Advertisement

    அங்கே உடற் பயிற்சி செய்துக்கொண்டிருந்த ஒரு பெண் இவளின் முகத்தை பார்த்து, இவள் அருகில் வந்தார். அது நல்ல விஸ்திரமான மாடி, இத்தனைக்கும் ஸ்ரீ தொலைவில் நின்று தான் பேசினாள், அவள் பேச்சு கூட இவர்களுக்கு கேட்டு இருக்காது. ஆனால் இவளின் முக பாவனையை பார்த்து தானாக வந்து அருகில் அமர்ந்தார்.
“ என்னங்க காலையிலேயே சண்டையா ? “ என ஸ்ரீயிடம் சிரித்துக்கொண்டே கண்ணடித்து கேட்க, 
ஸ்ரீயும் சிறு புன்னகையுடன்  ‘ ஆமாம் ‘ என மெல்ல அவரை பார்த்து தலையசைத்தாள். 
இருவரின் பெயரை தவிர இருவருக்கும் ஒருவரை பற்றி ஒருவருக்கு அதிகம் தெரியாது இருவரும் வேறு ஃபுளோர். 
ஆனால் தினமும் பார்த்தால் ஏதாவது பொதுவாக பேசிக்கொள்வர் ஒரு கண்ணுக்கு புலப்படா நெருக்கம் இருக்கும். அது வொர்கிங் உமென்ஸ் ஹாஸ்டல். அதனால் பெரிதாக நேரமும் இருக்காது.‌
“ சிங்கிள்லா இருக்க வரைக்கும் ஹாப்பியா இருக்கலாம்ங்க. இப்படி ரிலேஷன்ஷிப்ல இருந்தா எல்லாம் வரத்தான் செய்யும். “
அதற்கும் ஸ்ரீயிடம் சிறிய புன்னகை. 
“ ரெண்டு பேருக்கும் ரொம்ப முட்டுச்சுனா பரவால, நல்லா முட்டிக்குங்க, ஒன்னும் தப்பு இல்லை, ஆனா திரும்ப பேட்ச் அப் ஆகிடுங்க. பேச முடியாத ப்ராப்ளம்னு ஒன்னும் இல்ல. “
   சிலரிடம் சில பொழுதுகள், ஒரு புரியாத நெருக்கம் அறியாமல் உருவாகிவிடும். பெரிதாக காரணம் எல்லாம் இருக்காது, ஆனால் அவர்களிடம் சில விஷயங்கள் சொல்லலாம் என்ற ஒரு புரிதல் வந்திருக்கும். அப்படி ஒரு புரிதல் நிலையில் இருவரும். 
     இரு பெண்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் காலை நேர இளம் காற்றை சுவாசித்தபடி எதிரே இருந்த வானத்தை ரசித்து பார்த்து இருவருக்கும் சற்று இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர்.   
அவர் பேசியதற்கு ஸ்ரீயிடம் எந்த எதிர் வினையும் இல்லாததால், ஸ்ரீயை பார்த்தவர், 
“ உங்கள பார்க்க பொறைமையா இருக்குங்க. “
புரியாமல் ஸ்ரீ அவரை பார்க்க, 
 “ ரிலேஷன்ஷிப்ல இருந்தப்போ உங்கள மாதிரி நானும் என் ஹஸ்பண்ட்டும் சண்ட போடல,  கல்யாணம் முன்ன எல்லாம் ஸ்மூத்தவே இருந்துச்சு.
நிறையா சிரிப்பு, நிறையா டைம் ஸ்பெண்ட் பன்னோம் ..எல்லாம் நிறையா தான். 
ரெண்டு வீட்லையும் கல்யாணம் பண்ண போறோம்னு சொன்னப்போ பெரிசா அப்போஸ் பண்ணல, ‌ஓகே சொல்லிட்டாங்க. “
இப்போது ஸ்ரீ அவரை நன்றாக பார்த்தமர்ந்தாள்.
அவர் தொடர்ந்தார், 
“ அந்த டைம் நாங்க தான் லக்கியஸ்ட் கப்புள்னு பீல் பன்னோம். அப்படி இருந்த்துச்சு அந்த டைம். ஒரு ஸ்பெஷல் மொமென்ட் அது.
கல்யாணம் ஆச்சு. Wow…அப்படி தான் சொல்லணும் அந்த கல்யாணம் லைஃப் பத்தி…
எல்லாம் நல்லா போச்சு. ஒரு டூ இயர்ஸ்‌ அப்படி ஒரு ஹாப்பியான லைஃப். 
பட்…
எப்போ எங்க மாறிச்சுனு தெரில…எல்லாம் மாறிடுச்சு..நிறையா டிஃபரன்ஸ் ஆப் ஒபினியன்ஸ் வர ஆரம்பிச்சது.‌
ஒரு நாள்…. நாம்ப பிரியணும் சொன்னாரு. 
எனக்கு அதிர்ச்சி தான். பட் எனக்கு ரொம்ப கோபம். 
எனக்கு சண்ட போடணும்னு தோனல, சரி நீ தான பிரியணும்னு சொன்ன பிரிஞ்ச்சிடலாம்னு நானும் டிசைட் பண்ணிட்டேன். அவர் கிட்ட ரீஸன் கூட கேக்கல. 
இப்போ லீகலா பிரிஞ்சி அவர் வேற ஸ்டேட்ல இருக்காரு,  நான் இங்க இருக்கேன். ”
இருவருக்கும் நடுவே ஒரு மெல்லிய மௌனம். 
“ ரீத்து ஏன் இப்போ கூட நீங்க அவர் கூட பேசிபாக்கலாமே. “ ஸ்ரீ கேட்க, 
“ ட்ரை பன்னேன் பட் ரிப்ளை இல்ல “ என்று ரீத்து சொல்ல, 
ஸ்ரீக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை அமைதியாக ரீத்துவைப் பார்த்து அமர்ந்திருந்தாள். 
ஒரு நிமிட முழு மௌனம் அங்கே நிலவியது.
“ அதனால தான் ஸ்ரீ சொல்றேன், உங்கள பார்த்தா பொறாமையா இருக்கு. உங்கள மாதிரி நானும் சண்ட போட்டிருந்தேன்னா, இன்னைக்கு இப்படி தனியா இருந்திருக்க மாட்டேன். “
மறுமுறையும் இருவரிடமும் ஒரு சிறு மௌனம்.
ரீத்துவே பேச்சை மாற்றினார், “ சோ சொல்லுங்க ஸ்ரீ, உங்க லவ் ஸ்டோரி, இது எத்தனவது வருஷம் . “ 
ஸ்ரீ, “ அட போங்க நீங்க… வருஷம் எல்லாம் இல்ல,
எனக்கு தனியா நாலு மாசம், அவருக்கு தனியா ஒரு மாசம், இப்போ எங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து ரெண்டு நாள். அவ்ளோ தான். “
“ ஹா…ஹா…என்னங்க இப்படி சொல்றிங்க. “
“ ஆமா ரீத்து, ரொம்ப சின்ன ஸ்டோரி தான். “ என ஸ்ரீ அவர்களின் கதையை சுருங்க சொன்னாள்.
“ ரெண்டு வருஷமோ இல்ல ரெண்டு நாளு , எல்லாம் பேசுனா சரியா போயிடும் ஸ்ரீ “
“ எங்கங்க சரியா போகுது. 
பேச ஆரம்பிச்ச ஸ்டார்ட்டிங்ல இருந்து சண்ட தான் போடுறோம். அதுவும் ஃபர்ஸ்ட்டாவது பரவால. இப்போ பேசி ரெண்டு நாள் கூட ஆகல அதுக்குள்ள ரெண்டு பேரும் கட்டி போறண்டு சண்ட போடாத குற தான். 
ஊருக்குள்ள மத்தவங்க கிட்ட எல்லாம் அவரு சாஃப்ட்டானா ஆளு தான். என்கிட்ட மட்டும் தான் டெர்ரர் ஃபேஸ் காட்டுராரு. “ என ஸ்ரீ நொந்து சொல்ல, 
“ ஹா…ஹா…அட விடுங்க ஸ்ரீ, இது எல்லாம் நடக்கறது தான. “
“ அது இல்லங்க…என் டியூட்டி ஓவர் டைம்மா போய்கிட்டு இருக்கு. “
“ விடுங்க விடுங்க…உங்க கல்யாணம் அப்புறம் டியூட்டிய அவருக்கு மாத்தி விட்டுடலாம். “
“ அப்படி தாங்க பன்னணும். “ என ஸ்ரீயும் கண்களை உருட்டி சொல்ல, அங்கு சின்ன சிரிப்பலை. 
“ சரிங்க…நான் வொர்க் அவுட் முடிக்கணும். நான் கிளம்புறேன். “ என சொல்லி ரீத்து விடை பெற,  ஸ்ரீ சரி என சொல்லி அங்கயே அமர்ந்திருந்தாள்.
ஐந்து மணி என மொபைல் காமிக்க, ஸ்ரீ யோசனையுடன் அமர்ந்திருந்தாள். யோசிக்க யோசிக்க ஸ்ரீக்கு மெதுவாய் எல்லாம் விளங்கியது. 
நேற்று இவள் விளையாட்டை காலையில்சண்டையிட, பின் இவள் வேலை சூழ்நிலையால் அவனிடம் பேச முடியவில்லை. அதனால் வாசு ஸ்ரீயை மிகவும் தேடி இருக்கிறான். அந்த ஏக்கம் கோபமாய் முகமூடி போட்டு பேச்சில் இறங்கி இருக்கிறது. 
இவள் என்ன காரணம் சொன்னாலும்  ‘ நீ என்கிட்ட பேசல ‘ என சின்ன பையன் போல் சண்டை பிடிக்கிறான். 
இவளும் சின்ன பிள்ளை போல் ‘ நீ பேசலான ஆச்சியிடம் சொல்லுவேன் ‘ என மிரட்டி பார்க்கிறாள். அவனும் மலை ஏறிவிடுகிறான். 
சிறு பிள்ளைகள் போல் இருவருக்கும் பேச்சு. வெளியே சொன்னால் ஊரே சிரிக்கும், இவர்கள் பேசின பேச்சுக்கு. இவர்கள் விடலை பிள்ளைகள் கூட இல்லை, ஆனால் பேச்செல்லாம் மெச்சூட்டாக இல்லை. அத்தனையும் ஒரு விளையாட்டு, வீம்பு என சென்று கொண்டிருக்கிறது. 
எல்லாம் நினைத்து பார்த்தவளுக்கு, இப்படி தான் இருவரும் பேசி இருக்கிறோமா என தோன்ற சிரிப்பு தான் வந்தது. உண்மையில் அவனை விட இவள் தான் வாசுவை நன்றாக பேசி இருக்கிறாள் என புரிய, ‘ அச்சோ மாமஸ் பாவம் ‘ என தோன்ற  அவனிடம் பேசலாம் என வாசுவின் எண்ணிற்கு அழைக்க, அவன் இன்னும் அந்த தோட்ட வீட்டிற்கு வரவில்லை.  இவள் இன்னும் ஒரு அரை மணி நேர இடைவெளியில் அவனை மூன்று முறை அழைக்க, அவன் பார்த்தாலும் எடுக்க வில்லை, வயலில் பிசியாகி விட்டான்.
ரீத்து சொன்னது தான் நியாபகம் வந்தது, அவன் பேசாதே என சொன்னால் இவளும் பேசாமல் இருக்க வேண்டுமா. அப்படியெல்லாம் விட கூடாது என நினைத்தவள் ‘ சரி இவன சாஃப்ட்டா டீல் பண்ணலாம்னா ஓவரா போறான். இவனுக்கு நம்ப ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் தான் கொடுக்கணும். ‘ என முடிவு செய்தவள் அவனை அழைப்பதை விட்டுவிட்டாள். 
அதன் பிறகு மணி ஏழு அயிற்று எட்டு ஆயிற்று ஒரு ஃபோன் கால் கூட அவளிடம் இருந்து வரவில்லை. 
மணி 8.30, வாசுவிற்கு மனம் முரண்டியது. 
‘ பேசாதடி சொன்னா என்கூட பேசமாட்டாளா…
அவ மட்டும் நேத்து எத்தன தடவ கட் பண்ணா. நான் அவள விட கம்மியா தான இன்னைக்கு கட் பண்ணிருக்கேன். 
அதனால என்ன மறுபிடியும் ஃபோன் செஞ்சு பேசமாட்டாளாமா…
அவளுக்கு உடம்பு பூரா கொழுப்பு கூடிப்போச்சு . நம்பள டென்ஷன் பண்ணியே கொல்றா. ஊருக்கு வரட்டும் இருக்கு அந்த குட்டி யானைக்கு.  ‘ என அவளை வருத்தபடி தோப்பில் ஒரு ஓரமாய் அமர்ந்திருக்க, மணியும் கிருபாவும் ஏதோ கையில் பையுடன் வந்தனர்.
“ என்னடா யாராவது நியூ ஆர்டர் கொடுத்தங்களா. “
இருவரும் ஒரு சேர இல்லை என தலையாட்ட, 
“ பின்ன என்னடா விஷயம்.”
 “ஒருத்தர் உங்களுக்காக ஓடை பக்கத்துல வைட் பண்ணிட்டு இருக்காங்க. உங்கள பார்க்கணும்னு சொன்னாங்க. “
“ யாருடா. “
“ தெரில ண்ணா. கேட்டா உங்களுக்கு ரொம்ப தெரிஞ்சவங்கனு சொல்றாங்க.“
“ பேரு ஏதாவது சொன்னாரா டா. “
“இல்ல ண்ணா”
வாசு அவன் நடந்தே ஓடைக்கு செல்ல, அவன் முன் கிருபாவும் மணியும் வேறு வழியில் இவன் முன் அங்கு சென்று சேர்ந்திருந்தனர் .
“ என்னங்க டா எனக்கு முன்ன வந்து நீக்கிறிங்க. எங்க டா அவரு. “
கிருபா அவன் சட்டை பாக்கெட்டில் இருந்து மொபைலை எடுத்து வாசுவின் முன் நீட்ட . 
அதை வாங்கி வாசு பார்க்க, 
அதில் லைவ் வீடியோ காலில் வாசுவை முறைத்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீபத்மா. 
அதை பார்த்தவன் அவளை விட இவன் முறைக்க, அவன் என்ன என்று பாற்பதற்குள், கிருபா பையில் கொண்டு வந்து இருந்த கயிற்றை கொண்டு வாசுவின் கால்கள் இரண்டையும் சேர்த்துக் கட்ட,
“ டேய் என்னடா பண்றிங்க. “
வாசுவின் கையில் இருந்த மொபைலை சடார் என புடுங்கிய மணி, வாசு சுதரிக்கும் முன் வாசுவின் இருக்கைகளையும் சேர்த்து கட்டினான்.
“ டேய் ஒழுங்க எல்லாம் கழட்டுங்க டா லூசு பசங்களா. டேய் ஸ்ரீ பேச்ச கேக்காதிங்க டா. 
டேய் என்ன…..டா…பண்றிங்க….
டேய்…“
என கதற கதற வாசுவை ஒருவன் தலை பக்கம் பிடிக்க, இன்னொருவன் காலை பிடிக்க, அப்படியே அவனை தூக்கி கொண்டு ஓடையின் நடுவில் நிறுத்திருனர். 
மணி வாசுவை நன்றாக நிறுத்த, கிருபா தள்ளி நின்று மொபைலில் ஸ்ரீ வாசுவை பார்க்கும் படி ஒரு மரத்தில் வைத்தான், பின் வாசுவின் அருகில் சென்று அவன் கால்களை தூக்கி பிடித்து நின்றான்.
மணி வாசுவின் அடியில் இருந்து தோள் பகுதியை தூக்க, கிருபா கால்களை பிடிக்க,  ‌ 
“ அண்ணி ஸ்டார்ட் பண்ணலாமா…” என கிருபா கேட்டான்.
“ டேய்… ஸ்ரீ பேச்ச கேட்டு ஏதாவது செஞ்சிங்க உங்கள தொலச்சிடுவேன் டா…” என திமிறிக்கொண்டு மிரட்டினான். 
“ அண்ணி…”
“ ஸ்டார்ட் பண்ணு சொல்லுங்க வெப்பன் சப்ளயர். “ என ஸ்ரீ ஆணையிட,
“ அண்ணா…சோ சாரிண்ணா..” என மணி முதலில் வாசுவிடம் சிரிப்புடன் சொல்ல,
வாசு, “ டேய்…வேணாம் டா….
உப்ப்ப்…ப்ப்ப்…
டேய்…
உப்ப்…டே….ய்….ய்…உப்ப்….”
என ஒரு நான்கு முறை வாசுவை முழுதாக ஓடையில் முங்கி முங்கி எடுத்தனர்.    
“ டேய் இதுக்கெல்லாம் உங்களுக்கு நல்லா இருக்கு டா… உங்க நொண்ணி பேச்ச கேட்டு ஆடாதிங்க டா…” 
“ நொண்ணி இல்லண்ணே…எங்க அண்ணி அவங்க. “ என கிருபா சிரித்துக்கொண்டே விளக்க, 
“ டேய் அடங்குங்க டா…” என வாசு கிருபவை பார்த்து சத்தமிட்டான் வாசு.
“ ஓகே வெப்பன் சப்ளயர். உங்க அண்ணாவ ப்ரீயா விட்டுடுங்க. அப்படியே உங்க மொபைலயும் அவர் கிட்ட கொடுத்துடுங்க. கொஞ்சம் பேசணும். “
“ ஓகே அண்ணி. “ என கிருபா அவள் சொல்லியபடி செய்தான், வாசுவின் கட்டை அவிழ்த்து விட்டு, அவனை ஓடையில் தள்ளிவிட்டு, அவனிடம் அடி  வாங்காமல் எப்படியோ தப்பி பிழைத்து உணவகம் நோக்கி சிரித்துக்கொண்டே ஓடிவிட்டனர் . 
வாசு சொட்ட சொட்ட நனைத்த படி வேட்டியை பிழிந்து, கரையில் வந்து அமர்ந்து மொபைலை கையில் எடுத்து, அதில் தெரிந்த அவளின் முகத்தை பார்த்து, 
“ ஏய் ராங்கி… அங்கே உட்காந்தே சைலன்ட்டா எல்லா வேலையும் பாக்குற. 
நீ மட்டும் என் கண்ணு முன்னாடி இப்போ வந்தனு வை அப்படியே உன் தலைமுடிய எலி கரண்டி வச்சிருக்கு இல்ல, அதே மாதிரி பிச்சிடுவேன் உன்ன.
உன் பேச்ச கேட்டு ரெண்டு பேரும் ஆடுறாங்க. இருக்கு அவனுங்களுக்கு.
இந்த ஸ்பை வைக்குற வேல, துவைக்க ஆள் அனுப்புற வேல இதெல்லாம் என்கிட்ட வேணாம். அப்புறம் ரொம்ப ஃபீல் பண்ணுவ. 
அமைதியான புள்ள மாதிரி இத்தன நாளா இருந்துட்டு, இவ்வளவு அட்டூழியும் பண்ணுற நீ.
நீ ஊருக்கு வாடி உனக்கு இருக்கு. நீ என்ன ஊருக்கு வர்றது, அதுக்கு முன்னாடியே உன்ன என்ன செய்யனுமோ, அப்படி செஞ்சுக்கிறேன். “ என இவன் அழுத்தமாக மிரட்டினான்.
இவன் பேசும் வரை அசையாமல் பார்த்தவள், இவன் பேசி முடித்ததும், ஸ்ரீ புருவத்தை அசால்டாக தூக்கி காதை ஒரு விரல்விட்டு சுத்தம் செய்தவள், வாசுவை பார்த்து,
“ டேய்ய்  மாமா…பேசி முடிச்சாச்சா. “
“ ஏய்…என்னது டேய்யா…”
“ அப்படி தான் மாமஸ்… ரியாக்சன குற…ரியாக்சன குற…
ஆமா டா…இனிமே அப்படி தான் டா மாமா…பழக்கிகோ. 
என்ன ரொம்ப சவுண்ட் விடுர…நான் தான் நேத்து வேலையா இருந்தேனு சொன்னேன்ல…அத கூட கவனிக்காம ரொம்ப துள்ளுனா இப்படி தான் பண்ணுவேன். 
சரி பாவமேனு நினச்சு ஃபோன் பண்ணா…எடுக்க முடியாதோ. 
ரொம்ப திட்டுர…இந்த வில்லத்தனம் எல்லாம் என்கிட்ட வச்சுக்காத…
இது ஏதோ ஃபர்ஸ்ட் டைம்ன்றதால சும்மா லைட்டா பனிஷ் பன்னேன் . ஆனா இனிமே இப்படி நடந்துச்சுனு வை….
அதோ பின்னாடி தெரியுதே அந்த மரம்…அதுலயே கட்டி தலை கீழ தொங்க விட்டுடுட்டு போய்ட்டே இருப்பேன். 
நான் எப்போ அமைதினு உன் கிட்ட சொன்னேன். நீயா நினச்சிக்கிட்டா…அதுக்கு நான் பொறுப்பில்ல…”   
அப்படி என்ன கோபம் உனக்கு. 
நேத்து என்ன நடந்துச்சு தெரியுமா…”
என நேற்று அவள் ஆஃபிஸ்ஸில் நடந்ததை சொன்னாள்.
இவனை இப்படி பேசினால் தான் சற்று சண்டை போடவாவது பேசுவான் என நினைத்தே எல்லாம் பேசினாள்.  இவனை நன்றாக முறைத்து,
“ அவ்ளோ நடக்குறதுக்கு நடவுல…நான் உங்க கூட பேச முடியுமா.
நீங்க இத விட எவ்ளோ பார்த்துருப்பிங்க…புரிஞ்சிக்க வேணாம்.
தய்ய தக்கானு குதிக்கிறிங்க. “ என முதலில் பறக்க விட்ட மரியாதையெல்லாம் பின்னே எப்படியோ இழுத்து பிடித்து முடித்தாள். அதன் பிறகு இவனை பாராமல் வேறு புறம் பார்த்தாள்.
ஸ்ரீ நினத்தது போலவே அவளிடம் சண்டை இட தான் பேச ஆரம்பித்தான். ஆனால் அவள் சொன்னதை அனைத்தையும் கேட்டவன், அவள் நிலைமை நன்றாக புரிந்தது. கொஞ்சம் தனிந்திருந்தான். இவனும் இது போல் சவாலான சூழ்நிலைகள் எல்லாம் பார்த்தவன் தான். 
வாசு அவள் முதலில் பேசியதில் காண்டாகி போயிருந்தவன், அவள் பின் சொன்ன காரணங்களை புரிந்து அமைதியாக இவளை பார்த்திருந்தான். 
இவள் எதுவாயினும் செய்யட்டும் அது இவனது பிரச்சனையே இல்லை, இவனால் அவளை  புரிந்து கொள்ள முடியும், ஆனால் மாலை வந்தும் கூட நம்மை அழைக்காமல் போய்விட்டாளே என்ற ஏக்கம் தான். இதே வேறு தினம் என்றால் அவன் இவ்வளவு தேடி இருப்பானா என்றால் நிச்சயமாக இல்லை. நேற்று ஏதோ இவளை முதல் முறையாக தேடியதால் இப்படி ஆகிபோனான் . 
இவள் இன்னும் அந்த விஷயதிற்கே வரவில்லையே என தான் அவளையே பார்திருந்தான். மெதுவாக கொஞ்சம் அசுவாசமாகி இவன் பக்கம் திரும்பியவள், 
“ நேத்து செம டயர்ட் மாமஸ் நானு. ஹாஸ்டலுக்கு வரவே செவன் ஆயிடுச்சு. வந்ததும் தூங்கிட்டேன். காலைல தான் எழுந்தேன். எழுந்ததும் உங்களுக்கு கால் பண்ணா கட் பண்றிங்க.” என இவனை பார்த்து குறை சொன்னாள்.
‘ ஒஹ் தூங்கிட்டாளா. ‘ என புரிந்தவன் இப்போது தான் மலையிறங்கினான். 
” நேத்து எதுக்கு ஃபோன் பண்ண ? ” இப்போது தான் மெதுவாய் வாய் மலர்ந்தான். 
” ஊருல இருந்து கிளம்பு போது வீட்ல நம்ப ஒன்னா வெளியே போயிட்டு வந்ததுக்கு, இனிமே அப்படி போக கூடாதுனு அப்பா சொல்லிட்டாங்க…”
” ஏன்…” இவன் சீரியஸ்ஸாக கேட்க,
சுந்தரம் சொன்ன காரணத்த யெல்லாம் சொன்னவள், இனிமேல் அவனை சில இடங்களை தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது என்பத்தை சோகமாக பதிவு செய்தாள்.
“மாமா சரியா தான் சொல்லிருக்காங்க ஸ்ரீ. அதுல ஒன்னும் தப்பு இல்ல. “
 அவனை பாவமாய் பார்த்தவள், எல்லாம் சொல்லி முடிக்கையில், 
“ உங்க மாமனாரு உங்க மேல ரொம்பபப ரெஸ்பெக்ட் வச்சிருக்காறாம்.
உங்களுக்கு பொண்ணு கொடுக்க ரெடியாம். ” என முடித்தாள்.
அவனால் நம்பவே முடியவில்லை, இத்தனை எளிதாக எல்லாம் கை கூடுகிறதே என உள்ளே இன்பமாக ஒரு அலை பிறக்க, என்ன முயன்றும் அவன் முகம் புன்னகையை தத்தெடுத்தது.  . 
அவனை பார்த்தவள் இவளும் புன்னகைக்க,
” நம்ப தாத்தாவும் பெரிய மாமாவும் வந்து பொண்ணு கேட்டா கொடுப்பாறாம். ” என சந்தோஷமாக சொன்னாள். 
வாசுவின் புன்னகை காணாமல் போனது, சீரியஸ்ஸாகி விட்டான். இவனது தாத்தாவாவது பரவாயில்லை, ஆனால் இவனது அப்பா, இவனை உப்புக் கண்டம் போட்டல்லவா அடுத்து வேலையைப் பார்ப்பார். 
ஸ்ரீக்கு இதெல்லாம் தெரியாததால், அவன் புன்னகையை காணவில்லை என்பதை மட்டும் பார்த்தவள், அவள் அனுமானித்த காரணத்தை வைத்து, இவள் ஃப்ளைட்டில் வரும் போது யோசித்ததையும் சேர்த்து சொன்னாள்.
” மாமஸ் நீங்க ஏன் இப்போ சீரியஸ்ஸா ஆயிடிங்க. 
நீங்க உங்க அதர் கமிட்மென்ட்ஸ் எல்லாம் முடிக்க ஃபைவ் மன்த்ஸ் எடுத்துக்கோங்க. 
ஒன்னும் ப்ராப்ளம் இல்ல.
அப்பா சொன்னத சொன்னேன்ல…உங்க வீட்ல இருந்து கேக்கலைன்‌னா. அப்பா வெளிய பார்க்கணும் சொல்லிட்டாங்க. தேனு வளகாப்பு வரைக்கும் டைம் இருக்கு. நீங்க சொன்னா மாதிரி அதே ஃபைவ் மன்த்ஸ்.
பட் அம்மா கொஞ்சம் அவசர படுர மாதிரி இருக்கு, கொஞ்ச நாள் முன்ன ஏதோ வரன் எல்லாம் வந்ததாம். சில ரீசன்னால அந்த இடம் ஓகே அகல.
மாமஸ் எனக்கு ஒரு சஜ்ஜஷன் இருக்கு…
எங்க வீட்ல இப்போவே அப்பா கிட்ட சொன்னா ஒன்னும் சொல்ல மாட்டாங்க. மே பி சின்னதா ஒரு எங்கேஜ்மெண்ட் மாதிரி பண்ணிடுவாங்கனு நினைக்கிறேன். அப்புறம் கூட பொறுமையா மேரேஜ் பத்தி பேசலாம். அம்மா கூட ஒன்னும் சொல்ல மாட்டாங்க, அவங்களுக்கும் நீங்க பொண்ணு கேட்டு வந்தா ஓகே தான்.
அப்பா கிட்ட மறைக்கிறது கில்டியா இருக்கு மாமஸ். ” என உணர்ந்து சொன்னாள். 
அவள் சொன்னத்தை எல்லாம் பொறுமையாக கேட்டவன், சில நிமிடங்கள் யோசித்திருந்தான்.
” ஸ்ரீ நான் ஒன்னு டிசைட் பண்ணிட்டேன்… ” என முடிக்க, அவன் முடிவை கேட்க ஸ்ரீ ஆவலாக ஆயத்தமானாள்.
 

Advertisement