Advertisement

அத்தியாயம்.. 17
எதுவும் பேசாது தன்னையே குழம்பி போய் பார்த்திருந்த தன் மனைவியின் முகபாவனையில் அகில ரூபனுக்கு என்ன தோன்றியதோ.. இது வரை இரண்டடி இடைவெளி விட்டு பேசிக் கொண்டு இருந்தவன்..ஸ்ரீயின் அருகில் சென்று அவள் கன்னத்தை பற்றியவனாய்…
“எல்லா விசயத்திலும் பெரியவங்க பேச்சை கேட்டு தான் ஆக வேண்டும் என்பது இல்ல… ஒரு சிலதுல நம் விருப்பம் தான் முக்கியம். அந்த சிலதில் இதுவும் ஒன்று…” என்று படுக்கையை காட்டி சொன்னவன்…
“என்ன புரிந்ததா…?” என்று அகில ரூபன் கேட்டான்.
அதற்க்கு புரிந்தது என்று வாயில் பதில் சொல்லாது, அவள் தன் முககத்தை ஆட்டி சொன்னதும்.. “குட் கேள்…” என்று சொல்லிக் கொண்டே பற்றி இருந்த கன்னத்தில் லேசாக தட்டியும்,அகில ரூபனின்  கைய்  அந்த இடத்தை விட்டு   நகராது அப்படியே தேங்கி விட்டது.
ஸ்ரீ  இந்த அறைக்குள் வரும் போது தன் அன்னை சொன்ன “மாப்பிள்ளை ரொம்ப பாவம்..உனக்கு அவரை பத்தி தெரியும் தானே… அவருக்கு அவர் அப்பா அம்மா மேல ரொம்ப கோபம்..
அவர் கோபம் நியாயமும் கூட..இனி நீ தான் அவருக்கு எல்லாமாய் இருக்கனும்.. எல்லாமாய் புரியுமுன்னு நினைக்கிறேன். பார்த்து நடந்துக்க மதி.” என்று தன் அன்னையின் பேச்சுக்கு கட்டு பட்டு தான் இந்த அறைக்கு ஸ்ரீமதி வந்தது.
ஆம் கட்டுப்பட்டு தான். விருப்பத்தோடு எல்லாம் கிடையாது…இன்று கல்யாணம் ஆனால் இன்றே எல்லாம் முடிஞ்சடனுமா…? எப்போதும் அவளுக்கு அவளே கேட்கும் கேள்வி அவள் மனதில் எழுந்தது.
முன் போல இருந்தால் மனதில் எழுந்த கேள்வியை தன் அன்னையிடம் கேட்டு விடுவாள்.. ஆனால் எப்போது தன் பிறப்பின் ரகசியம் அவளுக்கு தெரிந்ததோ..  அனைத்தும் மாறி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
அவளின் அந்த தைரியம்..அந்த துணிச்சல்  எல்லாம் இப்போதும் அவளுள் இருக்கிறது தான்..ஆனால் அதை வெளிப்படுத்த தான் அவளாள் முடியவில்லை.
அவள் பெற்றோர்கள் எப்போதும் போல் தான் இருக்கிறார்கள்.ஆனால் அவளால் தான் அவர்கள் முன் இயல்பாய் இருக்க முடியவில்லை.  அதுவும்  அவர்களை பார்க்கும் போது எல்லாம், தன் சகோதரி ஸ்ரீஷாவின் நினைவும் கூடவே எழ… அவளால் தாங்க முடியவில்லை.
தன்னால் அவர்கள் சொந்த மகளை பரிகொடுத்தும், எப்படி இவர்களால் தன்னிடம் அன்பு செலுத்த முடிகிறது.. இது தன்னால் முடியுமா..? என்று அவளுக்கு அவளே கேட்ட கேள்வியில் முடியாது என்று தான் பதில் வந்தது.
தன் சகோதரி இறப்புக்கும், தன் சுதந்திரம் பரி போகவும் தன் தந்தையின் வேலை தான் காரணம் என்று நினைத்து தானே, இத்தனை ஆண்டுகளாய் அப்பாவிடம் சரி வர பேசாது  இருந்தாள்.இதில்  இருந்தே நான் எப்படி…? என்று தெரிகிறதே…ஆனால் அவர்கள்…?
 இதை எல்லாம் நினைத்து தான் இனியாவது அவர்கள் விருப்ப படி நடப்போம்.. என்று நினைத்து தான்..இதோ இந்த  திருமணம்.. இங்கு வரும் போது கூட..அம்மா சொன்னது போல் நடந்தால் அவள் அகில ரூபனிடம் மறுப்பு சொல்லி இருக்க மாட்டாள் தான்.
ஆனால் அதற்க்கு பின் இவனோடான என் உறவு எவ்வாறு இருந்து இருக்கும்..இதே தினம் தினம் தொடர… அதன் விளைவாய் குழந்தை வர..பின் அக்குழந்தையை வளர்ப்பது என்று தான் தன் வாழ்க்கை சென்று இருக்கும்..
அவள் நினைத்து பார்த்த காதல் வாழ்க்கை அவள் வாழ்ந்து இருப்பாளா…? என்பது சந்தேகம் தான். ஆனால் இப்போது இவனின் இந்த அனுசரணையான பேச்சில்.ஏதோ ஒரு நம்பிக்கை  அவளுக்கு அவன் மீது..
இவன்  உடலை மட்டும் அல்லாது என் மனதையும் பார்க்க கூடியவன்… இப்போது இவன் மீது எனக்கு காதல் இல்லை என்றாலும், காதல் வரக்கூடும்…  என்று நினைத்தும் கொண்டே தான் கட்டிலில்  அமர்ந்த  வாக்கிலும், அகில ரூபன் நின்றுக் கொண்டும் தன் கன்னத்தை பற்றியதில் அவள் நிமிர்ந்து அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.
ஸ்ரீமதி ஏன் இவன் தன் கன்னத்தை இவ்வளவு நேரம் பிடித்து இருக்கிறான் என்று நினைவும் இல்லை கேட்கவும் இல்லை..அகில ரூபனுக்கே பிடித்த அவள் கன்னத்தை விட மனசே இல்லாது இருந்தான்..
அவள் கன்னத்தின் மென்மையில் அங்கிருந்து அவன் கை எடுக்கவே மனது வராததோடு அவன் மனது வேறு என்ன என்னவோ வேறு நினைக்க அவனை தூண்டியது..
அவன் மனதே அவனை திட்டி தீர்த்தது என்று தான் சொல்ல வேண்டும்… “அவளே அவள் அம்மா சொன்னதை கேட்போம் என்று நினச்சி தான் இந்த அறைக்கே வந்து இருக்கா..நீ தான் பெரிய இவன் போல பேசி அவளை தூங்குற நிலைக்கு கொண்டு வந்துட்ட….போடா..
ஒரு சிலதில் இப்படி ரொம்ப நல்லவனா இருந்தா எல்லாம் வேலைக்கு ஆகுது.” என்று அவனுக்கு அவனே திட்டி தீர்த்தவன் அவள் கன்னத்தில் இருந்து மனதே இல்லாது கை எடுத்தவன்..திரும்பவும் அவள் கன்னத்தின் மென்மை அறிந்திட லேசாக .. மிக மிக லேசாக முன்பை விட லேசாக தட்டி விட்டு..
“குட் நையிட்.” என்று சொல்லி விட்டு  கட்டிலின் அந்த பக்கம் படுத்துக் கொண்டான்.
ஸ்ரீமதிக்கும் தன் கன்னத்தை அகில ரூபன் பற்றிக் கொண்டு இருக்கும் போது..ஏதோ ஒரு உணர்வு அவளையும்  தாக்க தான் செய்தது. ஆனால் அது என்ன என்று அவள் உணரும் முன்னவே அகில ரூபனின் கை ஸ்ரீயின் கன்னத்தில் இருந்து விடுபட…ஏன் எடுத்து விட்டான்…? நினைத்தவள் கேட்காது விட்டு விட்டாள்.
திருமணத்திற்க்கு முன் இருவருக்குள்ளும் காதல் இல்லை. அகில ரூபன்  இனி தான் அனுபவித்த வேதனையை அவள் பட போகிறாள் என்று உணர்வாலும், வெற்றி மாறனின் நல்ல மனதுக்கு நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்ததாலும், கூடவே கொஞ்சம் மிக மிக கொஞ்சமாய் அவள் மீது இருக்கும் அந்த ஈர்ப்பாலுமே அகில ரூபன் ஸ்ரீமதியை மணந்தது.
ஸ்ரீமதிக்கோ அகில ரூபனுக்கு இருந்த அந்த சின்ன ஈர்ப்பு கூட இல்லாது, தாய் தந்தையின் அன்புக்கும்… அவளிள் இருக்கும் அந்த குற்றவுணர்ச்சியிலும், இனியாவது அப்பா நிம்மதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் அகில ரூபனை மணக்க ஸ்ரீமதி சம்மதித்தது.
இன்று காலை வரை கூட ஸ்ரீமதியின் மனது அதுவே தான்.. ஆனால் இப்போது இந்த நிமிடம் அவள் மனது ஏதோ ஒரு வகையில் அலை பாய்ந்த  மனது.. ஒரு இடத்தில் நிலைத்து விட்டது போல்..
ஒரு இடம் என்ன…? அகில ரூபனின் வசம் நிலைத்து விட்டது போல் அவள் உணர்ந்தாள். அப்போது கூட அவள் அதை காதல் என்று உணரவில்லை.
நல்லவன்.. பரவாயில்ல..பெண்களை மதிக்கிறான் என்ற வகையில் தனக்கு பிடித்து விட்டதாய் நினைத்தவள் சுகமாய் உறங்கினாள்… ஆனால் அவளை உறங்க சொன்ன நம் அகில ரூபனுக்கு தான் உறக்கம் வருவேனா என்று அடம்பித்து கண்ணா மூச்சி ஆடிக் கொண்டு இருந்தது.
 விடியலில் அவன் உறங்கி விட அப்போது தான் விழித்தெழுந்த ஸ்ரீமதி தன் பக்கத்தில் படுத்து உறங்கிக் கொண்டு இருக்கும் அகில ரூபனையே கண் எடுக்காது பார்த்துக் கொண்டு இருந்தாள்.
ஆசையாகவா.. ஆர்வமாகவா.. இல்லை அனைவரும் சொல்லிஉம் அந்த மஞ்சள் கயிறு மகிமையினாலா…  எது என்று அவள் உணரவில்லை..உணரவும் முற்ப்பட வில்லை.
இப்படி அவனுக்கு தெரியாது பார்ப்பது அவளுக்கு பிடித்து இருக்கு..என் மனதுக்கு பிடித்ததை நான் செய்கிறேன்… தன் பிறப்பின் ரகசியம் தெரிவதற்க்கு முன் இருந்த மனநிலையில் அவள் மனம் இப்படி எண்ண தோன்றியது.. சிறிது நேரம் பார்த்திருந்தவள்..பின் போதும் போதும் நீ ஒன்றும் அவ்வளவு அழகு எல்லாம் இல்லை…இது வரை பார்த்தது போதும்… என்று நினைத்துக் கொண்டாள்..
அவளின் இந்த மனது பழைய ஸ்ரீமதியின் மனநிலைக்கு மாறிக் கொண்டு இருந்தது..இந்த மாற்றம் அவளுக்கே தெரியாது நடைப்பெற்றது.. அவளின் இந்த  மாற்றத்தை  அவள் உணர்ந்தாளா…? தெரியவில்லை.
ஆனால் இப்போது அவளின் மனது லேசாக..மிக லேசாக உணர்ந்தாள்..அதே மனநிலையிலேயே குளித்து முடித்தவள்  பால் கனிக்கு வந்த அப்போது தான் கேட்டின் அருகில் நடந்து வந்துக் கொண்டு இருந்த தன் அப்பா அம்மாவை பார்த்தாள்.
இந்த காலையிலே எங்கே போயிட்டு வர்றாங்க…? என்று நினைத்துக் கொண்டே ஸ்ரீமதி கீழே இறங்கி சென்றாள். புவனேஷ்வரியை பார்த்து … “ என்னம்மா எங்கே போயிட்டு வர்றிங்க…?” என்று ஸ்ரீமதி எப்போதும் போல் தன் அன்னையை பார்த்து கேட்டாள். ஆம் எப்போதும் போல் தான்…
வெற்றி மாறனிடம் பேச வேண்டும் என்று தான் ஸ்ரீமதி நினைக்கிறாள். ஆனால் அவளாள் இத்தனை வருடம் பேசாது இருந்ததில், இப்போது பேச வேண்டும் என்று நினைத்தாலும், அவளாள் பேச முடியாது ஏதோ ஒன்று அவளை தடை செய்தது என்று தான் சொல்ல வேண்டும்.
அதன் வழக்கப்படி தன் அன்னையிடம் கேட்க… “ நாங்க நேத்து நையிட்டே  நம்ம வீட்டுக்கு போயிட்டேன் மதி.” என்ற அன்னையின் பேச்சில்..
“ஏம்மா அவ்வளவு லேட்டா வீட்டுக்கு போனிங்க…? இதோ காலையில் இவ்வளவு சீக்கிரம் வர்றதுக்கு இங்கேயே ஸ்டே பண்ணி இருக்கலாம்லே…?” என்று ஸ்ரீமதி கேட்டாள்.
அதற்க்கு புவனேஷ்வரி… “இல்ல மதி சம்மந்தி இங்கு இல்லாத போது  நாங்க மட்டும் இங்கு தங்கினா நல்லா இருக்காதும்மா அது தான் நம்ம வீட்டுக்கு போயிட்டு இப்போ வந்தேன்.” என்று  புவனேஷ்வரி தன் மகளிடம் பேசிக் கொண்டு இருக்கும் போதே…
வெற்றி மாறன் அங்கு  இருக்கும் பாதுகாவலை சுற்றி பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்த ஸ்ரீமதி எப்போதும் இவரின் இந்த செய்கையை பார்த்தால் முகத்தை சுழிக்கும் ஸ்ரீமதிக்கு இன்று அவரின்  இந்த செயலில் அவரையே  ஒரு வித பூரிப்போடு பார்த்திருந்தாள்.
“ மதி மாப்பிள்ளை இன்னும் எழுந்துக்கலையா….?” என்று புவனேஷ்வரியின் கேள்விக்கு ஸ்ரீமதி தன்னால்..
“நேரம் கழித்து தான்  தூங்கினதால இன்னும் எழுக்கல அம்மா…” என்று தன்னால் அவள் பதில்  சொன்னாள்.
மாடியில் இருந்து இறங்கி கொண்டு இருந்த அகில ரூபனின் காதில் ஸ்ரீமதி சொன்னது காதில் விழ..
“கடவுளே இங்கு ஒன்னும் நடக்கல…நாங்க என்னவோ விடிய விடிய கச்சேரி நடத்தியது போல இங்கு வந்து ஆலாபனை செய்வது பாரேன்.” என்று நினைத்துக் கொண்டே அங்கு வந்த அகில ரூபன் புவனேஷ்வரியை பார்த்து..
“என்னத்தை  என்ன சொல்றா உங்க மகள்…?” என்று தன் பேச்சை ஆரம்பிக்கும் போது அகில ரூபனின் பின் நின்றுக் கொண்டு இருந்த ஸ்ரீமதி யாருக்கும் தெரியாது அவனின் முதுகை நிமிண்டியதும்..என்ன என்று அகில ரூபன் அவளை திரும்பி பார்க்க..அவளோ அவனை பார்த்து கண் அடித்தாள். 
ஸ்ரீமதி அகில ரூபனை பார்த்து கண் அடித்தது ஏதோ மின்னல் போன்ற செயலில் நடந்தது.. இவள்  என்னை பார்த்து கண் அடித்தாளா…? இல்லையா…? என்று யோசனையுடன் அகில ரூபன் ஸ்ரீமதியையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவள் வாய் ஏதோ முனக.. கண் திரும்பவும்  அடித்து அவனுக்கு ஏதோ சமிஞ்சை செய்தாள்.. பாவம் நம் கல்விதுறைக்கு  அரசியல் தெரிந்த அளவுக்கு இந்த சமிஞ்சை தெரியாததாலா…? இல்லை அவளின் அந்த கண்ணின் மாயத்திலும், உதட்டின் அசைவிலும் அவனின் மனது பித்து பிடித்தது போல…அதிலேயே தேங்கி விட்டதால் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று தெரியாது போயிற்றா..?ஆனால் மொத்ததில் நம் ஸ்ரீமதி என்ன சொல்ல வருகிறாள் என்று அகில ரூபனுக்கு புரியவில்லை.
இவர்களின் இந்த நாடகத்தை  அவர்களின் இருவருக்கு நடுவே பார்த்துக் கொண்டு இருந்த நம் புவனேஷ்வரிக்கு தான் என்னவோ போல் ஆகி விட்டது.
புவனேஷ்வரி காலையில் அடித்து பிடித்து இங்கு ஓடி வந்ததிற்க்கு காரணமே  அவர்களின் வாழ்க்கை ஆரம்பித்து விட்டதா…? என்று  அவளுக்கு தெரிய வேண்டி இருந்தது.
அதற்க்குள் மதி காலையில் குளித்து முடித்து வந்தவளை பார்த்து அவருக்கு எதுவுமே அறிய முடியாது தான்… அகில ரூபனை பற்றி பேச்சை ஆரம்பித்தது..
மகளின் … “தூங்க நேரம் ஆனது.” என்ற அந்த வார்த்தை கேட்டே அவர் பாதி மகிழ்ந்து இருக்க .மீத மகிழ்ச்சியை இவர்களின் இந்த உரையாடல் கொடுத்து விட்டதாலும், அவர்களுக்கு இடையே நந்தியாக நாம் இருக்க கூடாது என்று  நினைத்ததாலும்…
மதியிடம்.. “உனக்கு காபி கலக்குறேன்..” என்று சொன்னவர் அகில ரூபனிடம்…
“மாப்பிள்ளை உங்களுக்கு என்ன வேண்டும்…?” என்று கேட்டார்.
“எனக்கும் காபியே போதும்.” என்று சொன்ன அகில ரூபன்  “சமையல் செய்யும் ஆள் இன்னும் வரலயா அத்தை…?” என்றும் கேட்டான்.
சமையல் அறை பக்கம் திரும்பி பார்த்த புவனேஷ்வரி… “வரலேன்னு தான் நினைக்கிறேன்.” என்று சொன்னதோடு…
“நம்ம வரை சமைக்க எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல மாப்பிள்ளை..இன்னைக்கு கொஞ்சம் லேட்டா தான் வருவேன்னு  ஹாஸ்பிட்டலில் சொல்லிட்டேன்.” என்று சொல்லிய வாறே புவனேஷ்வரி சமையலறை  நோக்கி சென்றார்.
அகில ரூபன் தன் பி..ஏ தீபனை அழைத்தவன்.. “குக்கிங்கு  ஆள்  எதுவும் ஏற்பாடு செய்யலையா…?” என்று கேட்டான்..
அந்த பக்கம் என்ன பதில் வந்ததோ… “இல்ல இல்ல போய் வருவது போல் எல்லாம் வேண்டாம்.. வீட்டோட இருப்பது போல் இருக்கனும்.” என்று சொன்னவன்..
பின்.. “பார்த்து வீட்டு வேலை ஆளுங்க புல் டீடைல்ஸ் தரோவா பாருங்க..உங்க மேற் பார்வையில் தான் எல்லாம் நடக்கனும்.” என்று நிறைய முறை பத்திரம் சொல்லி விட்டு தான் அகில ரூபன் பேசியை வைத்தவன் அப்போது தான் மனைவியின் அந்த ஜாடை அவனுக்கு நியாபகத்தில் வந்ததும்..
தன் பின் பக்கம் இடுப்பில் கை வைத்து இது வரை ஜாடை காட்டிய அவள் முகத்தில் இப்போது கோபம் அப்பட்டமாய் தெரிய தன்னையே கோபத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தவளை பார்த்து..
சொதப்பிட்டனோ என்று  நினைத்துக் கொண்டே… “ ஸ்ரீ..”  என்று  அகில ரூபன் ஏதோ பேச்சு ஆரம்பிக்கும் போதே… “கடைசி வரை நடந்தது போல் என் அம்மா கிட்ட  காட்ட மட்டும் தான் முடியும் போல…” என்று  தலையில் அடித்துக் கொண்டே அவள்  அந்த இடத்தை விட்டு போய் விட்டாள்.
அவள் போன  பின்பு தான்  அவள் சொன்னதின் அர்த்தமே நம் கல்வித்துறைக்கு புரிந்தது…
“அடிப்பாவீ…” என்று அவளை நோக்கி அவள் செல்லும் போதே  அவன் பேசி அழைக்க… 
பேசியின் அந்த பக்கம் அகில ரூபனின் தம்பி நவீன் சொன்ன… “அண்ணா அப்பாவை அரஸ்ட் செய்து கூட்டிட்டு போறாங்க…” என்ற வார்த்தையில்  அவனின் கால் தன்னால் வாயிலை நோக்கி நடக்கலாயிற்று…
அகில ரூபன்… யாரையோ  கை அசைவில் அழைத்துக் கொண்டே பேசியின் தம்பியிடம்… “அம்மா..” என்று கேட்டதற்க்கு.. “அம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க… அண்ணா ப்ளீஸ் சீக்கிரம் வாங்கண்ணா… “ என்று அழைத்தான்.
 
 

Advertisement