Advertisement

பஸ் ஸ்டண்ட் வந்து இருவரும் இறங்கினர். வாசு இவளின் ஒரு பேக்கை பாவம் பார்த்து கையில் எடுத்தான்.
“ ஒன்னும்‌ம்‌ம் வேணாம். நானே பார்த்துக்குறேன். “ என இவள் இவன் மட்டும் கேட்கும் படி மெல்லமாக அழுத்தி சொல்ல, சரியெனத் தோளை குலுக்கி, அம்போ என அவளை பேக் தூக்க விட்டு, அங்கே நின்ற ஒரு பஸ்ஸில் ஏறினான். 
அது திருச்சி வழியே கன்யாகுமாரி போகும் பஸ். அதனால் இவர்கள் ஊர் வழி இல்லாமல் ஒரு ஸ்டாப் முன்னே நின்று வேறு புறம் சென்று விடும்.  
அந்த நிறுத்ததிற்கு பிறகு வேறு பஸ் மாறி இவர்கள் ஊருக்கு வேண்டும். அதற்கு அங்கே இருந்து நிறைய பஸ் இருக்கிறது.
இவர்கள் ஊருக்கு வேறு பஸ் இப்போது அங்கு இல்லை, சிவகாமி வேறு ஆட்டோவில் இவர்கள் வர வர ஸ்ரீயிடம் பேசிவிட்டு இவனிடமும் பேச, இன்னும் நேரம் கடத்தடக் கூடாது என இதிலே ஏறிவிட்டான். இந்த டிரைவரும், கண்டக்டரும் இவனது உணவக வாடிக்கையாளர்கள். அதனால் அவர்களை நன்கு தெரியும். 
இவள் இரண்டு பேக்கையும் நன்றாகவே எடுத்து வந்தாள். இவள் என்ன செய்கிறாள் என இவன் வெளிய திரும்பி பார்க்க, இங்கே பஸ்சின் உள்ளே அமர்ந்திருந்த ஒரு பள்ளி சிறுவனிடம் பேக்கை கொடுக்க உள்ளே நீட்டி கொண்டிருந்தாள், அதை இன்னும் அந்த சிறுவன் கவனிக்காமல் வெளியே வேடிக்கை பார்க்க, அந்த சிறுவனை கூப்பிட ஸ்ரீ வாயேடுத்த நேரம்.
வாசு படியின் அருகே சென்று இவள் பேக்கை வாங்க, அவள் இவனை கண்டுக்கொள்ளாமல் பேக்கை அந்த சிறுவனை பார்த்தே நீட்ட, வாசு வம்படியாய் இவளிடம் இருந்து பேக்கை பறித்துக்கொண்டு உள்ளே சென்றான்.  
பஸ்ஸில் இவர்கள் மூன்று பேர் தான். வாசு, ஸ்ரீ, அந்த பள்ளிச்சிறுவன். ஆளுக்கு ஒர்ரோர் இடத்தில் அமர்ந்தனர். 
பஸ்சின் நடுவே ஸ்ரீ வாசுவிற்கு முன்னே ஒரு இடத்தில் அமர்ந்தாள். வாசு அவளுக்கு அடுத்து. அதன் பின் நிமிடங்கள் சீக்கிரம் கூட்டம் சேர, அந்த பள்ளிச்சிறுவனை தவிர இவர்கள் ஊர் பக்க ஆட்கள் யாரும் இல்லை, எல்லாம் கன்யாகுமாரி போகும் ஆட்கள் போல, தனியாகவும், குடும்பமாயும் அமர்ந்திருந்தனர். 
என்ன தான் டிரைவர், கண்டக்டர் தெரிந்த ஆட்கள் என்றாலும், ஸ்ரீயின் பாதுகாப்பு வாசுவிற்கு முதலில் பட்டது, ஏன் கண்டக்டர் மொபைல் எண் கூட வைத்திருக்கிறான், ஆனால் இத்தனை பேரை பார்க்கவும் தான், வாசுவின் மனதில் ஒரு நிம்மதி. 
பஸ் கிளம்பியது.
அது மூன்று பேர் அமரும் இருக்கை, வாசு அருகில் கூட யாரோ இருவர் அமர்ந்தனர், ஆனால் ஸ்ரீயின் அருகில் யாரும் அமரவில்லை, இவளின் ஹேண்ட்பேக்வுடன் ஷாப்பிங் பேக் ஒன்றை இவள் மடியில் வைத்திருந்தாள், மற்றொன்றை வாசு மடியில் வைத்திருந்தான்.
இவள் மொபைலை எடுத்தவள், அம்மாவிற்கு ஃபோன் செய்துவிட்டு, கார்த்தியிடமும் சொல்லிவிட்டு, வாட்சப்பில் வாசுவிற்கு மெசேஜ் செய்தாள்,
“ என்னமோ பேக் தூக்க மாட்டேன் சொன்னிங்க. இப்போ உங்க கிட்ட வச்சிருக்கிங்க. என் பேக்க ஒழுங்கா என்கிட்டயே தாங்க நான் எடுத்துகிறேன்.“ என இவள் அனுப்ப,
“ முடியாது. “ என மெசேஜ் வந்தது. அதனுடன் கொம்பு வச்ச பொம்மை சிரித்தது.
கையை மடக்கி குத்துவது போல் ஒரு குழந்தையின் போட்டோ ஸ்ரீ அவனுக்கு அனுப்பினாள்.
இவன் பதிலுக்கு, குலுங்கி சிரிக்கும் பொம்பை ஒன்றை இவன் அனுபினான்.
இவள் உர்ரென ஒரு முயல் போட்டோ அனுப்ப,
“ அப்படியே உன்ன மாதிரியே இருக்கு ஸ்ரீ. “ என கண்களில் நீர் தெறிக்க சிரிக்கும் பொம்மை வந்து ஸ்ரீயின் மொபைலில் வந்து விழுந்தது. 
“ இருக்கும் இருக்கும். என்னோட கராத்தேல ரெண்டு உங்க கிட்ட கட்டுனேனா தெரியும். “ என ஆர்ம்ஸ் மடக்கி இருபது போல் ஒரு எமோஜி அனுப்ப, 
“ பயமா இருக்கே. யாராவது காபாத்துங்க…” என இவன் ஸ்பீக்கர் பொம்மை அனுப்ப, 
கராத்தே செய்த படி புரூஸ் லீ போட்டோ வந்து இவன் மொபிலில் குதிதது.
இவ்வாறு இவர்கள் மெசேஜ்ஜில் பேச,
யாரோ ஒரு குடிமகன் வந்து ஸ்ரீயின் அருகே போதையில் தொப்பென உட்கார, இதை எதிர்பார்க்காத ஸ்ரீ உடனே எழுந்து வெளியே வர பார்க்க, அவன் முன்னே பின்னே இடம் விடாமல் காலை வைத்து கொண்டு, கண்கள் சொருக்க தலையை தொங்க போட்டு ஏதோ உளறிக்கொண்டு வர, 
வாசு எழுந்து விட்டான். கண்டக்டரும் ஸ்ரீயின் இருக்கை அருகே வர, அங்கே 
“ எந்திரியா…முன்னாடி போய் உக்காரு. “ என கண்டக்டர் சவுண்ட் குடுத்து பேச, வாசு அவனை கையை பிடித்து எழுந்து நிற்க வைக்க பார்க்க, கண்டக்டரும் வாசுவிற்கு உதவ, 
குடிமகனோ “ ஏய் யாராராரா  நீ. என் மேலல..ல.. யே கை வைக்குற. “
“ நீ முதல எந்திரி…அப்புறோம் என் பேரு ஊரெல்லாம் சொல்றேன்.” என வாசு அழுத்தமாக கோபத்துடன் பதில் பேச 
“ டேய்ய்ய்ய் என்ன திமிரா. என் மேல கைய வைக்கர. எவன் டா நீ. “ என அவன் சவுண்ட் விட்டு எழ, கண்டக்டரும் அவனை பிடித்து வெளியே இழுக்க, இன்னும் பஸ்ஸில் இருக்கும் சிலரும் குடிமகனை பார்த்து சவுண்ட் விட, எப்படியோ வெளியே வந்தான். வாசு ஸ்ரீயை அங்கேயே உட்கார சொல்லியவன் சடார் என ஸ்ரீயின் அருகில் ஒரு பாதுகாப்பிற்கு அமர,
“ என்ன உன்‌ன்‌ன் ஆளா… வீட்ல இருந்து இழுத்து ஓடி வந்துட்டியாயாயா… “ என வாசுவை பார்த்து பேச, 
வாசு எழுந்து அவனது சட்டையை பிடிக்க போக கண்டக்டர் இவர்கள் இடையில் வந்து விலக்க, ஸ்ரீயோ ஒன்றும் பேசாமல் அந்த இடதில் அமர்ந்து வாசுவை தான் பார்த்திருந்தாள். 
ஸ்ரீயிடம் ஒரு பதட்டம் இல்லை. வாசு எழுந்த வேகத்தில் கீழே கிடந்த இவனது லேப்டாப் பேக்கையும், இவளது ஷாப்பிங் பேக்கையும் பின்னால் உட்கார்ந்திருந்தவர் உதவியுடன் எடுத்து பத்திரபடுதினாள்.
வாசுவை அமைதியாக்க செய்ய அவன் கையை பிடிக்க வில்லை. ஒன்றும் செய்யவில்லை. ஒரு கூர்மையான பார்வையுடன் எல்லாம் பார்த்து அமர்ந்து விட்டாள். 
“ தம்பி அந்த ஆளு தான் பேசுறான, நீங்களுமா, போய் உங்க வீட்டு பொண்ண பாருங்க. தனியா உட்காந்து இருக்காங்க. நீங்களாவது இப்போ ஒரு அரைமணி நேரத்துல இறங்கிடுவிங்க.
என் தல கன்யாகுமாரி வரைக்கும் உருட்டபோறான். எனக்குனு எல்லா ஊர்ல இருந்தும் எவனாவது இப்படி ஒருத்தன் வந்து சேர்ரான். இத இத்தோட விடுங்க தம்பி. “
என அவர் வாசுவை சமாதானம் செய்து புலம்பியபடி விலகினார்.  அவர் இவனது வாடிக்கையாளர், அடிக்கடி இவனது உணவகத்தில் சந்தித்திருக்கிறார், அவனை பற்றி ஓரளவு தெரியும். அவன் மீது தனி மரியாதை உண்டு அவருக்கு. அதனால் கொஞ்சம் உரிமையாகவே பேசினார்.
இப்படி எல்லாம் பொது வெளியில் நடந்து கொள்பவன் இல்லை வாசு,  காலையில் கூட யாருக்கும் தெரிய கூடாது என ஒருதனது கையை பதம் பார்த்தவன், இப்போது தரக்குறைவாக பேச்சு வரவும் வாசுவிற்கு இப்படி ஆகிவிட்டது. 
ஸ்ரீயுடன் முதன் முதலில் வெளியில் வருகிறான், ஸ்ரீயை மிகவும் பாதுக்காக்க வேண்டும் என நினைத்தனோ என்னவோ, அதனால் எப்போதும் இது போல் விஷயங்களில் பெண்களின் பேர் வர கூடாது என நிதானமாகவே கையாள்பவன், இன்று இப்படி செய்து விட்டான். 
அவர் சென்றதும் கொஞ்சம் நிதானித்தவன் ஸ்ரீயின் அருகில் வந்து அமர, அவன் இன்னும் இயல்பு நிலை திரும்ப வில்லை போலும், கண்களில் இன்னும் ரௌதிரத்துடன் தான் பஸ்ஸின் வாசல் படி முன் இருக்கையில் அமர்ந்து இருந்த குடிமகனை பார்த்திருந்தான். 
“ மாமா “ அவளது அழைப்பில் இருந்த ஏதோ ஒன்றை கவனிக்க மறந்தான்.
“ என்ன “ காட்டமாக இவள் புறம் திரும்பினான். 
“ காலையிலும் இப்படி தான் ஏதாவது ஆச்சா . இதே மாதிரி தான் அப்பவும் கீழே இறங்கினதும் யாரையோ பார்த்த மாதிரி இருந்துச்சு. “ மிக அமைதியாக கேட்டாள் ஸ்ரீ.
“ ஆமா. ஒருத்தன் உன் கை மேல வேணும்ணே கை வைக்க வந்தான். அவன் கைக்கு என்ன செய்யனாமோ அதெல்லாம் செஞ்சுட்டேன்.
உன்ன அத விடு, பேச வேணாம் சொன்னா, திரும்ப திரும்ப கேக்குற. எனக்கு இந்த பேச்சே சுத்தமா பிடிக்கல. 
நீ கொஞ்சம் சுத்தி என்ன நடக்குதுனு கவனமா இருக்கணும். அப்படி என்ன இத பத்தி கேட்டுட்டே இருக்கே, விட்டு தொலையேன். “ என அந்த குடிமகன் மீது இருந்த கோபத்தை இவளிடம் காரமாக முடித்தான்.   
ஸ்ரீ அதன் பின்பு ஒன்றும் பேசவில்லை. இப்போது இருவரின் மன நிலையும் வேறு வேறாக இருந்தது. 
ஆனால் அந்த குடிமகனோ, அங்கே வழியில் ஏறிய வெளிநாட்டு சுற்றுலா பெண்ணையும் ஒரு பூக்கூடையுடன் ஏறிய பெண்ணையும் கமெண்ட் செய்து ஏதோ பேசி வர, அந்த வெளிநாட்டு பெண்ணுக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் பூக்கூடை வைத்திருந்த பெண் உட்பட பஸ்ஸில் இருந்த மீதி பேரின் கோபத்துக்கு ஆளாயிருந்தான். முழு போதையில் இருபவனை என்ன செய்வது. டிக்கெட் வேறு வாங்கி இருந்தான். கண்டக்டர் அவனை இறங்க சொன்னால், அவரிடம் சட்டம் பேசினான். ஆனால் யாரும் அவனை நெருங்கவில்லை.
வேறு நாளாக இருந்தால் நிச்சயம் ஏதாவது அவனை செய்திருபான். ஆனால் இப்போது வாசு ஏதாவது செய்தால் ஸ்ரீக்கு தான் பிரச்சனை வரும் என நினைத்து கோபத்தை அடக்கி அமர்ந்திருந்தான். 
அப்படியே கிருபாவிற்கு அழைத்தவன், இவர்கள் இறங்க போகும் இடத்தை சொல்லி, வீட்டிலிருந்து இவனது கார் எடுத்து வர சொன்னான். அப்படியே ஸ்ரீயின் வண்டிக்கு டாங்க் நிரப்பி அவளது வீட்டில் விட்டுவிடும் படி சொல்லிவிட்டான்.  அடுத்து சீதாவிற்கு அழைத்தவன் கிருபா வரும் விஷயத்தை சொல்லி கார் சாவியை குடுக்க சொன்னான். பிறகு கொஞ்சம் அசுவாசமானவன் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடினான். 
ஒரு பதினைந்து நிமிடம் சென்று வாசு, ‘ ரொம்ப திட்டிடோமோ ’ என  யோசனையாய் இருந்தான். அவளை மெல்ல பார்க்க, அவள் இவர்கள் இறங்கும் இடம் வந்து விட்டதா என வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். 
அப்படியே துப்பட்டவை தலையை மூடி முகத்தை கட்சிதாமாக மறைத்துக்கொண்டிருந்தாள். அவள் மையிட்ட கண்களும் சிறு பொட்டு மட்டும் தான் வெளியே தெரிந்தது.   
பார்த்துக்கொண்டு இருந்த வாசுவிற்கு சுர்ரென கோபம் ஏறியது. என்னமோ காலையில் வீட்டில் தைரியமாக சொல்லுவேன் என சொல்லியவள், இப்போது யாருக்கு பயந்து இவ்வாறு எல்லாம் மறைக்கிறாள் என அத்தனை கோபம் வந்தது. 
இன்னும் ஐந்து நிமிடங்களில் இவர்கள் நிறுத்தம். அந்த பள்ளிச்சிறுவனும் இவர்கள் ஊர் தானே, அவன் தூங்கி விட்டிருந்தான். அவனை தட்டி டிரைவர் சொல்ல, ஸ்ரீ, வாசு, அந்த சிறுவன் மூவரும் எழுந்தனர். 
பஸ்ஸில் வேறு பாட்டு ஹை பிச்சில் ஓடிக்கொண்டிருந்தது,
ஹேய் டாசக்கு டாசக்கு   
டாசக்கு டாசக்கு   
டாசக்கு டாசக்கு  டும் டும் 
என ஒலிக்க, அந்த குடிக்காரானால் உட்கார முடியவில்லை, தலையை வேறு பாடலுக்கு ஏற்றார் போல் ஆட்டி கொண்டே அவன் அங்கே அமர்ந்திருந்தான். எங்கே அங்கே முன் பக்கம் போனால் அந்த குடிமகனுடன் இன்னொரு சண்டை வந்து விடுமோ என யோசித்தவன், பின் இறங்கும் வழியில் ஸ்ரீயை பத்திரமாக இறங்க வைத்து விடுவோம் என யோசித்து அமர்ந்திருந்தான். இப்போது அவனது கோபத்தை காட்டிலும் ஸ்ரீயின் பாதுக்காப்பு முதன்மையாக பட்டது.  
வாசுவினது முதுகில் மாட்டும் லாப்டாப் உள்ள பேக் தான். எப்போதும் அதை தான் தூக்கி திரிவான். அதனால் அது மட்டும் தான் நியாபகம் இருந்தது. இவளது பேக்கை சுத்தமாக மறந்து எழுந்து பஸ்ஸின் பின் பக்கம் போய் இறங்க காத்திருந்தான்.
எப்படியும் அவள் நம் பின் தானே இறங்குவாள் என இறங்கும் இடத்தை கவனமாக பார்த்து வந்தான். 
ஆனால் ஸ்ரீயோ ஹேண்ட் பேக், இரண்டு கையிலும் ஷாப்பிங் பேக் என எல்லாம் எடுத்து முன் பக்கம் இறங்க சென்றாள். கண்டக்டரிடம் ஏதோ கேட்டாள். அவர் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்.
அப்போது தான் வாசு இவளை பார்த்தான். 
இவன் பின்னே அவள் நிற்காமல் முன் பக்கம் நிற்கவும், ‘ ராங்கி புடிச்சவ என் கூட மல்லுக்கு நீக்கணும்ணே அங்க போய் நிக்கிறா. ‘ என முதலில் தோன்ற பின் அவளது கையை பார்த்தவன்,
‘ சே ஸ்ரீயோட பேக் மறந்துட்டோமே ‘ என தோன்ற, சரி இப்படியே சென்று வாங்கலாம் என இவன் நினைக்க, 
அந்த சிறுவன், அவன் பின்னால் ஸ்ரீ, அவள் பின்னால் அந்த பூக்கூடையுடன் இருந்த பெண், அவர் பின்னால் அந்த வெளிநாட்டு பெண் என வரிசை கட்டி இறங்க காதிருந்தனர். அவர்கள் இறங்கும் இடம் வந்து விட்டிருந்தது. 
சரி கீழே இறங்கி முன்னே சென்று அவள் பேக்கை வாங்கலாம் என நினைத்து இறங்கினான்.
ஆனால்,
இவன் இவன் கீழே இறங்கியதும், முன்னே அந்த சிறுவன் இறங்க, அவனுக்கு பின்னால் ஸ்ரீயின் இரண்டு பேக்கும் கீழே வீசி ஏறிய பட்டது. 
வாசு ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டான். 
‘அய்யோ அங்க தான அந்த குடிகாரன் உட்காந்து இருந்தான். அய்யோ ஸ்ரீ. ‘ என பதைத்து அவன் அங்கே ஓடி முன்னே உள்ள இறங்கும் படிக்கு சென்றான்.
அவ்வளவு தான், 
டோம்…டோம்…டோம்…டோம்…டோம்….சட்…டோம்…சட்…
ஆஆஆஆஆ….யாருயா அது….ஏய் யாரது…
சட்….டோம்…டோம்…டங்…டங்…டோம்…டோம்…டோம்…டோம்…
எவன் டா அவன். ஆஆஆஆஆ…..அம்பளயா இருந்தா முன்னாடி வாடா…பாக்குறேன்…
டமார்…டோம்…டங்…டோம்…டோம்…டோம்…
என இறங்கும் படி முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்த அந்த குடிக்காரனின் தலையை ஸ்ரீயின் மருதாணி கரங்களில் இருந்த வாட்டர் பாட்டில் அந்த போடு போட,
குடிமகனின் பின் முடியை கொத்தாக அந்த பூக்கூடை வைத்திருந்த பெண் பிடித்திருக்க, கால்வாசி நிரம்பி இருந்த ஸ்ரீயின் வாட்டர் பாட்டில் அவனது தலையை துவைத்திருந்தது. 
ஸ்ரீ அந்த குடிமகனை தரமாக சம்பவம் செய்த பின் அந்த வாட்டர் பாட்டிலோடு கீழே இறங்க, அவள் பின் அந்த பூக்கூடை பெண்மணியும் இறங்கினார். 
இதெல்லாம் பார்த்து பீதியாகி போயிருந்த வெளிநாட்டு சுற்றுலா பெண்ணும் இவர்களுடன் இங்கே இறங்கனார். 
பஸ்ஸின் உள்ளே இருந்த ஆண்கள் பெண்கள் என சில கை தட்டல்கள், ஆங்காங்கே அந்த குடிமகனை காட்டி மெல்லியே சிரிப்பு சத்தம் , கண்டக்டர் இதெல்லாம் பார்த்து ஆடி போய் நின்றிருந்தார். அவர் மறந்து நின்றிருப்பதை பார்த்த எவனோ ஒரு பையன் விசில் வேறு போட, பஸ் அரவரமாய் கிளம்பியது.

Advertisement