Advertisement

 Episode 19
“தியா…. ப்ளீஸ் தியா… என்னை மன்னித்துக்கொள் தியா.எனக்கு என்ன தண்டனை வேணும் என்றாலும் கொடு.ஆனால் உன்னை வருத்திக்கொள்ளாதே… நான் பண்ணியது மன்னிக்க முடியாத தப்பு,அதற்காக என்னை மன்னிக்காது விட்டுவிடாதே…! நீ தான் என்னுடைய கடைசி வரையான உறவு.என்னை கைவிட்டு விடாதே தியா.எனக்கு மறுபடியும் ஒரு சான்ஸ் கொடு தியா.என வேதனையில் வார்த்தைகள் குழறின.தியா நான் என்ன? செய்தால் என்னை மன்னிப்பாய் என்று சொல்லு,உன் காலைப்பிடித்து மன்னிப்பு கேட்டால் என்னை மன்னிப்பாயா? என்று கூறிக்கொண்டு அவளது கால்களை,அவனது கைகளால் தொடவும், தியா செந்தூரை பிடித்து தள்ளிய வேகத்தில் பின்பக்கமாக விழுவது போல் சென்றவன் பலன்ஸ் செய்து ஜம் பண்ணி எழும்பினான்.
“என்ன? தியா டக் என்று தள்ளி விட்டாய்,நல்ல வேளை பலன்ஸ் பண்ணியதால் அடிபடாமல் எழுந்து விட்டேன்.”
அவனை உஷ்ணமாக பார்த்த தியா, “பார்த்தாயா? உன்னை நான் வேணும் என்று தள்ளி விட்டு கூட நீ விழவில்லை.ஏன்? எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.உன்னால் மீண்டு எழ முடிந்தது.ஆனால் நீ தள்ளி விட்டதால் இன்னும் என்னால் மீண்டு வரமுடியவில்லையே….! நீ என்னை தள்ளி விடாமல் இருந்தால் என் குழந்தையாவது மிஞ்சியிருக்கும்,அதையும் என்னிடம் இருந்து பறித்தவன் நீ. அபார்சன் பண்ணிய பத்தாவது நாள் பச்சை உடம்போட இரண்டு நாள் என்ன? செய்வது என்று தெரியாமல் எல்லாவற்றையும் அடக்கி கொண்டு  உன் வீட்டு வாசலில் நின்றேன்.அதுக்கு பிறகு தான் தாத்தாவிடம் போனேன். தாத்தா இறந்த பின்பு என் மானத்தை காப்பாற்றுவதற்கு ஓடிய ஓட்டம் என் கால்களிற்கு தான் தெரியும்.
“தியா நான் உனக்கு செய்தது தப்பு தான்.”
“ஆமாம்.தப்புத்தான் அதை நீயே சொன்னால் நீ செய்த தப்பு சரியாகி விடுமா?”
……..
“நான் பட்ட வலி உனக்கு தெரிய வேண்டும் என்றால்,நீ நானாக மாறினால் தான் புரியும்.”
……..
‘எவ்வளவு கத்துகிறேன் எருமை மாட்டில் மழை பெய்தது போல பேசாமல் இருக்கின்றானே’ என்ற கோபம் எழ “டேய்… எருமை மாட்டுக்கு கூட உன் அருகில் நின்றால் சூடு, சொரணை,மானம்,வெட்கம் எல்லாம் வந்து விடும். தயவுசெய்து என் கண்முன்னால் நிற்காமல் போய்விடு.இல்லையென்றால் இதில் இருக்கும் கட்டையை எடுத்து உன் மண்டையை பிளந்தாலும் பிளந்து விடுவேன்.” என்று கத்தினாள்.
என் மண்டையை பிளந்தால் உனக்கு சந்தோசமா? ஆ… சொல்லு தியா.” என்று கூறிக்கொண்டு அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து தன் தலையில் தானே உடைக்க ஓங்கியவனை தடுத்து நிறுத்தினாள்.
“தயவு செய்து மறுபடியும் என் வாழ்க்கையில் ஒரு குழறுபடியை எற்படுத்தி விடாதே…! ஐயா…! சாமி…! உனக்கு புண்ணியமாக போகும். உன் தலையில் நீயே அடிப்பதென்றால் அடி.ஆனால் அதற்கு முன் என்னை உன் கம்பனி ஹெஸ்ட்ஹவுசில் இருந்து என் இடத்திற்கு கொண்டு போய் பத்திரமாக ‘விட்டு விட்டு’ வந்து உன் தலையில் நன்றாக அடித்துக்கொள்”.என்றாள்.
“இல்லை…. எனக்கு வலிப்பதை நீ பார்த்தாலாவது உன் மனம் இரங்காதா?” என்றான்.
“எதற்கு? நீ ஆர்வக்கோளாறில் அடிக்கும் போதே ‘எசகுபிசகாய்’ அடித்து படக்கூடாத இடத்தில் எங்கேயாவது  பட்டு,’செத்துகித்து’ தொலைந்தாய் என்று வை.என்னையல்வா போலீஸ் பிடிக்கும்,கம்பி எண்ண வைக்கும்,களி தின்ன வைக்கும். ஒரு வேளை அது தான் உன் எண்ணமுமோ?” என்றாள்.
“நான் என்ன? சொன்னாலும் நீ நம்ம மாட்டாயா? தியா.என கெஞ்சுதலாக கேட்டவன் அவள் மசியாது நிற்கவே சரி… கிளம்பு தியா போகலாம்.உன்னை கொண்டு போய் வீட்டில் விடுகின்றேன்.ஆனால் இதோடு விட்டு விடுவேன் என்று மட்டும் நினைக்காதே…? மறுபடியும் வருவேன்.” என்றவனது மனம் நொந்து போயிருந்தது.
“சரி இவ்வளவு தானா உன் பில்ட்டப். சும்மா….எல்லாம் ஒரு சமாளிப்பு தான்.தன்னை நல்லவன் என்று காட்டுவதற்கு,அந்த முயற்சி சரி வரவில்லை என்றவுடன் பல்டி அடிக்கிறான்.சரியான கேடி. இவனை நம்பி விடாதே தியா.” என உள் மனதிற்கு ஊக்கமளித்தாள்.
காாில் அவள் ஏறியதும் அவனொன்றும் பேசாது காரை எடுத்தான். அவளை அவளது வீட்டுக்கு கொஞ்சம் தூரமாக இறக்கி விட்டு, ஒரு சிறு தலையசைப்புடன் காரை ஓட்டிக்கொண்டு சென்று விட்டான்.
அவன் போன திசையை பார்த்தவள் தலையை சிலுப்பிய படி, தோள்பட்டையை குலுக்கியவள், ‘இப்படி அப்பாவி மாதிரி முகத்தை வைத்திருந்தால் இவனை இரக்கப்பட்டு  என்னவென்று கேட்பேன் என நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.’ என நினைத்தவள் தன் வீட்டை நோக்கி சென்றாள்.
வீட்டுக்குள்ளே சென்றவளிற்கு ஒரே படபடப்பாக தான் இருந்தது.ஏனெனில் இவன் காரை வேகமாக ஓட்டிச்சென்றானே…. எங்கேயாவது போய் முட்டி கிட்டி தொலைத்தால்…என்று நினைத்தவளிற்கு கடுப்பாகியது.வாகனம் ஓட்டும் போது அளவுக்கதிகமாய் ஏன்? வேகம் வைக்கவேண்டும். தன்னுயிரைப்பற்றி கவலைப் படாதவனுக்காக நான் என்ன? செய்ய வேண்டும். இவனுக்கு ஏதாவது? என்றால் எனக்கு என்ன? என பிடிவாதமாக தன் வேலைகளை கவனிக்க தொடங்கினாள்.
வேலையில் கவனத்தை செலுத்தினாலும், மனம் அவன் வேகமாய் சென்றதிலேயே வந்து நின்றது. ‘நான் ஏன்? இவனைப்பற்றி நினைக்கிறேன்… இன்னும் இரண்டு நாள் இவனோடு பேசினால் நானே இவன் நல்லவனென்று நினைக்குமளவுக்கு பண்ணி விடுவான் இந்த ராஸ்கல்.இனி இவனோடு பேசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும.’என நினைத்த வண்ணம் தன் இடத்தை நோக்கிச்சென்றாள்.
வேகமாக  காரை ஓட்டியவனுக்கு தலைவலி மண்டையை பிளப்பது போலிருக்க அதையும் தாண்டி அவன் மனவலி இதயத்தை பிளந்தது. அவனது உடல் ஓய்வை கேட்டுக்கொண்டிருக்க அவன் மனம் உண்மையை தேடி ஓடிக்கொண்டிருந்தது.எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையிலிருந்தவனால் தியா அவனது அம்மா,அக்கா பற்றி  சொன்ன விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அவர்களே பெண்கள்,பெண்களாயிருந்து கொண்டு இன்னொரு பெண்ணுக்கு….”சை நம்பவே முடியாது.’ “தியா கூட தவறுதலாக ஏதும் கணக்கிட்டிருக்க கூடும்’ என கண்டதையும் நினைத்து இன்னும் தலைவலியை அதிகமாக்கி கொண்டான்.
‘அவன் சம்மந்தப்பட்ட என்னவோ இரகசியம் அக்காவிடமும்,அம்மாவிடமும் இருக்கின்றது.அதை எப்படியாவது கண்டு பிடிக்க வேண்டும்.அது எத்தனை கொடுமையாக இருந்தாலும் பரவாயில்லை என்ற முடிவோடு வீட்டு முற்றத்தில் கொண்டு வந்து காரை நிறுத்தியவன் உள்ளே சென்றான்.
“என்னடா? இன்று ஹாப்டேயா? சீக்கிரமாக வந்து விட்டாய்.என்றாள் நடு ஹோலில் இருந்த தமக்கை.”
“ம்ம்….” அதற்கு மேல் எதுவும் பேசாது தன் அறைக்குள் புகுந்து கதவை தாழ் போட்டு விட்டு அப்படியே நின்றவாக்கில் பொத்தென்று பெட் மீது வீழ்ந்து படுத்துக்கொண்டான்.
அன்று தியாவுக்கு புதிதாக ஒரு பிரச்சனை கிளம்பியது. அவள் தங்கியிருக்கும் வீட்டுக்கார அம்மா வந்து அவளிடம் ஒரு கவரில் வைத்து  போட்டோ ஒன்றை கொடுத்தார்.
“அம்மா இது என்ன? கவர்.”
“பிரித்து பார் தியா.” என்று கூறவும் அவள் பிரித்து பார்த்தாள்,அதற்குள் ஒரு பையனின் படம் இருந்தது.
“இது யாருடைய படம் அம்மா.உங்கள் பையனது படமா?” என வெகுளியாய் கேட்டு வைத்தாள்.
“இல்லம்மா…. இது என் சினேகிதியோட மகன்.இவனக்கு பொண்ணு பார்க்கிறோம், அது தான் உன்னிடம் கொடுத்தேன்,பையன் நன்றாக? அழகாக?இருக்கிறானா? மாத சம்பளமே லட்சத்திற்கு மேல் வரும்.” என்றாள் வீட்டுக்காரம்மா.
“ஓ… அப்படியா? என அசுவாரஸ்யமாக சொன்னவள், ஓகே அம்மா,என் நண்பிகளிடம் கேட்டுச்சொல்கின்றேன் யாரும் நல்ல பொண்ணாக இருந்தால் சொல்லச்சொல்லி” என்றாள்.
என்னடியம்மா? தியா.சூது,வாது இல்லாத பிள்ளையாக இருக்கின்றாயே….! என அதிசயித்து விட்டு, நான் சொன்ன விடயம் உன் நண்பிகளை பெண் கேட்பதல்ல,உன்னைத்தான் என்று கூறி அவள் நெஞ்சில் கொதிநீரை ஊற்றிவிட்டு,இன்னுமொரு தகவலையும் சொன்னார்.நாளை எனது நண்பியும், அவளது  கணவரும் உன்னை பார்ப்பதற்கு வருகின்றார்கள்.நீ ஆயத்தமாக இரு.”என்று தானே கேள்வியும் சொல்லி பதிலும் சொல்லி விட்டு கீழே இறங்கினார்.
“அ…அம்மா….  அம்மா… நான் சொல்வதை கேளுங்கள்.” என அவள் கூற வந்ததை கேளாது அவர் சென்று விட்டார்.
‘அடக்கடவுளே என்னை ஏன்? இப்படி  சோதிக்கிறாயா? இல்லை, தண்டிக்கிறாயா? என் வாழ்க்கையில் மட்டும் தான் விதி ஒய்வெடுக்காகது மாறி மாறி தன் வேலையை செய்கிறது போல…’ எனமனதுக்குள் நினைத்துக்கொண்டவள் “கடவுளே நீ தான் இந்த ராஸ்கை கொடுத்தாய் இதை நீயே முடித்துக்கொடு.” என வாய் விட்டு புலம்பிக் கொண்டு தன் வேலையில் ஈடுபட நினைத்தாள் ஆனால் அது இலகுவாய் இருக்கவில்லை.
அடுத்த நாள் ஆபிசுக்கு சென்றவளுக்கு இருப்புக்கொள்ளவில்லை..’

Advertisement