Advertisement

Episode 20
கடவுளே இன்று பொண்ணு பார்க்க வருகிறேன் என்று பீதியை கிளப்பி விட்டிருக்கிறார்கள்,அவர்கள் வரவே கூடாது’.என நினைத்தவாறு ரோயிங் எல்லாம் பிழையாக பிறின்ட்ற் எடுத்து சைன் வாங்குவதற்கு அனுப்பி வைத்தாள்.சற்று நேரத்தில் ஆபிஸ் பையன் வந்து அவளை அழைத்தான்.
“தியா மிஸ் உங்களை சீவ்ப் எஞ்ஜினியர் செந்தூர் சேர் அவசரமாக வரட்டுமாம்.” என்றான்.
“ஓகே இதோ வருகின்றேன்.” என கூறிக்கொண்டே எழுந்து 
சென்று அவனது காபின் கதவை தட்டி அனுமதி பெற்று உள்ளே சென்றவள் “சேர் என்னை கூப்பிட்டிங்களா?” என்றாள்.
“ஆமாம். இந்த ரோயிங்கை சரி பார்த்து தான் ப்றின்ட் எடுத்தீங்களா?” என்று அதை அவள் முன்னால் நீட்டினான்.
அதை வாங்கிப் பார்த்தவளிற்கு வேர்த்து ஊற்றியது. முழுவதும் தவறாக வரையப்பட்டிருந்தது.
அவள் ‘படபட’ப்பாக நிற்பதை பார்த்தவன் “சரி இதை திருத்தி விட்டு சரியாக ப்றின்ட் எடுத்து அனுப்புங்கள்.என்று கூறிவிட்டு, “இது இன்று முக்கியமாக அனுப்ப வேண்டிய ரோயிங்.டிலே பண்ணாமல் தந்தால் நன்றாயிருக்கும்.இப்போதே  நேரம் மூன்றரை” என்றான்.
‘என்னது அதற்குள்ளே நேரம் மூனறரை ஆகிவிட்டதா? நாலு மணிக்கு அவர்கள் வருவதாக சொன்னார்களே…? இது வேற முக்கியமாம்.இப்போது என்ன? செய்வது’ என்று யோசித்துக்கொண்டே வந்து அவளது இருக்கையில் அமர்ந்து வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.
அன்றைக்கென்று அவளது சிஸ்ரமும் மக்கர் பண்ணியது. ‘மனச்சாட்சி இல்லாத சிஸ்ரமே நீயுமா? எனக்கு சதி செய்கின்றாய் என சிஸ்ரத்தை திட்டிக்கொண்டு அதை சரி பார்க்கும் முன்னமே இரண்டு தடைவை அவனிடம் இருந்து அழைப்பு வரவும் செம காண்ட் ஆகியது.
அவனது அறைக்குள் சென்று “இப்படி அடிக்கடி கூப்பிட்டால் ரோயிங்கை இன்று சரி பண்ணி அனுப்ப முடியாது.பரவாயில்லையா?” என்றாள்.
“அவளை ஒரு லுக் விட்டவன், 
பரவாயில்லை இன்று அனுப்பத்தேவையில்லை என்று சொல்வதற்காகதான் கூப்பிட்டேன்.”என்றான்.
அவனது கதையை கேட்டு தொய்ந்து போய் அவன் முன்னே இருந்த கதிரையில் பொத்தென்று அமர்ந்தாள்.
“ஏய் தியா என்ன? உடம்புக்கு முடியவில்லையா?”
“அவனை முறைத்தவள் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.இதை ஒரு அரை மணித்தியாலத்துக்கு முதல் சொல்லக்கூடாதா? உன்னால் எனக்கு நிம்மதியே வராதா?” என்றாள்.
“என்னால் உன் நிம்மதி போச்சா?”
“போச்சு….போச்சு எல்லாம் கெட்டு மண்ணாய் போச்சு…” என்றவளின் குரல் கலங்கியிருந்தது.
“ஏய்?….என்னதான்டி? உன் பிரச்சனை சொல்லித்தொலையேன்.” என்றான்.
“என்னை இன்று பொண்ணு பார்க்க வருகிறதாக ஏற்பாடு.”
“யாருடைய ஏற்பாடு.”
“நான் குடியிருக்கும் வீட்டுக்காரம்மாவுடையது.”
“அவர்கள் எப்பவிலிருந்து இந்த வேலையெல்லாம் பார்கிறார்கள்.”
“ஏய்… ஹலோ கொஞ்சம் மரியாதையாக பேசு என்ன? நான் இப்போது போக வேண்டும்.மறுபடியும் வேலை ஏதாவது வேண்டும் என்றால் என்னை கேளாதே….” என்று கூறியவள் அவனது காபினுக்குள் சென்று தனது ஹாண்ட் பாக்கை தூக்கிக்கொண்டு ஆபிசை விட்டு வெளியேறினாள்.
‘இவ போற போக்கை பார்த்தால் ஏதாவது ஏடாகூடமாக பண்ணி வைத்தால் என் நிலை என்னவாகுமோ…? தெரியவில்லையே….’ என நினைத்தவன் அவள் பின்னாலே சென்றான்.
அவள் ‘விறுவிறு’ என பஸ்ராண்டுக்குள் செல்லவும் பஸ் ஒன்று அவளது இடத்தை நோக்கிச்செல்வதற்கு தயாராகி நிற்க, அதில் ஏறி அவள் அமரவும், பஸ் புறப்பட்டது.பஸ்சுக்குள் அமர்ந்தவளது சிந்தனை எல்லாம் அவளை பெண் பார்க்க வருபவர்களையே சுற்றி நின்றது.
அவள் பின்னே வண்டியை கிளப்பிக்கொண்டு பஸ்ராண்ட் நோக்கி சென்றவன் அவளைக்காணாது அவளது வீட்டை நோக்கி போனான்.
தியா தனது இருப்பிடத்தில் இறங்கி வீடு நோக்கி செல்ல எத்தணிக்கவும் அவளது கால்கள் அங்கே போக வேண்டாம் என பின்நோக்கி ஓடியது.
பின்னோடு வந்த செந்தூர்,தியாவை அவளது வீட்டு வாசலில் கண்டு விட்டு, காரை தூரமாக நிறுத்திக்கொண்டு இறங்கி அவளருகில் வந்தான்.
அவள் முன்னோக்கி போவதும் வருவதுமாக இருப்பதை பார்த்துக்கொண்டு அருகில் இருந்த சுவரில் சாய்ந்து கொண்டு கைகளை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு சுவாரஸ்யம் பிறந்தது.
‘இவள் இங்கே நிற்பதைப்பார்த்தால் உள்ளே போதற்கு இஸ்ரமில்லை என்பது தெரிகின்றது.பிறகேன் தயங்கி தயங்கி நிற்கின்றாள் என்று தான் தெரியவில்லை.’ என நினைத்தவன் ‘இவளை விட்டால் இன்று பூராகவும் இதிலே நிற்பா?’ என்ற நினைப்புடன் அவளை பார்த்து விசில் ஓன்றை ஓங்கி அடித்தான்.
‘யார்றா…? இந்த நேரத்தில் விசிலடிப்பது, புதிதாக என்ன? பிரச்சனைதோன்ற போகின்றதோ? தெரியவில்லையே…’ என நினைத்து திரும்பி பார்த்துக்கொண்டு, என்ன? நடந்தாலும் பரவாயில்லை என ஓடுவதற்கு ரெடியாகிக் கொண்டு நன்றாக திரும்பி பார்த்தவள் அப்படியே ஸ்தம்பித்தாள்.
“நைஸ் போஸ் அப்படியே ஸ்ரில் ஒன்று எடுத்து ஃப்ரேம் பண்ணி நடுஹோலில் மாட்டி விட வேண்டும்.” என்று கூறிக்கொண்டு அவளருகில் வந்தான்.
“நீயா? நீ எதுக்கு இங்கே வந்தாய்.மறுபடியும் ஏதாவது குழறுபடி பண்ணவா?” என்றாள்.
அதெல்லாம் இருக்கட்டும் தியா.நான் கேட்பதற்கு பதில் சொல்லேன் ப்ளீஸ்…..? உனக்கு கால்ல சுளுக்கா? என்றான்.
அவனை முறைத்து பார்தவள் “இல்லை.ஏன்? கேட்கின்றாய்.”
“அது… ரொம்ப நேரம் ஒரே இடத்திலேயே நிற்கின்றாயே….? அதனால் தான் கேட்கின்றேன் ஏதாவது ஹெல்ப் வேணமா?” என்றான்.
ஒரு மண்ணும் தேவையில்லை நீ போ…. பெரிய இவன் வந்திட்டான்.என்னை உயிரோட புதைச்சாலும் வந்து டோச்சர் பண்ணுவதற்கு…. என அவள் சீறினாள்.
“சரி போகின்றேன் போ…. எனக்கென்ன? ஏதோ பிரச்சனையில் இருக்கின்றாய் என்று கேட்டேன்.உனக்கே ஒன்றும் இல்லை என்றால் எனக்கென்ன? வந்தது.” என்று மறுபடியும் கூறிக்கொண்டு அவன் பின் வாங்கி தன் காரை நோக்கி செல்ல தொடங்கினான்.
‘இவன்கிட்ட ஏதாவது ஹெல்ப் கேட்கலாமா? போகிறானே…? வெட்கத்தை விட்டு கேட்க வேண்டியது தான்.” என வாய்விட்டு கூறிய வண்ணம் “ஏய் நில்லு”என்றாள்.அவன் கேட்காது போல செல்லவும்,அவனை நோக்கி ஓடியவள் “நில்லு” என கூறவும் அவன் தன் நடையை நிறுத்தவில்லை.
“டேய் நில்லு என்றால் நிற்கமாட்டியா? போய்க்கொண்டே இருக்கிறாய்.நில்லுடா….” என அவள் அவன் பின் முதுகில் ஓங்கி ஒரு அறை வைத்தாள்.
“என்ன? தியா. கூப்பிட்டியா? ரொம்ப மரியாதையா கூப்பிடாய் போல… உன் மரியாதை என் காதில தேனாய் பாய்ந்து.” என்று கூறி காதை துடைத்து விட்டான்.
‘மண்டுவம்.எதுவும் புரியாத மாதிரி நடிக்கிறான்.
கள்ளன்.’என மனதுக்குள் நினைத்த வண்ணம் கீகீகீ… என சிரித்து வைத்தாள்.
“ஏய்…இரு…இரு…ஒரே ஓரு செல்ஃபி எடுத்துக்கலாம் என்றான்.”
“அதெல்லாம் ஒன்றம் தேவையில்லை. எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்.” என்றாள்.
“ம்…காசைக் கொடு எங்கே? விற்குது என்று சொல்லு வாங்கி வருகிறேன்.” என்றான். 
அவனது கலாய்ப்பு தாங்க முடியாது அவள் கண்ணில் நீர் வடிந்தது.
“உன்னால தானே நான் இப்படி றோட்ல நிற்கின்றேன்.
அதனால் நீயே என் பிரச்சனைக்கு வழி சொல்லு.” என்றாள்.
“இது…இது… நியாயமான கேள்வி.சரி நான் இப்போது என்ன செய்ய வேணடும் என்கிறாய்.”
“நான் வீட்டுக்குள்ளே போக வேண்டும்.அத்தோடு இந்த மாப்பிள்ளை வீட்டுக்காரரை பார்க்ககூடாது.” என்றாள்.
“சரி…. அப்போது  கிளம்பு.” என்றான்.
எங்கே…?
“என்னோடு வா என் வீடு வரைக்கும்.
என் வீட்டைப்பார் என்னை பிடிக்கும்.” என்று அவன் பாட, அதற்கு அவள் என்ன உளருகிறாய்.” என்றாள்.
“ம்ம்… புரியல்ல… என்னோடு வா என் வீட்டுக்கு போகலாம் என்றான்.
“அது உன் வீடு. அதுக்கு நான் ஏன் வரணும்.அதுவும் அங்கேயெல்லாம் நான் வரமாட்டேன்.” என்றாள்.
என்னால் தான் உன் வாழ்க்கை நாசமாக போய்விட்டது, ஒத்துக்கொள்கின்றேன். ஒன்று என்னாடு வந்து குடும்பம் நடத்து.”
“முடியாது….முடியவே முடியாது.”
“அப்பச்சரி.இப்போது உன்னை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டாருக்கு ஓகே சொல்லி அவனை கல்யாணம் பண்ணி நீ சந்தோசமாக இரு.”
என்றான்.
“ஸ்ஸ்…. எனக்கு பிடிக்கவில்லை என்று தான் சொன்னேன் உனக்கு அது புரியவில்லையா…?”
“தியா…. ப்ளீஸ் டோன்ட் ஆர்க்கியூமென்ட்.ஒன்று நீ என்னுடன் வா.இல்லையென்றால் உனக்காக ஒரு புது வாழ்க்கையை ஆரம்பி.இதுல எந்த முடிவை எடுக்கிறது என்றாலும் எனக்கு ஓகே தான்.” என்றான்.
“ப்ளீஸ் என்னை விட்டுவிடுங்கள் எனக்கு இந்த கல்யாணம்,குழந்தை, குட்டி,குடும்பம் என எந்த கட்டுக்குள் இருக்கவும் எனக்கு இஸ்ரமிலலை.என்னை தனியாக விடுங்கள்.ப்ளீஸ்…” என்றவளில் குரல் கம்மி விழிகளில் நீர் கசிந்தது.
“இப்படியே எவ்வளவு நாளைக்கு தான் தனியே இருந்து றூம் கதவை சாத்திக்கொண்டு மிச்சம் இருக்கின்ற வாழ்க்கை முழுவதும் அழுதுகிட்டே இருக்கப்போகின்றாய்
என்றால், சொல்லு.நான் உனக்கு செய்த பாவத்திற்கு நானும் என் வாழ்க்கை பூராகவும் அழுது தொலைக்கின்றேன்.” என்றவன் அவளது கையை பிடித்து இழுத்துக்கொண்டு போய் அவன் மதில் பாயும் இடத்தருகில் நின்று அவளை தன் கைகளால் மதில் மேல் தூக்கி இருத்தியவன் அவனும் மதில் மேல் பாய்ந்து உள்ளே இறங்கி அவளை மறுபடியும் உள்ளே இறக்கி விட்டு நீ உள்ளே போ.நான் போகின்றேன் எனக் கூறிக்கொண்டு மதிலருகே சென்றவன் யாரோ வருவது போல் தோன்றவும் இரண்டடி பின்னால் வைத்தவன் அவள் மீது இடிபட்டு தட்டுத்தடுமாறி அருகிலிருந்த செடிகளுக்கு நடுவில்  அவள் மீது அவன் விழுந்தான்.
“ஆ… ஐயோ… அம்மா…வலிக்குது. எழும்புடா. மூச்சு முட்டி சாகப்போகின்றன்.” என்று கத்தியவளின் வாயை அவன் தன் கைகளால் பொத்தினான்.
“ஏய்… கத்தாதேடி யாரோ வருவது போல 
இருக்கிறது.”என்றவன் அவனின் கட்டுமஸ்தான உடம்பின் கீழ் அவள் நசிவதை உணர்ந்து எழுந்து செடிகளிற்கு நடுவில் அமர்ந்து,அவளையும் எழுப்பி விட்டான்.
எழுந்து அமர்ந்தவள் “ஏன்டா? தடிமாடு உன்னை நான் தாங்குவேனா? அம்மா என் கை,கால்எல்லாம் வலிக்குதே?” என்று புலம்பினாள்.
“சரி… சரி… எழுந்திரு.”
“என்னால் முடியவில்லையே…?”
அவன் குனிந்து அவளை தூக்கியவன் மாடிக்கு கொண்டு சென்று அவளது றூம் முன்னால் விட்டான்.
அவள் இறங்கி கதவை திறந்து, உள்ளே சென்று லைட்டை போட்டு விட்டு, அவனை உள்ளே வருமாறு கூறினாள்.
அவன் உள்ளே வரவும் “சற்று நேரம் கழித்து போ.யாராவது இருக்கப்போகிறாா்கள்.என்றவள்.அவனை திரும்பிப்பார்த்து அதிர்ந்து போய் “ ஏய் என்ன? இது உன் பின் கழுத்துக்கு கீழே இரத்தம் இப்படி வருகின்றது என பதறினாள்.
 

Advertisement