Advertisement

      கொச்சின் செல்லும் ஃப்ளைட்டில் கொட்ட கொட்ட விழித்தமர்ந்து இனிமேல் என்ன செய்வது என யோசித்து விழித்திருந்தாள் ஸ்ரீபத்மா. இன்று வீட்டில் சுந்தரம் சொன்ன விஷயத்திற்கு இவளால் சரி என்பதை தாண்டி எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அப்படி தான் பேசியிருந்தார் சுந்தரம். 
“ என்ன பத்து, அப்பா சொன்னது மனசுல வச்சிக்க. வாசு கூட கார்ல தனியா வராத கண்ணு . நான் ஏன் சொல்றேன்னு உனக்கு புரியுதா கண்ணு . “
ஸ்ரீபத்மா புரியாமல் சுந்தரத்தைப் பார்த்தாள்.
சுந்தரம் தொடர்ந்தார்,  
“ நீ , தேனு, கார்த்தி, வாசு எல்லாம் சின்னதுல இருந்து பழகுனவங்க . ஒரே வீட்டு புள்ளைங்களா வளர்ந்தவங்க. உங்களுக்கு நாங்க இது வரைக்கும் எந்த பாகுபாடும் பார்க்கல.
ஆனா இப்போ தேனு நம்ப வீட்டுக்கு கல்யாணம் முடிச்சு வந்தாச்சு. இனி இந்த வீட்டு மருமகளா தான் வெளிய எல்லாரும் பாப்பாங்க. “
“ இப்போ அதுக்கும் இப்போ வாசு தம்பி கூட தேனு வரத்துக்கும் என்னங்க சம்பந்தம். “ சிவகாமி கேட்டார்.
“ இங்க பாரு காமி, இப்போ நம்ப ரெண்டு வீட்டுக்கும் நட்புன்னு தாண்டி சம்பந்தினு உறவு வந்தாச்சு.
இது வரைக்கும் புள்ளைங்க எங்க போனலும் வந்தாலும், எல்லாம் வீட்டு பெரியவங்க கிட்ட இருந்து வந்த பழக்கம்னு தான் நினப்பாங்க. ஆனா இப்போ வாசுவுக்கும் நம்ப பத்துவுக்கும் கல்யாணம் பேசுற முறை வருது.
இதே நம்ப பத்து, சிவசு மாமா வீட்டுக்கோ இல்ல வாசு கடைக்கோ போறது வெளில இருந்து பாக்குறவங்களுக்கு ஒன்னும் வித்யாசமா தெரியாது.  
ஆனா இப்போ வெளில போயிட்டு ஒன்னா கார்ல வந்தா, ஊருக்குள்ள பேச்சு வரும்.  
ரெண்டு பேருக்கும் கல்யாணம் பேசுற முறை தான, தெரிஞ்சே வீட்ல ஏன் இவங்கள ஒன்னா வெளியே அனுப்புறாங்கனு ஒரு பேச்சு வரும், ஊருக்குள்ள நம்ப பத்துவுக்கு தான் அதிகம் பேச்சு வரும். 
இதே டவுன்ல, இல்ல சிட்டில நம்ப இருந்தோம்னா, இந்த மாதிரி விஷயம் எல்லாம் யாருக்கும் பெருசா தெரியாது. இத இயல்பா எடுத்துக்குவாங்க.
ஆனா நம்ப ஊருகுள்ள எல்லா சொந்தம் மத்தியில இருக்கோம். தப்பா பேசுவாங்கனு சொல்லல, ஆனா சொந்தக்காரங்க உரிமையா நம்ப பத்துக்கு  வாசுவ கல்யாணம் பேசலாம்னு கேட்பாங்க. “
தேனுவுக்கு கேட்காமல் இருக்க முடியவில்லை, அதனால் கேட்டு விட்டாள், 
“ ஏன் மாமா எங்க அண்ணாக்கு பத்துவ பொண்ணு கேட்டா குடுக்க மாட்டீங்களா. 
நீங்களும் அண்ணாக்கு நல்ல வேல இல்லனு நினைக்கிறிங்களா. “ என ஆற்றாமையாய் கேட்டாள்.
ஸ்ரீபத்மாவிற்கு தோசையை முழுங்க முடியவில்லை, அருகில் இருந்த தண்ணியை எடுத்து குடித்தாள். உள்ளுக்குள் இதுக்கு அப்பாவிடம் இருந்து என்ன பதில் வரும் என ஒரு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு. விழி அகலாமல் சுந்தரத்தை தான் பார்த்திருந்தாள்.
“ தேனு, நான் வாசு நம்ப வீட்டு பையன்றத தாண்டி , ஒரு விவசாயம் பண்றவரா வாசு மேல ரொம்ப மரியாதை வச்சிருக்கேன் மா. 
சிவசு மாமாவும் கோதண்டமும் என் கிட்ட நம்ப பத்துவ பொண்ணு கேட்டா, ரெண்டு பேருக்கும் ஜாதகம் பொருந்தி வந்தா, ரெண்டு பேருக்கும் இதுல விருப்பம் இருந்தா, நான் நிச்சயம் கல்யாணம் முடிப்பேன்.  “
தேனுவிற்கு உள்ளம் பூரித்தது. அவள் வாசுவின் திருமணம் குறித்து எத்தனை கவலை கொண்டிருக்கிறாள் என்பது அவளுக்கு தானே தெரியும். 
சிவாமிக்கு முதலில் இருந்தே விருப்பம் தானே, அவர் ஒரு புன்னகையோடு தான் பார்த்திருந்தார். 
கார்த்திக்கும் உள்ளே மகிழ்ச்சி தான். பத்துக்கு இப்படி நடந்தால் நிச்சயம் அவள் நன்றாக இருப்பாள், அவன் நண்பன் அப்படி பார்த்துக்கொள்வான் என நம்பிக்கை மிக அதிகம். ஆனால் வெளியே ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை. அமைதியாக பார்த்திருந்தான்.      
ஸ்ரீக்கு , அவள் அப்பாவின் இந்த பதிலில் விக்கியே விட்டது. விட்டால் இப்போதே எழுந்து சென்று அவள் அப்பாவின் கையை கட்டிக்கொண்டு ,
 ‘ தாங்க்ஸ் ப்பா, தாங்க்ஸ் ப்பா ‘
 என குதிக்க வேண்டும் போல் இருந்தது . கண்களில் ஓரத்தில் கோடாய் ஒரு சந்தோஷத்துளி இறங்கியது. 
“ ஏ புள்ள, மெல்ல சாப்பிடு. “ என சொல்லி இவள் தலையை தேனு தட்டிக்கொண்டிருந்தாள்  
தலைகுனிந்து கண்ணீரை மறைத்து, சாப்பிடுவது போல் வாகாக அமர்ந்துக்கொண்டாள். 
வரம் கேட்கும் முன், இந்தா வைத்துக்கொள் என இறைவன் தந்தால் எப்படி இருக்குமோ, அப்படி ஒரு நிலையில் இப்போது ஸ்ரீபத்மா.
சுந்தரம் மேலும் பேசினார், “ தேனு , நான் இப்போ சொன்ன மாதிரி நடப்பேன். 
ஆனா உங்க வீட்ல இருந்து உங்க அப்பா நம்ப பத்துவ பொண்ணு கேட்பாரா ? “
தேனுவிற்கும் வானில் இருந்து தொப்பென கீழே விழுந்த உணர்வு. அவள் பாவமாய் சுந்தரத்தை பார்க்க, 
பத்மாவிற்கு புரியவில்லை, என்ன தான் அப்பாவிற்கும் பிள்ளைக்கும் முட்டும் என்றாலும், ஏன் பெண் கேட்க மாட்டாரா.
‘ அதெல்லாம் பெரிய மாமா கேப்பார். இதுக்கு ஏன் தேனு இப்படி ரியாக்சன் குடுக்குது. ‘       
என புரியாமல் அமர்ந்திருந்தாள். வாசுவிற்கும் கோதண்டத்திற்கும் எந்த அளவு முட்டும் என ஸ்ரீக்கு தெரியவில்லை. அவளுக்கு இன்னும் வாசுவை பற்றி கூட பெரிதாக தெரியாது. 
ஸ்ரீக்கு வாசுவை பிடித்திருந்தது , இதே அவன் வெளி ஆள் என்றால், அவன் மீது இத்தனை நம்பிக்கை அவளுக்கு எளிதாக வந்துவிடுமா என தெரியவில்லை. 
இவளின் விருப்பத்திற்கு முதன் முதலில் இவளின் அம்மாவும் அப்பாவும்‌ அவனே  இவளுக்கு மாப்பிள்ளையாக வந்தால் என்ற ரீதியில் பேசியதால் இவளுக்கு முதலில் அவன் மேல் ஒரு நம்பிக்கை வந்திருந்தது. அதன் பின் எல்லாம் தானாய் நடந்தேறியது. இப்போது வாசுவை இன்னும் இன்னும் பிடித்தது . 
ஆனால் இந்த நிமிடம் வாசுவின் மேல் ஒரு மென் கோபம், அவன் மட்டும் இந்நேரம் அவன் நேரம் கேட்காமல் முழுமையாக சம்மதம் தெரிவித்திருந்தால், இதோ இப்போதே, இந்த திருமண பேச்சு வந்ததுமே அவள் அப்பாவிடம் பேசியிருப்பாள். அவன் தான் ஐந்து மாதம் என சொல்லியிருக்கிறானே, ‘ பக்கி பய ‘ என அவனை இப்போது நேரில் பார்த்தால் திட்டும் நிலையில் தான் அமர்ந்திருந்தாள் ஸ்ரீபத்மா. 
தேனு அமைதியாக அமர்ந்திருக்க, சுந்தரம்,
 “ அதான் மா, நான் சொல்றேன், இப்போ இந்த மாதிரி நம்ப ரெண்டு வீட்டுக்கும் இன்னும் எந்த சம்பந்தம் பேச்சும் வரல,
பிள்ளைங்களுக்கும் அப்படி நம்ப சொல்லி வளக்கல, உனக்கு வளைகாப்பு நடந்ததும், நம்ப பத்துவுக்கு மாப்பிள்ளை ஜாதகம் எடுக்க போறேன். 
அப்போ உங்க வீட்ல எதுவும் நம்ப பத்துவ வாசுவுக்கு பேசுனாங்கனா அப்போ அத பத்தி பார்ப்போம், அப்படி இல்லைனா நான் நம்ப பத்துவுக்கு வெளில தான் பார்ப்பேன் மா. 
அப்போ வேற வரன் வந்தா, இப்போ வாசுவும், நம்ப பத்துவும் ஒன்னா வெளிய இப்படி போன வந்தா ஊருக்குள்ள நாளா பின்ன ஒரு பேச்சு வரும் தானே. 
நான் இப்போ சொன்னத்துல உங்க யாருக்காவது வேற எண்ணம் இருந்த தாராளமா சொல்லுங்க. என்ன செய்யலாம்னு பேசுவோம். “
இது தான் சுந்தரம். எதையும் ஒலித்து மறைத்து பேசுபவர் இல்லை. எதுவாயினும் குடும்பத்தில் அனைவரையும் உட்காரவைத்து அவரின் எண்ணத்தைச் சொல்லி மற்றவர் கருத்தையும் கேட்பார், அதை மதிக்கவும் செய்வார். 
ஸ்ரீபத்மாவிற்கு இப்போது அப்பா என்ன சொன்னார் என்பதை புரிந்துக்கொள்ளவே சில நிமிடங்கள் பிடித்தது.
அதாவது வாசுவின் வீட்டில் பேசினால் சரி, அப்படி இல்லை என்றால் வேறு வரேன். ‘ Oh Noooo ‘, என்ன செய்வது என தெரியாமல் உட்கார்ந்திருந்தாள் ஸ்ரீ.
சிவகாமிக்கு புரிந்தது ஆனால் மகளுக்காக பேசினார், 
“ நம்ப பத்து ஒன்னும் தான வாசு கூட வரலைங்க, நம்ப பத்து ஸ்கூடி நின்னுடுச்சு, அதான் பஸ்ல போயிருக்கு, அங்க தம்பிய பார்த்துருக்கு, என்கிட்ட ஃபோன்ல சொன்னுச்சு, அதான் நான் வாசு தம்பிய ஸ்ரீய பார்த்துக்க சொன்னேன். 
வீட்டுக்கு கூட்டிட்டு வரும் போதும் கூட எனக்கு தம்பி ஃபோன்ல பேசுச்சு, நான் தான் நம்ப பத்துவ கார்ல வர சொன்னேன். “ 
“ அது சரி சிவகாமி, நான் அதுக்கு சொல்லல, இப்போ காலையில பாப்பா வண்டி நின்னதும், பத்து யாருக்கு ஃபோன் பண்ணிருக்கணும், எனக்கு ஃபோன் பண்ணிருக்கணும்.
நான் டவுன்க்கு கூட போயிருப்பேன். இல்லையா டவுன்னுக்கு போயிட்டு கார்த்திக்கு ஃபோன் பண்ணிருந்தா, வரும் போது கார்த்தி கூட்டிட்டு வந்துருப்பான்ல. 
அப்போ யாரும் எதுவும் நம்ப பத்துவ பேச முடியாது. 
நம்ப இருக்கறது ரொம்ப சின்ன ஊரு, பக்கத்துல என்ன நடக்கதுனு பார்ப்பாங்க, பேசுவாங்க. அது எந்த விஷயமா இருந்தாலும் சரி. அப்படி ஒரு பேச்சு நம்ப பத்துவுக்கு வந்துட கூடாது. அதுக்கு தான் இவ்ளோ சொல்றேன். 
கொச்சின்ல பத்து எங்கயாவது போனா வந்தா நான் ஏதாவது சொல்றேன்னா. அங்க பத்திரமா பார்த்து போயிட்டு வரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. 
 ஆனா கண்ணு முன்னாடி நம்ப இருக்கப்போ, பத்துவ நம்ப தான நல்ல பார்த்துகணும், நாளைக்கு கல்யாணம்னு ஒரு விஷயம் வந்தா இதெல்லாம்   நாள பின்ன ஒரு பேச்சா வர கூடாது இல்லையா, 
அதுக்கு தான் இவ்ளோ சொல்றேன். நீங்க எல்லாம் என்னா சொல்றிங்க “ என சிவகாமியிடம் ஆரம்பித்து பொறுமையாக எல்லாரிடமும் கேட்டு முடித்தார். 
அவர் சொல்வதை யாராலும் மறுத்து பேச முடியவில்லை. அனைவருக்கும் புரிந்தது. ஏன் தேனுவிற்கே இது சரி என்று தான் தோன்றியது.
சுந்தரம் இடத்தில் கோதண்டம் இருந்தால் தேனுவிற்கு இதை தான் சொல்லுவார். எல்லாரும் அமைதியாக அமர்ந்திருக்க, 
“ என்ன கண்ணு, நீ என்ன சொல்ற. “ என சுந்தரம் ஸ்ரீபத்மாவிடம் கேட்க, 
“ சரிப்பா, இனிமே நான் பார்த்துக்குறேன்பா. “ மெல்லமாக தலையசைத்து சொன்னாள்.
“ சரி கண்ணு. ஃப்ளைட்க்கு எல்லாம் எடுத்து வச்சிடியா “
“ வச்சிட்டேன் பா. சாப்பிட்டு கிளம்புறது தான் பா. “
எல்லாம் பேசிமுடிந்து அவரவர் வேலைக்கு சென்றனர். கார்த்திக்கும், சிவகாமிக்கும் சுந்தரம் பேசியது சரியென பட்டது. தேனுவிற்கு கூட சரியென பட்டது. 
சுந்தரம் ஒன்றும் வாசுவை தவறாக நினைக்கவில்லை. பெண் கேட்டால் கொடுப்பேன் என்று தானே சொன்னார். எல்லாவற்றையும் விட வாசுவின் மீது அவர் மிகவும் மரியாதையும் வைத்திருக்கிறார். 
இதை விட தேனுவிற்கு என்ன வேண்டும். அவர் பெண்ணை யாரும் எதுவும் சொல்லிவிட கூடாது என பார்க்கிறார், அது இயல்பு தானே. 
அதனால் தேனுவும் எதுவும் நினைக்கவில்லை. 
பிறகு சாப்பிட்டு முடித்து ஸ்ரீயுடன் தான் தேனு சுற்றிக்கொண்டிருந்தாள்,   ஸ்ரீயிடம் வாசுவை பற்றி உன் எண்ணம் என்ன எனவெல்லாம் கேட்கவில்லை, 
உனக்கு என் அண்ணாவை திருமணம் செய்ய விருப்பமா என எதுவும் பேசவில்லை. 
அது அவரவர் விருப்பம், பத்மாவின் திருமண பேச்சு வரும் போது எல்லாம் கூடி வந்தால் சரி, அப்போது பார்த்துக்கொள்வோம். அதனால் இதில் பேச ஒன்றும் இல்லை என தேனு இயல்பாகவே எடுத்துக்கொண்டாள்.  
இதையெல்லாம் நினைத்து ஸ்ரீ யோசித்து ஃப்ளைட்டில் அமர்ந்திருந்தாள். அப்பாவிற்கு வாசு இவர்களின் திருமணம் பேச வந்தால் நிச்சயமாக சம்மதிப்பார். இத்தனை பேச்சில் அது தெரிந்தது தான் ஸ்ரீக்கு ஒரே ஆறுதல். 
ஆனால் வாசுவுடன் இனிமேல் இவளால் எப்படி வெளியே சென்று வர முடியும். இவளுக்குமே அவள் அப்பா எதற்கு சொன்னார் என புரிந்ததே. எல்லாம் இவளுக்காக தானே அவர் யோசிக்கிறார், சொல்கிறார்.  
‘ சும்மாவே நம்ப தான் அவன் பின்னாடி போவோம், அவன் தள்ளித் தான் போறான். இன்னைக்கு ஏதோ நமக்காக அவன் பஸ்ல வந்தான். 
இனிமே அவன தாத்தா வீட்ல இல்ல ஹோட்டல்ல பார்த்தான் தான் ஆச்சு. அவனுக்கு நம்ப கூட கல்யாணம் ஓகே தான் போல,  ஆனா எதுக்கோ டைம் கேக்குறான். எதுக்குனு தெரில. மே பி அவனும் கொஞ்சம் செட்டில் ஆகணும் போல. அப்போ தான் அவனுக்கும் வீட்ல பேச முடியும் போல இருக்கு. 
நம்ப இஷ்டத்துக்கு வீட்ல சொல்லி அதனால அவன ஃபோர்ஸ் பண்ணிட்டா, ஜஸ்ட் இன்னும் ஃபைவ் மன்த்ஸ் தான், தேனுவுக்கு நைன்த் மன்த் வளக்காப்பு முடியரத்துக்கும், இவன் கேட்ட டைம்க்கும் சரியா இருக்கும். 
அதுக்குள்ள அவனோட விஷ் எதுவா இருந்தாலும் நடந்துடணும். அப்போ தான் மேரேஜ்க்கு வீட்ல பேச முடியும். அவன் என்ன நினச்சிருக்கான் கூட தெரிலயே. இந்த லட்சணத்துல லவ் பண்ணிட்டு இருக்கோம். ஹூஃப்…ஆண்டவா. 
டேய் ஏன் டா இப்படி பண்ற, 
என் கூட நல்ல தான பேசுற, பழகுற, முறைகிற, எல்லாம் உரிமையா தான பண்ற, ஆனா ஏன் டா இந்த டைம் கேக்குற. ‘ என வாசுவின் மீது ஆற்றாமையாய் வந்தது. 
எல்லாம் யோசித்து ஒரு வழியகி போனாள். 
‘ இப்படி நம்பள பாடப்படுத்துரானே.’ என யோசித்தவளுக்கு ஒரு யோசனை வர 
‘ சரி நாளைக்கு அவன் கிட்ட கொஞ்சம் பேசிப்பார்போம்.’ என ஒரு முடிவு செய்தவள் மற்றதையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கிடப்பில் போட்டு ஃப்ளைடில் தூங்கி போனாள்.
மறுநாள் காலை ஒன்பது மணி, 
திருச்சியில் தென்னந்தோப்பில் நின்று இளநீர் பிரித்துகொண்டிருந்த  வாசுவின் ஃபோன் இசைத்தது.
Raan Kie Calling…
அந்த பெயரை பார்த்ததும், வேர்வை சொட்ட சொட்ட நனைந்த வாசுவின் முகத்தில் தானாக ஒரு புன்முறுவல். தனியாக சென்று அங்கே இருந்த கல்லில் அமர்ந்தான்.
“ சொல்லு ராங்கி “ என வேண்டுமென்ற சிரிப்புடன் வினவ, 
“ மாமாஆஆஆ…” என இவள் பல்லை கடிக்க, 
“ ஆஃபிஸ் போய்டியா. “  
“ இல்ல மாமா…அபி அக்கா, சங்கு அவங்க ரெண்டு பேரும் வரணும். எங்க மீட்டிங் ஸ்பாட்டா ஒரு பார்க் இருக்கு. அங்க வைட் பண்ணிட்டு இருக்கேன். அவங்களும் வந்ததும் தான் கிளம்புணும். “
“ அந்த அப்பாவி ஜீவன்கள் இன்னும் உன்கிட்ட சிக்கலையா. அதான் என்ன கூப்பிட்டியா. “ இவன் இன்னும் சிரிக்க, 
“ ஹலோ அவங்கள உங்களுக்கு முன்ன பின்ன தெரியுமா. என்னமோ அவங்க என்கிட்ட ரொம்ப மாட்டிக்கிற மாதிரி பேசுரிங்க.”
“ இல்லையா பின்ன. இந்த ரெண்டு நாள என்ன அட்டகாசம் பண்ணுன. அவங்க உன்கூட ரெண்டு வருஷமா சுத்துறாங்கன்‌னா, உன்னயேவே சமாளிக்கிறங்கனா, அவங்களுக்கு சிலை தான் வைக்கணும். “
இவன் இன்னும் இவளை வம்பிழுக்க, அவள் அங்கே கண்களை சுருக்குவது இவனால் இங்கு இருந்து மனதில் பார்க்க முடிந்தது. 
பழகியது இரண்டே நாள் ஆயினும், ஸ்ரீயின் சில சின்ன சின்ன செயல்கள் கூட வாசுவிற்கு அத்துப்படி ஆகி இருந்தது. 
“ என்ன மாம்ஸ் லொள்ளா. 
நான் மட்டும் உங்க முன்னாடி இருந்துருக்கணும். அப்போ பம்பறது.
அப்படியேயேயே எல்லார் முன்னேயும் நல்ல பையன் மாதிரி ஸீன் போடுறது. இப்போ பன்னறது எல்லாம் கேடி வேல. “
“ அப்படி தான் பண்ணுவேன். என்ன இப்போ. “ அவளுடன் உறையாடுவதில் இவனுக்கு அத்தனை உற்சாகம்.
“ அடப்பாவி மாம்ஸ்…நான் உங்கள ரொம்பபபப நல்லவன் நினச்சேன். “
“ நான் உன் கிட்ட நான் நல்லவன் சொன்னதே இல்லையே. நீயா நினச்சா, அதுக்கு நானா பொறுப்பு. ”
அவள் நிச்சயம் வாயை திறந்து அமர்ந்திருபாள். 
அதை நினைத்து இவனுக்கு இங்கு அப்படி ஒரு புன்னகை. 
வாசுவின் தோட்டத்தில் யாரோ இவனை அழைக்க, அவருக்கு ஐந்து நிமிடம் என விரல்களை காட்டியவன், 
“ சொல்லு ஸ்ரீ, Anything important. “ என சீரியஸ்ஸாக கேட்க,
“ ஏன் ஏதாவது முக்கியமா இருந்தா தான் உங்களுக்கு கூப்பிடனுமா. “ அவன் கடுப்பேற்றியதில் இவளும் ராவாக கேட்க,
“ ஸ்ரீ பிளீஸ் , காலைல இப்படி என் சண்ட போடாத. பிடிக்கல. “
“ ஓஹ் அப்போ நான் சண்ட போடுறேன்.
 சரி அப்போ என்கிட்ட சண்ட போட கூட உங்களுக்கு பிடிக்கல. 
சரி அப்போ ஈவினிங் சண்ட போட்டா ஓகே வா. “
“ உன்ன பிச்சுடுவேன் ராங்கி….இப்படி டென்ஷன் படுத்ததா. 
சீக்கிரம் சொல்லு , என்ன விஷயம், இன்னைக்கு நிறைய வேல இருக்கு.“ இவன் அவசரம் இவனுக்கு, 
“ அப்போ நாங்க இங்க வேல இல்லாம இருக்கோமா. வச்சிறேன் பை.” 
“ ஹேய் ஸ்ரீ …”
டொக்…ஸ்ரீ வைத்துவிட்டாள்.
இப்போது தான் இவர்கள் விருப்பம் இருவருக்கும் தெரிந்து நடக்கும் முதல் பேச்சு. இத்தனை நாள் வாசுவின் மனம் விட்ட சிரிப்பு அவனின் காட்சில்லா கூட்டத்தை தாண்டி வேறு எல்லையில் பெரிதாக பயணித்தது இல்லை. ஆனால் அவர்களையும் தாண்டி இப்போது ஸ்ரீயிடம். 
இப்போது இவள் இப்படி பேச்சை பிணக்கில் முடிக்கவும், வாசுவிற்கு அப்படியே இவளை விட மனமில்லை. இத்தனை காலையில் அழைத்திருக்கிறாள் என்றால் எதுவும் சொல்ல வந்தாளோ, நாம் தான் வேறு பேசிவிட்டோமோ என தோன்ற,     
இப்போது வாசு ஸ்ரீயை அழைத்தான்.
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு…
உன்னை தேடி வாழ்வின் மொத்தம் அர்த்தம் தருவேன்…
செல்லரிக்கும் தனிமையில் செத்து விடுமுன் செய்தி அனுப்பு…  
கொச்சின்னில் உதட்டில் உறைந்த கள்ளப்புன்னகையுடன் அமர்ந்திருந்த ஸ்ரீயின் கையில் மொபைல் இனிமையாக இசைத்தது.
.
  
   
   
    
  
         
      
  
  

Advertisement