Advertisement

Episode 21
“ஏய் என்னடா ஆச்சு இரத்தம் இவ்வளவு வருகுதே….?” என பதட்டப்பட்டுக்கொண்டு அவனருகில் வந்தவள் தோளைத்தொடவும் “ஸ்ஸ்…வலிக்குது கையை எடு 
தியா.”என்றான்.
“வா…வா ஹொஸ்பிட்டலுக்கு போகலாம்.”
‘நானே போய்க் கொள்கின்றேன் நீ கீழே வந்திருக்கும் விருந்தினர்களை கவனி.” என்றவாறு கிளம்ப எத்தனிக்கவும் அவளது சாத்தியிருந்த கதவு வெளியே தட்டப்படவும் அவன் அவளுக்கு கதவை திறக்குமாறு சைகை செய்து கொண்டு, அவளது அறைக்குள் புகுந்தான்.
பதற்றமாக கதவை திறந்த தியா முன்னே வீட்டுக்காரம்மா நிற்பதைப்பார்த்து அதிர்ந்தாள்.
அவளது அதிர்ந்த தோற்றத்தை கவனிக்காது தான் சொல்ல வந்த விடயத்தை கூறத்தொடங்கினார்.
‘என்னை மன்னித்து விடு தியா.இன்று உன்னை பார்க்க வருவதாக இருந்த என் நண்பியும்,அவனது குடும்பமும் இன்று வரமுடியாத காரணத்தால்,மதியமே ஃபோன் பண்ணி சொல்லிவிட்டார்கள்.நான் நீ ஆபிசில் இருப்பாய்,உன்னை குழப்ப வேண்டாம் என்று தான் சொல்லவில்லை.
பின்பு சொல்லலாம் என்று விட்டு சாயங்காலம் கோயிலுக்கு போய் விட்டேன்.”
என்றாள்.
“பரவாயில்லை ஆன்ரி.நான் கூட இன்று ஆபிசில் இருந்து இப்போது தான் வந்தேன். அதனால் தான் பயந்து கொண்டே இருந்தேன்.” என்று சமாளித்து அவரை அனுப்பி வைத்து கதவை மூடிவிட்டு,பெருமூச்சொன்றை விட்டவண்ணம் அறைக்குள்ளே போனாள்.
அவளை கண்டவன் “என்ன? அவங்க போய்விட்டார்களா? என்றான்.
“ம்ம்… போய்விட்டார்கள்.வா நாம் ஹொஸ்பிட்டல் போகலாம்.” என்றாள்.
“இல்லை…தியா…! நானே போய்க்கொள்வேன்.மறுபடியும் மதில் பாய்வது உன்னால் முடியாது.”
நான் கீழே ஆன்ரிகிட்ட சொல்லிக்கொண்டு வருகிறேனே…! உன்னால் இந்த காயத்தோடு கார் ஓட்டுவது கஸ்ரமாக இருக்கும் வா… நான் கார் ஓட்டுகின்றேன் உன்னால் மதில் பாய்ந்து வர முடியுமா?
“ம்… பார்க்கலாம்.” என்றான்.
அவள் வீட்டுக்காரம்மாவிடம் சொல்லிக்கொண்டு வெளியே அவனது காரை நோக்கி போனவள்,அவன் அங்கே இருப்பதை கண்டு, “அதற்குள்ளேயே வந்து விட்டாயா? என்றவள் அவனை சீட்டில் அமரச்சொல்லி விட்டு காரை ஸ்ராட் செய்து ஹொஸ்பிட்டலுக்கு செல்லும் வழியில் செலுத்தினாள்.
ஹொஸ்பிட்டலில் காயம் கொஞ்சம் ஆழம் என்றாலும் தையல் போடத்தேவையில்லை என்று கூறிய டாக்ரர்,காயத்துக்கு மருந்து வைத்து பன்டேஜ் ஒன்றையும் போட்டு விட்டதுடன்,இன்பெக்சன் ஏற்படும் என்று ஒரு இன்ஜெக்சனும் போட்டு விட்டவர் கூடவே கையை அசைக்க வேண்டாம் என்றும் கையை அசைத்தால் ப்ளீடிங் வர வாய்ப்பு இருக்கின்றது என்றும் அதனால் காயம் ஆறுவதற்கு நீண்ட நாள் எடுக்கும் என நீண்ட நேரம் கிளாஸ்  எடுத்த பின்பே அவர்களை வெளியே செல்ல அனுமதித்தார்.
அவர்கள் இருவரும்
வெளியே வரவும், செந்தூரின் அண்ணா கதிரவனும்,அத்தான் திலீபனும் வெளியே அவர்களை ‘படபட’ப்புடன் எதிர் கொண்டு என்ன? நடந்தது என்று விசாரித்தனர்.
அவள் நடந்தது என்று கூறவும்அவர்கள் பார்த்து நடக்ககூடாதா? என்று கூறியதுடன் போகலாம் வாருங்கள் என்று கூறி காரை நோக்கி நடந்தனர்.
“அண்ணா உங்களுக்கு தகவல் சொன்னது. யார்?”
“ம்… தியா தான்.”
“தியாவா…! அவளுக்கு எப்படி உங்களது நம்பர் தெரியும்.”
“அது…. என்ன? தியா சொல்லட்டுமா?” என கதிரவன் கேட்க அதற்கு தியா, “அவர் கேட்டால் உடனே சொல்ல வேண்டும் என்று ஒன்றும் அவசியமில்லை.” என்றாள்.
“சாரி மை டியர் ப்ரோ,தியாேவே சொல்ல வேண்டாம் என்றதற்கு பிறகு நான் எப்படி சொல்ல முடியும்.”
“ம்கூம்…. என தயைாட்டிய செந்தூர், அண்ணா வீட்டில் அம்மா, அப்பாக்கு
தெரியுமா?” என்றான்.
“அம்மா,அப்பா இரண்டு பேரும் ஊருக்கு திருவிழா என்று போய் விட்டார்கள்.பதினைந்து நாள் கழித்து தான் வருவார்கள்.” என்றான் தமயன்.
“ஆமாம் சொன்னார்கள் தான், நான் தான் மறந்து போய்விட்டேன்.” என்றான்.
“அப்படியா….? மச்சான் இது மட்டுமா? நீ மறந்து போனாய்.இப்போ எங்களையும் தான் மறந்து போனாய்.நான் உனக்கு எத்தனை தடவை ஃபோன் பண்ணி,மெசேஜ் பண்ணியிருக்கின்றேன்.ஆனால் நீ ஏதாவது ஆன்சர் பண்ணியிருக்கிறாயாடா…?” என அத்தான் திலீபன் காலை வாரினான்.
“எதுவும் பேசாது புன்னகைத்தவன், அத்தான் போகலாமா…?” என்றான்.
“நானும்,திலீபனும் கூட அவசரத்தில் ஆட்டோவில தான் வந்தோம்.இப்போது எல்லோரும் காரிலேயே போகலாம்.” என கதிரவன் கூறவும்,தியா தன்னிடம் இருந்த கார் சாவியை கதிரவனிடம் கொடுத்து விட்டு பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள்.
கதிரவன் காரை ஓட்ட, திலீபனும் முன் பக்கமாக ஏறி அமர, செந்தூர் தியாவின் பக்கத்தில் அமர கார் புறப்பட்டது.
செந்தூருக்கு உடம்பு ஓய்வை கேட்க தூக்கம் தானாக வந்து கண்களை தழுவிக்கொண்டதுடன் தூக்கலக்கத்தில் அவன் தலை தியாவின் தோளில் சாய்ந்தது. அது அவனுக்கு கஸ்ரமாக இருப்பதை உணர்ந்தவள்,காருக்குள் இருந்த தலையனண போன்ற குசனை எடுத்து தன் மடியில் வைத்தவள் அவனை அப்படியே தன்மடி மீது சாய்த்தாள்.இதனை பார்த்து திலீபனும்,கதிரவனும் புன்னகையுடன் கண்ணசைத்துக்கொண்டனர்.
சற்று நேரத்தில் போய்ககொண்டிருந்த காரை சிலோ பண்ணி நிறுத்தி விட்டு “தியா செந்தூரை எழுப்பும்மா…” என்றான்.
“அண்ணா அவர் நன்றாக அசந்து  தூங்குகின்றார்.” என்று கூறி அவன் முகத்தை பார்க்கவும், “பரவாயில்லை எழப்பு தியா.அவன் சாப்பிட வேண்டாமா? இப்போது சாப்பிடா விட்டால் வீட்டிலும் போய் சாப்பிடாமல் உறங்கி விடுவான்.வீட்டில் இப்போது அப்பா, அம்மா கூட இல்லை. என்று கூறி, அவனை எழுப்பி கூட்டிக்கொண்டு வா.நாங்கள் கடைக்குள் போகின்றாம்” என்றாவாறு முன்நோக்கிச்சென்றனர்.
செந்தூரின் கன்னத்தை தட்டி எழுப்பியவள் அவன் அசைவில்லாது இருக்கவும்,”செந்தூர்… செந்தூர்… எழும்பு சாப்பிடலாம்”என ஒருவாறு அவனை கண் திறக்கச்செய்தாள்.
தூக்க கலக்கத்தில் இருந்தவன் கண் விழித்ததும் தியாவின் முகம் தெரியவும் “தியா மை லவ் கனவில் கூட நீ என் பக்கத்தில் தான் இருக்கிறாயா…? உம்மா…” என உதடுகளை குவித்து கொண்டு அவள் முகத்துக்கு அருகில் வந்தவனது வாயில் ஒரு அடியைப்போட்டு அவனை நினைவிற்கு கொண்டு வந்தாள்.
திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தவன். “தியா நீ என் பக்கத்தில் தான் இருக்கிறாயா? நான் கனவு என்று நினைத்தேன்.” என்றான்.
“ம்… பார்த்தேன்… பார்த்தேன் உன் கன்றாவி கனவை, பாவம் என்று சாப்பிட எழுப்பினால் உனக்கு உம்மா கேட்குதா…? அது தான் வாயில ஒரு அடி போட்டேன்.நன்றாக இருந்ததா…?” என்றாள்.
“அடிப்பாவி அது நீ உண்மையாக அடித்ததா…? நான் கனவென்றெல்லவா? நினைத்தேன்…”
“நினைப்பாய்… நினைப்பாய்…
நினைப்பு தான் பிழைப்பை கெடுக்குமாம். முதல்ல கீழே இறங்கு சாப்பிடப்போகலாம்.” 
என்றவாறு காரை விட்டு இறங்கினாள்.
அவனும் காரை விட்டு இறங்கி கலைந்திருந்த தலையை ஒரு கையால் கோதி விட்ட பின் இருவரும் உள்ளே சென்றனர்.
உள்ளே சென்று கையை கழுவி விட்டு இருக்கையில் அமர்ந்து முதலில் சூப் ஒடர் பண்ணி விட்டு அதனை அருந்திய பின்னர் உணவை கொண்டு வரச்சொல்லாம் என திலீபன் கூற அனணவரும் அதற்கு சம்மதித்தனர்.
பெரிய அளவிலான ஹோட்டல் என்பதால் எப்படியும் சூப் வர பத்து நிமிடங்கள் எடுக்கும் என நினைத்த திலீப் அமைதியை கலைத்தான். “ஆ… என்ன தியா எப்படி? சுகமாக இருக்கிறாயா?” என்றான்.
“ம்… சுகத்துக்கு என்ன? சூப்பரா இருக்கிறன் அண்ணா.”
“நானும், நீ எங்களை மறந்து விட்டாய் என்றல்லவோ…? நினைத்தேன்.”என்றான்.
“ஆ…அதெல்லாம் நான் மறக்கவே மாட்டேன் திலீப் அண்ணா.சில மனிதர்களை வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாது.அந்த வகையில் உங்களையும், கதிர் அண்ணாவையும் என் வாழ்க்கை முழுவதும் மறக்க மாட்டேன் போதுமா?”
“தியா… பரவாயில்லையே நீயா? இவ்வளவு பேசியது.ரொம்ப பெரிய வாயாடியா மாறிவிட்டாய் போ.”
“வேற வழி.இல்லை என்றால் இந்த எட்டு வருசமும் ரொம்ப கஸ்ரமாய் இருந்திருக்கும்.” என்று புன்னகைத்தாள்.
“அது சரி. என்னை. எல்லாம் நீ மறக்காத மாதிரி எங்கள் மச்சானையும் மறக்கவில்லை தானே…!”
“மச்சானா…? யாா் அது? உங்களுடைய மச்சானை எனக்கு எப்படி? தெரியும்.அவரை நான் ஏன்? நினைக்கவேண்டும்.”என்றாள்.
“என்ன? தியா பட்டென்று இப்படி சொல்லி விட்டாய்.பார் பய புள்ளையின் முகம் எப்படி வாடிப்போய்விட்டதே…!”
 என்றான் திலீப்.
அப்போது தான் அவளுக்கு புரிந்தது.திலீப் செந்தூரைத்தான் சொல்கிறார் என்று உணர்ந்து, “ ஓஓஓ…. அண்ணா இவரையா சொல்கிறீர்கள்.இவரால் தான் என் வாழ்க்கையே மாறியது.அடுத்தடுத்து என வாழக்கையில் என்ன? நடக்கும் என்று தெரியாமல் என்ன? என்ன? என்று யோசித்து அதன் பின்னால் ஓடவே எனக்கு நேரம் சரியாக இருக்கும்.இதில் இவரை நினைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.”
பட்டென்று எழுந்து செந்தூர் வோஸ்றூம் நோக்கிச்சென்றான்.
“என்னம்மா…? நீ… இப்படி வார்த்தையை விட்டு விட்டாயே…? அவன் இப்போது முன்பு மாதிரி இல்லை தெரியுமா? நீ எங்கே இருக்கிறாய் என்று தேடித்தேடி பைத்தியக்காரன் போல ‘நாயாய் பேயாய்’ அலைந்து திரிந்தான். இப்போது கூட உன்னைப்பார்த்த பிறகு தான் கொஞ்சநாட்களாக சிரிக்கின்றான், தெரியுமா…? வெளி நாட்டில் இருந்து வந்த பின்பு தான் எல்லோருடனும் கதைக்கின்றான். அதற்கு முதல் இறுகிய பாறை போல யாருடனும் பேசுவது கூட இல்லை தியா.அவன் உன் பெயரை நெஞ்சில் பச்சை குத்தி வைத்திருக்கின்றான்.அவன் தன் தப்பெல்லாவற்றையும் உணர்ந்து ரொம்ப வருடங்கள் ஆகி விட்டது.”
“அதுமட்டுமல்ல உன்னை இங்கே பார்த்த முதல் நாள் எவ்வளவு சந்தோசப்பட்டானோ…? அதே அளவு கஸ்ரப்பட்டான் தெரியுமா…? ஏனென்றால் நீ அவனை யாரென்று அடையாளம் காணவில்லையாம்,அதனால் நீ அவனை மறந்து விட்டாய், வெறுத்து விட்டாய் என ஒரே புலம்பல்.சொல்லப்போனால் எங்களுக்காக எல்லாம் செய்தது என் தம்பி தான்.சின்ன வயசிலேயே கடின உழைப்பால் முன்னுக்கு வந்தவன்.இந்த நிலையில் .’பெயரும்புகழுமாய்’ அவன் இப்போது இருக்கின்றான் என்றால் அது அவனது கடின உழைப்பு தான் தியா.”
“எதற்கும் அசையாதவன் உன் பெயர் கேட்டாலே,உன்னைப்பற்றி பேசினாலே உருகுகின்றான்.இதற்கு மேல் உன்னுடைய முடிவு தான்.உன்னை அவன் வற்பறுத்தியோ, அல்லது தூக்கிக்கொண்டோ வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும். மறுபடியும் உன்னை கஸ்ரப்படுத்தி பார்க்குமளவிற்கு அவனுக்கு தைரியமில்லம்மா.”என்ற கதிரின் குரல் தழுதழுத்திருந்தது.

Advertisement