அவங்க நினச்சது போல யாரும் இல்லாத இடத்தில் அவனை என்கவுன்டர் செய்துட்டோம்.. எப்போதும் போல மனிதமீறல் போராட்டம் அதை அரசியல்வாதிங்க சமாளிச்சிட்டாங்க..
எனக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்ல…மனரீதியாவும் சரி…தொழில் ரதியாவும் சரி..அவன் முடிக்கபட வேண்டியவன் தான்.அதில் எந்த வித சந்தேகமும் இல்ல…ஆனால் என்னுடைய இந்த நிம்மதி ஆறு மாத காலம் தான் நீடித்தது..
என் வீட்டுக்கு நிறைமாத கற்பிணி உடல் முழுவதும் ரத்தகாயங்களுடன்…என் வீடு முன்… அப்போ புவனா அவள் மருத்துவமனையில் அவள் பிரசவத்திற்க்காக அனுமதிக்கப்பட்டு இருந்தா…
அதே நிலையில் இருக்கும் ஒரு பெண்..இப்படி இந்த நிலையில் ..எத்தனையோ இது போல் கேசுகளை பார்த்தவன் தான் நான்..ஆனால் அந்த பெண்ணை அப்படி பார்த்த போது ஏனோ ஒரு வித படபடப்பு எனக்கு அது ஏன்னு நான் யோசிச்சிடே நான் அந்த பெண்ணை பார்த்தேன்..
அந்த வலியிலும் அந்த பெண் என்னை பார்த்த அந்த பார்வை.ஏதோ குற்றம் சாட்டுவது போல….அந்த சாடல் ஏதோ ஒரு  வித பயத்தை தான் எனக்கு கொடுத்தது..
இருந்தும்  நான் அந்த பெண்ணிடம்… என்னமா யாரு நீ…?இது எப்படி ஆயிடுச்சி…?” என்று கேட்டும் அந்த பெண்ணிடம் பதில் இல்லை…
“சரிம்மா வா ஹாஸ்பிட்டல் போகலாம்…?” அந்த பெண் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை என்றாலும்,,அந்த பெண்ணை எப்படி வேணா போ என்று  என்னாலே விட முடியல…
இது வரை வாய் திறக்காத அந்த பெண்..வா மருத்துவமனைக்கு என்று  அழைத்ததுக்கு மட்டும்… “ஹாஸ்பிட்டலுக்கு என்னை கூட்டிட்டு போனா மட்டும் நானும் என் குழந்தையும் பிழைத்து விடுவோமா…?” என்று அந்த பெண் கேட்ட கேள்வியை விட கேட்ட விதத்தில்…
“நான் பிழைக்க வைக்கிறேன்… என்  மீது நம்பிக்கை இருந்தால் வா..என் மனைவி மருத்துவமனையிலேயே உனக்கான சிகிச்சை நடக்கும்.” என்று சொன்னேன்.
அதற்க்கு அந்த பெண்… “என் இந்த நிலைக்கு காரணமே நீங்க தான்…நீங்க என்னை பிழைக்க வைக்க போறிங்களா…?” என்று அந்த பெண்  சொன்னதுமே…
“நான் உன்னை பாத்தது கூட இல்ல…என்னால உனக்கு இந்த நிலைன்னு சொல்ற…?நீ யாரும்மான்னு..?” கேட்டேன்.
அப்போ தான் நான் என்கவுன்டர் செய்த சகாயத்தின் மனைவின்னு சொன்னாங்க..நிஜமா என்க்கு இது அதிர்ச்சி தான்…அவன் ரெக்கார்ட் படித்த போது கல்யாணம் ஆகி பத்து  வருடம் ஆகிறது . ஆனா குழந்தை இல்லை என்று தான் இருந்தது.
அந்த பெண் அதுக்கு விளக்கம் கொடுத்தா.”.ரவுடியா இருந்த என் புருஷன்…நான் உண்டாகி இருக்கேன் என்று தெரிஞ்சதால தான் அவர் திருந்தி… என் குழந்தையை யாரும் ரவுடியின் குழந்தை என்று அடையாளம் காண கூடாதுன்னு தான் அரசியல்ல நிக்க நினச்சார்.
அப்போ நான் கூட அவர் கிட்ட..இந்த பழைப்பே வேண்டாம். நாம எங்காவது போய்  பிழச்சிக்கலாம் என்று தான் சொன்னேன்.
அதற்க்கு அவர்… “நான் பிடித்தது புலி வால்..ஒன்னு நான் இப்போ போல எப்போவும் ரவுடியா இருக்கனும்..இல்ல அவங்களுக்கு இணையா அவங்க பலத்தோட இருக்கனும்..இரண்டுல ஒன்னு நீ தான் முடிவு செய்யனும் என்று அவர் சொல்லும் போது…
நான்… “அரசியல்வாதியா இருங்க.” என்று தான் என்னால சொல்ல முடிஞ்சது…
ஆனா அவர் சொன்னது போல் புலி வால் பிடிச்சது கணக்கா தான்…அவங்க எதிர்த்த தொட்டு அவரை என்கவுன்டர் செய்துட்டாங்க..அதை நீங்க தான் செஞ்சிங்க..
இதில் என்ன ஒரு வேடிக்கைன்னா..ரவுடியா இருக்கும் போது யாரும் அவரின்… மயி…. கூட தொட முடியல..திருந்தி வரும் போது தான் நீங்க அவரின் உயிரை எடுத்துட்டிங்க… இப்போ தோனுது… ரவுடியா இருந்து இருந்தா கூட… என் குழந்தைக்கு ஒரு அப்பாவா இருந்து இருப்பார்.. இப்படி திருந்துறேன் பேர் வழின்னு சொல்லிட்டு இப்படி என் குழந்தைக்கு அப்பா இல்லாம ஆக்கிட்டேன்னு.. “
அந்த பெண்மணி பேச பேச வெற்றி மாறனுக்கு நெஞ்சம் பதற தான் செய்தது..அதுவும் அந்த பெண் சொன்னா அவர் ரவுடியா இருக்கும் போது அவரை மயி*** கூட பயந்தாங்க..அவர் திருந்தி வரப்ப உயிரை எடுத்துட்டாங்கன்னு…”
சரி தானே அரசியல்வாதிக்கு கைத்தடியாய் அனைத்து வேலைகளையும் செய்யும் போது சகாயம் மேல் கை வைக்க முடிந்ததா…? அவர்களுக்கு எதிராக ஒரு சுண்டு விரல் நகத்தை நகர்த்தவும் மொத்தமாய் அவனை முடித்து விட்டார்கள்..
முடித்து விட்டார்கள் என்ன..என்னை வைத்து அவர்கள் காரியம் சாதித்துக் கொண்டார்கள் என்று தான் நினைக்க தோன்றியது..அதோடு இப்போது உடல் முழுவதும் காயத்தோடு இருந்த சகாயத்தின் மனைவியை பார்த்து…
“உனக்கு என்ன இப்படி….?எப்படி ஆச்சி…?” என்று  வெற்றி மாறன் கேட்டார்.
அதற்க்கு அந்த பெண்மணி… “அவங்க சம்மந்தப்பட்டது என் கிட்ட ஏதோ இருக்குன்னு நினச்சி என்ன சித்ரவாதை செய்யிறாங்க…அவங்க ஏதோ பார்மூலா என்றாங்க டாக்குமென்ட் என்றாங்க..நிஜமா அவங்க கேட்கிறது எனக்கு புரியல…தினம் தினம் கேட்டு இவங்க  தொந்திரவு செய்யிறது ஒரு பக்கம்ன்னா..
என் கணவரால் பாதிக்கப்பட்டவங்க என்னை பார்த்தா எப்படி தெரியுதோ… அவங்க ஒரு பக்கம் என்னை தொந்தரவு செய்யிறாங்க..இன்னைக்கு ஒருத்தன் நான் ஹாஸ்பிட்டல் போகலாம் என்று கிளம்பி போயிட்டு இருக்கும் போது.. எனக்கு குடும்பம் இல்லாம செய்தவனின் வாரிசை சுமக்கிறியான்னு கேட்டுட்டு என்னை வெட்டிட்டான்.” என்று சொல்லிக் கொண்டு அந்த பெண்மணி அவளின் முது பக்கத்தை வெற்றி மாறனிடம் காட்டினாள்.
அப்போது தான் பின் பக்கம் ஆழமாக தாக்கி இருப்பதை பார்த்து… “என்ன செய்யிற நீ…” என்று  வெற்றி மாறம் பதறி போய் கேட்டார்.
அவர் . உடல் முழுவதும் ரத்தம் காயம் என்று மட்டும் தான் நினைத்திருந்தார்  இது போல் அறுவா வெட்டு வாங்கி இருப்பாள் என்று  அவர் நினைக்கவில்லை.
“ஹாஸ்பிட்டல் போக வேண்டியது தானே…?” என்று சொல்லிக் கொண்டே தன் வீட்டில் இருக்கும் லான்ட் லைனில் இருந்து தன் மனைவியின் மருத்துவமனைக்கு போன் செய்தார்.
“உடனே ஆம்புலன்ஸை அனுப்பு மாறு…”
ஆம்புலன்ஸ் வரும் வரை அந்த பெண்மணிக்கு முதல் உதவியை செய்துக் கொண்டு இருந்த வெற்றி மாறனிடம்…
“உங்கல பார்த்தா கெட்டவரு போல தெரியல..நீங்க ஏன் என் கணவரை கொன்னிங்க….?” என்று கேட்டாள்.
அதற்க்கு வெற்றி மாறன்… “உன் கணவன் கெட்டவன் ..அவன் யோக்கியன் கிடையாது..என்ன ஒன்னு நீ சொன்னது போல அவன் கெட்டவனா இருக்கும் போது அவனை ஒன்னும் செய்ய முடியல தான்..அவனை கொல்லாம அவன வெச்சி மத்தவங்கல பிடிச்சி இருக்கலாம்..இப்போ தோனுது.” என்று சொன்ன வெற்றி மாறனை பார்த்து…
“அப்போ கூட அதால நீங்க என்ன செய்யலாம் என்று தான் யோசிக்கிறிங்க… நான் என்ன ஆவேன்..இதோ என் வயிற்றில் இருக்கும் குழந்தை என்ன ஆகும் என்று நீங்க யோசிக்கல்லே..
இதோ இப்போ இவ்வளவு காயத்தோட ஹாஸ்பிட்டல் போனா இது போலீஸ் கேசுன்னு  சொல்றாங்க.. போலீஸ் காரங்க வந்தா என்னை பார்த்துட்டு  உன் புருஷன் எத்தனை பேரை சாகடிச்சி இருப்பான்… இப்போ உனக்கு உன் உசிறு கேட்குதோன்னு சொல்றாங்க…
இன்னும் கேட்டா அவங்க என் புருஷன் இருக்கும் போது கூழை கும்பிடு போட்டுட்டு என் வீட்டுக்காரர் கொடுக்கும் எச்ச காசை பொறுக்கிட்டு போயி இருக்காங்க…அதோட அவங்க சொன்ன..இனி தான் உனக்கு இருக்குன்னு…
என் வீட்டுக்காரர் செஞ்ச தப்புக்கு நாங்க என்ன செஞ்சோம்.. இதோ என் வயித்துல இருக்க இந்த குழந்தை என்ன செஞ்சது..என்னை கொல்ல வெளியில் ஒரு கூட்டமே சுத்திட்டு இருக்கு… இப்போ நான் என்ன செய்யிறது…?” என்று தனக்கும் அந்த  பெண்மணிக்கும் நடந்த உரையாடலை சொல்லிக் கொண்டு வந்த  வெற்றி மாறன்..
நான் அவங்க கிட்ட அப்போ சொன்னேன்… “உனக்கும் உன் குழந்தைக்கும் நான் பாதுகாப்பு கொடுக்கிறேன்.” என்று..
எங்க மருத்துவமனையில் தான் அந்த பெண்மணி யார் என்று தெரியாது அனுமதித்தேன்… அன்று தான் எனக்கு பெண் குழந்தை பிறந்தது.. மூன்று நாள் கழித்து சகாயத்தின் மனைவிக்கும் பெண் குழந்தை தான் பிறந்தது…
சகாயத்தின் மனைவியையும் குழந்தையையும்  என்ன செய்யலாம் எங்கு தங்க வைக்கலாம் என்று நான் யோசிப்பதற்க்குள் எங்க மருத்துவமைனையிலே அவளை கொன்று விட்டாங்க…
அந்த பெண் மணியின் உயிர் என் கையில் தான் போயிடுச்சி… அந்த பெண் சொன்னது இது தான்..
“ என்னை தான் காப்பத்த முடியல…என் குழந்தையாவது காப்பாத்துங்க சார்… என் குழந்தையா இருக்கும் வரை அவள் உயிருக்கு ஆபாத்து தான்..என்ன குத்துனவன் என்னை குத்திட்டு படுக்கையின் என் பக்கத்தில் தடவி விட்டு…
“குழந்தை எங்கே குழந்தை எங்கேன்னு..? தான் கேட்டான்…நல்ல வேலை குழந்தை  குறைபிரசவத்தில் பிறந்த்தால அவளை இங்பெட்டில் வெச்சி இருந்திங்க..அதனால அவ இப்போதைக்கு தப்பிச்சிட்டா… என் கணவர் எங்கு எங்கு  வினை விதச்சிட்டு போயி இருக்காருன்னு தெரியல..அவங்க எந்த பக்கத்தில்  இருந்து  வருவாங்கன்னு தெரியாது…இந்த குழந்தை என் குழந்தையா மட்டும் அடையாளம் காண கூடாதுன்னு சொல்லி தான் அந்த பெண் மணி செத்தாங்க..
அந்த பெண் மணி அந்த பெண்மணி என்று  சொல்றேன்லே ..அவங்க பெயர் பெமீலா… அதனால தான் மதியை பொட்டு வைக்கலேன்னா திட்டுவேன்..ஏன்னா  மதி அப்படியே பெமீலா ஜாடை.” என்று சொல்லி முடித்தார்.