Advertisement

           வாசு உணவகத்தின் வெளியே வந்து விட்டான். எழுந்து நின்று ஸ்ரீயை பார்த்தவன், அவன் மனம் கொஞ்சம் நிதானிக்க வேண்டி சட்டென்று வெளியே வந்துவிட்டான். 
அவன் வெளியே செல்லவும் ஸ்ரீயும் வெளியே செல்ல பார்த்தாள். ஆனால் வெளியே மக்கள் பஸ் நிறுத்ததிற்கு போக வர இருக்கவும், இவள் வாசுவின் பின்னே சென்று ஒரு அசவுகரியத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. எப்படியும் கடையை அடைக்க வருவான் தானே, அது வரைக்கும் பொறுப்போம் என அந்த ஊஞ்சலிலே அமர்ந்துவிட்டாள். எதுவாயினும் சரி அவன் எண்ணத்தை சொல்லட்டும் என பொறுமை காத்தாள். ஒரு பத்து நிமிடம் சென்று உள்ளே வந்தான். 
வாசுவின் முகத்தை என்ன சொல்ல போகிறானோ என்ற எதிர்பார்ப்புடன் பார்த்திருந்தாள். 
உள்ளே வந்தவன் ஸ்ரீயின் முகத்தை பார்த்தான். அவள் முகம் எதிர்பார்ப்புடன் இருபத்தை பார்த்தவன், மூச்சை ஆழமாக இழுத்து விட்டான்,
“ ஸ்ரீ are you kidding ?”
“ நான் விளையாடல மாமா. Am serious. ”
“ இங்க பாரு ஸ்ரீ. இப்போதைக்கு எனக்கு மேரேஜ் பத்தி எந்த ஐடியாவும் இல்ல. என்னால அத பத்தி இப்போ யோசிக்க கூட முடியாது. 
என் நிலைமை அப்படி,  நான் என் லைஃப்ல இப்போ ஒரு முக்கியமான பொசிஷன்ல இருக்கேன். அது என்னனு இப்போ என்னால சொல்ல முடியாது.
 ஆனா அது எனக்கு ரொம்ப முக்கியம். எனக்கு மைண்ட்ல இப்போ அத தவிர எதுவும் யோசிக்க முடியாது.
அப்படியே நான் யோசிச்சலும், என்னால உன்ன அப்டியெல்லாம் யோசிக்க முடியமானு தெரில. 
இதுவரைக்கும் உன்ன அப்டிலாம் நினைச்சது கூட இல்லை. நீ சின்ன பொண்ணு. நீ என்ன விட ஆறு வருஷம் சின்ன பொண்ணு.”
“இப்போ உங்களுக்கு ஏஜ் தான் ப்ராப்ளம்மா.” என ஸ்ரீ கேட்க,
 “ஸ்ரீ இங்க பாரு, உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுனு தெரில. நீ என்ன நினைச்சு இப்டி என்கிட்ட இப்படி சொன்னேனு தெரில. பட் எனக்கு அப்டி எந்த ஐடியாவும் இப்போ இல்லை. “
“ ஏன் மாமா, உங்களுக்கு வேற யாரையாவது மேரேஜ் பண்ற ஐடியா இருக்கா ? ” 
“ நீ நினைக்கிற மாதிரி எனக்கு அப்டி எந்த ஐடியாவும் இல்ல. அண்ட் அப்டியே இருந்தா கூட உன்ன அப்டி நினைச்சு பார்த்ததே இல்ல.  “ பொறுமையாக சொன்னான் வாசு.
ஸ்ரீ மௌனமாக அமர்ந்திருந்தாள். அவன் சொன்ன அனைத்தையும் கேட்டிருந்தாள். இவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 
வாசு, அவன் எண்ணத்தை சொல்லிவிட்டான் . இவ்வளவு நேரம் இவர்கள் இங்கே தனியாக அமர்ந்து பேசுவதே தவறென பட்டது வாசுவிற்கு. அதிலும் வெளியே வருவோர் போவோர் கொஞ்சம் நன்றாக உற்று நோக்கினால் இவர்கள் பேசுவது தெரியும் அப்படி தான் அமர்த்திருந்தனர். ஆனால் மக்கள்ளுக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை போலும், இப்போது வரை யாரும் கவனித்தாக தெரியவில்லை. 
இவர்கள் சாதாரணமாக பேசும் வரை வாசுவிற்கு இதெல்லாம் பெரியதாக தெரியவில்லை, அப்போது மனதில் ஒன்றும் ஒன்றும் இல்லை.
ஆனால் ஸ்ரீ அவள் விருப்பத்தை தெரிவித்த நொடியில் இருந்து இவனுக்கு தான் இதையெல்லாம் பார்க்க தோன்றியது.
தனக்கு ஒரு பேச்சு வந்தால் ஒன்றும் இல்லை. ஆனால் ஸ்ரீபத்மாவை யாராவது ஒரு வார்த்தை சொன்னாலும் இவனுக்கு சங்கடமாய் இருக்கும். 
ஏதோ சின்ன பெண், ஒரு ஆர்வத்தில் சொல்லிவிட்டாள் யாரேனும் கவனிக்கும் முன் இவள் வீடு சென்று சேர்ந்தால் பரவாயில்லை என்று தான் தோன்றியது வாசுவிற்கு .
இவன் இதெல்லாம் யோசித்திருக்கும் சமயம், எழுந்து விட்டாள் ஸ்ரீ. முகத்தில் ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை. 
“ஓகே மாமா. நான் கிளம்புறேன். “ என சொல்ல இவனும் சரியென எழுந்து விட்டான்.
இதெல்லாம் உள்ளே நின்றிருந்த கிருபா கவனித்து தான் இருந்தான். அவனுக்கு ஸ்ரீயை மிகவும் பிடித்தது, வந்ததிலிருந்து பார்த்துக்கொண்டு தானே  இருக்கிறான். ஒரு சினேகபாவம் அவளிடம் இயல்பாக இருந்தது. வாசு கடையை அடைத்து அவன் தோப்பிற்கு சென்று விட்டான்.
அங்கே சென்று அந்த ஒற்றை அறையில் படுத்தவனுக்கு மனம் என்னமோ யோசித்தது. ஸ்ரீபத்மாவிற்கு அப்படி ஒரு எண்ணம் வரும்படி தான் எங்காவது நடந்து விட்டோமா என பலவாறு யோசித்து அப்படி எல்லாம் எதுவும் இல்லை என தெளிந்து கொஞ்சம் காற்றாட வெளியே நடக்கலாம் என கிளம்பிவிட்டான்.
இவன் இங்கே இப்படி இருக்க ஸ்ரீபத்மவிற்கு வீட்டிற்கு செல்லவே மனதில்லை. எங்காவது தனியாக அமர இடம் வேண்டும் போல் இருந்தது. அதனால் ஓடை அருகே அமர்ந்தாள். 
‘எவ்வளவோ நம்பிக்கையா வந்தோம், இப்டி ஆயிடுச்சே. வேணாம்னு சொல்லிட்டான். சரி அது அவன் இஷ்டம்’ என யோசித்தவள் கொஞ்சம் மனதை தேற்றினாள்.
ஆனால் வேறு ஒன்று அவள் மனதில் தோன்றியது. இந்த கோணத்தில் அவனிடம் நாம் சொல்லவில்லையே என ஏதோ யோசித்தவள். நாளை வாசுவை மறுமுறை சந்திக்க வேண்டும் என முடிவு செய்தாள்.
நாளே கொச்சின் செல்ல இங்கு வரும் போதே பதிவு செய்து தான் வந்திருந்தாள், அதனால் இங்கே இருக்கும் நேரம் வரை எதையும் நினைத்துக்கொள்ள கூடாது என முடிவிற்கு வந்தவள் பிறகு மெல்ல நடந்து வீட்டை அடைந்தாள்.
வீட்டில் வந்து பார்த்தாள், இவள் வாசுவின் கடையில் வாங்கிய பொருள்களும், கேரட் அல்வாவும் இருந்தது. எல்லாம் கிருபா வந்து கொடுத்திருபான் போலும். 
மாலை சிற்றுண்டியாக எல்லாரும் வாசு வீட்டில் இருந்து கொடுத்து விட்டிருந்த கேரட் அல்வாவை சுவைத்து கொண்டிருந்தனர். அதை பார்த்ததும் தானாக புன்னகை அரும்பியது. ‘அவன் தான் அப்போவே அல்வா குடுத்துட்டானே. மறுபிடியும் முதல இருந்தா’ என இயல்பிற்கு திரும்பியவள், வீட்டில் எதுவும் காட்டிக்கொள்ள வில்லை, ஆன்று முழு நாள் தேனுவுடன் கொட்டம் அடித்தாள். 
அடுத்த நாள் காலை வேளை ஒரு ஒன்பது போல் வாசுவின் தோட்டதில் இருந்தாள்.
அவளை அங்கே சற்றும் எதிர்பார்க்கவில்லை வாசு. அவனையும் மீறி அவன் கண்களில் ஒரு எச்சரிக்கை சுற்றி ஒருமுறை பார்த்தான். ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். இவள் குறுங்காடின் வழியே மேல கீழே என கண்களில் ஆச்சர்யத்தையும், முகத்தில் சுவாரசியத்தையும் தேக்கி சுற்றி திரிந்த பறவைகளையும் ஓங்கி வளர்ந்திருந்த மரங்களையும் பார்த்தவள், வந்த வேலையை மறந்து மொபைலை கையில் எடுத்து கொண்டாள் போட்டோ சுட ஆரம்பித்து விட்டாள். அதுவும் ஆலிவ் க்ரீன் தாவணியில் வந்திருந்தாள். மரங்கள் பின்னே நிறைந்திருக்க இவள் முன்னே நின்று செல்ஃபி எடுக்க என உற்சாகமாக அதில் கவனமாகிவிட்டாள்.
வாசுவிற்கு மனம் சூடேறியது. நேற்று அவ்வளவு சொல்லியும் இப்படி வந்து நிற்கிறாளே. இது வரை இப்படியெல்லாம் ஸ்ரீ இவன் இருக்கும் பொழுது பெரிதாக வந்ததில்லை. சில சமயம் வந்திருக்கிறாள் சிவசு தாத்தாவோடு அப்போதெல்லாம் இவனுடன் பேசும் சந்தர்பம் வாய்க்கவில்லை. இப்போது இப்படி வந்து நிற்கவும் வாசுவிற்கு அப்படி ஒரு கோபம் உள்ளுக்குள் என்ன நினைத்துகொண்டிருக்கிறாள் இந்த பெண், இத்தனை ஆட்கள் சுற்றி வேலையில் இருக்கிறார்கள் யாராவது ஏதாவது நினைத்துகொண்டால் என்ன செய்வது என இவன் தான் பெரிதும் கவனம் எடுத்தான் . 
இவன் வாட்சப்பில், “What are you doing here ?” ஸ்ரீக்கு அனுப்பு,
அதை பார்த்தவள், “ Need to talk to you. Just 10 mins. “ என இவள் பதில் அனுப்பினாள்.
இவனுக்கு கன்னா பின்னா வென கோபம் ஏற விடு விடு அவள் நிற்கும் இடம் சென்றான். அவன் வருவதை தொலைவில் இருந்தே செல்ஃபி எடுப்பது போல் பார்த்தாள். அவன் வரும் வேகமே இவளுக்கு சிலதை விளக்கியது. 
அருகில் வந்துவிட்டான், 
“இங்க என்ன ஸ்ரீ பண்ற ?” முகத்தில் அவ்வளவு கடுப்பு.
“மாமா அது பேர்ட்ஸ் எல்லாம் நிறையா இருக்கா. அதான் போட்டோ எடுக்கலாம் வந்தேன். நீங்க நேத்து வயலுக்கு வா நிறையா பார்க்கலாம்னு சொன்னிங்க. சோ அதான் ஒரு சின்ன விசிட்.
எனக்கு உங்க சோள தோப்பு காமிக்கிறிங்களா அங்க ஃபர்ஸ்ட் நிறையா குருவி, கிளி எல்லாம் பார்த்தேன். அங்க போட்டோ எடுக்கணும், அப்படியே கொஞ்சம் பேசணும்.” என சிறிது தயங்கி தான் அவனிடம் கேட்டாள்.
அவளை வேறு யாரும் அறியாமல் உற்று முறைத்தவன், வா என அழைத்து சென்றான். 
சோள தோப்பிற்கு போகும் வழியெல்லாம் வயலில் ஆங்காங்கே நின்று செல்ஃபி எடுத்து, அங்கே வேலையில் இருந்த பெண்களுடன் செல்ஃபி எடுத்து, ‘அக்கா அப்படி பாருங்க, இப்படி பாருங்க’ அவர்களை தனியாக எடுத்து என அவர்களுடன் கலந்துரையாடி என இவள் சகஜமாக அந்த சூழலில் பொருந்தி வந்தாள். எல்லாம் ஒரே ஊர், அது மட்டும் இல்லாமல் இவள் இப்படி தான் காமெரா அல்லது மொபைலில் இப்படி ஏதாவது போட்டோஸ் எடுக்க ஊருக்குள் சுற்றுவாள். அதனால் வாசு நினைத்த அளவு கூட அங்கே யாரும் ஸ்ரீயை தவறாக நினைக்க என்ன பார்க்க கூட இல்லை.
அதையெல்லாம் பார்த்த பின்பு தான் வாசுவிற்கு சற்று மனம் சமன்பட்டது. சிறிது நிதானத்திற்கு திரும்பினான்.    
சோளத் தோப்பின் நடுவில் நின்றிருந்தனர். அங்கே சுற்றி ஆட்கள் இல்லை. எல்லாம் சற்று கண் பார்க்கும் தூரத்தில் வயல் வேலையில் மூழ்கி இருந்தனர்.
சோளத் தோப்பில் கிளிகள், குருவிகள் என குறைந்தது நானூறு இருந்தது. எண்ணிக்கையில் குருவிகள் அதிகம் இருந்தது. சோளதோப்பில் கிளிகள் குருவிகள் எல்லாம் பயிரின் மேல் அமர்ந்து அசந்தாடி சாப்பிட, அத்தனையும் கீ கீ என எவ்வளவு சத்தம். அத்தனை பச்சை கிளிகளையும் சாம்பல் நிற குருவிகளையும் பார்க்க நிச்சயமாக கண்கள் போதவில்லை. பார்த்தபடி நின்றுவிட்டாள். போட்டோஸ் நிறையா எடுத்தும், மனம் அந்த காட்சிகளிலிருந்து கண்களை அகற்ற விரும்பவில்லை.     
வாசு தான் குழம்பி போனான். இவள் போட்டோஸ் தான் எடுக்க வந்தாளோ, நாம் தான் தவறாக நினைத்து விட்டோமோ என நினைத்து இவளை தான் பார்த்திருந்தான்.
“ஸ்ரீ..”
ஸ்ரீபத்மா திரும்பவில்லை.
“ஸ்ரீ..நீ நெஜமா போட்டோ எடுக்க தான் வந்தியா”
அப்போது தான் திரும்பினாள். அவ்வளவு நேரம் கவனம் இவனிடம் இல்லை போலும். விடியற்காலையில் இருந்து உழைத்து வேர்வை சொட்ட நின்றிருபவனை இப்போது தான் பார்த்தாள். புழுதி படிந்த வேட்டியை மடித்து கட்டி, ஆங்காங்கே மண் படிந்த டி ஷர்ட்டில் நின்றிருந்தான். 
“மாமா அது உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்.” என மெதுவாக ஆரம்பிதாள்.
“சொல்லு” முறைப்பாக பதில் கொடுத்தான்.
அசரவில்லை ஸ்ரீ, “சொல்லுனு இப்டி முகத்த வச்சு சொன்னா எப்டி. நீங்க பொறுமையா கேட்ட சொல்றேன். இல்ல வழிய விடுங்க நான் சுந்தரி ஆச்சி கிட்டாயே பேசிக்கிறேன்.” என இவள் விலகி செல்ல பார்க்க, சிறிது அதிர்ந்து தான் போனான் வாசு. இவள் என்னத்தை சொல்லி வைப்பாள் என அவனால் கணிக்க முடியவில்லை.
“ ஹேய் நில்லு ஸ்ரீ. உன்ன பார்த்ததும் கொஞ்சம் டென்ஷன். அதான் அப்டி. சரி சொல்லு.”  கொஞ்சம் குரல் இறங்கி வந்தது.
உள்ளுக்குள் புன்னகை பூத்தலும் வெளியே எதுவும் காமிக்கவில்லை ஸ்ரீ.  முகத்தை எப்போவும் போல் வைத்தாள். 
அவள் என்ன சொல்ல போகிறாளோ என கவனமானான்.
“மாமா நேத்து நான் கேட்டதுக்கு நீங்க சொன்னா விஷயம் யோசிச்சு பார்த்தேன். 
நீங்க சொன்னது இது வரைக்கும் மேரேஜ் பண்ற அளவு என்னை பத்தி  யோசிக்கலானு சொன்னிங்க தானா ?”
“ஆமா சொன்னேன். “ 
“சோ இது வரைக்கும் யோசிக்கல…தட்ஸ் ஓகே…பட் இப்போ நான் சொல்றத கொஞ்சம் யோசிச்சு பாருங்க.” இவள் இப்படி முடிக்கும் முன்னே ஏதோ சொல்ல வாய் எடுத்த வாசுவை பார்த்தவள் ஒற்றை கை காட்டி நிறுத்தினாள்.
“நான் பேசி முடிச்சுக்குறேன் மாமா.
நீங்க நேத்து அவ்வளோ பேசியும் நான் இங்க இப்படி வந்து நிக்கறது தப்பு தான். அது எனக்கு தெரியும். பட் ஒரு விஷயம் நான் கிளியர் பன்னணும்.
நேத்து நீங்க சொன்னதெல்லாம் நினைச்சு பார்த்தேன். நீங்க சொன்னது மூனே விஷயம் தான். 
நீங்க ஏதோ லைஃப்ல ஒரு முக்கியமா பொசிஷன்ல இப்போ இருக்கீங்க. அது என்னனு எனக்கு தெரியாது. 
இப்போ நீங்க யார் கூடவும் ரிலேஷன்ஷிப்ல இல்ல.
நெக்ஸ்ட் இது வரைக்கும் என்னை மேரேஜ் பண்ற அளவு யோசிச்சு பார்த்ததில்ல.
சோ நான் சொல்றது ஒரே விஷயம் தான்.
அது நீங்க ஏன் இன்னும் கொஞ்சம் டைம் எடுத்து யோசிச்சு சொல்லக்கூடாது. எனக்கே உங்க கிட்ட என்னோட ப்ரோபோசல் சொல்ல த்ரீ மன்த்ஸ் டைம் எடுத்தேன். 
இத நீங்க லவ் ப்ரோபோசலா நினைக்க வேண்டாம். ஏதோ உங்க வீட்ல பொண்ணு பாக்குற மாதிரி நினைச்சுகோங்க. அப்டி யோசிச்சு பதில் சொல்லுங்க.
அண்ட் எல்லதையும் விட அஞ்சு வருஷம் ஏழு மாசம் தான் உங்கள விட  சின்ன பொண்ணு ஆறு வருஷம் இல்ல.
சோ நான் நெக்ஸ்ட் டைம் இங்க வரப்போ சொல்லுங்க. எந்த பதில்லா இருந்தாலும் நான் அக்சப்ட் பண்ணிக்கிறேன். 
இப்போ நான் கிளம்புறேன். பை மாமா.” என திடமாய் சொல்லிச் சென்றுவிட்டாள் ஸ்ரீ. அவன் பதிலை கூட எதிர்பார்க்கவில்லை.
மண்ணில் பூ பாதம் பதிக்க செல்லும் அவளையே தான் பார்த்திருந்தான் வாசு. இப்படியெல்லாம் அவள் பேசுவாள் என இவன் எதிர்பார்க்கவில்லை. நேற்றோடு எல்லாம் பேசியாயிற்று, யோசித்து பார்த்து புரிந்து கொள்வாள் என இவன் எண்ணியிருக்க, இவன் இது வரை யோசியாத கோணத்தில் அவள் எண்ணத்தை சொல்லி சென்று விட்டாள்.  
அவள் சென்ற பிறகும் அந்த இடத்தில் நின்றபடி சிறுது நேரம் நின்றிருந்தான். இப்போது யோசிக்க அவனுக்கு நேரம் இடம் கொடுக்கவில்லை. வேலை வரிசைகட்டி நின்றது. 
இளநீர் இறக்குவது, தேங்காய் உரிப்பது, காய்கறிகளை பிரித்து கடைக்கு எடுத்து செல்வது என்ன எல்லாம் அவன் நேரத்தை எடுத்துக்கொண்டது. நிச்சயமாக அவனுக்கு நேரம் போதவில்லை, எல்லாம் முடித்து மதியம் தாண்டி இன்று இவன் உணவகத்திற்கு வர, ஒரு சில ஆட்கள் தான் அமர்த்திருந்தனர், கிருபா அவர்களை கவனித்து கொண்டிருந்தான். மிகவும் களைப்பு வாசுவிற்கு, அதனால் அவனே சமையல் அறை சென்று இவனுக்கு கம்பு தோசையும் தயிர் பச்சடியும் எடுத்து வந்து அன்று இவனும் ஸ்ரீயும் அமர்த்த ஊஞ்சலில் எதர்தமாக அமர்ந்தான். அவன் அதை அப்போது கவனிக்க கூட இல்லை.
சிறிது நேரம் சென்று மற்றவர்களை கவனித்து முடித்து வந்த கிருபா வாசுவை தனியாக பார்க்கவும். இவன் சென்று மணியை அழைத்து வந்து விட்டான். ஆட்கள் எல்லாரும் சென்று உணவகம் காலியாக இருக்கவும், மணியும் கிருபாவும் ஆளுக்கு ஒரு இருக்கையை எடுத்து வந்து வாசுவின் இருபக்கமும் அம்ர்ந்திருந்தனர்.
மணி, “ கிருபா எல்லாம் சொன்னான். அண்ணே ஏன் அவங்கள வேணாம் சொன்னிங். ஒரு ரீஸன் சொல்லுங்க பார்போம். “
வாசு கிருபவை பார்த்து முறைத்தான்.
கிருபா, “ இங்க என்ன உங்களுக்கு லுக்கு, கேள்வி அங்க இருந்து வருது, அங்க பார்த்து பேசுங்க. “  என இவன் பேச,
“ அது ஏதோ சின்ன பொண்ணு டா. மணியோட விஷயத்த சொன்னத நிறுத்திக்க. வேற எங்கயும் சொல்லாத.” என வாசு காட்டம் காட்டிட. மண்டையை உருட்டி வைத்தான் கிருபா.
இருந்தாலும் கிருபா சும்மா இருக்கவில்லை, “ பதில் சொல்லுங்க அண்ணா. இன்னும் எவ்வளோ நாள் தான் இப்படியே இருப்பிங்க. உங்க கல்யாணத்துக்குனு உங்க ஜாதகத்த எடுத்துகிட்டு ஆச்சி நடையா நடக்குறாங்க. 
நீங்களா யாரையும் பிடிச்ச மாதிரி சொல்லல. இப்போ அவங்களே வந்து சொல்றாங்கல்ல, அவங்கள கல்யாணம் பண்ணா என்ன. இன்னும் எவ்வளவோ நாள் தான் இப்படியே இருப்பிங்க.” என கேட்க,
அமைதியாக உண்டு முடித்த வாசு எழுந்து இருவரையும் தாண்டி கை கழுவச் சென்றான். அவன் பின்னே வால் பிடித்து இருவரும் சென்றனர்.
“டேய் நான் கை கழுவ போறேன் டா.”
“நீங்க போங்க…நாங்க பின்னாடி வறோம்…”
“டேய் அநியாயம் பன்றிங்க டா. ”
“உங்கள மாதிரி ஆளுங்களுக்கு இப்படி பண்ணாதான் சரியா வரும்.”
இதற்கு மேல் எதுவும் சொல்லாமல் அமைதியாக கை கழுவி. சமையல் அறையில் எல்லாம் சரி பார்த்தவன், வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமானான். இவர்கள் வழி விட்டால் தானே இருவரும் சமையல் அறை வாசல் மறைத்து நின்றிருந்தனர்.
வாசு நிமிர்ந்து இருவரையும் ஒரு பார்வை பார்த்தான். முடிந்தால் செல்லுங்கள் என இருவரும் விடாகண்டார்காளாய் நிற்க,  
கிருபைவை அப்படியே தோளில் தூக்கி போட்டவன், வெளியே ஷட்டர் இருக்கும் இடம் வந்து இறக்கி விட்டான். 
“அண்ணா..வுடுங்க…அண்ணா..வுடுங்கண்ணா…இப்படி தான் என் இமேஜை டேமேஜ் பன்றதா…ஹப்பா டா எந்த பொண்ணும் இப்போ இங்க இல்ல. உங்களுக்கு கொஞ்சம்மாச்சும் அறிவிருக்கா இப்படி தான் ஒரு அப்பாவி பையன தூக்கிட்டு வருவிங்களா.” என கதறிக்கொண்டு திரும்பி சுற்றி பார்த்தவன் கடைசியாக வாசுவை பார்க்க, மணியும் வெளியே வந்திருக்க வாசு ஷட்டரை இழுத்து மூடினான். 
மணி வாசுவை தாண்டி முறைப்புடன் ஸ்டோர் ஹவுஸ் சென்று விட்டான். அங்கே தான் அவன் தங்கும் இடம்.  
“நீயும் வீட்டுக்கு போடா.” என கிருபாவை பார்த்து சொல்லிவிட்டு பைக்கில் அமர்ந்தான். 
“இப்படியே பண்ணுங்க, ஒரு நாள் உங்க கல்யாணதுக்கு என்கிட்ட தான் வந்து நிக்கனும். அப்போ பார்த்துக்குறேன் உங்கள. இது மட்டும் நடக்கல…நான் கிருபா இல்ல.” என சவுண்ட்விட்டு கொண்டிருந்தான் கிருபா.
திரும்பி கிருபவை பார்த்தவன், “ நடக்குற அப்போ பார்த்துக்கலாம். ஒழுங்கா வீடு போய் சேரு டா.” என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
வீட்டில் வந்து தாத்தா அச்சியுடன் உரையாடி, அப்பாவை அம்மாவின் வாயால் கொஞ்சம் வம்பு செய்ய வைத்து அவரின் பி‌பியை செவ்வனே சிறிது ஏற்றிவிட்டு என அழகாய் மாலை நேரம் கழிய, இரவு உணவு முடிந்த பிறகு கார்த்தியுடனும் தேனுவுடன் மொபைலில் பேசிய பின் காட்சில்லா கூட்டதின் வாட்சப் குருப்பில் அரட்டை முடிந்து பின்கட்டில் வந்து கயிற்று கட்டிலில் அசுவாசமாக படுத்தான்.
படுத்தவனுக்கு இப்போது தான் ஸ்ரீபத்மாவின் நியாபகம். அவள் சொன்னதை தான் நினைத்திருந்தான். அவள் சொன்னது போல் வீட்டில் பார்த்த பெண்ணாக அவள் இருந்தாள், என்ன சொல்லிருப்பான் என சுய ஆலோசனையில் இருந்தான். 
இறுதியாக அவள் சொன்ன வயது வித்யாசமும், இவனை பொரிக்கவா என்று கேட்டதும் நியாபகம் வர, ஒரு புன்னகையுடன் ‘வாய் டி ராங்கி உனக்கு’ என தோன்ற உறங்கி போனான் வாசு. 
 
         
 
 

Advertisement