Advertisement

                          நெஞ்சம் நிறையுதே 5
“ஹலோ வாசு மாமா. நான் ஸ்ரீ பேசுறேன். கொச்சின்ல இருந்து பேசுறேன்.”
“சொல்லு மா. நான் தான் தூங்கபோறேன்னு சொல்றேன்ல. நாளைக்கு பேசலாம். பை, குட் நைட்” 
“ஹலோ…ஹலோ..”
ஹிம்ஹ்ம் அந்த பக்கம் பதில் இல்லை. வாசு தூங்க போய்விட்டான் போல இவள் இங்கே ஹாஸ்டலில் அதிர்ச்சியில் உறைந்திருந்தாள். வாசுவிடம் ஸ்ரீ பேசுவதே அதுவும் இவளாக பேசுவதே இது தான் முதல் முறை. 
கிட்ட தட்ட வாசுவிடம் அலைப்பேசியில் பேசுவது இதுவே இத்தனை வருடங்களில் முதல் முறை. வாசுவுடன் நேரில் பேசி இருக்கிறாள், அதெல்லாம் சாதாரணமாக அவன் வீட்டில் சந்திக்கும் போது பேசுவது. 
ஏதோ பிராங்க் செய்கிறானோ என்ற சந்தேகம் ஸ்ரீக்கு வந்தது. ஆனால் அதற்கு எல்லாம் வாசு சரிப்பட்டு வரமாட்டான் என்று ஸ்ரீக்கு தோன்றியது. ஒன்றும் புரியாமல் ரூமின் ஜன்னல் அருகே வந்து சாய்ந்து மொபைலை பார்த்து யோசித்து கொண்டிருந்தாள்.   
இளம் தென்றல் வீச அப்படியா அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து விட்டாள். சரி தேனுவிடம் பேசலாம் என்று தோன்ற கால் செய்து ஒரு ரிங் போவதற்குள் கட் செய்து விட்டாள். பிறகு தான் நேரம் பார்த்தாள், சரியாக இரவு 11.58 ,அட கடவுளே என்று தான் தோன்றியது. லேசாக நெற்றியில் தட்டி கொண்டாள். இந்த நேரத்திலா தேனுவிற்கும் வாசுவிற்க்கு அழைத்தோம் என்று தோன்ற அப்படியே தான் அமர்ந்திருந்தாள். 
சரியாக அந்த நிமிடம் வாசுவிடம் இருந்து அழைப்பு. எடுப்பதா இல்லை வேண்டாமா என்ற எண்ணம். முதலில் நேரத்தை கவனிக்கவில்லை இப்போது தெரியும் தானே அதனால் வந்த யோசனை. சரி எடுத்து பார்போம் என்று அழைப்பை ஏற்றாள்.
“ஹலோ ஸ்ரீ, sorry…very sorry…நான் ராகவ்னு நினைச்சிட்டேன். ரொம்ப sorry..” வாசு மெய்யாகவே வருந்தினான், குரலில் அவ்வளவு படபடப்பு எங்க அவள் இவனை தவறாக நினைத்து விடுவாளோ என்று குரல் அப்பட்டமாக காட்டி கொடுத்தது. 
“Its okay Mama. Am sorry too… இந்த டைம்க்கு கால் பண்ணிருக்க கூடாது. நான் டைம் பாக்காமா பண்ணிட்டேன்.“
“Its okay Sri, Is anything important ?”
“Nothing important Mama. இன்னைக்கு உங்களோட ஓரு போட்டோ பார்த்துட்டு இருந்தேன. நீங்க சொன்னது நியாபகம் வந்துடுச்சு. உடனே உங்களுக்கு கால் பண்ணிட்டேன். Congratulations Mama.“
“எதுக்கு விஷ் பண்ற. எனக்கு ஒன்னும் புரில. என்ன போட்டோ ?” 
“நீங்க ஒரு சோளதோப்புல இருக்க மாதிரி ஒரு போஸ். அது தாத்தாவோடது தான. அந்த தோப்ப நீங்க வாங்குனா தான் அங்க வர்ரதா சொன்னிங்கலாம். So you made it.” காரணம் சொல்ல தொடங்கி உற்சாக வாழ்த்தாக முடித்தாள்.
ஒருவரிடம் பேசும் போது அவருடைய தனிப்பட்ட ஒரு விஷயத்தை பற்றி பேசுகிறோம் என்ற நினைவு சிறிதும் இல்லாமல் தேனுவிடம் பேசுவது போல் இயல்பாக பேசிவிட்டாள். பேசிய பிறகு தான் என்ன பேசினோம் என்று யோசித்து அமைதியாகி விட்டாள்.
அந்த பக்கம் சில நிமிடங்களுக்கு எந்த சத்தமும் வரவில்லை.
“மாமா again am sorry…தேனுட்ட பேசுற மாதிரி உங்க கிட்ட பேசிட்டேன்.”
“பரவாலா, no problem. Thank you.”  வாசுவின் குரலில் என்ன இருந்தது ஸ்ரீக்கு தெரியவில்லை ஆனால் ஏதோ இருந்தது. 
ஸ்ரீக்கு இப்பேச்சை மாற்ற வேண்டும் போல் இருந்தது. 
“மாமா நீங்க ஏன் நான் கால் பண்ணப்போ ராகவ் அண்ணன் நெனச்சு அப்டி பேசுனிங்கா ?”
“ஹா…ஹா..அதுவா…இன்னைக்கு ஃபுல் டே பசங்க கால் பண்ணி பிராங்க் பண்ணிட்டே இருந்தாங்க. ராகவ்லாம் அப்டியே பொண்ணு வாய்ஸ்ல பேசுனான், அதுவும் நீ பேசும் முன்னாடி தான். நீ கால் பண்ணப்போ நம்பர் வேற பாக்கலா. So அவன் நெனச்சு அப்டி பேசிட்டேன். Really very sorry.” 
“பரவாலா மாமா. புரியுது. ஆமா எதுக்கு இன்னைக்கு உங்கள பிராங்க் பண்றாங்க. Anything special ?” சிரித்து கொண்டே ஆர்வமுடன் வினவினாள் ஸ்ரீ.
“ம்ம்‌ம்‌ ஆமா. இன்னைக்கு எனக்கு பர்த்டே.” குரலில் ஏதோ செய்தி சொல்லும் பாவனை.
“Wowww….Super Mama…நான் சரியான டைம் தான் கால் பண்ணிருக்கேன் போல. Wish You Many More Happy Returns of the Mama…Happiieee Birthday.” முழு உற்சாக குரலில் சொன்னாள். 
“Thank You very much. Okay லேட் ஆயிடுச்சு ஸ்ரீ. நீ தூங்கு. Good night” என்று கடமைக்கு நன்றி சொல்லி அழைப்பை முடித்து கொண்டான்.
இப்போது இவள் என்ன சொன்னாள், இப்படி சீக்கிரம் வைத்து விட்டான் என்று தான் தோன்றியது ஸ்ரீக்கு. 
இதே வேறு ஒரு ஆண்மகன் என்றால் இந்த நேரம் அழைத்தே இருக்க மாட்டாள். ஏன் இவ்வளவு பேசியே இருக்க மாட்டாள். சிவசு தாத்தாவிடம்  பழகி இருந்ததால் இவன் வெளி ஆள் போல தெரியவில்லை இவளுக்கு. என்னடா இவன் பிறந்த நாள் வாழ்த்து சொன்னதற்க்கு இப்படி அழைப்பை முடித்து விட்டான் என்று தான் தோன்றியது. மணியை பார்தாள் இரவு 12.05 ஆக இரண்டு நிமிடங்கள். வெறும் ஐந்து நிமிட பேச்சு தான். அதற்கே இந்த பாடு. சரி ‘பயபுள்ளயே அப்புறம் பாத்துக்கலாம்’ என்று படுத்து விட்டாள்.  
ஊரில் வாசு அந்த ஒற்றை அறை இருந்த வீட்டின் வெளியே வந்து நடந்து கொண்டிருந்தான். நினைவுகள் எங்கோ சென்றது. இது அவனது 29 ஆவது பிறந்த நாள். குடும்பத்தினருடன் அவன் பிறந்த நாளை செலவிட்டு கிட்ட தட்ட பத்து வருடங்கள் ஆகி விட்டது. இரவின் தனிமையில் அவன் தேடும் துணை இசை. மனதை இசைக்கு குடுத்து விட்டு சற்று நேரம் இளப்பாறினான்‌.
அடுத்த நாள் காலை வேலை கொச்சினில் ஸ்ரீ அவள் அலுவலகத்தில் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தாள். இன்று காலை பார்க்கில் சந்திக்க மூவருக்கும் நேரமில்லை. 
எப்போது டா ஷங்கரையும் அபியையும் இன்று பார்க்கில் சந்திபோம் என்றிருந்தது. வாசுவை பற்றி இருவரிடமும் கூற வேண்டும் என்ற ஆவால். 
மாலை வந்ததும் முதல் ஆளாக இஸ் கிரீமுடன் பார்க்கில் ஆஜராகி விட்டாள் ஸ்ரீ. அபிக்கு லேட் என்று இருவரிடமும் சொல்லிவிட்டு பாங்க்கில் இருந்து நேராக வீட்டிற்கு சென்று விட்டார். அதனால் ஸ்ரீயும் ஷங்கரும் தான் பார்க்கில். 
“டேய் சங்கு. நேத்து நான் ஒருதருக்கு பர்த்டே விஷ் பன்னேன் டா. கரெக்டா 12க்கு.”
“நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம் சீக்கிரம் சாப்பிடு. நாம்ப கிளம்பலாம். அபி வேற இல்லை.”
“சங்கு நான் சொல்றத கொஞ்சம் கேளேன்.”
கொஞ்சம் சீரியஸாகி விட்டான் ஷங்கர், “சொன்னா கேளு டெடி. அபி இப்போ நம்ப கூட இல்லை. நம்ப இப்டி தனிய இருக்கறது யாராவது பார்த்தா என்ன நினைபாங்க. உனக்கு கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்ல.”‌   
“டேய் அநியாயம் பண்ற டா நீ. நம்ப கொச்சின்ல இருக்கோம். அப்டிய யாராவது கேட்டா  நீ என்னோட ஃப்ரெண்ட்னு சொல்லிட்டு போறேன். இப்போ நீ இங்க உக்கார போறியா இல்லையா.” கொஞ்சம் மிரட்டினால் ஸ்ரீ.
“நீ சொல்லுவ ஸ்ரீ. எல்லாருக்கும் புரியாது. உன்ன மத்தவங்க ஒரு நிமிஷம் தப்பா பாக்கறது கூட நான் அலோவ் பண்ண மாட்டேன். பிளீஸ் எனக்காக இப்போ நம்ப கிளம்பலாம்.”  
ஸ்ரீக்கு கோவம் வந்து விட்டது. இவ்வளவு சொல்கிறோம் இவன் நம் பேச்சை மதிக்க மாட்டேன் என்கிறானே. சாப்பிட்டு முடித்த இஸ் கிரீம் கப்பை அருகில் இருந்த டஸ்ட் பின்னில் போட்டுவிட்டு அவனிடம் சொல்லாமல் விடு விடு என்று நடந்துவிட்டாள். கொஞ்சம் தூரம் நடந்தாள் ஆட்டோ ஸ்டண்ட். ஆட்டோ பிடித்து ஹாஸ்டலுக்கு புறப்பட்டு விட்டாள். ஆட்டோவின் சைட் மிர்ரர் ஷங்கர் இவள் ஆட்டோவை ஃபாலோ செய்வது தெரிந்தது. கோபம் அப்படி என்ன நடந்து விட்டது, இப்படி விரட்டுகிறான்.
இவள் ஹாஸ்டலில் இறங்கிவிட்டதை உறுதி செய்து விட்டு அவன் தங்கும் இடத்திற்க்கு சென்று விட்டான். இந்நேரம் கார்த்தி இருந்திருந்தால் இதை தான் செய்திருபான்.  
ஹாஸ்டல் வந்ததும் சற்று ரெஃப்ரெஷ் ஆகி காஃபியுடன் ஸ்நாக்ஸ் மொக்கிய பிறகு தான் கொஞ்சம் நிதானித்தாள். இன்னும் கூட தங்கும் இருவரும் வரவில்லை.
அவள் மொபைல் இசைத்தது…இசைத்துக்கொண்டிருக்கிறது…வேறு யாரு தேனு தான்.
“ஹாய் பேபி…ஹாஸ்டல் வந்தாச்சா…”
உற்சாகம் வந்து விட்டது ஸ்ரீக்கு,” ஹாய் டியர்…என்ன பண்ற…”
“சும்மா தான் இருக்கேன். ஸ்கூல்ல ஒன் வீக் அப்றோம் ஜாயின் பண்ணனும். சோ சில திங்க்ஸ்லாம் எடுத்துட்டு போணூம். உங்க அண்ணனும் என் அண்ணனும் வெளியே சுத்த போய்ருக்காங்க. எப்போ வருவாங்கனு தெரில. மறுவீடு எனக்கா இல்லை எங்க அண்ணனுக்கா தெரில. அப்படி பண்ணிட்டு இருக்காங்க ரெண்டு பேரும். ஆனா ஏதோ கமுக்கமா பண்றாங்கனு மட்டும் தெரியுது.”
“ஹா…ஹா…ஹா…நல்லா பண்ணிட்டாலும்..ஹேய் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா…உங்க அண்ணன் என் கூட லிவிங் டுகெதர்க்கு ரெடி ஆயிடங்க நேத்து..ஹா..ஹா…”
“நம்பிட்டேன்…நம்பிட்டேன்…”
“நெஜமா பா..” என்று ஆரம்பித்து நேத்து நடந்த எல்லாவற்றயும் சொன்னாள்.
“————“
“ஹேய் பேத்தக்குட்டி…தேனு…என்ன சைலன்ட் ஆயிட்ட…லைன்ல இருக்கியா.”
“————“
இப்போது கொஞ்சம் சீரியஸ் ஆகி விட்டாள் ஸ்ரீ, “என்னாச்சு தேனு, ஏன் சைலன்ட் ஆயிட்ட..?”
“இல்ல அண்ணனுக்கு இன்னும் மேரேஜ்க்கு பொண்ணு கிடைக்கல…அதான் நியாபகம் வந்துடுச்சு.”
“ஹேய் தேனு மாமாக்கு என்ன ப்ராப்ளம்…நல்லா விவசாயம் பாக்குராரு…இப்போ கூட மாமா தனியா ஹவுஸ்லாம் பிளான் பண்றாரு..சிவில் இஞ்சீனியர் வேற…அப்றோம் என்ன ப்ராப்ளம்.”
“அதான் ப்ராப்ளமே. உனக்கு ஓரளவு ப்ராப்ளம் தெரியும் தான. அப்றோம் என்ன இப்டி கேக்குற” 
“எல்லாம் பெரிய மாமாவ சொல்லணும். எந்தளவுக்கு வாசு மாமா சேலஞ்ஸ் ஃபேஸ் பன்னாரு. வாசு மாமாவ நெஜமா ரொம்ப அப்ரிசியேட் பண்ணனும்.‌” உண்மையாகவே பாராட்டினாள் ஸ்ரீ.
“மாப்பிள்ளை என்ன பன்னாரு கேட்டா விவசாயம் பாக்குராருனு சொன்னா, பொண்ணு வீட்ல இருந்து பெருசா ரெஸ்பான்ஸ்‌ வர்றது இல்ல.” கொஞ்சம் சோகமாக சொன்னால் தேனு.
“பரவால விடு பேத்து…எல்லாம் நடக்கும் போது நடக்கும். வாசு மாமா மாதிரி ஒரு மாப்பிள்ளை பார்த்தா நான்லாம் மாப்பிள்ளைய கிட்நாப் பண்ணி மேரேஜ் பண்ணிபேன்…ஹா…ஹா…ஹா..” 
“போ கேர்ள்…என் கிட்டாயே விளையாட்டா

Advertisement