Advertisement

                           நெஞ்சம் நிறையுதே 4 
காலை வேளையில் இனிய பேச்சுக்களுடன் கீழ் சமையல் அறையில் கார்த்தியுடன் நின்றிருந்தாள் தேனு.
நேற்று இரவு அவன் அறைக்கு செல்லவும், அவன் அமைதியாக கட்டிலில் அமர்ந்து இருந்தான். இவள் உள்ளே வரும் அரவம் கேட்டவன் அவள் முகத்தை தான் பார்த்திருந்தான். அவள் இவன் அருகில் வந்தது தான் தெரியும் பிறகு எப்படி அவன் மடியில் இவள் இருந்தாள் என்று இவளுக்கு தெரியவில்லை.
கார்த்தி தேனு தன் கைக்குள் தான் இருக்கிறாள், அதுவும் உண்மையாக இருக்கிறாள் என்பதை உறுதி படித்திக்கொள்ள வேண்டி அவளை அனைத்து பிடித்திருந்தான். அந்த அணைப்பு அவளுக்கு சொல்லியதெல்லாம் அவன் தவிப்பை தான். எத்தனை நாள் அவன் இவள் இப்படி இவன் மனைவியாய் வரவேண்டும் என்று தவமிருந்தான். காதல் தவம் இருந்தான் திருமணம் வரம் வேண்டி. 
கார்த்தி இந்த இரண்டு ஆண்டுகளை தான் இங்கு திருச்சியில் வேலை. அதற்கு முன்பே வேற மாவட்டங்கள் தான். அவன் படித்து முடித்து பரீட்சை எழுதி வேலையில் அமர ஒர்ராண்டாகி விட்டது. சுந்தரம் தான் அவன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். உறவினர் யாராவது “ஏன் தம்பி இந்த வேலை இப்போ இல்லைனா வேற வேலை போயிட்டு அப்றோம் இத பாக்கலாம்ல” என்று சொன்ன போது கூட அவர் தான் சொல்லிவிட்டார் எதுவாயினம் அவன் பார்த்து கொள்வான். இப்போதும் வரை அதே நம்பிக்கை தான்.
பிறகு வேலை கிடைத்து அவன் பணியில் அமர்ந்த போது அவருக்கு மனதுக்குள் ஒரு ஆசுவாசம், ஏன்னென்றால் அவர்கள் குடும்பத்தில் படித்து வேலையில் அமரும் முதல் ஆள் அவன். 
இதே நம்பிக்கை தான் கார்த்திக்கு மிக அதிக பொருப்புணர்ச்சி குடுத்தது. அதனால் அவன் செய்யும் சின்ன சின்ன செயல்களில் கூட கவனமாக இருப்பான். 
கார்த்தியின் கவனதத்தை அவள் அறியாமல் களவாடியது தேனு. கார்த்தியும் வாசுவும் பத்தாவது படிக்கும் வரை தான் இங்கு இருந்தானர் பிறகு எல்லாம் திருச்சியில் இருக்கும் ஸ்கூல் என்று வீட்டிலிருந்த நேரம் அப்போது குறைவு. 
தேனுவை சிறு வயதில் பார்த்தது தான், பெரியதாக அவளுடன் விளையாடியதெல்லாம் இல்லை. எப்போதும் தேனுவும் ஸ்ரீயும் தான் கூட்டு. 
இங்கு வேலை மாற்றல் வந்த நேரம் தான் கார்த்தி வீட்டிற்க்கு வந்தது. வந்த புதிதில் ஒரு முறை சிவசு தாத்தவை பார்க்க அவர் தோட்டத்திற்க்கு சென்றான். தாத்தாவுடன் அளவளாவி கொண்டிருந்த தேனு எந்த நேரத்தில் கார்த்தியின் மனதில் நுழைந்தாள் என்று தெரியவில்லை. 
முதலில் இது அவள் மேல் கொண்ட நேசம் தானா என்று அவனுக்கு அவனே அதை முதலில் உறுதி செய்துகொண்டான். முதலில் தேனுவிடம் அவன் காதலை சொல்லும் முன் அவன் சொன்னது வாசுவிடம் தான். எந்த நேரத்திலும் நண்பனின் தங்கையை காதலித்தான் என்ற சொல் வந்துவிட கூடாது என்று மிகவும் கவனம் எடுதத்தான்.
வாசு சம்மதம் சொல்லி வீட்டில் பேசுவதாக சொன்னாலும், கார்த்தி சொல்லி விட்டான் எதுவும் வற்புறுத்தி நடக்க கூடாது, தேனுவின் விருப்பம் தெரிந்த பிறகு தான் எதுவுமே செய்ய வேண்டும். ஏன்னென்றால் அவள் வேற யாரையாவது காதலித்து தன்னால் கெட்டு விடக்கூடாது என்று எண்ணினான். 
வாசுவிற்க்கு இப்படி நேசிக்கும் ஒருவனுக்கு தங்கையை கொடுக்க வேண்டும் என்று உறுதியே பிறந்தது. தங்கயின் விருப்பம் கேட்டது, பிறகு அதை வீட்டிலும் கார்த்திக்கும் சொன்னது எல்லாம் வாசு தான்.
வாசு அவன் வீட்டில் பேச கார்த்தி இவன் வீட்டில் பேச என எல்லாம் இனிதே முடிந்துவிட்டது. 
எப்படியோ எல்லாம் முடிந்து இன்று இவள் இவன் கையின் அனைப்பில் அமர்ந்திருக்கிறாள் என்றால் அவனால் எளிதில் நம்பிட முடியவில்லை. அவளுக்கு இப்போதும் ஆச்சர்யம் தான், இவனுக்கு எப்போது தன்னை இவ்வளவு பிடித்தது என்ற எண்ணம் தான். 
பேசினர் நிலவு மேகத்தின் மீது தூங்கும் வரை பேசினர். அந்த இரவு இவர்களின் மனங்கள் பேசின இரவாகி போனது. 
அந்த இனிமையான காலையில் கிளியின் ஒலியாய் வந்து விழுந்த மெசேஜய் பார்த்து புருவங்கள் நெறித்தன தேனுவிற்க்கு. என்ன டா இது அண்ணன் நம்பர் இவள் கேட்கிறாள் ஒன்றும் புரியவில்லை. பிறகு கார்த்தியுடனான நேரங்களில் இதை மறந்தே போனாள்.
கொச்சின்னில் ஷங்கர் ஸ்ரீயை அவள் ஹாஸ்டலில் இறக்கிவிட்டு அவன் தங்கி இருக்கும் வீட்டிற்க்கு சென்று விட்டான். ஹாஸ்டல் அறைக்கு வந்த ஸ்ரீயை அங்கு இருக்கும் தோழிகள் பிடித்து கொண்டனர். கல்யாண வீட்டின் கதைகள் எல்லாம் பேசிக்கொண்டே ஆஃபிஸ்க்கு கிளம்பினாள்.
ஸ்ரீயின் ஆஃபிஸ்க்கு சிறிது முன்னே ஒரு சின்ன பார்க் இருக்கும், அது தான் ஸ்ரீ, அபிதா, ஷங்கர் எல்லாருக்கும் மீட்டிங் ஸ்பாட். ஆஃபிஸ்ஸில் பேசிக்கொண்டாலும் எல்லாரும் ஒரே நேரம் பேசுவது மிகக் குறைவு, அதான் இந்த ஏற்பாடு.
காலை 10 மணி அலுவல் நேரத்திற்க்கு முன் 9 மணிக்கே பார்க்கில் அபிதாவுடன் ஐஸ் கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்தாள் ஸ்ரீ. திருமண மறுவீட்டு பலகாரம் எல்லாம் எடுத்து வந்திருந்தாள் அபிக்கும் சங்குக்கும்.
“ராஜமாதா என்ன உங்க அரும தம்பி இன்னும் காணோம்.”
“அவன் என்ன சாதாரண ஆள உன்னையே இன்னைக்கு காலைலே இழுத்துட்டு வந்திருக்கான எவ்ளோ டயெடா இருப்பான். அதான் தூங்கிருபான். வந்துடுவான்.”
“என்ன லந்தா. தூங்கு மூஞ்சிக்கு சப்போர்ட்டா ?”
“நூறு ஆயிசு வந்துடான் பாரு என் தம்பி தங்க கம்பி.” தூரத்தில் ஷங்கர் சிரித்த முகத்துடன் இவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தான்.
உட்கார்ந்து இருந்த இடத்தில் இருந்து குதித்து இறங்கினாள் ஸ்ரீ “ சங்கு ஸ்டாச்சு” அவனை பார்த்து கத்தினாள் நெருங்கி இருந்தவன் அப்படியே சிலையாக நின்றான். 
இவள் மீண்டும் மேடையில் ஏறி அமர்ந்தாள். 
“இங்க பாரு சங்கு, உனக்கு பிடிச்ச அதிரசம் தனியா எடுத்துட்டு வந்திருக்கிறேன். உனக்கு அது வேணும்ன அப்டியே ஸ்லோஓஓஓ மோஷன்ல ஆக்ட்ரஸ் ஸ்ரீதேவி மாதிரி ஓடி வா அப்டியே கன்னதுல கையே வச்சு சிரிச்சா இந்த அதிரசம்.”
அபி ரோஷத்துடன், ”டேய் தம்பி நமக்கு அப்டி ஒன்னும் வேணாம் டா. நீ வா டா.”
அபி சொன்னதை காதிலே வாங்காது அப்படியா பதினாறு வயது ஸ்ரீதேவி போல் ஸ்லோஓஓஓ மோஷனில் ஓடி வந்தான். வந்தவன் அந்த படத்தில் அவர் சிரிப்பதை  போலே சிரித்தான். ஒருவர் மேல் ஒருவர் விழுந்து சிரித்தனர் ஸ்ரீயும் அபியும்.
அருகில் வந்தவன் ஸ்ரீயின் பக்கத்தில் இருந்த அதிரசம் முழுவதையும் கையில் எடுத்து அவன் பேக்கில் வைத்துக்கொண்டான். அவள் கையில் வைத்திருந்த இஸ் கிரீம்மை புடுங்கி வைத்து கொண்டான்.
அதில் கோபமடைந்த ஸ்ரீ அதனை பிடுங்க முயற்சி செய்தாள். அவளை எளிதாக தடுத்து விட்டான்.
“ இப்போ நீ என்ன பண்ற திருவிளையாடல் படத்துல பீச்ல ஸ்டைல நடந்து வர ஆக்டர் சிவாஜி மாதிரி, அதோ அங்க இருந்து நடந்து வர, போ மா போ.” என்று அவளுக்கு பன் குடுதான்.
அபிதா ஸ்ரீயை பார்த்து, “தொப்பி தொப்பி” என்று சிரித்து கொண்டிருந்தார். 
“போடா ஃப்ராட் பையா” என்று அவனை திட்டி கொண்டே அவன் சொன்னதை செய்தாள்.
“டெடி பெர்ஃபார்மன்ஸ் சரியா வரல இன்னும் ஒரு வாட்டி பண்ணு. நீ செஞ்சேனா I wil get you a family pack.” என்று டீல் பேசினான்.
எல்லாம் முடிந்து அபி, ஸ்ரீ, ஷங்கர் மூவரும் ஒன்றாக பேங்க் கிளம்பினர். கிளம்பும் போது ஷங்கர் ஸ்ரீயை போலவே நடந்து காட்டா, அதை பார்த்து ஸ்ரீ அவனை துரத்தி அடிக்க பார்க்க, ராஜமாத அபி அவர்களை சமாதானம் செய்ய, இறுதியில் மாலை உறுதியாக ஃபேமிலி பேக் வாங்கி தருவதாக சொன்னவுடன் தான் ஷங்கரை விட்டாள் ஸ்ரீ. இவ்வாறாக ஆஃபிஸ் போய் சேர்ந்தனர் மூவரும்.
இங்கே கார்த்தியும் தேனுவும் மறுவீட்டிர்க்கு சென்றிருந்தனர். 
தேனுவின் வீடு அந்த காலா வீடு தான், முன்னே நல்ல விஸ்திரமான இடம். அங்கே தான் பந்தல் போட்டிருந்தனர். வீட்டின் வெளிய இரண்டு பக்கமும் திண்ணைகள், ஜன்னல் வைத்து இருஉள்ளே நுழைந்தால் அங்கேயும் இரண்டு பக்கமும் திண்ணைகள் 
சிவசு தாத்தா, சுந்தரி ஆச்சி, கோதண்டம், சீதாலக்ஷ்மி அனைவரும் கார்த்தியையும் தேனுவையும் வரவேற்று விருந்து தயாரித்து கொண்டிருந்தனர். நண்பனை தேடினான் கார்த்தி.
அப்போது தான் சுந்தரி ஆச்சி சொன்னார், “வாசு பின்னாடி படுத்ருகான்யா.” 
நேற்று செய்த திருமண வேலையில் அடித்த போட்டபடி தூங்கிக்கொண்டிருந்தான் வாசு. இவனை எப்படி எழுப்புவது என்று யோசித்த கார்த்தி வீட்டிர்க்குள் சுற்றி கொண்டிருந்த இரண்டு கோழி குஞ்சுகளில் ஒன்றை தூக்கி வந்து வாசுவின் மீது விட்டான். அது அவனை மெல்லமாக கொத்தி கொண்டிருந்தது. 
கண்களை மெல்ல திறந்தவன் அந்த சிறிய உருவத்தை கீழே இறக்கி விட்டான். கண்களை நன்றாக திறந்தவன் அருகில் கார்த்தி இருபத்தை பார்த்து எழுந்து நின்றவன் கலைந்திருந்த தலைமுடியை சரி செய்தவன் மெல்ல அவன் அருகில் சென்றான்.
இவன் என்ன செய்கிறான் என்று யூகிப்பதற்குள் கார்த்தியை கட்டி அனைத்து கன்னத்தில் அழுந்த முத்தமிட்டிருந்தான்.
“ச்சீ ச்சீ டேய் நாயே என்ன டா பண்ற என்ன” என்று சொல்லிக்கொண்டே பின்னே தப்பித்து நகர்ந்தான் கார்த்தி.
“பின்ன இப்டி வந்த என்ன காலைல எழுபினா இப்டி தான் பண்ணுவேன்”
“எழுப்புனது ஒரு குத்தமா டா. மறுவீட்டிர்க்கு வந்துருக்கேன் ஒழுங்கா மச்சனா வந்து என்ன வெல்கம் பண்றத விட்டுட்டு இப்டி தூங்குற”

Advertisement