Advertisement

அவர் முகத்தில் என்ன என்று சொல்ல முடியாத ஒரு அமைதி..பின் திரும்பி தன் மனைவியை பார்த்தார்..அவர் கண் அசைவில் ஒத்துக் கொள்ளுங்கள் என்று தன்  சொன்ன போல் அவருக்கு தோன்றியது.
வெற்றி மாறன் தன் தொண்டையை கணைத்துக் கொண்டு… “இது சொல்வதா…? வேண்டாமான்னு….?  தெரியல…இதே வேறு யாராவது மதி பெண் கேட்டு வந்து இருந்தா என் பதில்..நோ தான். ஆனால் கேட்டது நீங்க எனும் போது…” என்று சொல்லிக் கொண்டு வந்தவர் தன் பேச்சை அடுத்து பேசாது அனைவரின்  முகத்தையும் ஆழ்ந்து பார்த்தாரா…?ஆராய்ந்து பார்த்தாரா…?என்று அனுமானிக்க முடியவில்லை. இருந்தும் மற்றவர்களின் முக பாவத்தை வெற்றி மாறன் ஊன்றி கவனித்தார் என்று தான் சொல்ல வேண்டும்.
வெற்றி மாறனின் பேசை கேட்டவர்கள் அவர்கள் மனதுக்கு ஏத்தது போல் எண்ணிக் கொண்டனர்..அவர் சொன்ன மற்றவர்கள் கேட்டால் என் பதில் நோ . தான்…நீங்கள்  கேட்பதால் என்ற அவரின் பேச்சில் அதானே.. பெண்ணும் எங்க வீட்டு பெண் என்பதால் தானே உங்க மகனின் காதலுக்கு பச்சை கொடி காட்டினிங்க..
இப்போ மகளை எங்க வீட்டுக்கு கேட்கிறோம் என்றதும் யோசிப்பாராம்..இந்த யோசிப்பு கூட பெண்ண்ணின் விருப்பம் தெரிய தான் இருக்கும்..இல்லேன்னா இப்போதே  எடுடா தட்டை பிடிடா தாம்பூலம் என்று கொடுத்து விடுவார் என்று அவரை பற்றி நவீன் கொஞ்சம் ஏளனமாக தான்  மனதுக்குள் நினைத்துக் கொண்டான்..
அதே  எண்ணம் தான் அனிதாவுக்கும்..ஒன்று சரி என்று சொல்ல வேண்டும்…இல்லை பெண்ணிடம் கேட்க வேண்டும் என்று சொன்னால் அது நியாயமான ரீசன்..ஆனால் இவர் என்ன நீங்க என்பதால் பேசுறேன்… அப்போ எங்க காதலுக்கு சம்மதித்ததிற்க்கு காரணமும்  எங்க அந்தஸ்த்து தானா.. என்று அவர்கள் எண்ணத்திற்க்கு ஏற்ப நினைத்து முடிக்கும் வேளயில்..
அகில ரூபன்… “எனக்கு தெரியும் மாமா..ஸ்ரீ எங்க வீட்டுக்கு வந்தா அவளுக்கு பாதுக்காப்பு இன்னும் அதிகமா இருக்கும்..அது அவளுக்கு சேப்..அதுக்கு தானே மாமா..அதோட பெண் எனக்கு கொடுத்தா அதாவது அமைச்சரான எனக்கு கொடுத்தா என் பாதுகாப்பு வளையத்துக்குள் அவள் வந்து விடுவா.. அவளுக்கு  ஆபாத்து வந்தா… அதை தடுக்க என்னால் முடியும் என்று தானே மாமா யோசிக்கிறிங்க…? என்று அவரை பற்றி சரியாக கணித்தவராய் சொன்னான்.
அகில ரூபனின் பேச்சில் வெற்றி மாறன்  பவானியம்மா சீதாராமனின் முகத்தை யோசனையுடன் பார்த்தார் என்றால் அங்கு இருந்த மற்றவர்கள் அதாவது நவீன் அனிதா… இரு பாட்டிமார்களும்..
“இது என்னடா பாதுகாப்புக்காக ஒரு கல்யாணமா…? அந்த அம்மா என்ன அப்படி  என்ன பெரிய எலிசபெத் ராணி..அவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க ரொம்ப ரொம்ப அவசியம் என்பது போல் என்று நினைத்தவர்களுக்கு அப்போது தான் அந்த யோசனையும் வந்தது.
திருமணத்தின் அன்றும் கூட வெற்றி மாறன் ஸ்ரீமதியின் பாதுகாப்புக்கு கூடுதல் கவனம் செலுத்தியது அங்கு இருந்த மற்றவர்களுக்கு நியாபகத்தில் வந்தது..அதுவும் அனிதா திருமணம் முடிந்து மாப்பிள்ளை வீட்டில் கால் மிதிக்க வேண்டி இங்கு வந்த போது… 
வீட்டின் வெளியில் நின்றுக் கொண்டு இருந்த பாதுகாவலர்களை பார்த்து… “இங்கு ஏன் இவ்வளவு செக்யூரிட்டி…?” என்று யோசித்தவள்./
பின் “ஓ நாம் வருகிறோம் என்று மாமா செய்து இருப்பார்” என்று அவள் அப்போது நினைத்தாள்.
ஆனால் இன்று தன் அம்மாவுக்காகவும் அப்பாவுக்காகவது வந்த பாதுக்காப்பு காவலர்களோடு இங்கு இரு பாதுகாவலர் அவ்வளவு தான் நின்றுக் கொண்டு இருந்தனர்..அப்போ அன்று அவ்வளவு  பாதுகாவல் ஏற்பாடு செய்தது தனக்காக இல்லையா…?அவர் மகளுக்காகவா…?
ஒரு மாநிலத்தின் முதலமைச்சரின் மகள் தனக்கு ஏற்பாடாத ஆபாத்து ஐ.பி.எஸ் மகளுக்கு என்ன வந்து விட போகிறது…?என்று அனிதா யோசித்தாள்.. நவீனின் மனதிலும் அதே சிந்தனைகள்  தான்.
வெற்றி மாறன் தான்… “சார்..” என்று ஏதோ சொல்ல ஆராம்பிக்க…
“மாமா இப்போ நான் என் பதவியில் இங்கு வரல..உங்க சொந்தக்கரானா… இன்னும் கூடுதல் சொந்தம் ஏற்படுத்திக்க விரும்புறவனா இங்கு வந்து இருக்கேன். அதனால என் பெயரை வெச்ச கூப்பிடுங்க மாமா.” என்று அகில ரூபன் சொன்னதும்…
“சொந்தக்காரானா என்று சொல்றிங்க..அதனால உங்கல அகிலன் என்றே கூப்பிடுறேன்..ஆனால் சொந்தம் ஏற்படுத்திக்க… அது நான் இது பத்தி கொஞ்சம் யோசிக்கனும்…” என்று  சொன்ன அவர்..
பின் பவானியம்மாவின் பக்கம் பார்வையை திருப்பி… “நான் உங்க கிட்ட இதை எதிர் பார்க்கல மேடம்…” என்று அவரை குற்றம் சாட்டும் பார்வையை பார்த்த வாறு கேட்டார்.
“அய்யோ மாமா..அவங்களா  மதியை  பத்தி ஒன்றும் சொல்லலே..அவங்க பேசிட்டு இருக்கும் போது  ஸ்ரீ பத்திய விசயம்  என் காதில் விழுந்தது.” என்று சொன்ன அகில ரூபன்..
பின் தொடர்ந்து… “ஆனா நீங்க சொன்னதுல  ஒரு உண்மை இருக்கு மாமா… அவங்கல பார்த்து உங்க  கிட்ட இருந்து நான் இது எதிர் பார்க்கலேன்னு கேட்டிங்கலே..அவங்க கிட்ட இருந்து இது என்ன நீங்க எதிர் பார்க்காத நீங்க நினச்சி கூட பார்க்காத விசயங்கள் நிறைய இருக்கு..” என்று சொன்னவன் ..
பின்… “அது  உங்களுக்கே போக போக தெரியும்.” என்று ஒரு புதிரோடு பேசிய அகல  ரூபனை வெற்றி மாறனும் சரி புவனேஷ்வரியும் சரி குழம்பி போய் பார்த்தனர்..
அஷ்வத் மட்டும் நேற்று அவர்கள் வீட்டில் நடந்ததிற்க்கும்… இன்று இங்கு நடப்பதற்க்கும்  உள்ள  வித்தியாசம் அவனுக்கு மனதை உறுத்தியது . என்ன விசயமா இருக்கும்.. நாம் சொல்லாம வந்ததிற்க்கு அனிதா இங்கு நாம் அழைக்காமல் வர மாட்டாள் என்று நினைத்து இருக்க..
இன்று முதல் ஆளாய் அண்ணனுக்கு பெண் கேட்க தட்டை தூக்கிக் கொண்டு வந்து இருக்கா….அதோடு நாம பார்ப்போமா என்று இடை  இடையே நம்ம முகத்தை முகத்தை  வேறு பார்க்குறா… 
இது இவள் செயலே கிடையாதே..காதலிக்கும் போதே நாம ஒரு சின்ன தப்பு அதாவது இங்கு வர்றேன்னு சொல்லி கொஞ்சம் லேட்டா போனா அவ்வளவு தான்..
மூன்று நாளுக்கு மூஞ்ச தூக்கி வெச்சிட்டு.. நாம வலிய போய் சமாதானம் படுத்தும் போது எல்லாம்… “நான் என்ன சாதரண வீட்டு பெண்ணா…? எவ்வளவு பாதுக்காப்போட நான் வெளியில் வரனும் என்று உங்களுக்கு தெரியும் தானே..என்னை யாராவது பார்த்து அடையாளம் கண்டுட்டா எவ்வளவு பிரச்சனை ஆகும் என்று உனக்கு தெரியாதா…?
எல்லாம் தெரிஞ்சும் லேட்டா வந்து இருக்க…?அப்போ நான் உனக்கு அவ்வளவு ஈஸியா போயிட்டேன்.. ஆமா ஆமா நீ என்னை பார்த்ததோட நான் தானே உன்னை பார்த்தேன்..
நீ தான் உங்க ஹாஸ்பிட்டல் என்று ஒழுங்கு சிகாமணியா பேஷண்டை தான் பார்த்துட்டு இருந்தே..அது தான் வலிய ஒரு பெண் அவளா பார்த்தா உங்களுக்கு கொஞ்சம் இளக்காரமா தான் இருக்கும்…” என்று தன் மனதில் நினைப்பது தோன்றியது என்று அனைத்தையும் கொட்டி விடுவாள்.
பின் நான் சொன்ன சில பல சாரி..பல சில முத்தங்கள் தான் அவளை கொஞ்சம் சகஜ நிலைக்கு கொண்டு வரும்..காதலியாக இருக்கும் போதே அந்த முறுக்கு முறுக்கியவள்..
இப்போது  காதலி மனைவியாகி  அதாவது அவள் என்னை திட்ட முழு அதிகாரமும் இருக்கிறது என்று மூன்று நாளுக்கு முன் தான் மூன்று முடிச்சி போட்டு இருக்கிறேன்..அப்படி   இருக்க இப்போது ஒன்றும் சொல்லாது அமைதியின் திருவுருவமாய் அமர்ந்து இருக்கும் இந்த அனிதா அவனுக்கு புதியவளாய் இருக்கிறாள் என்று அஷ்வத் நினைத்த அதே நேரம்.. என்னவோ இருக்கு… அது தான் இந்த புலி பதுங்குது…என்றும் நினைத்தான்.
கூடவே தன் தங்கையின் பேச்சும் ஏதோ அவனுக்கு ஒரு முரணாய் தோன்றியது..தன்னுடைய மற்ற ஒரு தங்கை இறந்ததில் இருந்தே தந்தை தங்கையின் மீது கூடுதல் கவனம் செலுத்தியது அவனுக்கு தெரிந்த ஒன்று தான்…
இதோ  இப்பொது நான் பெங்களூரில் தனியாக சுதந்தரமாக இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் மதிக்கே தெரியாது வெற்றி மாறன் அவள் இருக்கும் வீட்டை சொந்தமாக வாங்கியதோடு அல்லாது..அங்கு இருக்கும் தோட்டக்காரன் முதல் கொண்டு வாட்ச் மேன்..ஏன் அவள் ஓட்டலில் சமையல் செய்யும் குக் கூட வெற்றி மாறன் ஏற்பாடு செய்தவர் தான்..
அவர் ஒரு எக்ஸ் மிலிட்ரிமேன்.. வெற்றி மாறனின் சொல்லை ஏற்று சமையல் ஒராளவுக்கு தெரிந்தவரை மேலும் மெருக்கூட்டி இதோ இப்போது தன் மகள் அருகில் வைத்தார்..
அதே போல் தான் மதி வைத்துக் கொண்டு இருக்கும் டோர் லெலிவரி பாய் அவர்கள் கூட..இப்படி அவளுக்கே தெரியாது வெற்றி மாறன் அவளை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைத்து இருக்கிறார்.
இதை எல்லாம் யோசித்த அஷ்வத் அதுவும் இப்போது  அகில ரூபனுக்கு பெண் கொடுக்கும் தகுதியாய் அவரால் மதிக்கு பாதுகாப்பு அதிக அளவில் கொடுக்க முடியும்  என்று அகில் பேசியது..ஏனோ அவன் மனதை உறுத்த செய்தது..
தான் விருப்பம் இல்லாத  விசயம் ஏதாவது இருக்கிறதா…?இல்லை வரப்போகிறதா…?  என்று அவன் யோசிக்கும் போதே வெற்றி மாறன் தன் பேச்சை  ஆராம்பித்து இருந்தார் அதுவும் தன் மகனை பார்த்து..
“அஷ்வத் இத நீ எப்படி எடுத்துப்பேன்னு தெரியல..ஆனா ஒன்னு மட்டும்  நான் உன் கிட்ட கேட்டுக்குறேன்..எந்த சூழ்நிலையிலும் நீ மதியை விட்டுட கூடாது அதே போல் வெறுத்திடவும் கூடாது.” என்று  வெற்றி மாறன் சொல்லி முடிக்கவும்..
அஷ்வத்… “ என்னப்பா இது பேச்சு…?என் சொந்த தங்கையை நான் விட்டுடுவேனா..இல்லை வெறுத்துடுவேனா….” என்று அஷ்வது சொல்லி முடிக்கவும்..
வெற்றி மாறன்… “அப்போ மது உன் சொந்த தங்கை இல்லாத பட்சத்தில் நீ அவளை விட்டுடுவே இல்ல வெறுத்துடுவே…அது தானே உன் பேச்சு…” என்ற வெற்றி மாறனின் பேச்சில் அஷ்வத் மட்டும் அல்லாது இரு பாட்டிமார்களும் சரி அனிதா நவீனும் சரி அதிர்ந்து போய் அவரை பார்த்தனர்.. அகில ரூபனுக்கு அந்த அதிர்ச்சி இல்லை..புவனேஷ்வரி மட்டும் முகத்தில் சோகம் இழையூட  தன் கணவனையே பார்த்திருந்தார்.

Advertisement