Advertisement

                      நெஞ்சம் நிறையுதே 6
காலை சூரியன் பளிச்சென பிரகாசிக்க, கோடி கிரணங்களால் பூவுலகை ஆசீர்வதிக்க மிக அழகாக விடிந்தது வெள்ளி கிளமை.
வாசு காலை நான்கு மணிக்கே எழுந்து விட்டான். அவன் தோப்பில் தான் உறங்கி இருந்தான். அதனால் எழுந்தவுடன் சீக்கிரம் தயாராகி தோடத்திற்க்கு நீர் பாய்ச்ச சென்று விட்டான். 
முதலில் ஒரு ஏக்கரில் மரங்கள் நிறைந்திருந்தன. அவன் ஒன்றுமே செய்யவில்லை அவன் சிவசு தாதாவிடம் கல்லூரி இறுதியாண்டு படிக்கும் போதே சொல்லிவிட்டான் ஒரு ஏக்கரை சும்மா விடும்படி. அது இயற்கை தானாக உருவாக்கி இருந்து காடு. இயற்கயின் தூதர்களான பறவைகளால்  உருவான காடு. அதை எப்போது பார்த்தாலும் மனதில் எழும் உணர்விற்கு இன்றளவும் பெயர் இல்லை வாசுவிடம். முழுதாக இயற்கையால் ஆகர்ஷிக்கபடும் சூழல்.
சிவசு தாத்தா, வாசு என்ன சொன்னாலும் கேட்டு விடுவார். அதற்கு காரணம் அவனுக்கு விவசாயத்தில் இருந்த ஈடுபாடு. சிறு வயதில் இருந்தே இவருடன் சுற்றி கொண்டிருக்கிறான். தோப்பு வயல் என அவர்கள் நிலத்தில் நின்று வேலை பார்த்திருக்கிறான் பத்து வயத்திலிருந்து வாசு. 
மொத்தம் பத்து ஏக்கர் இவன் வாங்கி இருக்கும் நிலம், அதுவும் சொந்த தாதாவிடம் இருந்து . என்னவோ அப்பொழுது ஒரு வைராக்கியம், அப்பாவிடம் தன் எண்ணத்தை நிலைநாட்டிவிடும் உத்வேகம். எட்டாண்டுகள் போனதே தெரியவில்லை. 
உரம் ஏறிய உடல், உழைத்து இருக்கியிருந்து புஜங்கள், கைகள் கொஞ்சம் காய்ந்து போயிருந்தன, அவன் செய்யும் உழைப்பை அது பறைசாற்றும். அப்படியே நடந்து அடுத்து இரண்டு ஏக்கர் நெல் வாயலில் கதிர்மணிகளை ஏதோ பிஞ்சு குழந்தையின் கைகள் போல பிடித்து பார்த்துக்கொண்டிருந்தான். 
வாசுவிற்கு அவன் மண்ணில் இருக்கும் எல்லா உயிரின் நலனும் முக்கியம். அடுத்து ஒரு ஏக்கராவில் இருக்கும் சோளத்தோப்பு அவனுக்கு ஊரில் பிழைக்க தெரியாதவன் என்ற பெயரை வாங்கி கொடுத்திருக்கிறது. அதெல்லாம் பற்றி அவன் பெரியதாக கண்டு கொண்டதே இல்லை. அவன் மனம் சொல்வதை செவி மடுப்பவன். மனம் சொல்வதை மட்டும் அல்ல சுற்றி வாழும் எல்லா உயிரின் இசையையும் மனதில் வைப்பவன். 
அதற்கு அடுத்து போனால் தென்னை சாகுபடி . அனில் தாண்டா தென்னை ஆயிரம் வைத்திருபவன் அரசனுக்கு சமமம் என்று ஒரு கிராமத்து சொலவடை உண்டு. சுற்றி இருபவர்கள் சில பேர் சிற்றரசர்களாய் இருந்தார்கள். ஆனால் இவன் எண்ணமே வேறு அதனால் இரண்டு ஏக்கரில் இருநூற்றுக்குள் தென்னை வைத்திருந்தான்.  
பிறகு ஒரு ஏக்கர் முழுவதும் பல வகை காய்கறிகள், கீரைகள், கொடிகள் எல்லாம் வைத்திருந்தான். வீட்டின் உபாயோகதிர்க்கு, தெரிந்தவர்கள் வீட்டிற்கு எல்லாம் இங்கிருந்து தான் குடுப்பான். இவன் வீட்டிற்கு எடுத்து செல்லும் போது முதலில் சாப்பிட மறுத்தார் கோதண்டம் . வேறு வழி இல்லாமல் கார்த்தி தோப்பின் மூலம் வந்தது என்று சொல்லி கார்த்தியை வைத்து தான் வீட்டில் குடுத்தான். அதை திறம்பட செய்தான் கார்த்தி.
மீதம் இருக்கும் மூன்று ஏக்கரில் தான் வளர்திருந்தது அவனது பெருங் கனவு. இதற்காக தான் கடந்த பத்தாண்டுகள் கடுமையாக உழைதிருக்கிறான்.  இவன் சொந்த ஊருக்கு வந்தே இரண்டு ஆண்டுகள் தான் ஆகிறது. 
எல்லாம் பொறுமையாக பார்வையிட்டு வருவதற்குள் இரண்டு மணிநேரம் ஆனது.
எல்லாம் மன கணக்குத்தான். எங்கே அதிகம் தண்ணீர் விட வேண்டும், எங்கே குறைக்க வேண்டும், பஞ்சக்கவ்யா எங்கே குடுக்க வேண்டும், ஜீவாமிர்தம் எவ்வளவு விட வேண்டும், எல்லாம் மனதில் வைத்துக்கொண்டான். தேவையான இயற்கை உரம் வாசுவே தயாரித்து கொள்வான். அதற்கு தனியாக இடம் ஒதுக்கி இருந்தான். செடிகளின்  தண்டு   வளர்ச்சி, ஊடு பயிரின் வளர்ச்சி என எல்லாவற்றையும் கவனித்து விடுவான்.
காலையில் ஆட்கள் எல்லாம் களத்திற்கு வந்துவிட்டால், வாசு மேற்பார்வையெல்லாம் கிடையது, அவர்களிடம் கற்கும் மாணவனாகி விடுவான். யாரையும் குறைத்து மதிப்பிடுவதில்லை. அவனுடன் வேலை செய்வதே அவர்களுக்கு அலாதியானது, மற்ற இடத்தில் வேலை ஏவுவார்கள் ஆனால் இவன் வேலையை பகிர்ந்து கொள்வான். அவனிடம் வேலை செய்யும் ஆட்கள் பணத்திர்காக மட்டும் இல்லாமல் அவனை நேசித்து அங்கு வேலை செய்தனர்.  பிள்ளைகளின் படிப்பு, வேலை எதை பற்றியும் வாசுவிடம் அவர்கள் கேட்கலாம். உளமார உதவுவான், அவனால் முடியாவிட்டால் கூட அவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாவது அவனிடமிருந்து வரும்.
இதை தவிர அவன் தனியாக வேறு ஒரு இடம் வாங்கி வைத்திருக்கிறான். அது அவனது முயற்சியின் ஒரு பகுதி. ஊருக்குள் நுழையும் சாலை அருகே  இருக்கிறது, அது ஒரு கடையுடன் கூடிய உணவகம். 
இதை அனைத்தையும் பார்த்துக்கொள்வதற்கே அவனுக்கு நேரம் பத்தாது. இதையெல்லாம் தவிர அவனை தெரிந்தவர்கள் யாரவது அவனிடம் கேட்டுக்கொண்டால் சிறிய பட்ஜெட்டில் வீடு கட்டி கொடுப்பான். 
வேலை எல்லாம் முடித்து அவன் உணவகம் வர நண்பகல் ஆகிவிடும். அங்கே மூவர் வேலை செய்கிறார்கள். மணி, கிருபா, ஸ்ரீதர். அங்கே வந்தவன் நேராக சென்றது உணவகத்தின் சமயல் அறைக்கு சென்றான். 
ஏதோ அரக்க பறக்க ஏதோ செய்து கொண்டிருந்தான் கிருபா. 
“கொஞ்சம் தள்ளி நில்லு டா” 
கொஞ்சமும் அலட்டி கொள்ளாமல் கையில் இருந்த தோசை கரண்டியை அருகில் இருந்த பாத்திராத்தில் வைத்துவிட்டு, சற்று தள்ளி நின்றான் கிருபா. 
சட்டையை கழட்டி வேட்டியை மடித்து கட்டி கொண்டு, அருகில் இருந்த மாவை கிண்ணத்தில் எடுத்து தோசை ஊற்றினான் வாசு. அது நல்ல பெரிய தோசைகல். தோசை மீது ஏதோ பொடியெல்லாம் தூவினான். உள்ளே மசால் வைத்தான். மடித்தான் அருகில் இருந்த பாக்குமர தட்டில் வைத்தான். வெளியே அமர்ந்திருபவர்களுக்கு போய் பரிமாற சொல்லி குடுத்தான். 
பரிமாறிவிட்டு உள்ளே வந்தான் கிருபா. வாசுவை பார்த்தால் சட்னியாக்கிவிடும் எண்ணத்தில் இருந்தான் கிருபா, 
“என்ன டா அண்ணன பாசமா பாக்குற மாதிரி இருக்கு.” சீரியஸாக கேட்டான் வாசு.
“நீங்கலாம் ஒரு பாஸ்ஸா. டெய்லி வர வேண்டியது, ரெண்டு தோசைய வரவங்களுக்கு சுட்டு தரவேண்டியது. அப்றோம் காணாம போயரது. இதுக்கு இந்த லுக்கு வேற.” 
“டே என்னடா இப்டி சொல்லிட்ட.” சிரித்து கொண்டே வினவினான் வாசு.
“நீங்க செய்யறது தான சொன்னேன். இப்போ உங்களுக்கு எதுக்கு சிரிப்பு” என்று கடுப்புடன் வினவினான் கிருபா.
“இப்போ எதுக்கு டா பொங்குற ?”
“கார்த்தி அண்ணனுக்கு எல்லாம் ஆயிடுச்சு. உங்கள விட ஒரு வயசு சின்னவரு தானா. உங்களுக்கு எல்லாம் அந்த எண்ணமே இல்லையா. இன்னைக்கு ஆச்சிய கோயில பார்த்தேன். நீங்க யாரையாவது நினைச்சிருக்கிங்களானு என்னைய கேக்குறாங்க. அப்படி ஏதாவது இருந்தா வீட்ல சொல்ல வேண்டியது தானண்ணே ” முடிக்கும் போது ஒரு எதிர்பார்புடன் முடிதான் கிருபா. 
அருகில் இருக்கும் இவர்களின் ஸ்டோர் ஹவுஸ்ஸில் இருந்து ஸ்ரீதர் வந்திருந்தான். வாசுவின் பைக் வெளிய நிற்பதை தெரிந்து நேராக அவனும் சமையல் அறைக்கு தான் வந்தான். எப்படியும் அவன் அங்கே தான் நிற்பான் என்று தெரியும். 
ஸ்ரீதர், “அண்ணே டெலிவெரி எல்லாம் வந்துருச்சு. எல்லாம் இனிமே தான் ரெடி பண்ணனும். இன்னைக்கு கொஞ்சம் லேட்.”
“சரி டா. பார்துக்கலாம் விடு. வா வந்து ரெண்டு தோசை சாப்பிடு.”
அருகில் இருந்த பாக்குமர தட்டை எடுத்தான் ஸ்ரீதர். சாப்பிட ஆயத்தமானன், அங்கே இருந்த திண்டில் வசதியாக அமர்தான் முழு புன்னயுடன். 
“அண்ணே இங்க நான் கேட்டுட்டு இருக்கேன்ல.” பொறுமை பறந்துவிட்டது கிருபாவிற்கு.
“என்னடா கேட்ட அண்ணன்ட்டா ?” ஸ்ரீதர்.
“ம்ம்ம்..அவரு யாரையாவது லுவ்வுறாரானு கேட்டேன்.”
ஏற இறங்க வாசுவை பார்த்த ஸ்ரீதர், “அதுக்கெலாம் சரி பட்டு வரமாட்டாரு டா நம்ப அண்ணன்.”
“டேய்…அவனாவது பரவாலா. நீ ஏண்டா இப்டி டேமேஜ் பண்ற.” பரிதாபமாக கேட்டான் வாசு.
வெளிய வாடிக்கையாளர்கள் வரும் சத்தம் கேக்கவும் அவர்களை கவனிக்க சென்றான் கிருபா. ஆர்டர் எடுத்து உள்ளே வந்தான் கிருபா. மணி கல்லாவின் இருப்பதால் எப்போது டா ஸ்ரீதர் வெளியே வருவான். அவனை அமுக்கி கல்லாவில் உட்காரவைத்து உள்ள செல்லலாம் என்று எதிர்பார்த்து கொண்டிருந்தான். இப்போதே நாவெல்லாம் பரபரவென்று இருந்தது.
வெளிய வந்த கிருபாவிடம் ஸ்ரீதர் எப்போது வெளியே வருவான் என்று சைகையில் கேட்டான். ஒரு இரண்டு நிமிடத்தில் வந்துவிடுவான் என்று சொன்னவன் உள்ளே சென்றான்.
இவன் கேட்டு வருவதற்குள், ஸ்ரீதர் ஏதோ பேசி கொட்டு வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தான். 
இவன் சென்று வாசுவிடம் ஆர்டர் கொடுத்தான். 
“அண்ணே நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லல.” விடாபிடியாக நின்றான் கிருபா.
“டேய் இன்னுமாடா நீ அண்ணன நம்புற. பொங்குறத கொஞ்சம் குற டா” சிரித்து கொண்டே கை கழுவினான் ஸ்ரீதர்.
“ டேய் என்னயே சொல்லாத டா. இவரு யாரையாவது புடுச்சு பொங்கவச்சா பரவாலா. எல்லார் கிட்டயும் பதில் சொல்லமுடில ண்ணா. ” ஸ்ரீதரிடம் ஆரம்பித்து வாசுவிடம் முடித்தான்.
சரியாக ஸ்ரீதர், வாசுவிற்கு ஆர்டர் குடுக்கபட்ட உணவோடு வெளியே செல்வதற்கும் மணி உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது. உள்ளே வந்தவன் கையில் வரும்போதே பாக்குமர தட்டோடு கையில் வாட்டர் பாட்டிலோடு வந்தான். 
“மணிண்ணா நீ தான் சூப்பர். ஸ்ரீதர் வந்து தான் தட்டு எடுத்தான், நீ தட்டோட வர. உன் நேர்மை எனக்கு புடிச்சிருக்குண்ணா.” 
உள்ளே வந்த மணி, கிருபாவின் தோளிலே இரண்டு போட்டான்.
“வாய்டா உனக்கு. நீயா சுட்டு தர. ஏதோ அண்ணே பாசமா சுட்டு தராரு. ‘தட்ட எடுத்துட்டு வா டா’ சொல்ற கஷ்டத்த கூட குடுக்க கூடாதுனு, நான் ப்ரிப்பேர்ட்டா வந்தா இப்டி சொல்ரிய டா.”
“சரி அத வுடு. நீயாவது சொல்லு இவருகிட்ட.” வாசுவை கைகாட்டி புகார் வாசித்தான் கிருபா.
“என்னா டா சொல்லணும்” என்று விவரம் கேட்டான் மணி. இவ்வளவு நேரம் நடந்த பேச்சுகளை பற்றி மசால் தோசை சாப்பிட்டு கொண்டிருந்த கிருபாவிடம் சொன்னான். 
புது ஆர்டர் இப்போது எதும் வரரததால், மதியம் இனிமேல் தான் புதிதாக செய்ய வேண்டும் என்பதால் ஏற்கனவே எல்லாம் தயார் நிலையில் இருந்த குக்கரை .அடுப்பில் வைத்தவன்.
மணியிடம் இவனை பற்றி பற்ற வைத்துக்கொண்டிருந்த கிருபவை ஒரே இழுவையில் இழுத்தவன். கிருபாவின் கழுத்தை சுற்றி முழுதாகா ஒற்றை கையால் சிறைபிடித்திருந்தான்
“ண்ணா ண்ணா வுடண்ணா. யாராவது ஒரு அண்ணிய இழுக்க சொன்னா என்ன இழுக்குற.” வாய் அடங்கவில்லை கிருபாவிற்கு.
இதெல்லாம் பார்த்திருந்த மணி. அமைதியாக கைகழுவி சற்று தூரம் சென்றவன். சமையல் அறையில் வாயிலில் நின்று, 
“ டேய் கிருபா, வாசு அண்ணன்லாம் லவ் மெடடிரியலே இல்லடா ” என்று சொல்லி அவசரமாக வெளியே நடந்துவிட்டான்.  
“கையில மட்டுனா ஜூஸ்ஸ போட்டுடுவேன் டா உன்ன” என்று வாசு சத்தமாக சொன்னது நிச்சயமாக மணிக்கு கேட்டிருக்கும். 
“எல்லாம் உன்னால தான் டா. உனக்கு இருக்கு டா.” என்று கிருபவை குனியா வைத்து மொத்திக்கொண்டிருந்தான் வாசு. 
வெளியே சென்ற மணி சிறிது நிமிடங்களிலேயே பதட்டத்துடன் திரும்பினான். 
“அண்ணே ஸ்ரீதர் போட்டு அவங்க மாமா அடிச்சிட்டு இருக்காங்க. “
கொஞ்சம் முகத்தில் கடுமை ஏற, கிருபவை உணவை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு விறு விறு என்று வெளியே நடந்தான். கல்லாவில் அமர்ந்திருந்த ஸ்ரீதரை வெளியே இழுத்து போட்டு அவனை பிடித்து புரட்டி கொண்டிருந்தான் ஸ்ரீதரின் மாமா.
வெளியே வந்த வாசு இதை பார்த்து பூஜங்கள் புடைக்க ஸ்ரீதரின் மாமன் காலில் ஒரு எத்துவிட்டான். ஸ்ரீதரின் மேல் காலை வைத்திருந்த அவன் மாமன் அப்படியே ஒரு மூன்று ஆடி தள்ளி போய் விழுந்தான்.
அவ்வளவு தான் ஸ்ரீதரின் மாமனுடன் வந்த அவரது மனைவி “என் புருஷன யாராவது காபத்துங்களேன்” என கத்த ஆரம்பித்து விட்டார். 
விழுந்த ரமேஷ் தட்டு தடுமாறி எழுப்பார்க்க, முடியவில்லை அவரால். சரி அடித்தவன் யார் என பார்க்க நிமிர்ந்தவர் கண்ணில் பட்டான் வாசு. 
வேர்வை சொட்ட, வேட்டியை மடித்துக்கட்டி, தலைமுடி லேசாக கலைந்து, உழைத்து மெருகேரியே பூஜங்கள், கட்டான காலகள், இரண்டு நாள் மழிகாத தாடி, அடர்ந்த மீசையை நுனியை முறுக்கி, ரௌதிர பார்வையுடன் நின்றிருந்தான் வாசு.  

Advertisement