Advertisement

அத்தியாயம்…14
டெல்லியில் தன் தாத்தா கட்டிய மாளிகையில் தன் அறையில் படுத்திருந்த அகில ரூபனின் எண்ணம் எங்கு எங்கே சென்று முடிவில் ஸ்ரீமதியிடம் வந்து நின்றது.
நினைக்க வில்லை..நினைத்து  பார்த்ததும் இல்லை..இந்த பெண்ணை தான் கட்டுவேன் என்று அடம் பிடிப்பேன் என்று..என்ன சொல்ல வாழ்க்கை என்பது நினைத்து பார்க்காத பக்கங்களை கொண்டது தானே…
ஒரு பக்கம் சொந்த குழந்தையான தான் வளர்ப்பு குழந்தை என்று இத்தனை வருடம் நினைத்திருக்க..இல்லை நீ அவர்களின் சொந்த குழந்தை அவர்களின் சுயநலத்திற்க்காக வளர்ப்பு குழந்தையாய் வளர்க்கப்பட்டேன் என்று தெரிய…..
இன்னொரு பக்கமோ சொந்த குழந்தை என்று வளர்ந்தவள் இல்லை. அவள் அவர்களின் தத்து குழந்தை என்று தெரிய வந்த போது…..மனிதர்களில் தான் எத்தனை விசித்தரமானவர்கள்..அவர்களுக்கு வரும் பிரச்சனைகளும் விசித்திரமானது தான்…
 முப்பதை தொட்டு விட்டேன்..ஒருவன் சொந்த வீட்டில்  அன்பை காட்டலாம்..கடமையை செய்யலாம்..ஏன் துரோகத்தை கூட செய்யலாம்…ஆனால் ஒருவன் விசுவாசத்தை காட்ட முடியுமா…?
தான் இத்தனை வருடம் அந்த வீட்டில் அதை தானே காட்டினேன்..அப்பா அம்மா என்று அவர்கள் மீது அன்பை வைத்ததை விட விசுவாசத்தை  தானே வைத்தேன்.
சென்ற வாரம் வரை அவர்கள் மீது என் மனது முழுவதும் விசுவாசம் தானே இருந்தது…ஒவ்வொன்றும் நான் அனுபவிக்கும் போது இது எனக்கானது அல்ல…இவர்களின் பெருந்தன்மையால் எனக்கு இந்த வாழ்க்கை கிடைத்து இருக்கு…
எங்கோ எங்கேயோ வளர வேண்டிய நான் இவர்களின் கருணையால் மேன்மையாக வளர்கிறேன் என்று நினைத்து தானே என்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையும் இருந்தது..
மருத்துவம் என் கனவு… அந்த கனவை என் மனதில் சிறுவயது முதலே ஊறிய அந்த விசுவாசத்தால் தான் ஒரே நொடியில்  அதை விடுத்து அவர்களின் ஆசையை நிறைவேற்ற..இதோ அரசியல் என்னும் அரிதாரத்தை பூசிக் கொண்டேன்..
ஆம் அவனை பொறுத்த வரை அரசியல் அவனுக்கு அவனே பூட்டிக் கொண்ட விலங்கு என்று தான் இது வரை நினைக்கிறான் அவன்..கட்சியில் அவனுக்கு நல்ல பெயர் செல்வாக்கு…சொந்த வாழ்க்கையில் பவானியம்மா எப்படியோ ஆனால் பொது வாழ்வில் நேர்மையானவர் தான்..
மக்களுக்கு கிடைக்க வேண்டியதை மத்திய அரசிடம் எப்படியாவது வாங்கி கொடுத்து விடுவார்… மத்திய அரசுக்கு கீழ் படிவதோடு மக்களின் எண்ணத்துக்கு ஏற்ப தான் அவர்களின் ஆட்சி இருந்தது. இதுவும் ஒரு வகை அரசியல் தந்திரம் தான்..
நம் ஆட்சி ஐந்தாண்டுகளில் முடிந்து விட கூடாது மத்திய அரசிடம் நாம் போராடி வாங்கி தரும் ஒவ்வொன்றும் நம் அரசியல் வாழ்க்கையில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படிகட்டுக்கள் என்று நினைத்து தான் பவானியம்மாவும் சரி அவரின் தந்தையும் சரி செய்தது..
அதே போல் மத்திய அரசும் இந்த மாநிலத்திடம் அவ்வளவு ஆட்டம் காட்டாது..நாம் என்ன தான் முயன்றாலும்  அவர்கள் ஆட்சி தான் அந்த மாநிலத்தில் எனும் போது அவர்களுக்கு சாதகமாக இருந்துக் கொண்டு போய் விடலாமே…
அடுத்த தேர்தலுக்கு கூட்டாவது சேரலாம் என்று நினைத்து தான் ஒவ்வொரு நலத்திட்டத்திலும் மத்திய அரசு பவானியம்மா கேட்டதை நிறைவேற்றி கொடுத்தது… இப்படி அனைத்திலும் ஆதாயம் பார்த்த இவர்கள் சொந்த குழந்தையிடமும் ஆதாயம் தேடி இருப்பார்கள்  என்று அவன் நினைத்து பார்த்தது இல்லை..
அரசியலுக்கு அவனின் குருவே பவானியம்மா தான்..ஒரு சில விசயங்கள் பவனியம்மா சொல்லும் போது… “இப்படி செய்து தான் நாம் தங்கள் ஆட்சியை  நிலை நிறுத்த வேண்டுமா…? என்று பல முறை நினைத்து இருக்கிறான்.. அது ஒரு சில தடவை தன் அம்மாவிடம் கேட்டும் இருக்கிறான்…
அதற்க்கு பவானியம்மா சொன்ன வார்த்தைகள் இன்றும் அவன் நினைவில் இருக்கிறது… “எனக்கு அரசியல் என்பது உடை அகிலா…உடை போடாம ஒருத்தன் வெளியில் போக முடியுமா…?முடியாது தானே..அது போல தான் நான் எனக்கு பின் ஒருவர் அரசியலில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்..
நவீனும் அனிதாவும் மருத்துவம் என்று சொன்ன போது… என்னடா என்று நினைத்தேன்..ஆனால் நீ அரசியலுக்கு வந்தது எனக்கு அவ்வளவு சந்தோஷம் அகிலா…” என்று அன்று தன் அன்னை சொல்லும் போது அகில ரூபனுக்கு கொஞ்சம் பெறுமையாக தான் இருந்த்து..
அவர்கள் எப்போது பேசும் போதும் குடும்பம் என்றால் என்னையும் சேர்த்து அதுவும் யாரிடம் சொல்லும் போதும் என் மூத்த மகன் அகில ரூபன் என்று சொல்லும் போது எல்லாம் அவன் எவ்வளவு பூரித்து போய் இருந்தான் என்று அவனுக்கு தான் தெரியும்..
அப்பா அம்மா கூட பரவாயில்லை..ஆனால் பாட்டிமார்கள் இறந்த தாத்தா அனைவரும் தன்னை சொந்த பேரனாய் நடத்தியதில் தன் ஆசை தன் கனவு என்ன இவர்களின் அன்புக்கு முன்னாலே என்று அன்று அதை தூக்கி போட தானே செய்தான்.
ஆனால் இன்று அதை எல்லாம் நினைத்து பார்க்கும் போது இப்படியும் சுயம் நலம் பிடித்தவர்கள் இருப்பர்களா…?என்று தான் நினைக்க தோன்றிய அதே சமயம் ஸ்ரீமதியை நினைக்கும் போதே தன்னால் வெற்றி மாறனும் புவனேஷ்வரியும் அவன் கண் முன் வந்தார்கள்…
தன் பெற்றோர்கள் போலவும் இருக்கிறார்கள்..இதோ ஸ்ரீமதியின் பெற்றோர்கள் போலவும் இருக்கிறார்கள்… அன்று அந்த இரவு…. விடியலில் அவன் டெல்லி ப்ளைட் பிடிக்க வேண்டும்… ஏனோ தூக்கம் வரவில்லை.
எப்போதும் தனக்கு என்று எதில் மீதும் அவன் ஆசை வைத்தது இல்லை..ஆசை வைக்கும் அளவுக்கு அவ்வீட்டில் அவனை விட்டது இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..அவன் கண் ஒரு பொருள் மீது படிந்தால்  அன்றே அது அவன் கையில் இருக்கும்..
பணத்துக்கு பஞ்சம் இல்லை அதனால் அனைத்தும் கேட்கும் முன்னவே கிடைத்தது… ஆனால் அவனுக்கு என்று ஒரு  எண்ணம் லட்சியம் என்று ஒரு சிலது சிறு வயது முதலே இருந்தது..
மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து விளையாட வேண்டும் என்று..ஆனால் அப்போதே அவர் தாத்தா முதலமைச்சர்..அதனால் “பாதுகாப்பு இல்லை..வீட்டில் தம்பி தங்கையோடு விளையாடு..” அதுவும் அவனை சுற்றி பாதுகாப்பு வளையம் இருக்க அதன் நடுவில் தான் அவன் ஆட்டங்கள் அனைத்துமே…
இப்படி அவனுக்கு கிடைத்தும் அனுபவிக்க முடியாது இருந்தது பல..அதில் படிப்பு…பின் அது என்னவோ தான் எதன் மீது ஆசை படுகிறோமே நவீனுக்கும் அதன் மீது தான் ஆசை வரும்…வண்டியில் ஆரம்பித்து அவர்களுக்கு வாங்கி குவிக்கும் சொத்து முதல்ல்.
அவன் பெயரிலேயே  நிறையவே  இருக்கிறது தான்..ஆனால் அது எல்லாம் சொத்து வாங்கி குவிக்கும் எண்ணத்தில் வாங்கி போட்டது…கேரளா போர்ட் அவுஸ் முதன் முதலில் அவன் ஆசையாக பார்த்தது வாங்க நினைக்கும் போது நவீனின் ஆசையும் அதன் மேல்..
“அப்பா எனக்கு இன்ரெஸ்ட் இல்ல நீங்க இதை நவீன் பெயரில் வாங்கிடுங்க.” தனக்கு பிடித்ததை தன் வாயால்  மற்றவர்களுக்கு கொடுத்து விடுங்க என்று சொல்வதை எவ்வளவு கொடுமை..
அதை அனுபவித்து பார்த்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்..இது போல் நிறைய அனுபவங்கள் அவன் பெற்று இருக்கிறான்… அதன் வரிசையில் ஸ்ரீயுமா…? என்று நினைத்து தான் அன்றைய இரவு அவனுக்கு தூங்கா  இரவானது…
ஆனால் அந்த தூங்கா  இரவை துக்க இரவாக்கிய பெறுமை அவன் பெற்றோர்களையே போய் சேரும்…அவன் விழித்து இருக்கும் போதே மணி பதினொன்னை கடந்து விட்டது…அந்த நேரத்தில் பெற்றோரின் அறையில் விளக்கு எரியவும் ..
“உடம்புக்கு ஏதாவது பிரச்சனையா…? இன்று வேலை கொஞ்சம் அதிகம் தான் இருவருக்கும் என்று நினைத்து தான் என்ன என்று கேட்க  அவர்கள் அறையில் வாயில் போய் நின்றது..
அப்போது அவன் கைய் பேசியின் வைப்ரேஷனில் என்ன என்று பார்க்கும் போது அவனின் உதவியாளன் தான் அழைத்து இருந்தான்..
காலை ப்ளைட் தாமதமாய் வருகிறது என்று சொல்ல..எப்போதும் இந்த நேரத்துக்கு எல்லாம் அழைக்க மாட்டான்..சிறிது நேரம் முன் தான் அகில ரூபனே அவனை அழைத்து பேசியிருந்தான்..
அதனால் நான் தூங்கி இருக்க மாட்டேன் என்ற நிச்சயத்தில் தான்  அந்த நேரத்துக்கு அவன் அழைத்தது..ஆனால் அதுவே அவனுக்கு நல்ல நேரமா கெட்ட நேரமா என்று தெரியாத ஒரு சூழ்நிலையில் அகில ரூபனின்  நேரம் அமைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
நல்ல நேரம் இந்த விசயம் தெரியாது போய் இருந்தால் கடைசி வரை அவன் ஏமாந்து போய் இருப்பானோ ஏமாற்றப்பட்டு இருப்பானோ..ஆனால் அவன் ஏமாந்து இருப்பான் அது நிச்சயம்..
அடுத்து கெட்ட நேரம்…இத்தனை வருடம் தாய் தந்தை இல்லை என்று தெரிந்து பின் வந்த அந்த விசுவாசம்..இவர்கள் தான் தன் தாய் தந்தை என்று தெரிந்ததும் அவன் விசுவாசத்தோடு அவனின் மனதாபிமானமும் செத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
ஆம் அவனின் மனிதாபிமானம் செத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..இல்லை என்றால்  நவீன் தன் சொந்த தம்பி இல்லை என்று தெரிந்தும் அனைத்தும் விட்டு கொடுத்தவன்..
அவன் தன் ரத்தம் என்று தெரிந்தும் நவீகனுக்கும் ஸ்ரீமீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது என்று அறிந்தும்… “எனக்கு தான் ஸ்ரீமதி என்று சொல்லி இருப்பானா…?” என்று அப்படி அவனை சொல்ல வைத்தது யார்…?
அமைதியான அந்த இரவு நேரத்தில் அவன் கேட்ட அந்த விசயம்..இதோ இப்போது நினைக்கும் போது கூட அவனின் உடல் ஒரு மாதிரியாக கூசி போய் விடுகிறதே…
அன்று பவானியம்மாவும் சீதாராமனும் பேசிய பேச்சுகள்..இவன் தன் உதவியாளரிடம் பேசிக் கொண்டு இருக்கும் போதே பவானியம்மாவின் குரலில் ஒரு சோகம்  இழையோட சேர்ந்து ஒளித்ததை கேட்டு தான்..
ஏதாவது பிரச்சனையோ என்று நினைத்து தான்  “என்ன…?” என்று  கேட்கலாம் என்று நினைத்து கதவை தட்டும் வேளயில் தந்தை சொன்ன அந்த வார்த்தை…
“பவி இத்தனை வருடமில்லாம உனக்கு ஏன் இப்போ இது போல் ஒரு குற்ற உணர்வு… நீ இது போல் ஸ்ரீமதி சொந்த பெண் இல்லை ஆனா அவங்க சொந்த பெண்ணா  வளர்க்கிறாங்க..ஆனா நாம் சொந்த மகனை தத்து மகனா வளர்க்கிறது  ஒரு மாதிரியா  இருக்குன்னு.
இத்தனை வருடம் கழித்து ஏன் இது போல் உனக்கு தோனுது… வெற்றி மாறன் நிலை வேறு… மதி  ஒரு என்கவுன்டர் செய்தவனின் மகள் என்று தெரிந்தால் அவள் உயிருக்கு ஆபத்து.. அதனால அந்த உண்மைய மறச்சி வளர்க்கிறார்…

Advertisement