Advertisement

ஆனால் திருமணத்திற்க்கு என்று வந்து விட்டு மேடையில் அமர்ந்து இருக்கும் மணமக்களை பாராது  மண்டபத்தில் வாசலில்  முதலமைச்சருக்காக கண் பதித்து இருப்பவர்களை என்ன என்று சொல்ல….
அவர்களுடைய தவம் பலித்தது என்பது போல் மண்டபத்தின் வாசலில் கண் பதித்து இருந்தவர்களின் கண்  பளிச்சிடலில் ஓ வந்து விட்டார்கள் என்று நினைத்து ஸ்ரீ மதி மண்டபத்தின் முகப்பை பார்த்தாள்.
அவள் எப்போதும் வெறுக்கும் அந்த காக்கி உடை மட்டுமே அவள் கண்ணில் பட சட்டென்று தன் பார்வையை திருப்பியவளின் கண்ணுக்கு ஐய்யர் மரியாதை நிமித்தமாக  எழ பார்த்தவரை…
“சாமி உட்கார்ந்து மந்திரத்தை படிங்க…” என்று கடிந்து சொன்னாள். ஏற்கனெவே கடிப்பில் இருந்தவளுக்கு இது போல் காட்சி எல்லாம் ஒரு வித சலிப்பை ஏற்படுத்தியது….
அதுவும் தன் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த தன் அன்னையும்  அவர்கள் வருவதை பார்த்து ஓடி போய் வரவேற்ப்பதை பார்க்க பார்க்க அவளின் கடுப்பு அதிகமானதே ஒழிய குறையவில்லை.
தன் பெண் திருமணத்திற்க்கு கூட முன் நின்று அவர்களால் செய்ய முடியவில்லை என்றால் அது என்ன வாழ்க்கை….முறைப்படி  பார்த்தால் வந்தவர்களை வரவேற்க பெண்ணின் பெற்றோராய் இவர்கள் தான் மண்டபத்தின் வாசலில் நின்று வந்தவர்களை….
“வா…” என்று அழைக்க வேண்டும்.
ஆனால் இங்கு  வாழ்த்த வந்தவர்கள் முதலில் வந்து விட்டு..இவர்களை வரவேற்க்க காத்துக் கொண்டு இருக்கிறார்கள்..ஸ்ரீமதிக்கு இந்த  முதலமைச்சர் அவர்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் யார் மீது வெறுப்பு இல்லை…
இன்னும் கேட்டால் தமிழக முதலமைச்சராய் பவானியம்மா நன்றாகவே செயலாற்றுக்கிறார்கள் என்பதில் அவளுக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. அதே போல் தான் காஞ்சிபுரமாவட்ட கலெக்ட்டர் சீதாராமனும் நேர்மைக்கு பெயர் போனவர்..
அவர்களுடைய மகன் அகில ரூபன் இப்போது தானே பதவியில் அமர்ந்து இருக்கிறார்..அவருடைய செயல்பாடுகள் அனைத்தும் போக போக இனி தான் தெரிய வரும் என்னும் போது..அவர்களை வெறுக்க இவளுக்கு என்ன காரணம் இருக்க போகிறது…
இல்லை ஆனால் இருக்கிறது என்பது போன்ற மனநிலையில் தான் ஸ்ரீமதி இருக்கிறாள். இவர்கள் பதிவி மாநிலத்திற்க்கு நல்லது. ஆனால் தன் வீட்டுக்கு….? இதை நினைத்து தான் வெறுப்பு என்பதை விட பயம் என்று சொல்லலாம்.
வீ.ட்டில் இந்த சம்மந்தமான பேச்சு  ஆறுமாதகாலமாய் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்த ஆறுமாத காலமாய் ஸ்ரீமதியின் நிம்மதி மொத்தமாய் போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..
தன் வீட்டில் ஒரு பதவியில் இருக்கும்…தன் தந்தையால் நடந்த அந்த இழப்பையே அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதில் இவள் நினைத்தே பார்த்திராத….அதுவும் சுவரொட்டியிலும் டிவியிலுமே பார்த்த வி.ஐ.பிக்களின் இந்த சம்மந்தத்தால் தன் வீட்டுக்கு ஏதாவது கேடு வந்து விடுமோ…அந்த பயம் ஒரு பக்கம் இருக்க.
இனி இன்னும் கூடுதல் பாதுகாப்போடு தான் தன் குடும்பமும் இருக்கும்…அதை தன்னால் சகித்துக் கொள்ள முடியுமா…?பார்க்கலாம் என்று நினைக்கும் போதே.. தன் பக்கத்தில் சிரித்த முகமாய் நின்ற பவனியாம்மாவை பார்த்ததும் ஸ்ரீமதியின் கை தன்னால் வணக்கம் செலுத்தியது…
“நல்லா இருடா கண்ணா…” என்று  தன் தலை மீது கைய் வைத்து சொன்ன அந்த மங்கலகரமான முகத்தை பார்த்ததும்  ஸ்ரீமதியின் முகமும் தன்னால் புன்னகைக்கு தாவியது.
அவரின் பதவிக்கு அவர் உண்மையாய் இருப்பதில் ஒரு பெண்ணாய் ஸ்ரீமதிக்கும் பெருமையே..இதே தன் அண்ணனின் வருங்கால மாமியார் என்ற உறவு இல்லாது ஒரு வெளியாளாய் சந்திதது இருந்தால் ஸ்ரீமதி என்ன செய்து இருப்பாளோ..ஆனால் இப்போது அமைதியாக சிரித்து விட்டு…
தன் அண்ணனின் தோள் மீது இருந்த அங்கவஸ்த்திரத்தை சரி செய்து விட்டு…  பவனியம்மா தன்னையே பார்த்திருப்பதை பார்த்து என்னவோ பேச வேண்டுமே என்பது போல் ஸ்ரீமதி… “டையடா இருந்தா சொல்லுங்க அண்ணா குடிக்க காபி எடுத்துட்டு வர்றேன்.” என்று கேட்டாள்.
அவள் அண்ணனோ காதல் அவதாரமாய் தன் பக்கத்தில் அமர்ந்து இருந்த  இன்னும் சிறிது நேரத்தில் தன்னுடைய காதலி பதவியில் இருந்து மனைவி பதவிக்கு உயர்வு  பெற இருக்கும் அனிதாவிடம்..
“ஸ்வீட்டி காபி ஏதாவது எடுத்துட்டு வர  சொல்லட்டுமா….?” என்று கேட்டான்.
இதை கேட்ட ஸ்ரீமதிக்கு தான் எங்கு  “அண்ணி காபி வேண்டும்.” என்று சொல்லிடுவார்களோ என்று ஒரு வித சங்கடத்துடன்  அனிதா பதிலுக்காக காத்திருந்தாள். .
அனிதா…” வேண்டாம்.” என்று சொல்லியும் அஷ்வத்… “ஹாப் க்ளாஸ்டா ஸ்வீட்டி.” என்று வழிந்து கொண்டு கேட்டதற்க்கு அனிதா… “இல்ல காபி குடிச்சா லிப்ஸ்ட்டிக் அழிந்து விடும்.” என்று சொன்னதும் தான் ஸ்ரீமதிக்கு அப்பாடா என்று ஆனது.
ஸ்ரீமதிக்கு காபி கொண்டு வருவதில் பிரச்சனை இல்லை..ஆனால் காபி கொண்டு வர வேண்டும் என்றால் மேடை சுத்தி இருக்கும் அந்த  காவல்படையை  தான்டி தான் செல்ல வேண்டும்.
மேடையை யாரும் பார்க்காத படி அப்படி மேடையை சுற்றி எங்கும் காக்கி உடை அணிந்த காவலர்கள் இருக்க அவர்களை தான்டி செல்ல என்ன அந்த பக்கம் தன் பார்வையை செலுத்தாது இருந்தவள்..எங்கு அனிதா காபி கேட்டு விடுவாளோ என்று பயந்திருக்க..
அனிதா…” எனக்கு வேண்டாம்.” என்று  சொன்னதும் தான் ஸ்ரீமதிக்கு அப்பாடா என்று  ஆனது.
அவள் யாரையும் நிமிர்ந்து பாராது இருந்ததால் அங்கு வந்த அகில ரூபனையும் பார்க்கவில்லை. பவனியம்மாவின் குடும்பம் ஒரே ஒரு முறைதான் தங்கள் வீட்டுக்கு முறைப்படி சம்மந்தம் பேச வந்தது.
அப்போது ஸ்ரீமதி பெங்களூரில் இருந்ததால் யாரும் இவளை பார்க்கவில்லை. இவளும் யாரையும் பார்க்கவில்லை. அகில ரூபன் மாப்பிள்ளையின் தங்கை என்ற முறையில் பவனியம்மா..
தன் கணவருக்கும் பெரிய மகனுக்கும் சின்ன மகனுக்கும்.. அறிமுகம் படுத்தினார்… அப்போது ஸ்ரீமதி நிமிர்ந்தும் பாராது… பவனியம்மாவுக்கு செய்தது போலவே கைய் எடுத்து வணக்கம் செலுத்தியதோடு சரி…
அகில ரூபன் அவளின் செயலை பார்த்து… “திமிர் பிடித்தவளோ …” என்று நினைத்துக் கொண்டான்.
ஆனால் அது போல் எதுவும் இல்லாத அந்த வீட்டின் இரண்டாம் வாரிசு நவின்… “உங்களுக்கு முன்ன நான் தான் பார்த்தேன்..அதனால் நான் தான் இவங்களை உங்களுக்கு அறிமுகம் படுத்தனும்.” என்று சொன்னவன்.. பின் ஸ்ரீமதியோடு  ஒரிரு வார்த்தைகளும்  பேச ஆராம்பித்து விட்டான்.
ஸ்ரீமதிக்கும் அவனோடு பேசுவதில் எந்த வித பிரச்சனையும் இல்லாது அவன்  கேட்டதற்க்கு பதில் அளித்துக் கொண்டு இருந்தாள். அவள் நவினோடு சாதரணமாக பேச காரணம் அவன் எந்த பதவியிலும் இல்லாது ஒரு மருத்துவன். என்பதால்  அவனிடம்  பேச்சு அவளுக்கு சரளமாக வரவில்லை என்றாலும், கேட்டதற்க்கு பதில் அளித்துக் கொண்டு இருந்தாள்.
பவனியம்மா வருவதற்க்குள் செய்ய வேண்டிய சடங்கில் பாதி முடிவடைந்து இருந்ததால் அவர்கள் வந்த சிறிது நேரத்திலேயே அஷ்வத் அவர்கள் மகள் அனிதா கழுத்தில் இவர்கள் முறைப்படி மாப்பிள்ளை இரண்டு முடிச்சிட மூன்றாம் முடிச்சியாய் நம் ஸ்ரீமதி போட்டவள் நிமிர்ந்து பார்க்க அங்கு அவளின் தோழி தீபிகா இருப்பதை  பார்த்து விட்டவள்…
“ஏய் எப்போ வந்த…” என்று கேட்டுக் கொண்டே அவளின் கை பிடித்து இழுத்துக் கொண்டு தங்களுக்கு கொடுக்கப்பட்ட அறையில் மறைந்தாள்…
இவை அனைத்தும் பார்த்தும் பார்க்காத மாதிரி  கவனித்துக் கொண்டு இருந்த அகில் ரூபனின் புருவ மத்தியில் முடிச்சிகள் விழ ஆராம்பித்தது…
“ஏன் இந்த பெண் இப்படி இருக்கா…?” என்ற அவனின் யோசனையை அவனின் தாயார்…
“அகிலா  இங்கு முடிஞ்சிட்டா நாம ஆசிரமத்துக்கு போயிடலாமா…?” என்ற தன் அன்னையின் கேள்வியில்..
“போகலாம் ஆனால் நீங்க வேண்டாமா…அங்கு எல்லாம் உங்களுக்கு பாதுகாப்பு இப்போ சரியா கொடுக்க முடியுமா தெரியல..” என்று சொன்னவன்..
அங்கு முகத்தில் டென்ஷனோடு அங்கும் இங்கு அலைந்துக் கொண்டு இருந்த வெற்றிமாறனை காண்பித்து..
“பாருங்க நம்ம ஐ.பி.எஸ் முகத்தை…பாவம் அவருக்கு இன்னும் டென்ஷனை ஏத்தாதிங்க…” என்று சொன்னவனின் மற்ற பேச்சை எல்லாம் விடுத்து..
“அது என்னடா ஐ.பி.எஸ் சொல்லிட்டு அழகா மாமான்னு கூப்பிடு.” என்று கண்டித்தவர்.
பின்.. “நான் வரக்கூடாதுன்னா சொல்ற….?”
மனதில் அங்கு தன் கைய்யால் இருவருக்காவது உணவு பரிமாறினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவருக்கு தன் மகன் சொன்னது  சரி என்று பட்டாலும், தன் மகளுக்கு செய்ய வேண்டியதை செய்ய முடியவில்லையே என்ற ஆதாங்கம் அந்த தாய் மனதுக்கு இருக்க தான் செய்தது.
பவனியம்மா ஒரு குடும்ப தலைவியாய் அனைத்தும் சரியாக செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், அவர் பதவியால் ஒரு சிலது என்ன பலது இது போல் செய்ய முடியாது போய் விடும். பவனியம்மா சிறந்த குடும்ப தலைவியா இல்லையா என்று  தெரியவில்லை. ஆனால் ஒரு நல்ல அரசியல் தலைவி. அதில்   எந்த வித சந்தேகமும் கிடையாது.
அகில ரூபனின் எண்ணப்படி தான் மாப்பிள்ளை பெண்ணையும் அழைத்துக் கொண்டு சென்னையில் இருக்கும் ஆசிரமத்திற்க்கு செல்ல அனைத்து ஏற்பாடும் அகில ரூபனின் மேற்ப்பார்வையில் நடைப்பெற்றுக் கொண்டு இருந்தது. நவினோ அங்கு வந்த தங்கள் உறவு முறையினரிடம் கதை அளந்துக் கொண்டு இருந்தான்.
அதை பார்த்த ஒரு பெரியவர்…. “பரவாயில்ல  பெத்த பிள்ளையோட தத்து பிள்ளை பொறுப்போடு எல்லாம் எடுத்து செய்யிறார்.” என்று சொன்னதை  கேட்ட மற்றும் ஒரு பெரியவர்…
“பார்த்து பேசுங்க..அவங்க வீட்டில் இருப்பவங்க ஒருத்தர் காதில் விழுந்தாலும் அவ்வளவு தான்.” என்று பயந்துக் கொண்டு அவரின் வாயை அடைத்து விட்டார்.
ஆனால் அதை கேட்டு விட்ட சீதாராமனின் அன்னையும் சரி பவானியம்மாவின் அன்னையும் சரி கோபமாக அவர்களிடம் ஏதோ கேட்க வர…
ஆசிரமத்திற்க்கு செல்ல தன் பாட்டிமார்களை அழைக்க வந்த அகில ரூபன் காதிலும் இது விழ தான் செய்தது…விழுந்த வார்த்தை அவன் மனதை பலமாக தாக்கவும் செய்தது.ஆனால் எப்போதும் போல் தன் வருத்தத்தை முகத்தில் காட்டாது..பாட்டிமார்களின் கைய் பிடித்து தடுத்தவன்…
“வாங்க நேரம் ஆயிடுச்சி.” என்று அழைத்து  சென்று விட்டான்.
இக்கதை அனைத்தும் என் சொந்த கற்பனையே… பெயரும் சரி நடந்த சம்பவன்களும் சரி என் கற்பனை..இது யாரையும் குறிப்பிட்டு எழுதுவது கிடையாது… இது அனைத்தும் கற்பனையே…கற்பனையே…. யாரையும் குறிப்பிடுவது கிடையாது.

Advertisement