Advertisement

அவனது வார்த்தைகள் அவளது காதுக்குள் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போலிருக்கவே “இல்லை…. இல்லை….இல்லை… உங்கள் அக்கா தான் சொன்னார்கள். இதை அவர்களிடம் கேட்டு சண்டை போடாதீர்கள்.” என்று அதற்கும் அழுதாள். 
 
விறைத்து நிமிர்ந்தவன் அக்காவா? என்றவன் அவளைப் பார்த்து உனக்கு  மண்டையில் ஏதும் இருக்காடி… யார் என்ன? சொன்னாலும் கேட்பாயாடி… ? எல்லாரையும் பாவம் பார் உன்னை ஏன்? என்று கேட்க நாதியில்லை.பெரிய மதர் தெரேசா என்று நினைப்பு.” என்று கூறி விட்டு தன் உடைகளை எடுத்து அணிந்த பின் தான் உடுத்தியிருந்த லுங்கியை அவளது தலையால் போட்டு அவளது நெஞ்சுக்கு குறுக்காக கட்டி விட்டு “நான் போகப்போறேன் கதவை மூடிவிட்டு ஃப்ரஸ்அப் ஆகு என்று கூறி வெளியேறவும் அவள் சிலையென நின்றாள். 
 
அவன் தன் வழமையான பாதை வழியே வீடு சென்றவன் தன் அறைக்கு சென்று குளித்து முடித்து உடை மாற்றி வந்தவன் நேரே தமக்கை வீட்டுக்கு சென்றான். 
 
அங்கே அவனை கண்ட தமக்கை டேய்… தம்பி வாடா…வா… எங்கே தியா?  அவள் வரவில்லையா? அம்மா எல்லாவற்றையும் ஃபோன் பண்ணி சொன்னார்கள்.” என்றாள். 
 
“தியா வரவில்லையா?”  என மறுபடியும் கேட்ட தமக்கையை பார்த்து இல்லை என்பது போல் தலையசைத்தான் செந்தூர். 
 
“ஏன்டா என்மீது ரொம்ப கோபமாக இருக்கிறாளா?”
 
செந்தூர் புரியாமல் கேள்வியாய் நோக்கவும் தன் தலையிலடித்தவள் உனக்கு தெரியாதில்லையா? என கூறிக்கொண்டு முன்பு நடந்த விடயங்களை எல்லாம் கூறி நான் தாண்டா உனக்கு நல்லது பண்ணுகின்றேன் என நினைத்து இவ்வாறு செய்தேன்.” என கூறி தம்பியின் கரங்கள் இரண்டையும் பிடித்து மன்னிப்பு கேட்டாள் தமக்கை. 
 
அவன் கழுத்து நரம்பெல்லாம் புடைத்து,கண்களிரண்டும் சிவந்து பேச்சற்று இருந்தவன் இறுகிய குரலில் அவளிடம் “அக்கா தியாக்கு மறுபடியும் பேபி கன்சீவ் ஆகாது என்று டாக்டர் ஏதாவது சொன்னாரா?” என்றான். 
 
“இல்லையேடா…? இளம் வயது அதனால்  ஒரு ஆறுமாதத்திற்கு ஓய்வெடுத்தால் போதும் மறுபடியும் கொஞ்சநாளைக்கு கருதரிக்க உடனே ஆர்வம் காட்ட வேண்டாம் ஏனென்றால் தியா ரொம்பவே வீக் ஆக இருப்பதாக சொன்னனார்கள் என்றவள் இடைநிறுத்தி ஆனால் என்றவள் தன் செய்கையால் வெட்கமுற்று நான் தான் அவ உன்னை விட்டு நிரந்தரமாய் போக வேணும் என்பதற்காய் அவளுக்கு இனி குழந்தையை பிறக்காது என பொய் சொன்னேன்.” என்றவள் கண்ணீருடன் மறுபடியும் தம்பியிடம் மன்னிப்பு கேட்டாள்..
 
“அக்கா எவ்வளவு பெரிய காரியத்தை இவ்வளவு ஈசியாக செய்து விட்டாய். ஆனால் அங்கே அந்த பைத்தியகாரி இதெல்லாம் உண்மை என்று நம்பி ஏழு வருடமாய் செத்து பிழைத்துக்கொண்டிருக்கிறாள். அதுவுமில்லாமல் அவள் இதை நினைத்து படும் வேதனையை பார்க்கமுடியவில்லை. போதாததற்கு என்மேல் உள்ள காதலை கூட இதை காரணங்காட்டி தூக்கி போட்டு விட்டாள்”. என துடித்தான்.
 
தம்பியின் துடிப்பை பார்த்து “நான் தியாவிடம் போய் உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்கவா?”  என்றாள். 
 
“வேண்டாம் அக்கா மறுபடியும் ஏதாவது குழப்பம் செய்து விடாதே… ? என்றவன் நான் கிளம்புகின்றேன் எனக்கூறி தமக்கையை பார்த்து கவலைப்படாதே எல்லாம் சரியாகிவிடும்.” வருகின்றேன் என சொல்லி சென்று விட்டான். 
 
அடுத்த நாள் அலுவலகத்துக்கு சென்ற இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவில்லை. வேலை முடிந்ததும் உடனடியாக அவள் தன் இருப்பிடத்திற்கு சென்று விட்டாலும் அவளுக்கு அழுகையாக வந்தது. ‘எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு குழந்தை பிறக்காது என்று தெரிந்தவுடன் கழட்டி விட்டு போயிட்டான். இதுக்காக தான் என் பின்னாடி வந்தானா?’ என நினைக்க நினைக்க அவளுக்கு தன் மீதே வெறுப்பு தோன்றவும் அமர்ந்து ஒரு சுற்று அழுது முடித்தாள். 
 
இரவாகியதை உணர்ந்து எழுந்தவளுக்கு பசிமரத்துவிட ரீ ஒன்று அருந்தினால் போதுமானதாத இருக்கும் போல தோன்றவே கிச்சனுக்குள் சென்று ஸ்டவ்வை பற்ற வைத்து அதன்மேல் பாத்திரத்தையும் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்தவள் அங்கிருந்த ஜன்னல் வழியே,வெளி அழகை வெறித்தாலும் அவன் நினைப்பிலே உழன்றது மனம். 
 
எதோ நினைப்பில் இருந்தவளை பின்னால் இருந்து இறுகத்தழுவிய கரம் இழுத்து அணைத்து அவள் கழுத்தில் உதடுகளை புதைக்கவும் விடுபட நினைத்தவள் முடியாமல் ஜன்னலோடு சாயவும், அவளோடு அவனும் சாயந்தவன் அவளை எழ விடாது இடையே தன் கரங்களால் இறுக்கி அவளது முதுகு முழுவதும் முத்தங்களை வாரி வழங்கியவன் அவளது இடையை பிடித்து திருப்பி “என்னடி பயந்துட்டியா… ?” என்றான். 
 
“இல்லை. நான் ஏன் பயப்படனும் முதல்ல நீங்க ஏன்? இங்கே வந்தீர்கள். முதல்ல நீங்கள் வெளியே போங்கள்.” என்று கத்தினாள். 
 
அவளை இழுத்து அணைத்தவன் “இங்கிருந்து போவதற்கா?  இவ்வளவு றிஸ்க் எடுத்து வந்தேன்.”என்றவன் வாங்கி கொண்டு வந்த உணவை பிரித்து அவளுக்கு ஊட்டிவிட அவள் வேண்டாம் என்று தலை அசைக்கவும் அவள் கன்னம் இரண்டையும் அழுத்தி பிடித்து  “இப்போது நீ சாப்பிடுகிறாயா? இல்லை எல்லாத்தையும் தூக்கி போட்டு விட்டு நானும் பட்டினியாகஇருக்கட்டுமா?” என சொல்லவும் அவள் வாய் தன்பாட்டில் திறந்து உணவை வாங்கிக் கொண்டது. அதே போல் இரவு முழுவதும் அவன் கையணைப்பில் இருந்த போதும் அவள் எதிர்ப்பு காட்டவில்லை. ஏனென்றால் அவள் தான் அவனருகில் மயங்கி போய் கிடக்கிறாளே… !
 
காலையில் அவள் எழுந்த போது அவன் அருகில் இல்லை. ‘போய்விட்டான் போல’ என  எண்ணியபடி ஆபீசுக்கு செல்ல ஆயத்தமானாள். 
 
அவள் ஆபிஸ் முடிந்து வந்தவுடன் இரவு நேரம் உணவையும் வாங்கிக்கொண்டு வந்து விடுவான். அதன் பிறகு அவன் கையணைப்பிலே அவள் பொழுது போய்விடும் அதன் பின் காலையில் அவன் மதில் பாய்ந்து போய்விடுவான். இதுவே தினசரி பழக்கமானது. 
 
கட்டிய கணவன் மதில் பாய்ந்து வந்து குடும்பம் நடத்துவது இது தான் உலக வரலாற்றில் முதல் சம்பவமாகும். இப்படியே நான்கு மாதங்கள் ஓடியது. 
 
அன்று சனிக்கிழமை என்பதனால் அவனும் அவளுடன் தான் இருந்தான். அவன் சும்மா இருக்காது ஒரே லூட்டி அடித்துக்கொண்டிருந்தான். 
 
“ப்ச்சு… ப்ளீஸ் சத்தம் போடாதீங்க… கீழே வீட்டுக்காரம்மாக்கு கேட்க போகிறது. என்றவள் ஆமா… இன்னும் எத்தனை நாளுக்கு தான் இப்படி மதில் ஏறி குதித்து வருவதாய் உத்தேசம்.” என்றாள்.
 
அதற்கு அவன் பதில் பேசாது அவளைப்பார்த்து கண்ணடித்தவன் கூடவே ஒரு பறக்கும் முத்தத்தையும் பறக்கவிட அவள் மற்றப்பக்கமாக திரும்பி நின்று ‘பொறுக்கி… பறக்காவெட்டி…’ பதில் சொல்ல மாட்டான் என்று திட்டிய வண்ணம் திரும்பியவளிற்கு தலை சுற்றியது வாந்தி வருவது போல்  இருக்கவே வாயைப்பொத்தியபடி பாத்றூமிற்குள் ஓடவும் அவளைப் பார்த்தவன் “என்னடி ஆச்சு” என்றபடி பின்னால் வந்தவன் அவள் வாந்தி எடுப்பதை பார்த்து மலைத்து போனான். 
 
அவள் வாந்தி எடுத்து முடித்து வெளியே வந்தவள் அவன் நிற்பதை பார்த்து அவன் மீது சரிந்தவள் “என்னால் முடியல்லை மயக்கம் மாதிரி வருகிறது என்றபடி மயக்கமானாள். 
 
“அடியேய்… தியா என்னடி…ஆச்சு.” என பதறியவன் அவளை படுக்க வைத்து தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவித்தவன் “என்னடி பண்ணுது” என கேட்கவும் “இரண்டு மூன்று நாளாக இப்படித்தான் இன்று மயக்கம்…” என சொல்லி முடிக்க முன் சேர்ந்து விழுந்தாள். 
 
அவளை சற்று நேரம் தூங்க வைத்து விட்டு அவன் தனது பாணியில் வெளியே சென்று அரை மணி நேரங்கழித்து அவளது வீட்டருகில் காரை நிறுத்தி விட்டு அவளுக்கு ஃபோன் பண்ணி வரச்சொல்லி இருபது நிமிடங்களில் பின் அவள் வரவும் அவளை அவசரமாக ஏற்றிக்கொண்டு கிளம்பினான். 
 
“எங்கே? போகின்றோம்” என்றவள் திரும்பி பார்த்து கண் சிமிட்டியவன் “ரொம்ப சோர்ந்து போய் தெரிகிறாய்”என்றான்.
 
இவனிடம் கேட்டதற்கு பேசாமல் இருந்திருக்கலாம் என்று நினைத்தபடி அமைதியானாள். 
 
ஹாஸ்பிட்டல் வந்ததும் அவளை இறக்கி டாக்டரிடம் கூட்டிப்போனான் டாக்டரும் சில பல ரெஸ்ட்டுகளை எடுத்து பார்த்து விட்டு அவள் கர்ப்பிணியாக இருப்பதை உறுதிப்படுத்தவும் இருவருக்கும் தலையில் பூக்களை கொட்டிய சந்தோசம், அவளால் இந்த செய்தியை நம்பவே முடியவில்லை. அவனை கேள்வி கேட்டு துளைத்தவள், மறுபடியும் கார் வந்து நின்ற இடத்தை பார்த்து திகைத்து நின்றாள். கைபிடித்துஉள்ளே அழைத்து செல்லவும் வா,என உள்ளே புக எத்தனிக்கவும் வாயெல்லாம் பல்லாக வரவேற்று அவர்கள் இருவருக்கும் ஆராத்தி சுற்றி வரவேற்றது அவனது தாய்.
 
“உள்ளே வாருங்கள். ” என கூட்டிப்போக அனைவரும் அவர்களை சூழ்ந்து வாழ்த்துக்கள் சொல்ல அவனது அண்ணன் மனைவி சிந்து வந்து அவளை கட்டிப்பிடித்து தன் மகிழ்ச்சியை காட்டினாள்.  அவன் தமையன்,அத்தான்,அக்கா,குழந்தைகள் என அனைவரும் மகிழ்ச்சியை தெரிவிக்க, மாமியாரும், நாத்தனாரும் மன்னிப்பை கேட்கவும்…அவள் எல்லாவற்றையும் மறந்து இனி மகிழ்வாக இருப்போம் என கூறி அவர்களது சங்கடத்தை தீர்த்து வைத்தாள். 
 
அவள் சோர்ந்து போகவும் அவளது மாமியார் “டேய் போதும் என் மருமகளை மேலே கூட்டிக் கொண்டு போ அவள் சோர்ந்து போயிருக்கின்றாள். இனிமேல் இங்கே தானே இருக்க போகின்றாள். ” என கூற எல்லோரும் கேலியும் கிண்டலுமாய் அவர்களை மேலே அனுப்பி வைத்தனர். 
 
மேலே வந்து கதவை பூட்டியவனை இறுக்கி அனைத்து ஆயிரம் முத்தங்களை வழங்கினாள். 
 
“என்னடி… நீயா கொடுக்கிறாய்.”
 
“அது உங்களுக்கு தாங் பண்ணினேன். “
 
“எதுக்கு.”
 
“ம்..  என் வயித்துக்குள்ள பேபி குடுத்ததற்கு. அப்புறம் என்னை இங்கே கூட்டிக்கொண்டு வந்ததற்கும். ” என்றாள். 
 
“அப்ப வருசத்துக்கு ஒரு பேபி குடுக்கிறேன் நீ எனக்கு தாங் பண்ணிக்கிட்டு இருடி…என் பெண்டாட்டி.”
 
“ஆசை இல்லை இது… இது பேராசை”
 
“அது… உனக்கொரு உண்மை… .என அவன் கூற வெளிக்கிட அவன் உதடுகளில் கை வைத்து எதுவும் சொல்ல வேண்டாம். நம் இருவரது கடந்த காலம் பற்றி நினைத்து பார்க்க எனக்கு விருப்பம் இல்லை என்றவள், “எனக்கு இப்போது, இந்தநிமிடம் உங்கள் நெஞ்சில் சாயந்திருப்பதே போதும்” என்றவள். அவன் நெஞ்சில் முகம் புதைத்தாள்.
 
“நானும் நீ இப்படியே என் நெஞ்சில் சாய்ந்து கதை பேச வேண்டும் என ஏங்கியிருக்கின்றேன்.” என அவள் காதினுள் இரகசியம் பேசியவன் அவளை இறுக அணைத்து இதழ் பதித்தான்.
 
அவன் நெஞ்சில் சாய்ந்து தம் எதிர்காலத்தை ஆராய்ந்தவள் முகத்தில் அளவிட முடியாத மகிழ்ச்சி.அது அவன் முகத்திலும் தொற்றி இன்னும் பிரகாசமானது அவன் முகம்
 
இவர்களது மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கும். 



                  ***** முற்றும்*****
 

Advertisement