Advertisement

     வாசு முதலில் என்ன நடக்கிறது என புரியாமல் பார்த்தவன், நிச்சயம் இதை ஸ்ரீயிடம் வாசு எதிர்பார்க்கவில்லை போலும், முதலில் சிறிதாக அதிர்ந்தாலும் பிறகு புரிந்து சிறு ஆச்சர்யத்துடன் விலகி நின்று புன்னகையுடன் பார்த்திருந்தான்.
       பஸ் கிளம்பியதும், ஸ்ரீ ஷாலை முகத்தில் இருந்து அகற்றினாள், அந்த பூக்கூடை வைத்திருந்த பெண்ணும், அந்த வெளிநாட்டு சுற்றுலா பெண் இருவரும் ஸ்ரீயின் அருகே வந்தனர்.
வாசு, ஸ்ரீ தூக்கி எறிந்த இரண்டு பேக்கையும் எடுக்க சென்றான். அதை எடுத்துக்கொண்டு அங்கே பயணிகள் அமரும் இருக்கையில் அமர்ந்தான். அப்போது இவர்கள் நால்வர் தான் அங்கே. அமர்ந்தவன் கிருபாவிற்கு ஃபோன் செய்துக்கொண்டே ஸ்ரீயை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
“ இந்தா கண்ணு “ என அந்த பூக்கூடை அக்கா அவளிடம் ஒரு முழம் பூ தர, அதற்கு ஹேண்ட்பேக்கில் பணம் எடுக்க, எல்லாம் ஐந்நூறு தாள்களாக வர, 
“ அக்கா சேஞ்ச் இல்ல. “ 
“ இது உனக்கு காசுக்காக தரல கண்ணு. 
நீ அவன போட்ட பாரு அதுக்கு தான். இப்படி தான் பொண்ணுங்க தைரியமா இருக்கணும். 
என்னையும் இந்த வெள்ளக்கார புள்ளையும் எப்படி பேசுனான். அவ்ளோ கோபம் வந்துச்சு. நீ கண்டக்டர் கிட்ட அவன் எங்க இறங்குறான்னு கேட்டப்போ, நா கூட எதுக்கு இந்தா பாப்பா கேக்குதுனு நினச்சேன். 
ஆனா கையில தண்ணி பாட்டில் எடுத்ததும் புரிஞ்சிடுச்சு, அதான் அவன் முடிய நல்லா புடிச்சு வச்சேன். நமக்கெல்லாம் நியாயமா வரவங்களுக்கு வர கோபம் தான்.
ஆனா ரெண்டு பொண்ணுங்களுக்கு அம்மாவா சொல்றேன். இது மாதிரி எல்லாம் இனிமே பண்ணாத கண்ணு, ஏதோ அவன் வேற ஊரா இருக்க போய், இத்தோட இந்த பிரச்சனை முடிஞ்சது. 
இதே அவன் இதே ஊரா இருந்தா, இல்ல தப்பானவனா இருந்தா எவ்ளோ பிரச்சன வீடு தேடி வரும் தெரியுமா. அதுவும் பொண்ணுங்கள நேரா எதுவும் பண்ண முடியாம, வேற வழில தான் பண்ணுவாங்க.
பேப்பர்ல எத்தன படிக்குற, உனக்கே தெரிஞ்சிச்சிருக்கும். பார்த்து இருந்துக்கோ கண்ணு. 
தைரியமா மட்டும் இல்லாம நம்ப பாதுகாப்ப இருக்கறதும் நம்ப தான் பார்த்துக்கணும் சாமி. “ என்று பத்திரம் சொல்லி ஸ்ரீயின் கையில் பூவை கொடுக்க,
“ சரிக்கா ” என ஸ்ரீ அவர் உணர்வை புரிந்து சொல்ல புன்னகையுடன் வரேன் என சொல்லிச் சென்றார்.
அந்த சுற்றுலா வந்த பெண்ணும் இவள் அருகில் தான் நின்று இவர்கள் பேசிது, ஸ்ரீக்கு பூ தந்தது, எல்லாம் பார்த்து நின்றிருந்தார். பிறகு ஸ்ரீயின் அருகில் வந்தவர் விவரம் கேட்க, அவள் எல்லாம் விளக்க, ஸ்ரீயை அவர் பாராட்டி, அடுத்த பஸ் அங்கு வர அதில் என்று விட்டார்.
ஸ்ரீ அவர் தந்த பூவை தலையில் வைத்தபடி, வாசுவின் முகத்தை ஆராய்ந்தபடி அருகில் வர, வாசு புன்னகையாக தான் அவளை பார்த்திருந்தான்.
“ மாமா “
“ என்ன ஸ்ரீ “ 
“ உங்க ஃபேஸ் எல்லாம் ப்ரைட்டா இருக்கு. “
“ ஆமா. நான் காலையில யாருக்கும் தெரிய கூடாதுனு எல்லாம் பண்ணேன். ஆனால் இப்போ நீ எல்லோரும் முன்னாடி இப்படி பண்ணி அவன ஒரு வழியாக்கிட்ட . 
ஹா..ஹா..இந்தான் ஃபர்ஸ்ட் டைம்மா, இல்ல இதுக்கு முன்னாடியும் பல சம்பவம் பண்ணிருக்கியா.  “
“ ஹலோ என்ன பார்த்தா பஸ் பஸ்ஸா ஏறி ஏதோ அடிதடில இறங்குற மாதிரி தெரியுதா. 
காலையில அமைதியா நீங்க பண்ணிங்க, அதையே நான் எல்லோரும் பார்க்க பண்ணா, என்ன ரௌடி ரேஞ்ச்சுக்கு பேசுவிங்களா. “ என அவள் முறைத்து வினவ,
பொறுமையாக எழுந்து நின்றவன், அவளின் கையை பற்றி குழுக்கி, 
“எனக்கு காலைல அவன் மேல வந்தது கோபம் , ஆனா உனக்கு இப்போ இவன் மேல வந்தது அறச் சீற்றம். 
சூப்பர் ஸ்ரீ . இதே மாதிரி தைரியமா இரு.
இது தப்பு சொல்ல, பட் எல்லா இடத்துலயும் நம்ப இப்படி நடக்க முடியும்னு சொல்லமுடியாது . 
அந்த பூ விக்கிர அக்கா சொன்ன மாதிரி எதுவா இருந்தாலும் யோசிச்சு தான் பண்ணனும். ஃபர்ஸ்ட் இனிமே உன் சேஃப்டி பாரு. “
 “ தேங்க் யு மாமா. “ அவன் இவ்வளவு புரிந்து கொண்டனே என புன்னகையுடன் சொல்ல, கிருபா வாசுவின் கார் எடுத்து வந்துவிட்டான். கூட மணியும் வாசுவின் பைக் எடுத்து வந்திருந்தான். அவர்கள் பார்த்தது புன்னகையுடன் வாசுவும் ஸ்ரீயும் கை குழுக்கி நிற்பதை தான். 
ஸ்ரீயிடம் இப்படி சொல்பவன் ஒரு நாள் அவனுக்கே‌ அறச் சீற்றம் வரும் போது, எப்படி அதை கையாள போகிறான் என இப்போது அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 
கார் வரவும் இருவரும் விலகி நிற்க, 
உற்சாமாக கார் நிறுத்தி இறங்கிய கிருபா, ஸ்ரீயின் அருகில் வந்து, 
“ அண்ணி அண்ணா ஒத்துக்கிட்டாங்களா. “ என ஆர்வ கோளாறாய் கேட்க, 
இப்போது ஸ்ரீ புன்னகை விடுத்து கை கட்டி வாசுவை ‘ இதுக்கு என்ன சொல்ல’  என்பது போல் பார்த்து நிற்க, வாசுவும் புன்னகையை விடுத்து, சாதாரணமாக கிருபாவிடம் திரும்பி,
“ டேய்…இங்க வா… இந்த பேக் எல்லாம் உள்ள எடுத்து வைக்கலாம். “ என அழைத்து ஒரு பேக்கை தூக்க, கிருபா புரியாமல் ஸ்ரீயை பார்க்க, ஸ்ரீ தலையை இல்லை என்பது போல் ஆட்டினாள்.
ஆளுக்கு ஒரு பேக்கை எடுக்க, எல்லாம் உள்ளே வைத்து, வாசுவிற்கும் ஸ்ரீக்கும் கிருபா தனிமை கொடுத்து மணியுடன் கிளம்பினான். கிளம்பும் முன் வாசு எடுத்து வர சொன்ன இரண்டு பெரிய பையை வாசுவிடம் கொடுத்தான். இவர்கள் உணவாக இனிப்பு வகைகள் எல்லாம் எடுத்து வந்திருந்தான்.
முன்னாடி ஏற சென்ற ஸ்ரீயை தடுத்து நிறுதியவன், பின்னே ஏற சொல்ல, அவனை முறைத்துக் கொண்டே பின்னே ஏறினாள். 
காரை எடுத்த வாசு, அமைதியாக வர, ஸ்ரீ இவனை முறைத்துக்கொண்டே வர, ஒரு ஐந்து நிமிடம் மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை ஸ்ரீபத்மாவால்.
“ மாமா. “
“ ம்‌ம்‌ சொல்லு ஸ்ரீ “
“ இன்னும் கரெக்ட்டா ஐஞ்சு மாசம் தான் டைம். அதுக்குள்ள உங்க லோட்டு லோசுக்கு வேலையெல்லாம் முடிச்சிடுங்க. 
அப்றோம் வந்து நான் இன்னும் முக்கியான விஷயம் முடிக்கல அப்படி இப்படினு ஏதாவது கத விட்டிங்க, அப்றோம் உங்க மேல எதிர் பார தாக்குதல் எல்லாம் நடைபெறும். நியாபகம் வச்சிகோங்க. அப்றோம் என்னை எதுவும்  சொல்ல கூடாது. “
“ நீ தாக்குதல் நடத்தினாலும் நாங்க தப்பிச்சிறோவோம்ல. “
“ எப்படி “
கீழே குனித்து எதையோ எடுத்தவன், அவளிடம் காட்டி, ஹெல்மெட்டை சிரிப்புடன் தலையில் மாட்டினான்.
“ இப்படி ஏதாவது நீ என்னை அட்டாக் பண்ணுனா  என்ன பண்றதுனு நினச்சு தான் கிருபாவ இத எடுத்து கார்ல வைக்க சொன்னேன். நல்ல வேல யூஸ் ஆகுது. “ 
என இவன் சிரித்து சொல்ல, ஸ்ரீ காரின் பின்னே அழகுக்காக இருந்த ஒரு புலி பொம்மையை எடுத்து இவனை நோக்கி பறக்க விட, அதை அசால்ட்டை பிடித்து இவள் முகத்திலே பறக்க விட்டான் வாசு. 
கண்டான ஸ்ரீ “ கார நிறுத்துங்க. நான் இறங்கிக்குறேன். நான் நடந்தே வீட்டுக்கு போறேன். “
“ முடியாது . வேணும்னா அப்படியே ஸ்லோ பண்றேன். கதவ திறந்து அப்படியே குதிச்சிரு. “ என இவன் சிரித்து அவளை இன்னும் கடுப்பேற்ற, 
“ மாமா, இப்போ நீங்க நிறுத்தல. 
நான் காப்பாத்துங்கனு வெளிய பார்த்து கத்துவேன். “ என இவள் ஜன்னல் கதவை இறக்க,
“ ஹேய் நீ கத்துற கத்துல பறவையெல்லாம் பயந்துட போகுது. 
சரி நான் நிறுத்துறேன், நீ இறங்கி நட, உங்க வீட்டுக்கு இப்போ கார்ல போனாலே கால் மணி நேரம் ஆகும். இன்னும் நடந்து போன அர மணி நேரம் ஆகும். 
இப்போவே இருட்டர மாதிரி தான் இருக்கு. நீ நடந்து வீட்டுக்கு போறத்துக்குள்ள, நல்லா இருட்டிரும். போற வழியில எத்தன நாய், பூன வரும் எல்லாம் தெரியாது. 
அன்னைக்கு ஒரு ஸ்னேக் கூட கொஞ்சம் தூரம் முன்னாடி தான் க்ராஸ் பண்ணுச்சு. நான் பைக் கூட நிறுத்தி அது போனதுக்கு அப்றோம் தான் கிளம்புனேன்.  
இப்போ நான் கார் நிறுத்துட்டா ? “ என பயம் காட்டா,
“ மிஸ்டர் பைசன், இந்த கொம்ப ஆட்டுர வேலையெல்லாம் என்கிட்ட வேணாம்.
நான் இங்கயே பொறந்து வளர்ந்த பொண்ணு, இதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன். நீங்க கார் நிறுத்துங்க. நான் இங்கயே இறங்குறேன் வழில வர நாய், பூன கூட எனக்கு நல்லா கம்பெனி கொடுக்கும். ” என இவள் அதற்கும் பேச, வாசு நடு வழியில் வண்டியை நிறுத்தி விட்டான். அவளை பார்த்து திரும்பி அமர்ந்தவன்.
“ இப்போ என்ன பிரச்சன. என்ன என்னை அடிக்கணுமா. அடிச்சிக்கோ. “ என ஹெல்மெட்டை கழட்ட,  
ஸ்ரீ வாயை திறக்காமல் உம்மென உட்கார்ந்து இருக்க, 
“ ஸ்ரீ இங்க பாரு. “ 
இவள் வேண்டும் என்றே கதவை திறக்க பார்க்க, அது சென்ட்ரல் லாக்கில் இருந்தது. வாசுவை முறைத்து பார்க்க, 
அவளை விட இவன் அவளை முறைத்தான், 
“ அத்த என்ன நம்பி தான் உன்ன கூட்டிட்டு வர சொன்னாங்க. இப்படி பாத்தில இறக்கி எல்லாம் விட முடியாது. 
ஒழுங்கா உட்காந்து வர முடியும்னா வா. இல்ல கை கால் எல்லாம் கட்டி உட்காரவைப்பேன். 
வீட்டுக்கு போற கொஞ்சம் தூரம் முன்னாடி எல்லாம் கயிறும் கழட்டிடுவேன். “ 
என சொல்லிக்கொண்டே அடியில் இருந்து அரிசி மூட்டை சாக்கு கட்டும் சரடு ஒன்றை எடுத்தான். 
அதை கையில் எடுத்தவன், அதை இப்படி அப்படி திரும்பி பார்த்து,
“ ஆனா இதுல என்ன ப்ராப்ளம்னா, உன் சைஸ்க்கு இது பத்தாது. ப்ச் வேற கயிறு தான் பார்க்கணும். “ என அந்த கயிறை யோசனையோடு பார்க்க, 
உச்ச கோபத்தில் அவள் ஹேண்ட் பேக்கை கொண்டு இவனை அடிக்க வர, அதை அப்படியே பிடித்து வைத்துக்கொண்டான். 
அவள் பேக்கில் இருந்த மொபைல் அடிக்க, ஸ்ரீ தடுக்க தடுக்க, அதை எடுத்து பார்த்தான்.  சிவகாமி எண்ணை பார்த்ததும் அழைப்பை ஏற்றான். 
“ அத்த நான் வாசு பேசுறேன். “
“ தம்பி நீங்களா. “
“ நான் ஸ்ரீய கார்ல கூட்டிட்டு வரேன். ஆனா ஊருக்குள்ள வந்ததும். 
மாமா உங்களுக்கு ஏன் டிஸ்டர்பன்ஸ், நான் நடந்தே வீட்டுக்கு போறேன் சொல்லி, கீழே இறங்க பாக்குறாங்க. 
இருட்டுல நான் தனியா நடக்க வேணாம் சொன்னா, என்கூட கார்ல ரொம்ப தயங்குறாங்க. அதான் உங்க ஃபோன் வந்ததும், நான் பேசுறேன்னு வாங்கிட்டேன். 
நீங்களே அவங்க கிட்ட சொல்லுங்க. அத்த.
இருங்க ஸ்ரீ கிட்ட தரேன். “ என சொல்லி இவளை நோக்கி நீட்ட,
‘ அட புழுகு மூட்ட ‘ என வாய்யை திறந்து அவன் பொய்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ பேசு “ என சொல்லி அவன் மொபைல் தர,
அவனை ஏகத்துக்கும் முறைத்துக்கொண்டே வாங்கியவள், “ அம்மா..நான்…”
“ வாய மூடு பத்து “
“ ம்மாஆஆ…”
“ பத்து , இன்னும் நேரம் போன இருட்டிரும். அந்த தம்பி எவ்ளோ பத்திரமா உன்ன கூட்டிட்டு வர பாக்குது. நீ என்ன இப்படி பண்ற, பேசாம அந்த தம்பி கூட வா. “ என ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டார். 
ஸ்ரீ கோவத்தோடு ஃபோனை அருகில் வைத்தாள். வாசுவிடம் ஒன்றும் சொல்லாமல், கார் ஜன்னலை ஏற்றினாள்.
அவள் செய்கையை புன்னகையோடு பார்த்தவன், வேறு எதுவும் அவளிடம் பேசாமல், அமைதியாக ஸ்ரீயின் வீட்டிற்கு ஓட்டி வந்தான். 
ஸ்ரீயின் வீட்டின் முன் கார் நின்றதும், சிவகாமி, தேனு, சுந்தரம் எல்லாரும் வெளியே வந்து இவனை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.
ஸ்ரீ உள்ளே கடுப்பாய் இருந்தாலும், அமைதியாக வீட்டினுள் சென்று விட்டாள். அவனை வா என்று கூட சொல்ல வில்லை. அதை யாரும் கவனிக்கவில்லை. வாசு ஸ்ரீயை கண்டுக்கொள்ளவில்லை.
சுந்தரமும் சிவகாமியும் வாசுவை அப்படி உபசரித்தனர். எல்லாரும் வாசுவுடன் பேச்சில் மிங்கிள் ஆகிவிட, சுந்தரம் வாசுவும் இரு வீட்டின் விசாரிப்புகள் முடிந்து இப்போது உள்ள பயிர் வகைகளில் வந்து நின்றனர். 
சுந்தரம் அந்த பயிர் வகைகளின் விளைச்சல் பற்றி கேட்க,  வாசு அதை அக்கு வேறு ஆணி வேறாக எடுத்து சொல்ல, சுந்தரம் ஆர்வமாக வாசுவிடம் கேட்டுக்கொண்டிருந்தார். தேனு சலுகையாக வாசுவின் அருகில் அமர்ந்து, அவன் கொண்டு வந்திருந்த அப்பத்தை சுவைத்து கொண்டிருந்தாள். 
ஸ்ரீ அமைதியாக ‘ ரொம்ப ஓவரா போறானே ‘ என இவனை தான் பார்த்து அமர்ந்திருந்தாள். 
இப்போது தான் பேக் எடுத்து வர வில்லை என தோன்ற, 
“ அப்பா, மாமா வண்டில என் பேக் இருக்கு. நான் போய் எடுத்துட்டு வரேன் “ என ஸ்ரீ எழுந்து செல்ல, 
“ எடுத்து தந்துட்டு வரேன் மாமா. “ என இவனும் இவளுடன் வெளியே வந்தான். 
பின்னே இருந்த இவள் ஷாப்பிங் பேக், முன்னே இருந்த இவள் ஹேண்ட்பேக் எல்லாம் எடுத்தவள், 
இவனிடம், “ கார்ல என்ன கடத்தி கூட்டிட்டு வந்துட்டு. ரொம்ப நல்லவன் மாதிரி வீட்ல ஸீன் போடுறிங்க. சரியான கேடி மாமஸ் நீங்க. 
மண்ட பத்திரம். “ என பேக்கை எடுத்துக்கொண்டே அசல்டாக எச்சரிக்க,
“ போ போ, நேத்து முளைச்ச மஷ்ரூம்லாம் என்ன பேசுது. உன்ன ஒரு நாள் கிரேவி ஆக்குறேன். “ 
“ நீங்க ஹோட்டல் வச்சிருக்கிங்கனு இப்படி நொடிக்கு ஒரு முறை நிரூபிக்க வேண்டுமா மன்னா. “ என இவள் அவனை வாரிக்கொண்டே உள்ளே வந்தாள். 
எல்லாம் எடுத்தவள் பின்னே வைத்த மொபைலை மறந்திருந்தாள். 
வாசு இவர்கள் வீட்டில் சிறிது நேரம் பேசி முடித்து, காரில் கிளம்பி விட்டான். ஸ்ரீயின் வீட்டிலிருந்து ஒரு முப்பது அடி தூரம் சென்றிருப்பான். பின்னால் இருந்து ஸ்ரீயின் மொபைல் அடிக்க, வாசு அப்போது தான் கவனித்தான், அவன் அதை எடுப்பதுக்குள் நின்றிருக்க, அதை பார்த்தால் ,அபிதா அக்கா என பெயர் வந்திருந்தது. 
ஸ்ரீயின் மொபைலில் இருந்து தேனுவுக்கு அழைத்து விஷயத்தை சொல்ல, தேனு ஸ்ரீயிடம் சொல்ல, ஸ்ரீ சிவகாமியிடம் திட்டு வாங்கிக்கொண்டு, அவசரமாக வாசுவின் கார் நோக்கி நடந்து வந்தாள். 
அதற்குள் வாசு, இவனது பெயரை ஏதோ காலையில் மாற்றினாளே என தோன்ற, ஆர்வமாக ஸ்ரீயின் மொபைலில் இருந்து இவன் எண்ணிற்கு அழைத்தான் . 
இவனது மொபைல் தான் லேட் பிக் அப் ஆயிற்றே, அரை நிமிடம் கடந்து,
சரியாக ஸ்ரீ இவன் ஜன்னல் அருக வந்து விட, அவன் அதை இறக்கி, அவள் மொபைலை அவளிடம் காட்ட, சரியாக, 
‘ ஆம்பள நாட்டு கட்டை காலிங் ’ என மின்னிக்கொண்டிருந்தது.
இப்போது வாசு இவளை ஏகத்திற்கும் முறைக்க, அசராமல் இவள் மொபைலை வாங்கியவள், 
“ என்ன மாமஸ் முரப்ஸ் எல்லாம் பலமா இருக்கு. “
“ ஒழுங்கா பேர மாத்து ”
“ ட்ரை பண்றேன். “ என அசால்ட்டை சொல்லி மொபைலை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டாள். இரவு ஃப்ளைட்டிற்கு எல்லாம் எடுத்து வைத்தாள். 
பிறகு கார்த்தி வந்துவிட, இரவு உணவு நேரம் ஹாலில் அமர்ந்திருந்தனர். கார்த்தியும், சுந்தரம் இருவரும் சாப்பிட்டு முடித்து பேசிகொண்டே டி‌வி பார்க்க, சிவகாமி தேனுவை , ஸ்ரீயையும் ஒன்றாக அமர்த்தி தோசை போட்டு கொண்டிருந்தார்.  
கார்த்தியிடம் பேசிக்கொண்டு இருந்த சுந்தரம் சிறிது அமைதியானார். பிறகு ஏதோ யோசனை வர, சாப்பிட்டு கொண்டு இருந்த ஸ்ரீயை பார்த்து, 
“ பத்து, இனிமே வாசு கூட கார்ல வராத  “ என சீரியஸ்ஸாக சொல்ல, வீடே அவரை தான் பார்த்தது. 
தேனு சிறு அதிர்ச்சியுடன் அவரை பார்க்க, கார்த்தி புரியாமல் பார்க்க, சிவகாமி இவர் என்ன இப்படி சொல்லிவிட்டார் என சுந்தரத்தை பார்த்து நின்றார்.
ஸ்ரீபத்மவிற்கு தொண்டையில் தோசை விள்ளை சிக்க, சுந்தரத்தை விழித்து பார்த்து அமர்ந்திருந்தாள்.   
   
 
   
 
       
‌ 

Advertisement