Advertisement

அத்தியாயம்…15
ஸ்ரீமதி இதை தான் யோசித்துக் கொண்டு இருந்தாள்.தன் அண்ணனுக்கு அவ்வீட்டில் பெண்ணை எடுப்பதையே எதிர்த்த  தான் எப்படி அந்த வீட்டுக்கு மருமகளாய்  போக ஒத்துக் கொண்டேன்..அதுவும் உடனே…
அந்த வீட்டின் பெண் என்றால் இங்கு வரப்போவது..ஆனால் அங்கு என் திருமணம் என்ற போது நான்  அவர்கள் வீட்டுக்கு போக வேண்டும்..என்னால் முடியுமா…?
சிறு வயது முதலே காக்கி உடை மீது அவளுக்கு அவ்வளவு வெறுப்பு..அதற்க்கு காரணம் தன் தந்தையின் அந்த உத்தியோகத்தால் தான் தன் சகோதரியை இழந்தேன் என்று நினைத்ததால் தான்… காக்கி உடை மீது அவளுக்கு அந்த அளவுக்கு வெறுப்பு ஏற்பட காரணம்.
ஆனால் அந்த காரணமே அர்த்தம்  இல்லாத போது ..அதுவும் தன் சகோதரி இறக்க காரணம்..தன்  பிறப்பு என்று தெரிந்த அந்த நொடி அவள் எப்படி உணர்ந்தால் என்று வார்த்தையால் சொல்ல முடியாது..
அதுவும் தான் ஒரு என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டவனின் மகள் .. அதை அப்போது கேட்ட போது எந்த அளவுக்கு அப்போது அதிர்ந்தாளோ…  அதற்க்கு சிறிதும்  குறையாது இப்போது அதை நினைக்கும் போதே இதோ இப்போது  கூட மனது பட பட என்று அடித்துக் கொள்கிறதே…
அப்போது தான் மயக்கத்தில் இருந்த  எழுந்த உடந் யாரின் முகத்தையும் பார்க்க முடியாது என்பதை விட பார்க்க முடியவில்லை என்று  தான் சொல்ல வேண்டும்..
எப்படி பார்க்க முடியும்…? இது வரை தன் தந்தை தான் ஸ்ரீஷா மரணத்திற்க்கு காரணம் என்று நினைத்து தன் தந்தையை அவள் செய்தது கொஞ்சமா…?  நஞ்சமா…?
ஏதோ அவரை கொலை குற்றவாளியாக அவள் நினைத்திருக்க..நான் தான் உண்மையில் சகோதரி இறப்புக்கு காரணம்..அதுவும் நான் தான் குற்றவாளியின் மகள்..
தன்னுடைய அலட்சியத்தை கூட பொருட்படுத்தாது இது நாள் வரை என்னை காத்தவர்களுக்கு நான்  என்ன செய்வது…? தன் தந்தை இனியும் என்னை பற்றி கவலை இல்லாது இருக்க..
தன் தந்தை சொன்னது போல  அவருக்கு இனி என் பாதுகாப்பை பற்றி பயம் இல்லாமல் இருக்க வேண்டுமானல்..அவருக்கு இந்த உத்தியோகத்தில்  இருக்கும் வரை தான் என் பாதுகாப்பை பார்க்க முடியும்..அதற்க்கு மேல்.. அவரால் முடியாத ஒன்றாகி விடும்.
அதனால் தான்  இந்த வேலையை விட்டு விடுங்கள்… நமக்கு பணத்துக்கு பிரச்சனையா…? இந்த வேலை பார்த்து தான் நாம சாப்பிட வேண்டுமா…?என்று தான் கேட்ட போது எல்லாம் தன் தந்தை அன்று பார்த்த அந்த விளாங்கா  பார்வையின் அர்த்தம் இன்று அவளுக்கு நன்கு புரிந்தது. 
அதனுடன் தன் சர்வீசுக்கு பிறகு  தன் பாதுகாப்பு பற்றியும் தன் தந்தையின் கவலை புரிந்தவளாய்…
“ அகில ரூபனுக்கு  உன்னை திருமணம் செய்யலாம் என்று நினைக்கிறேன். உன் விருப்பம் என்னம்மா…?” என்று  தன் தந்தை சென்ற  வாரம் கேட்டு..தான் விருப்பம் சொல்ல வேண்டுமே என்று தன்னை ஆவளோடு பார்த்த அந்த பார்வையில் தன்னால்…
“எனக்கு….சம்மதம்…” என்று அவள் தலையாட்டியதும்  அவர் முகத்தில் தெரிந்த அந்த நிம்மதிக்காக சம்மதித்து விட்டாளே தவிர….தன் முடிவு சரி தானா…?
தனக்கும் காதல் இல்லை..அவனுக்கும் தன் மீது காதல் இல்லை..ஆனால் இருவரும் இந்த திருமணத்திற்க்கு சம்மதித்து விட்டோம்..அவன் தன் மீது இருக்கும் பரிதாபத்தில்..
நான் பாதுக்காப்புக்காக ..எந்த பாதுகாப்பை அவன் வீட்டில் வெறுத்தாளோ..அதே பாதுகாப்புக்காக..என் திருமணம் அவனோடு…விதி வலியது தான் இல்லையா…?என்று தனக்கு தானே எண்ணிலடங்கா குழப்பமும்…தடுமாற்றத்திலும் ஸ்ரீமதி இருக்க…
அகில ரூபனோ வெற்றி மாறன் பேச்சில்  “எனக்கு இவர் பெண் மீது  எல்லாம்  காதல் இல்லை..நல்லா இருக்கா எனக்கு முறை ஆகுது…சரி திருமணம் செய்யலாம் என்று நினச்சேன்..அதன் பின் அவளை பற்றி  தெரிந்ததில் இருந்து… நாம் திருமணம் செய்தா அவளை பற்றிய பயம் இல்லாம இருப்பார்..
இந்த பாதுகாப்பு எல்லாம் அவர் சர்வீசில் இருக்கும் வரை தானே பின் ஸ்ரீநிலை இதையும் நினச்சி தான் ஸ்ரீயை திருமணம் செய்ய நினைத்தது..ஆனால் வெற்றி மாறன் வைத்த கன்டிஷனின் முதலில்..
“இவள் மீது காதலா…?” என்று நினைத்தவன் பின் போக போக காதல் இல்லை என்றாலும் அப்பெண் மீது எனக்கு ஈர்ப்பு இருக்கிறது. வேறு யாரோ ஒரு பெண் என்றால் போகிறது விடு என்று விட்டு விடலாம்..
தன் தங்கையின் நாத்தனார் எனும் போது நாளை பின் அவள் வேறு  யாரையாவது திருமணம் செய்து தன் முன் நிற்க்கும் போது…அந்த நிற்கும் போது என்று அகில ரூபன் நினைக்கும் போதே 
“நோ….”  என்று பதறி அந்த நினைவே உதறி தள்ளியவனாய்… 
“வேறு ஒருவனோடு ஸ்ரீயை நினைத்து பார்க்கவே முடியவில்லை…” என்று ஏதோ முடிவு செய்தவனாய்..
அன்றே வெற்றி மாறனை அழைத்து… “தனக்கு சம்மதம்.” என்று சொல்லி விட்டான்.
சம்மதம் சொல்லி விட்டவனுக்கு மனதில் தன் பெற்றோர்களை நினைத்து மனது ஆறவில்லை…அவர்களை ஏதாவது செய்ய வேண்டும்…? எந்த பதவிக்கு அவர்கள் இதை எல்லாம் செய்தார்களோ  அந்த பதவி அவர்ளுக்கு இருக்க கூடாது என்று நினைத்தவன் கூடவே ஸ்ரீமதியையும் விட மனது இல்லாது திருமணத்திற்க்கு தாயாரகி இருந்தான்.
அனிதா அஷ்வத் திருமணம் நடந்த அதே திருமண பண்டபத்தில் தான் அகில ரூபன் ஸ்ரீமதிக்கும் கல்யாண வைபோகம்  நடந்துக் கொண்டு இருந்தது.
அந்த திருமணம் போலவே  இந்த திருமணத்திலும் பணம் தண்ணியாக செலவு செய்யப்பட்டது.அதே பாதுகாப்பு என்று சொல்வதை விட அதோடு அதிகமாக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது..
உணவில் இருந்தும் அதே தான். ஒன்றை தவிர..அத்திருமணத்தில் மாப்பிள்ளையும் பெண்ணும்..காதல் பார்வை பார்த்துக் கொண்டு அவ்வப்போது யாரும் அரியாது ஒருவர் கை ஒருவர் பற்றி கொண்டும்… 
சமயம் கிடைக்கும் போது எல்லாம் இல்லை  அந்த சமயத்தை ஏற்படுத்திக் கொண்டு ஸ்லோகம் சொல்லும் போதும் அந்த ஓமகுண்டலத்தில் நெய் ஊற்ற இருவர் கையில் கொடுக்கும் போது அவ்வப்போது அவர்கள் தேகம் உரச ..இப்படி நடந்த அந்த திருமணம் எங்கே…?
இங்கு நடுவில் ஒருவர் அமரும் அளவுக்கு இடைவெளி  விட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காது கடமையே கண்ணாக ஐய்யர் சொல்லும் ஸ்லோகத்தை சொல்லிக் கொண்டு கடமை என்பது போல் அவர்களின் திருமணம் நடந்தது..நடந்து முடிந்தே விட்டது…
திருமணம் முடிந்த அன்றே அகில ரூபன் தனக்காக அவன் வாங்கிய வீட்டுக்கு தன் மனைவியை அழைத்து சென்று விட்டான்..இதில் ஒரு விசயம் அவன் தன் வீட்டுக்கு செல்வது யாருக்கும் தெரியாது…
ஸ்ரீமதி  உட்பட…அவர்கள் இருவரும் பேசினால் தானே  மதிக்கு தெரிவதற்க்கு… இந்த காலத்தில் திருமணம் வரை பேசாது நடந்த திருமணம் இவர்களுடையதாக தான் இருக்கும்..
பேசினாலும் அகில ரூபன் மதியிடம் இதை பற்றி சொல்லி இருப்பானா…?அது தெரியாது..ஆனால் ஏதோ திட்டத்தோடு தான்  அவன் தனி வீடு பார்த்து சென்றது..
மற்றவர்களை விட இது வெற்றி மாறனுக்கு தான் பேரதிர்ச்சி என்று சொல்லலாம்.. பெண்ணை உறவை வைத்து சொந்தத்தில் கொடுக்கலாம்.. வசதி வைத்து பணத்திற்க்காக பெண் கொடுக்கலாம்.. இல்லை பெண் விரும்பிய ஆண்மகணுக்கு அவள் விருப்பம் போல் அவனுக்கே திருமணம் செய்து அனுப்பலாம்..
ஆனால் வெற்றி மாறன் தன் பெண்ணை அகில ரூபனுக்கு கொடுக்க நினைத்தது..பாதுகாப்புக்கு… முதலமைச்சர் இல்லம் எனும் போது பாதுகாப்பு கூடுதலாய் இருக்கும்… அகில ரூபனுக்கும் பாதுகாப்பு இருப்பதால் தன் சர்வீஸ் முடிந்தும் தன் மகளின் பாதுகாப்புக்கு கவலை இல்லை என்று நினைத்திருக்க..
இப்போது திருமணம் முடிந்ததும் தனி வீடு என்றதுமே… “மாப்பிள்ளை என்ன இது…?”
கல்யாண மண்டபத்தில் இருந்து இதோ தனக்கான வீட்டுக்கு தான் ஸ்ரீமதியை அகில ரூபன் அழைத்து வந்திருந்தான்..தன் பெற்றோர்களும் தான் அங்கு வந்தனர்..
தனி காரில் முன்னும் பின்னும் பாதுகாப்போடு அகில ரூபன் தன் காரில் செல்ல..அகில ரூபன் தன் காரை பின் தொடரும் மாறு சொன்னதுமே பவானியம்மாவும் சீதாராமனும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு குழம்பி போய் தான் அவனை பின் தொடர்ந்தனர்..
அதுவும் முதலமைச்சர் எனும் போது பவானியம்மா கார் செல்ல சாலையில் போக்குவரத்து இல்லாது செய்ய வேண்டும்..அவர்கள் எந்த நேரத்துக்கு எந்த வழியே செல்கிறாகள் என்று முன்பே திட்ட மிட்டு அனைத்தும் நடக்கும்..
“இது அவனுக்கு தெரியும் தானே…” என்று யோசனையுடன் காரில் பவானியம்மா செல்ல..அவர்கள் செல்லும் பாதையின் முன் ஏற்பாடு எல்லாம் அனைத்தும் சரியாக இருந்தது..
அப்போ பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யும் அளவுக்கு அனைத்து முன் ஏற்பாடும் செய்தவன் எங்கு என்று நம்மிடம் சொல்லவில்லையே என்று அந்த பெற்றோர்கள் நினைத்து முடிக்கும் வேளயில்
அகில ரூபனின் கார் ஒரு வீடு என்பதை விட பங்களா என்று சொன்னால் சரியாக இருக்கும்…அந்த பங்களா முன் அகில ரூபனின் கார் நிற்க… அந்த காருக்கு பின் ஒருவர் பின் ஒருவராய் அவர் அவர் கார்களை நிறுத்தினர்…
அகில ரூபனிடம்.. “இது யார் வீடு…?” என்று கேட்க அவன் பெற்றோர் தயங்கினர்..
ஆனால் வெற்றி மாறன் தயங்காது… “மாப்பிள்ளை இங்கு ஏன் வந்தோம்..? இது யார் வீடு…?” என்று கேட்டார்.
“இது எங்க வீடு மாமா…” என்று அகில ரூபன் தன் வீடு என்று தனித்து சொல்லாது ஸ்ரீமதியையும் இணைத்து  சொன்னதோடு கூடுதல் தகவலாய்…
“உங்க பெண்ணும் நானும் வாழப்போற வீடு இது தான் மாமா.” என்றும் சொன்னான்.
இது கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சி தான்..ஆனால் வாய் திறந்து யாரும் ஏன்..?எதற்க்கு…?  என்று கேட்கவில்லை.
ஆனால் இப்போதும் வெற்றி மாறன் தான் தன் மகளின் பாதுகாப்புக்காக வாய் திறந்தார்.. “என்ன மாப்பிள்ளை இது…? இங்கு என் மகளுக்கு பாதுகாப்பு…?” என்று ஏதோ மேலும் பேச நினைத்தவர் அகில ரூபனின் பார்வையில் தன் பேச்சை பாதியில் விட்டார்.
மீதியை நம் அகில ரூபன் முடித்தான்.. “என் மனைவி,,என் மனைவியின் பாதுகாப்பை நான் பார்த்துக் கொள்வேன் மாமா..இனி நீங்க அதை பத்தி கவலை படாதிங்க…”என்று அகில ரூபனின் பேச்சில் ஸ்ரீமதி இனி உங்கள் மகள் மட்டும் இல்லை என் மனைவியும் அவளை பாதுகாக்க எனக்கு தெரியும் என்று நேரிடையாக சொல்லாது மறைமுகமாய் சொன்னான் அகில ரூபன்.
இருந்தும் வெற்றி மாறனுக்கு அப்படியே அந்த பேச்சை விட மனது இல்லாது..  “இல்ல…” என்று ஏதோ பேச வந்தவரின் பேச்சை இப்போது புவனேஷ்வரி தடுத்து நிறுத்தினார்.
“அது தான் மாப்பிள்ளை என் மனைவியை பார்த்துக்குறேன்னு சொல்லிட்டார் தானே..இன்னும் என்ன…?அவர் மனைவியை அவர் பார்த்துக்க மாட்டாரா…?” என்று சொல்லி தன் கணவனின் வாயை அடைத்தார்..
வெற்றி மாறன் பாதுகாப்புக்காக இதற்க்கு ஒத்துக் கொள்ள மாட்டார்… ஏதாவது சொல்லி தங்கள் வீட்டுக்கே அகில ரூபனை சேர்த்து விட்டு விடுவார்  என்று பவானியம்மாவும் சீதாராமனும் நினைத்திருக்க… புவனேஷ்வரி இப்படி தன் கணவரை அடக்கியதில் முதல் முறையாக தன் சம்மந்தி மீது அகில ரூபனின் பெற்றோருக்கு சுணக்கம் வந்தது..
புவனேஷ்வரி தன் கணவனை அடக்க காரணம்..ஒன்று அகில ரூபன் முன்பே அனைத்தும் முடிவு செய்து விட்டான்..இனி தன் கணவன் அதை மறுத்தால் அகில ரூபன் ஏதாவது சொல்லி விட்டால்.
அந்த  அவமானம் தன் கணவருக்கு தானே…என்பது ஒரு காரணம் என்றால் வேறு காரணம்.. பவானியம்மா சீதாராமனின் செயலை புவனேஷ்வரியால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை..
எப்படி முடிந்தது…?தன் பிள்ளையை தத்து பிள்ளையாய் வளர்க்க இவர்களால் எப்படி முடிந்தது..? அதற்க்கு தண்டனை வேண்டாமா…? என்று நினைத்தும் தன் கணவனை  வாய் அடைக்க செய்தார்..
ஆனால் வாய் திறக்க வேண்டிய ஸ்ரீமதியோ  இது யார் விருந்தோ என்பது போல் சொல்வதை கேட்டு நடந்தால்..வலது காலை எடுத்து வைத்து வா என்று சொன்னதும் தன் வலது காலை எடுத்து அந்த வீட்டில் உள்நுழைந்ததில் இருந்து விளக்கு ஏற்று என்று தன் அன்னையின் பேச்சுக்கு கட்டுப்பட்டு விளக்கு ஏற்றியதில் இருந்து பால் பழம் கொடுத்து பின் முடிவாய் அகில ரூபன் அறைக்கு அனுப்பி வைக்கும் போது…
“மாப்பிள்ளை எண்ணப்படி நட…” என்று அனைத்து தாய் மார்களும் சொல்வதையே தான் புவனேஷ்வரியும் சொல்லி அனுப்பினார்… அனைத்தையும் சொல் படி செய்த ஸ்ரீமதி இதையும்  கேட்பாளா…?பார்க்கலாம்.

Advertisement