Advertisement

நிலவு – 24
    காலை அலுவலகம் கிளம்பியவன் முதல் நாள் எடுத்துவந்து இருந்த பைல்களில் முக்கியமான ஒன்றை காணவில்லை என்று தன் அரை முழுவதும் தேடிக்கொண்டிருந்தான் விபீஷ். 
எத்தனை தேடியும் கிடைக்காமல் இருக்க தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தவன் நன்றாய் யோசித்து பார்த்தான். வேறெங்கும் வைத்ததாக சுத்தமாக நினைவில்லை. எங்கே எங்கே என குழம்ப சீமா உள்ளே வந்தாள்.
“சீமா இங்க இருந்த ரெட் கலர் பைல் பார்த்தியா?…” என கேட்க அவளோ இல்லை என்பதாக தலையை மட்டு அசைக்க அதை கவனியாதவன் மீண்டும் கேட்டான்.
“உன்கிட்ட தான் கேட்கறேன் சீமா? பைல் பார்த்தியா?…” என மீண்டும் தேடிக்கொண்டே தான் கேட்க வாயை திறந்து அவள் பதில் சொல்லாமல் தலையை இல்லையென ஆட்டிவிட்டு அங்கிருந்த வாட்டர் ஜக்கை எடுத்து செல்ல அவள் செல்ல போவதை கவனித்தவன் கையை பிடித்து வேகமாய் இழுத்தான்.
இழுத்த வேகத்தில் கால் வழுக்கி கீழே விழ போனவளை அவன் தாங்க சட்டென அவனை தள்ளிவிட்டு தானும் கீழே விழுந்தவள் அவனை முறைத்துவிட்டு செல்ல பார்க்க அவளின் செயலில் வெகுண்டவன் மீண்டும் இழுத்துபிடித்து கதவை பூட்டினான்.
“என்னடி நினைச்சுட்டு இருக்க? கேட்டா பதில் சொல்லமாட்டேன்னு திமிரா இருக்க. தொட்டா தள்ளிவிடற. என்னவோ நன் உன்னை தொட்டதே இல்லை பாரு?…” என பொரிய அவனை தாண்டிக்கொண்டு செல்ல முற்பட அதில் இன்னமும் கொதித்து போனான்.
“என்னை என்னன்னு நினைச்சுட்டு இருக்க சீமா? என் கோபத்தை ரொம்ப மூட்டற நீ…” என அவளின் கைகளை பிடித்து அழுத்தம் கூட்ட வலியில் முகம் சுருக்கியவள்,
“கையை விடுங்க முதல்ல. வலிக்குது…”
“உண்மையை சொல்லுடி, நானா தொட்டதால தான வலிக்குன்னு சொல்ற?…” என அவளிடம் வேண்டுமென்றே பேச,
“ஆமா அதுக்கு இப்ப என்ன? நீங்க தொட்டு பேசறது புடிக்கலை…” என்றாள் வெடுக்கென்று. 
அவளின் உதாசீனத்தில் இன்னமும் வெறி கொண்டவன் தனது அணைப்பிற்குள் வலுக்கட்டாயமாக கொண்டுவந்து நிறுத்த சீமா அவனை விட்டு விலகுவதிலேயே குறியாய் இருந்தாள்.
“நான் தொட தானே இந்த தாலியை என் கையால காத்திருந்து வாங்கியிருக்க பொண்டாட்டி? என்னை விட வேறு யாரு உன்னை நெருங்க முடியும்? நான் உன் புருஷன் சீமா…” என எச்சரிக்கும் குரலில் கூறினாலும் உரிமை லட்சம் லட்சமாய் கொட்டிக்கிடந்தது அவனின் வார்த்தையில்.
இந்த உரிமை அவனிடம் வரவேண்டும் என்று தானே இத்தனை விலகலும், வீராப்பும். இதோ அவனே அவனின் வாயால் அவளிடம் சொல்லிவிட்டான் தனக்கான உறவென்ன என்பதை.
ஆனால் இது மட்டும் போதாதே சீமாவிற்கு. அவனின் மனதில் வெண்மதி இன்னமும் இருக்கிறாளா என்று அவளுக்கு தெரியவேண்டி இருந்தது.
அதிலும் தங்கள் திருமணம் முடிந்த அன்று தன்னிடம் அவன் பேசியவை இன்றுவரை உயிருடன் அவளை வலிக்க செய்கிறதே. இன்று அவளின் விழிகள் அதனை பிரதிபலிக்க அதை உணரத்தான் அவனால் முடியவில்லை.
“சொல்லு சீமா, எனக்கு இன்னைக்கு பதில் தெரிஞ்சாகனும்…” என கத்த,
“நீங்க என்ன கொண்டுவரீங்க, எங்க வைக்கறீங்கன்னு பார்க்கறது தான் என் வேலையா?. எனக்கு எதுவும் தெரியாது. எந்த பைலையும் நான் பார்க்கலை…” என்று சொல்லியவள் அவனிடமிருந்து விலக பார்க்க அவனோ வேண்டுமென்றே தன வளைவிற்குள் அவளை விடாது பிடித்துவைத்தான்.
சீமா சொல்லிய எதுவும் எனநின் கருத்தை கவரவில்லை. எதுவோ பேசினால் அவ்வளவே. 
அவள் தன்னிடமிருந்து திமிற திமிற கணவனாய் அவளிடம் எல்லைகளை தாண்டிய உரிமை உள்ளது என்னும் கர்வத்தில் அதை அவளிடம் காட்ட நினைக்க அவளோ அதற்கு இடமளிக்கவே இல்லை.
“சீமா நீ என்னை என்னவோ வேற மாதிரி நினைச்சுட்டு இப்படி பன்ற. என்னை என்னன்னு நினைக்கற? அந்தளவுக்கு நான் கேவலமானவனா? இப்போ உன்னோட கணவனா உன்கிட்ட எல்லா உரிமையும் என்னால் எடுத்துக்க முடியும்…” என பல்லை கடிக்க,
“எப்படி அந்த வெண்மதியை மனசுல நினைச்சு என் கூட குடும்ப நடத்துவீங்களா? அதுக்கு நான் செத்து போகலாம்…” என தீ கங்குகளாய் அவள் வார்த்தைகளை சூடாய் வெளியிட தீ சுட்டதை போல பட்டென அவளை விட்டு தள்ளி நின்றான் விபீஷ்.
“ச்சீ, என்ன பொண்ணுடி நீ? இன்னொருத்தன் பொண்டாட்டியை நினைச்சு என் பொண்டாட்டிட்ட. அசிங்கமா இல்ல. நினைக்கவே அருவருப்பா இருக்கு சீமா…”
“ஆஹாஹஹஹா, அப்படியே ரொம்ப உத்தமர் தான. என் கிட்ட நீங்க வெண்மதியை பேசறப்போ கூட அந்த பொண்ணு இன்னொருத்தன் மனைவி தான். நான் உங்க மனைவி ஆகிட்டேன். ஆனாலும் பேசாமலா இருந்தீங்க?…” என்றவளின் கண்ணீர் விபீஷை உலுக்க அவன் செய்த மடத்தனம் அப்பொழுது தான் உரைத்தது.
“சீமா அது எதுவோ…” என அவளை சமாதானம் செய்ய முற்பட,
“நீங்க என்னை தொட்டா கூட எனக்கு  அப்படித்தான் தோணும். எனக்கும் தெரியும் இப்படியே வாழ்க்கை போய்டாது. நாம சேர்ந்து வாழ்வோம்னு புரியுது. ஆனாலும் உங்க லவ். அதை நீங்க என்கிட்டே சொன்ன விதம். என்னால ஜென்மத்துக்கும் மறக்க முடியாது…” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட எங்கும் செல்ல தோன்றாமல் அப்படியே படுத்துவிட்டான் அவன்.
அன்றைய வெளிய எதையும் பார்க்க தோன்றாமல் இருக்க அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததும் தான் கிளம்பினான். 
அப்பொழுதும் சீமாவை பார்த்துக்கொண்டே செல்ல இவனை பார்த்தவள் முறைப்புடன் முகம் திருப்ப ஏனோ மனது லேசானது அவளின் கோபத்தில். மெல்லிய சிரிப்புடன் கிளம்பியவன் வேலையை முடித்துக்கொண்டு வர வரும் வழியில் தான் வெண்மதியை மழையில் பார்த்தான்.
அவளை அவளின் திருமணத்திற்கு முன்பு பார்த்தது. அதன் பின் இன்று தான் பார்க்கிறான். வெண்மதியை பார்த்ததும் காரை அவளருகே கொண்டு நிறுத்தி கண்ணாடியை இறக்க அவளும் கண்டுகொண்டாள்.
விபீஷை பார்த்து அதிரவெல்லாம் இல்லை. இவனா என்பதை போன்ற ஒரு அலட்சியம் கலந்த பார்வை. அதுவே அவனை உசுப்பேற்ற போதுமானதாய் இருந்தது.
“அத்தனை சொல்லியும், மிரட்டியும் அவனை திருமணம் செய்துகொண்டாய் நீ” என்பதாய் பார்த்தவன் மனதில் சட்டென்று மின்னலடிக்க முகத்தை மாற்றிகொண்டவன் காரை விட்டு இறங்கினான்.
“என்ன வெண்மதி மழையில் நனைஞ்சிட்டு இருக்கீங்க? வாங்க நான் ட்ராப் பன்றேன்…” என்றான் அவளின் ஸ்கூட்டியை பார்த்துக்கொண்டே.
“உங்க வேலையை பார்த்துட்டு போறீங்களா?…” என அவள் பதில் கொடுக்க,
“இல்லை இந்த ஏரியா அவ்வளவா சேஃப் இல்லை. இன்னும் கொஞ்சம் நேரத்துல இருட்டிடும். அதான் ஒரு ஹெல்ப்பிங் மைண்ட்ல தான் கூப்பிட்டேன். மத்தபடி மனசுல எதுவும் இல்லை…” என சொல்ல சிறிது யோசித்தவள் செல்லலாம் என்பதை போல பார்த்தாள்.
அவளுக்குமே அவனிடம் பேச வேண்டியதிருந்ததே. அதனால் அவனை கண்டு புன்னகைத்தவள்,
“ஓகே, லெட்ஸ் கோ…” என்று இலகுவாய் சொல்லவும் விபீஷின் புன்னகை விரிந்தது.
“இருக்குடா முரளி உனக்கு” என கருவியபடி வெண்மதி ஏறவும் காரை கிளப்பினான்.
சிறிது தூரம் சென்றதும் அவன் வழி மாற திரும்பி அவனை பார்த்தவள் எதுவும் பேசவில்லை.
“என்ன வெண்மதி எங்க போறோம்ன்னு கேட்க மாட்டீங்களா? பயமா இல்லையா?…” என கேட்க,
“ஏன் உங்களுக்கே தெரியலையா? கண்ணு தெரியுது தான?…” என்றவளின் குரலில் இருந்த கேலியில் முகம் கன்றியவன் சட்டென முரளிக்கு அழைக்க வெண்மதிக்கு உள்ளூர சற்று கலவரம் தான். 
முரளி டென்ஷன் ஆகிவிடுவானோ என்று நினைத்து கலங்கியவள் தனது கலக்கத்தை விபீஷ் காணாது மறைத்துகொண்டாள். 
“இன்று இதற்கொரு முடிவு கட்டிவிட்டு தான் வேறு வேலை” என நினைத்து முரளி எடுக்க காத்திருக்க முரளி அழைப்பை ஏற்றதும்,
“என்ன முரளி நீ? உன் வொய்பை பார்த்துக்கறதை விட உனக்கு வேற என்ன வேலை? இப்ப நான் பார்த்து கூட்டிட்டு வரேன். ப்ச்…” என சலிப்பாய் பேச முரளியின் ரத்த அழுத்தம் எகிறியது.
“விபீஷ் விளையாடாதீங்க…” என்றவனின் குரலில் இருந்த தவிப்பில் சந்தோஷித்தவன்,
“இதுதான் இதுதான் வேணும் எனக்கு. ஆட்டமா காட்டற?…” என்று குதூகலிக்க அவனின் மகிழ்வை கண்டவள்,
“அட அற்பமே” என்று பார்த்துவிட்டு,
“முரளி, நான் சேஃப். நீங்க வொர்ரி பண்ண வேண்டாம். விபீஷே என்னை கொண்டுவந்து நம்ம வீட்ல விடுவாரு…” என்று தைரியமாய் சொல்ல,
“வெண்ணிலா…” என்ற அவனின் ஒற்றை அழைப்பில் விபீஷிற்கு தடுமாற்றம் பிறக்க வெண்மதிக்கு கண்கள் கலங்கியது.
“எனக்கு ஒன்னும் ஆகாது முரளி. நான் வருவேன்…” என்று சொல்லி அவனின் அழைப்பை துண்டித்துவிட்டு விபீஷை பார்த்து முறைத்தாள்.
“என்ன என்னை அடிக்கனும், திட்டனும்னு கோபம் வருதா வெண்மதி? உன்னால என்ன பண்ண முடியும்?…” என்றவாறே காரின் வேகத்தை கூட்ட,
“தாராளமா வேகமா ஓட்டுங்க. ஆனா என்னை என் குழந்தையோட நல்லபடியா முரளிட்ட ஒப்படைக்கவேண்டிய பொறுப்பு இப்ப உங்களுக்கு இருக்கு…” என அசராமல் சொல்ல,
“வாட்?…” என்று அதிர்வாய் பார்த்தான்.
“என்னய்யா ஷாக் ஆகற? நான் அம்மா ஆகபோறது உனக்கு இவ்வளோ அதிர்ச்சியா?…” என கேலி பேச,
“வெண்மதி…” 
“நானே தான். சொல்லிட்டேன். என் குழந்தைக்கோ எனக்கோ ஒரு சின்ன கீறல் விழுந்தா கூட முரளி உன்னை சும்மா விடமாட்டார்…” என மிரட்ட,
“என்னை பார்த்தா எப்படி தெரியுது?…” என்றான் கடுப்பாய்.
“உங்களை பார்த்தா சத்தியமா கோபம் கூட வரலை. பாவமா தான் இருக்கு…”
“வாட் ரப்பிஷ். என்னை பார்த்து நீ பாவப்படறியா? என்னை என்னன்னு நினைச்ச?…” என்றவன் ஓரமாய் காரை நிறுத்திவிட்டு ஸ்டியரிங்கில் குத்த வெண்மதி நிதானமாக அவனை ஏறிட்டு அவன் புறம் திரும்பி அமர்ந்தாள்.
“படிச்ச முட்டாள்ன்னு நினைக்கறேன். பகுத்தறிய தெரியாத மனவளர்ச்சி இல்லாதவர்னு நினைக்கறேன். உங்ககிட்ட உண்மையை அறிஞ்சுக்க கூடிய பக்குவம் இல்லைன்னு நினைக்கறேன். இன்னும் நிறைய இருக்கு நினைக்க. சொன்னா அதை தாங்க கூடிய மனோபலம் உங்களுக்கு இருக்கான்னு தான் எனக்கு தெரியலை…”
“ஸ்டாப்பிட் வெண்மதி…” என்று கோபமாய் கத்தியவனின் முகம் அத்தனை பயங்கரமாய் மாறி இருந்தது.
“உன் மேல இன்னும் கொஞ்சம் சாப்ட் கார்னர் இருக்க போய் தான் இப்பவும் நான் பொறுமையா பேசிட்டு இருக்கேன்…”
“என் மேலையா? அதுக்கென்ன அவசியம்? நீங்க எனக்கு யாருமில்லை. உங்க சாப்ட் எனக்கு தேவையும் இல்லை. உண்மையை சொன்னா வலிக்குதா? அப்படி தானே இருந்திருக்கும் முரளிக்கு…” அவனுக்கு இணையான கோபம் அவளிடத்திலும்.
“இழப்பு எங்க பக்கம். நான் என் தங்கச்சியை இழந்திருக்கேன். உனக்கு புரியாது அது…”
“அந்த தங்கச்சியை பத்தி கூடவே வளர்ந்த உங்களுக்கு தெரியாம போச்சேன்ற ஒரு இரக்கம் தான் எனக்கு. ஆனாலும் அவ அதான் உங்க தங்கச்சி ரொம்ப க்ளவர். எவ்வளோ சுயநலம். இப்படி ஒரு தங்கச்சிக்காக நீங்க போராடறது தான் இன்னும் கேவலம்…”

Advertisement