Advertisement

எந்த காரணம் தொட்டும் அகிலா நம்ம சொந்த  மகன் தான் என்று யாருக்கும் தெரிய கூடாது.அதுவும் குறிப்பா அகிலாவுக்கு…
நாம் முன் செய்தது உன் அரசியல் எதிர்கால வாழ்க்கைக்காக..இப்போ இந்த உண்மை வெளி வந்தா… நம் சொந்த வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகும்… இப்போ அகிலா தத்து பிள்ளை என்று  வளர்வதால் அவன் எதில் குறைந்து விட்டான்…
அனைத்திலும்  அவனுக்கு நல்லதை தானே கொடுத்தோம்..இன்னும் சொல்ல போனால் என் மனதிலும் சரி உன் மனதிலும் சரி…முதல் இடம் அகிலாவுக்கு தான்… அதனால இனி இந்த பேச்சை விடு…  பகலில் பக்கம் பார்த்து பேசு..இரவில் அதுவும் பேசாதே என்று சொல்வாங்க..இனி இது போல் பேசாதே…” என்று தன் மனைவியின்  வாயை அடைத்த சீதாராமனிடம் பவானியம்மா வெற்றி மாறனின் அந்த என்கவுன்டர்..பின் ஸ்ரீமதி பிறந்தது ஸ்ரீஷா இறந்தது என்று அனைத்துயும் சொல்லில் கொண்டு இருந்தார்.
இதை  அனைத்தையுமே   அகில ரூபன் கேட்டு விட்டு அந்த இடத்திலேயே அமர்ந்து விட்டது..பின் தெளிந்து தன் அறைக்கு வந்தது..பின் தன்னை பற்றிய சுய அராய்ச்சி. பின் ஸ்ரீ பற்றிய ஆராய்ச்சியில் இருக்கும் போது தான்…
இனி தான் பட்ட துன்பத்தை அப்பெண் பட வேண்டுமே…அதை நினைக்கும் போது ஏனோ அவன் மனம்  ரணமாய் வலித்தது… அதன் வலி அவனுக்கு தெரியும் தானே..
அதுவும் ஸ்ரீ விசயத்தில் இவளுக்காக அவளுடன் வளர்ந்த ஸ்ரீஷா உயிர் விட்டு இருக்கிறாள் என்று தெரியும் போது… அந்த  ரணத்தில் ஈட்டியை வைத்து குத்தியது போல் ஆகாதா…
இப்போதும் ஸ்ரீ மீது காதலா அவனுக்கே தெரிய வில்லை..ஏனோ அன்று அவள் வீட்டுக்கு சென்ற போது ஹால் முழுவதும் அவளின் பிம்பமே நிழலாய் மாட்டி இருப்பதை பார்த்துக் கொண்டு வந்தனின் மனதில் ஒரு சிறு ஈர்ப்பு இருக்க தான் செய்தது…
அதுவும் மாப்பிள்ளையின் தங்கை எனும் போது தனக்கு முறை என்று அவன் மனம் நினைத்துக் கொண்டே  படத்தில் இருக்கும் ஸ்ரீயின் முகத்தில் அவனின் பார்வை அதிகம் நேரம் நீடித்து  இருந்தது.
அன்று தன் பார்வை அந்த  படத்திலேயே  இருக்கும் போது தன் தன்  பக்கத்தில் வந்த நவீன் எப்போதும் போல நான் பார்த்துக் கொண்டு இருந்த படத்தில் தன் பார்வையை செலுத்தியதோடு அஷ்வத்திடம்.
“இது யார்…? யார்…?” என்று கேட்டு தெளிபடுத்திக் கொண்டு இருந்தான்.
அப்போது தான் அஷ்வத் அந்த க்ரூப் படத்தில் இருக்கும் ஸ்ரீமதியின் தோழிகளை சொன்னது… சொல்லி விட்டு அஷ்வத் தன் தந்தையின் பக்கத்தில் போய் அமர்ந்து  கொண்டான்..
அந்த படத்தில் தன் பார்வையை செலுத்திய வாறே நவீன்…  ஸ்ரீமதியை காட்டி… “பெண் நல்லா இருக்காலேண்ணா…?” என்று கேட்டவன்..தொடர்ந்து.. ஆனா இந்த பெண் யார போல் இருக்கான்னு தெரியலையே…? என்று அவனுக்கு அவனே கேட்டுக் கொண்டவன் பின் அவனே…
“யாரோ போல் இருந்தா என்ன ஆனா பெண் நல்லா தான் இருக்கா…” என்று சொன்னதோடு … “ஆனா இவளும் டாக்டர் படிச்சி இருக்கலாம்… இந்த சாப்பாடு சமைக்கிறது எல்லாம் ஒரு படிப்பா..யூ ட்யூப் போட்டா  மொத்த சமையலும் அதில் வந்து கொட்டுது.. இதுக்கு போய் தேடி போய் படிச்சி இருக்கா பாரு..அழகு  இருக்கு அறிவு இல்ல போல…” என்று அகிலா என்ன நினைக்கிறான் .தான் பேசியதை கேட்டானா …?இல்லையா..? என்று எப்போதும் போல் யோசிக்காது பேசி விட்டு சென்று விட்டான்..
அன்று சரி ஏதோ பெண் நல்லா இருக்கா முறையா ஆகுற..எப்படியும் நாம கல்யாணம் செய்துக்கனும்… அகில ரூபனுக்கு  காதல் செய்ய நேரம் இல்லை என்பதை விட….தோது இல்லை என்று  சொன்னால் சரியாக இருக்கும்…
எப்போதும் மீடியா சுத்தி பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் தான் எங்கு ஒரு பெண்ணை தனித்து பார்ப்பது.. பின் பிடிப்பது பின் காதல் செய்வது..அதனால் அந்த காதல் அவன் நினைத்து பாராதது..கல்யாணம் செய்ய வேண்டும்..
இந்த  விசுவாசம் கடமை என்று  அந்த உணர்வுக்கும் முக்கியத்துவம் கொடுக்காது  தன் இயல்பான உணர்வைகளை  தனக்கு தனக்கே ஆன ஒரு  உறவு  வேண்டும் என்று அவன் மீது ஆசை பட்டான். .அது கல்யாண உறவால் மட்டும் தான் சாத்தியம் என்று நினைத்தவனாய்..
தங்கை கல்யாணம் முடிந்து தன் கல்யாணம்… கண்டிப்பாக அடுத்து வீட்டில் அந்த பேச்சு தான் நடக்கும்… அப்படி கல்யாணம் செய்வது ஏன் இந்த பெண்ணாய் இருக்க கூடாது என்று நினைத்து தான் தன் ஆர்வமான பார்வையை அந்த புகைப்படத்தில் அகில ரூபன் படர விட்டது.
எப்போது  நவீனும் அந்த படத்தை பார்த்தானோ… அப்போதே அந்த வீட்டில் இருக்கும் நேரம் வரை அந்த படத்தின் பக்கம் தன் பார்வையை செலுத்தவில்லை..
இது எல்லாம் அவனுக்கு ஒரு விசயமே இல்லை.  தான்..விட்டு கொடுப்பது என்பது அவன் சிறு வயது முதலே பழக்கமான ஒன்று தானே..அதனால் அது அவனுக்கு  பெரியதாக தெரியவில்லை…
மேலும் ஸ்ரீ மேல் எனக்கு காதல் எல்லாம் இல்லையே..பெண் அழகா இருக்கா… எப்படியும் கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும்… அது இந்த பெண்ணாய் இருக்கட்டும் என்று நினைத்து தான் பார்த்ததால் அது பெரிய விசயமாய் தெரியாது என்று தான் அவன் அப்போது நினைத்தான்..
ஆம் அவன் அப்போது நினைத்தது அதை தான்..ஆனால் நடந்தது..திருமணத்தில் ஸ்ரீயை நேரில் பார்க்கவும் அந்த வயதுக்கே உண்டான மாற்றம் அகில ரூபனுக்கு எழ தான் செய்தது… தான் பார்ப்பதை அவள் பார்க்கும் போது தன் ஆர்வ பார்வையை ஆராய்ச்சி பார்வையாக மாற்றிக் கொண்டான்..
அவன் உண்மையில் அப்போது கொஞ்சம் கொஞ்சம் ஸ்ரீ மீது ஆராய்ச்சி பார்வையும் செலுத்திக் கொண்டு இருந்தான் என்று தான் சொல்ல வேண்டும். நவீன் அவளிடம் பேசிக் கொண்டு இருக்கும் போதும்… அவள் தந்தையின் முகம் பாராது அவரை தவிர்ப்பதையும் பார்த்து..
ஆனால் எப்போதும் தன்னை பற்றிய உண்மையும்..ஸ்ரீயை பற்றிய உண்மையும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் தெரிய வந்ததோ அன்றே முடிவு செய்து விட்டான்…ஸ்ரீயை தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று…
ஒரு காரணம் சிறு வயது முதலே அனைத்தையும் விட்டு கொடுத்தேன்.. எதனால் நன்றி உணர்ச்சியால்..ஆனால் அந்த நன்றி உணர்ச்சி இன்று பழி  உணர்ச்சியாய் உருமாறி போக…  தன் பெற்றோர்களுக்கு ஒரு ஆட்டம் காட்ட வேண்டும்..
நவீனும் விரும்ப தானும் அந்த பெண்ணை கேட்க..இருவரும் தன் பிள்ளைகள் என்னும் போது அவர்கள் நிலை…அதை பார்த்து ரசிக்க வேண்டும்… தானும் தம்பியும் எதிர் எதிராய் நிற்க்கும் போது இருவரையும் பெற்ற பெற்றோர்களின் நிலை…கேட்கவும் வேண்டுமோ… என்ன தான் அரசியலுக்காக சொந்த பிள்ளையைய் தத்து பிள்ளையாக வளர்த்தாலுமே தன் மீது பாசம் இருக்க தானே செய்யும்..
அந்த பாசத்தை பார்த்து தானே அகில ரூபன் இவர்களுக்காக என்ன வேண்டுமானலும் செய்யலாம் என்று நினைத்து செய்தது..பார்க்கலாம் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று…தன் பெற்றோர் வேதனை பட வேண்டும் என்பது ஒரு காரணம் என்றால்… மற்றொரு காரணம்..?.
அவன் நினைத்து பார்க்காதது தன் தம்பி உடனே தன் விருப்பத்தில் இருந்து பின் வாங்கியது..அது விருப்பம் என்று சொல்ல முடியாது ஒரு வகை ஈர்ப்பு என்று வேண்டுமானல் சொல்லலாம்… எப்போதும் தன் விருப்பமே பிராதனம் என்று இருக்கும் நவீன் ஒத்துக் கொண்டதிற்க்கு காரணம்..நானும் அவனின் ரத்தம் என்று இருக்கலாம்..இல்லை இத்தனை நாள் நான் ஆசைப்பட்டது அனைத்தும் அவனுக்கு விட்டு கொடுத்தேன் என்ற அந்த எண்ணமாக கூட இருக்கலாம்..
ஆனால் அவன் தன்னை எதிர்க்க வேண்டும்..தன் தாய் தந்தை எங்கள் இருவருக்கும் நடுவே அல்லல் பட வேண்டும் என்ற தன் எண்ணத்தை நவீன் தகர்த்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.
இப்போது கூட ஸ்ரீ தன்னை திருமணம் செய்ய சம்மத்தித்தை அவனால் நம்ப முடியவில்லை..நம்பாமலும் இருக்க முடியவில்லை..இதோ சிறிது நேரம் முன் தான் வெற்றி மாறன் அழைத்து…
“மதி சம்மதிச்சிட்டா மாப்பிள்ளை…” என்று கொஞ்சம் மகிழ்ந்து போய் தான் தன்னிடம் சொன்னார்..
அதற்க்கு மேல் … “எப்படி சம்மதித்தாள்..நீங்க ஏதாவது போஸ் செய்திங்களா..?” என்று எதுவும் கேட்கவில்லை.
“சரி மாமா…” என்று அகில ரூபன் சொன்னதும்..
அழைப்பின் அந்த பக்கம் இருந்த வெற்றி மாறன் பேசியை அனைக்காது இருக்கவும்… “மாமா நீங்க என் கிட்ட வேறு ஏதாவது  சொல்லனுமா…?இல்ல கேட்கனுமா…?” என்று அகில ரூபன் கேட்டதற்க்கு..
கொஞ்சம் தயங்கிய வாறே வெற்றி மாறன்… “இது உங்க ரொம்ப ரொம்ப பர்சனல்..ஆனா நான் பெண் கொடுப்பதால் இதை பேசிய ஆகனும்..” என்று வெற்றி மாறன் தயங்கவும்..
“என்னுடைய பர்சனல் அனைத்தும்  உங்க கிட்ட அன்னைக்கே சொல்லிட்டேன் மாமா..இனி தனிப்பட்ட விசயமா பர்சனல் என் கிட்ட இல்ல..உங்க பெண்ணை கல்யாணம் செய்த பின் எங்களுக்கு உள்ள பர்சனல் எல்லாம் இனி தான்…அதனால கேளுங்க…” என்று அகில ரூபன் வெற்றி மாறனுக்கு கேட்க அனுமதி கொடுத்த பின்…
வெற்றி மாறன்… “நீங்க சொந்த பிள்ளை தான் என்று வெளியில் சொன்னா..அது உங்க ஆட்சியோடு உங்க உங்க பதவியும் பறிப்போக சான்ஸ் இருக்கு..அது உங்களுக்கு தெரியுமா…?”
“..ம் தெரியும்.” என்று அகில ரூபன் சொல்லும் போதே வெற்றி மாறன் என்ன சொல்ல வருகிறார்..அதாவது அவர் வரும் பாதை அகில ரூபனுக்கு புரிந்து போயின…
“நீங்க உங்க அம்மா கட்சியில் தான் இருக்கிங்க..இந்த உண்மை தெரிஞ்சா உங்க பதவிக்கும் தான் ஆபத்து..அதன் பின் உங்களை பாதுக்காக்க தனியே காவல் எல்லாம் இருக்காது… உங்க அம்மாவுக்கும் இருக்காது…பின் அந்த வீட்டில் என் மகள் பாதுகாப்புக்கு என்ன உத்திரவாதம்…?” என்று கேட்டவர்..
அடுத்து அவர் சொன்ன… “என் மகள் ஒத்துக் கொண்டாள்…அடுத்து திருமணம் என்பது உங்க கையில் தான் இருக்கு.” என்று சொல்லி விட்டு அவர் பேசியை அணைத்து விட்டார்..
ஆனால் அவன் மனதில் கொதித்துக் கொண்டு இருக்கும் அந்த நெருப்பு அணையாது மேலும் மேலும் தானே சுடர் விட்டு எரிகிறது…  இதை விட்டால் வேறு எதில் அவர்களை நான் வீழ்த்த…
“நான் ஒன்றும் இவர் மகளை காதலிக்க வில்லையே…?” என்று அகில ரூபன் நினைக்கும் அதே வேளயில் சென்னையில் தன் இல்லத்தில் ஸ்ரீமதி…
“இது எது மாதிரியான திருமணம்…?” என்று நினைத்து யோசித்துக் கொண்டு இருந்தாள்.
 

Advertisement