Advertisement

ரமேஷை வைத்துக்கொண்டே வாசு விமலிடம், “ இவரு தான் ரமேஷ், உன்கிட்ட கேஸ் டீடெயில்ஸ்லாம் ஃபோன் கால்ல சொன்னேன்ல. ஒரு நல்ல முடிவா எடுக்கலாம்னா, சர் ஒத்துக்கல. நீ இன்னைக்கு கேஸ் ஃபைல் பன்னிடு.”  
விமல், ” நீங்க சொன்ன மாதிரியே பண்ணிடலாம்.”
கோர்ட் கேஸ் என்றால் உடனே முடியும் காரியமா, வருட கணக்கில் இருக்கும் என்று தெரிந்த ரமேஷ், “சர் சர், அதெல்லாம் வேண்டாம்.”
கோபம் வந்து விட்டது வாசுவிற்கு வேட்டியை மடித்துக்கட்டி , “பின்ன என்னங்க. சின்ன பையனுக்கு அவன் சம்பளம் ஒரு பைசா கூட குடுக்கல. அவன் உழைப்ப சுரண்டிருக்கிங்க ஒரு கொத்தடிமை மாதிரி. அதுக்கு சட்டதில என்ன தண்டனை தெரியுமா. நீங்க சொன்னதெல்லாம் காமிராவில பதிவாயிருக்கு. எதுவா இருந்தாலும் கோர்ட்ல பார்த்துக்கலாம். எங்களுக்கு ஒண்ணும் இல்லை அந்த இடத்துக்கு ஸ்டே வாங்குறோம். உங்களால் ஆனத பார்த்துகோங்க” எதுவென்றாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தோரணையில் மீசையை முறுக்கி நின்றான்.
காமிரா என்ற உடன் புரிந்து கொண்டார் ரமேஷ். ஸ்ரீதர்க்கு இப்படி உடன் நிற்க ஒருவன் இருப்பான் என்ற அவர் கனவிலும் எண்ணியதே இல்லை. எங்கோ தனியாக இருப்பான், அடித்து மிரட்டி காரியத்தை சாதித்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தவருக்கு பலத்த அடி. கோர்ட் கேஸ் என்றால் அவருக்கு துணை வர சொந்ததில் கூட ஆள் இல்லை. செலவு செய்யவும் பெரியதாக பணம் இல்லை. வேறு வழி இல்லை என்று சமாதானத்துக்கு  ஒத்துக்கொண்டார்.
“நீங்க சொல்றது உடன் படுறோம் தம்பி. ஆனா எழுபதாயிரத்துக்கு கம்மி எனக்கு கட்டுபிடியாகாது. “
கடன் திருப்பி தருவதாக எழுத்திய பத்திரத்தை ரமேஷிர்க்கும் ஸ்ரீதர்க்கும் சேர்த்து இரண்டு பத்திரங்கள் போட்டு கொண்டு வந்திருந்தான் விமல். 
இப்போது தான் ஸ்ரீதரை ஸ்டோர் ஹவுஸ்ஸிற்குள் வந்தான். அது வரை அவனை இங்கு விட வில்லை. எல்லாம் வாசுவே பார்த்துக்கொண்டான். அவன் வந்தவுடன் அவனுக்கு சாட்சி கையழுத்து வாசு போட, ரமேஷ்ர்க்கு விமல் போட, எல்லாம் நன்றாக முடிந்தது. 
விமல், வாசு சொன்னபடி ஒரு லட்சம் கொண்டுவந்திருந்தான். எழுபதாயிரம்  தந்தவுடன், ரமேஷ் அதை பத்திரப்படுத்தி மனைவியுடன் கிளம்பிவிட்டார்.
ரமேஷ் சென்றவுடன் அமைதியாக உட்கார்ந்துவிட்டான் வாசு. 
ஸ்ரீதர் விமலும் மணியும் வாசு இப்படி உட்காரவும் என்னமோ ஏதோ வென்று அருகில் வந்தனர். 
மணி, “அண்ணே என்ன அச்சு.“
மெல்லமாக தலை நிமிர்த்து உட்கார்ந்தவன், “எப்டி டா இவரு மாதிரி ஆளுங்க இருக்க முடியுது. ஸ்ரீதர எப்படி ஃபர்ஸ்ட் பார்த்தேன் உனக்கு தெரியும் தான” குரலில் வெகுவாக இரக்கம் எட்டி பார்த்தது.
மணி ”சரிண்ணே விடுங்க சில மனுசங்க இப்படி தான்.”
ஸ்ரீதர் கண்ணில் கோடாக கண்ணீர்.  எப்படியும் வாசு இதை தீர்த்து வைப்பான் என்று தெரியும். ஆனால் இப்படி இவ்வளவு விரைவாக இந்த பிரச்சனையை தீர்த்து வைப்பான் என்று நினைத்ததில்லை. வாசுவின் காலிலே விழுந்து விட்டான். 
வாசு, “டேய் எந்திரி டா முதல.” என்று அவனை தூக்கிவிட்டவன். அவனை பேசி சமாதானம் செய்து மணியுடன் உணவகத்திற்கு அனுப்பிவைத்தவன். அப்படியே ஸ்ரீதர் நிலத்தில் நாளையே முள் வேலி இடும் பணியும் உடன் இருந்து செய்து தரும்படி விமலை கேட்டுக்கொண்டான். ஏன்னென்றால் சொத்தை மீட்பது பெரிதல்ல அதை முறையாக பாதுகாப்பது முக்கியம் அல்லவா. எதை செய்தாலும் அதை முழுமையாக செய்வான் வாசு.
விமலிற்கு வம்படியாக பணத்தை திருப்பி குடுத்து தான் அனுப்பிவைத்தான். முகத்தை தூக்கி வைத்து சென்றான் விமல். விமலிர்க்கும் அஜைக்கும் அரிசி ஆலை தொடங்க வாசு தான் வங்கி கடன் பெற்று உதவி இருந்தான். அதனால் இந்த சிறு உதவி கூட இவன் செய்ய விடவில்லை என்ற தாங்கல் விமலிற்கு.
அப்போது வாசுவிற்கு 24 வயது இருக்கும். முதன் முதலில் ஒரு விவசாய கருத்தருங்கில் வாசு ஸ்ரீதரை பார்த்தான். பார்க்க சிறுவன் போல் இருக்கிறான் ஆனால் வேட்டி உடுத்தி இருக்கிறான். ஏன் படிக்காமல் இங்கு என்ன செய்கிறான் என விசாரிக்க அருகில் சென்றவன்,
“என்ன தம்பி இங்க என்ன பண்ற. ஸ்கூல்லாம் போலயா ?”
“இல்லண்ணா இன்னைக்கு ஸ்கூல் லீவு.”  அவன் தரையை பார்த்து சொல்வதிலேயே நம்பும் படியாக இல்லை பதில்.  
பரட்டை தலையுடன், மிக மெலிவான தேகம், கழுத்தில் கரியுடன், கை இல்லா பனியனுடன் வேட்டியில் இருந்தான். யாரு இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே தெரியாமல் ஸ்ரீதர் காலை மிதித்துவிட்டனர். பெரியதாக கத்தவில்லை, ஆனால் வேதனை சுமந்த முகத்தோடு கீழ் உதட்டை கடித்துக்கொண்டு சிறிது அருகே இருந்த திண்டில் அமைதியாக அமர்ந்து விட்டான்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வாசு, என்னமோ இவன் காலுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று தெரிந்து விட்டது.
“தம்பி கால்ல காமி.”
“அண்ணா பிளீஸ் வேண்டாம் ண்ணா…”
“இப்போ நீ காட்டல நான் உன் கட ஒனர் வந்து பார்ப்பேன்.” அதட்டலாக சொன்னான் வாசு.
“அண்ணா வேண்ணாம்…எனக்கு இந்த வேல விட்டா எதுவும் தெரியாது.” அழுதுவிட்டான் ஸ்ரீதர். 
“சரி டா…கால்ல காட்டுனு சொன்னேன்.”
மிகவும் தயங்கி தயங்கி வேட்டியை மெல்ல தூக்கினான். இடது கால் கணுக்காலுக்கு  மேலே ஆரம்பித்து பாதம் வரை தோல் உரிந்து, ரத்தம் காய்ந்திருந்தது. 
அதை பார்த்ததும் சிறிது அதிர்ந்து விட்டான் வாசு.
“என்னடா இது. இப்படி வச்சிட்டு எப்படி நடுக்குற. வா உன் கடை எங்கனு காட்டு.”
காலிலே விழுந்து விட்டான் ஸ்ரீதர்,” அண்ணா வேண்ணாம் ண்ணா அவரால தான் மூணு வேலை சாபிட்றேன். நான் பொய்  சொன்னேன்னு தெரிஞ்சா  என்ன வேலைய விட்டு நிறுத்திருவாரு.” கதறினான் ஸ்ரீதர்.
“நீ என்ன பொய் சொன்ன” கனிவாக கேட்டான் வாசு.
“அது இன்னைக்கு காலைல டீ போடும் போது தெரியாம சூடு தண்ணி கால்ல கொட்டிட்டேன், அதனால மாமாவ கூட்டிட்டு போய் என் காயத்துக்கு ஆஸ்பத்திரில மருந்து போட்டு மாத்திர வாங்கிட்டு வர சொன்னாரு ஓனரு. ஆனா நான் போகமயே போய்ட்டு வந்துட்டேன் சொல்லிட்டேன். ”
“அவரு நல்லது தானா டா சொன்னாரு நீ ஏன் டா போல?”
“இல்லா ண்ணா நான் போனேன் மாமா உள்ள இருந்து கிட்டே அத்தை கிட்ட  வீட்ல இல்லைனு சொல்லிட்டாங்க அத்தையும் பயந்துகிட்டு வந்து சொல்லிட்டாங்க.. அதான் வந்துட்டேன். என் சம்பளம் எல்லாம் மாமாட்டா இருக்கு, அதனால தனியாவும் போக முடில. பஸ்ல போணும்னா கூட கையிலே காசு இல்ல.”
இதற்கு மேல் இவனிடம் பேசிக்கொண்டு இருந்தால் என்னாவது என்று அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று கவனித்து, ஸ்ரீதர் அருகே அமர்ந்து அவனை பற்றி முழு விவரம் கேட்டவன், அவர்கள் சொந்த அத்தை மாமா இல்லை என்பதை தெளிவு படுத்திக்கொண்டு, டீ கடை ஒனரிடம் சொல்லிவிட்டு ஸ்ரீதரை கையோடு அழைத்து வந்துவிட்டான். 
இதையெல்லாம் நினைத்து பார்த்து வாசு தூங்க இரவு இரண்டு மணிக்கு மேல் ஆனது. 
மணியும், கிருபாவும் வாசுவின் வயலில் வேலை பார்த்தவர்களின் பிள்ளைகள். மூவரையும் வாசு கடந்த ஐந்தாண்டுகளாக படிக்க வைத்து வருகிறான். ஸ்ரீதர் வரலாறு இரண்டாம் ஆண்டு, மணி ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு. எல்லாரும் தொலைதூர கல்வி முறையில் படிக்கிறார்கள். கிருபா பள்ளி இறுதிவரை படித்தான் ஆனால் அதற்கு மேல் அவனுக்கு விவசாயத்தின் மீது ஈடுபாடு வந்துவிட்டது. அதனால் வாசுவிடமே சிறிது நேரம் வயலில் இருப்பவன் பிறகு உணவகதிற்கு வந்துவிடுவான். 
இங்கே இப்படி இருக்க கொச்சின்னில் காலை வேலையில் சென்று சேர்ந்திருந்தனர் கார்த்தியும் தேனும். ஸ்டேஷன் வந்து அழைத்து கொண்ட ஸ்ரீ, அவர்களுக்காக முன்பதிவு செய்திருந்த ஹோட்டலில் விட்டுவிட்டு மற்ற சுற்றி பார்க்கும் விவரங்களை கூறிவிட்டு வங்கிக்கு சென்று விட்டாள். 
இரண்டு நாட்கள் கொச்சினில் போட் ஹவுஸ் ஸ்டே, மட்டஞ்சேரி அரண்மனை, வீரன்புழா ஏரி என எல்லாம் பார்க்கவே அந்த இரண்டு நாட்கள் போதவில்லை.
இயற்கையின் அழுகு சூழ்ந்த பிரதேசம், தேனுவும் கார்த்தியும் முதல் முதலாக சேர்ந்து வரும் பயணம்.. சிறு வயதில் இருந்தே பெரிதாக பயணங்கள் எதுவும் சென்றதில்லை தேனு. தேனுவிற்கு மோஷன் சிக்னஸ் இருக்கிறது. அதனால் பெரியதாக எங்காவது வெளியே செல்லவே யோசிப்பாள். ஆனால் கார்த்தி அவ்வளவு பார்த்து நடந்துகொண்டான். 
சீக்கிரம் புறப்பாடு, சீக்கிரம் அங்கே செல்லவேண்டும், இங்கே நேரம் ஆகிவிட்டது என எதிலும் அவசரம் காட்டவில்லை கார்த்தி. எங்கே வேண்டும் என்றாலும் எப்போ வேண்டும் என்றாலும் செல்லலாம் ஆனால் உடன் நீ நன்றாக இருக்க வேண்டும் என்ற அக்கறை அவனிடம் எட்டி பார்துக்கொண்டே இருந்தது. அவள் கைபையில் புளிப்பு மிட்டாய் வைத்திருக்கிறாளோ இல்லையோ கார்த்தி நிறைய வைத்திருந்தான். 
கார்த்தியுடனான பயணத்தில் காலம், நேரம், நிமிடங்கள், மணிதுளிகள் என எதுவும் போதவில்லை தேனுவிற்கு. ஒவ்வொறு நொடிகளையும் அடிநெஞ்சில் சேமித்தாள். வாழ்க்கை முழுமைக்கும் இனிக்கும் நினைவுகள்.
அபிதா, ஷங்கர் இருவரும் இவர்கள் திருச்சிக்கு கிளம்பும் முன் கொச்சின்னில் ஒரு ஹோட்டலில் இரவு விருந்துக்கு புதுமண தம்பதிகளை அழைத்திருந்தனர்.  
எல்லாம் முடிந்து திருச்சிக்கு புறப்பட கொச்சின் விமான நிலையத்தில் அமர்திருந்தனர் உடன் ஷங்கரும், ஸ்ரீயும்.
ஷங்கரும் கார்த்தியும் தனியாக அமர்ந்து பேச, சற்று தள்ளி ஸ்ரீயும் தேனுவும் தனியாக அமர்ந்து பேச, நேரம் போனதே தெரியவில்லை. தரமாட்டேன் என்று புரளாத குறையாக அடம்பிடித்த தேனுவிடம் இருந்து மொபைலை பறித்த ஸ்ரீ, போட்டோஸ் பார்க்க ஆரம்பிதாள்.
அநியாயம் அக்கிரமம் இந்த முயலும் முழு கேரட் சாப்பிடுமா என்று இருந்த தேனு ஒரு முழு தோடத்தையே சாப்பிட்டிருந்தாள். அதிகமான போட்டோஸ்ஸில் இருவரும் இடைவெளி வந்தால் எங்கே காற்று புகுந்துவிடும் என சேர்ந்து போஸ் குடுத்திருந்தனர். ஒரு சில போட்டோஸ்லாம் பார்க்க பாஸ்வேர்ட் வைத்திருந்தாள் தேனு, அது அவளுக்கு மட்டுமே சொந்தமானது.
தேனுவை கண்களை சுருக்கி பார்த்த ஸ்ரீ. 
“ஹேய் அண்ணி…இங்க பாரு…இதெல்லாம் நீ பண்ண வேலையா” என்று தேனுவின் குதிரை வாலை பிடித்து ஆட்டினாள். 
“ஹேய் கேர்ள், don’t touch my hair. அப்றோம் என்னோட ஹேர் ஸ்டைல் கலஞ்சிடும்.”
“அட பார்ரா..”
“என் போனில இருந்து கைய எடு கேர்ள்…நான் உன் அண்ணியாக்கும் அப்றோம் உன்ன கொடும படுத்துவேன்.” 
“ஹா…ஹா…ஹா…” இவள் சத்தமாக சிரித்தது ஆண்கள் இருவரையும் இவர்கள் பக்கம் பார்க்க வைத்தது. மெதுவாக இவர்கள் பக்கம் வந்த ஷங்கர், 
“ஸ்ரீ மெல்லமா சிரி…பக்கத்துல குழந்தைங்க, சீனியர் சிட்டிசன்ஸ் எல்லாம் இருக்காங்க பாரு. இங்க கும்கி ஜாக்கிரதைனு போர்டு கூட வைக்க முடியாது. பயந்துற போறாங்க.” என சொல்லிவிட்டு கார்த்தியின் அருகே சென்று விட்டான்.   
“ஹா…ஹா…ஹா…ஹா…” வயிரை பிடித்து சிரித்து கொண்டிருந்தாள் தேனு.
“சிரி அண்ணி…நல்ல சிரி…அவ்வளவு ஏத்தம் ஆயிடுச்சு உனக்கு” காண்டானாள் ஸ்ரீ.
“விடு புள்ள விடு புள்ள…கோபம் எல்லாம் மான ரோஷம் இருக்குறவங்களுக்கு வர்றது. நமக்கு எதுக்கு புள்ள அதெல்லாம்.” 
“ஆமால…நமக்கெல்லாம் எதுக்கு கோபம்லாம்…” உடனே உண்மையை ஒத்துக்கொண்ட ஸ்ரீ. 
“சரி எப்போ ஊருக்கு வர ஸ்ரீ…”
“இப்போ தான வந்தேன் பேத்து. ஒன் மன்த் ஆகும் ” என்றாள் ஸ்ரீ 
முகம் கூம்பிவிட்டது தேனுவிற்கு. 
“ஹேய் இந்தா புள்ள கார்த்திய உன்ன பாக்க லேட்டா வந்தா உனக்கு பசலை நோய் வரலாம். நான் உன்ன லேட்டா பாக்க வந்தாலாம் வரக்கூடாது.”
புன்னகையுடன் “பசலை நோய்னா என்ன ?” என்ற அதிமுக்கியமான கேள்வியை கேட்டாள் தேனு.
தேனுவை குறு குறுவென்று பார்த்த ஸ்ரீ, “அதெல்லாம் எங்க அண்ணன் கிட்டயே கேளு.” என்று முடித்துவிட்டாள்.
“சரி நீ ஊருக்கு வந்ததும் நம்ப நிறைய சுத்தணும்.” என்றாள் தேனு.
“பார்ரா…புள்ளைக்கு ஊர் சுத்துர பயம் போய்டுச்சு போல.”
அதற்குள் ஃப்ளைட் அறிவிப்பு வந்துவிட்டது. 
“சரி புள்ள சீக்கிரம் வர பாரு”  என்று கட்டி அனைத்து கார்த்தியுடன் தேனு கிளம்பி விட்டாள்.
நாளை திருவனந்தபுரம் கிளையில் ஏதோ பயிற்சி இருக்கிறது அதனால் மறுநாள் தான் வருவேன் என சொல்லி ஸ்ரீயை ஹாஸ்டாலில் இறக்கிவிட்டு சென்று விட்டான் ஷங்கர்.
வந்தவள் அறை தோழிகளுடன் அரட்டை முடிந்து இரவு உணவு உண்டு  தூங்க செல்ல மணி பதினொன்று ஆகி விட்டது. மெத்தையில் படுத்தவள் மனதில் நினைத்ததெல்லாம், ‘நிறைய யோசிச்சிட்டேன் பேத்து. உனக்காக தான் இவ்வளவு நாள் வைட் பன்னேன். இந்த மன்த் ஊருக்கு வரேன், சம்பவம் பண்றேன்.’ என்று நினைத்தவள், சம்பவம் செய்ய இடம் நேரம் எல்லாம் யோசித்து முடிவு செய்து உறைந்த புன்னகையுடன் அமைதியாக தூங்கி விட்டாள். 
சம்பவம் செய்யப்பட வேண்டிய வாசுவோ சீக்கிரம் அவன் கனவு நிறைவேற போகும் நிம்மதியுடன் தூங்கி இருந்தான்.
      
  
    
 
 
     
  
 
        

Advertisement