Advertisement

      திருமணம் முடிந்து மூன்று மாதம் முடிந்திருந்தது. நகர்ந்த நாட்கள் யாவும் வித விதமாய் வண்ணம் தீட்ட, வாசுவின் வாழ்கையில் இனிமையான தருணங்களின் வாசம் நிறைந்திருந்தது. இருவரின் மன உறவின் புது புது அழகியலை ரசித்து அனுபவித்தனர் இருவரும்.  

     இருவரின் வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்கள். ஸ்ரீ அவள் நினைத்தபடி ஐந்தாண்டுகள் வங்கி சேவையில் இருந்து விட்டதால், அதிலிருந்து விலகினாள். அவளின் பேக்கரி கனவு உள்ளே இவளை படுத்த, தனியாக பேக்கரி தொடங்க இவளுக்கு ஆசையாயிருந்தது. வாசுவிடம் பகிர, அவன் தன்னோடு சேர்ந்து செய் என சொல்லவில்லை. அவளின் அடையாளம் அவளால் உருவாக வேண்டும் என மிகவும் மெனக்கெட்டான். அவனின் ஹோட்டல் கிளைகள் அல்லாமல் அருகிலே வேறு தனி இடம் பார்த்து எல்லாம் நிறுவி கொடுக்க, இவனின் வெளிச்சமோ நிழலலோ எங்கும் அவள் மேல் வியாபாரத்தில் படரவில்லை. வாசு அரனாய் இருந்தானே தவிர ஸ்ரீயை எதிலும் வற்புருத்தவில்லை.

அவனின் தொழில் அனுபவத்தை பகிர்ந்து கொண்டான் அவ்வளவே, அவளின் யோசனைகள் எதிலும் தலையிடவில்லை. அவனும் சுயமாய் வளர முயன்றவன் தானே, அதனின் படிநிலைகளை அறித்தவன். 

அந்த படிகளில் தனது கால் தடங்கள் இல்லாமல் பார்த்துக்கொண்டான். ஆனால் அவனின் அன்பு கைரேகைகள் அவளின் எல்லா முயற்சிகளிலும் இருந்தது. வெளியில் மற்றவர்களுக்கு தெரியவிடினும் ஸ்ரீபத்மாவினால்  அந்த ரேகைகளின் ஒவ்வொரு நுண்ணிய கோடுகளளின் ஸ்பரிசத்தையும் நெகிழ்ந்து உணர முடிந்தது.  

ஸ்ரீபத்மாவின் முதல் நூறு கேக் டெலிவெரி முடிந்த ஒரு தினம் அவனின் அனைத்து உணவகங்களிலும் அன்று இரவு ஒவ்வொறு உணவுடனும் ஒரு  ஸ்வீட் பாக்ஸ் என ஊருக்கே ட்ரீட் கொடுத்தான். 

அவளது இந்த மூன்று மாத வேலையில், ஒரு உள்ளூர் பத்திரிக்கை அவளின் பேக்கரி தரத்திற்கு கொஞ்சம் சிறப்பாய் சான்றிதல் வழங்க, அவனின் நேரமே இல்ல வேளையில் கூட அந்த விழாவிற்கு நேரம் ஒதுக்கி, தன் முகம் வெளியில் தெரியாதுவாரு கூட்டதுடன் கூட்டமாய் முகம் மறைத்து அவளது வெற்றிக்கு கை தட்டினான். அவள் சுயமாய் பெற்ற பேர் தன்னால் அடையாளபடுத்த கூடாது என மிகவும் மெனக்கெட்டான். அவள் இன்னும் இன்னும் முன்னேறுகையில் என்றாவது ஒரு நாள் அவளது இலக்கை தொடுகையில் தன் சுயம் வெளியில் தெரிய ஓடி சென்று கை தட்ட தயாராய் காத்துக்கொண்டிருக்கிறான் அந்த அன்பு கணவன். ஏதோ கல்லூரி விழாவில் நண்பன் ஆட்டம் வரும் வரை காத்திருந்து கை தட்டும் உணர்வு தான் அவனுக்கு. 

       நட்பிலிருந்து காதல் பரிணமிக்கலாம், ஆனால் திருமணத்திலிருந்து நட்பிற்கு பரிணமித்திருந்தனர் இருவரும். காதல் செய்த போது கூட அவர்களிடம் நட்பு இருந்ததா என இருவருக்கும் தெரியவில்லை, ஆனால் இப்போது நிறைய நிறைய இருந்தது. 

       பரஸ்பர நேசம், விட்டுக்கொடுக்காத நட்பு, கட்டிபிடித்து உருண்டு  சண்டை, பார்வை சமாதானங்கள், கூடலுக்காகவே ஊடல் என புது புது விடியலை இருவரும் வரவேற்று களித்துக்கொண்டிருந்தனர்.                  

“ ஸ்ரீ கிளம்பனும் சீக்கிரம் ரெடி ஆகு. “ வாசு விரட்டி கொண்டு இருந்தான். வாசுவும் ஸ்ரீபத்மாவும் இடுக்கி வந்திருந்தனர். திருமணம் முடிந்ததிலிருந்து வெளியூர் எங்கும் செல்லவில்லை இருவரும். சொந்தங்கள் வீட்டில் விருந்து அப்படி இப்படி என ஒரு மாதம் சென்று விட, மீதம் இரண்டு மாதமும் வாசுவின் வேலை அவனை இழுதுக்கொண்டது. ஆனால் அவனுக்கோ ஸ்ரீபத்மாவுடன் வெளியே எங்காவது செல்ல வேண்டும் என எண்ணம். எப்படியோ மூன்று மாதம் கழித்து பத்மாவை இடுக்கி அழைத்து வந்துவிட்டான். 

      இடுக்கியின் ஆர்பாரித்து கொட்டும் சில்லென்றே அருவி, அமைதியாக கொட்டும் இதமான அருவி என பார்க்கும் இடம் எல்லாம் இயற்கையின் இனிய மனம் நிறைந்திருக்க, பறவைகளின் சிருங்கார இசை இல்லாத விடியலே இல்லை இருவருக்கும். 

     முழுதாக ஒரு வாரம் இடுக்கியில் இண்டு இடுக்கு விடாமல் சுற்றியவர்கள் இன்று மாலை ஊருக்கு திரும்புகின்றனர். வாசுவே எல்லாம் பார்த்துக்கொள்வான் என துணிகளை கூட அடுக்காமல் ஆர்வமாக ஏதோ படம் பார்த்துக்கொண்டிருந்தாள். வாசு அவளை விரட்டிக்கொண்டிருந்தான். பாவம் அவனும் எத்தனை வேலை தான் செய்வான். 

இடுக்கி வந்ததிலிருந்து துணிகளை துவைக்க போடுவது, அறையை சுத்தமாக வைப்பது என எதுவும் ஸ்ரீ செய்வதில்லை. அவளுக்கும் சேர்த்து தான் வாசு செய்கிறானே என எதுவும் செய்யாமல் வாசுவை படுத்திக்கொண்டிருந்தாள். 

“ ஸ்ரீ இப்போ நீ கிளம்பல உன்ன இங்கயே விட்டுட்டு போயிடுவேன். “ மிரட்டி கொண்டிருந்தான் வாசு.

“ போ. “ டி‌வியிலிருந்து கண்களை எடுக்காமல் அசால்டாக வந்து விழுந்தது பதில். 

வாசு டி‌வி ரிமோட்டை எடுத்து வேறு சேனலை மாத்த, ஸ்ரீ அப்படியே கட்டில் மேல் நின்று நடந்து வந்து அவனை கொட்டு வைக்க பார்க்க, அவளை அப்படியே கால்களை பிடித்தவாரு தூக்கி கொண்டான். ஸ்ரீ கால்களை உதறிக்கொண்டு, 

“ விடுடா. என்னைய தூக்கிட்டா நான் ஒன்னும் பண்ண மாட்டானா. “ என சொல்லி அவனை அடிக்க, அவளை அப்படியே ஒரு பெரிய டூரிஸ்டு பேக்கில் உட்கார்வைத்து மூட போனான். அவள் அதிலிருந்து துள்ளிக்கொண்டு வெளியே வந்து அவன் மடித்து வைத்திருந்த துணிகளை களைத்து விட, காண்டான வாசு ஸ்ரீயின் கையை பிடித்து அவனின் துண்டை கொண்டு கட்டிவைத்தவன். அவளை அப்படியே கட்டிலிலும் சேர்த்து கட்டி வைத்து விட்டான். 

“ ஃப்ராடு ஹனி மூன் சொல்லி கூடிட்டு வந்து என்னைய கட்டிவச்சு கொடும படுத்துற. நான் ஊருக்கு போனதும் போலீஸ்ல உன்ன கம்ப்ளைண்ட் பண்ண போறேன். “  ஸ்ரீ கத்த, 

“ அப்படியா என்ன கம்ப்ளைண்ட் பண்ணுவா. சொல்லு பார்க்கலாம். “ வாசு சின்சியராக இருவரின் துணியை மடித்து அடுக்கி கொண்டே ஸ்ரீயிடம் தெனாவெட்டாய் கேட்க, 

“ இங்க என்னைய கடத்திட்டு வந்துட்டனு சொல்லுவேன். எனக்கு சாப்பாடு தண்ணி கூட கொடுக்கலனு சொல்லுவேன். என்னைய வெளிய போனா கூட தனியா விடமா பேசியே டார்ச்சர் பண்ணுனனு சொல்லுவேன். 

அப்புறம் என்னைய நிறைய வேல செய்ய சொல்லி கொடுமை படுத்துனனு சொல்லுவேன். இப்படி கட்டிவச்சு என் டி‌வி பாக்குற உரிமைய பறிச்சேன்னு சொல்லுவேன்.

அப்புறம் என் பர்மிஷன்னே இல்லாம ரொமான்ஸ் பண்ணனு சொல்லுவேன்.  “ சீரியஸாக ஸ்ரீ சொல்ல ஆரம்பித்தவள் இறுதியில் குரலை தாழ்த்தி கண்களில் குறும்பை காட்டிச் சொல்ல, 

“ அப்போ இதுவும் சேர்த்து சொல்லு. ” என சொல்லியவன் அவள் அமர்ந்த இடதிற்கு அருகில் வந்தான். 

ஸ்ரீயின் இருபுறமும் கை வைத்து அவள் புறம் சாய்ந்து அவள் கன்னத்தில் ரசித்து முத்தம் வைக்க, .ஸ்ரீயின் அகத்தினுள் குளிர் காற்று வீச அவனை தான் கண்களால் ரசித்து அமர்ந்திருந்தாள், அவளின் நெற்றியில் முட்டியவன் கண்களில் முத்தம் வைக்கும் முன், 

“ எது வேணும்னாலும் வாய்விட்டு சொல்லு, இப்படி கம்ப்ளைண்ட் பண்ணுவேன்னு மொக்க போடாத. “  என அவள் சொல்லியவன் கண்களில் முத்தம் வைக்க, 

“ அதில்ல மாம்ஸ், உனக்கு ரொமான்டிக் ஐ‌க்யூ எல்லாம் நல்லா இருக்கானு செக் பண்ணுனேன். பரவால பாஸ் பண்ணிட்ட. “ என ஸ்ரீ சிரித்து கொண்டே வம்பிழுக்க, 

“ நீ இன்னும் எத்தன தடவ வேணும்னாலும் செக் பண்ணிக்கோ. நான் என்னோட ஐ‌க்யூவ நிருபிக்குறேன்.” என சொல்லியவன் அவன் ரொமான்டிக்  ஐ‌க்யூவை நிருபிக்க, அவள் கேள்வியே மறந்து போனாள். 

எப்படியோ ஊடல் கொஞ்சம் கூடல் நிறைய என எல்லாம் சரிவிகிதத்தில்  செய்து, மாலை ஊருக்கு புறப்பட்டனர். வரும் வழி எல்லாம் பேச்சுகள், பார்வைகள், பிரிய ஸ்பரிசங்கள் என பயணித்தனர்.

அவர்கள் ஊருக்குள் நுழையும் முன் அருகில் இரவு உணவிற்காக வாசு வண்டியை நிறுத்த, இருவரும் உள்ளே சென்று ஓரிடத்தில் அமர்ந்தனர், அது ஏதோ ஒரு தாபா. நேரம் வேறு இரவு பன்னிரெண்டை தாண்டி இருக்க, பெரிதாக தாபாவில் ஆட்கள் இல்லை. 

இரண்டு இருக்கையில் ஆங்காங்கே இரண்டு மூன்று பஸ் மற்றும் லாரி ஓட்டுனர்கள் மட்டும் அமர்ந்து சாப்பிட, இவர்கள் ஒரு ஒதுக்கு புறமான இடத்தில் அமர்ந்தனர். வெளிச்சம் கூட மங்கி தான் இருந்தது. சப்லயர் வந்து இவர்களிடம் ஆர்டர் கேட்க, வாசுவை பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டான். வாசுவின் பெயர் பிரபலமானதில் இருந்து இவன் எங்காவது சென்றால் வாசுவை அடையாளம் கண்டு மக்கள் ஏதாவது பேசுவர். அவ்வாறே சப்லயரும் இவனை கண்டுக்கொண்டு உற்சாமாக பேச, ஸ்ரீபத்மாவிற்கு தான் பசி வயிற்றில் ரோட் ரோலர் ஓட்டியது. அந்த சப்லயர் வாசுவுடன் ஒரு செல்ஃபி எடுத்த பின்னே உள்ளே செல்ல, வாசு அமரவும் ஸ்ரீ அவனை பிடித்துக்கொண்டாள். 

“ டேய் நீயெல்லாம் ஒரு ஆளுனு வந்து செல்ஃபி எடுக்குறாங்க. நீயும் பல்ல பல்ல காமிக்குற. “ என ஸ்ரீ அவனை வார, 

“ நான்லாம் செலிப்ரிட்டி மா. ஏதோ உன்கூட வரேன்னு அடக்கமா இருக்கேன். சரி சின்ன புள்ள பயப்பட கூடாதேனு அடக்கி வாசிக்குறேன். எனக்கு அழகா பல்லு இருக்கு, நான் காமிக்குறேன். “ என எகதாலமாய்‌ சொல்லி அவன் ‘ஈஈஈஈ’ என பல்லை காமிக்க, நட்ட நடு இரவில் இவன் இப்படி செய்யவும், அருகில் இருந்த டம்பளரில் இருந்த சிறிது நீரை அவன் முகத்தில் அப்படியே வீச, 

“ ஏ அறிவில்ல உனக்கு. ச்ச ஷர்ட் எல்லாம் கொட்டிடுச்சு, விளையாட இடம் தெரியாது. பெருசா டயலாக் எல்லாம் விடுவ, தண்ணிய வேஸ்ட் பண்ண கூடாதுனு. இப்போ இப்படி செஞ்சுட்ட, ச்ச “ என பல்லை கடித்தவன் எழுந்து சுத்தம் செய்ய வெளியே சென்றான். 

   ஸ்ரீ வெற்றி புன்னகையுடன் அவன் சென்ற திசையை திரும்பி பார்க்க, அந்த சமயம் அதே வாசல் வழியே யாரோ ஒருவன் முகத்தை மூடிக்கொண்டு உள்ளே வந்து சமையல் அறை நோக்கிச் வேகமாக சென்று மறைய, அந்த முகம் ஸ்ரீபத்மாவிற்கு எங்கோ பார்த்தது போல் ஒரு எண்ணம். 

அதுவும் மிகவும் பரிச்சயமாய் இருந்தது. அந்த பாதியாய் மூடிய முகத்தின்  கண்களில் ஒரு கலவரம். சட்டென உள்ளே சென்று மறைந்த அவன் உடல் மொழி இயல்பாய் இருக்கவில்லை. ஒரு பதட்டம் அவனிடம். 

ஸ்ரீபத்மா அவன் சென்ற திசையை யோசைனையாக பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள். இதுவே மற்ற நேரமாய் இருந்திருந்தால் இந்நேரம் எழுந்து சென்று அவனை யார் என அழைத்து பேசியிருப்பாள், ஆனால் இப்போது இருந்த மங்கிய ஒளி, அருகில் வாசு இல்லாமல் தனித்திருப்பது, சுற்றி பெரிதாக ஆட்கள் இல்லாமல் இருப்பது என அத்தனையும் அவனை தொடர யோசிக்க வைத்தது. அவள் யோசனையாய் அமர்ந்திருக்க, அவள் முகத்தில் ஒரு கை நிறைய தண்ணீர் ‘சல்’ என்ன வந்து விழுந்தது. 

“ ஹேய் யாரு. “ என கண்களை துடைத்துக்கொண்டே ஸ்ரீ வினவ

“ உன்னோட பைசன் “

“ ஏன் டா இப்படி பண்ண. லூசு பயலே. “

“ நீ மட்டும் இப்படி பண்ற. அப்போ நீயும் லூசு பொண்ணா ? “

“ ப்ச் அதில்ல நான் ஒருத்தர பார்த்தேன். அவர பத்தி யோசிச்சிட்டு இருக்கும் போதே, நீ நடுவுல வந்துட்ட. “

“ அடிபாவி கட்டுன புருஷன் பக்கத்துல இருக்கேன். நீ யார சைட் அடிச்சிட்டு உட்கார்ந்து இருக்க ? “ 

ஸ்ரீபத்மாவிற்கு வந்த ஆத்திரத்திற்கு அங்கே இருந்த காலி ஜுக்கை எடுத்து அவன் மேல் வீச, அதை லாவகமாய் பிடித்த வாசு,     

“ ஹேய், என்னடி பண்ற, இது பப்ளிக் பிளேஸ் இப்படி எல்லாம் பண்ணாத ஸ்ரீ, நம்ப வீட்டுக்கு போய் இப்படி தூக்கி போட்டு விளையாடிக்கலாம். அப்போ தான் உன்ன தூக்கி போட்டு விளையாட முடியும். அங்க தான் ப்ரைவசி இருக்கும். “ என ஹுஸ்க்கி வாய்ஸில் சொல்ல,    

“ அமாமா நீ தான நல்லஆஆ விளையாடிட்டாலும், ஒரு ஹனி மூன் கூட்டிட்டு வர மூனு மாசம் ஆச்சு. இதுல இவங்க ஓடி பிடிச்சு விளையாடுறாங்களாம். “ என ஸ்ரீ நொந்து போய் சொல்ல, 

“ ஹேய் நான் எங்க ஓடி பிடிச்சுனு சொன்னேன், உன்ன தூக்கி போட்டுனு தான சொன்னேன்….ஓஹ் கரெக்ட் கரெக்ட் உன்ன அவ்ளோ ஈஸியாலாம் தூக்க முடியாதுல, இன்னைக்கு தூக்குனதுக்கே முதுக்கு புடிசாப்புல இருக்கு. வீட்டுக்கு போய் நம்ப ஆச்சி தர தைலம் தேச்சு குளிக்கணும். அப்பா என்னா கணம்…என்னா கணம்…இதுவே நான் ஹெல்தியா இருக்கவும் சாமாளிச்சேன். “

என ஆர்ம்ஸ் தூக்கி காட்டியவன், 

“ என்னா தான் சொல்லு பஞ்சு ஃபீல் பண்ண சாஃப்ட்டா இருந்தாலும் டன் கணக்குல மொத்தமா  தூக்குனா ஹெவியா தான் இருக்கு. “ 

என இரண்டு கைகளையும் சோம்பல் முறிப்பது போல் அலுப்பு காட்ட, அருகில் உட்கார்ந்திருந்த அவனின் பஞ்சு உள்ளுக்குள் திகு திகு என்று பத்திக்கொண்டது.  

ஸ்ரீபத்மா அவளின் பேக்கரி வேலை ஆரம்பித்ததிலிருந்து ருசி பார்க்கிறேன் என தான் செய்த வித விதமான கேக்கை உள்ளே தள்ள, அல்ரெடி பப்லியாக இருப்பவள் இப்போது இன்னும் கொஞ்சம் ஹெவி ப்யூடி ஆகிவிட்டாள்.  . வாசுவிற்கும் இவளை ஏதாவது பேச வேண்டும் என ஒரு எண்ணம். திருமணம் முன் ஸ்ரீ அவனை வம்பு செய்ததெற்கெல்லாம் இப்போது அவளை சீண்டிக்கொண்டே இருப்பான். 

“ அப்படியா மாம்ஸ் நான் அவ்ளோ குண்டா ஆயிட்டேனா. “ என ஸ்ரீ ஒரு மாதிரி குரலில் கேட்க,

“ யெஸ் டார்லு. “ சுதரிக்காமல் சாட்சி சொன்னான் வாசு.

“ ஓகே மாம்ஸ் நாளைல இருந்து நான் டயட்ல இருக்க போறேன். “ முடிவாய் அறிவித்தாள் ஸ்ரீ.

“ ஓகே ஸ்ரீ “ சாதாரணமாக வாசு வாய்விட,

“ என்ன தான் நான் ஹெவி ப்யூடியானாலும் நீ சளைக்காம நைட் டியூட்டி பார்குறல, இனி நான் டயட்ல இருக்கறதால என்னால நைட் டியூட்டி எல்லாம் பார்க்க முடியாது.” என ‘ஈஈஈஈ‘ என சிரித்து ஸ்ரீ தீர்ப்பு எழுதினாள்.

“ நோ நோ நீ அப்படியெல்லாம் சொல்ல கூடாது. கன்னத்துல தப்பு போடு. “ என வாசு பதற, 

“ நான் ஏன் டா என் கன்னத்துல தப்பு போடணும். சொன்னா சொன்னது தான் மாம்ஸ். “ என சட்டமாய் சொல்லி இவள் வாசுவை சிதற விட, வாசு வாயை திறக்கும் முன் உணவு வந்துவிட்டது. இருவரும் உள்ளே புகைந்தவாரே உணவை முடித்து கிளம்பினர். கிளம்பும் முன் ஸ்ரீ அங்கே தாபாவின் முன் இருவரும் கோணலாக முகத்தை சுளித்து செல்ஃபி எடுத்து கிளம்பினர். ஆனால் வரும் வழியெல்லாம் ஸ்ரீபத்மாவிற்கு அவள் பார்த்த அந்த ஆடவன் உருவம் மனதில் வந்து வந்து போனது. எங்கோ அவளுக்கு மிகவும் நெருக்கமான முகம். ஆனால் எத்தனை யோசித்தும் நியாபகம் வரவே இல்லை. இருவரும் நடு இரவில் வீடு வந்து சேர, சுந்தரி ஆச்சி கதவை திறந்தார்.

    சுந்தரி ஆச்சியிடம் பேசிவிட்டு இருவரும் அவர்கள் அறை செல்ல, வீடே நிசப்தத்தில் இருந்தது. வாசு ஒரு குளியல் போட்டவன் அப்படியே படுத்து உறங்க, ஸ்ரீ வாசுவிடம் சொன்னது போல் வேறு அறை சென்றுவிட்டாள். தூக்கத்தில் அவன் இதை கவனிக்கவில்லை. 

   பக்கத்து அறைக்கு வந்தவள் நிதானமாக குளித்து பொருட்களை ஒதுங்க வைத்து படுத்தவளுக்கு தூக்கம் வரவில்லை. என்ன தான் அசதியாக இருந்தாலும் மனதில் ஒரு புத்துணர்ச்சி. அப்படியே புரண்டு புரண்டு படுத்தவள், இடுக்கியில் நிறைய புகைப்படங்களை எடுத்திருக்க, மொபைலில் ஒவ்வொன்றாக ரசித்து பார்த்திருந்தாள். 

      அப்படியே புகைப்பட வரிசையில் தாபாவில் எடுத்த புகைப்படம் அவள் கண்ணில் பட்டது. எப்போதும் போலே அதை பார்த்து கடக்க, அந்த ஆடவன் முகம் மனதில் வந்து போக, அவன் யார் என நிறைய யோசிக்க, சில நிமிடங்கள் கழித்து நியாபகம் வர, ஸ்ரீபத்மா அதிர்ச்சியில் விழி விரித்து படுக்கையில் அப்படியே எழுந்தமர்ந்தாள். ஸ்ரீபத்மாவினால் அவள் யூகித்ததை அத்துனை எளிதாக நம்ப முடியவில்லை.   

       

Advertisement