Advertisement

         வாசு ஐந்து நிமிடமாக மொபைலில் அழைத்தும் ஸ்ரீ எடுக்கவில்லை. சிறிது நேரம் நின்று யோசித்தவன், பிறகு பேசிக்கொள்ளலாம் என முடிவு செய்து அவனுக்காக காத்திருந்த வேலைக்கு சென்று விட்டான்.
கொச்சின்,
“ டேய் சங்கு பிளீஸ் டா “
“ முடியாது.”
“ கொடு டா “ 
“ ராஜமாத இந்த டெடி யாரையோ ஆம்பள நாட்டுக்கட்டனு சேவ் செஞ்சு வச்சிருக்கு. ஹா…ஹா…“    
“ பிளீஸ் டா அண்ணா “
“ டெடி யாரது. ஆளு செம்மயா இருப்பாரோ. ஹா…ஹா… இப்படி பேரு வச்சிருக்க. “ 
“ நா ருத்து கிட்டாயே சொல்லுவேன் டா. “
“ சொல்லிக்கோ…சொல்லிக்கோ…ராஜமாத இந்த விஷயதுக்கு ஒரு என்குயரிய  போடுங்க. இத இப்படிய விட முடியாது. ”
வாசு அழைத்த சமயம், ஸ்ரீ மொபைல் பார்த்து புன்னகைத்து கொண்டிருந்தாள். ஷங்கர், அபிதா இருவரும் வந்ததை பார்க்கவில்லை. இவள் கையில் இருந்து டபார் என மொபைலை பறித்து சங்கு தலைக்கு மேல கீழே போக்கு காட்ட ஆரம்பித்து விட்டான். அவனிடம் தான் கொடுக்கும் படி போராடிக் கொண்டிருக்கிறாள் ஸ்ரீ.
“ ராஜமாத இவன் கிட்ட இருந்து என் செல் வாங்கி தாங்க பிளீஸ். “ 
“ அப்போ நாங்க கேக்குற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லு. “ என அபியும் சேர்ந்து ஸ்ரீயை மிரட்ட, 
“ அப்படி போடுங்க… ராஜமாத சபையை ஆரம்பிக்கலாம். “ என சொல்லிக்கொண்டே ஷங்கர் அபியின் அருகில் ஆவலாக அமர்ந்தான்.  ஸ்ரீ இருவரின்  முன்பும் கையை கட்டி நின்று வேறு புறம் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.
“ பிளீஸ் டெடி வெக்கம் மட்டும் படாத…முடில. “ என நெஞ்சை பிடித்துக்கொண்டான் ஷங்கர்.  
“ டேய் நான் வெக்க படல…இது ஸ்பெஷல் ஃபீலிங்க் டா…” என புன்னகைத்துக் கொண்டே ஸ்ரீ சொன்னாள். 
“ பீலிங்கஸ்ஸஸஸஸாம்….” என அபியும் ஷங்கரும் ஒரே நேரத்தில் ஒருவர் முகத்தை ஒரு பார்த்து உதட்டை இழுத்து சொல்லிக்கொண்டனர்.
“ அப்புபுபுறோம்ம்‌ம்‌ம்…” என ஷங்கர் சொல்ல,
“ அவரு பேரு வாசுதேவன். “
“ ஓஹ்ஹ்ஹ்…..” என இருவரும் ஒரு சேர சொல்ல,
“ ப்ச் இப்படியெல்லாம் செஞ்சிங்கனா…நான் சொல்ல மாட்டேன். “ என ஸ்ரீ முறுக்க,
“ டேய் சங்கு சும்மா இரு. அப்புறோம் நம்ப டெடி ஓடிரும்.” என அபி ஷங்கரை அடக்க, 
அபியும் ஷங்கரும் இவளின் பேச்சை கேட்க ஆர்வமாயினர். 
“ வாசு எங்க ரிலேடிவ் தான். அப்படி சொல்றத விட எங்க ஃபேமிலில ஒருத்தர், அப்படி தான் சொல்லணும். 
உங்களுக்கு ஆல்ரெடி சிவசு தாத்தா, தேனு அவங்க ஃபேமிலி பத்தி அண்ட் எங்க ஃபேமிலி பத்தி சொல்லிருக்கேன்ல. 
தேனுவோட அண்ணானு  சொல்றத விட எங்க சிவசு தாத்தாவோட பேரன்னு சொல்றது தான் கரெக்ட்டா இருக்கும்.  பிகாஸ் என்னை விட அதிகமா அவர் அதிகமா விவசாயத்த தான் லவ் பன்றார். சொந்தமா சின்னதா ஒரு ஹோட்டல் ரன் பண்றார்.
ஃபோர் மன்த்ஸ் பேக் ப்ரபோஸ் பன்னேன். அப்போ ஸ்டார்ட்டிங் அவர் ஒத்துக்கல. அப்புறோம் கொஞ்சம் டீடெயிலா பேசுனேன். புரிஞ்ச்சிக்கிட்டார், பட் இன்னும் அவர் பதில வாயால சொல்லலை. கொஞ்சம் டைம் கேட்டுருக்கார். 
பட் அவரு கூட இருக்க டைம் எல்லாம் என்னால அவர் என் மேல வச்சிருக்க லவ் என்னால நல்லா பீல் பண்ண முடியுது. 
லாஸ்ட் டூ டேஸ் அவர் கூடத்தான் நிறைய நேரம் ஸ்பெண்ட் பண்ணேன். ஸச் அ நைஸ் பெர்சன். எனக்கு ரிலேடிவ் அப்படின்றத தாண்டி ஐ ரியல்லி லைக் ஹிம் அ லாட் . 
அவர நீங்க பார்த்தா, அவர்கூட பேசுனா உங்களுக்கும் ரொம்ப பிடிக்கும். “  என்றவளின் கண்களில் வாசுவின் மீதான நம்பிக்கை, மதிப்பு, பிடித்தம் அனைத்தையும் கடந்த ஒரு நேசம் தெரிந்து.  
இவை அனைத்தையும் ஷங்கர் புன்னையுடன் பார்த்துக்கொண்டிருந்தான். 
ஆனால் அபி யோசையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
இருவரின் முகத்தை பார்த்த்வளுக்கு அபி ஏதோ நினைக்கிறார் என புரிய, 
“ ராஜமாத ஏன் ஏதோ யோசிக்கிறிங்க. “
“ ஸ்ரீ , வாசு உன்னோட ரிலேடிவ். அத தவிர அவர பத்தி உனக்கு என்ன தெரியும். “
“ ராஜமாத இது தான் உங்க கவலையா… 
நாங்க எல்லாம் ஒன்னா தான் வளந்தோம். சின்ன வயசுல நிறையா அவர் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணதில்ல. ரொம்ப குளோஸ் எல்லாம் இல்லை. 
எங்க அண்ணாவும் அவரும் தான் குளோஸ். 
நானும் தேனுவும் தான் குளோஸ். அப்போலாம் பெருசா அவர பத்தி தெரியாது, இப்போ கொஞ்ச மாசமா தான் அவர பத்தி தெரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்கேன். 
எனக்கு தெரிஞ்சு அவர் ரொம்ப நல்ல மாதிரி. இங்க திருச்சில சிவில் இன்ஜினியரிங் முடிச்சிட்டு சென்னைல ஒரு வருஷம் வொர்க் பண்ணிருக்கார்.
தென் சிங்கப்பூர்ல நல்ல ஆப்பர்சியூனிட்டி கிடச்சு அங்க ஒரு ஃபைவ் இயர்ஸ் இருந்துருக்கார். 
சிவசு தாத்தாக்கு கூட அப்போ ஒரு சேலஞ்சிங் டைம் தான் . பட் இவர் தான் அத சரியா ஹாண்டில் பண்ணார். 
ரொம்ப ஃபேமிலியோட அட்டாச்சுட் பெர்சன். வீட்ல எல்லார்த்தையும் ரொம்ப நல்லா பார்த்துப்பாரு. 
இங்க வந்து டூ இயர்ஸ் ஆச்சு.‌  அவருக்கு விவசாயம் மேல ரொம்ப இண்ட்ரெஸ்ட். அவரோட ஹோட்டல்ல கூட பாரம்பரிய மெனு தான் நிறையா. 
இப்போ ஒரு டூ இயர்ஸ்ஸா தான் ஹோட்டல் ரன் பண்ணராரு. அவர் கொஞ்சம் செட்டில் ஆகணும் போல அதான் டைம் கேட்டுருக்கார். ஜஸ்ட் ஒரு ஃபைவ் மன்த்ஸ் தான். 
எங்க வீடு, வாசு வீடுனு தனியா செப்ரேட் பண்ணி சொல்ல முடியாது, நாங்க எல்லாம் ஒரே ஃபேமிலி தான், சோ நிச்சயமா ரெண்டு வீட்லயும் அக்சப்ட் பண்ணுவாங்க.  
தேனு வளக்காப்பு முடிஞ்சு, ரெண்டு வீட்லயும் நாங்க பேசணும்.“
நீளமாக பேசி முடித்தாள் ஸ்ரீ. 
“ அப்புறோம் ஏன் உன் பிரோபோசலுக்கு அவர் ரிப்ளை பண்ணல. அவரு உனக்கு ஓகே சொல்லிட்டு கூட டைம் கேக்கலாம் இல்லயா. ஏன் அவர் ஓகே சொல்லாமா தயங்குராரு. “    
“ அது இல்ல ராஜமாத, அவருக்கு ஏதோ கம்மிட்மெண்ட் இருக்கு போல, அது முடிஞ்சா ஓரளவு ப்ரீ ஆகிடுவாரு. சோ அப்புறம் தான் எல்லாம்னு என்கிட்ட சொன்னாரு. “
அபிதாவுக்கு அவள் காரணம் போதுமானதாக இல்லை. அவருக்கு முழுதாக ஏற்று கொள்ள முடியவில்லை, ஆனால் ஸ்ரீபத்மாவிற்காக புன்னகைத்து வைத்தார்.
“ சரி, எங்க என் ஃப்யூச்சர் மச்சானோட போட்டோ. “ என ஷங்கர் உற்சாமாக கேட்க,
ஸ்ரீ புன்னகையுடன் அவனிடம் வாசுவின் போட்டோவை காட்ட, அபியும் ஷங்கருக்கு முந்திக்கொண்டு பார்த்தார். 
இருவருக்கும் வாசுவை பிடித்திருந்தது. ஒரு நிமிர்வுடன் கூடிய நேர்மை சுமந்திருந்தது அவனது தோற்றம். எல்லாம் பேசிவிட்டு ஆஃபிஸ் கிளம்பிவிட்டனர். 
ஆனால் அபிக்கு வாசுவை பிடித்திருந்தாலும் இன்னும் வாசுவை பற்றி தீர விசாரிக்க வேண்டும் என ஒரு எண்ணம். 
ஸ்ரீ, சின்ன பெண், ஏதோ சொந்தம் என எளிதாக வாசுவை பிடித்திருக்கிறது என நினைத்து விட்டாள், ஆனால் நாம் அப்படி எல்லாம் நினைக்க கூடாது, தீர விசாரிக்க வேண்டும் என ஷங்கரிடம் சொல்லிவிட்டார். ஷங்கரும் சரி என்று விட்டான்.  
ஷங்கர் அவனுக்கு தெரிந்த நண்பனுக்கு நண்பன், அந்த நண்பனுக்கு தெரிந்த நண்பன் என வால் பிடித்து சிங்கப்பூர் வரை விசாரிக்க முதல் அடியை எடுத்து வைக்க ஆரம்பித்து விட்டான்.
அன்று நாள் இவ்வாறு ஆரம்பித்தது, வாசு அதன் பிறகு மதியம் வரை ஸ்ரீக்கு அழைக்கவில்லை. வாசுவிற்கு உண்மையாலுமே அன்று நிறைய வேலை. அவன் சிந்தனையில் ஸ்ரீக்கு இடம் இருந்தாலும் நேரம் இல்லாமல் போய் விட்டது. 
அவனது நேரம் அவனிடமே இல்லை அப்படி ஒரு வேலையை கோதண்டம் செய்து வாசுவின் மனநிலையை செவ்வனே கொதிநிலையை அடைய வைக்க முயன்றிருந்தார். ஆனால் அப்போது கூட அதை நன்றாக கையாண்டிருந்தான். 
ஆனால் அதன் பிறகு நடந்தது ஒன்று தான் அவனுக்கு இத்தனை நாள் இல்லாமல் ஒரு புதிய அனுபவத்தை சந்தித்திருந்தான். கோதண்டதின் மீது அப்படி ஒரு கோபத்தையும் வருத்தையும் தந்திருந்தது. 
எப்போதும் எல்லாவற்றையும் தனித்து நின்று எதிர்கொண்டவன், எதிர்கொள்பவனும் கூட, அப்போதெல்லாம் தானாக மனதை ஆற்றி கொள்வான். 
     ஆனால் இன்று ஒரு பெரிய அடி, ஸ்ரீக்கு முன்னால் என்றால், கார்த்தியையோ அல்லது ராகவையோ ஒரு ஆறுதலுக்காக அழைத்து பேசுவான்.
 அப்படியே இவன் அவர்களிடம் பேசினாலும், எந்த பிரச்சனையும் எடுத்து சொல்லாமல், காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாக தான் பேசுவான். 
இவனுக்கு தான் மட்டும் தனியாக இல்லை, யாரோ ஒரு நண்பன் கூட இருக்கிறான் என ஒரு ஆறுதலாக இருக்கும். 
அப்படி அவர்களும் அந்த சமயம் அகப்படவில்லை என்றால் அவனின் மரத்தடி பிள்ளையார் இவனிடம் சிக்கிக்கொள்வார்.
இப்போதும் பிள்ளையார் இவனிடம் சிக்கிக்கொண்டார். அவர் முன் அமர்ந்து அவரை பாடாய்படுத்தி, எப்படியோ மனதை ஒரு நிலை படுத்தினான். மனம் கொஞ்சம் சமன் பட்டது.
பிறகு மதியம் உணவகம் சென்றவனுக்கு ஸ்ரீயின் நினைவு வரவும் உதட்டில் தானாக ஒரு புன்னகை. வந்து ஒட்டிக்கொண்டது.  
சரி இப்போது ஸ்ரீயின் உணவு நேரமாக இருக்கவேண்டும், ஸ்ரீயை அழைப்போம் என அழைக்க, ஸ்ரீ இவனது அழைப்பை கட் செய்தாள். இவன் திரும்ப அழைக்க மீண்டும் கட் செய்தாள். சரி அவள் ஏதாவது வேலையாக இருப்பாள் என வைத்து விட்டான். 
ஆனால் அன்று மாலையும் இவன் இருமுறை அழைக்க, அவள் கட் செய்ய என நேரம் செல்ல, இவன் புருவம் சுருங்க யோசிக்க ஆரம்பித்து விட்டான். காலையில் ஒன்றுமே இல்லாமல் ஒரு சண்டை, அதற்கு இப்படி செய்கிறாளா என தான் தோன்றியது. 
கொச்சின்,
ஸ்ரீ மதியம் வரை அவன் திரும்ப அழைப்பானா என அவ்வப்போது எதிர்ப்பார்த்த வண்ணம் இருந்தாள். அவளுக்கும் அன்று நிறைய வேலை தான். ஆனால் அதன் நடுவே இவனது அழைப்பை எதிர்பார்த்தாள்.
ஆனால் மத்தியதிலிருந்து ஒரு புது பிரச்சனையை அங்கு அபியும் ஸ்ரீயும் கையாலும் படி ஆயிற்று.  
      யாரோ ஒரு பெண்ணும், அவரது பள்ளிக்கு செல்லும் மகனும் பேங்க்கின் உள்ளே வந்து, அபியிடம் மேனேஜர் என்ற முறையில் சந்தித்து  கலக்கத்தோடு ஒரு கோரிக்கை மனு அளித்தனர். 
அபி, ஸ்ரீயை உள்ளே அழைக்க, இவளும் சென்றாள். 
ஸ்ரீ, “ யெஸ் மேம். “
அபி, “ ஸ்ரீ இன்னைக்கு நீங்க ஏ‌டி‌எம் ரீஃபில் செஞ்சிங்க இல்லையா. 
அது முடிஞ்சு நீங்க ஃபர்ஸ்ட் ட்ரான்ஸ்சாக்சன் வெரிபிகேஷன்காக அங்க இருந்திங்க இல்லையா. “
ஸ்ரீ, “ யெஸ் மேம். “
அபி,  “ அப்போ ஃபர்ஸ்ட் ட்ரான்ஸ்சாக்சன் நடந்தது இந்த பையனோடது.
இவங்க, இதோ இங்க இருக்க அம்மாவுக்கு உடம்பு முடியலனு ஹாஸ்பிடல்ல இருந்திருக்காங்க, சோ அவங்க பையன கேஷ் எடுக்க சொல்லி அனுப்பிருக்காங்க.
அவங்க பையன் நம்ப ஏ‌டி‌எம்க்கு வந்து கேஷ் வித் ட்ரா பண்ண ட்ரை பண்ணிருக்கான். 
ஏ‌டி‌எம் கார்ட் இந்த அம்மாவோடது , இவங்களோட இந்த ஸ்கூல் கோயிங் சன் தான் ஹாண்டில் பண்ணிருக்கான். ஹி இஸ் பிலோ 18 . 
இந்த பையன் எல்லாம் சரியா தான் பண்ணிருக்கான். பட் அமெளண்ட் வரல. பட் கேஷ் ஏ‌டி‌எம்ல வெளிய வர மாதிரி இருந்துட்டு அகைன் உள்ள போயிடுச்சு. அந்த சவுண்ட் இந்த பையன் நல்ல அப்சர்வ் பண்ணிருக்கான். 
ஆனா இவங்களுக்கு கேஷ் எடுத்தாச்சுனு மெசேஜ் வந்துருக்கு.  
இவங்க ஏ‌டி‌எம் கார்ட் வேற பேங்கோடது. நம்ப பேங்கோடது இல்ல. 
ஆனா ரீஃபன்‌ட் மெசேஜ் வர லேட் ஆயிருக்கு .   
அதுக்குள்ள இவங்க அந்த பேங்க் போய் கேட்டுருக்காங்க, அவங்க என்ன நடந்ததுனு கேட்டுருக்காங்க. இவங்களும் நடந்தத சொல்லிருக்காங்க. 
அதுக்கு அந்த பேங்க் என்ன சொல்லிருக்காங்க தெரியுமா. Do you have any guess ? “
என சொல்லி அபிதா ஸ்ரீயை பார்க்க,  
ஸ்ரீக்கு ஒன்றும் யூகிக்க முடியவில்லை.
“ No Mam. “
“ இவங்க அக்கவுண்ட் வச்சிருக்க பிரைவேட் பேங்க் வெரி நியூ ஒன். இப்போ தான் மக்கள் கிட்ட ரீச் போயிட்டு இருக்கு. 
அவங்க என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா. 
இவங்க ஏ‌டி‌எம் கார்ட்ட இவங்க பையன் ஹாண்டில் பன்னது, breach of trust அப்படினு சொல்லிருக்காங்க.
அதனால அந்த மெசேஜ்ல வந்த பணம் கொடுக்க முடியாதுனு சொல்லிருக்காங்க. “ என அபி புருவம் உயர்த்தி சொல்ல, 
ஸ்ரீக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என புரிய ஒரு முழு நிமிடம் ஆனது.
அதாவது அம்மா பெயரில் இருக்கும் ஏ‌டி‌எம் கார்ட் மகன் பயன்படுத்தினான். அதனால் அம்மாவின் ஏ‌டி‌எம் கார்ட் பின் முதற்கொண்டு மற்ற விவரமும் மகனுக்கு தெரிந்து விட்டது. 
அம்மா எடுக்காமல் மகன் எடுத்துவிட்டான், அது தவறு, அது ஏ‌டி‌எம் கார்டின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை உடைப்பு என அந்த வங்கி சொல்லிவிட்டது.
ஸ்ரீக்கு எப்படி இப்படி ஒரு காரணம் சொல்லி இருக்கிறார்கள் என அதிர்ச்சி.
அப்போது பார்த்து வாசுவின் அழைப்பு வர கட் செய்தாள். மீண்டும் அழைப்பு வர கட் செய்தாள். இத்தனை முக்கியமான பேச்சு போய்க்கொண்டிருக்கும் போது அழைத்தவரின் பெயர் கூட பார்க்காமல் கட் செய்தாள். அது அங்கு உள்ள சூழ்நிலைக்கு சரியே.
ஸ்ரீ, “ மேம் இவங்க உடம்ப முடியாம இருந்து, அப்போ இவங்க பையன் ஹாண்டில் பண்ணா, இப்படி சொல்லி இருக்கங்களே மேம். இதுக்கு எதுவும் செய்ய முடியாதா “ என ஸ்ரீ ஆதங்கபட,
அபி, “ இப்படி எந்த பேங்க்காவது சொல்லுமா ஸ்ரீ. 
பிரைவேட்டா இருந்தாலும் சரி நேஷனலைசட் பேங்க், எதுனாலும் இப்படி சொல்லாது, அப்படி சொன்னா கண்டிப்பா அவங்களுக்கு தான் ப்ராப்ளம்.
இது எல்லாம் அபத்தமான ரீஸன்.  
ஆனா இவங்க பேங்க் சொல்லிருக்கு. இவங்க அந்த பேங்க்கு ஆப்போஸிட்டா லீகல் ஆக்ஷன் எடுத்தாங்னா, அந்த பேங்க் மேல கோர்ட் ஆக்ஷன் எடுக்கும்.
நிச்சயமா இது பகல் கொள்ளை தான். 
கண்டிப்பா ஃப்யூச்சர்ல அவங்களுக்கு ப்ராப்ளம் தான் வரும். நம்ப பேங்க் மாதிரி நல்ல பிரைவேட் பேங்க்கும் இருக்கு, 
இந்த மாதிரி தேவை இல்லாத ரீஸன் சொல்லி பணம் அவங்களே வச்சிக்கிற பிரைவேட் பேங்க்கும் இருக்கு.  அதுக்கு தான் பிரைவேட் பேங்க்ஸ்ல அக்கவுண்ட் ஓபன் பண்றப்போவே நல்லா டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் பார்த்துக்கணும்.  
பட் இவங்களுக்கு இப்போ ரொம்ப நேரம் இல்ல. 
சி‌சி‌டி‌வில நீங்களும் நம்ப பேங்க் ஸ்டாஃப் அப்படினு அங்க இருந்திருக்கிங்க.
சோ நீங்க போய் அந்த பேங்க்ல சொன்னா, ஏதாவது இவங்களுக்கு பாசிட்டிவ்வா நடக்கலாம். What you Say ? “
ஸ்ரீ, “ Sure Mam. நான் கண்டிப்பா போய் சொல்றேன். “
ஸ்ரீயும் அரை நாள் விடுப்பு எடுத்து, அவர்களுடன் கிளம்பி அந்த பேங்க் சென்று சி‌சி‌டி‌வி ஃபுட்டேஜ் சமர்பித்து , அவர்களிடம் வாதாடி, பேங்க் ஸ்டாஃப் என்ற முறையில் என் முன் தான் எல்லாம் நடந்தது என கூறி, அந்த பணம் இவர்கள் கைக்கு நாளை வந்துவிடும் என அந்த பேங்க் மேனேஜர் உறுதியிட்டு கடிதம் தந்த பின்னரே அவளால் நகர முடிந்தது.  
அவளது பிரைவேட் பேங்க் இவ்வாறு எல்லாம் இல்லை, இந்தியாவிலே முதல் பத்து இடங்களில் இடம் பிடித்து உள்ளது. சாமானிய மக்களுக்கு நாற்பது ஆண்டுகளாக பல்வேறு சேவைகள் மூலம் உதவி இருக்கிறது. இது எல்லாம் தீர தெரிந்து கொண்டு தான் இதில் சேர்ந்தாள். 
ஸ்ரீபத்மாவிற்கு, அப்படியும் ஒரு வங்கி, இப்படியும் ஒரு வங்கி என்று தான் தோன்றியது. 
எல்லாம் முடிய மாலை ஆறு மணியை தொட்டிருந்தது. இது எல்லாம் அவளுக்கு புது அனுபவம். 
இத்தனை பரபரப்பான வாக்கு வாதங்களுக்கு நடுவே மாலை 5.30 அளவில்  வாசுவின் அழைப்பு வந்திருந்தது. இத்தனை முக்கிய வேலைகள் ஊடே எப்படி எடுப்பாள்.
இருமுறை அழைப்பு வர மறுமுறையும் யாரென பார்க்காமலே கட் செய்திருந்தாள் . 
எல்லாம் முடிந்து ஷங்கர் இவளை ஹாஸ்டலில் விடும் போது மணி ஏழு. அத்துனை களைப்பாக இருந்தாள். மதியம் தானே இது எல்லாம் தொடங்கியது, அவளுக்கு சாப்பிட கூட நேரம் இல்லை. 
“ டெடி நான் வைட் பண்றேன், நீ ரெடி ஆயிட்டு வா, நம்ப ஏதாவது ஹோட்டல் போலாம். “
“ இல்லடா. செம்ம டயார்ட்டா இருக்கு. போனதும் தூங்கிடுவேன் போல. “ களைப்பு மிகுந்து கூறினாள் ஸ்ரீ.
“ அதுக்கு தான் அந்த பேங்க்கு நானும் கூட வரேன்னு சொன்னேன், “ என ஷங்கர் அவன் எண்ணத்தை சொல்ல,   
எரிச்சலாகி போனவள், 
“ டேய் சங்கு, 
நான் ஃப்யூச்சர்ல  நான் வொர்க் பண்ற எல்லா பிளேஸ்லயும் இப்படி ப்ராப்ளம் வந்தா, நீயும் என்கூட வர முடியுமா. 
இப்போவே இதெல்லாம் நான் தனியா ஃபேஸ் பண்ணா தான், பின்னாடி நீ, அபி எல்லாம் வேற ஃபிரன்ச்க்கு ட்ரான்ஸ்பர் ஆனா கூட நான் தனியா எல்லாம் சமாளிக்க முடியும்.
பிரச்சன அப்படின்றப்போ நீ என்கூட நிக்குறன்றத விட,
எந்த பிரச்சனையா இருந்தாலும் நான் தனியா ஃபேஸ் பண்றப்போ, நீ எங்க இருந்தாலும் எனக்காக நீ எப்போவும் இருப்ப அப்படின்ற தாட் தான் டா எனக்கு ரியல் சப்போர்ட்.  “ என இவள் நீளமாய் விளக்க,
‘ முடியல, கண்ண கட்டுது ’ என்பதை போல் ஸ்ரீயை பார்த்தவன் 
“ சரி கிளம்பு கிளம்பு , இந்த பக்ஸ் தொல்ல தாங்க முடில, நாளைக்கு முதல ஸ்ப்ரே அடிக்கணும் ”  
என இவன் அவளை காரின் வெளிய தள்ளி கதவை சாற்றினான்.
‘ போடா லூசு ‘ என ஷங்கரை மனதில் திட்டிக்கொண்டே சென்று, அவள் அறையை அடைந்ததும் சாப்பிட கூட இல்லாமல் உடை மாற்றி படுத்து உறங்க ஆரம்பிக்க, சிறிது நேரம் அவளை தூங்க விட்ட அறை தோழி ஸ்ரீயை இரவு உணவு சாப்பிட்ட அடித்து எழுப்பினாள் . 
அவளை முறைத்துக்கொண்டே குளித்து வந்த ஸ்ரீ டின்னிங்க் ஹால் சென்று சாப்பிட்டு வந்து மீண்டும் உறங்கி போனாள்.
இரவு 11 மணி வரை காத்திருந்த வாசுவிற்கு மனதில் சிறிய ஏமாற்றம். அவன் தோட்ட வீட்டின் ஒற்றை அறையில் விட்டத்தை பார்த்து கயிற்று கட்டிலில் படுத்திருந்தான். 
ஸ்ரீபத்மாவுடன் எப்படி தன் வாழ்க்கை இருக்க போன்கின்றது என தனியே ஒரு யோசனையே வந்திருந்தது. அவளை சிறு வயதில் இருந்து பார்த்து வருகிறான். அப்போதெல்லாம் அவளை பற்றி ஒன்றும் பெரிதாக தெரியாது. தேனுவுடன் மிகவும் ஒட்டுதல், குறும்பு என தெரியும். 
ஆனால் கடந்த இரண்டு நாட்களில் இவனிடம் இத்தனை குறும்பு, விளையாட்டு, கலாட்டா செய்வாள் என இவனே எதிர்பார்க்கவில்லை. 
இது நாள் வரை அவன் ஒரு மெச்சூட் மனநிலையில் வாழ்ந்துவிட்டான், ஆனால் இப்போது இவனை பிச்சு, பிறாண்டி, கோபம் கொள்ள செய்து, சிரிக்க வைத்து, அவளிடம் சரிக்கு சரியாய் நின்று சண்டை இட வைத்து சென்று விட்டாள்.  
அதுவும் காலையில் நடந்த ஒன்றும் இல்லா பேச்சுக்கு இத்தனை கோபம் கொள்வாளா என இவன் அதையே யோசிதிருந்தான். அதுவும் முதல் பேச்சே இப்படி முட்டலில் நிற்கிறதே என இவன் சிந்தனை முழுவது ஸ்ரீபத்மா ஆக்கிரமிக்க, ஒரு கட்டத்தில் அவளுக்கு மட்டும் தான் கோபமா, ஏன் எனக்கு எல்லாம் இல்லையா. 
‘ நாளைக்கு பேசட்டும், நல்லா இருக்கு அவளுக்கு, ராங்கி புடிச்சவ ‘ என அவள் இன்னும் பேசவில்லையே என்ற ஏக்கத்தை கோபம் என்ற திரையிட்டு எப்படியோ இரவு இரண்டு மணி அளவில் தூங்கி போனான் வாசு.
சில மணி நேரம் சென்றிருக்கும், கொச்சின்னில் ஸ்ரீக்கு விழிப்பு வந்து விட்டது. நல்ல தூக்கம் தூங்கி எழுந்திருந்தாள். மணி மூன்றை தாண்டி சில நிமிடங்கள். உடன் இருக்கும் இரு தோழிகளும் வெவ்வேறு கட்டிலில் படுத்து உறங்க, இவள் கொட்ட கொட்ட விழித்து அமர்ந்திருந்தாள்.   
மொபைல் எடுத்து நேரம் பார்த்தாள். என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்து விட்டோம் என தோன்ற, சரி என்ன செய்வது, அப்படியே ஏதாவது பாடல் கேக்கலாம் என ஏதோ ஒரு பாடலை ஹெட் போனில் போட, அப்படியே கேட்டுக்கொண்டு படுத்தாள். அதன் பின் ஒரு மணி நேரம் பாட்டில் செல்ல, நேரம் பார்த்தாள் மணி நான்கரை என காட்ட, வாசுவின் நியாபகம், அவன் சீக்கிரம் எழுந்து விடுவான் என இவளுக்கு தெரியும், விடியலிலே அவனிடம் பேசிட வேண்டும் என நினைக்க ஒரு புன்னகை அரும்பியது. 
அதன் பின் சுந்தரம் சொன்னது நியாபகம் வர, வாசுவிடம் இவள் நினைத்ததை பேசிவிட வேண்டும் என யோசித்து படுத்திருந்தாள். அப்படியே மொபைலில் வாசுவின் எண்ணை பார்க்க, நேற்று நான்கு முறை அவன் இவளை அழைத்திருப்பதை இப்போது தான் கவனித்தாள். 
எப்படி கவனிக்காமல் விட்டோம் என புன்னகையுடன் எழுந்தமர்ந்தாள். அதன் பிறகு நேரம் எல்லாம் பார்க்காமல் வாசுவிற்கு அழைத்தாள். அவன் நல்ல உறகத்தில் இருந்தான். 
இவள் திரும்ப அழைக்க, எழுந்தவன் யார் என பார்க்க, இவள் என தெரிந்ததும் உள்ளதில் ஒரு உவகை. சரி பேசலாம் என நினைக்க, மனம் முரண்டியது, நேற்று இவனிடம் கோபித்துக் கொண்டு அவள் பேசாமல் இருந்து விட்டாள் என தோன்ற, இவன் கட் செய்து விட்டான்.
மறுமுறையும் ஸ்ரீ அழைக்க, வாசு கட் செய்து விட்டான். 
ஸ்ரீக்கு இவன் வேண்டுமென்று தான் கட் செய்கிறான் என புரிந்து விட்டது.
ஸ்ரீயும் புன்னகையுடன் அப்படியே விட்டுவிட்டாள். அவள் நேற்று துவைத்து போட்ட அவள் உடையை காய போட வாளியுடன் மொபைலையும் எடுத்துக்கொண்டு மாடி செல்ல, அங்கே இவளுக்கு முன் ஒரு நாலு பேர் உடற் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் ஒரு ஹாய் சொல்லிவிட்டு அப்படியே இவள் வேலையை பார்க்க ,
 ஒரு பத்து நிமிடம் சென்றிருக்கும், அவள் அழைக்க வில்லை என தெரிய, ‘ என்ன இவள் இப்போ பண்ண மாட்டாளா. திமிரு புடிச்சவ ‘ என தோன்ற இவன் கோபத்தோடு அவளுக்கு அழைக்க, 
ஸ்ரீ ஒரே ரிங்கில் எடுத்து விட்டாள்.
“ குட் மோர்னிங் மாமா. “ என ஸ்ரீ உற்சாகமாக சொல்ல,
“——-“
“ மாமா… ஹலோ மாமா. “
“____”
“ சோ சோ சாரி மாமா. நேத்து ரொம்ப வொர்க் மாமா. அதன் உங்க கால் கட் பண்ணிட்டேன்.
நீங்க பண்ண எல்லா கால்ஸ்ஸும்‌‌ இப்போ தான் கொஞ்சம் நேரம் முன்னாடி பார்த்தேன். 
நான் இப்போ கால் பண்ணா, நீங்க வேணும்ணே கட் பண்றிங்க. என்ன இப்படியெல்லாம் பண்றிங்க. “ பொறுமையாய் ஸ்ரீ விளக்க,
“ ______”
“ ஹேலோ மாமா… “
“ _______”
ஸ்ரீக்கு கோபம் வந்துவிட்டது. இத்தனை சொல்கிறோம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இருந்தால் எப்படி என தோன்ற, 
“ என்ன அப்படி கோபம் உங்களுக்கு. சீரியஸ்ஸா நேத்து அப்படி தான் ஒரு வொர்க் இருந்துச்சு. இதுக்கே புரிஞ்சுக்கலைனா எப்படி மாமா. நீங்களும் இதெல்லாம் க்ராஸ் பண்ணி தான வந்துருபிங்க. “
“ _____ “
“ இப்போ நீங்க பேசலைனா, உடனே ஊருக்கு ஆச்சிக்கு ஃபோன் செஞ்சு உங்கள பத்தி போட்டு தரேன். “ என இவள் வேண்டுமென்ற மிரட்ட, 
“ போடி போ என்ன வேணா சொல்லிக்கோ. 
சரியா விடிய கூட இல்ல, அதுக்குள்ள டென்ஷன் பன்றியா நீ .
இந்த திமிரு புடுச்ச வேலையெல்லாம் என்கிட்ட வச்சிகாதடி ராங்கி .
நேத்து காலைல ஒன்னுமே இல்லாத ஒரு சண்ட, அதுக்கு இவ்ளோ நேரம் பேசாம இருந்துட்டு, முக்கியமான வொர்க்னு ரீஸன் சொல்ற. “ என இவன் கோபமாக சொல்ல,.
“ ஹலோ பைசன், என்ன ‘ டி’ எல்லாம் சொல்றிங்க. யாருக்கு திமிரு, எல்லாம் உங்களுக்கு தான் டன் கணக்குல இருக்கு. 
இந்த திட்டுற வேலையெல்லாம் எல்லாம் என்கிட்ட வேணாம். ஏதோ ஒரு தடவ உங்க முன்னாடி கண் கலங்குனேனு, அதுக்குனு இப்படி எப்போ பார்த்தாலும் என்னை திட்ட முடியாது. 
உங்களுக்கு வர கோபத்துக்கெல்லாம் ஆடுற ஆளு நான் இல்ல. 
நான் நேத்து மோர்னிங் கால் பண்ண ரீஸனே வேற, 
நேத்து ஒரு சண்ட கூட உங்க கூட நிம்மதியா போட முடில,
வந்துட்டாரு என்ன திட்ட. ஆளு வளந்த அளவுக்கு அறிவு வளருல,
எல்லாம் என் நேரம் உங்க கிட்ட வந்து மாட்டிக்கிட்டேன். “ இவளும் அவனிடம் எகிற, 
“ ஏய் என்ன நீ வந்து மாடிகிட்டியா. 
நான் பாட்டுக்கு என் வேல, ஹோட்டல்னு நிம்மதியா இருந்தேன். 
நீ வாண்டெட்டா வந்து எல்லாம் வேலையும் பார்த்துட்டு, நேத்து சண்ட போட்டுட்டு ஃபோன்ன வச்சிட்ட.
சரி நம்பளவது  பேசலாம்னு பார்த்தா ஃபோன் பண்ணா கட் பண்ற. 
இவ எப்போட கூப்பிடுவானு பைத்தியம் புடிக்க வச்சு, தூங்காம படுக்க வச்சு, இப்படி எல்லா வேலையும் நீ பார்த்துட்டு, 
இப்போ கேட்டா எனக்கு அறிவில்லையாம். 
என்கூட ஒட்டிக்கிட்டு இருந்தா மானம் ரோஷம் எல்லாம் தொடச்சி போட்டுட்டு, வெக்கமே இல்லாம நீ என்னை திரும்ப கூப்பிட்டாடிட்யும்
இப்போ உன்கூட பேசிக்கிட்டு இருக்கேன் பாரு எனக்கு அறிவில்ல தான் ராங்கி. 
சின்னபுள்ள தனமா ஆச்சி கிட்ட போய் சொல்றளாம். உன்னால என்ன முடியுமோ பன்னிக்கோ போ. இனிமே எனக்கு ஃபோன் பண்ணாத .“
என இவனும் அவளை பேசிவிட்டு வைத்து விட்டான். பிறகு குளிக்க சென்று விட்டான்.
ஸ்ரீக்கு இவன் என்ன இப்படி பேசிவிட்டான் என நம்ப முடியாமல் புருவம் சுருங்க அங்கே இருந்த திட்டில் மொபிலை பார்த்தவாரு அமர்ந்தாள். இப்படி எல்லாம் அவளை யாரும் பேசியது இல்லை. எப்படி பேசிவிட்டான். 
இப்படியெல்லாம் இவளும் யாருக்கும் விளக்கம் கொடுத்தது இல்லை. அதிக வேலை புரிந்து கொள்ளடா என்றால் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறானே. இப்போவே இப்படி என்றால் இன்னும் வருங்காலத்தில் எப்படியோ, என தோன்ற அப்படியே அமர்ந்து விட்டாள்.
   

Advertisement