Advertisement

Episode 23
தியாவை கொண்டு போய் ‘விட்டுவிட்டு’ வந்த பின்பும் அவன் அதே இடத்தில் நின்ற தம்பியை பார்த்த கதிரவன் அருகில் வந்து “என்னடா கனவா…? தியா போய்விட்டா.” என்றான். 
தமயனின் பேச்சைக்கேட்டு புன்னகைத்தவன் “நான் உனக்காகத்தான் வெயிட்  பண்ணினேன்.” என்று அப்பட்டமான பொய் ஒன்றை எடுத்து விட்டுக்கொண்டு தமயனுடன் இணைந்து வீட்டுக்குள்ளே நுழைந்தான்.
நம்பிட்டேன்டா என சிரித்த கதிரும்,” ஐயா சாமி உன் பொண்டாட்டியை கவனமாக அவர்களது வீட்டில் ‘விட்டுவிட்டு’ அவர்கள் உள்ளே போனதற்கு பின்பு தான் நான் வந்ததே…  இதற்காக தானே வெயிட் பண்ணினாய். இந்த தகவல் போதுமா? இல்லை வேறு ஏதாவதும் வேணுமா?”
“இல்லை நான்… .” என்று ஏதோ சொல்ல வந்தவனை அருகிலே வந்த தமக்கை “ஏண்டா? உள்ளே வர இவ்வளவு நேரம் தேவையா?”  என அருகில் வரவும் அத்தோடு அவர்களது பேச்சும் நின்று போனது.
“சரிடா இன்றைக்கு நாங்களும் உன்னோடு தங்குகின்றோம்.” என்றாள். 
“அதெல்லாம் வேண்டாம் நானே பார்த்து கொள்வேன்.” என்று கெஞ்சி,மிஞ்சி அவர்களை அனுப்பி வைத்தான். 
ஆயிரம் முறை கவனம்,கவனம் என்ற தமக்கையையும், ஏதாவது அவசரம் என்றால் கூப்பிடு என்ற தமயனையும், “தயவு செய்து போய்விடுங்கள்.”என்றான். 
கதவருகில் சென்று திரும்பி பார்த்த சகோதர்களை பார்த்தவன் “நாளைக்கு சனிக்கிழமை அதனால் நாளைக்கு காலையில் வந்து என் தூக்கத்தை கெடுக்ககூடாது.என்று சொல்லியே அனுப்பி வைத்து விட்டு தன் வீட்டு கதவை தாழ் போட்டான்.
தன் அறைக்கு சென்று உடைகளை களைந்து அழுக்கு துணி போடும் கூடைக்குள் போட்டவன் காயத்தில் தண்ணீர்  படாதவாறு குளித்து முடித்து வெளியே வந்தவன் லுங்கியையும்,ரீசேட்டையும் அணிந்து கொண்டு ஈரமாக இருந்த டவலை ரெரசில்துணி காயப்போடுவதற்கு கட்டியிருந்த கொடியில் காயப்போட்டவன், அருகில் அமைக்கப்பட்டிருந்த கல்லாசனத்தில் அமர்ந்து பார்வையை அவள் இருக்கும் இடம் நோக்கி திரும்பினான். 
அங்கே அவள் தன்னுடைய ஒற்றை அறையில் தன் படுக்கையில் இருந்த தலையணையில் முகத்தை புதைத்து அழுது கொண்டிருந்தாள். 
ஏனோ ஒருவித ஏமாற்றம் அவளை அலைப்புறுத்திக் கொண்டிருந்தது. அழுதால் மனப்பாரம் குறையும் போலிருக்க ஆற்றுவார்,தேற்றுவார் இன்றி அழுதழுது அப்படியே தூங்கிப்போனாள். 
ரெரசில் அமர்ந்து இருந்த செந்தூரருக்கு தூக்கம் தூரத்தில் நின்று சிரித்தது. ஆனாலும் நெஞ்சின் ஓரத்தில் நெருஞ்சி முள் தைத்தது போன்ற வலி பரவிக்கொண்டே இருந்தது. 
அவளாக வந்தாள்.வந்தவளை வா என்று அழைக்க யாராலும் முடியவில்லை.அப்புறம் எவ்வாறு அவள் என்னை நம்பி தன் வாழ்க்கையை இணைத்துக்கொள்ளவாள்.’ என பல கற்பனைகளில் உழன்று கொண்டிருந்தது. 
அதே நேரத்தில் செந்தூரின் தமக்கை ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்திருந்தவளை அவளது கணவன் திலீபன் அழைக்கவும் திடுக்கிட்டு எழுந்தாள். 
கவி தூங்கவில்லை என்று கேட்ட கணவனை வேற்றுக்கிரகவாசி போல பார்த்து வைத்தவள் ‘என்ன?’  என்பது போல பார்த்து வைத்தாள். 
“ஹேய் என்னடி தாங்கவில்லை.பேய்கள் உலவும் நேரம் என்ன?  யோசனை.”என்றான். 
ஒன்றுமில்லை என்பது போல தலையசைத்து விட்டு மறுபடியும் யோசனையில் ஆழ்ந்த மனைவியை பார்த்த திலீபன்  ‘இவளுக்கு என்னாச்சு? பயங்கரமான யோசனையில் இருக்கின்றது போல இருக்கே. அது கூடாதே…’ 
என நினைத்தவன் தாமதிக்காது எழுந்து அருகில் சென்று அவளது தோளில் கை வைத்து “நீ  வழமை போல் இல்லையேடி”என்றான்.
“இல்ல,திலீப். தம்பி வீட்டில் தனியாக இருக்கின்றான். அவன் வைஃப் அவனோடு இருந்திருந்தால் அவனை நன்றாக பார்த்திருக்க கூடும். அதற்கும் வழியில்லாமல் பண்ணிவிட்டேன்.” என்றவள் அழ ஆரம்பித்தாள். 
“தெரியுதில்ல…நீ பண்ணியது தப்பு என்று, அதை சரி பண்ணுவதற்கு எப்போதாவது நினைத்துண்டா… ?” என மனைவியை ஆழம் பார்த்தான். 
“ம்… பண்ணாமல் இருப்போமா? முதலில் அவனுக்கு பிடிக்கவில்லை.அவளை அனுப்பினால் சரியாகி விடும் என நினைத்தோம்.அந்த நேரம் பார்த்து தியாக்கு அபார்சன் ஆகவும் நாங்கள் தியாவை தப்பாக நினைத்து, அவளை திட்டி,கண்டபடி பேசி அவளை வீட்டை விட்டு போகவைத்து என அத்தனை கேவலமான செயலை செய்து,எனக்கு இப்போது அதை நினைக்கும் போதெல்லாம் என்னை நினைத்தே ரொம்ப அருவருப்பாக உள்ளது.” என துடித்து அழுதாள். 
அழும் மனைவியை இழகாது பார்த்தவன் “அதற்கு பிறகு எந்த முயற்சியும் பண்ணவில்லையா?” 
“இல்லை பண்ணினேன்.ஆனால் அதை நடைமுறைப்படுத்த முற்படும் போதே அந்த முயற்சி எதுவும் தேவையில்லை என என் தம்பியே புரியவைத்தான். அப்படி புரியும் போது நான் மனதளவில் செத்துப்போய்விட்டேன். தியா போய் ஆறு மாதங்களுக்கு  பிறகு அவனது றூமிற்கு அவனுடைய காதலி விசயமாக போய் பேசி முடிவு எடுக்கலாம் என போனேன்.அப்போது அவனது றூம் கதவு திறந்திருந்தது கூடவே பேச்சு குரலும் கேட்கவே நான் திரும்பி போகலாம் என நினைக்கையில் அவன் ‘தியா,தியா’ என்று புலம்புவது கேட்கவே நான் என்ன?விசயம் என அறிவதற்காக ஒட்டு கேட்டேன். “என்றாள். 
“……”
“அப்போது அவன் அவர்களது கல்யாண போட்டோவை மடியில் வைத்துக்கொண்டு அவன் ‘தியா என்னை மன்னித்து விடு… மன்னித்து விடு…நான்உனக்கு தப்பு பண்ணிவிட்டேன் என புலம்பியவாறு கண்ணில் நீர் திரள,கிட்ட பைத்தியகாரன் மாதிரி புலம்பிக்கொண்டிருந்தான். எனக்கு அப்படியே இரத்தம் உறைந்து போனது.அப்போது தான் எனக்கு ஒரு விடயம் தெளிவானது தியா கர்ப்பமானதுக்கு காரணம் தம்பி தான் எனவும் அது அவனுக்கு தெரியாது என்பதும்,நான் என் தவறு புரிந்து தியாவை தேடிப்போனேன் ஆனால் அவள் இல்லை.”
“அதற்கு பிறகு அவன் என்னை ஏதாவது தியாவை பற்றி கேட்டாலும் என்னால் சரியான பதில் கூற முடியவில்லை. பிறகு கொஞ்ச நாட்களுக்கு பிறகு அவன் வெளிநாட்டுக்கு போய் விட்டான். நானும் தியாவை சல்லடை போட்டு தேடினேன் கிடைக்கவில்லை.”
“பிறகு தம்பி வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் அவனை நோட்டம் பார்ப்பதற்கு என அவனுக்கு அலையன்ஸ் பார்ப்பது போல ஏதாவது சொன்னாலே அவன் முகத்தை வலியால்  திருப்பிக் கொள்வது மட்டுமில்ல ‘கத்துகத்து’ என்று கத்தி தீர்த்து விடுவான். பிறகு இரண்டு மூன்று நாள் வீட்டுக்கே வரமாட்டான்.”
“இப்போது கூட அம்மா, அப்பா இரண்டு பேரும் ஊருக்கு போயிருக்கிறார்கள்.அங்கே கூட தியாவை பற்றி விசாரிக்க சொல்லியிருக்கின்றேன். தியா கிடைத்தால் நன்றாக இருக்கும்.” என்றாள். 
“ம்.. இவ்வளவு நடந்திருக்கு ஆனால் எங்களுக்கு தெரியாமல்….” என்று இழுத்து நிறுத்தினான். 
“இல்லங்க…நானே சரிபண்ணி விடலாம் என்று…”என அவளும் இழுத்தாள்.
“சரி போனது போகட்டும்.நான் கூட உன்னை வில்லியோ….? என நினைத்தேன்.ஆனால் நீயும் செய்த தவறுக்காக வருந்தியதோடு,மாற்று வழியும்யோசித்து,செயற்பட்டிருக்கிறாய்
இப்போது நான் கேட்பதற்கு பதில் சொல்லு.” என்றான். 
“சரி கேளுங்க… ?”
“தியா இப்போது உன் முன் வந்து நின்றால் என்ன?  செய்வாய்.” என்றான். 
“அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டு என் தம்பியுடன் சேர்த்து வைப்பேன்.” என்றாள் ஆர்வமிகுதியால் அழுதே விட்டாள். 
“கவி… கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உன் பிழையை உணர்ந்த போதே நீ திருந்தி விட்டாய். இனி நானும் உனக்கு ஹெல்ப் பண்ணுகின்றேன். என்றவன் தியாவை பற்றி அனைத்து விடயங்களையும் கூற, இமை தட்டாது கேட்டு கேட்டுக்கொண்டவள் “அது தான் பயபுள்ள கொஞ்சநாளாக ஒரு மார்க்கமாக அலையுதா? நான் நாளைக்கே தியாவோட கதைக்கப்போகின்றேன்.” என்றாள். 
“ஏய்… கவி நோ வே.நீ அப்படி எதுவும் செய்யக்கூடாது. அவங்க இரண்டு பேரும் ஓகேயாகிற மாதிரி இருக்கிறது. ஹெலப் ஏதாவது தேவை என்றால் செய்யலாம். தேவையில்லாமல் போய் குட்டையை குழப்க்கூடாது.” என்ற கணவனை பார்த்து சிரித்து விட்டு தலையை அவன் நெஞ்சில் சாய்த்தாள். 
“நாளைக்கு காலையில் நான் கோயிலுக்கு போய் இரண்டு பேர் பெயரிலும் அர்ச்சனை,அபிஷேகம் எல்லாவற்றிற்கும் ஏற்பாடு பண்ணி விட்டு வருகிறேன்.” என பல திட்டங்களை போட ஆரம்பித்த மனைவியை பார்த்தவன் இவ இப்போதைக்கு நிஜத்திற்கு வரமாட்டா போல இருக்கே என நினைத்த வண்ணம் தனது  ஃபோனை கதிருக்கு எடுத்து இங்கே நடந்த விடயங்களை சொல்லி சந்தோசப்பட்டுக்கொண்டான். 
ஒரே நாளில் இத்தனைமாற்றங்களா? என இருவருக்கும் ஆச்சரியமே… !
                             *****  *****
அங்கே ரெரசில் இருந்த செந்தூர் தன் மீதே கழிவிரக்கம் கண்டு ஓய்ந்து போயிருந்தான். என்ன? செய்வது என்று தெரியாமல்,புரியாமல் தவித்துக்கொண்டிருந்தான். இனிமேல் காலம் தாழ்த்தும் ஒவ்வொரு நாளும் முள் மீது நடக்கும் நிலை தான். 
அம்மா,அப்பா இருவரும் ஊரில் இருந்து வருவதற்கு முதல் தியாவை சமாதானப்படுத்தி சம்மதம் பெற்றுக்கொள்ள வேண்டும். அவளை சமாதானப்படுத்தி வழிக்கு கொண்டு வருவதற்கு தலையால் தண்ணீர் குடிக்க வேண்டும். என்பது அவன் அறிந்திருந்தாலும் அதை நடத்தி முடித்தே ஆவதென்று மனதுக்குள் உறுதி செய்து கொண்டான்.
முடிவெடுத்த பின்னும் உறக்கம் விழிகளை தழுவ மறுத்தது. தன் தலைமுடியை கையால் கோதிக்கொண்டவன் தன் மொபைலில் நேரத்தை பார்த்தான் அதிகாலை நான்கு காட்டவும் அவனுக்கே புரிந்தது,இனிமேல் இன்றைக்கு தூக்கம் என்பது எழுதப்படவில்லை என்பது நன்றாகவே விளங்கியது. அவன் இருந்தவாக்கில் அப்படியே சாய்ந்து இரு கைகளையும் தலைக்கு கீழ் கோர்த்துக்கொண்டவன் வானத்தை பார்தவன் அதில் தெரிந்த நட்சத்திரங்களையும், வெண்முகில் கூட்டங்களையும் ரசித்துக்கொண்டிருந்தவன் விழிகள் தன்பாட்டில் மூடிக்கொண்டது. 
இரவு ஏற்பட்ட அசதி காரணமாக காலையில் ஏழு மணியளவில் கண்விழித்த தியா சோம்பல் முறிக்கவும்,அவளது ஃபோன் ஒலித்தது.அதை எட்டி எடுத்து யார்? எடுக்கிறார்கள் என பார்த்தவள் கதிரவன் என போட்டிருக்கவும்,’கதிர் அண்ணா எடுக்கின்றாரே…? என்னவாக இருக்கும்.’ என யோசித்துக்கொண்டு ஃபோனை ஆன்சர் செய்தாள். 
“ஹலோ…கதிர் அண்ணா. என்ன? விசயம்.ஏதாவது பிரச்சனையா?” என்றாள்.
“இல்லை தியா. வீட்ல செந்தூர் தனியாக இருக்கின்றான். நானும், திலீப்பும் வேலை விசயமாக வெளியூர் போகின்றோம். சிந்துவும்,கவியும் நம்ம சொந்தக்காரது வெடிங்குக்குபோகின்றார்கள், அவர்கள் வருவதற்கு  சாயங்காலமாகும் அதனால் அவனை போய் பார்த்து கொள்கின்றாயா?”என்றான்.
“இல்லை கதிர் அண்ணா.நான் போய் ஏதாவது பிரச்சனை வந்தாலும் நான் வரமாட்டேன்.” என்றவள் நான் போவதால் ஒரு பிரச்சனையும் வராது தானே…அப்படியானால் நான் போகின்றேன்.” என்றாள். 
மறுமுனையில் சத்தமின்றி சிரித்த கதிரவன், திலீப்பை பார்த்து கட்டைவிரலை உயர்த்தி வெற்றி என்பது போல் காட்டியவன்,”சரி தியா கொஞ்சம் சீக்கிரமாக கிளம்பு, நான் வந்து கூட்டிக்கொண்டு வருகின்றேன்.” என்றவன் இருபது நிமிடங்களுக்குள் வந்து பிக்கப் செய்தவன் அவர்களது வீட்டு வாசல் முன் நிறுத்தி விட்டு வீட்டு “டூப்ளிக்கெட் சாவி இது. ஏற்கனவே வீட்டை பூட்டி விட்டு உள்ளே படுத்திருக்கின்றான். அதனால் இதை யூஸ் பண்ணு ஓகேயா?” என கூறி விட்டு காரில் இருந்து இறக்கி விட்டான் கதிரவன்.
இறங்கியவள் சிறு தலையசைப்புடன் வீட்டை நோக்கி நடந்தாள். 

Advertisement