Advertisement

                         நெஞ்சம் நிறையுதே 3
பசுமையான நெற்வயலுக்கு ஆரம்பதில் இருந்தது அந்த வீடு. அளவான வீடு தான், ஆனால் தூய்மையாக பராமரித்திருந்தனர். புதிதாக வெள்ளை அடித்திருந்தனர். வாழை தோரணம், மாவிலைத் தோரணம், வெளிவாயில் பூ அலங்காரம் எல்லாம் கட்டி, பந்தல் போட்டு மணமக்களை வரவேற்பிற்கு தயாராய் இருந்தது. 
மாப்பிள்ளை வீட்டு நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் பந்தல் அருகே இருக்கை போட்டு அமர்திருந்தனர். மணமக்கள் வந்ததும் ஆரத்தி எடுக்க காத்திருந்தார் கார்த்தியின் அத்தை மகேஸ்வரி. 
அந்த மெட்டாலிக் க்ரே நிற கார் வீட்டின் வாயிலில் வந்து நின்றது. காரின் இடதுபக்கத்திலிருந்து வலப்பக்கம் வரை வண்ண வண்ண ரோஜா மலர்களால் அலங்காரம் செய்து முடிவில் இரண்டு தங்க நிற மெட்டல் ஹார்டின் ஒன்றோடு ஒன்று கோர்த்து தொங்க விடப்பட்டு பிங்க் ரிப்பனால் சிறிய அளவில் அலங்காரம் செய்திருந்தனர்.  எல்லா அலங்காரமும் காட்சில்லா கூட்டம் செய்திருந்தது. வெளியில் கொடுத்து செய்திருக்கலாம் ஆனால் தங்கள் நண்பனுக்காக அவர்கள் செய்ய வேண்டும் என்று விருப்பப்பட்டு செய்திருந்தனர். 
மணமக்கள் காரில் இருந்து இறங்கியவுடன் மகேஸ்வரி அத்தை சந்தோஷமான சிரிப்புடன் வந்து ஆரத்தி எடுத்தார். அவ்வளவு நிறைவு அவர் மனதில், இருவரும் அவர் கண்முன்னே வளர்ந்த பிள்ளைகள். 
மணமக்கள் வீட்டின் உள்ளே நுழைந்ததும் பின்னாடியே வந்து விட்டனர் காட்சில்லா கூட்டம். வீட்டில் சாமிக்கு முன்பு விளக்கேற்றி பால் பழம் தர ஹாலில் மணமக்களை அமர்த்தியிருந்தனர்.
சிவகாமி பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்தார். மணமக்களுக்கு பால், பழம் எடுத்து வைப்பது, வந்தவர்களுக்கு இனிப்பு, காஃபி எல்லாம் எடுத்து வைப்பது என்று சமையல் அறையில் இருந்தார். மகேஸ்வரி அத்தை தேனுவின் பயனத்தால் நலுங்கி இருந்த அவள் தலை அலங்காரத்தை சரி செய்துகொண்டிருந்தார். அப்போது தேனுவின் லிப்ஸ்டிக் கொஞ்சம் கசிந்திருக்க அவளுக்கு ஒத்தி எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது சத்யா, “ஆண்ட்டி என்ன அவளுக்கு ஊட்டிட்டு இருக்கிங்க.”
அதற்கு மகேஸ்வரி, ”நா எங்கமா ஊட்றேன். இப்போ பால் பழம் வந்ததும் ஊட்டிவிடு வாங்க பாரு” என்று சொல்லி முடிதிருக்கவில்லை அந்த அறை முழுவதும் சிரிப்பு தான்.
ராகவ், “பன் வாங்குனியா பன் வாங்குனியா” என்று சத்யவிடம் கொட்டு வாங்கிக்கொண்டிருந்தான். 
கார்த்தி, ராகவ், சத்யா மூவரும் ஒரே கல்லூரி. 
சந்தியா ராகவ் சிங்கப்பூரிலிருந்து வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. சத்யா திருமணமாகி சென்னையில் வசிக்கிறாள். 
அகாஷ் சந்தியாவின் உற்ற தோழன் இப்போது இவர்களுடன் ஐக்கியமாகி விட்டான்.
அஜய், விமல் இருவரும் கார்த்தி, வாசுவின் பள்ளி நண்பர்கள். வாசு இருவரை விட ஒருவருட சீனியர். அதனால் இவர்களை நன்றாக தெரியும்.  
கார்த்தி இவர்களின் வாழ்கையின்‌ முக்கிய தருணங்களில் உடன் நின்றவன்.
சாங்கியம் எல்லாம் முடிந்து சுற்றமும் அவரவர் வீடு சேர்ந்து, இப்போது தான் எல்லாரும் ஆர அமர உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். கார்த்தி வீட்டை பின் பகுதியிலும் மாடியிலும் புதுப்பித்திருந்தான். அதை காட்ட நண்பர்களுடன் வீட்டிற்குள் சுற்றிக்கொண்டிருந்தான்.
முன்பக்கம் அந்த காலத்து வீடு. உள்ளே சின்ன ஹால், அதை ஒட்டி ஒரு படுக்கை அறை, சிறிய பூஜை அறை, சமையல் அறை என இருந்தது. வீட்டின் பின்புறம் நன்றாக வீடெடுத்திருந்தான் கார்த்தி. எல்லாம் வாசுவின் பிளான் தான். தற்போது உள்ள மாடலில் அங்கே இரண்டு விசாலமான படுக்கை அறை, மேலே எல்லா இடமும் சேர்த்து மூன்று அறை, ஒரு பால்கனி, ஒரு சிறிய சமையல் அறை என நன்றாக வடிவமைத்திருந்தான். வீட்டின் பின்னே வீட்டுத்தோட்டம் என பார்க்க நன்றாக இருந்தது. 
ராகவ் “என்ன கார்த்தி எல்லாம் மச்சான் பிளான் தானா ?” 
“ஆமா டா. பணம் மட்டும் தான் குடுத்தேன். எல்லாம் அவன் பார்துக்கிட்டான்.”
“கத்துகிட்ட வித்தையில பாதிய இங்க காட்டிட்டான் போல.”
“ஹா…ஹா..ஆமா டா.”
இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே வாசு வந்துவிட்டான். 
“வாங்க வாங்க என்ன செதுக்கனதெல்லாம் சரியா இருக்கானு பார்க்க வந்தயா” ராகவ்
சிரித்து கொண்டே வாசு, “ஆமா டா. கட்டுன அப்போ கூட சரியா நின்னு பாக்க முடில. இப்போ தான் நல்ல ஃபர்னிஷ் பண்ணி பாக்குறேன். “
“நின்னு பாக்க முடிலைனா என்ன இப்போ. இந்தா உக்காந்து பாரு, படுத்து பாரு, பிறண்டு பாரு, உருண்டு பாரு.” என்று பாவனையோடு சொன்னான் ராகவ்.
“டேய் பிளீஸ் டா. மொக்க போடாத டா மச்சான். முடியல. நீ போட்ட மொக்கைல சந்தியாக்கு காதுவலியே வந்துடுசாம். வீட்லருந்து பாட்டி அவங்களுக்கு எண்ணை குடுத்திருக்காங்க.” 
இவர்கள் மூவரும் பால்கனியில் இருந்து பேசிக்கொண்டிருந்தனர். சரியாக சந்தியா அங்கு வந்தாள். 
“அண்ணா பாட்டி கிட்ட எண்ணை கேட்டேனே அவங்க குடுத்து விட்டங்களா?”
கார்த்தி சிரிப்பை அடக்கிக் கொண்டு வெளிய பார்ப்பது போல் திரும்பிக்கொண்டான்.
மெலிதாக வந்த சிரிப்புடன் வாசு, “ஆமாம் மா. கீழ என் கார்ல இருக்கு. ஊருக்கு போரப்ப எடுத்துக்கோ.”
சரி என்று சந்தியா கிளம்பி விட்டாள். சந்தியா கேட்டது ஏதோ இலைகள் எல்லாம் சேர்த்து தயாரிகப்பட்ட தலைக்கு தடவும் எண்ணை. அவள் சென்றதும் அதிர்ந்து நின்றுதான் ராகவ். அவன் மனதில் ஓடியதெல்லாம் ‘நம்ப அவ்வ்வளோளோ மொக்கையாயா போட்றோம்’. அவன் மைண்ட் வாய்ஸை கேட்ச் செய்து ஆமாம் என்று கார்த்தியும் வாசுவும் தலையை ஆட்டிக்கொண்டிருந்தனர். 
“ராகவ், பாட்டி உன்னோட வாய்க்கும் ஒரு ஹெர்பல் மெடிசின் குடுத்திருக்காங்க. இத சப்பிட்டேனு வையேன் அப்படி ஒரு எஃபெக்ட் இருக்கும் டா. நீ என்ன பேசுனாலும் யாருக்கும் கேக்காதுடா.”
வாசு சொன்னதும் போதும் கார்த்தி ராகவின் கையை பின்பக்கமாக கட்டி பிடித்திருந்தான். 
வாசு அவன் கொண்டு வந்திருந்த பாட்டிலை திறந்தான். 
“டேய் ஒரு படதுல ஆக்ட்ரஸ் ஸ்ரீவித்யாக்கு இப்டி தான் டா குடுப்பாங்க. அப்போ அவங்க பிரக்னன்ட்டா இருப்பாங்க டா. ஆனால் வில்லன்ஸ் மனசாட்சியே இல்லாம இப்டி தான் டா குடுப்பாங்க. டேய் விடுங்க டா என்ன.” மெலிதாக அலறினான் ராகவ்.
ராகவை விடவில்லை வாசு அவன் வாயை பிடித்து கதற கதற கொண்டுவந்திருந்த ஹெர்பல் மெடிசினை வாயில் ஒரு ஸ்பூன் குடுத்தான். கசக்கும் என்று முகத்தை சுளிக்க போனவன் இனிப்பாக இருக்கவும் நன்றாக சப்பினான். 
“என்ன மச்சான் இது?”
“Its pure honey da”
“டேய் இது தான் ஹெர்பல் மெடிசன்னா. சொல்லவே இல்ல. பரவால குடு நல்ல இருக்கு.”
“இது உனக்கு தான் டா.”
“Thanks மச்சான். ஆனா ஏன் எனக்கு மட்டும் ஸ்பெஷல் ?”
“நீ தான் பிரக்னன்ட்டா இருக்கல்ல. அதுக்கு தான் டா.”
அதிர்ந்து விட்டான் ராகவ், “என்ன டா சொல்றிங்க.”
“டேய் நீ என்ன சொன்ன ஆக்ட்ரஸ் ஸ்ரீவித்யாக்கு இப்டி தான் குடுப்பாங்க. அப்போ அந்த மூவீல அவங்க பிரக்னன்ட்டா இருப்பாங்கனு சொன்னல. இப்போ இங்க வில்லன்ஸ் நாங்க தான். இப்போ மெடிசின் சாப்பிடாது நீ. சோ ரிவர்ஸ் தியரி படி நீ தானா டா பிரக்னன்ட்டா இருக்கனும்.”
குதூகலமாகி விட்டான் கார்த்தி, நேற்று ராகவ் இவனை படுத்திய பாடு என்ன, இப்போ ராகவ் படும் பாடு என்ன. அதனால், ” வாழ்துக்கள் மச்சான்” என்று ராகவை கட்டிப்பிடித்து கொண்டான்.
இவர்கள் இப்படி கட்டி பிடிக்கவும் எதோ சந்தோஷமான விஷயம் என்று அஜய் அங்கே ஆஜராகி விட்டனர். 
“டேய் என்ன டா எதாவது குட் நியூஸா ? “அஜய் கேட்டான்.
“ஆமா மச்சான் நம்ப ராகவ் பிரக்னன்ட்டாம்”
“மச்சான் அப்போ எனக்கு ட்ரீட் வேணும்.” விஷயம் என்னவென்றே தெரியாமல் கேட்டான் ட்ரீட்க்கென்றே பிறந்து அஜய்.
கடுப்பாகிப் போன ராகவ் அனைவரையும் பார்த்து இறுதியில் வாசுவையும் பார்த்து, “போங்கடா வெண்ணைகளா, உன் ரிவர்ஸ் தியரியில் தீயை வைக்க” என்று விட்டு கீழே இறங்கி விட்டான்.
சிரிப்பு சத்தம் மேல் மாடியை நிறைத்தது. 
மாலை உணவு வரை இருந்து விட்டு நண்பர்கள் எல்லாரும் கிளம்பி விட்டனர். 
கார்த்தி தான் கேட்டன் அதற்குள் ஏன் கிளம்புகிறார்கள் என்று, அதற்கு ராகவ், ”ரொம்ப பொங்காத, ஊருக்கு கிளம்பரது சத்யா, அகாஷ், அஜய், விமல் மட்டும் தான். நானும் சந்தியாவும் ஸ்ரீரங்கம் அண்ட் இன்னும் கொஞ்சம் டூரிஸ்டு ஸ்பாட்லாம் போயிட்டு ஒருவாரம் களிச்சு தான் கிளம்புறோம். சென்னைக்கு போற முன்னாடி இங்க வந்துட்டு உனக்கு ஏதாவது டிங்கரிங் வொர்க் இருக்கனு பார்த்துட்டு தான் போவோம்.”
“நல்லா செய்றீங்க டா” கையெடுத்து கும்பிட்டான் கார்த்தி.
கிளம்பு போது வாசு அனைவருக்கும் ஒரு நான்கு கிலோ மாங்காய்கள் ஆளாக்கு ஒரு பார்சல் என்று குடுத்தான். அதுவும் ராகவிற்கு குடுக்கும் போது தனியாக ஒன்று கையில் குடுக்க, எதற்கு என்ற ரீதியில் ராகவ் வாசுவை பார்க்க அவன் கண்ணடித்து ”புளிப்பு சாப்பிடணும் போல இருக்கும், அதனால கையில தனியா வச்சிக்கோ” என்று ராகவின் முறைப்பை வாங்கித் தான் அவனை வழி அனுபினான். ஒரு வழியாக ஆனைவரும் கிளம்பி விட்டனர்.  சூராவளிக்குள் சிக்கி மீண்ட உணர்வு கார்த்திக்கு. 
ஸ்ரீ மாதம் ஒருமுறை வீட்டிற்கு வரும்போது எப்போதுமே கொச்சினிலிருந்து இருந்து ட்ரைனில் திருச்சிக்கு வந்து விடுவாள். ஆனால் திருமணத்திற்கு வார விடுமுறையுடன் வெள்ளி மற்றும் திங்கள் சேர்த்து அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்ததால் திருமண நாள் அன்று இரவே திருச்சியில் இருந்து கொச்சினிற்கு நேரடி விமானதிற்கு பதிவு செய்திருந்தாள். சிவகாமி கூட திட்டினார் ஒரு இரண்டு நாட்கள் சேர்த்து விடுமுறை எடுக்கும்மாறு, ஆனால் அவளுக்கு கிடைக்கவில்லை.  
அதனால் சுந்தரம், மற்றும் ஸ்ரீயை அழைத்து கொண்டு அவன் காரில் திருச்சி ஏர்போர்ட் சென்றிருந்தான் வாசுதேவன். இரவு 10.30 தாண்டி தான் ஃப்ளைட் இவளுக்கு. அதற்கு எட்டு மணிக்கே வந்திருந்தனர். காலை  மணிக்கு கொச்சின் சென்று விடுவாள். அங்கே ஷங்கர் இவளை அழைத்து கொள்வான். சுந்தரதிற்கு ஷங்கரை நன்றாக தெரியும், கடந்த இரண்டு வருடங்களாக பார்கிறார். ஸ்ரீயை பார்த்துக்கொள்ள கார்த்திக்கு பதில் அவன் அங்கு இருப்பதாய் ஒரு நம்பிக்கை இவருக்கு. ஸ்ரீபத்மா அபிதாவுடன் வீடியோ காலில் பாப் கார்ன் பொரித்துக்கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் சுந்தரத்தோடு பேசிக்கொண்டிருந்து விட்டு அனைவருக்கும் காஃபி வாங்கி வர சென்றான். சரியாக ஸ்ரீ அபிதாவுடன் பேசி முடித்து தந்தை அருகில் வந்து உட்கார்ந்தாள். 
“ஆத்தா பார்த்து கவனமா இருக்கனும். ஃப்ளைட் போயி இறங்கரப்போ தூங்கிடாத கண்ணு.”
அவரை முறைத்து கொண்டே ஸ்ரீ, “ப்பா நான் இறங்கரப்போ தூங்கானாலும் முகத்துல தண்ணி தெளிச்சு எழுப்பி விட்டுடுவாங்க.”
அவர் சிரித்து கொண்டே, ”அதில்ல கண்ணு நீ தான் தண்ணி தெளிச்சாளும் தொடச்சிட்டு தூங்கிடுவியே”
“அப்பாஆஆஆ இது உச்ச கட்ட அவமானம்” எல்லா விரல்களையும் உள்ளங்கைக்குள் அடக்கி நெற்றியில் வைத்து சொன்னாள். அவள் அப்பா சிரித்து கொண்டிருந்தார்.
இதை இரண்டு கண்கள் சொல்லா முடியா உணர்வோடு ரசித்து கொண்டிருந்தன. 
ஏர்போர்டில் சும்மா உட்காரமுடியாமல் சுந்தரத்தை பிடித்து அப்பா அப்படி பாருங்க, இப்படி பாருங்க என்று அவள் காமெராவில் சுட்டு கொண்டிருந்தாள். மிகச்சரியாக அந்த தருணத்தில் அந்த இரண்டு கண்கள் காட்டிய பாவனைகள் அவள் அறியாமல் அந்த கண்கள் அவள் எடுத்த புகைப்படதில் விழுந்தது.
இரவு 11.30 க்கு ஃப்ளைடில் அமர்ந்த்ட்டுவிட்டாள். வாசுவும் சுந்தரமும் ஊருக்கு கிளம்பி விட்டனர்.
ஃப்ளைடில் அமர்ந்ததும் ப்ரி வெட்டிங் போட்டோ ஷூட்டில் எடுத்த ஒரு போட்டோ, கண்ணில் கூலெர்சுடன் கையில் இருக்கும் ஒரு சின்ன பாத்திரத்தை கார்த்தி தள்ளி நின்று கொண்டு இருக்கும் திசையில் அடிக்க, அவன் தப்பிக்கும் விதமாக பின்னே வளையே என்று இருந்த புகைப்படத்தை கார்த்திக்கு அனுப்பி “Get ready for the adventure” என்று மெசேஜ் அனுப்பிவிட்டு, ஃப்ளைடில் குடுக்கும் உணவுடன் ஐக்கியமாகி விட்டாள்.
 
ஸ்ரீ முதல் முறை விமானத்தில் செல்கிறாள். அதனால் சிறிது தூங்கிய பின்னர். மூன்று மணிக்கே எழுந்து விட்டாள். பக்கத்தில் இருக்கையில் இருந்த யாரோ ஒரு பாட்டியும் தூங்கி இருந்தார். அவள் மொபைலில் சில பல போஸ்களை சுட்டு முடித்து போர் அடிப்பதாய் இருந்ததால் அவள் லாபில் இருந்த கல்யாண போட்டோஸ்களை நோன்டிக்கொண்டிருந்தாள். காமெராவிலிருந்து சில போட்டோஸ்களை லாபில் மாற்றினாள்.
நன்றாக இருந்த போட்டோஸ்களாக எடுத்து பார்துக்கொண்டிருந்தாள். முகம் முழுக்க புன்னகையுடன் எல்லாம் பார்துக்கொண்டிருந்த சமயம். 
ஏதோ ஒரு போட்டோ, பின்னே சோளத்தோப்பில் குருவிகளும் கிளிகளும் ஆங்காங்கே சோளம் சாப்பிட்டு கொண்டிருக்க, டார்க் சாண்டல் நிற பேன்ட் அணிந்து மேல வெளிர் நீல நிற ஷர்ட் அணிந்து, பாக்கெடில் கைகளை விட்டு ஏதோ பாதி ப்ரொஃபஷனல் லுகில் இருந்தவனின் முகத்தை பார்த்தால், உடைக்கும் மீசைக்கும் சம்பந்தமே இல்லை. தடையில் வழிந்த மீசை அப்படியே காது வரை சென்று ஏதோ ஓரிடதில் காணாமல் போக, பற்கள் மெலிதாக வெளியே தெரியே தலையை மிக லேசாக வலது புறம் சாய்த்து ஒரு தன்னம்பிக்கை கூடியே வசீகர சிரிப்பு, முன்னுச்சி முடி காற்றில் ஆட, வயலில் நிற்பவனுக்கு எதிர்கென்றே தெரியாமல் ஷூவுடன் பெருமிதமாய் கரும்பின் நிறத்தில் அவன், சிரிக்கும் கண்கள் கொண்டு சுந்தரனாய் நின்றிருந்தான் வாசுதேவன். 
ஒரு பக்க போஸ் தான் அது. இத்தனை வருடங்களில் அருகில் இருந்தும் அவ்வப்போது பார்த்தும் தோன்றாத ஒரு மாற்றம் அவள் கண்கள் கண்டு கொண்டது. 
அந்த மாற்றம், என்ன அது என்று யோசித்தும் சரியாக தெரியவில்லை, அந்த போட்டோவை பார்தவளுக்கு கண்கள் புருவங்களுடன் மேலேற தோன்றியதெல்லாம் “ What a change over ? “
போன மாதம் வந்தபொழுது கூட அவனை பெரிதாக கவனிக்கவில்லை. ஏன் போன நொடி கூட சரியாக கவனிக்கவில்லை, இவ்வளவு நேரம் இங்கு தானே இவளுடன் தானே இருந்தான், அப்போது கூட பெரிதாக பார்க்கவில்லை.
நிச்சயமாக அவன் வெளிதோற்ற மாற்றத்திற்காக மட்டும் அவனை இப்போது நோக்கவில்லை. 
அவன் கனவை அடைந்து விட்டனா. சாதாரணமாக அவன் சொல்லால் மட்டும் சொல்லவில்லை செயலால் நிருபித்துவிட்டானா. உண்மையாகவே அவளுக்கு அவனை பாராட்ட வேண்டும் போல் இருந்தது. 
சரியாக நான்கு மணி போல் ஃப்ளைட் தரை இறங்கியது. அவள் வெளி வந்ததும் முதல் வேலையாக  வாசுவிற்கு மெசேஜ் செய்ய எண்ணினாள். ஆனால் அவன் எண் இவளிடம் இல்லை. ப்ச்…இல்லையே…என்ன செய்வது. சரி தேனுவிடம் கேட்போம் என்று அவளுக்கு மெசேஜ் செய்துவிட்டு, ஷங்கர் வருகைக்காக காத்திருந்தாள்.
பின்னாடி இருந்து ஏதோ கை இவள் முடியை பிடித்து கொஞ்சமாக இழுத்தன.
கோபமாக திரும்பியவள் அங்கு ஷங்கர் நின்றிருபாதை கண்டு இன்னும் கோபமாகி போனாள், “ஏன் டா இப்டி பண்ண?” என்று முடியை சரி செய்து கொண்டிருந்தாள்.
“பின்ன வந்ததும் பராக்கு பாராதுட்டே வந்துட்டு, மொபைல் குள்ள தலையா விட்டா இப்டி தான் பண்ணுவாங்க.” சட்டம் பேசினான் அவன். 
“நீ தான் டா லேட்”
“வாயிலே போடுவேன். அவனவன் மூணு மணிக்கு அலார்ம் வச்சு எழுந்து உண்ண கூப்பிட வந்தா லேட்னு சொல்லுவியா டெடி நீ.”
உடனே தன்னை குனித்து பார்த்தாள், ஒரு பிங்க் லாங் டாப், புளூ ஜீனில் வந்திருந்தாள். 
நல்ல புஷ்டியாக இருப்பாள் தான். ஆனால் பப்லியான தோற்றம். அவள் போட்டிருந்த டாப்பின் நிறம் அவளின் முகத்தில் பிரதிபலிக்க அவள் கன்னகளும் அதே நிறத்தில் காட்சியளித்தன. முன்நெற்றியில் பிரில்ஸ் விழ கீழே ஏதோ ஆராய்ந்து கொண்டிருந்தாள். பிறகு சுற்றி யாரும் பார்க்கிறாரா என்று பார்த்துவிட்டு, வேகமாக கன்னத்தில் போட்டு கொண்டாள்.
பிறகு ஷங்கரை பார்த்து, “டேய் சங்கு, நெஜமா நான் வெயிட் போட்டேனா டா” அப்பாவியாக கேட்டாள் ஸ்ரீ.
மெலியே புன்னகையுடன் ஷங்கர் ஆமாம் என்று தலையாட்டினான், “நீ எதுக்கு கன்னதுல போட்ட?”
“ சங்கு, ஃபோர் டேஸ் நல்லா கல்யாண விருந்து. அதனால டயட் ஃபாலோ பண்ணலா டா. அதான் சாமி கிட்ட சாரி சொன்னேன் டா.”  விம் பார் போட்டு விளக்கினாள் ஸ்ரீ.
முகத்தில் புன்னகையுடன் ஷங்கர், “டெடி நீ பூரி மசால் பார்த்தா அதுக்குள்ளவே உட்காந்திருவ, சோ டயட் விட்ரு. உன்கூட இருக்கவங்க எல்லாரும் உன்ன மாதிரியே ஆயிடனும்னு சாமி கிட்ட அப்ளிகேஷன் போடு. அப்போ நீ டயட் இருக்க வேண்டியே அவசியமே இல்ல.” என்று சொல்லிவிட்டு அவள் கொண்டு வந்த டிரொலியுடன் கொஞ்சம் முன்னே அவசரகமா எட்டி நடந்தான்.
அவன் சொன்னது புரியாமல் சுருங்கிய புருவங்களுடன் அவனை பார்த்து இருந்தவளிடம் கொஞ்சம் தள்ளி சென்று திரும்பி,
“கும்கி என்ன புடிடா பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு கிட்ட தட்ட ட்ரோலியுடன் ஓடினது போல் விரைந்தான்.
மூக்கு விடைக்க ‘சிக்குன மவனே சட்னி தான் நீ’ என்ற மைண்ட் வாய்ஸ்ஸோடு அவனை தாக்க விரைந்தாள் கும்கி. 
‘   

Advertisement