Advertisement

         கொச்சின்னில் விமான நிலையத்தில் ஸ்ரீ அமர்ந்திருந்தாள். அருகே ஷங்கர் அமர்ந்து ஸ்ரீயை ஒருவழி ஆக்கிக்கொண்டிருந்தான். 
          ஸ்ரீ ஒரு லாங் க்ரே கலர் அம்ப்ரெள்ள மாடல் டாப் அணிந்து, முன் நெற்றியில் ஒரு பகுதியில் கொஞ்சம் பிரில்ஸ் தவழ, பின்னே குதிரை வால் போட்டு, தலையோடு காதை சுற்றி துப்பட்டா போட்டு ஷங்கர் சொல்வதை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் பரிதாபமாக உட்கார்திருந்தாள். 
“டெடி அம்மா ஒரு போட்டோ குடுத்தாங்கனு சொன்னேன்லே.”
“டேய்…பிளீஸ் டா… போதும் என்னால இதுக்கு மேல முடில.” கை எடுத்த கும்பிட்டாள்.
“என்ன டெடி நான் இன்னும் ஸ்டார்ட்டே பண்ணல. அதுக்குள்ள போதும்ன்ற. No you should listen to me. You have no other choice.” என்று சொல்லி ஸ்ரீயை பார்த்து நன்றாக திரும்பி அமர்ந்திருந்தான். 
எழுந்து நின்றிருந்தாள் ஸ்ரீ,
 “டேய் சங்கு பிளீஸ் டா. ஒரு மனுஷி எத்தன தடவ டா ஒரே டியலாக்க கேப்பா. ஒரு வாரம். முழுசா ஒரு வாரம் ருத்து ருத்துனு என பாட படுத்துர டா. 
போட்டோல பொண்ணு புடிச்சிருந்த ஆண்டிட்ட சொல்லி டபார்னு கல்யாணம் பண்ணிக்கோ. அத விட்டு உன் ஃப்ரெண்ட்டா இருக்க ஒரு தப்புக்காக ஒரு நாளுக்கு ஐம்பது தடவ ருத்து பத்தி சொல்லுவியா டா என்கிட்ட. 
இப்படியே பேசிட்டு இருந்தனு வையி நான் இப்போ இங்க கிளம்புர ஃப்ளைட் முன்னாடியே போய் விழுந்துடுவேன்.” என கண்களை விரித்து சொல்லி முடித்தாள்.  
     மெதுவாக அவளை பார்த்து அமர்திருந்த ஷங்கர், கொஞ்சமும் அசராமல் எழுந்து நின்றான். 
   “போ டெடி போ. நீ மட்டும் இப்படி நிஜமா முன்னாடி பிரில்ஸ் வச்சு, பின்னாடி போனி போட்ட பொண்ணா இருந்தா அங்கே நிக்குதே பார் ஃப்ளைட் அதுக்கு முன்னாடி போய் விழு பார்போம். அப்படியே நீ விழுந்தாலும் ஃப்ளைட் உன் மேல ஏறி டேமேஜ் ஆக விரும்பாது, அப்படியே பறந்து போயிடும். ஹா…ஹா..
அது மட்டும் இல்லை உன் ருத்து அண்ணிய நேர்ல பாக்கமையே இவ்வளவு சொல்றேனே நெக்ஸ்ட் வீக் நேர்ல பாக்க போறேன். நீ எதுக்கும் இத விட பெரிய ஃப்ளைட்டா பார்த்து குதிக்க ரெடியா இரு. ” என சொல்லி கூலெர்ஸ் எடுத்து மாட்டினான்.
சரியாக ஃப்ளைட் அறிவிப்பு வந்தது.
   “டேய் அப்போ நெஜமா ருத்து தான் எனக்கு வர போற எதிர்கால அண்ணியா ?”
   “யெஸ் டெடி”
   “அப்போ நீயும் கேட்டுக்கோ,  இப்போ நான் ஊருக்கு போறதே உனக்கு வருங்கால மச்சானா ஒருத்தர பார்த்து கன்பர்ம் பண்ணதத் தான்.” என சொல்லி இவள் கூலெர்ஸ் மாட்டி கெத்தாக திரும்பி புறப்பட்டு செல்ல, ஷங்கர் கண்ணில் மாட்டியிருந்த கூலெர்ஸ் கழட்டி அதிர்ந்து ஆஆஆ வென பார்த்திருந்தான்.  
            இதையெல்லாம் நினைத்து புன்னகையுடன் ஃப்ளைட்டில் உட்கார்ந்திருந்தாள். அருகே பத்து வயது குழந்தை கையில் சிறு பொக்கே உடன் அமர்ந்திருந்தது. அதை பார்த்தவள் வாசுவை பார்க்க போகும் போது இதே போல் ஒன்று கொண்டு போக வேண்டும் என நினைத்துக்கொண்டாள்.
            ஸ்ரீபத்மா திருச்சிக்கு செல்ல வேண்டும் என்று நினைத்து மூன்று மாதம் கடந்து இருந்தது. அதற்கு முக்கிய காரணம் ஒரு புகைப்பட போட்டி.  அதை பற்றிய அறிவிப்பை வெளிவிட்டிருந்தது ஒரு கேரளா வார பத்திரிக்கை.   
ஒன்றரை மாதம் கால அவகாசம் குடுத்திருந்தனர். அந்த அறிவிப்பை பார்த்ததிலிருந்து ஸ்ரீகயின் கை படாத பாடு பட்டது. இத்தனை என்ற கணக்கெல்லாம் இல்லை அந்த இரண்டு மாதங்களும் வேலை நேரம் போக மீதி நேரங்கள் எல்லாம் கண்ணில் பட்ட இறைவன் குடுத்த உயிருள்ள அற்புதகளை காமிராவில் பதிவு செய்தாள். அதற்கு அவளை அங்கே அருகே  உள்ள காடு, கடல், ஏரி, குளங்கள் என அழைத்து சென்றான் ஷங்கர். 
         ஒரு நானூறு புகைபடங்கள் அவள் காமிராவில் குடியேறின. அதில் ஒன்றை தேர்ந்தெடுத்து அனுப்புவதற்குள் மிகவும் சிரமப்பட்டாள். அவளுக்கு எல்லாமே பிடித்திருந்தது. இறுதியாக ஒரு புகைபடத்தை தேர்வு செய்து அனுப்பி விட்டாள்.
         அதற்கு பிறகாவது கிளம்பலாம் என்று பார்த்தால், சரியாக வங்கியில் ஏதோ பயிற்சி இருந்தது அதில் ஒரு பதினைந்து நாள் இழுத்து கொண்டது. என்ன இது வாசுவை பார்த்து வரலாம் என்றால் ஒன்று மாற்றி ஒன்று வந்துகொண்டே இருக்கிறதே என்று ஸ்ரீ யோசித்தாள். சரி எப்படியும் இந்த முறை செல்வது என முடிவெடுத்து கிளம்பி விட்டாள்.
         ஃப்ளைட்டில் ஸ்ரீ வெளியே பார்திருந்தாள். இரவு தானே கிளம்பி இருக்கிறாள் எப்படியும் விடியலில் திருச்சியில் இருப்பாள். கண்களை மூடினாள், மனதே அவளை கேள்வி கேட்டது தெரிந்த தானே மூன்று மாதம் இழுத்தாய் என, நினைதிருந்தால் நிச்சயமாக நடுவே ஒரு நாள் சென்று வாசுவை சந்தித்திருக்க முடியும் தானே.
          ஸ்ரீக்கு எங்கேகோ சென்றது மனம். 
          வாசு, வாசுதேவன் முழு பேரே இந்த நான்கு மாதமாக தான் சொல்லி பார்க்கிறாள். அதற்கு முன் அவன் அந்த ஊரில் வாழும் ஐந்நூறு பேரில் இவனும் ஒருவன்.
          எப்போது அவனை கவனிக்க ஆரம்பித்தாள், எங்கே என்று இத்தனை நாள் தேடி பார்த்து தெளிந்திருந்தாள். முதலில் அவனை கவனிக்க வைத்தற்கு முக்கிய காரணம் அவள் அப்பா அம்மாவின் பேச்சு தான் . 
       சுந்தரமும் சிவகாமியும் பேசிக்கொண்டிருந்தது இவள் காதில் விழுந்த சமயம் தான் அவனை கவனிக்க ஆரம்பித்திருந்தாள் . 
      ஒரு வருடத்திற்கு முன்பே சுந்தரம் முதலில் வரன் பார்க்க ஆரம்பித்தது ஸ்ரீபத்மவிற்கு தான், ஆனால் அப்போது எதுவும் தகைந்து வராததால், சிறிது மாதங்கள் தள்ளி வைத்தார். 
அதன் பிறகு கார்த்தி விஷயம் வந்துவிட்டது. கார்த்தியும் தங்கைகாக பொறுத்திருக்கலாம் என்று தான் முடிவெடுதிருந்தான். ஆனால் தேனு வீட்டில் வரன் பார்க்க போவதாக கேள்விபட்டதும், மிகவும் யோசித்தான். வேறு வழி இல்லை என்றவுடன் தான் வாசுவிடம் பேசியது. அதன் பிறகு எல்லாம் தானாக நடந்தேறியது.
      ஆனால் கல்யாண வேலைகளளின் போது வாசு எல்லாவற்றையும் இழுத்து போட்டு செய்துகொண்டிருந்த சமயம். 
     சுந்தரம் ஏதோ கேக்க அவன் வயலுக்கு போக, வயல் வரப்பில் இடறி விழ இருந்தவரை விரைந்து அப்படியே தூக்கி அருகில் இருந்த கல்லில் அமர வைத்து, சுற்றி இருந்தவர்கள் பார்பதெல்லாம் கவனியாது அவன் கரங்களாலேயே அவர் காலை களுவி, சுளுக்கு எடுத்து, நன்றாக நீவி விட்டு, அவர் எழுந்து நடந்ததும் தான் அவன் எழுந்தான்.
     சிறு வயதில் மாமா என்று ஆசையாக சுற்றி வந்தவன் தான். ஆனால் ஒரு வயத்துக்கு பிறகு அவரிடம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிட்டவில்லை. அதற்கு கோதண்டமும் ஒரு காரணம். பிறகு வேலை நிமித்தமாக அவன் ஊரிலயே இல்லை. இந்த இரண்டு ஆண்டுகளாக தான் அவனை கண் முன்னே பார்க்கிறார், ஏதோ தள்ளி நின்றாவது பழகுகிறார்.
     ஆனால் அவன் எதுவும் நினையாது அதே அன்போடு அவரிடம் பழகுவது சுந்தரத்திற்கு ஒரு நெகிழ்வை கொடுத்தது. 
     வீட்டில் வந்து பைக்கில் விட்டுச் சென்றான். அப்போது ஸ்ரீ வீட்டில் இருந்தாள். சுந்தரம் வீட்டிற்கு வந்ததும் சிவகாமியை பார்த்து நடந்ததை சொன்னார். 
“காமி.. பார்த்தியா மகன எப்படி வளத்திருக்கு சீதா”
“இல்லையா பின்ன, சின்ன வயசுலயே நல்லா பழகுவான். நீங்க தான கோதண்டம் அண்ணே பேச்ச கேட்டு அந்த புள்ள கிட்ட இருந்து ஒதுங்கி நின்நிங்க. அத கூட மனசுல வச்சிகமா எப்பிடி பார்த்திருக்கு உங்கள.”
“நான் என்ன வேணும்னா செஞ்சேன். 
அப்பனே வந்து என் புள்ளைக்கு சப்போர்ட் பண்ணாத, அவன் உருப்படணும்னு சொன்னான். 
அப்போ வாசு சின்னவன் தான,  கோதண்டம் சரியா தான் சொல்லுவான்னு அவன் கூட நின்‌னேன்.  இப்படி இந்த பைய அவன் தாத்தா சொத்த காப்பாத்த மட்டும் இல்லாமல் விவசாயத்த இப்படி பண்ணுவான் நான் என்ன கனவா கண்டேன்.”
கணவன் மனைவி பேசிக்கொண்டிருக்கும் போது ஸ்ரீ அருகே அறையில் இருந்தாள். சாதாரணமாகவே இவர்கள் பேச்சு கொஞ்சம் சத்தமாக கேக்கும். என்ன பேச்சு என கவனித்து கொண்டு தான் இருந்தாள்.
“அதெல்லாம் சரிங்க. அந்த புள்ள குணத்துக்காகவாது கோதண்டம் அண்ணே கிட்ட நீங்க அப்போ பேசிருக்கலாம் .”
“அட விடேன் காமி. எல்லாம் காலம் ஓடி போச்சு. பைய நல்லா வந்துட்டான். இவன பத்தி நிச்சயம் ஒரு நாள் கோதண்டம் புரிஞ்சுக்குவான். ஊரே இவன பாராட்டும் பாரேன்.”
“அதெல்லாம் இருக்கட்டும்ங்க. அந்த புள்ளைக்கு கல்யாணத்துக்காகவது நீங்க பொண்ணு பாக்கலாம்ல. அண்ணே தான் கோவத்துல இருக்காருன என்ன,  நீங்க பாக்கலாம்ல. “
“காமி.. நம்ப பத்மாக்கே இன்னும் அமையல. நான் போய் இப்போ வேற என்ன பாக்க.”
“ஹிம்… காரணம் சொல்லுங்க நல்லா . ஆச்சி எவ்ளோ ஆசை வச்சிருக்காங்க தெரியுமா அந்த புள்ள கல்யாணத்த பார்க்கணும்னு, உள்ள அவ்ளோ எதிர்பாகக்குறாங்க. 
இந்த சின்ன குட்டிக்கு அந்த புள்ளயே பேசலாம்னு கொஞ்ச நாள் முன்னாடி நெனச்சேன், கட்டிக்குடுத்தா தங்கமா பார்தூக்கும் அந்த புள்ள. 
வெளிய குடுத்தா எப்படி பத்துவ பார்த்துபாங்னு ஒரு நெனப்பு இருக்கும்.  
கோதண்டம் அண்ணே தான் வேண்டாம்னு சொல்லுவாரு நெனப்பா இருக்கு. சரி எதுக்கு வீண் வம்புனு பேசாம இருக்கேன்.”
இது எல்லாம் கேட்டு கொண்டிருந்த ஸ்ரீ பத்மாவிற்கு இதெல்லாம் புதிது. வாசு வீட்டில் நடக்கும் சில முட்டல் மோதல் முழுமையாக தெரியாவிட்டாலும் ஓரளவு தெரியும். ஆனால் இந்த மாதிரி ஒரு எண்ணம் அவள் அம்மா அப்பாவின் மனதில் இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் இப்படி எல்லாம் சிறு வயதில் சொல்லி வளர்க்கபடவில்லை.
இவள் உள்ளே தூங்குகிறாள் என இவர்கள் வெளியே சாதாரணமாக பேச, அவள் கேட்டிருப்பாள் என இவர்களுக்கு தெரியவில்லை.
இந்த பேச்சிற்கு பிறகு இதை யோசிக்க ஆரம்பித்தாள் ஸ்ரீ.
ஆனால் இது எதுவுமே சுந்தரதிற்கும் சிவகாமிக்கும் தெரியாது.
       முதலில் வாசுவிடம் இவள் பெரியதாக பழகியதில்லை. அவனை பிடிக்குமா என்று கூட என்று கூட தெரியவில்லை. ஏதோ தெரியும் ஆனால்  அவன் முழுதாக என்ன செய்கிறான் என எதுவும் தெரியாது.   
      அதன் பிறகு இது சரியாக வருமா வராத என மனதில் பல கேள்விகள். கார்த்தியின் திருமண நாள் நெருங்க தான், வாசுவை கவனிக்க வேண்டும் என நினைக்க ஆரம்பித்தாள். ஆனால் அதற்கு கூட அப்போது நேரம் பெரியதாக அவளுக்கு கிடைக்கவில்லை என்னென்றால் ஸ்ரீக்கு அப்போது தேனுவின் திருமணம் மிகவும் முக்கியம் .
      அந்த போட்டோவில் பார்த்தது முதல் சிறுது சிறிதாக அவனை பற்றி இன்னும் யோசிக்க ஆரம்பித்தாள். அவன் வெளிதோற்றத்தை பற்றி அல்ல அவன் எண்ணத்தை நிறைவேற்ற அவன் எடுத்த முயற்சி அவளுக்கு ஒரு நம்பிக்கையை குடுத்தது.
      ஏதோ நினைத்தோம் பிடித்தது, என்றில்லாமல் அவளுக்கே அவள் எண்ணப்போக்கை ஆராய நேரம் பிடித்தது. 
      இந்தனை மாதங்களில் ஒன்று தோன்றியது. வாசுவை திருமணம் செய்தால் நன்றாக தான் இருக்கும். இவளுக்கு பிடித்திருந்தது. 
      இவள் அப்பா பெண். வீட்டில் அவள் அப்பாவிடம் சொன்னால் கூட போதும் அடுத்த முகூர்த்ததில் எல்லாம் நடந்தேறும். 
      ஏன் சிவசு தாத்தாவின் செல்ல கன்னுக்குட்டி இவள். அவருக்கு தெரிந்தால் சொல்லவே தேவை இல்லை கோதண்டத்தையே சமாளித்து எல்லாம் முடித்து விடுவார். கோதண்டம் இந்த திருமணம் வேண்டாம் என சொன்னால், அதற்கு காரணம் இவள் இல்லை, வாசு. 
      வாசுவிற்கும் கோதண்டத்திற்கும் ஏழு எட்டு வருடமாக கருத்துவேறுபாடு. அதனால் ஸ்ரீ நன்றாக இருக்க வேண்டும் என்றே மகனுக்கு மணமுடிக்க மாட்டார். வாசு மீது பெரிய நம்பிக்கை இல்லை அவருக்கு. 
     ஆனால் இவள் விருபுகிறாள் என்று தெரிந்தாள் கோதண்டம் ஒத்துகொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. 
     சுந்தரி ஆச்சிக்கு இவள் விபரம் தெரிந்தாள் கையிலே பிடிக்க முடியாது. எல்லாவற்றையும் விட தேனு. அவளுக்கு தெரிந்தாள் நிச்சயம் கார்த்தியின் காதிற்கும் அவள் வீட்டிற்கும் செய்தி பறந்துவிடும்.
      ஸ்ரீக்கு எல்லோர் விருப்பத்தை விட வாசுவின் விருப்பம் மிக முக்கியம்.
      ஆம் என்ன தான் குடும்பமே இவளுக்காக சம்மதித்தாலும் கூட  வாசுவின் விருப்பம் தான் இவளுக்கு இறுதி. நிச்சயமாக வாசு இவள் விருப்பத்தை நிராகரிக்க போவதில்லை என ஒரு எண்ணம். 
      என்ன இருந்தாலும் நூறில் ஒரு பங்காக அவன் வேறு யாரையாவது மனதில் நினைத்திருந்தால், இவளுக்கு தெரியாதே. 
      அவன் வேறு ஐந்தாண்டுகள் சிங்கப்பூரில் இருந்திருக்கிறான், அங்கே யாரையாவது பிடித்திருக்கலாம், இன்னும் வீட்டில் சொல்லாமல் கூட இருக்கலாம். 
       இவளுக்கு விருப்பம் இருக்கிறது என்று வீட்டில் கூறினால், நிச்சயமாக வீட்டில் பேசுவார். அவன் இந்த சம்பந்தத்தை மறுத்து அவன் விருப்பம் வேறு என தெரிந்தால் , சிவசு தாத்தாவும் கார்த்தியும் கூட புரிந்து கொள்வார்கள்.
ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால், சுந்தரம் கோதண்டம் இருவருக்கும் தர்மசங்கடமான நிலைமை உருவாகும். 
ஏற்கனவே கோதண்டம் வாசுவின் மீது கோபத்தில் இருப்பவர் மேலும் அவனை விலக்கி வைப்பார். சுந்தரி ஆச்சி வாசுவிடம் இவளுக்காக பரிந்து பேசியே அவனை ஒரு வழியாக்கி விடுவார்.  
      இப்படி ஏதாவது நடந்தால், மூன்று தலைமுறையாக நட்பாக இருந்து, இப்போது உறவாகி இருக்கும் குடும்பத்துக்குள் ஸ்ரீபத்மாவின் பொருட்டு ஒரு சங்கடமான நிலைமை உருவாவதை ஸ்ரீ விரும்பவில்லை.
        ஸ்ரீயை பொருத்தவரை திருமணத்திற்கு அவளின் விருப்பம் மட்டும் போதாது, அவளை கரம் பிடிக்க வாசுவின் பூரண விருப்பமும் வேண்டும். 
       இன்று போய் ஊரில் சேர்ந்தவுடன், தேனுவுடன் வீட்டில் ஆட்டம் போட்டுவிட்டு, மதியம் போல் வாசுவின் உணவகத்தில் அவனை சந்திக்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறாள். இன்னும் அந்த உணவகம் எப்படி இருக்கும் என கூட உள்ளே சென்று பார்த்ததில்லை.
       ஃப்ளைடில் இதையெல்லாம் நினைத்து இன்று வாசுவிடம் அவள் மனதை எப்படி தெரிவிப்பது என்னவென்று சொல்வது என யோசித்து ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை.    
        சரி வருவது வரட்டும் பார்த்துக்கொள்வோம் என தூங்கிவிட்டாள்.
காலை இவளை அழைத்து செல்ல கார்த்தி விமான நிலையம் வந்திருந்தான்.  காலை 11 மணி அளவில் நாலு பூரியை முடித்து அக்கடா என சோபாவில் உட்கார்ந்திருந்தாள்.
        வாசுவை பார்க்க என்ன உடை அணிவது, எப்படி ஹேர் ஸ்டைல் செய்வது, எல்லாவற்றையும் விட எப்படி சொல்வது என யோசித்து கொண்டிருந்தாள். 
        அவள் பார்த்து .கொண்டுதான் இருக்கிறாள், இந்த தேனுவை ஆளை காணவில்லை. வீட்டில் கேட்டால் அவள் அம்மா வீட்டிற்கு சென்றிருக்கிறாள் என சப்பென்று முடித்து விட்டனர். 
       முன்பு போல் இருந்தால் இந்நேரம் சிவசு தாத்தா வீட்டில் தான் தேனுவுடன் இந்நேரம் இவள் அரட்டையில் இருப்பாள். இப்போது தான் நம் வீட்டிலேயே இருக்கிறாளே என வந்து பார்த்தால், ஆளை காணவில்லை.
       என்னடா இது என ஈரமாய் இருந்த முடியை காயவிட்டு டி‌வியில் மூழ்கியிருந்த நேரம், வீட்டில் திபு வென நுழைந்த கார்த்தி,
கண்கள் இவளை உற்று பார்க்க, குரல் கடினமுற்று ஸ்ரீயை பார்த்து 
“ஏய் எந்திரி முதல.”
என்ன டா இவன் இப்படி அரட்டுகிறான் என பார்த்த ஸ்ரீ, “எதுக்கு டா அண்ணா ?” என வினவினாள்.
“கேள்வி கேக்கத எந்திரி முதல. நீ என்ன வேல பார்த்து வச்சிருக்க  தெரியுமா ?”     
நம்ப தான் இன்னும் எந்த சம்பவமும் செய்ய ஆரம்பிக்கவில்லையே, அதற்குள் என்ன வந்தது என ஒன்றும் தெரியாமல், விழித்து எழுந்து நின்றாள் ஸ்ரீ .
         
    
     
    

Advertisement