Advertisement

“என்னமோ இதுதான் முத தடவ வர மாதிரி பேசுற. வந்து எத்தன வாட்டி மொக்கிருக்க. என்னமோ இது தான் நீ முத தடவ வர மாதிரி இந்த ஆச்சி அழும்பு பண்றாங்க டா.”
தலையை மெல்ல விரல்களை விட்டு கோதிக்கொண்டே எங்கோ பார்த்தபடி கார்த்தி, “ இப்போ நான் உங்க வீட்டு மாப்பிள்ளை டா. இனிமே எல்லாம் அப்படி தான்.”
“அப்டியா மாப்பிள்ளை, வா உன்னை குளிப்பாட்டுறேன்” என சொல்லி கார்த்தியின் தோளில் கையை போட்டு தர தர வென இழுத்து சென்றான் அங்கே இருக்கும் தண்ணி தொட்டியிடம்.”   
“டேய் விடு டா உன் தங்கச்சி கூட சேர்ந்து குளிச்சா கூட ஒரு நியாயம் இருக்கு டா. நான் ஏன் டா உன் கூட குளிக்கனும். முடியாது போடா.” வழக்காடி கொண்டிருந்தான் கார்த்தி.
“அதெல்லாம் முடியாது நீ தானா என்ன எழுபுன அதுக்கு தான் அனுபவி வா.” கார்த்தியை விடவில்லை வாசு. கார்த்தியை சேர்த்தே தொட்டிக்குள் இறங்கி முங்கினான் வாசு.
“டேய் கிராதக என்ன விடுடா. ஒரு டிரஸ் தான் டா கொண்டு வந்துருக்கேன். கிறுக்கு பயலே வீட்டுக்கு வந்து அரைமணி நேரம் கூட அகால அதுக்குள்ள இப்படி பண்ணிட்டிய டா.”
“டேய் இப்டிலாம் பேசக்கூடாது. மாப்பிள்ளை வீட்டுக்கு வந்தா நல்லா கவனிக்கலனு நாளைக்கு பேச்சு வந்துடா கூடாது டா.“
“ஜூவுல இருக்க வேண்டியவனெல்லாம் வீட்ல வளர்த்த இப்டி தான் டா பண்ணுவ.”
கார்த்தி திட்ட திட்ட நன்றாக பல முறை முங்கி எழுந்தான் வாசு கார்த்தியுடன். இறுதியில் கார்திக்கு திட்ட கூட முடியா நிலைமை, அப்படி தொப்பலாக நனைந்த்திருந்தான். இருவரும் தொட்டியின் மீதேறி வெளிய வந்தனர்.
சீதா வாசு எழுந்து விட்டான என்று பார்க்க வந்தவர் இவர்கள் இருவரும் வெளிய வரும் நிலைமையை பார்த்து தேனுவை கூப்பிட சென்றார்.
சிறிது நேரத்தில் ஒரு துண்டுடன் வந்த கார்த்தியிடம் குடுக்க. வாசு எங்க என்று பார்க்க அவன் ஏதோ பல்போடியை எடுத்து கொண்டு அங்கே இருந்த குளியலறைக்கு சென்றான். அவர்கள் ஆச்சி செய்தது, ஏதோ நாட்டு மருந்து பொருள்களை சேர்த்து செய்திருந்தார். அது தான் அவர்கள் வீட்டின் பேஸ்ட். 
எல்லாம் முடித்து வெளிய வரவும் சீதா வந்து வாசுவை சாப்பிட அழைத்தார். அவன் சற்று நிதானித்து நிமிர்ந்து அவரை பார்க்கவும், “இன்னைக்கு ஒரு நாள் வாடா கண்ணு” என்று விட்டார். 
விருந்து சாப்பாடு எல்லாம் நடு கூடத்தில் வைக்கபட்டது. முதலில் தேனு, அவள் அருகில் கார்த்தி, அவன் பக்கம் வாசு, பிறகு சிவசு தாத்தா, அவருக்கு பக்கத்தில் கோதண்டம். சுந்தரி ஆச்சியும் சீதாவும் தான் பரிமாறினார். 
பரிமாறும் போது ஆச்சிக்கு சிறிது கண் கலங்கி விட்டது. இப்படி அப்பா, பிள்ளை எல்லாம் ஒரே பந்தியில் அமர்ந்து உண்ணுவது ஏழு ஆண்டுகளுக்கு பிறகு இன்று தான் பார்க்கிறார். ஆனால் ஒன்றும் வெளிய காட்டிகிக்கொள்ளவில்லை.
விருந்து சிறப்பாக முடிந்து வாசுவும் கார்த்தியும் வெளிய வாசுவின் தோப்பிர்க்கு சென்று விட்டனர். அவர்கள் வீட்டிலிருந்து பத்து நிமடம் நடை பயணம். எல்லாரும் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர். சிவசு தாத்தா படுக்க சென்று விட்டார். கோதண்டம் அவர் வயலுக்கு சென்று விட்டார். சீதா சாப்பிட அமர்த்த போது சுந்தரி ஆச்சி சிறிது நேரம் களித்து சாப்பிடுவதாக சொல்லிவிட்டார். எல்லாம் முடிந்து தேனுவும் சீதாவும் எல்லாவற்றையும் ஒதுங்க வைத்துக்கொண்டிருந்தனர். 
சுந்தரி ஆச்சி சாப்பிடவே இல்லை. சீதா தான் ஆச்சியின் மன நிலையை புரிந்து கொஞ்சம் பேசி அவரை சமாதான படுத்தி சாப்பிட வைத்தார். தேனுவிற்க்கு இதெல்லாம் பார்த்து பழகி விட்டது. அவள் மடியில் இருக்கும் அறைக்கு சென்று படுத்துவிட்டாள். யாரிடமாவது பேசினாள் நன்றாக இருக்கும் என்று தோன்ற, வேறு யார் அவளுக்கு நியாபகம் வருவார், எல்லாம் அவள் bestie ஸ்ரீபத்மா தான்.
தேனுவிற்க்கு தெரியும் இது அவளது வேலை நேரம். இருந்தும் இப்பொழுது மதியம் சாப்பிடும் நேரம் ஸ்ரீக்கு. அதனால் இவள் கூப்பிட்ட உடன் ஸ்ரீ எடுத்து விட்டாள். 
“ ஹேய் பேதக்குட்டி என்ன பண்ணிட்டு இருக்க. நல்ல சாப்படா, எல்லாம் என்ன விட்டுட்டு இந்த கட்டு கட்டுரிங்கள்ள. என்ன என்ன டிஷ் சொல்லு பார்போம்.” என்றாள் ஸ்ரீ உற்சகமாக.
அந்த உற்சாகம் கொஞ்சம் தேனுவை தொற்றிக்கொள்ள, “ஹேய் டெடி இன்னைக்கு விருந்து சூப்பரா இருந்துச்சு” என்று ஆரம்பித்து எல்லாம் சுருக்கமாக சொல்லி முடிதவள் கடைசியில் அமைதியாக முடிக்க, ஸ்ரீ கணித்து விட்டாள் அங்கு ஏதோ நடந்திருக்கிறது.  
“பேத்து நீ என்ன பண்ற டீடெயில் ஆடியோ ஃபைல் ஒண்ணு அனுப்பிவிடு. I have some things to get done. இன்னைக்கு ஈவினிங் உனக்கு கால் பண்றேன். ஹேய் இது உனோட டே, நீ வேற ஒண்ணும் நினைக்காத. கொஞ்சம் நாள் அப்ரோம் நீ யோசிச்சு பார்த்த ஹாப்பி மொமெண்ட்ஸ் தான் உனக்கு நியாபகம் வரணும். சோ இன்னைக்கு எங்க அண்ணா ஹாப்பி அகுரா மாதிரி ஏதாவது யோசிச்சு பண்ணு சரியா.” 
சிரித்து கொண்டே இங்கு தேனு தலையை ஆடினாள். சத்தம் வராததால் ஸ்ரீ ”நீ அங்க தலைய ஆட்டுரியாக்கும். நீ எல்லாம் தேர மாட்ட. எபிடியோ உருபுட்டா சரி. உன்கிட்ட நான் மோர்னிங் என்ன மெசேஜ் பன்னேன், உங்க அண்ணன் நம்பர் கேட்டன் தானா அது இன்னும் நீ அனுப்புல, அத முதல செய் நீ.”
இவ்வளவு நேரம் சாதாரணமாக ஸ்மைலிங் மோடில் கேட்டு கொண்டிருந்தவள், ஸ்ரீ கடைசியாக சொன்னதை கேட்டு சிறிது ஜெர்க்காகி, “ஹேய் டெடி உனக்கு எதுக்கு என் அண்ணன் நம்பர், அவனுக்கு தெரிஞ்சா என்ன மொத்திருவான்.” என்று உளரி வைத்தாள்.
கோபமான ஸ்ரீ, ”ஹேய் கேர்ள், எதுக்கு உங்க அண்ணன் மொத்தும், ஏன் ஏன் ஏன் ?” என்று கேள்வியை அடுக்கினாள். இது இவளுக்கே புது செய்தி.
என்ன சொல்லுவது என்றே தெரியாத தேனு, வேறு வழியே இல்லை என்று, “அண்ணனுக்குக்கு…”
“உங்க நோன்னனுக்கு…” என்று காரல் அடித்தாள் ஸ்ரீ.
“அண்ணனுக்கு கேர்ள்ஸ் கிட்ட அதுடா நம்பர் வெளிய குடுக்க கூடாதுனு சொல்லும்.”
“என்கிட்ட கூடவா. நான் என்ன வெளி ஆளா. குடு கேர்ள்.”
“உனக்கு எதுக்கு எங்க அண்ணன் நம்பர் புதுசா.”
“ஹேய் நான் எதுக்கு வேணா கேப்பேன். அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது. நீ அனுபுற அவ்ளோ தான்.” என்று வைத்து விட்டாள் காண்டான ஸ்ரீ.
அதன் பிறகு வேலை அவளை இழுத்து கொண்டது. இரவு ஹாஸ்டல் வந்த பிறகு ஸ்ரீக்கு மிகவும் களைப்பாக இருந்தாள். இரவு உணவு முடித்து அறை தோழிகளுடன் அரட்டை அடித்து, தேனுவின் கல்யாண புகைப்படங்களை காட்டிக்கொண்டிருந்தாள். அவர்கள் இருவர் தான், அதனால் படுத்து பார்த்து கொண்டிருந்தவர்கள் அப்டியே தூங்கி போயினர்.
அவர்களை திரும்பி பார்த்தவள் அவர்கள் தூங்குவதை கண்டு, இவள் தனியாக போட்டோஸ் பார்துக்கொண்டிருந்தாள். அப்போது அந்த இரண்டு கண்கள் இவளயும் இவள் தந்தையையும் ரசித்து கொண்டிருந்த புகைப்படம் இவள் கண்ணில் பட்டது. ஸ்ரீக்கு தோன்றியது எல்லாம் ’ஏன் இவன் இப்படி பாக்குறான்.’
அப்போது தான் காலை தேனுவிடம் வாசுவின் நம்பர் கேட்டது நியாபகம் வந்தது. அவசரமாக தேனுவின் வாட்சப்பை பார்த்தவள் ஒரு ஒரு மணி நேர ஆடியோ ஃபைல் அனுப்பி, அதன் பிறகு வாசுவின் நம்பரை அனுப்பி இருந்தாள்.
அந்த ஆடியோ ஃபைலை அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்டவள் சிரித்து விட்டாள். தேனு ஸ்ரீ இங்கு வந்தது முதல் இன்று வரை நடந்ததை ஒப்பித்திருந்தாள். ‘நீ மாறவே இல்ல பேத்தக்குட்டி’  என்று மெசேஜ் செய்து விட்டு. மணி என்ன என்று சற்றும் யோசிக்காமல் வாசுவின் எண்ணுக்கு அழைத்திருந்தாள்.
அங்கு ஊரில் அவன் தோப்பின் ஓரத்தில் வெறும் ஒற்றை அறை கொண்ட வீட்டில் கயிற்று கட்டிலில் நன்று தூங்கி கொண்டிருந்தவன், இந்த தீடிர் அழைப்பை கண்கள் திறக்காமல் ஏற்றான்.
ஸ்ரீ, “ஹலோ வாசு மாமாவா பேசறது” என்று கேட்டாள்.
வாசு, “ஆமா உன் வாசு மாமா தான் பேசுறேன்.” குரல் தூக்கத்தில் கூட கொஞ்சி ஒலித்தது.
ஸ்ரீக்கு ஒன்றும் புரியவில்லை, மொபைலை காதிலிருந்து கையில் எடுத்து எண் சரிதானா என்று பார்த்தவள். மறுபிடியும் காதில் வைத்து, “ஹலோ வாசு மாமா” என்றாள் மெதுவாக .
வாசு, ”ஆமா உன் மாமா தான். இந்த ஃபோன் கால்க்கு தான காத்துட்டு இருந்தேன்.  இந்த லவ், கல்யாணம் எதுவும் வேணும், நம்பலாம் ஸ்ட்ரைடா லிவிங் டுகெதர் ஸ்டார்ட் பண்ணலாம். மாமன் ரெடியா இருக்கேன். நீ எப்போ வர சொல்லு, நா வந்து கூப்பிட்டுகிறேன். இப்போ மாமன் தூங்குறேன். குட் நைட். உம்மாஆஆ‌” என்று வைத்திருந்தான்.
கொச்சினில் வாயை ஆஆஆ வென்று உறைந்திருந்தாள் ஸ்ரீ.

Advertisement