திய அகில ரூபன் கூடவே..
தன் கணவனின் இந்த செயலில் தான் தலை குனிந்து விட்டதாகவும்..அதனால் தன் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாகவும்.. அந்த இடத்தில் தன் வளர்ப்பு மகன்..உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்ளலாம் என்று  பவானியம்மா முடித்து விட…
இத்தனை ஆண்டு கட்டி காத்த அவர் அரசியல் வாழ்வை அன்றோடு முடித்துக் கொண்டதோடு இரு பெரியவர்களையும் அழைத்துக் கொண்டு எங்கோ இருக்கும் குக்கிராமத்துக்கு சென்று விட்டனர்..
ஒருவர் பிறந்ததில் இருந்தே பதவி ,செல்வாக்கு, அந்தஸ்த்து, பெயர் …என்று செல்வாக்கோடு வளர்ந்தவர்களுக்கு தெரியும் ..இது போல் ஒரு வாழ்க்கை வாழ்வது எவ்வளவு கடினம் என்று. அந்த கடினமான வாழ்க்கையை தான் அகில ரூபன் அவர்களுக்கு தந்தான்…
வயதான காலத்தில் பாட்டிங்க…. என்று நவீன் தன் பேச்சை ஆரம்பிக்கும் போதே அகில ரூபன் தன் தங்கை தம்பியிடம் சொல்லி விட்டான்…  “வீட்டில் பெரியவர்கள் இருந்தால், சின்னவர்கள் ஏதாவது தெரியாது தவறு செய்தால் அதை கண்டித்து…இது தான் நல்லது என்று சொல்வார்கள்..
ஆனால் இந்த பெரியவர்கள் ஒரு பாவச்செயலுக்கு வித்திட்டத்தோடு, அதை தண்னீர் ஊற்றியும் வளர்த்து இருக்கிறார்கள்… இந்த என் முடிவு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால்… என்னை விட்டு விடுங்கள்..நான் எப்போதும் போல் தனித்தே இருக்கிறேன்…
மனதில் தனிமை என்பது எனக்கு புதியது இல்லை..அது எனக்கு பழகின விசயம் தான் என்று அகில ரூபன் சொல்லும் போது அப்போது அங்கு இருந்த ஸ்ரீமதிக்கு என்னவோ போல் தான் இருந்தது..
என்னை திருமணம் செய்த பின்னும் அவன் தனிமையை தான் உணருகிறானா…? அப்போ அவன் என்னை அந்த அளவுக்கு தான் தூரம் நிற்க வைத்து இருக்கிறானா..? என்று நினைக்க நினைக்க அவள் கண்கள் கலங்க.. அந்த கலங்கிய விழியோடு தன் கணவனையே பார்த்திருந்தாள்…
தன் தம்பி தங்கையோடு பேசிக் கொண்டு இருந்த அகில ரூபனின் உள் உணர்வு உணர்த்திய செய்தியில், சட்டென்று தன் மனைவியின் பக்கம் பார்வையை செலுத்தியவனுக்கு அவள் கலங்கிய கண்களை பார்த்து விட்டு..
அந்த இடத்தில் தன் தங்கை, தங்கையின் கணவன், தம்பி  தன் மாமனார் மாமியார் இருப்பதையும் பொருட்படுத்தாது தன் மனைவியின் அருகில் சென்றவன்..
“என்ன ஸ்ரீ …/ என்ன எதுக்கு அழற…?” என்று ஏதோ  நீண்ட வருட காதலித்து கை பிடித்த மனைவின் கண்ணீரை பார்க்க முடியாது சமாதானம் செய்யும் பாவனை தான் அகில ரூபனின் செயலில் தெரிந்தது.
அனிதா கூட… “பாருங்க என் அண்ணாவை…” என்று   அனிதா அஷ்வத்தை  இடித்து  சொல்லும் அளவுக்கு தான் அகில ரூபனும் நடந்துக் கொண்டான்..
நம் ஸ்ரீமதியோ அதற்க்கு ஒரு படி மேல்  சென்று… “நான் இருக்கும் போது  நான் எப்போதும் போல் தனிமையில இருந்துக்குவேன் என்று நீங்க எப்படி அப்படி ஒரு வார்த்தை சொல்லுவிங்க…?” என்று அகில ரூபனின் சட்டையை பிடித்து கேட்கவில்லை..ஆனால் அவள் கேட்ட விதம் சட்டையை பிடித்து இருந்தால் கூட பரவாயில்லை என்று தோன்றும் அளவுக்கு  அவனை வெளுத்து வாங்கி விட்டாள் என்று தான் சொல்ல வேண்டும்.
அதை பார்த்த அஷ்வத் அனிதாவிடம்…. “பார்த்தியா என் தங்கையை…  விருப்பமே இல்லாது திருமணம் செய்தாலும், புருஷனுக்கு ஒன்னு சொன்னா எப்படி துடி துடித்து போயிடறா பார்த்தியா…?” என்று இப்போது பேசும்   முறை அஷ்வத்தின் வசம் ஆயிற்று…
 அடுத்த பதிவோடு கதை முடிவடைகிறது…

Advertisement