Advertisement

அத்தியாயம்…11
“சொல்லு அஷ்வத்..அவள் உன்  சொந்த தங்கை இல்லாத என்ற பட்சத்தில் இப்போ நீ காமிக்கிற இந்த அன்பு… அக்கறை எல்லாம்  குறஞ்சிடுமா…?இல்ல அது இல்லாமலேயே போயிடுமா…?” என்ற வெற்றி மாறனின் கேள்வில் அஷ்வத் குழம்பி பின் தெளிந்தவனாய்…
“எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இரு தங்கை இருந்தாங்க..அதில் ஒரு தங்கை இல்லாது மரணம் அவளை அழச்சிடுச்சி…இப்போ இருக்க இவள் என் தங்கை..இவள்  என்  சொந்த தங்கையா..? இல்ல இல்லையான்னு நீங்க தான் எனக்கு சொல்லனும்..
 ஆனா எதுவா இருந்தாலும் அவங்க இரண்டு பேரும் என் தங்கை என்று என் மனசுல பதிஞ்சது பதிஞ்சது தான்..அதில் எந்த மாற்றமும் இல்ல…”
ஏதோ நீதிபதியின் முன் சத்திய பிரமாணம் செய்வது போல தன் தந்தை முன் எது இருந்தாலும் நீங்க தைரியமா என்னிடம் சொல்லலாம்… நான் அதை ஏற்றுக் கொள்வேன் என்று அவருக்கு புரியும் படி சொன்னதும்..
வெற்றி மாறன்..புவனேஷ்வரியிடம்… “ சர்வண்ட் எல்லோரையும் வெளியே அனுப்பிடு.” என்று சொன்னதும்..அவர் சொன்னதை செய்து விட்டு புவனேஷ்வரி திரும்பவும் தான் அமர்ந்து இருந்த இருக்கைக்கு வந்து அமர்ந்தார்.
புவனேஷ்வரி வரும் வரை  அமைதியாக இருந்த வெற்றி மாறன் தன் மனைவி அமர்ந்ததும்… அவர் முகத்தை காதலோடு பார்த்துக் கொண்டே… “எங்க திருமணம் காதல் திருமணம் கிடையாது. பெரியவங்க பார்த்து நடததி வெச்சது.” என்று அவர் சொல்லிக்  கொண்டு இருக்க…
வெற்றி மாறன் ஏதோ ரகசியம் சொல்ல போகிறார்..அதுவும் வீட்டு வேலையாட்களை எல்லாம் அனுப்பி வீட்டு கதவை அடைத்து பேச்சை ஆராம்பித்ததும் அனிதா ஏதோ பெரிய ரகசியம் வரப்போகிறது என்று நினைத்து ஆவளோடு வெற்றி மாறன் முகத்தை பார்த்திருந்தாள்.
அவளின் ஆவளை தண்ணீர் தெளித்து அடக்கியது போல அவர் திருமணத்தை பற்றிய பேச்சை ஆராம்பித்ததும்… அனிதா அகில ரூபனின் பக்கம் அமர்ந்து இருந்த நவீனிடம் பேச அகில ரூபனை தான்டி அதாவது அவனின் முது பின் தன் தலையை நுழைத்து… 
“ஏன்டா இவர் தன் கல்யாண கதை சொல்லவா கதவை எல்லாம் அடைக்க சொன்னார்..அதுவும் பெரியவங்க பார்த்து நடத்தி வெச்ச  திருமணத்திற்க்கு இவருக்கு ஏன்டா இவ்வளவு பில்டப்பு…?
என்னை போல காதல் திருமணமும் இல்ல… நம்ம அம்மா அப்பா போல காதல் அதுக்கு முன்ன… ஏதாவது இருந்தா கூட கதவை அடைப்பதில் ஒரு நியாயம் இருக்கு…? என்னடா இது..? 
நான் என்ன என்னவோ எதிர் பார்த்துட்டு   சீ ரொம்ப சல்லுன்னு ஆயிடுச்சிடா…” என்று  அனிதா தன் மனதில் நினைத்ததை தன் சின்ன அண்ணனிடம்  பகிர்ந்துக் கொண்டாள். நிஜமாகவே ஏதோ வரப்போகிறது என்று நினைத்து இருந்தவளுக்கு வெற்றி மாறனின் இப்பேச்சு கொஞ்சம் சப்பு என்று தான் ஆகி விட்டது.
 அகில ரூபனின் வலது பக்கம் நவீனும் இடது பக்கம் அனிதாவும் அமர்ந்து இருந்ததால் அனிதா சொன்னது  அகில ரூபனின் காதுக்கு நன்றாகவே கேட்டது..
“மத்தவங்க ரணம் உனக்கு விளையாட்டான பேச்சா…?” என்று  கேட்ட அகில ரூபனின் குரல் சத்தமாக  இல்லை என்றாலும், அதில் அடக்கப்பட்ட கோபம் நன்றாகவே  வெளிப்படும் மாறு பேசினான்.
“சாரிண்ணா…ரொம்ப நேரமா சீரியஸா பேசிட்டு இருக்கிறதால..கொஞ்சம் ரிலாக்ஸ்சுக்காக பேசினேன்.” என்று அனிதா மன்னிப்பு கேட்டும் அகில ரூபன்..
“எதில் விளையாடனும்..எதில் விளையாட கூடாதுன்னு  ஒரு வரை முறை இருக்கு..அதுவும்  பேசுறது உங்க மாமனார்  அது உன் குடும்பம்.. அது தெரிஞ்சிக்கிறதுல எங்களோட  உனக்கு தான் அக்கறை அதிகமா இருக்கனும் புரியுதா…?” என்று  அகில ரூபன் அதட்டவும்…
அனிதா அனைத்திற்க்கும் … “சரி… சரி…” என்பது போல் தலையாட்டி வைத்தாள்.
அஷ்வத்துக்கு இவர்கள் பேச்சு காதில் விழவில்லை என்றாலும், அகில ரூபன் சொன்னதற்க்கு  எல்லாம்  அனிதா நல்லா பூம் பூம் மாடு போல் தலையாட்டுவதை பார்த்து..
ஒரு இரவில் ஏதோ நடந்து இருக்கு… இல்லேன்னா நேத்து அகில ரூபனை எதிர்த்த இரண்டு பேர் இப்போது இப்படி பம்மிட்டு இருந்து இருக்க மாட்டாங்க… 
வெற்றி மாறன் தன் திருமணம் பற்றிய பேச்சை ஆராம்பித்த உடனே அவருக்கு தொண்டை அடைத்து அடுத்து பேச்சு வராது இருப்பது போல் இருக்க புவனேஷ்வரி ஓடி போய் தண்ணீர் எடுத்து வந்து தன் கணவனிடம் கொடுத்து விட்டு..
“ரிலாக்ஸ்…உணர்ச்சி வசப்படாதிங்க..அது உங்க  உடல் நிலைக்கு நல்லது இல்லை.” என்று வெற்றி மாறன் புவனேஷ்வரி கொடுத்த தண்ணீரை குடித்துக் கொண்டு இருக்கும் போதே அவர் முதுகை தடவி விட்ட வாறே  அவரை சாந்தப்படுத்தி கொண்டு இருந்தார்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் தான் அனிதா தன் அண்ணன்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி முடித்தது.
தன் மனைவியின்  எப்போதும் போல் இந்த அன்பான அனுகு முறையில்  உதட்டில் மெல்ல ஒரு புன்னகை பூக்க தன் மனைவியின் கையில்  தண்ணீர் குவளை கொடுக்கும் போது அவரின் கையை லேசாக பற்றிய வாறே அவரை ஒரு காதல் பார்வை பார்த்தார்.
அனிதா இப்போது அகில ரூபன் திட்டினாலும் பரவாயில்லை என்று நினைத்தவளாய் திரும்பவும் அதே போல் தன் சின்ன அண்ணாவிடம்… “ஏன்டா  பார்த்து வைத்த திருமணம் என்று சொல்லிட்டு இப்போ கூட இவர் அத்தைய காதல் பண்றார்.. ஆனால் காதல் திருமணம் செய்த நம்ம அப்பா அம்மா  நமக்கு புத்தி தெரிஞ்சதில் இருந்து இது போல் காதல் பார்வை பார்த்து நான் பார்த்ததே இல்லையடா…?” என்று கேட்ட அனிதா…
“நீ பார்த்து இருக்கியா…?” என்று தன் சின்ன அண்ணனிடம் கேட்க..
அவனும்… “இல்லை…” என்பது போல் தான் தலையாட்டினான்.
இந்த பேச்சுக்கு அகில ரூபன் திட்டாது… “உண்மையான காதலுக்கோ அன்புக்கோ…திருமணம் முன் தான்  வரனும் என்பது இல்ல..திருமணம் ஆன பின் கூட தன் துணைவி மீது வரலாம்..அது அவங்க அவங்களுக்கு வரும் துணையை பொறுத்தது.” என்று அகில ரூபன் அமைதியாக அனிதாவின் சந்தேகத்திற்க்கு விளக்கம் அளித்தான்.
“இது நம்ம அண்ணாவா…?என்பது போல் தான் அனிதாவும் நவீனும் அதிசயத்து அகில ரூபனை பார்த்திருந்தனர்..
நவீன் மதியை அகில ரூபன் திருமணம் செய்ய கேட்ட போது அவன் முகத்தை தான் பார்த்தான்… ஒரு சமயம் மதியை காதலிக்கிறானா..?என்று ஆனால் காதலுக்கு உண்டான எந்த அறிகுறியும் இல்லாது ஏதோ ஒரு பொருளை கேட்பது போல் மதியை கேட்கவும் தான்..
நவீன் இவன் வீம்புக்கு என்று  கேட்கிறான் என்று  நினைத்து  தான் நவீன் வீம்பு பிடித்தான்.  பின் நடந்த விசயங்களில் ஏதாவது காரணம் இருக்கும் என்று இதோ இங்கு வரை வந்து விட்டான்.
அப்போது கூட நவீன்  தன் அண்ணன் மதியை விரும்புகிறான் என்று நினைக்கவில்லை.. திருமணம் செய்ய ஏதாவது காரணம் இருக்கும் என்று தான் நினைத்தான்.
ஏன் என்றால் காதலுக்கும் அகில ரூபனுக்கு காத தூரம் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி பட்டவன் திருமணம் ஆன பின் ஆன காதலை சொல்கிறான்..துணையை பற்றி பேசுகிறான்..என்னடா என்பது போல் நவீனும் அனிதாவும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொன்டனர்..
இதை இடையில் அஷ்வத்தும் தான் பார்த்தான்..ஏதோ ஒரு ஊமை படம் போல…
வெற்றி மாறன் புவனேஷ்வரியின் பக்க பார்வையை பதித்த வாறே.. “படிப்பிலும் சரி அந்தஸ்த்திலும் சரி…புவனா முன் நான் ஒன்னும் இல்ல..என்னை எதை பார்த்து பெண் கொடுத்தார் அவர் தந்தை என்று இன்ன வரை எனக்கு தெரியல…
புவனாவின் அப்பா அரசியல்ல இல்லேன்னாலும் அவருக்கு அரசியலிலும் சரி அதிகாரி இடத்திலும் சரி நல்ல செல்வாக்கோட இருப்பவர்.. ஒரு சில முறை  வேலை விசயமா அவர பார்த்து இருக்கேன்..பேசி இருக்கேன்.. அவ்வளவு தான் அவரோடான என்னோட பழக்கம்…
ஒரு முறை வேலை முடிஞ்சி என் வீட்டுக்கு போனா அங்கு புவனாவோட  அப்பா எங்க வீட்டில் உட்கார்ந்துட்டு என் அப்பா அம்மா கூட பேசிட்டு இருக்கார்.. நான் என்ன என்பது போல் பார்த்த போது என் அம்மா என் கிட்ட…
“ அவர் பெண்ணை உனக்கு கொடுக்கனும் என்று ஆசைப்படுறார்…” என்று எங்க அம்மா சொன்னதும்..நிஜமா எனக்கு ஷாக்..
“இவர் ஏதாவது விளையாடுறாரா என்பது போல கூட நான் அவரை அப்போ சந்தேகமா பார்த்தேன்..என் பார்வையை பார்த்து..
“ நிஜமா என் பெண்ணை உங்களுக்கு கொடுக்க ஆசை பட்டு தான் நானே உங்க வீடு தேடி வந்தேன்… சம்பிரதாயப்படி மாப்பிள்ளை வீடு தான் பெண் கேட்டு வருவாங்க..
ஆனா அந்த சம்பிராதயம் எல்லாம் பார்த்தா ஒரு நல்ல மாப்பிள்ளைய மிஸ் செய்ய வேண்டி வரும் .அதான் எதையும் பார்க்காம வந்துட்டேன்.”
அப்படி அவர் சொன்ன போது கூட..எனக்கு ஒரு சந்தேகம் பெண்ணிடம் ஏதோ குறையோ..இல்ல பெண் அடங்காதவளா இருப்பா நமக்கு கீழ் இருப்பவனை கட்டி வெச்சா… வீட்டோட மாப்பிள்ளையா வெச்சிக்கலாம் என்று நினைக்கிறாரோ என்று என்னுடைய போலீஸ் புத்தி இப்படி எல்லாம் எண்ண தோனுச்சி..
ஆனா புவனாவை பார்த்ததும் சீ நான் எவ்வளவு கேவலமா யோசிச்சி இருக்கேன் என்று நான் என்னையே அப்ப திட்டி கிட்டேன்..அதுவும் என் மாமனார் என் கிட்ட வந்து…
“நான் ஒரு டாக்டர்..அது உங்களுக்கு தெரியும்..என் மகளும் மருத்துவத்திற்க்கு தான் படிக்கிறான்னு உங்களுக்கு தெரியும்..கூடவே எங்களுக்கு ஒரு மருத்துவமனை இருப்பதும் உங்களுக்கு தெரியும்.” என்று அப்போ அவர் தெரியும் தெரியும் என்று கேட்டதிலேயே  இவர் பெருசா ஏதோ அடிப்போடுறார் என்று பார்த்தா..
என் கை பிடிச்சிட்டு…  “எங்களுக்கு இருப்பது ஒரே மகள்..அவள் தான் அந்த மருத்துவமனையின் முழு பொறுப்பையும் ஏற்கனும்..அதனால அதனால…” என்று  அவர் இழுக்கும் போதே..
நாம் நினைத்தது போல இவர் வீட்டோட மாப்பிளைக்கு அடிப்போடுறார்..என்று தான் நான் நினைத்தேன் ஆனால் அவர்…
“அந்த மருத்துவமனையின் முழு பொறுப்பும் என் மகள் தான் எனக்கு பின் பார்த்துப்பா..அதனால அவளை எந்த காரணத்தொட்டும் அந்த மடுத்துவமனையை விடு என்றோ.. இல்லை இந்த மருத்துவம் வேண்டாம் என்றோ சொல்ல கூடாது..
என் மகள் ரொம்ப திறமையானவள்..அவள் வீட்டு நிர்வாகத்தையும் எந்த குறையும் இல்லாம பார்த்துப்பா.. மருத்துவமனையும் எந்த குறையும் இல்லாது கவனித்துக் கொள்வாள். அதனால் அதுக்கு நீங்க முட்டுக்கட்டையா நிக்க கூடாதுன்னு கேட்டதும்..
எனக்கு இதுக்கா எவ்வளவு தயக்கம் என்று  தான் நினைத்தேன். அவர் எண்ணத்தை சொன்னதில் முழு திருப்தி.. எங்க அப்பா அம்மாவுக்குமே சம்மதம்..அப்படி நடந்த திருமணம் தான் எங்களோடையது.
அதன் பின் சாதாரண கணவன் மனைவி வாழ்கை ஒரு வருடத்தில் என் மகன் அஷ்வத்… அவங்க அப்பா சொன்னது போல புவனா வீட்டு கவலை எனக்கு இல்லாது பார்த்துக் கொண்டாள்.
அதே போல் மருத்துவமனையும்  அவங்க அப்பாவுக்கு உடல் நிலை கொஞ்சம் சரியொல்லாது போனதால் அவள் கீழ் வந்து விட்டது. இரண்டையும்  அவள் நல்லாவா நிர்வாகம் செய்தா…
எந்த வித பிரச்சனையும் இல்லாம வாழ்க்கை போனா அதில் சுவாரசியம் இருக்காதுலே..எனக்கு பிரச்சனையா வந்தவன் தான் சகாயம். அவனை பத்தி வெளிப்படையா  சொல்லனும் என்றால் அரசியல் சப்போட்டில் ரவுடிசம் செஞ்சிட்டு இருந்தான்.
முப்பத்தி ஐந்து  வயதுலேயே அவன் மேல ஏகாப்பட்ட கேசு..ஆனா அவனுக்கு எதிரா யாரும் சாட்சியம் சொல்ல மாட்டாங்க…சாட்சியம் சொல்ல வந்தவங்கல கோர்ட்டுக்கு போகாமலேயே அவன் கோர்ட்டில் அவனுக்கு விருப்பம் போல தீர்ப்பு எழுதிடுவான்… எந்த போலீஸ் அதிகாரியும் அவன் மேல கை வைக்க பயந்தாங்க..
அப்போ தான் நான் சென்னைக்கு மாற்றலாகி வந்த புதிது… சகாயத்துக்கு அவனை ஆதாரிச்ச அரசியல்வாதிக்குமே பிரச்சனை வந்துடுச்சி..அவனுக்கும் அரசியல்வாதியா ஆகனும் ஆசை போல.
தனக்கு கீழ் அவனை வெட்டுன்னா வெட்டு போடுன்னா போடு என்று சொன்னா செய்யும் ஒரு ரவுடி தனக்கு இணையா சட்டமன்றத்தில் உட்காருவதா…?  என்று அப்படி நினைத்த அரசியல் வாதிங்க…
“உன்னை எல்லாம் ரவுடியாவே மக்கள் பார்த்துட்டாங்க… உனக்கு நான் ஆதாரவு கொடுத்தாலே எங்க ஓட்டும் போயிடும்..உனக்கு ஏன் இந்த வீண் ஆசைன்னு.. “ 
அந்த அரசியல்வாதி சொன்னதும்… “என்னை தேர்தல்ல நிக்க வைக்கலேன்னா உங்கள பத்திய ரகசியல் எல்லாம் சொல்லிடுவேன்.” என்று அவங்களையே சகாயம்  மிரட்டுனதால..எல்லோரும் ஒன்று கூடி அவனை என்கவுன்டர் செய்வது என்று முடிவு செய்தாங்க. அந்த என்கவுன்டர் என் கீழ் தான் நடந்தது.

Advertisement