Advertisement

                         நெஞ்சம் நிறையுதே 5 -2
“தேனு…பார்தியா இப்போ நீ தான் நான் மாப்பிள்ளை கேட்டா கூட விளையாட்டானு கேக்குற…” குரலை சீரியஸ் மோடிர்க்கு கொண்டுவந்திருந்தாள்  ஸ்ரீ.
தேனுவிற்கு ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை. உண்மையாகவே ஸ்ரீக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கிறதா. ஒன்றும் புரியவில்லை தேனுவிற்கு.
“கேர்ள்…நீ நெஜமா தான் சொல்றியா…நான் வேணா அண்ணா கிட்ட பேசி பார்த்துட்டு சொல்லட்டா…” ஸ்ரீக்கு மேல் தேனு சீரியஸாக கேட்டாள்.
“சரி பேத்து…நீ உங்க அண்ணாட்டா பேசிட்டு சொல்லு…நான் வைட் பண்றேன். உங்க அண்ணா ஓகே சொல்லிட்டா நான் இமீடியட்டா வீட்டுல சொல்லணும். அப்றோம் உங்க வீட்ல வந்து பேசணும். எவ்ளோ வேலை இருக்கு. சீக்கிரம் பேசிட்டு சொல்லு.”
வாயடைத்து போய் விட்டாள் தேனு.
“ஏ புள்ள தேனு அங்க இருக்கியா இல்லையா…?”
“ஹான் இருக்கேன்… தோ நான் நாளைக்கு அண்ணா கிட்ட பேசிட்டு சொல்லட்டா…” சீரியஸாக சொன்னாள் தேனு. 
மெல்லிய புன்னகை ஸ்ரீயின் உதட்டில், “நான் என்ன சொன்னாலும் நம்புற தேனு… I love You Baby“ 
இப்படி அப்படி என்று இல்லை அப்படி ஒரு திட்டு ஸ்ரீக்கு…தேனுவிடம் இருந்து.
சிறு வயத்தில் இருந்தே ஸ்ரீ என்ன சொன்னாலும் நம்புவாள் தேனு. மற்றவர் சொன்னால் வேறு தான். 
சிறிது நேரம் தேனுவை பேச விட்ட ஸ்ரீ சிரித்து கொண்டே “போதும் போதும் பேத்து…இயர் ட்ராப்ஸ் இல்லாமல் நீ பேசுன பேச்சுக்கு காத்துல இருந்த அழுக்கு எல்லாம் தானா வருது…அதுக்கு உனக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்.”
“‌கொய்யால நான் என்ன உனக்கு ENT ஸ்பெஷலிஸ்ட்டா…?” 
“இப்போ என்ன நீ மறுபிடியும் திட்ட போறியா. ஒன் செகன்ட் இரு இன்னொரு காதுல மொபைலை மாதிக்கிறேன். அந்த காதும் கிளீன் ஆகட்டும்.” என்று உண்மையாகவே மொபைலை ஒரு காதில் இருந்து இன்னொரு காதிற்கு மாற்றினாள் ஸ்ரீ.
அவ்வளவு தான் கோபம் வந்துவிட்டது தேனுவிற்கு ஃபோன் கால் கட் செய்துவிட்டாள். 
புன்னகையுடன் மொபைலை பார்த்து கொண்டிருந்தாள் ஸ்ரீ.  எப்படியும் இவளுக்கும் சேர்த்து இன்று கார்த்தி வறுபட போகிறான். ஸ்ரீக்கு சந்தேகம் இவள் முதலில் கார்த்தியை திட்டுவாளா. ‘சரி போ. போட்டுட்டோம், புகையட்டும்’ என்ற நல்ல எண்ணத்தில் ஸ்ரீ அடுத்த வேலையை பார்க்க போய் விட்டாள்.
இங்கே ஊரில் வாசு,
மறுவீட்டிற்கு வந்த கார்த்தியுடன் இரவு உணவு நேரம், அவனுடன்  பேசிக்கொண்டிருந்தான்.
“மச்சான் கேரளா போறீங்களாமே. தேனு சொல்லிச்சு. எப்போ கிளம்புரிங்க.”
“டூ டேஸ் அப்றோம் கிளம்புலாம்னு. நாளைக்கு பாங்க் ஜாயின் பண்ணிட்டு , வெள்ளிக்கிளமை நைட் ஃப்ளைட், அப்றோம் கொச்சின்ல ஒரு டூ டேஸ் ஸ்டே. திங்கள் கிளமை காலைல இங்க இருப்போம்.” 
“என்ஜாய் டா மச்சான். அப்றோம் ஸ்ரீ கிட்ட பேசுனேன் நேத்து” என்று தொடங்கி நேற்று நடந்ததை சுருக்கமாக சொன்னான்.
“—–“
“என்ன டா அமைதியா இருக்க ?”
“நேத்து உன் பர்த்டே நீ தனியா இருந்துருக்க . பசங்க மட்டும் உன் கூட இருந்தா இப்டி தான் நார்மலா இருந்திருபியா . ராகவ்லாம் உன்ன தனியவே விட்டுருக்க மாட்டான். நேத்து நைட் நானும் உன் கூட இல்லை. இன்னும் எத்தன நாள் டா இப்டியே நல்ல நாள் அதுவுமா வீட்டுக்கு வராம இருக்க போற.”
வாசு ஒன்றும் கூறவில்லை, அமைதியாக தட்டில் இருந்த தோசையை முழுதாக முழுங்கி, மெல்லிய புன்னகையுடன் கார்த்தியை பார்த்து கண்ணடித்துவிட்டு எழுந்து விட்டான். 
கிராதகன் ஒன்றும் வாயை பிடுங்க முடியாது. நண்பர்களுடன் இருக்கும் போது கலகலவென்று தான் இருப்பான். ஆனால் வீட்டை பற்றி கேட்டால் மட்டும் எதுவும் வாய் திறப்பதில்லை. 
அமைதியாக பின்கட்டிற்கு செல்லும் வாசுவை தான் பார்திருந்தான் கார்த்தி. நண்பர்களில் கார்த்தி ராகவ் இருவருக்கும் மட்டும் தான் வாசுவின் கனவை பற்றி முழு புரிதல் உண்டு. பெரு மூச்சுடன் மேல் அறைக்கு சென்றான் கார்த்தி.
கார்த்தி ஏதோ தேனுவின் லாபில் பார்க்க ஆரம்பிதான். ஒரு அரைமணி நேரத்தில் உணவு முடிந்து அறைக்குள் வந்த தேனு, கதவை டொக்கென்று சாற்றி விட்டு, அங்கே இருந்த அந்த கால மர இருக்கையில் டொம்மென்று உட்கார்ந்தாள்.
‘என்னடா இது கோபமே வராதே நம்ப ஹனி இப்டி கோபமா இருக்கு’ என்று அவள் கோபத்தை கூட கண் சிமிடாமல் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தான் கார்த்தி. 
கையில் கிடைத்த அவள் பொருட்களை அடுக்கிக்கொண்டிருந்தாள். எல்லாம் ஸ்ரீ மேல் உள்ள கோபம் தான்.
கார்த்திக்கு ஒன்றும் தெரியாதல்லவா அதனால் அவளுக்கு உதவுவோம் என்று அவள் அருகில் சென்று அவள் எடுத்து வைத்து கொண்டிருந்த புடவையை   பார்த்து அதை போல் இருக்கும் மத்த புடவைகளையும் எடுத்து குடுக்க பீரோவில் கை வைத்தான் .
“தொடாதீங்க…எல்லாம் நான் எடுத்துகிறேன்.” மூக்கு விடைக்க ஏதோ வாய் மெல்லமாக வெளியே சத்தம் வராத அளவு ஸ்ரீயை திட்டிக்கொண்டிருந்தது.
“என்னாச்சு ஹனி..நான் ஏதாவது ஹெல்ப் பண்றேன்.”
“பிளீஸ் இப்போ போய் படுங்க. அதுவே எனக்கு பெரிய ஹெல்ப்” 
“அப்படியெல்லாம் சொல்லக்கூடாது ஹனி…நான் பண்ணுவேன்”
‘அப்போ அனுபவி டா’ மைண்ட் வாய்ஸ்ஸில் கவுன்டர் குடுத்தவள். “தோ…இந்த பீரோ பூரா இருக்க டிரஸ் எல்லாம் எடுத்து இந்த பேக்ல எடுத்து வைங்க” என்று சொல்லிவிட்டு அவள் சென்று படுத்து கொண்டாள்.
இது அள்ளவோ இன்பம் என்று வாழ்கையில் முதல் முறையாக அவன் மனைவியிட்ட வேலையை செவ்வனே செய்துகொண்டிருந்தான்.
சிறிது நேரம் ஸ்ரீயை மனதில் வறுத்தவள், கொஞ்சம் அமைதியானாள். பிறகு திரும்பி படுத்தாள். கார்த்தி படுக்க வராததை கண்டு என்ன செய்கிறான் இவ்வளவு நேரம் என்று எழுந்து பார்தாள்.
காரியகாரனாய் கிட்ட தட்ட பாதி புடைவைகளை அழகாக மடித்து வைத்துக்கொண்டிருந்தான். இவளுக்கு என்னடா இவன் சாதாரனமாக சொன்னத்தை கூட இப்படி செய்கிறான், என்று எழுந்து அவன் அருகில் சென்றான்.
தேனு அருகில் வருவதை உணர்ந்து தலையை நிமிர்த்தி பார்த்தான். 
“நா…நான் ஏதோ கோபத்துல சொன்னேன். அதுக்குனு இப்டியா சின்சியரா இருப்பிங்க”
“என்னோட ஹனி எனக்கு குடுத்த முதல் வேலை…So I enjoy it”
தேனு உதட்டை மெல்ல வளைத்து, “இப்போ இப்படி தான் சொல்லுவிங்க . அப்றோம் போக போக இதெல்லாம் செய்யமாட்டீங்க. “
அவள் இயல்பாக கேட்டாள் கூட செய்வேன் என்று சொல்லி இருப்பான். ஆனால் கிண்டலாக கேக்கவும் இப்போது தான் நெருங்கி நன்றாக பேசிக்கிறாள். இந்த நேரத்தை நீடிக்க விழைந்தான்.
“ஹிம் ஆமா…”
என்னடா இவன் இப்படி ஒத்துக்கொண்டான். ஒரு பேசிற்க்கு கூட செய்து தருகிறேன் என்று சொல்லவில்லை என்று அவனை விழிவிரித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
“நீங்க சும்மா கூட நான் செஞ்சி தரேன் சொல்லமாட்டேன்றிங்கா” குறும்புடன் கேட்டாள் தேனு.
“ஆமா பின்ன. நான் இப்போ செஞ்சி தரேன் சொல்லுவேன். அப்றோம் நீ சொல்ற வேலையெல்லாம் செஞ்சு நான் இளச்சிட்டா . அப்றோம் என் கட்டுடல் தேகம் என்னாகரது. இப்போ நீ சொன்ன வேலை கூட ஏன் செய்றேன் தெரியுமா…”
‘லூசாயா நீ இப்போ தானா நான் குடுத்த முதல் வேலை செய்றேன் சொன்ன’ என்ற மைண்ட் வாய்ஸ் அவள் முகம் காட்டி கொடுத்தது. இருந்தும் திருப்பி கேட்டாள்.
“ஏன் செய்றீங்க…”
“இந்த மாதிரி பண்ண ஆர்ம்ஸ் எல்லாம் நல்லா டைட் ஆகும். நான் வேற ஜிம் எல்லாம் போக முடியால . வீட்ல தான் நெட் பார்த்து எக்சர்சைஸ் பண்ணுவேன் . அதனால தான் ஏதோ நீ ஆசையா கேட்டிய, சரி நமக்கு வொர்க் அவுட் ஆச்சுனு ஸ்டார்ட் பண்ணிட்டேன்.” என்று வராத வேர்வையை துடைத்து தேனுவின் மீது எறிந்தான்.
தேனு நக்கலாக அவனை பார்க்க, அவன் சீரியஸ்ஸாக அவன் போட்டிருந்த ஷர்ட் கலட்டினான். 
என்னடா செய்கிறான் இவன் என்று பார்த்து பேந்த விழித்துக்கொண்டிருந்த தேனுவின் முன்னாள் தடால் என்று விழுந்து தண்டால் எடுக்க ஆரம்பித்தான்.
சிரிப்பு வந்து விட்டது தேனுவிற்கு. சரியாக அந்த நேரத்தில் சீதா இருவருக்கும் பால் கொண்டுவந்தார். கதவை தட்டினார், இவன் நல்லா பிள்ளை போல் எழுந்து சென்று கட்டிலில் உட்கார்ந்து விட்டான்.  
தேனு உதட்டில் உறைந்த சிரிப்புடன் சென்று கதவை திறந்தாள். தேனுவின் முகத்தை பார்த்து மகிழ்ச்சியுடன் சீதா பால் இருந்த ஒரு செம்பையும் அதை மூடி டம்பளரையும் குடுத்து விட்டார்.
கதவை சாற்றி உள்ளே வந்த தேனு மெல்ல நடந்து வர 
கார்த்தி “ஜில் ஜங்….ஜில் ஜங்..ஜில் ஜங்…ஜில் ஜங்….” என்று பின் பாட்டு பாடினான்.
டம்பளரை கார்த்தி மீது புன்னகையுடன் வீசினாள் தேனு. இருவரின் சிரிப்பு சத்தமும் அறையை நிறைத்தது.
கொச்சின்,
குளிர் காற்று வீச அறை தோழிகள் உறங்க இரவு பூனை போல் விழி விரித்து வாசுவின் போட்டோஸ் மட்டும் தனியாக எடுத்து வைத்திருந்தாள் ஸ்ரீ . சரி தேனுவை கடுப்பாகி வைத்து விட்டாயிற்று . சமாதான பட்டர்பிளையை  பறக்க விடவேண்டும் என்று முடிவு செய்து வாசுவின் போட்டோஸ் எல்லாம் சேர்த்து ஒரு ஆடியோ விஷ்வல் தயார் செய்ய ஆரம்பித்தாள்.
இவளிடம் இருந்த வாசுவின் அனைத்து புகைப்படத்தையும் திரட்டினாள். 
எல்லாம் பார்த்த போது ஸ்ரீக்கு தோன்றியது எல்லாம் இது தான். 
‘மாம்ஸ்க்கு என்ன குறச்சல். ஏன் இன்னும் பொண்ணு கிடைக்கல. 
Very hardworker. வீட்ல தாதாக்கும் ஆச்சிக்கும்  நல்ல பேரன், சீதா அத்தைக்கு நல்ல மகன், தேனுவிற்கு நல்ல அண்ணா, என்ன பெரிய மாமாக்கு தான் வில்லன்…ஹிம் ’
‘சரி என்ன சாங்க் போடலாம்’ என்று அவன் போட்டோஸ் பார்த்து யோசித்து கொண்டிருந்தாள். 
தேனுவின் திருமானத்தன்று , 
ரிசப்ஷனில் இருந்து அவனின் மாமன் மகள்கள் இருவர் வேண்டும் என்றே அவனை பார்த்து ரசித்து சிரிப்புடன் ‘super’ என்று சொல்லுவது போல் போஸ் குடுக்க, எடுப்பான வேட்டி சட்டையில், முன்னே கொஞ்சம் காற்றின் திசையில் கேசம் பறக்க, வசீகர புன்னகையுடன் இடது பக்கம் மெல்ல தலை சாய்த்து, கையில் வேட்டியின் ஒரு முனையை தூக்கிப்  பிடித்து, இன்னொரு கையில் மீசையை முறுக்குவது போல் போஸ் கொடுத்து கொண்டிருந்தான்.
ஸ்ரீ போட்டு விட்டாள் பாட்டை,
நீ கட்டும் வேட்டி மடிப்புல 
நான் மயங்கி போனேனே
உன் கட்டழகு மீசையிலே  
கிறங்கி போனேனே 
வண்டு சாமந்தி பூவில் நாயனம் ஊதூது மாமா 
மனசு அசையினாலே ஊஞ்சல் ஆடுது மாமா.
  
 
 
  
    
 
 

Advertisement