Advertisement

அத்தியாயம்…10 
சீதாராமன் தன் குடும்பத்தினரோடு அன்று மாலையே அகில ரூபன் சொன்னது போல  வெற்றி மாறனின் வீட்டுக்கு வந்து இறங்கினார்கள். வண்டியை விட்டு இறங்கியதும் வெற்றி மாறன் வெளியில் வந்து அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்த பின்…
“வாங்க…” என்று முறையாக வரவழைத்து  அமர வைத்தார்
அதே போல் புவனேஷ்வரியும்..  அன்று மருத்துவமனையில் இருந்து இவர்களை வரவேற்க்க..வீட்டுக்கு சீக்கிரம் வந்தவர்….கணவன் சொன்னது போல முகத்தில் எதுவும் காட்டாது மகிழ்ச்சியுடன் கை வணங்கி…
“வாங்க…” என்று சொன்னார்.
அஷ்வத்தும் அப்பா சொன்னதற்க்கு ஏற்ப.. நேற்று ஒன்றும் நடவாதது போல .. அனிதாவை ஓரா விழிப்பார்வை பார்த்துக் கொண்டே… “வாங்க மாமா..வாங்க அத்தை…வாங்க பாட்டியம்மா…” என்று சொன்னவன்.. அகில ரூபனிடமும் நவீனிடமும் முறைக்கு கூட அவனை பாராது விரைப்பாய் அவர்களுக்கு எதிரே அமர்ந்து விட்டான்…
அமர்ந்தவன் அகில ரூபனும் நவீனும் பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்து ஏதோ தங்களுக்குள் பேசுவதை பார்த்து… “நேற்று என்னவோ அக்னி நட்சத்திரம் பிரபு கார்த்தி போல சும்மா விரச்சிட்டு இருந்தானுங்க..இப்போ என்ன தளபதி  ரஜினி மம்மூட்டி போல…பேசிட்டு இருக்கானுங்க என்று   மனதில் நினைத்துக்  கொண்டு இருக்கும் போதே அவர்களை முறைக்கும் பணியும் அவன் கண்கள் செவ்வனே செய்துக் கொண்டு தான் இருந்தது
“அப்புறம் சம்மந்தி மருமகளை விட வந்திங்களா….?” என்று கேட்டவர்./
பின்… “இப்போது பிள்ளைங்க..காதலிப்பதிலும் அவசரத்த காட்டுறாங்க..அதே போல் சண்டை போட்டு பிரிவதிலும்  அந்த அவசரத்தை  காட்டுறாங்க.. இன்னைக்கு நீங்க மருமகள அழச்சிட்டு வரலேன்னா நாளைக்கு நானே புனவேஷ்வரிய  அழச்சிட்டு  உங்க வீட்டுக்கு வந்து இருப்பேன்..மருமகளை அழைக்க…” என்று சொல்லி..இன்று இதற்க்கு தான் அவர்கள் குடும்பமாய் வந்து இருப்பது போல் காட்டி பேசினார்.
அகில ரூபனோ சிரிப்புடன்… “இந்த காலத்து காதல் மட்டும் அவசரத்த காமிக்கிறது இல்ல மாமா..அந்த காலத்து காதலும் அவசரத்த காட்டுவாங்க…” என்ற அவன் பேச்சில் சீதாராமன் ..பவானியம்மா இருவரும் ஒரு சேர தலை குனிந்து விட்டனர்.
அப்போது தான் வெற்றி மாறன்..சீதாராமன் பவானியம்மாவின் முகத்தை உற்று பார்த்தார்..ஏதோ இழந்தது போல்… ஏதோ அவர்கள் முகத்தில் வெறுமையாய்…
சீதாராமனின் முகம் எப்போதும் சாந்தமாக தான் இருக்கும்..இப்போது அந்த முகத்தில் சாந்தத்தோடு சோகமும்  கொஞ்சம் இழையூடி காணப்படுகிறதோ..என்று  வெற்றி மாறன் யோசித்தார்..
பவானியம்மாவின் முகம் வெட்ட வெளிச்சமாய் தெரிந்து  விட்டது..அவர் மனதில் ஏதோ குழப்பம் என்று..அவருக்கு கம்பீரமே  அந்த ஆளுமையான   தோரணை தான்..ஆனால் இன்று அவரிடம் அந்த கம்பீரம் காணப்படவில்லை. 
அவர் அமரும் போதே தன்னால் அவரின் கால் ஒரு காலின் மேல் போட்டுக் கொள்ளும்… மற்றவர்கள் பேசும் போது அந்த இரு காலின் மீதும் தன் இரு கை கோர்த்து பேசுபவர்களின் முகத்தை பார்க்கும் அந்த விதமே அவ்வளவு  ஆளுமையான தோற்றத்தை அவருக்கு கொடுக்கும்.
ஒரு பெண் இப்படி தான் இருக்க வேண்டும்… வெற்றி மாறன் நினைப்பது உண்டு..அப்படி நினைக்கும் போதே அவர் மனதில் எழும்  உருவம்  பவானியம்மாவுடையது தான்..
தன் மகன்  அனிதாவை காதலிக்கிறான் என்று தெரிந்ததும் வெற்றி மாறன் உடனே சம்மதித்து விட்டார்..காரணம் சீதாராமனோடு பவானியம்மாவின் அந்த ஆளுமை அவருக்கு மிகவும் பிடிக்கும்..இப்படி பட்ட இடத்தில் பெண் எடுக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று நினைத்த்திற்க்கு காரணம்…
பவானியம்மாவின்  அரசியல் செல்வாக்கோ… சீதாராமனின் பதவியோ இல்லை அவர்கள் செல்வத்தை பார்த்தோ கிடையாது..பவானியம்மாவின் ஆட்சி முறை… அரசு அதிகாரிகளுக்கு அவர் கொடுக்கும் மதிப்பு மரியாதை… இதை அவர் பவானியம்மாவின் தந்தையிடமே  அவர் பார்த்து இருக்கிறார்…
ஒரு சில கட்சிகள்  அரசு அதிகாரிகள் என்னவோ இவர்கள் வீட்டு வேலையாள் போல்… “என்னலே..” என்று பேசுவதும்..
அவர்கள் சொன்னதை கேட்கவில்லை என்றால்…  தாங்கள் படித்த படிப்புக்கு கூட மரியாதை தராது  பேசுபவர்களை வெற்றி மாறன் பார்த்து இருக்கிறார்..ஆனால் பவானியம்மாவும் சரி அவருடைய தந்தையும் சரி… ஒரு அரசு அதிகாரிகளை எப்படி நடத்த வேண்டுமோ அப்படி நடத்துவார்.
 வெற்றி மாறன்.. ஒரு முறை முதல் அமைச்சராய்  பவானியம்மாவின் அப்பாவை சந்திந்த போது  ஒரு என் கவுண்டர் நடத்த வேண்டி இருந்தது… அப்போது தான் சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டதோடு தன் கூற்றை ஏற்றுக் கொண்டு அனைத்தும் தனக்கு சாதகமாய் செய்து கொடுத்தது..
அதுவும் அவர் கட்சியில் இருப்பவர்களே அந்த என் கவுண்டருக்கு ஒத்துழைக்காத போது அவர்களையும்  எதிர்த்து எனக்கு சாதகமா என் பக்கம் நின்றது… அதை பார்த்து…
“சார் ரியலி யுவர் க்ரேட் சார்..உங்க கட்சியில் இருப்பவர்களை எதிர்த்து அவன் இருந்தால் இன்னும் பிரச்சனை  கூடும் என்று நான் சொன்னதும்… “செய்..எந்த அரசியல் இடையூறும் இல்லாது நான் பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி எனக்கு இவ்வளவு மதிப்பு கொடுத்து நடத்தினதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சார்…” என்று அவரிடம் நான் சொன்னது போது அவர் சொன்ன அந்த வார்த்தை…
“எதுக்கு நன்றி வெற்றி மாறன்… உத்தியோகத்தில் நீங்க எவ்வளவு நேர்மையானர் என்று எனக்கு தெரியும்… அந்த நேர்மைக்கும்..உங்க பதவிக்கும் நான் மரியாதை கொடுத்தே ஆகவேண்டும்..
உங்க படிப்பு என்ன சாதரணப்பட்டதா..சொல்லுங்க… நீங்க நினச்சா   எங்க இடத்துக்கு வர முடியும்..ஆனா நாங்க எட்டு குட்டிகரணம் போட்டாலும் உங்க பதவிய பிடிக்க முடியாது.. ஏன்னா அதுக்கு படிப்பும் அறிவும் ஒரு சில குவாலிகேஷனும் இருக்கு… இப்போ புரியுதா வெற்றி மாறன் யாருக்கு யார் மரியாதை தரனும் என்று…?”அரசியலில் இருந்துக் கொண்டு இது எல்லாம் ஒன்றும் இல்ல.. உங்க பதவி தான் உயர்வு என்று எந்த அரசியல் வாதி சொல்வார்..ஆனால் அவர் சொன்னார்.. அவருடைய மகள் வீட்டில் இருந்து பெண் எடுப்பது அவர் பெருமையாகவே கருத்தினார்…
அதுவும் தந்தையை போலவே பவானியம்மாவும் படித்தவர்களுக்கு அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை கொடுப்பார்..ஒரு வேளை அவர் கணவரும் அரசாங்க உயர் பதவியில் இருப்பதால் கூட இருக்கலாம்..ஆனால் அனைவருக்கும் அவர் கொடுத்த அந்த மரியாதையிலும்… அவரின் ஆளுமையிலும்…
ஒரு பெண்மணியாய் எதிர் கட்சிகள் செய்யும் பிரச்சனைகளை எளிதாக தகர்த்து எரியும் அவரின் அந்த சூட்சும்மான அந்த அறிவு தறமையையும் பார்த்து வெற்றி மாறன் வியக்காத நாள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..
இன்று அந்த ஆளுமையான முகத்தில் குழப்பம் சூழ்ந்து இருப்பதை பார்த்து மற்றதை எல்லாம் விடுத்து…  “மேடம் ஏதாவது பிரச்சனையா…?” என்று  வெற்றி மாறன் கொஞ்சம் தழைந்து போய் தான் கேட்டார்.
இதை பார்த்த புவனேஷ்வரிக்கும் சரி அஷ்வத்துக்கும் சரி..ஆச்சரியத்தோடு அதிர்ச்சியாக போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும்… வெற்றி மாறன் எப்போதும் மற்றவர்களிடம் எந்த ஒரு விசயத்துக்காகவும் பணிந்து போக மாட்டார்..
இவரின் இந்த கண்டிப்பில் இந்நேரம்  அவரின் வேலையை  எங்கு எங்கு  தூக்கி அடித்து இருப்பார்களோ..புவனேஷ்வரியின் கணவன் ஆனதால் அந்த பிரச்சனையில் இருந்து  இன்று வரை தப்பித்துக் கொண்டு இருக்கிறார்..
ஆம் புவனேஷ்வரி அவர் மனைவியால் தான்..புவனேஷ்வரியின் தந்தை தேர்தல் என்று  வந்தால் ஆளுங்கட்சிக்கும் அவர் வீட்டில் இருந்து பெட்டி போகும்.. எதிர் கட்சிக்கும் பெட்டி போகும்..அவர் அந்த அளவுக்கு செல்வாக்கானவர்.. அப்படி இருக்கும் போது அவர் மருமகன் என்ற ஒரே காரணத்திற்க்காக தான் அவர் இன்று வரை ஒரே இடத்தில் நிற்க்கிறார்.
இந்த பணிவில் தாய் மகன் இருவரும் ஒரு சேர பாத்துக் கொண்டனர்..இருவரின் மனதில் இதே நினைவு.. “பெண்ணை கொடுத்து விடுவாறோ என்று…”
ஏன் என்றால் பவானியம்மாவை பற்றி பெருமையாக சில முறை பேசுவதை அவர்களே பார்த்து இருக்கின்றனரே..அந்த நம்பிக்கையில் தானே அஷ்வத்தும் தன் காதல் பயணத்தை தைரியத்துடன் தொடங்கியது. இப்போது அதுவே அவனுக்கு எதிராக திரும்புமோ என்று அஷ்வத் அதிர்ச்சியுடன் தன் தந்தையை பார்த்திருந்தான். அஷ்வத் அதிர்ச்சியுடன் பார்த்திருந்தான் என்றால் அகில ரூபனோ…
“இவர் ஏன் இப்படி அம்மாவிடம் பணிந்து கேட்க வேண்டும்..இது  இவருடைய சுபாவம் இல்லையே..அதுவும் இவர் முன் இவர்கள் நிற்க கூட தகுதி இல்லாதவர்கள்..அவர்களிடம் இப்படி அவர் பணிந்து பேசுவதை அதிர்ப்தியுடன் பார்த்திருந்தான்.
பவானியம்மா வெற்றி மாறன் இப்படி கேட்டதும் சங்கடத்துடன் .. “அதெல்லாம் ஒன்றும் இல்ல சம்மந்தி..கல்யாண வேலையில் கொஞ்சம் உடம்பு அசதியா இருக்கு அவ்வளவு தான்.” என்று பவானியம்மா சொன்னதும்..
“ஆமாம் மாமா..எங்க அம்மாவுக்கு எல்லாம் அவ்வளவு தான்…  எந்த ஒரு பெரிய விசயம் என்றாலும் அதை அவ்வளவு ஈசியா கடந்து போயிட்டே இருப்பாங்க… நமக்கு பெருசா தெரியிறது எல்லாம் அவங்களுக்கு ஒன்னுமே இல்ல என்ற  விசயமா தான் தெரியும்.” என்று அகில ரூபன் சொல்ல சொல்ல..
வெற்றி மாறனின் புன்னகை விரிந்துக் கொண்டே சென்றது… “சரியா சொன்னிங்க… அவங்களுடைய இந்த புத்திசாலி தனமும் தைரியமும்.. அவருடைய  அப்பா கிட்ட இருந்து வந்தது..அவரும் இப்படி தான் எதற்க்கும் அதிர்ச்சி ஆக மாட்டார்… எல்லாம் அமைதியா செய்து முடிச்சிடுவார்.”
அகில ரூபனின் உள் குத்து தெரியாது வெற்றி மாறன் உண்மையாகவே பவானியம்மாவை மட்டும் அல்லாது அவர் தந்தையையும் சேர்த்தே பாராட்டினார்..
அதற்க்கு இப்போது  நவீன்.. “ஆமாம் ஆமாம் எங்க அம்மாவுடைய இந்த திறமையின் மொத்த கிரிடிட்டும் எங்க தாத்தாவுக்கு தான் போய் சேரனும். இல்ல பாட்டி…?” என்று சொன்னவன்.. இந்த பேச்சில் தன் பாட்டிமார்களையும் உள்ளிழுத்துக் கொண்டான்.
சீதாராமனுக்கும் பவானியம்மாவுக்கும் தன் இரு பிள்ளைகளின் பேச்சில் கூனி குறுகி போய் விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.. அன்று ஒன்றும் இல்லாத விசயமாக தெரிந்தது..இன்று அதே விசயம் ஆலமரம் போல் வேர் ஊன்றி தன் முன் நிற்க்கிறது… அதுவும் வெற்றி மாறன் முன் தாங்கள் ஒன்றும் இல்லை என்று தான் எண்ண தோன்றியது. தம்பதியார்களான சீதாராமனுக்கும்… பவானியம்மாவுக்கும்…
ஆம் வெற்றி மாறனின் முன் இவர்கள் சிறுத்து தான் போனார்கள்..அதுவும் அன்றைய இரவின் பேச்சை அகில ரூபன் கேட்டு இருந்தால் வெற்றி மாறனை பற்றியும் தெரிந்து இருக்கும் தானே..
அவன் இப்போது என்ன நினைப்பான்…? என்று சீதாராமன் எண்ணும் வேளை சட்டென்று திரும்பி தன் பெரிய மகனை பார்த்தார்..அவர் எதிர் பார்த்தது போலவே அவன் முகத்தில் அவ்வளவு ஒரு இளக்காரம்… அவன் பார்வை இது தான் கேட்டது… “அவர் முன் நிற்க உனக்கு என்ன தகுதி இருக்கு…?என்று.
சீதாராமன் ஒரு மாதிரி சமாளித்த வாறு வந்த விசயத்தை பேச ஆராம்பித்தனர்… “நாங்க  எங்க வீட்டு பெண்ணை இங்கு விட்டுட்டு உங்க மகளை எங்க வீட்டுக்கு  மூத்த மருமகளா அனுப்புவீங்களா….? என்று பெண் கேட்க தான் வந்து இருக்கோம்.” என்று சொல்லி விட்டு வெற்றி மாறன் முகத்தை  பார்த்தார்.

Advertisement