Advertisement

அத்தியாயம்….
ஸ்ரீமதியின் மயக்கம் அதிர்ச்சியால் வந்த மயக்கம் என்பதை ஒரு மருத்துவராய் அறிந்துக் கொண்ட புவனேஷ்வரி… அனைவரையும்  பார்த்து…
“அவ கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும்.” என்று சொல்லி தன் மகன் பக்கம் பார்வையை திருப்பிய புவனேஷ்வரி…
“அவ ரூமில் படுக்க வெச்சிடு அஷ்வத்.” என்று சொன்னவரின் குரலில் சுரத்தே இல்லை.
எப்போ வந்தா…? என்ன கேட்டு இருப்பா…? இதுவே மனதில் ஓட தன் மகனுக்கு முன் அகில ரூபன்  மதியை அள்ளி எடுத்து வெற்றி மாறனிடம்… 
“இவ ரூம் எது…?” என்று கேட்டான்.
அப்போதும் தான் தன் நினைவில் இருந்து வெளி வந்த புவனேஷ்வரி தன் கணவனை யோசனையுடன் பார்த்தார். அவர் கண் அசைவில் அமைதி காத்தாலும், மகளுடைய விருப்பம் இல்லாது நாமே  இது முடிவு செய்ய இது அவளின் பாதுகாப்பு விசயம் இல்லையே..
இது அவள் வாழ்க்கை.இதில் அவள் விருப்பமும் இருக்கிறதே… மகளின் விருப்பதை கேட்காது இப்படி அகில ரூபனுக்கு உரிமை தருவது ஏனோ அவருக்கு பிடிக்க வில்லை.
பெண் மயங்கிய நிலையில் இருந்தாலும்…அவளை வேறு ஒருவன்  தூக்கி செல்வதை எந்த பெண்ணும் விரும்ப மாட்டாள்.அதுவும் தந்தை உடன் பிறப்பு அருகில் இருக்க..இப்படி வேறு ஒரு ஆடவனை ஏன் தூக்கி போக அனுமதித்தார்கள் என்று அவள் நினைத்தால்…. என்று ஏதேதோ எண்ணங்கள் அவளை பாடாய் படுத்த தலையில் கை வைத்து அப்படியே அமர்ந்து விட்டார்.
அஷ்வத் தான் அன்னையின் அருகில் அமர்ந்து… 
“அம்மா வீணா நீங்க யோசிச்சி உங்க உடம்பை கெடுத்துக்காதிங்க… மதியின் விருப்பம் மீறி எதுவும் நடக்காது. நீங்க கவலை படாதிங்க.” என்று  அஷ்வத் புவனேஷ்வரிக்கு ஆறுதல் அளித்தான்.
அனைவரும் எதிர் பார்த்தது போல் சிறிது நேரத்திலேயே மதியின் மயக்கம் தெளிந்து விட்டது தான்..மயக்கம் தெளிந்தும் அவளால்  யாரின் முகத்தையும் தெளிவாக பார்க்க முடியவில்லை.
அதற்க்கு காரணம்… உருவம் மறைக்க அவளின் கண்ணில் முழுவதும் கண்ணீரே… தன் தந்தையை திட்ட வேண்டும் என்றே அனைத்தும் விட்டு இங்கு ஓடி வந்தாள்.
அதுவும் தான் இருக்கும் வீடு முதல் வேலை செய்யும் இடமான ஓட்டல் வரை அனைத்திலும் அப்பாவின் ஆட்கள்.. கடந்த ஆறு மாதங்களாய்  ஒருவன் பின் தொடர்வதை மதி கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள்.
வயது முப்பதில் தொடக்கமாய் இருக்கும்..பார்க்க வாட்ட சாட்டமாய் இருந்தான்…என்ன இது டீன் ஏஜ் பையன் போல் பின் வருகிறான்.. முதன் முதலில் ஒருவன் தன்னை பின் தொடர்கிறான் என்று கண்டுக் கொண்டதும்..
அவன் தந்தை நியமித்த பாதுகாவலனாய் இருப்பான் என்று அவள் சிறிதும்  நினைத்து பார்க்கவில்லை..ஏதோ காதல் விசயம் என்று தான் நினைத்தாள். எது வரை பின் தொடர  முடியும்..
ஒரு நாள் என் முன் வந்து தானே ஆக வேண்டும். அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று அவள் அவனை கவனித்தும் பாராது விட்டு விட்டாள்.தன் முன் வருவான் என்று  நினைத்தவன்..தன்னை ஒரு சிறிய இடைவெளியோடு பின் தொடவதோடு சரி…
தன்னிடம் அவன் பேசவே முயற்சிக்காத போது எங்கு இருந்து முன் வந்து நிற்ப்பான். அதுவும் நேரம் காலம் பாராது..அந்த ஒட்டல் மூன்று பேர் சேர்ந்து நடத்துவதால்..நேரத்திற்க்கு ஏற்ப ஒருவர் மாற்றி ஒருவர் செல்வர்..
 இந்த நேரம் என்று ஒரு குறிப்பிட்ட நேரம் எல்லாம் அவர்களுக்குள் இல்லை. அதனால் மதி ஒரு சமயம் காலையில் செல்வாள்..
சில சமயம் மதியம்..ஏன் ஒரு சில தடவை இரவு ஏழுமணிக்கு சென்றால் பத்து மணி வரை இருப்பாள்… அவள் எப்போதும் சென்றாலும் அவன் அவள் பின்..
இவனுக்கு வேறு வேலை இல்லையா…? என்று ஒரு சில தினங்களாய் இது வேறு எதுவோ..என்று  சந்தேகம்..அப்போது கூட அவள் தன் தந்தை மீது  சந்தேகம் கொள்ளவில்லை.
அதுவும் சரியாக நான் கிளம்பும் நேரம் இவனுக்கு எப்படி தெரிகிறது..அதுவும் இன்று தன் தோழி அந்த பெரியவரின் இறப்பால் அங்கு இருப்பதால்  மதி விடியற்காலையிலேயே வீட்டை விட்டு கிளம்பி விட்டாள்.
அந்த வீட்டின் முனை தான்டவும் தான் தன் பேசியை மறந்து விட்டது நினைவுக்கு வந்தது மீண்டும் தன் வீட்டுக்கு வர..அப்போது வாட்ச்மேன் யாரிடமோ பேசியில் பேசிக் கொண்டு இருந்தார்.
அவன் பேசியில் பேசும் போது சந்தேகம் கொள்ளாத மதி அவன் தன்னை பார்த்ததும் அவசர அவசரமாய் பேசியை அணைத்து விட்டு… “என்ன மேடம் ஏதாவது மறந்து  விட்டுட்டு போயிட்டிங்களா…?” என்று கேட்டான்.
அவன் அப்படி தன்னை கேட்டது ஏதோ தன்னிடம் இருந்து மறைக்க கேட்டது போல் இருந்தது மதிக்கு… அவன் கேட்டதற்க்கு பதில் அளிக்காது…
“என்ன ஷண்முகம் போனில் யாரு…?” என்று மதி கேட்டாள்.
மதியும் சரி அந்த வீட்டின் வாட்ச் மேன் என்று இருக்கும் ஷண்முகமும் சரி..இது வரை இது போல் பேசியது இல்லை.அவன் வீட்டின் வெளியே நிற்ப்பவன் அவ்வளவு தான்.
இன்று மதி பேசவும்.. நெற்றியின் ஓரம் வியர்வை பூக்க அதை துடைத்த வாறே… “அம்மா கிட்ட அம்மா கிட்ட பேசிட்டு இருந்தேன் மேடம்.” என்று அவன்  ஒரு வழியாக சொல்லி முடிக்கவும்.
“அப்படியா…?” என்பது போல் அவனை ஒரு  பார்வை  பார்த்த வாறு தன் பேசியை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள். விழியில் சரியாக இவன்…இவனுக்கு எப்படி நான் இந்த நேரம் வருவேன் என்று தெரியும்..அவனை பார்த்தாலே தெரிந்து விட்டது.
அவசர அவசரமாக கிளம்பி இருப்பது..தன் பேசியில் நேரத்தை பார்த்தாள். அது  விடியற்காலை ஐந்து மணி நாற்பத்தி ஐந்து நிமிடம் என்று காட்டியது. இந்த நேரத்துக்கு இவன் வந்து இருக்கிறான் என்றால் இப்போது தான் யாரோ நான் வருவதை சொல்லி இருப்பாங்க..
சிறிது நேரம் முன் ஷ்ண்முகம் பேசியில் பேசியது நினைவு வர..இதற்க்கு இன்று முற்றுப் புள்ளி வைக்கிறேன் என்று நினைத்தவள்  காவல்துறைக்கு அழைத்து விட்டாள்.
அது என்னவோ அவள் நேரம் அவள் பேசியில் பேசியதும் ரோந்து பணியில் இருப்பவர்களுக்கு தகவல் போக..அவர்கள் அவள் இருக்கும் பகுதியின் மிக அருகில் இருந்ததால் உடனே வந்து விட்டார்கள்.
பின் என்ன மதியின்  பின் வந்தவன்  தன் தந்தையால் நியமித்தவன் என்று தெரிய வர..பின் வாட்ச் மேன் அங்கு இருக்கும் தோட்டக்காரன் தன் ஓட்டலின் குக்..அனைவரும் தன் தந்தை நியமித்தவர் என்று தெரிந்ததும்..
அப்போ எனக்கு இங்கு என்ன இருக்கு…?எதுவும் இல்ல…மூன்று வருடமாய் இது என்னுடையது.. என்னை காப்பாற்றிக் கொள்ள எனக்கு தெரியும் என்ற அவளின் தைரியம் மொத்தமும் நசுக்கப்பட..இதோ இனி பெங்களூரில் எனக்கு என்ன இருக்கிறது என்று நினைத்தவளாய் சென்னை நோக்கி பயணம்.
வந்ததும் தன் தந்தையிடம் “இனி நான் உங்க கூட இருக்க மாட்டேன்…நான் வெளிநாட்டுக்கு போக போறேன்..அங்கு உங்களால் என்ன செய்ய முடியும்…?” என்று கேட்கலாம் என்று தான் வந்தாள்.
ஆனால் அவள் தந்தையை பார்த்து  கேட்பதற்க்குள் தந்தை வாயில் இருந்து கேட்க கூடாத விசயங்கள் அனைத்தும் கேட்டு விட்டாள்…  அதை அவளால்  ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..
விளையாட்டு என்று நினைக்க முடியாது. தன் தந்தை விளையாட கூடியவர் இல்லை..அதுவும் இது போல் விசயத்தில் சம்மந்தியிடம்..அப்போ நிஜம்… தன்னால்  தான் ஸ்ரீஷா இறந்தால் என்று  அவள் மனம் உணர்ந்த நொடி  அவள் தன் நினைவை இழந்தாள்.
நினைவை இழந்தவள் எழுந்து விட்டாள்..கூடவே அவளின் ரணமும்  தான்.. எப்படி முழிப்பேன்..? அப்பா முகத்தில் எப்படி முழிப்பேன்..முதலில் தன் உடன் பிறப்பு இறக்க காரணம் தந்தை..தன் தந்தை பார்த்த உத்தியோகம்..அதன் பகையால் தான் அவளை கொல்ல பார்த்தார்கள்..
என்னையும் தான்..ஆனால் நான் காப்பற்றப்பட்டு விட்டேன்..சகோதரி இறந்து விட்டாள்.இது தான் அவளுக்கு தெரிவித்த விசயம்..அவளுக்கு மட்டும் இல்லை.அனைவருக்கும் என்ன அஷ்வத் உள்பட இதை தான் சொன்னார்கள்.
அதனால் அன்று அதாவது பதினான்கு வருடம் முன்… “அப்பா இந்த வேலை வேண்டாம் விடுங்க.” என்று தான் சொன்னதை கேட்காது இன்று வரை அதே உத்தியோகத்தில் இருக்கும் அப்பாவின் முகத்தை பார்க்க மாட்டாள். அதே போல் பேச்சும் அப்படி தான்..கேட்டதற்க்கு பதில் அவ்வளவு தான்.
ஆனால் இப்போது அறிந்துக் கொண்ட்தில், தெரிந்துக் கொண்டதில் தன்னால் தான் தன் உடன் வளர்ந்தவள் இறந்து விட்டாள்..அதுவும் தான் ஒரு குற்றவாளியின் மகள்.. ரவுடி…என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டவரின் மகள்.. இது தான் என் அடையாளங்கள்…
இவை அனைத்தையும் அழித்து தன்னுடைய மகளாய் அடையாளம் காட்டபட்ட வேண்டிய அவசியம்..இன்றும் எனக்கு ஆபத்து இருக்கிறது..அது என் அப்பாவால் இல்லை..வேறு.ஆம் இப்போது கூட அவள் மனது வெற்றி மாறனை தான் அப்பா என்று உணர்கிறாளே தவிர..சகாயம்… அவரை அப்பா என்று நினைப்பது என்ன… மனதில் கூட அவளால் உணர முடியவில்லை.
நான் இப்போ என்ன செய்யனும்..?இதோ என்று இந்த முகம் என்னை அடையாளம் காட்டப்படுமே அதை எதைக் கொண்டு மறைப்பது…? தன்னை பார்க்கு போது இவர்கள் யோசிக்க மாட்டார்களா…?இவள் பெமீலா மகள் என்று..
வேண்டாம் எனக்கு இந்த முகம் வேண்டாம்..எழுந்து அமர்ந்துக் கொண்டவள்..தன் முகத்தில் அடித்துக் கொண்டு அழுதாள்…அழாதவள் எப்போதும் ஒரு இறுக்கத்துடன் இருப்பவள்..இன்று கதறி கதறி  அழுதாள்..
யாரும் அவளை தடுக்கவில்லை… இந்த அழுகை  நிறுத்தப்பட வேண்டிய அழுகை கிடையாது..இன்று அழாது விட்டால் நாளை இவளின் மனதில் இருக்கும் இந்த துக்கம் அதிகமாகும்..அது இவளின் வாழ்க்கைக்கும் நல்லது இல்லை..அவள் உடல் நிலைக்கும் நல்லது இல்லை…
ஒரு மனநலமருத்துவனாய் நவீன்… இரு பாட்டிமார்களும் அவள் அருகில் செல்ல பார்க்கும் போது அவர்களை தடுத்தவனாய்.. “அழட்டும் அது தான்  அவர்கள் மனதுக்கு  சரியான மருந்து. அவங்க கேள்விபட்ட விசயம் சின்ன விசயம் கிடையாது..இருபத்தி நான்கு வருடமாய் தாய் தந்தை என்று நினைத்திருந்தவர்களை..
இல்லை இவங்க உன் அப்பா அம்மா கிடையாது..உன் அப்பா ஒரு குற்றவாளி… என்று தெரிந்தால் எப்படி  பட்ட  மனதும் ஆட்டம் காணும்…அது தான் உண்மை..இ[ப்போது இவர்கள் அழுவது தான் சரி என்று விட்டு விட்டான்..
நவீன் நினைத்தது சரி என்பது போல் அழுது அழுது ஓய்ந்து விட்ட மதி இப்போது அனைவரின் முகத்தையும் பார்த்தாள்..அந்த முகத்தில் தெளிவு இல்லை என்றாலும் ஏதோ ஒரு முடிவு இருந்தது…
இது வரை தந்தையின் முகத்தை நிமிர்ந்து பாராது தலை குனிந்து பதில் அளிப்பவள் இன்று அவர் முகத்தை மட்டுமே பார்த்திருந்தாள். இனி கண்ணில் கண்ணீர் இல்லை என்று நினைத்திருந்தவள் தன் தந்தையின் முகத்தை பார்க்கவும்… கண்ணீர் தன்னால் வர…
“சாரிப்பா…சாரி…” என்று அவளின் அழுகுரலில் அவள் அருகில் சென்ற வெற்றி மாறன்..
“எனக்கு இந்த மதி பிடிக்கல..என்னை [பார்த்தாலே சும்மா விரச்சிட்டு சுத்தும் மதி தான் பிடிச்சி இருக்கு…” என்று சொல்லிக் கொண்டே அவள் கண்ணீரை துடைத்து விட்ட வெற்றி மாறன்.
“ இந்த அழுகை உனக்கு சூட் ஆகலே மதி…” என்று சொல்லியவரை  நீண்ட நெடிய நீண்ட வருடங்களுக்கு பின் அவரை அணைத்துக் கொண்டவள்..
“எப்படிப்பா என்ன மகளா ஏத்துக்கிட்டிங்க..அதுவும் ஸ்ரீஷா இறக்க நான் தான் காரணம்..அதுக்கு பின் கூட எப்படிப்பா.. ?எப்படி…? அதுவும் இல்லாம ஸ்ரீஷா இறந்ததுக்கு நீங்க தான் காரணம் என்று  நினச்சி தான் உங்கல ஒதுக்குறேன் என்று தெரிஞ்சும்…எப்படிப்பா..எப்படி…?”
திரும்ப திரும்ப மதியின் வாயில் இருந்து எப்படி முடியும்…ஒருவரால் தன் சொந்த மகளை விடுத்து வளர்த்த மகள் மீது பாசம் கொள்ள முடியுமா…? முடியும் …ரத்த பந்தம் எந்த அளவுக்கு பெரியதோ அதே அளவுக்கு வளர்த்த பாசம் பெரியது தான். இதோ அதை வெற்றி மாறனும் அவர் மனைவியும்  நிருபித்து விட்டனரே…

Advertisement