Advertisement

நிலவு – 10
       மாலை வீடு வந்து சேரும் வரை வெண்மதியின் நினைவில் விபீஷின் நினைவே இல்லை. அதன் பின்னரும் அதை நினைக்கவே இல்லை. சுத்தமாய் மறந்துபோனாள்.
முரளி கோவிலுக்கு வரவேண்டும் என்று சொல்லி மீண்டும் மீண்டும் அழைத்துக்கொண்டே இருந்ததன் விளைவு அன்று முழுவதும் ஏதோ ஒரு ஞாபகத்தில் கழித்தவள் வீடு திரும்பிய பின்பும் நினைவின்றி தான் இருந்தாள்.
“காபி கொண்டு வரவா மதி?…” கலைவாணி பட்டும் படாமல் கேட்க அவரை பார்த்தவள் தலையசைத்துவிட்டு செல்ல,
“அவ தான் கோவமா இருந்தா நீ பேசவேண்டியது தான கலை?…” நடேசன் சொல்ல,
“ஏன் பேசனும்? அதெல்லாம் முடியாது. இப்ப நான் பேசினா திரும்பவும் அவ முறுக்கிப்பா. அதுக்கு நானே கொஞ்சம் விரைப்பா இருந்தா தான் பேசாம இருப்பா…”
“ஹ்ம்ம், என்னவோ சொல்ற. அதை விடு. உன் அக்காவுக்கு சொல்லிட்டியா?…”
“ஹ்ம்ம் சொல்லனும். எப்படியும் சொல்லித்தான ஆகனும். இல்லைனா மட்டும் விட்டுடுவாங்களா?…”
“சொல்லிடு கலை. லேட்டா சொன்னா அதுக்கும் ஏதாவது பேசுவாங்க…”
“பேசட்டுமே, அன்னைக்கு  அவங்க மட்டும் அத்தனை பேசாம இருந்திருந்தா நான் யோசிச்சிருப்பேன். மதியோட மனசையும் உடைச்சுட்டாங்க அவங்க. என் பொண்ணு என்னவெல்லாம் நினைச்சு துடிச்சிருப்பா…”
நடேசனுக்கு அதை கேட்கவே பிடிக்கவில்லை. மீண்டும் மீண்டும் கலைவாணி நடந்ததை சொல்லி புலம்புவதை வெறுத்தவர்,
“இங்க பாரு கலை. உனக்கு கடைசியா சொல்லிக்கறேன். இனிமே நின்ன கல்யாணம் பத்தி நீ பேசாத. பேசவும் கூடாது…” என்று கோபமாய் சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்துவிட நடேசனின் இந்த கோபமும் கலைவாணியின் குற்றவுணர்வை அதிகமாக்கியது.
“என்னாச்சும்மா?…”  என சத்தம் கேட்டு வெண்மதி எழுந்து வர பதறி திரும்பினார் கலைவாணி.
“அது ஒண்ணுமில்லைம்மா. கோவிலுக்கு போறதை பத்தி பேசிட்டு இருந்தோம்.  ப்ரெஷ் ஆகிட்டியா நீ?…” என அங்கிருந்து நகர வெண்மதியின் மனதினுள் சுருக்கென்ற வலி.
சில உண்மைகள் உயிர் போகும் வேதனையை கொடுக்கும். அப்படித்தான் வெண்மதிக்கும் கொடுத்தது. நடப்பவை அதன் போக்கில் நடக்கட்டும் என்று விட்டுவிட ஒரு மனம் சொன்னாலும் அதெப்படி என்று இன்னோர் மனம் முரண்டுகட்டி நின்றது.
“மதி, கோவிலுக்கு போறதுக்கு கொஞ்சம் பொருள் எல்லாம் வாங்கனும். லிஸ்ட் போட்டுடறேன். நாளைக்கு ஈவ்னிங் நீ வரப்ப வாங்கிட்டு வரையா?…” 
“நாளைக்கு முடியாது…” 
“மதி…” அவரின் கோபமான அழைப்பில் கடுப்பானவள்.
“மதிக்கறேன். போடுங்க…”  என்றுவிட்டு டிவியை போட்டுக்கொண்டு அமர நடேசன் வெளியே வந்தவர் மகளுடன் அமர்ந்துகொண்டார். 
பொதுவாக பேசிக்கொண்டே அவர்கள் இருவரும் காபி குடித்து முடிக்க கலைவாணி எழுதிக்கொண்டிருந்தார். முடித்து வெண்மதியிடம் வந்து பேப்பரை நீட்ட அதை வாங்கிக்கொண்ட நடேசன்,
“கலை, நாளைக்கு நாம ரெண்டு பேரும் போய் பொறுமையா வாங்கிப்போம். அவ கிளம்பவே லேட் ஆகிடும். அதுக்கப்பறம் போய் வாங்கிட்டு வர ரொம்ப நேரமாகிடும்…” என்றதும்,
“அப்பா உங்களுக்கு ஓகேவா?…” என்ற மகளை பார்த்தவர்,
“நாளைக்கு வேலை நாள் தானே? கூட்டம் இருக்காது மார்கெட்ல. ஒன்னும் பிரச்சனை இல்லை…”என்று முடித்துக்கொள்ள கலைவாணி மறுக்க அங்கொன்றும் இல்லாது போனது.
மறுநாள் காலையும் விபீஷ் அவளை பார்க்க அதே இடத்தில் நிற்க தூரமாகவே பார்த்தவள் வண்டியின் வேகத்தை அதிகப்படுத்தி மறித்து நின்றவனை சுற்றிக்கொண்டு முறைப்புடன் சென்றுவிட்டாள்.
அவளின் வேகம் கண்டு கோபமானவனை முரளியின் அழைப்பு திசை திருப்ப அதை அட்டன் செய்ததும்,
“என்ன பண்ணிட்டிருக்கீங்க விபீஷ்? திஸ் இஸ் டூ மச்…” என்றான் முரளி அடக்கப்பட்ட கோபத்துடன்.
“வாவ், நான் என்ன பன்றேன்னு உனக்கு தெரியுதோ? லுக் முரளி, நான் என்ன வேணாலும் செய்வேன். உனக்கு சொல்லனும்னு அவசியம் இல்லை. இது எத்தனை மச்சா இருந்தா எனக்கென்ன?…” அகங்காரம் அவனின் வார்த்தையில் தெறித்துவிழ, 
“விபீஷ் உங்க கோபத்தை என்கிட்டே காட்டுங்க இன்னொரு முறை நீங்க வெண்மதியை நெருங்கினா நல்லா இருக்காது சொல்லிட்டேன். இதுவரைக்கும் என் மனசுக்குள்ள ஏதோ ஒருவிதத்துல உங்க மேல ஒரு பரிதாபம் இருக்கறதால தான் பொறுமையா போய்ட்டிருக்கேன்…”
“ப்ளடி பரிதாபம். யூ யூ முரளி.  என்னடா என்னை பார்த்து பரிதாபப்படற அளவுக்கு நான் ஒன்னும் தாழ்ந்துபோகலை. உன்னை மாதிரி ஒன்னும் நான் திணறி முன்னுக்கு வந்தவன் இல்ல. பொறப்புலையே பணத்துல மிதக்கறவன்டா நான். நீ யார்ன்னு தெரியும் தானே?…”
விபீஷின் தன்மானத்தை வெகுவாய் சீண்டி இருந்தது முரளியின் பேச்சு. அவனின் பரிதாபமெனும் வார்த்தை.
“ஏன் தெரியாம? நல்லாவே தெரியும்ங்க. நான் பழசை மறக்கறவன் இல்லை. நன்றியும், துளியூண்டு குற்றவுணர்வும் இருக்கறதால தான் நான் நீங்க பன்ற அராஜகத்தை எல்லாம் பொருத்து போறேன். அந்த பொறுமையும் என்னளவில் மட்டும் தான்…”
“ரப்பிஷ், பொறுத்து போய்த்தான் ஆகனும். குப்பைல கிடந்த உன்னை கோபுரத்துல  உட்கார வச்சேன்ல. நீ பேசுவடா. உன் புத்திசாலித்தனத்தை என்கிட்டையே காட்டறியா?…”
“அந்த ஒரு காரணத்துக்காகவும் உங்கம்மாவுக்காகவும் தான் நீங்க இப்ப என்கிட்டே பேசிட்டு இருக்கீங்க. இல்லைனா வெண்மதிக்கு நீங்க ஏற்படுத்தின விபத்துக்கு நான் என்ன பண்ணியிருப்பேன்னே தெரியாது…” என்று ஆத்திரம் மிகுந்த குரலில் பேசியவன் கொஞ்சம் தன்னை அமைதிப்படுத்திக்கொண்டு பின்,
“இங்க பாருங்க, நீங்க சொல்றதை மறுக்கபோறதில்லை விபீஷ். அதுக்காக நீங்க எனக்கு பண்ணின அந்த ஒரு உதவி  தான் என்னை இங்க கொண்டுவந்திருக்கு. உயர்த்தியிருக்கு. அந்த ஒரு உதவிக்காக தான் அன்னைக்கு நான் அப்படி ஒரு முடிவெடுத்தேன். உங்க கோபத்தை கொஞ்சம் தள்ளிவச்சுட்டு சராசரி மனுஷனா யோசிங்க…”
“உன்கிட்ட எனக்கென்னடா பேச்சு? உன்னால ஆனதை பார்த்துக்கோ. ஆனா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லியே ஆகனும். வெண்மதி சச் எ வொண்டர்புல்…”
“விபீஷ்…” முரளியின் கோபக்குரல் விபீஷின் காதினுள் ரீங்காரமிட,
“சொல்லியே முடிக்கலை. அதுக்குள்ளே இத்தனை கோபமா? பொசசிவ்னஸ். ஹ்ம்ம். நல்ல இருக்கே இது கூட. நீ ஏன் அந்த பொண்ணை விடாம துரத்தறன்னு இப்ப புரியுது எனக்கு. என்னவோ இருக்கு அவகிட்ட…” என்று உண்மையாகவே சில்லாகித்து ரசனையுடன் சொல்ல முரளிக்கு உக்கிரம் அதிகமாகியது.
“எனிவே வெண்மதியை இனி நீ மறந்திரு முரளி. உன் லைப்ல அவ சேப்டர் இல்லை. இதுதான் நிஜம்…” என்றவன் மொபைலை வைத்துவிட முரளி அசைவின்றி அமர்ந்திருந்தான்.
“நோ விபீஷ்,  நீங்க தப்பு பன்றீங்க. ஐ கான்ட், ஐ கான்ட்…” என்று முனுமுனுத்தவன் மனதோ அடித்துக்கொண்டது.
விபீஷ் வெண்மதியை பற்றி பேசுகையில் அவனின் குரல் குழைந்து வர ஏதோ ஒரு எச்சரிக்கை மணியை எழுப்பியது முரளியுனுள்.
வெண்மதிக்கு பேசவேண்டும் போல் இருக்க அவளுக்கு அழைத்தான். இரண்டு தடவை அடித்து ஓய்ந்த பின்னர் மொபைலை பார்த்துக்கொண்டே அமர வெண்மதியே அழைத்துவிட்டாள்.
“என்ன நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க? உங்க இஷ்டத்துக்கு கால் பன்றீங்க? அதான் கோவிலுக்கு போகனும்னு நீங்க எல்லாரும் முடிவு பண்ணிட்டீங்கள்ள. வராமலா போய்டுவேன்?  மாட்டேன்னு சொன்னா மட்டும் யார் கேட்டுட போறா?…” என படபடவென பொரிய அதுவரை அடித்துக்கொண்ட மனது இறகை போல பறந்தது.
“சரி சொல்லுங்க, நான் கேட்கறேன்…” என்றான் சிரிப்புடன்.
“சிரிச்சவாயன்…” அவளின் குரல் மீண்டும் காதில் கேட்க இன்னும் சத்தமாய் சிரித்தான்.
“ஹைய்யோ சிரிக்க தான் போன் பண்ணுனீங்களா? எனக்கு வேலை இருக்கு. இன்னும் ஆபீஸ்க்குள்ளையே நுழையலை…” கடுப்பாய் சொன்னாலும் அதில் லேசாய் இருந்த சிணுங்களையும் கண்டுகொண்டவன் மனம் உல்லாச நிலைக்கு உருவெடுக்க,
“ஹ்ம்ம், அப்போ லீவ் போடுங்க. எங்கயாவது லாங் ட்ரைவ் போலாம்…” 
“அவ்வளோ தானா?…” இடுப்பில் கைவைத்துக்கொண்டு முறைப்பது இவனுக்கு தெரிந்ததோ? மனக்கண்ணில் அவள் இப்படித்தான் நின்றிருப்பாள் என்பது நினைத்தான் கண்மூடி அதனை ரசித்துக்கொண்டே,
“இருக்கே, இன்னமும் நிறையவே இருக்கு வெண்ணிலா. நான் சொல்லிடுவேன். உங்களுக்கு தான் கோபம் வரும்…” அவனின் குரலில் வந்த பேதத்தையும் கிறக்கத்தையும் அந்த அலைக்கற்றை மூலம் உணர்ந்தவள் உள்ளுக்குள் உண்டான படபடப்பில் மொபைலை வைத்துவிட்டாள்.
சிறிது நொடிகள் அங்கேயே நின்றவள் பின் முகத்தில் உறைந்த புன்னகையோடு அலுவலகம் நுழைந்தாள். அங்கேயும் முரளியின் அழைப்பும், பேச்சும் விபீஷை மறக்க செய்தது. அவன் பேசியதை முரளியிடம் சொல்லவேண்டும் என்ற  எண்ணம் வரவில்லை.
முரளிக்கு தான் உடனே அவளை பார்த்தே ஆகவேண்டிய அளவுக்கு நெஞ்சம் எகிறி குதித்தது. 
இன்னும் பதினைந்தே நாட்கள். இப்படி என்பதற்குள் ஓடிவிடும். அதன் பின்னர் வெண்மதி என் மதி என்ற உவகையுடனும் வெண்மதிஇடம் பேசிய உற்சாகத்துடனும் வேலையை பார்க்கலானான்.
ஆனாலும் மனதிற்குள் விபீஷின் பேச்சு ஓடிக்கொண்டே தான் இருந்தது. ராமிற்கு அழைத்து வெண்மதியை இன்னும் அதிகமாய் பாதுகாக்கவேண்டி அறிவுருத்தினான்.
இதை வெண்மதிக்கு அவளின் குடும்பத்திற்கு தெரியாமல் செய்யவேண்டிய சூழல். அவர்களுக்கு தெரிந்தால் மீண்டும் திருமணத்தில் பிரச்சனை வந்துவிட்டால்? இனி எந்த சஞ்சலத்திற்கும் பயத்திற்கும் இடம் கொடுக்க கூடாது என்று முஸ்திரமாய் டிவு செய்துகொண்டான்.
—————————————————–
வெண்மதியும் ஈஸ்வரியும் மதியம்நேரம் தங்கள் அலுவலகத்திற்கு எதிரே உள்ள ஐஸ்க்ரீம் ஷாப்பிற்கு வந்தனர். 
“இந்த மனுஷன் என்னை ஐஸ்க்ரீம் சாப்பிட அலோ பன்றதே இல்ல மதி. இன்னைக்கு எவ்வளோ ஹேப்பியா இருக்கு…” என சொல்லிக்கொண்டு ஈஸ்வரி காத்திருக்க,
“வயித்துல புள்ளைய வச்சுட்டு ஆசய பாரு? அவர் உன் நல்லதுக்கு சொன்னா உடனே முகத்தை தூக்கி வச்சுப்பியா? என்னாலையே பார்க்க முடியலை. அதான் கூட்டிட்டு வந்தேன். ஒன்னே ஒன்னு ஆசைக்கு சாப்ட்டுட்டு சமத்தா எழுந்து வந்திடனும். இல்ல உன் அம்மாக்கிட்ட சொல்லிடுவேன்…”
வெண்மதி செல்லமாய் மிரட்ட அவளையும் லேசாய் முறைத்த ஈஸ்வரி அதற்குள் ஐஸ்க்ரீம் வந்துவிட பேசிக்கொண்டே சாப்பிட ஆரம்பித்தனர்.
உண்டு முடித்து பில் பே பண்ணிவிட்டு எழுந்துகொள்ள திடீரென அங்கே விபீஷின் விஜயம்.
அவனை பார்த்ததும் முறைத்தவள் பின் யாரோ எவரோ என்பதை போல முகத்தை மாற்றிக்கொண்டாள். 
தன்னை பார்த்ததும் யோசனை பாவனைக்கு சென்று பின் கோபம் காட்டி அதன்பின் யார் என்பதைப்போல அறிமுகமற்ற பார்வையை முகத்தில் கொண்டுவந்த வெண்மதியின் நொடிநேர பரிமாணங்கள் விபீஷை சற்று சாய்த்தது.
தனக்குள் என்ன நிகழ்கிறது என்பதை உணர முடியாமல் அவளிடம் பேச வந்தது என்னவென்றும் மறந்த நிலையில் அவளை அப்படி பார்க்க வெண்மதிக்கு எரிச்சல் மண்டியது.
“பப்ளிக்ல எப்படி பார்க்கான் பாரு…” என அவள் முணுமுணுக்க விபீஷின் காதுகளில் விழத்தான் செய்தது. 
“என்ன மதி? யார் இவரு? இப்டி முழிச்சுட்டு நிக்கறாரு?…” ஈஸ்வரி கிசுகிசுப்பாய் கேட்க விபீஷிற்கு இப்பொழுது பேசவேண்டுமா? கிளம்பிவிடலாமா? என கூட தோன்றியது வெண்மதியின் பார்வையில்.
“பொத்தி பொத்தி வளர்த்தபுள்ள மணிமேகல அதுக்கு வெக்கம் இன்னும் விட்டு போகல. அதான் பேச வார்த்த வரல…” வெண்மதி நக்கலாய் சொல்ல ஈஸ்வரிக்கு சிரிப்பு பொங்கியது.
அதுவரை ஏதோ மாயவலைக்குள் அகப்பட்டிருந்ததை போல நின்றவனுக்கு அவள் சொல்லியதில் கோபமேற அவளை பார்த்தவன் ஈஸ்வரி அருகில் இருப்பதை பார்த்து அமைதியானான். அதிலும் அவளின் நிறைமாத வயிற்றை  பார்த்து விட்டு வெண்மதியை முறைக்க,
“என்ன வாய்தாவா வாங்க வந்திருக்க? ஓகே ஓகே கிராண்டட். இன்னொரு நாள்க்கு  கேஸ் தள்ளிவச்சிடலாம்…” என்று சொல்லி அவன் தடுக்கும் முன் ஈஸ்வரியை கிளப்பிக்கொண்டு செல்ல அவனால் எதுவும் செய்ய இயலாமல் போனது.
மீண்டும் அலுவலகம் வந்தபின்னால் ஈஸ்வரிக்கு தான் என்னவோ போல் இருந்தது. என்னவோ அந்த விபீஷை பார்த்ததிலிருந்து மனதுக்கு சரியாய்படவில்லை.
“மதி அவன் எதுக்கு உன்னை பார்த்து பேச வரான்? கேட்டியா நீ?…” 
“ஹ்ம்ம் நேத்து மார்னிங் தான் அவனை மீட் பண்ணேன். அப்பவே முரளிக்கும் எனக்குமான மேரேஜை நிறுத்த சொல்லி பேச வந்திருக்கான். இன்னைக்கும் அந்த இடத்துல அவனை பார்த்தேன். ஆனா வண்டியை நிறுத்தாம வந்துட்டேன்…”
“ஏனாம்? என்ன இவனுக்கு உன் மேரேஜ் நிப்பாட்டறதுல?…” ஈஸ்வரிக்கு கோபம் தலைக்கேறியது.
“அட ஈஸ், ஸ்டாப். ஸ்டாப். எதுக்காம் இப்படி கோவம் வருது? ரொம்ப உஷ்ணப்படாத…”  என்றவள்,
“அவன் சரியில்லை ஈஸ். அவனோட பிரசன்ட்ஸ் எனக்கு ரொம்ப அன் கம்பர்டபிளா பீல் ஆகுது. அதான் பேச வேண்டாமேன்னு அவாய்ட் பண்ணேன். இப்ப வந்து நின்னதும் ஏதோ வாய் நிக்காம கலாய்ச்சுட்டேன்…”
“எதுக்கும் அண்ணாகிட்ட சொல்லலாமே?…”
“இல்லை ஈஸ், எனக்கு அவன் முரளிக்கு வேண்டாதவனா இருப்பானோன்னு தோணுது. முரளியை கட்டிக்க கூடாதுன்னு சொல்றப்ப அவன் முகத்துல ஒரு ஒரு விதமான உணர்வு. ரொம்ப பயம் குடுத்திருச்சு எனக்கு. இன்னமும் கண்ணுக்குள்ளயே இருக்குது…” 
வெண்மதியின் பயம் ஈஸ்வரிக்கு கலக்கத்தை உண்டுபண்ணியது. இந்தளவிற்கு வெண்மதி பயம் கொள்ளும் ரகம் அல்லவே. கவலையுடன் அவள் பார்க்க,
“முரளிக்கு எதுவும் பிரச்சனை வந்திரும்மோன்னு தோணுது ஈஸ்…” தோழியின் கையை பிடித்துக்கொண்டாள் வெண்மதி.
“இதை ஏன் நீ காலையில வந்தப்பவே சொல்லலை?…”
“உண்மையா எனக்கு அந்நேரம் நியாபகமே இல்லை. ஆபீஸ் வர வழி எல்லாம் முரளி கால். இங்க வந்ததும் அந்த ட்யூப் லைட் வேற ஓவர் டார்ச்சர்…”
“ஏற்கனவே நீ பபெப்ல்லோன்னு சொன்னது பிரகாசத்துக்கு தெரிஞ்சிடுச்சு. இப்ப இதுவும் தெரிஞ்சா?…” ஈஸ்வரி புன்னகைக்க,
“பப்பெல்லோ தப்பில்லையாம், லைட் தப்பமாம். போடி…” என்றவளின் இலகுவான பேச்சில் ஈஸ்வரிக்கு கொஞ்சம் நிம்மதியானது.
“ஓகே நீ போய் உன் வொர்க் பாரு, நான் வாஷ்ரூம் போய்ட்டு வரேன்…”
“கூட வரனுமா ஈஸ்? ஐஸ்க்ரீம் வேற சாப்ட்டிருக்க…” எதுவும் முடியவில்லையோ என்று வெண்மதி பார்க்க,
“ஏன்டி? எனக்கு தெரியும் நீ போ. உன் வேலையை பாரு…” என்றுவிட்டாள்.
தன்னுடைய மொபைலையும் எடுத்துக்கொண்டு ரெஸ்ட்ரூம் வந்தவள் அங்கே யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு முரளிக்கு அழைத்தாள்.
“அண்ணா நான்…”
“ஹாங் ம்மா ஈஸ்வரின்னு தெரியும். சொல்லுங்க…” முரளி அவளை கண்டுகொண்டதும் விபீஷ் வந்ததை பற்றி சொல்லி முதல்நாள் வெண்மதியை சந்தித்ததையும் அவனின் பார்வையையும், வெண்மதியின் பயத்தையும் பற்றி சொல்ல,
“ஈஸ்வரி நீங்க எதையும் நினைச்சு கவலைப்பட வேண்டாம். எல்லாம் நல்லபடியே முடியும். நோ ப்ராப்ளம். நான் பார்த்துக்கறேன். முக்கியமா வெண்மதியை பார்த்துப்பேன்…” என்றவன் அவளிடம் மேலும் சில வார்த்தைகள் பேசிவிட்டு போனை வைத்துவிட்டான்.
“என்ன ப்ரோ ரொம்ப யோசனையோட இருக்கீங்க?…” ராம் வர,
“ஹ்ம்ம் விபீஷ் வெண்மதியை பார்த்து பேச போய்ருக்காங்க…” சேரில் சாய்ந்துகொண்டே சொல்ல,
“அவனுக்கு என்ன மரியாதை ப்ரோ? என்னையும் எதுவும் செய்ய விடமாட்டேன்றீங்க…” ராம் கோபத்தில் கத்த,
“என்ன செய்யனும்? வெண்மதியை சேஃப் பண்ண போதும். மேரேஜ் வரைக்கும் தான் வெண்மதி பின்னால போவாங்க. மேரேஜ் ஆகிட்டா திரும்ப நான் தான் டார்கெட்…”
“இதெல்லாம் உங்களுக்கு சரியா படுதா ப்ரோ?. அட்லீஸ்ட் ஒரு போலீஸ் கம்ப்ளைன்ட் குடுக்கலாமே?…”
“அன்னைக்கு சொன்னது தான் இப்பவும் சொல்றேன் ராம். நான் வசந்தரா அம்மாவுக்கு ப்ராமிஸ் பண்ணியிருக்கேன். விபீஷை எதுவும் பண்ணமாட்டேன்னு. ப்ராமிஸ் பண்ணலைனாலும் நான் வார்ன் பண்ணியிருப்பேன். அவ்வளோ தான்…”
“இப்பவும் வார்ன் தான் பண்ணுவீங்க, வேற என்ன பண்ணுவீங்க…” சலித்துக்கொள்ள அவனை பார்த்து புன்னகைத்தவன்,
“வெண்மதியை அவரால ஒன்னும் பண்ணமுடியாது ராம். நான் உங்களை அதுக்காக தான் அலர்ட் பண்ணேன். சும்மா ஒருத்தர் பன்றதுக்கு தண்டனை குடுத்துட்டே இருந்தா வாழ்க்கை முழுக்க இப்படியே போய்டும். இன்னைக்கு விபீஷ். அவர் இல்லைனா நாளைக்கு இன்னொருத்தர்…” என்றவன் எழுந்து வந்து வெளியில் தெரிந்த வானத்தை ஜன்னல் வழியே கண்டான்.
“இதுல இன்னொரு விஷயம் நாம நாட் பண்ணனும். விபீஷ்ன்றதால ஓரளவு அவர் என்ன பண்ணுவார்ன்னு என்னால கெஸ் பண்ண முடியும். அவரோட எல்லாமே ஓரளவு எனக்கு அத்துப்படி. அவரை தாண்டி நமக்கு தொல்லை கொடுக்கற ஆளுங்க ரொம்பவும் கம்மி…”
“ப்ரோ…” ராம் வியந்து பார்க்க,
“நமக்கு முன்னால நிக்கிறது யானை ராம். அதை எப்படி அடக்கனும்னு வித்தை நமக்கு தெரியும். யானையை அப்புறப்படுத்திட்டா அதுக்கு பின்னால இருக்கறது பூனையாவும் இருக்கலாம், புலியாவும் இருக்கலாம், நரியாவும் இருக்கலாம். அதை கையாள நாம கொஞ்சம் அவகாசம் எடுக்கவேண்டி வரும்…”
“இதை நான் யோசிக்கவே இல்லை ப்ரோ…” ராம் சொல்ல,
“நீங்க கிளம்புங்க…” என ராமை அனுப்பியவன் முகம் அப்படியே மாற்றம் பெற்றது.
“முரளி கஷ்டப்பட்டு முன்னேறினா மட்டும் போதாது. அதை காப்பாத்தவும் செய்யனும். நல்லா வாழ்ந்தவன் தாழ்ந்தாலே இந்த சமூகம் விட்டுவைக்காது. ஏசியே வேரோட சாய்ச்சிடும். நம்மளை மாதிரி முன்னுக்கு வந்துட்டு திரும்ப பழைய நிலைமைக்கு போனோம்னா நம்ம சொந்தங்களுக்கு மத்தியில் கூட வாழ முடியாதுப்பா. விட்டுவைக்க மாட்டாங்க…”
“நாம முன்னேறும் போது எந்தளவுக்கு கவனமா அடியெடுத்து வைக்கறோமோ அதை விட பலமடங்கு கவனமா அந்த இடத்துல நம்மை தக்கவச்சுக்க மிக கவனமா இருக்கனும். அதை தடுக்க ஆயிரம் பேர் வந்தாலும் அவங்களை அழிக்க நினைக்காம அவன் முன்னால அந்த இடத்தை விட்டு அகலாம இருக்க என்ன பண்ணனுமோ அதை பண்ணு…”
இப்படி முரளியின் ஒவ்வொரு பாதச்சுவட்டிற்கும் அர்த்தம் சேர்த்தவர் ஆனந்தன். இன்று வாழ்க்கையின் முக்கியத்தடத்தில் மௌனியாகி போனார்.
“நான் நிலையாய் இருப்பேன்ப்பா…” முரளியின் குரல் அந்த அறைக்குள் அழுத்தமாய் எதிரொலித்தது.

Advertisement