Advertisement

அத்தியாயம்….12
“அப்போ  மதி தான் பெமீலா குழந்தையா….?” என்று அதிர்ந்து போய் கேட்டார்  தனலட்சுமி…
“ஆம்…” என்று வெற்றி மாறன் சொன்னதும்..பாவம் போல சகுந்தலம்மாவும் தனலட்சுமியும் புவனேஷ்வரியை பார்த்தனர்.. மதி பெமீலா குழந்தை என்றால் அப்போ இறந்தது… யாரும் சொல்லாமலேயே அனைவருக்கும் புரிந்து விட்டது…
ஒரு  சிலர் புரிந்தும் ..தனக்கு புரிந்ததை சொன்னால் மற்றவர்கள் மனது சங்கடப்படும் என்று அமைதி காத்து விடுவர்..இப்போது அந்த அமைதி தான் அங்கு நிலவியது.
அந்த அமைதியை வெற்றி மாறன்  தன் தொடர் பேச்சால் கலைத்தார்… “ பெமீலா குழந்தையை நான் தான் முதன் முதலில் தூக்கினேன். அப்போ அந்த குழந்தையை பார்க்கும் போது சகாயம் சாயல் தெரியுதா…?என்று தான் பார்த்தேனே ஒழிய அப்போது என் மனதில் வேறு எதுவும் இல்லை.
அக்குழந்தையுடன் சகாயம் சாயல் தெரியல..அதிலேயே எனக்கு கொஞ்சம் நிம்மதி.. பின் பெமீலாவுக்கு கொடுத்த வாக்குக்காக…அக்குழந்தை என் குழந்தையாகவே வளர திட்ட மிட்டு..மூன்று நாள் முன் பிறந்த என் குழந்தையோடு இக்குழந்தை பிறந்தது என்று தெரியும் படி அனைத்தும் செய்து  முடித்தேன்.
அது செய்ய நான் சிரம்ம் எல்லாம் பலட..அது என்  மனைவியின் மருத்துவமனை… என் பதவி என் மாமனார் செல்வாக்கு அப்போ அந்த சமயத்தில் முதலமைச்சரா இருந்த மேடமோட அப்பா இவங்களோட உதவியோடு ஒரே நாள்ள  அனைத்தும் செய்து முடித்தேன்.
அன்னைக்கு என் மனைவியிடம்  ஒரே சொல்  சொன்னது இது தான்… “உன்னால் இதுவும் உன் குழந்தையா வளர்க்க முடிந்தால் மட்டும் சொல்…உனக்கு இரட்டை குழந்தை பிறந்ததாய் சொல்லி விடுகிறேன்..
இல்ல என்னால முடியாது என்று நினைத்தால்… இப்போவே சொல்லி விடு..நான் இந்த குழந்தைக்கு மாற்று வழி செய்துக் கொள்வேன் என்று…”
ஒரே வார்த்தை கூட பேசாது  என் கையில் இருக்கும் குழந்தையை வாங்கி தன் பக்கத்தில் இருந்த குழந்தையோடு படுக்க வைத்தாள்…இது தான் அப்போ சம்மந்தம்மா எனக்கு அவள் கொடுத்தது..
இதோ இன்று வரை..மதியை  தன் குழந்தை என்ன தன் குழந்தைக்கு மேல இதோ அஷ்வத்தோட அவள் மேல் தான் புவனாவின் மொத்த கவனமும் இருக்கும்…
ஸ்ரீஷா… என்று வெற்றி மாறன் தன்னோட இன்னொரு குழந்தையின் பெயர் சொல்லு போதே..இது வரை அனைவரும் முன்பும் கம்பீரமாய் தான் ஒரு இறும்பு மனிதன் என்று நினைக்கும் படி நெஞ்சு விரைக்க சுற்றிக் கொண்டு இருக்கும் மனிதனின் குரல் கமர… கண்கள் கலங்க அதை யாரும் கவனிக்கும் முன் அக் கண்ணீரை உள் இழுத்துக் கொண்டவராய்…
“அவள் இறந்த போது கூட தன்னோட இன்னொரு குழந்தை இறந்து விட்டாளே என்று தான் அழுதாலே தவிர..மதியால் தன் குழந்தை இறந்து விட்ட்#தே என்று சொல்லி அழவில்லை. இதோ இன்று வரை அதை பற்றிய பேச்சு கூட இல்ல…
எனக்கு காதலா பேச தெரியாது..அன்பா பார்க்க தெரியாது..ஆனா… நான் காட்டாத அன்பும் பாசத்தையும் என்னோட சேர்த்து வைத்து அவ என் கிட்ட காட்டுவா… மனைவிய பொறுத்த வரை நான் ஒரு  லக்கி பர்சன்…” என்று அவர் சொல்லி முடித்தவர்..
இப்போது தன் மகனை பார்த்து… “ இப்போ நீ என்ன நினைக்கிற அஷ்வத்…?” என்று வெற்றி மாறன் கேட்டார்..
அதற்க்கு அஷ்வத்..”நீங்க மதியை பத்தி சொல்ல ஆராம்பிக்கும் போதே அதோட அவள் உன் சொந்த தங்கையா இல்லாத படசத்திலும் என்று கேட்கும் போதே இது போல் தான் இருக்கும் என்று நினைத்து தான் நான்  சொன்னேன்.. மதி என் தங்கை தான் என்று..
இப்போவும் அதே தான் மதி என் தங்கை…அவள் பெமீலா பெண்ணா வளரல..இந்த வீட்டு பெண்ணா தான் வளர்ந்தா… அவள் என் தங்கை தான்பா… யாரு ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ள வில்லை என்றாலும்…” என்று சொல்லிக் கொண்டே அஷ்வத் தன் மனைவி அனிதாவை பார்த்தான்.
அது வரை தன் இரு அண்ணன்களின்  நடுவில் அமர்ந்திருந்த அனிதா தன் கணவனின் பார்வையில் …எழுந்து அவன் பக்கத்தில் அமர்ந்து விட்டு அவன் கை மேல் தன் கை பதித்தவளின் பார்வை சொன்னது நானும் அவளை உங்கள் தங்கையாகவே ஏற்றுக் கொள்கிறேன் என்று…
இப்போது வெற்றி மாறன் அகில ரூபன் பக்கம் தன் பார்வையை செலுத்தினர்..இதற்க்கு என்று  காத்திருந்த்து போல… “நான் இதை கேள்வி பட்டு தான் ஸ்ரீயை கல்யாணம் செய்ய நினைத்தேன் மாமா….” என்று சொன்னவனை யோசனையுடன் பார்த்தார் வெற்றி மாறன்..
வெற்றி மாறனின் பார்வையில் அகில ரூபன்.. “உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறது என்று தெரியல மாமா..அதவாது சொந்த மகனை வளர்ப்பு மகனா வளர்த்தவங்க முன்ன…வளர்ப்பு மகளை சொந்த மகளா…அதுவும் ஸ்ரீயால் உங்க சொந்த மகளை பரிகொடுத்த பின்னும் அவள் மீது இருக்கும் அந்த அன்பு குறையாது..
இன்னும் கேட்டா இன்னும் கூடுதல் பாதுகாப்போட.. நிஜமா இவங்க  பேசிட்டு இருந்தது கேட்டதில் இருந்து..இப்படியும் இருப்பாங்களான்னு…?இவங்கல நினச்சி கஷ்டப்பட்டப்ப உங்கல நினச்சி இப்படியும் இருக்காங்கா..நிஜமா உங்க மாதிரி யாரும் இருக்க முடியாது மாமா..
அதுவும் நீங்க சொன்னிங்கலே ஸ்ரீயை அத்தை தன் குழந்தையோட  நல்லா பார்த்துப்பாங்கன்னு… நிஜம் தான் மாமா…அவ்வளவு கல்யாண வேலையிலும் அவ்ங்க கவனம் ஸ்ரீயிடம் தான் இருந்தது..
அப்போ நினச்சேன்..இந்த பெண்ணுக்கு அப்படி என்ன ஆபாத்து வந்துட போகுதுன்னு..இப்போ புரியுது ஸ்ரீயோட நிலமை… கண்டிப்பா நான் ஸ்ரீயை உங்களோட கவனமா பாதுகாப்பா பார்த்துப்பேன் மாமா…” என்று  சொன்ன அகில ரூபன் பேச்சில்…
“சொந்த மகனை வளர்ப்பு மகனாய் என்ற வார்த்தையில் வெற்றி மாறன் குடும்பத்தினர் கொஞ்சம் குழம்பி போய் தான் அகில ரூபனையும் அவன் குடும்பத்தையும் பார்த்தனர்.. அவன் தத்து பிள்ளை என்று அனைவருக்கும் தெரியும்..
அப்போ இல்லையா…? என்பது போல் வெற்றி மாறன் பார்த்த பார்வையில் சீதாராமனும் பவானியம்மாவும் கூனி குறுகி தான் போய் விட்டனர்..
“நீங்க நினைக்கிறது எனக்கு புரியுது..நான் இவங்க சொந்த பிள்ளை தான்..” என்று சொன்னவனின் பேச்சில் அதிர்ந்து போய் விட்டார் வெற்றி மாறன்..
அகில ரூபனின்  வயது தெரியும்..அவன் பொது வாழ்வில் இருப்பதால்…சீதாராமனுக்கும் பவானியம்மாவுக்கும் திருமணம் நடந்த ஆண்டு தெரியும்… சீதாராமன் உயர் பதவியில் இருப்பதாலும் அப்போது முதலமைச்சரின் மகள் பவானியம்மா என்ற காரணத்தாலும் அவர்களுடைய திருமணம் ஆண்டு தெரியும். அதோடு அன்றே ஒரு வயது குழந்தையை தத்து எடுத்ததும் மாநிலம் அறிந்த விசயம் தானே..ஆனால் அதில் இவ்வளவு ரகசியம் ஒளிந்துக் கொண்டு இருக்கும் என்று அவர் நினைத்து பார்க்கவில்லை.
அகில ரூபன் மேலும் ஏதோ சொல்ல வர… “வேண்டாம்..புரியுது..இந்த பேச்சு வேண்டாமே….”
வெற்றி மாறனின் இந்த பேச்சும் ஒரு சில விசயங்கள் விவாதத்திற்க்கு அப்பார்ப்பட்டது..அதை பேசாது தவிர்த்து விடுதலே  நாகரிகம் ஆகும்..அந்த நாகரிகத்தை வெற்றி மாறன் காட்டினார்.. ஆனால் அஷ்வத்துக்கு ஒன்று தெரிய வேண்டி இருந்தது…
ஸ்ரீஷா எப்படி எதற்க்கு இறந்தாள் என்று… அவன் நினைத்தது அப்பாவால் தண்டனை பெற்றவனே இல்லை அவர்களுக்கு சம்மந்தம் உள்ளவர்களோ தான் தன் தங்கையை கொன்றது என்று..அதுவும் இருவரை கொல்ல நினைத்தவனின் கைய்யில் ஒருவள் மடிய..தன் தந்தையால் இன்னொரு தங்கை காப்பாற்றப்பட்டாள் என்று..
ஆனால் இப்போதைய பேச்சு..அதுவும் தன் தந்தை தன்னிடம் சொன்ன… “நீ தான் தங்கையை  கவனமுடன் பார்த்துக்கனும்…” என்ற வார்த்தையை சேர்த்தால்…
ஸ்ரீமதிக்கு வைத்த குறியில் ஸ்ரீஷா மாட்டிக் கொண்டாளா…?அதை தெளிவுபடுத்திக் கொள்ள  வெற்றி மாறனிடம்..
“அப்பா அப்போ சகாயத்தின் விரோதி தான்…ஸ்ரீஷாவை…”  அதற்க்கு மேல் கேட்க முடியாது தன் தந்தையை பார்த்தான் அஷ்வத்.
“ம்..” என்று சொன்ன வெற்றி மாறன்… 
“ஸ்ரீமதிக்கு பதிலா ஸ்ரீஷாவை கொல்லலே…ஸ்ரீஷாவை ஸ்ரீமதின்னு நினச்சி கொன்னுட்டாங்க..” என்ற வெற்றி மாறனின் பேச்சில் .. அஷ்வத் அதிர்ந்து போய் தன் தந்தையை பார்த்தான்.
இந்த விசயம் அகில ரூபனுக்கு தன் தாய் தந்தை மூலம் தெரியும் என்பதால் அவன் அந்த அளவுக்கு அதிர்ச்சி ஆகவில்லை..ஆனால் தனலட்சுமி சகுந்தலாம்மா… அனிதா அனைவருக்கு இச்செய்தி புதியது என்பதால் அதிர்ந்து தான் போய் விட்டனர்.
“என்னப்பா சொல்றிங்க…?” என்று கேட்ட அஷ்வத்தின் எதிரில் அமர்ந்த வெற்றி மாறன்..
“உன் தங்கை என் எதிரில் தான் சுட்டான்..ஆனா என்னால அவளை காப்பாத்த முடியல…மதியை என் மகளா வளர்க்கனும் என்று நினச்சது உண்மை தான்..ஆனால் என் மகளையும் மீறி அவளிடம் பாசம் இருக்கு என்று உணர்ந்த்து அப்போது தான் அஷ்வத்..
என் எதிரில் என் இரு குழந்தைகள்… அவன் என்னிடம் கேட்டது இது தான்…
“உங்களுக்கும் எனக்கும் எந்த பகையும் இல்ல… எனக்கு தேவை சகாயத்தோட  பெண்..இந்த இரண்டு குழந்தைகளில் ஒருவள் அவன் குழந்தை எனக்கு நல்லா தெரியும்… சொல் யார்  சகாயம் குழந்தை …?
நீ சொல்லலேன்னா இரண்டு குழந்தையையும் போட்டு தள்ளிடுவேன்..எனக்கு  ஒன்னும் இல்ல..ஒரு குழந்தையை கொன்னாலும் எனக்கு தண்டனை தான் இரண்டு குழந்தையை கொன்னாலும் எனக்கு தண்டனை தான்..எனக்கு இதுல எந்த பாதிப்பும் இல்ல… ஆனால் நீங்க  உண்மையை சொன்னா..உங்க குழந்தை உங்களுக்கு கிடைக்கும்.” என்று  அவன் சொலிட்டு இருக்கும் போதே,.
அவன் கைய் பிடியில் ஒரு பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த ஸ்ரீமதி அவன் கையில் இருந்த துப்பாக்கியை பார்த்து ஏற்கனவே மயக்க நிலைக்கு சென்று இருந்ததால் அவள்  அவன் மேல் சாய்த்துக் கொண்டு இருந்தாள்.
ஆனால்  ஸ்ரீஷா அவனின் பேச்சை கேட்க கேட்க அவள் கண்கள் இரண்டும் விரிவடைந்து பயத்தில் மயக்கம் நிலைக்கு தள்ளப்பட்டு   தரையில் விழ பார்த்தவளை…
அவளை நோக்கி “ஸ்ரீஷா…” என்று பயந்து போய் அவளை நோக்கி நான் ஒரு அடி எடுத்து வைக்கும் போதே அவன் கையில் இருந்த துப்பாக்கியின் தோட்டா என் மகள் உன் தங்கையின் தலையை  துளைத்து இருந்தது..
என் கண் முன் தான் அவள் மரணம் நிகழ்ந்தது…ஊருக்கு காப்பாத்துர நான் அப்போ என் சொந்த மகளை காப்பாத்த  முடியாம ஒரு கைய்யாளகாத  தகப்பானா நின்னுட்டு இருந்தேன்.”
அவன் சகாயம் மகள் யார் என்று சொல் என்று சொன்னதும் நான் ஸ்ரீஷா என்று சொல்லிட்டு அவள் பக்கம் போகவும் அவள் தான் சகாயம் மகள் என்று நினச்சி சுட்டுட்டு துப்பாக்கியை என் கையில் கொடுத்துட்டு…
“என் குடும்பத்தை அழித்தவனோட வாரிசு கூட இருக்க கூடாதுன்னு.” சொல்லிட்டு என் கிட்ட சரணடைஞ்சிட்டான்..
எனக்கு அவனை உயிரோட அதாவது கோர்ட் கேசுன்னு போக விருப்பம் இல்ல..என் ஒரு மகள் இறந்துட்டா இன்னொரு மகளை  காப்பத்தனும்… இவன் இருந்தா  கண்டிப்பா என் மகள் உயிருக்கு ஆபத்து…
அதான் அவனை என்கவுண்டர் பண்ண  திரும்பவும்..அப்போ முதலமைச்சரா இருந்த மேடமோட அப்பா உதவியை நாடினேன்… பின் ரவுடி சுட்டு கொல்லப்பட்டான்னு மறுநாள் செய்தி வந்தது..
இரு குழந்தைகளையும் என் குழந்தையா தான் வளர்த்தேன்..யாருக்கும் தெரியாது என்ற ரகசியம் ஒருவனுக்கு தெரிஞ்சி வந்துட்டான்..இன்னும் யார் யாரோ..
அப்போ இருந்து தான் இந்த பயம்..எப்போவும்  மதியை சுத்தி ஒரு பாதுகாப்பு வளையம் இருப்பது போல பார்த்துக் கொண்டேன்.. அவளை சுத்தி இருக்க இந்த பாதுகாப்பு அவளுக்கு பிடிக்கலேன்னு எனக்கு தெரியும்..
ஆனா எனக்கு வேறு என்ன செய்ய…? என் மகளா வளர்த்தாலும் அவள்  பார்க்க அப்படியே அச்சு அசல் பெமீலா போலவே இருக்காளே…
அவள் உருவத்தால் அவளுக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமோன்னு நினச்சி தான்..நான் எப்பவும் அவளை பூ வை..பொட்டு வை… புடவை கட்டு..இப்படி ஏதாவது சொல்லிட்டே இருப்பேன்..இதால அவளுக்கு என்னை பிடிக்காம போயிடுச்சின்னு எனக்கு தெரியும்..
பரவாய்யில்ல அவளுக்கு  என்னை பிடிக்காம போனாலும் பரவாயில்ல..அவள்  என் மகளா எப்போவும் இருந்தா எனக்கு அது போதும்.” என்று வெற்றி மாறன் சொல்லி  கொண்டு இருக்கும் போதே… பின் வாசல்  பக்கத்தில் இருந்து  சத்தம் திரும்பி பார்க்க..ஸ்ரீமதி சாஷ்ட்டாங்கமாய் விழுந்து இருந்தாள்…
புவனேஷ்வரி கணவனின் சொல் கேட்டு முன் பக்கம் வாசலை மூடியவள்..பின் பக்கம் வாசலை மூட மறந்து விட்டாள்…எப்போதும் முன் பக்கம் பாதுகாவலை பார்த்தால் வரும் அலர்ஜீயில் மது பின் பக்க வாசலையே தான் பயன் படுத்துவாள்..
அதே பழக்கத்தில் இன்றும் வந்தவள் தன் தந்தை..தவறு தவறு சொந்த தந்தை என்று நினைத்திருந்த வளர்ப்பு தந்தையின் பேச்சை கேட்டு  விழுந்து விட்டாள்.
விழுந்தவள் எழும் போது அவள் மனநிலை என்னவாக இருக்கும்…?தன்னால் தான் ஸ்ரீஷா இறந்தால்… இதன் குற்றவுணர்ச்சி அவளின் மனநிலையை பாதிக்குமா…?
தன் சொந்த மகள் இறந்தும்..அதுவும் தன்னால்… இறந்தும் தன் உயிரை பாதுகாக்கா கொடுத்த  பாதுகாப்பை ஏளனம் படுத்தியது..இதோ இப்போது தான் தனக்கே தெரியாது பெங்களூரில் தன் தந்தை ஏற்பாடு செய்த பாதுகாப்பை அறிந்து அவரிடம் சண்டை இட வேண்டும் என்று கோபத்தோடு வந்தவள்…
இதோ கோபத்தின் சுவடு தெரியாது அந்த இடத்தில்  இயலாமை குடி கொள்ள விழுந்தவளின் நிலை எழுந்தாள்.

Advertisement