Advertisement

அத்தியாயம்…18 
அகில ரூபன்  வாசலை  தாண்டும் முன்பே  அவன் பாதுகாப்பாளர்கள் அவனுக்கு முன் அவன் செல்ல வேண்டிய வாகனத்தின் கதவை திறக்கும் வேளை..வீட்டில் இருந்து ஓடி வந்த ஸ்ரீமதி…
“என்னங்க மாமா…” என்று ஸ்ரீமதி தன் பேச்சை முடிப்பதற்க்குள், தன் கையில் உள்ள  பேசியை காண்பித்து தெரியும் என்று சொன்னான். 
அவனின் பதிலில் ஸ்ரீமதி ஒரு நிமிடம் யோசிப்பதற்க்கு அகில ரூபன் அவன் போக வேண்டிய வாகனத்தில் ஏறி அமர… ஸ்ரீமதி என்ன நினைத்தாளோ அவன் அமர்ந்த வாகனத்தின்  மறுப்பக்கம் உள்ள கதவை திறந்து அமர்ந்துக் கொண்டான்.
வெற்றி மாறனும் அவர்களை நோக்கி வந்துக் கொண்டு இருந்தார். ஆனால் அவர் முகத்தில் சிறிதும் பதட்டம் என்பது இல்லை… சாதரணமாக தான் வந்து இவர்கள் அருகில் வந்தவர்…
அகில ரூபனை பார்த்து… “அப்பாவை பார்க்க போறிங்களா…? அவரை இப்போது பார்க்க முடியாது  என்று தான் நினைக்கிறேன்.” என்று சொன்னதும்…
வாகனத்தில் அமர்ந்த அகில ரூபன் திரும்ப இறங்கி அவரை பார்த்து  மைய்யமாக ஒரு புன்னகை புரிந்தவன்… வாகனத்தில் அமர்ந்திருந்த ஸ்ரீமதியை காட்டி சைகையில் ஏதோ சொன்னவன்.
பின் சத்தமாய்… “அப்போ இது உங்களுக்கு முன்னவே தெரியும்.” என்று கேட்டதற்க்கு அவர் “ஆமாம்.” என்று சத்தமாக சொன்னார்.
இவர்களின் பேச்சில் வாகனத்தில் இருந்து ஸ்ரீமதியும் இறங்கியவள் பதட்டத்துடன் தந்தை கணவனின் அருகில் சென்று… “என்ன..?என்ன…?”  என்று இருவரின் கையையும் பற்றிக் கொண்டு கேட்டாள்.
அதற்க்கு அகில ரூபன் கோபமாய் … “உன் அப்பாவுக்கு  என் அப்பாவை அரெஸ்ட் செய்யும் நடவடிக்கை நடக்குதுன்னு ஏற்கனவே தெரிந்து இருக்கு…” என்று அகில ரூபன் சொன்னதும்..
அதற்க்கு ஸ்ரீமதி … “அதுக்கு…?” என்று கேட்டாள்.
இப்போது அகில ரூபன் மட்டும் முழிக்காது கூடவே நம் வெற்றி மாறனும் தான் முழித்து நின்றார்.
 அந்த முழிப்பில் இருந்து முதலில் வெளி வந்த அகில ரூபன்… “அதுக்கா… உங்க அப்பா செய்தது கூடவே இருந்து குழி பறிப்பது போல இல்ல..என் அப்பா இவருக்கு யாரு..? இவர் வீட்டு பெண்ணையும் கொடுத்து இருக்கார். பையனும் கொடுத்து இருக்கார்.
அப்படி இருக்கும் போது இது எங்களுக்கு முன்னவே சொல்ல வேண்டும் தானே..?” என்று தன் மனைவியிடம் அகில ரூபன் கோபமாய் கேட்டான்.
அதற்க்கு ஸ்ரீமதி…” என்ன சொல்லனும்..?என்ன சொல்லனும்…?சொல்லுங்க… நாளை உங்க அப்பாவ அரஸ்ட் செய்ய போறாங்க.. எங்காவது பாதுகாப்பான இடத்தில் மறச்சி  வெச்சிக்கோங்க என்று உங்க கிட்ட சொல்லிட்டு..
வெளியில் நாளைக்கு ஒரு  டீமை அனுப்பி.. “ தேடுதல் வேட்டைன்னு எங்க அப்பா ப்ரஸ்சுக்கு பேட்டி கொடுக்க சொல்றிங்களா..?எங்க அப்பா அப்படி இல்ல… யாரா இருந்தாலும் தப்பு செஞ்சா அதுக்கு உண்டான தண்டனை அடஞ்சி தான் ஆகனும்.. நாளைக்கு இது போல் ஒரு சூழ்நிலை உங்களுக்கு வந்தா கூட உங்களையும் எங்க அப்பா அரெஸ்ட் செய்வார்…” என்று ஸ்ரீமதி பேசிய அழுத்தம் திருத்தமான பேச்சில் நம் வெற்றி மாறனே வாய் அடைத்து தான் போனார்…
செந்தாமரை சேற்றில் மலர்ந்தாலும், அது தெய்வத்தின் திருவடிக்கு வந்த பின் அந்த மலரை அனைவரும் . புனிதமாக தானே பார்க்கின்றனர்…அதே போல் தான் ஸ்ரீமதியும் அவள் யார் வயிற்றில் யாருக்கு பிறந்தால் என்ன..
வளர்த்தது..மனிதாபிமானம் மிக்க புவனேஷ்வரியும், வெற்றி மாறனும் தானே..அது தான் ஸ்ரீமதி தன் தந்தையை ஒன்று சொன்னதற்க்காக இல்லை..
அவர் நேர்மையை யாருக்கும் அவர் அடகு வைக்க மாட்டார்… பெண் கொடுத்த வீட்டுக்கு என்ன பெண் கொடுத்தவனுக்கே கைதி செய்ய வேண்டும் என்ற ஒரு சூழ்நிலை வந்தால், என் தந்தை கைது செய்வார் என்ற அவள் பேச்சில் அகில ரூபனுக்கு சிரிப்பு வந்தது தான்.
ஆனால் அதை மறைத்தவனாய்.. “ஓ என்னையே கைது செய்யும் சூழ்நிலை வந்தா  கூட உங்க  அப்பா கைது செய்வாரோ…?” என்று தன் தாடையைய் தடவிக் கொண்டு கேட்டவன்..
பின்… “உன்னை..உன் அண்ணனை…” என்ற அகில ரூபனின் பேச்சை முடிக்க விடாது  … “எங்க அம்மாவை அரெஸ்ட் செய்யும் சூழ்நிலை வந்தா கூட…” என்று அவள் சொன்ன தோரணையில் எப்போதும் மகளிடம் எட்ட நின்று மட்டும் தன் அன்பை வெளிப்படுத்திய வெற்றி மாறன்..இப்போது தன் மகளை அணைத்துக் கொண்டவராய்..
“இது போதும்மா…” என்று சொல்லி அவள் நெற்றியில் முத்திமிடும் போது அகில ரூபன்..
“அங்கே எங்க அப்பாவை அரஸ்ட் செய்து இருக்காங்க..அம்மாக்கு என்ன ஆச்சோ…? ஆனா நீங்க  இங்க உங்க பாசப்பயிரை வளர்த்துட்டு இருக்கிங்க…”அகில ரூபனின் இந்த பேச்சு அனைத்தும் வெற்றி மாறனை பார்த்து தான் இருந்தது. 
என்ன இது பேச்சு என்று நினைத்த ஸ்ரீமதி … “அவர் எங்க அப்பா…” என்று ஒரு நிமிர்வுடன் சொன்னாள்.
அகில ரூபன் அவளின் அந்த நிமிர்வையும் ரசித்தவனாய்… “நான் இல்லேன்னு சொல்லலேயே…” என்று ஸ்ரீமதியிடம் சொன்னவன்..
வெற்றி மாறனை பார்த்து… “மாமா நான் உங்களை அவள் அப்பா இல்லேன்னு சொன்னனே…” என்று தன் மாமாவையே  தனக்கு சாதகமாய் பேச கேட்டான்.
அப்போது தான் புவனேஷ்வரிக்கும் விசயம் தெரிந்தது போல் அவரும் அந்த இடத்துக்கு ஓடி வந்தவர் ..ஏதோ பேச்சை ஆராம்பிப்பதற்க்குள்…
“ஸ்ரீ நீயே உங்க அம்மா கிட்ட  எல்லாம் சொல்லிட்டு இரு நான்  போறேன். நல்லா கவனி அவங்களை உன் அம்மா என்று தான் சொன்னேன்.. பின் திரும்பவும் அவங்க என் அம்மா என்று பேச்சை ஆரம்பிக்காதே,…” என்று சொல்லிக் கொண்டே காரில் ஏறி அமர்ந்தவன்.
“மாமா கொஞ்சம் நீங்களுடம் என் கூட வர்றிங்களா…?” என்று கேட்டதும் தான்..ஸ்ரீமதி..
“அவர் என் அப்பா…” என்று ஏதோ பேச ஆரம்பித்து விட்டாள்.
இப்போது அகில ரூபனுக்கு பதில் வெற்றி மாறனே… “அவர் என்னை கூப்பிடுவது அவர் அப்பா பத்தி பேச தான் இருக்கும்மா..அவர் என்னை மரியாதையோடு தான் நடத்துவார்.” என்று தன் மகளிடம் சொன்னவர்..அகில ரூபனுடன் சென்று விட்டார்.
அவர்கள் சென்றதும் புவனேஷ்வரி தன் மகளிடம்… “என்னம்மா இது…?” தான் இப்போது தான் டிவியில் பார்த்த செய்தியில் அதிர்ச்சியாகி கேட்டார்.
“எனக்கும் ஒன்னும் தெரியலேம்மா..வாங்க நீயுஸ்ல என்ன சொல்றாங்கன்னு முதல்ல கேட்போம்.” என்று சொல்லி செய்தியை பார்த்தனர்..அதில் இருந்து அவர்களுக்கு தெரிந்த விசயம் இது தான்…
ஏழைகளுக்கு மூன்று மாதம் முன்  கலெக்டர் பட்டா போட்டு கொடுத்த நிலம், இப்போது அனைத்தும் வேறு ஒருவருக்கு அதாவது ஒருவருக்கே சொந்தமாகி உள்ளது..அதில் அவர் தொழில்சாலை கட்ட அனுமதி வாங்கும் போது தான் விசயம்  வெளி வந்து இருக்கிறது. 
அரசுக்கு சொந்தமாக புரம்போக்கு நிலத்தில் ஒரு சிலதை ஏழை எளியவர்களுக்கு கலெக்ட்டர் ஆயிரம் மேற் பட்டோர்களுக்கு பட்டா வழங்கி உள்ளார்… அது இலவசமாக வழங்கியது..
ஆனால் அதே நாளில் அந்த இடம் வேறு ஒரு செல்வந்தரின்  பெயரில் அந்த இடம் உள்ளது. அது எப்படி…? என்று ஆராய்ந்ததில் தன் மனைவி இந்த மாநிலத்தின் முதலமைச்சர்…
தன் வளர்ப்பு மகன் கல்வித்துறை அமைச்சர்… காவல்துறையும் சம்மந்தி… அரசாங்கமே தன் கையில்  உள்ள தைரியத்தில்  ஏழை  எளியவர்களுக்கு கொடுக்கிறேன் என்று அரசாங்கத்திடம் கணக்கு காட்டப்பட்டு அரசாங்க நிலத்தை இவர்கள் சொந்த நிலம் போல்… விற்று… அந்த நாளிலேயே ஒரு பெரும் தொகை..
மூன்று பிள்ளைகளின் பெயரில் வங்கியில் பணம் பட்டுவாட செய்து இருக்கிறது… என்று விசாரணையில் அதாவது உயர் பதவியில் இருப்பதால் ரகசியமாக விசாரித்ததில் தெரிந்தது..
அதனால் தான் கலெக்ட்டர் கைது என்று செய்திகளின் காண்பிக்க… அதை பார்த்த தாய் மகளுக்கு நம்பவும் முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை…
ஆனால் இது இவர்களை தான்டிய விசயம் என்பதால் எதுவும் செய்ய முடியாது இருந்தனர்.. புவனேஷ்வரி செய்த ஒரு விசயம் தன் மருத்துவமனையில் இருக்கும் மருத்துவரை அழைத்து..
“இன்று நான் வர முடியாது.” என்று சொன்னதும்..
அவர்களுக்கும் விசயம் தெரியும் என்பதால்..  “ஓகே மேடம்..” என்று விட்டனர்.
அடுத்து புவனேஷ்வரி தன் மகனையும் மருமகளையும் அழைத்து… “பத்திரமா இருக்கிங்களா…?” என்று அவர்கள் பாதுகாப்பை உறுத்திப்படுத்திக் கொண்டார்.
அஷ்வத்… “அப்பா எல்லா பாதுகாப்பும் பக்காவா செய்து விட்டார்ம்மா…” என்ற மகனின் பதிலில் “இதில் இவர் பங்கும் இருக்கிறது.” என்று புவனேஷ்வரி உணர்ந்ததும்  அப்போ சம்மந்தியிடம் தவறு உள்ளது..என்று முடிவு செய்துக் கொண்டார்..
காரில் மாமனும் மருமகனும் சென்றுக் கொண்டு இருக்கும் போது ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை..ஆனால் மூன்று மாதம் முன் அதாவது அகில ரூபன் தத்து பிள்ளை என்று தெரிந்த அந்த ஒரு வாரத்திலேயே தன் தாய் தந்தையருக்கு கட்டம் கட்ட தொடங்கி விட்டான்.
அதாவது தன் வருங்கால மாமனாரின் உதவியோடு… “இப்பதவியில் நான் எப்போது இருப்பேன்..இன்னும் சொல்ல போனால் இதற்க்கு மேல் பதவிக்கும் நான் வருவேன்..ஆனால் அதற்க்கு எனக்கு உங்க உதவி தேவை.” என்று தன் வருங்கால மாமனாரை கூட்டு சேர்த்துக் கொண்டு வகுத்த திட்டம் தான் இது.
சீதாராமன் எப்போதும் பணத்திற்க்கு ஆசைப்படுபவர் கிடையாது… அதனால் முடிந்த மட்டும் ஏழை எளியவர்களுக்கு சேர வேண்டிய நல திட்டத்தை அரசாங்கத்திடம் எப்பாடியாவது வாங்கி கொடுத்து விடுவார்..
அரசாங்கத்தின் உயர் பதவியில் இருப்பவரும் தனக்கு வேண்டியப்பட்டவர் என்பதால் அவர் மெனக்கட எல்லாம் தேவையில்லாது போயிற்று..
அதே போல் தான் பவானியம்மாவும் தன் கணவன் ஒரு திட்டம் என்று சொன்னால் செய்து  முடித்து கொடுத்து விடுவார்..அவருக்கு அடுத்து தான் பதவியில் இருக்க வேண்டும்..
அதற்க்கு தன் ஆட்சியில் இது போல் ஏழை எளியவர்களுக்கு செய்தால் தானே அடுத்தும் தான் பதவிக்கு வர முடியும்…  அவருக்கு ஏற்கனவே சொத்து  அளவுக்கு மீறி இருப்பதால்… இனி தன் நோக்கு பதவி மட்டும் தான் என்று செயல்பட்டுக் கொண்டு இருந்தார்.
அதன் படி தான் மூன்று மாதம் முன் கலெக்டர் சீதாராமன் சொன்ன இலவசப்பட்டா திட்டத்திற்க்கு  என்ன என்று பார்க்காது ஒத்துக் கொண்டார்..கலெக்ட்டரும் அங்கு இருப்பவர்கள் என்று காட்டிய சான்றை பார்த்து அனைவருக்கும் பட்டா கொடுத்து விட்டார்.
அவர் கொடுத்த பின் அதே இடத்தை  அந்த பட்டா பெற்றவர்கள் அந்த செல்வந்தருக்கு கொடுத்து விட்டனர்.. அந்த செல்வந்தர் பணத்தை அகில ரூபன் சொன்ன படி தன் கணக்கிலும் தன் தங்கை தம்பி கணக்கிலும் இவ்வளவு பணம் போடு என்ற சொல்லுக்கு ஏற்ப போட்டு விட்டனர்..அந்த எளியவர்களுக்கு அகில ரூபன் வேறு ஒரு இடத்தில் ஆதாவது இதோடு மதிப்பான இடத்தில் இடம் கொடுத்து விட்டான்..அன்று அவன் ஆடியா அந்த  திருவிளையாடளின் முடிவு தான் இன்று நடந்தது…
“அம்மாக்கு எப்படி இருக்கு…?” என்று அகில ரூபன் அனிதா நவீனிடம் கேட்டான்.
“அம்மா பரவாயில்ல அந்த சமயத்து அதிர்ச்சி தான்..இப்போ பரவாயில்லயா இருக்காங்க… அப்பாவை பத்திய பயம் தான் இப்போ அம்மாவுக்கு.” என்று  நவீன் சொன்னதும்..
“அப்படியா…?” என்பது போல் அகில ரூபன்  தன் தம்பியை பார்த்தான்.
“ அண்ணா…” என்று நவீன் ஏதோ பேச்சை ஆராம்பிப்பதற்க்குள்…
“அம்மா எங்கே…?” என்று கேட்டுக் கொண்டே தன் அன்னையின் அறை நோக்கி சென்றான்.
அங்கு பவானியம்மா படுத்து இருக்க அவர் பக்கத்தில் மருத்துவர் இருப்பதற்க்கு பதில் அதாவது மருத்துவரான தன் தம்பி தங்கை இருப்பதற்க்கு பதில் அங்கு  வக்கீலும்.. எப்போதும் பவானியம்மாவுக்கு துணை இருக்கும் அந்த பெரிய்வரும் கை கட்டி நின்றுக் கொண்டு இருக்க..
பவானியம்மா பேசிய பேச்சான… “ என்னை அரஸ்ட் செய்ய சான்ஸ் இருக்கா…? என்ற   வார்த்தை அவன் காதில் விழ அதை கேட்டுக் கொண்டே அங்கு சென்றான்.
அகில ரூபனை பார்த்ததும்  லாயரும் அந்த பெரியவரும் அவனுக்கு வழி விட்டு விலகி நிற்க… அகில ரூபனோ… “நீங்க போகலாம். நான் அம்மா கிட்ட தனியா பேசனும்.” என்று சொன்னதும்..
பவானியம்மா… “அகிலா…” என்று தன் பேச்சை ஆரம்பிக்கும் போதே அகில ரூபன்..
“நான் உங்க கிட்ட தனியா பேசனும்…தத்து பிள்ளை என்றாலும்,  என்னை நீங்க உங்க சொந்த பிள்ளையாக தானே என்னை வளர்த்திங்க..அந்த உரிமையில் கேட்குறேன் உங்க  கிட்ட  கொஞ்சம் நான் தனியா பேசனும்.” என்று அகில ரூபன் சொன்ன விதத்தில்  அந்த இருவரும் பவானியம்மாவிடம் ஒரு தலையசைப்போடு விடைப்பெற்றனர்…
அவர்களை அனுப்பிய பின் அகில ரூபன் தன் தாயிடம் என்ன பேசுவான்…?

Advertisement