Advertisement

அத்தியாயம்….1
சென்னையிலேயே  இருக்கும் மிக பெரிய மண்டபத்தில் தான் அந்த திருமண விழா நடந்துக் கொண்டு இருந்தது.  மக்கள் வெள்ளத்தை கட்டுப்படுத்த  காவல்துறை அந்த மண்டபத்தை சுற்றி  வளையம் போல் காவல் காத்துக் கொண்டு இருந்தாலும், அதையும் மீறி ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ  என்ற  அந்த பயம் காவல் காத்துக் கொண்டு இருந்த ஒரு சில காவலர்களுக்கு இருக்க தான் செய்தது.
பின் இருக்காதா..இப்போது இந்த திருமண மண்டபத்தில் நடைப்பெற இருக்கும் திருமணம் சாதரணப்பட்டவர்களோடது இல்லையே… இந்த மாநிலத்தின் முதல் அமைச்சர் பவானி அம்மாவுக்கும், இந்த சென்னை மாநகரத்தின் கலெக்ட்டருமான சீதாராமனுக்கு கடைக்குட்டியாக பிறந்த அனிதாவுக்கு திருமணம் என்பதால் இந்த பெரும் கூட்டம் வரும் என்று கருதி இந்த பலத்த பாதுக்காப்பு என்றால்…
இன்னொரு காரணம் சென்னை மாநிலத்தின் ஐ.பி.எஸ் வெற்றி மாறனுக்கும் சென்னையில் இன்டெர்நேஷனல் என்று பெயர் வாங்கிய V.M   மருத்துவமனையின் நிற்வாகியும் அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவருமான புவனேஷ்வரியின் தவப்புத்திரன் அஷ்வத் மாப்பிள்ளை என்னும் போது பாதுகாப்புக்கு சொல்லவும் வேண்டுமோ…
கூடுதலாக பெண்ணின் அண்ணன் நம் கதையின் நாயகன் அகில ரூபன்  கல்வித்துறை அமைச்சராய் இருக்கும் போது  இந்த கூடுதல் பாதுகாப்பு இல்லை என்றால் தான் அதிசயம
திருமணம் மாப்பிள்ளை வீடு செய்வதால் முறையாய் பெண் அழைப்பு நடந்துக் கொண்டு இருந்தது.அதனால் மண்டபத்தின் வாசலில் பெண் வந்து  நிற்க அவர்கள் குடும்ப வழக்கப்படி பெண்ணை வர வேற்க நம் கதையின் நாயகியும் மாப்பிள்ளையின் தங்கையுமான ஸ்ரீமதி ஆலம் சுற்றி வரவேற்றாள்.
ஆலம் சுற்றியதற்க்கு பரிசாய் அவள் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த மணப்பெண்ணின்  மற்றொரு சகோதரன் நவின் அந்த ஆலத்தட்டில் பணத்தை வைக்கவும்..
இதுவும் ஒரு சடங்கு என்று அதை பெற்றவள் அவனிடம் ஒரு சிறிய சிரிப்பை உதிர்த்து விட்டு அந்த ஆலத்தை மண்டபத்தின் வெளியில் ஊற்ற வந்தவள் சுற்றி ஒரு காவல் துறைபடையே சூழ..
தன்னை சுற்றி வந்த பாதுகாப்பு படையை பார்த்த ஸ்ரீமதி எப்போதும் போல் முகம் வெறுப்பை காட்ட…“நான் இங்கு தான் இதை ஊற்ற போறேன்.” என்று சொன்னவளின் பேச்சை கேட்காத அந்த காவல்துறையினர்..
“பரவாயில்ல மேடம் வாங்க….” என்று சொல்லிக் கொண்டே அவள் நடக்க வழியை ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் போதே அந்த காவலனின்  கண் நாளா பக்கமும் பார்த்துக் கொண்டே அவன் இரண்டடி எடுத்து வைத்தவன் கூடவே வர வேண்டிய ஸ்ரீ மதி வராது அதே இடத்தில் தங்கி விட்டதை பார்த்து…
“மேடம்…” என்று தன் கையை முன்னே நடக்கும் மாறு சைகை செய்தவனின் கையிலேயே அந்த ஆராத்தி தட்டை வைத்து விட்டு  கூடவே நவின் கொடுத்த பணத்தையும் கொடுத்து விட்டு…
“நீங்களே ஊத்திடுங்க..” என்று சொல்லி விட்டு நடந்து மண்டபத்திற்க்குள் உள் நுழைந்தவள்  நேராக சென்ற இடம் தனக்கு என்று  கொடுத்த அறைக்கு…  அறைக்குள் நுழைந்தவள் அங்கு இருந்த கட்டில் மீது அமர்ந்தவளின் கை தன்னால் தலையை தாங்கிக் கொண்டது…
இது இதுக்காக தான் இந்த இடம் வேண்டாம் என்று  வீட்டில் இந்த திருமண பேச்சு நடந்த நாளில் இருந்து  இந்த சம்மந்தத்தை இவள் மறுத்தது. ஆனால் இவள் மறுத்தும் இதோ திருமணம் வரை வந்து விட்டது.
இவள் மறுத்தும் இந்த திருமணம் நடக்க காரணம். இது பெரியவர்கள் பார்த்து வந்த சம்மந்தம் கிடையாது… இவள் அண்ணன்  தங்கள்  மருத்துவமனையில் குழந்தை நலமருத்துவனாய்  இருக்க…இப்போது மணப்பெண்ணாய் மேடையில் அமர்ந்து இருக்கும் அனிதா அந்த மருத்துவமனையில் பயிற்ச்சி மருத்துவராய் வந்தவள்..
அனிதாவுக்கு இவளின் அண்ணன் பயிற்ச்சியோடு தன் காதலும் கொடுக்க… அனிதாவும் பயிற்ச்சியை நல்ல விதமாய் பயின்றாளோ இல்லையோ காதலை நன்றாக பயின்றதால் இதோ இன்று திருமணம் வரை வந்து விட்டது.
இவள் இத்திருமணத்தை  மறுக்க காரணம் பெண்ணை பிடிக்காததாலோ..இல்லை அவர்களின்  குடும்பத்தை பிடிக்கவில்லை என்றோ இல்லை… அவள் மறுப்புக்கு காரனம் அவர்கள் குடும்ப உறுப்பினர் வகித்து வந்த பதவி.. 
அவளுக்கு சிறு வயது முதலே இது போல் பதவி அதனால் வரும் ஆபத்து அதை தடுக்க என்று கொடுக்கும் இந்த பாதுகாப்பு வளையம் இது எல்லாம் சுத்தமாய் அவளுக்கு பிடிக்காததே காரணம்..அவளுக்கு இந்த பதவி பிடிக்காததிற்க்கு  ஒரு காராணம் இருக்கிறது. 
ஆனால் அதை நினைப்பது இல்லை. நினைத்தால் அடுத்து அவள் அவளாய் இருக்க  மாட்டாள்.அதனால் கூடிய மட்டும் அதை நியாபகம் படுத்தும் மாறு ஏதாவது நடந்தால்   அதை தவிர்த்து விடுவாள். இன்று போல்…ஆம் இப்போது அந்த காவல் துறை தன்னோடு வந்த போது..ஏனோ அந்த நியாபகம்.
அதுவும் இந்த மண்டபத்தில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து..அவள் அவளாய் இல்லை. மண்டபத்தை சுற்றி காக்கி  சீருடையை பார்க்க பார்க்க…எப்போது  இங்கு இருந்து போவோம் என்றாகி விட்டது.
மாப்பிள்ளையின் தங்கை என்னும் போது அது எப்படி சாத்தியம்..அதனால் பல்லை கடித்துக் கொண்டு எப்போது இந்த திருமணம் முடியும்..நாம் எப்போது போவோம் என்று காத்துக் கொண்டு இருக்கிறாள்.
இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் தன் அன்னை தன்னை அழைப்பார் போக வேண்டும்.என் சங்கடங்களை மறைத்துக் கொண்டு முகத்தில் புன்னகையை போலியாக  பூசிக் கொண்டு நிற்க வேண்டும்.
இல்லை என்றால் நாளைய தலைப்பு செய்தி இதுவாக கூட வரலாம்… “ முதல் அமைச்சரின் குடும்பத்தில் பிரச்சனையா…?காரணம் மருமகனின் தங்கையா…?என்று சொல்வதற்க்கு இல்லை…
அவள் நினைத்தது போலவே மூச்சு வாங்க அங்கு வந்த புவனேஷ்வரி… “ஏன்டி ஏன்டி இப்படி இருக்க…அங்கு எல்லோரும் நாத்தனார் எங்கே…? எங்கேன்னு…? கேட்டுட்டு இருக்காங்க..நீ இங்கு வந்து ஹாயா உட்கார்ந்துட்டு இருக்க… உனக்கு என்ன தான்டி பிரச்சனை…?”
தங்கள்  முறையில் திருமணம் மாப்பிள்ளை வீடு தான் செய்ய வேண்டும். அதன் படி கல்யாண வேலை தலைக்கு மேல் இருக்க..இவள் தனக்கு உதவி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. இது போல் எதிலும் பங்கு கொள்ளாமல் உட்கார்ந்து இருந்தால் பார்க்கிறவங்க என்ன சொல்லுவாங்க…?
நேற்றே தன் பெரியம்மா… “என்னடி புவனா உன் பெண் மூஞ்சுயிலே சுரத்தே இல்ல…” என்று கேட்டதற்க்கு தான் பதில் அளிக்கும் முன்..
தன் பெரியப்பா சொன்ன… “வீட்டில் பெண் இருக்க பையனுக்கு கல்யாணம் செய்தால் அந்த பெண்ணுக்கு ஏக்கம் இருக்க தானே செய்யும்.” என்று  அவர் சொன்னதற்க்கு…
“இல்ல பெரியப்பா அதெல்லாம் இல்ல.” என்று  புவனேஷ்வரியின் மறுப்பை காதில் வாங்காது…
“பெண்ணுக்கும் பையனுக்கு மூன்று வயது தானே வித்தியாசம்…அதிகம் இருந்தா கூட பரவாயில்ல.. அதுவும் இந்த கல்யாணப்பெண் நம்ம மதியோட ஒரு வயது தான் கூட.. அப்படி இருக்கும் போது  அந்த ஏக்கம் இருக்க தானே செய்யும்.”
ஸ்ரீமதி கல்யாணத்தில் மகிழ்ச்சியாக பங்கு கொள்ளாததிற்க்கு இது தான் காரணம் என்பது போல் சொல்பவரிடம்   மறுத்து வாதாட முடியாது ஒரு காரணம் என்றால்.. மற்றொரு காரணம் நேரம் இல்லாதது.. 
அதனால்  ஒரு புன் சிரிப்போடு அவரை கடந்து விட்ட புவனேஷ்வரியின் மனதில் இது போல் யார்…? யார் என்ன என்ன நினைச்சிட்டு இருக்காங்களோ..இந்த பெண் ஏன் இப்படி இருக்கிறாள் என்று நினைத்ததை தன் மகளிடம் கேட்டே விட்டார்.
“உங்களுக்கு தெரியாதா…?” என்று சொல்லும்  தன் மகளின் பார்வைக்கு பதில் அளிக்க முடியாது ஒரு நிமிடம் தடுமாறிய புவனேஷ்வரி..
“மதி ஒரு சிலதை நாம நினைக்க கூடாது..நினைத்தால் நம் நிம்மதி தான் கெடும் என்றால் அதை நினைக்காம இருப்பது தான் நல்லதுடா…”
தன் மகளின் முகத்தை பற்றி  வாஞ்சையுடன் தலை கோதிய வாறு சொன்ன தாயின் கையை தட்டி விட்ட ஸ்ரீமதி… “அது தான் மறக்கனும் என்று நினத்தாலும் மறக்காம இருக்க சம்மந்தம் பேசி இருக்கிங்களே…” என்று கோபமாக பேசுபவளிடம் என்ன சொல்லி புரிய வைப்பது.
பிள்ளைகளுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்து வளர்த்து விட்டு, இப்போது திருமணம் என்று வரும் போது “இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன் என்றா சொல்ல முடியும்…?அதுவும் நியாயமான காரணம் இல்லாத போது…”
புவனேஷ்வரி தன் பொறுமையை இழுத்து பிடித்தவளாய்… “மதி உனக்கே தெரியும். இது நாங்க பார்த்த இடம் இல்ல…உன் அண்ணன் விரும்பிய இடம்… இதை எப்படி நாங்க  மறுப்பது.” என்ற பேச்சில்..
“அப்போ நானும் யாரை விரும்பினாலும் அவனை எனக்கு கல்யாணம் செய்து கொடுத்திடுவிங்களா…?” என்று  ஸ்ரீமதி கேட்ட மறு நிமிடம்..
“மறுக்க காரணம் எதுவும் இல்லை என்ற பட்சத்தில் கண்டிப்பா அவனுக்கே உன்னை கல்யாணம் செய்து கொடுப்போம்.” என்று சொன்ன புவனேஷ்வரி..
தொடர்ந்து… “ஏன்டி ..உன்னையும் உன் அண்ணனையும் நாங்க ஒரே மாதிரி தான் வளர்த்தோம். அப்படி இருக்கும் போது கல்யாணம் என்று வரும் போடு மட்டும் வேறு பட்டா பார்க்க போறோம். பேசனும் என்று ஏதாவது பேசி வைக்காதே….” என்று தன் அன்னை கடிந்து சொன்னாலும், அந்த பேச்சு உண்மை என்ற பட்சத்தில் எதுவும் பேசாது…  அமைதியாகி விட்டாள்.
சரி தான்…இது காதல் திருமணம்.. இதை ஏன் ஒத்துக்கிட்டிங்க…?என்று  தன் அன்னையிடம் சண்டையிட்டு என்ன பிரயோசனம்…?என்று நினைத்தவள் கூடவே தன் அண்ணனை  மனதில்  திட்டி தீர்த்தாள்.
“இவனுக்கு லவ் பண்ண வேறு பெண்ணே கிடைக்கலையா….?” என்று…அவள் மனதில் திட்டிக் கொண்டு இருக்கும் போதே அங்கு வந்த வெற்றி மாறன்..
“மகள கூட்டிட்டு வர்றேன்னு வந்துட்டு நீயும் அவ கூட உட்கார்ந்துட்டு கதை அடிச்சிட்டு இருக்கியா…? நான் கல்யாண வேலை பார்ப்பேனா..இல்லை பாதுகாப்பு வேலை பார்ப்பேனா…? ஒரு பொறுப்பு இருக்க வேண்டாம்.” என்று திட்டிக் கொண்டு இருப்பவரை ஸ்ரீமதி நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
புவனேஷ்வரி தான்.. “இல்லங்க..தலை கொஞ்சம் கலைந்து இருக்கு..அது தான் சரிப்படுத்திட்டு இருந்தேன்.” என்று ஏதோ சொல்லி சமாளித்து விட்டார்.
அப்போது  வெற்றி மாறனின் கைய் பேசி இசை எழுப்ப..அதை ஏற்றவரின் முகம்  பதட்டத்தை  பூசிக் கொண்டது… 
“பாதுகாப்பு எல்லாம் சரியா இருக்கா சந்தோஷ்  ஒரு சின்ன தப்பு கூட இருக்க கூடாது. சந்தேகம்படும் படி யார் கண்ணில் பட்டாலும் யோசிக்காதே வெளியில் அனுப்பி விடு.” என்று தொடர்ந்து பல கட்டளைகளை இட்ட அந்த வெற்றி மாறன் தன் கைய் பேசியை அணைத்தவர் அதே முகபாவனையோடு  தன் மனைவி மகளை பார்த்தவர்..
“இப்போ பவானி மேடமும் கலெக்ட்டர் சீதா ராமன்., அமைச்சர்  அகில ரூபன் வர்றாங்க…நான் பாதுகாப்பை வேற பார்க்க வேண்டும்.  நீங்க ..சீக்கிரம் வாங்க.” என்று சொல்லி விட்டு அவசர அவசரமாக பாதுகாப்பு ஏற்பாடு அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்க்க அந்த அறையை விட்டு  சென்றார் என்று சொல்வதை விட ஓடினார் என்று தான் சொல்ல வேண்டும்.
தந்தையின் தலை மறைந்ததும்… “சுத்தம் இன்னும் பெண்ணோட அம்மா அப்பா அண்ணனே வரலையா….?” என்று கேட்டவள்.
பின் ஏதோ யோசனை செய்தவள்..அப்போ ஆலம் சுத்தும் போது எனக்கு பணம் கொடுத்த அண்ணன் எந்த பதவியிலும் இல்லையா….?” என்று கேட்டவள் பின் அவளே..
“இல்லையா தான் இருக்கும். அது தான் முதல்ல வந்து இருக்கார்.” என்று சொன்னவள் மீண்டும் மீண்டும் அவளுக்கு சந்தேகம் வந்தது போல..
“ஆமா இப்போ அப்பா  முதல் அமைச்சர் கலெக்ட்டர்  அமைச்சர்  வர்றார் என்று சொல்லிட்டு ஓடுறாரே… அண்ணன் கல்யாணத்துக்கு பிறகும் இதே போல் தான் ஒடுவாரா…?” என்று சந்தேகம் கேட்ட மகளுக்கு பதில் அளிக்காது அவள் கை பிடித்து  இழுத்துக் கொண்டு மணமேடைக்கு சென்றார்.
ஸ்ரீமதியும் தனிமையில் காட்டிய முகபாவத்தை காட்டாது முகத்தில் புன்னகை பூசிக் கொண்டு கல்யாணப்பெண்ணின் பின் நின்றுக் கொண்டாள். மேடையில் இருந்து  அமர்ந்து இருந்தவர்கள் அனைவரையையும் ஸ்ரீமதியால் நன்றாகவே  பார்க்க முடிந்தது.
பாதி பேர் மேடையில் அமர்ந்து இருக்கும்  மணமக்களை பார்த்தார்கள். அதில் ஒரு சிலர் ஸ்ரீமதியையும் ஆவளோடு பார்த்தனர் தான். அவர்கள் பிள்ளையை பெற்றவர்களாய் தான் இருப்பர் என்ற யூகம் ஸ்ரீமதிக்கு.
இருபத்தி நான்கு வயதில் இருக்கும் படித்த அழகான வசதியான பெண்ணை பார்த்தால் மகனை பெற்ற தாய்மார்களுக்கு இருக்கும் நியாயமான ஆசை… “இந்த பெண்ணை கேட்டு பார்க்கலாமா….?” என்ற எண்ணத்தில் தன்னை பார்த்தது கூட தவறு இல்லை.
 

Advertisement