Advertisement

        ஆட்டோவில் ஏறிய ஸ்ரீ ஏழு பேக்கரி கடைக்கு சென்று பார்த்தாள். பொறுமையாக கேக், சாக்லேட் வகைகள் , மற்ற இனிப்பு வகைகள், அதன் அளவு, எடை, விலை, பாக்கிங்க் உட்பட பல விஷாங்களை கவனித்திருந்தாள். 
எல்லாம் முடிந்த அளவு போட்டோ எடுத்து, குறிப்புகள் எடுத்து எல்லாம் மொபிலில் சேமித்திருந்தாள். அத்தனை கடைகளுக்கும் ஏறி இறங்கி இருந்தாள். கையில் வேறு நிறைய இனிப்பு வாங்கி இருந்தாள். அப்படியே வீட்டில் கேக், சாக்லேட்ஸ்‌ செய்ய தேவையான பொருள்கள் என சின்ன ஷாப்பிங் என எல்லாம் இரண்டு கைகளிலும் பை. 
வாசு சொன்ன ஆட்டோவில் தான் சுற்றி கொண்டிருந்தாள். அவர் இவளை ஒரு தனி மரியாதையுடன் நடத்தியது நன்றாக தெரிந்தது. சிவகாமி வேறு அரை மணி நேரத்திற்கு ஒரு முறை என இவளை அழைத்து பேசிக்கொண்டிருந்தார். அவர் தவிப்பு அவருக்கு. 
ஆட்டோ ஓட்டுனர் நன்றாக ஸ்ரீயுடன் பேசிக்கொண்டே வர, அவளுக்கு வாசுவை பற்றி இன்னும் கூட தெரிந்தது. ஏதோ அவர் சொந்த விவசாய நிலத்தை கடனால் விற்க வேண்டியே நிலையாம், வாசு தான் ஏதோ சிறிது கடனுக்கு முன் பணம் கொடுத்து, இவர் நிலையை அறிந்து இந்த ஆட்டோவை செகண்ட் ஹேண்டில் வாங்கி கொடுத்தானாம். இப்போது அவர் விவசாயம் போக மீதி நேரம் இந்த ஆட்டோ ஒட்டுகிறராம். எப்படியோ கடனை சமாளிக்கிறாராம். வாசுவிற்கும் கடனை திரும்பி செலுத்திக் கொண்டிருக்கிறராம். இதெல்லாம் அவளுக்கு தெரியாது, இப்போது தான் தெரிந்து கொள்கிறாள். 
ஸ்ரீக்கு தெரிந்து வாசு இப்போது தான் அவனது தொழிலில் வளர்ந்து வருகிறான் மற்ற எதுவும் விரிவாக அவளுக்கு தெரியாது. அவனுக்கும் சில பண நெருக்கடிகள் இருக்கும் என இவளுக்கு ஒரு அனுமானம் உண்டு, ஆனால் இந்த நிலைமயிலும் ஒருதருக்கு உதவி இருக்கிறான் என நினைக்கையில் அவன் மேல் ஒரு தனி மரியாதை வந்திருந்தது. 
எல்லாம் சுற்றி முடிந்து இறுதியாக ஒரு பேக்கரிக்கு வந்து சேர்ந்தாள். மணி நாலேகால் நெருங்கி இருந்தது. அங்கே இருந்து வாசுவிற்கு அழைத்து விட்டாள்.
அது ஏ‌சி போட்டு அமைதியாய் இருந்தது. ஏதோ ஒரு தம்பதி வேறு குழந்தைகளுடன் அமர்ந்து உண்டுக்கொண்டிருந்தனர். இவள் அங்கே இருந்த கேக் வகைகள் பற்றி அங்கே இருந்த ஊழியரிடம் விசாரித்து கொண்டிருந்தாள், உணவு வகைகள் எல்லாம் போட்டோ எடுத்து கொண்டிருந்தாள். வாட்ச்சை பார்த்தாள், நாலரை மணி ஆகி இருந்தது.
இவள் அவரிடம் ஏதோ கேட்டு திரும்பவும், வாசு அங்கே இருந்த ஒரு இருக்கையில் அமைதியாக கைகட்டி அமர்ந்திருந்தான், இவளை புன்னகையுடன் பார்த்தவாரு. 
அவனை பார்த்ததும் ஸ்ரீயின் கண்களில் காட்டிய சிறிய ஆச்சர்யம், உற்சாகம், மகிழ்ச்சி, ஒரு புன்னகை எல்லாம் பார்த்து ரசித்து அமர்ந்திருந்தான். அவள் இவனை பார்த்ததும் ஏதோ இரண்டு வகை கேக்குகளை வாங்கி அதில் ஏதோ டாப்பின்ஸ் எல்லாம் இவளே வைத்து எடுத்து வந்தாள்.
இவள் இரண்டு பிளாட்டில் இவளே எடுத்து வந்தாள்.
அவன் மிகவும் களைத்து தெரிந்தான், ஆனால் அவன் முகத்தில் ஏதோ இருந்தது, ஏதோ சாதித்த உணர்வு.  
“ ஹாய் மாமா… எப்போ வந்திங்க…How was your day ? ” 
“ இப்போ தான் வந்தேன் ஸ்ரீ…இன்னைக்கு நாள் நல்லா இருந்த்துச்சு. ஃபர்ஸ்ட் டைம் நான் ஒரு விஷயம் பன்னேன்.”
“ உங்க இயற்கை உரத்துக்கு ஓகே சொல்லிட்டாங்களா. நல்ல ரெஸ்போன்ஸா. “
“ ஹேய் எப்படி உனக்கு தெரியும். “
“ நான் எல்லா இடத்துலயும் ஸ்பை வச்சிருக்கேன். எனக்கு அப்டேட் பண்ணுவாங்க. “ என ஸ்ரீ கெத்தாக சொல்ல,
“ ஹா.. யாரு கிருபவா. “
“  ஹஸ்கு.. புஸ்கு…அதெல்லாம் சொல்ல முடியாது. “
“ அப்போ அவனே தான். “
“ ப்ச் மாமா…கான்பரன்ஸ் பத்தி சொல்லுங்க. என்ன பண்ணிங்க. “
“ இயற்கை விவசாய கான்பரன்ஸ் தான். எல்லாம் வெட்டுக்கிளி பத்தி தான்.
அப்றோம் நம்ப ஒரு வகை கத்திரிக்காய் பயிர் பண்றோம்ல அந்த செடி மகசூல் பத்தி சொன்னேன். 
அதுக்கு பூச்சி தாக்குதல் குறைக்க ரெடி பண்ண உரம் பத்தி சொன்னேன். சாம்பில்ஸ் எல்லாம் காட்டுனேன். நிறைய பேரு ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருந்துச்சுனு சொன்னாங்க. எப்படினு கூட ரொம்ப ஆர்வமா கேட்டாங்க. ஃபர்ஸ்ட் டைம் நானா ரெடி பண்ணேன். “ 
வாசு இது போல் எல்லாம் அம்மாவிடம் சொல்லி இருக்கிறான். அவர் தான் ஆர்வமாய் கேட்பார். ஆனால் வீட்டில் ஆச்சி தாத்தாவிடம் இவன் இது போல் சொல்லிக்கொண்டு இருந்தால், கோதண்டம் இடையில் வந்து ஏதாவது இடக்காக பேசுவார். அதற்காகவே நிறைய தவிர்த்து விடுவான். 
சீதாவிற்கு அடுத்து இத்தனை ஆர்வமாக கேட்பவள் ஸ்ரீபத்மா தான். அதனால் கேக் சாப்பிட்டு கொண்டே எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான். வாயில் இருந்த இனிப்பின் ருசியோ இல்லை ஸ்ரீயின் அருகாமையோ வாசுவிற்கு அத்துணை ரம்மியமாய் இருந்தது அந்த பொழுது.
“ கங்க்ராசுலேஷன்ஸ் மாமா. “ மகிழ்ச்சியுடன் வாழ்த்து சொன்னாள்.
“ தாங் யு ஸ்ரீ. “ உளமார நன்றி சொன்னான். இப்படி எல்லாம் அவனை ஊக்க அவன் அம்மாவை தவிர பெரிதாக அருகில் ஆள் இல்லை. 
“ அப்றோம் எப்படி வெட்டுக்கிளி எல்லாம் ஃப்ரை பண்ணலாம்னு ஐடியா சொன்னிங்களா ?” சிரித்து கொண்டே வினவினாள்.
ஸ்ரீயை பார்த்து புன்னகைத்தவன், “ வெட்டுக்கிளி தான் நம்ம கிட்ட பாடுபடுது. ஆனா நம்ப தான் அதை ஃப்ரை பண்ண பார்க்கிறோம். “
“ இது என்ன புது கதையா இருக்கு. 
இருக்குற பயிர் எல்லாம் சாப்பிடுது. நீங்க விவசாயம் தான பண்றிங்க, உங்க பயிருக்கு ஏதாவது அப்படி வந்தா சும்மா இருப்பிங்களா. 
அப்போ உங்களுக்கு பொங்கும் தான. உங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா.
இப்படி போய் வெளிய உளறாதிங்க மாமா.  “
“ சரி இப்போ வெட்டுக்கிளி வருது . 
நீ இப்போ ஒரு ஷார்ட் டெர்ம் ரெமெடி மாதிரி அத மேல பூச்சி மருந்து தெளிப்ப..
அப்றோம்…இப்படியே வருஷா வருஷம் கன்டினியூ ஆனா என்ன செய்வ. “
“ அதுக்குன நீங்க வெட்டுக்கிளிக்கு சப்போர்ட் பண்ணாதிங்க மாமா. நான் காண்டாயிடுவேன். “ என ஸ்ரீ மிரட்ட, 
“நீ எப்போ இருந்து இந்த பாலை வன வெட்டுக்கிளி படைஎடுப்பு பத்தி நியூஸ் படிக்குற. உன் சின்ன வயசுல இது மாதிரி எல்லாம் படுச்சிருக்கியா ? “ பொறுமையாக கேட்டான். 
“ இல்ல மாமா. எல்லாம் இப்போ தான் கொஞ்ச நாளா. “
“ சரி உன்ன ஒரு கேள்வி கேக்குறேன் பதில் சொல்லு.  
உனக்கு சம்பளம் எதுவும் இல்லாம எவ்ரி இயர் கரெக்ட்டா ஒரு பர்டிகுலர் சீஸன்ல பாலை வன செடியெல்லாம் போய் வெட்டி கொண்டு வர சொன்ன செய்வியா ? “
“ மாட்டேன். “ 
“ கரெக்ட் அது தான். நீயோ நானோ யாரும் இப்படி செய்ய மாட்டோம். 
ஆனா பாலை வன வெட்டுக்கிளி செய்யும். அத கடவுள் அப்படி தான் படச்சிருக்காரு.
பாலை வனத்துல எவ்ரி இயர் செடி ஏதாவது நிறையா வளர்ந்த, மழை பெய்யும், அப்போ பாலை வனம் எப்படி பாலை வனமா இருக்கும், அது சோலை வனம்மா மாறிடாத. 
அத தடுக்க, சாதாரணமா அங்க சுத்திக்கிட்டு இருக்க வெட்டிக்கிளிக்கு நிறையா பசி வர மாதிரி அதோட ஹார்மோன்ஸ் வொர்க் பண்ணும். 
சோ அதுக்கு நிறையா பசி வந்தா தான். எக்ஸ்ட்ரா வளந்துருக்குற செடியெல்லாம் சாப்பிடும். சோ பாலை வனம் பாலை வனமா மெயின்டய்ன் ஆகும். 
நேச்சர்ல எப்படி காடு, வயல், சமவெளி நிலம் இதெல்லாம் முக்கியமோ, அத மாதிரி பாலை வனமும் முக்கியம். 
எந்த நிலமா இருந்தாலும் அதோட நேச்சர் மாறமா காபத்தறது ரொம்ப முக்கியம். 
பாலை வனத்த பாலை வனமா வச்சிக்குறதுல வெட்டிக்கிளியோட பங்கு ரொம்ப முக்கியமானது. “
கடுப்பான ஸ்ரீ, “ அப்போ அது அங்கேயே இருக்க வேண்டியது தானா. ஏன் நம்ப ஊருக்கெல்லாம் வருது ? ”
பொறுமையாகவே வாசு கேட்டான், 
“ அதோட ஊருல இருக்க அத யாரு விடுறா.
 நீ எங்க எல்லாம் பயிர் நடுவ. “
ஸ்ரீ, “ நம்ப வயல், தோப்பு, இங்க எல்லாம் தான். “
வாசு, “ ஆனா நம்ப மக்கள் பாலை வனத்துல பயிர் செய்யறாங்கா. அதுவும் நிறையா.
எந்த எடுத்துல பயிர் வளர்த்தாலும் இயற்கையா அங்க மழை பெய்யும். அப்போ வெட்டுகிளிக்கு ஹார்மோன் மாறும். 
அவ்ளோ பயிர ஒன்னு இல்ல ரெண்டு வெட்டுக்கிள்ளி எல்லாம் சாப்பிட முடியாது. நேச்சராவே அது இன பெருக்கம் பண்ணும். 
சோ எல்லாம் சாப்பிட்டு முடிஞ்சு. அவ்ளோ வெட்டுகிளிக்கும்  என்ன பண்ணும். முடிஞ்ச அளவு டிராவல் பண்ணும். அப்டி டிராவல் பண்றத்துலயே சில வெட்டுக்கிளி நார்மல் ஆயிடும்.
ஆனா சிலது மாற முடியாம இருக்கும் அதுக்கு நார்மல் ஆக சில டைம் எடுக்கும். சோ அது வரைக்கும் அது எங்க போகுதோ அங்கே எல்லாம் சாப்பிடிட்டு தான் இருக்கும். “
“ அப்போ இதுக்கு சல்யூஷன் இல்லயா மாமா. “
“ இருக்கு , பாலை வனத்துல விவசாயம் பண்றதுக்கு பதிலா மக்களுக்கு வேற தொழில் ஏற்படுத்தி தராளாம். அதுக்கான விஷயங்கள் சொல்ல நிறைய பேர் இருக்காங்க. 
ஆனா அவங்க சொல்றத நம்ப மக்களுக்கு பொறுமையா எடுத்து சொல்றத்துக்கு முயற்சி செய்ய பெருசா ஆள் இல்ல. அஃப்கோர்ஸ் கொஞ்சம் பேர் இருக்காங்க. 
பட் எல்லார்தையும் போய் ரீச் ஆக சில டைம் எடுக்கும் தானே. 
அப்படி நடந்து பாலை வனத்துல நிறையா விவசாயம் பண்றத விட்டாங்கனா. நிச்சயமா இந்த வெட்டுக்கிளி ப்ராப்ளம் நிறையா குறையும். பார்ப்போம்.
நம்ப நேச்சர்ல ப்ராப்ளம் பண்ண, நமக்கு நம்பல ப்ராப்ளம் கிரியேட் பண்ற மாதிரி தான்.  “ 
“ அப்போ அங்க விவசாயம் விட்ட அவங்களும் தான கஷ்டபடுவாங்க.  “
“ இந்தியா மட்டும் இல்ல உலகத்துல எல்லா இடத்துலையும் விவசாயம் பண்றவங்களுக்கு பசி எல்லாம் ஒன்னு தான். 
பாலை வன விவசாயிகளும் ரொம்ப நஷ்டபட்டு, ரொம்ப சிரம படுறாங்க.
ஆனா அவங்கள சரியான வழில கைட் பண்ண சரியான பெர்சன் வேணும். நம்ப நம்மாழ்வார் அய்யா மாதிரி. “
“ இது எல்லாம் உங்க ரிசயர்ச்சா மாமா. “ ஆர்வமாக கேட்டாள் ஸ்ரீ.
புன்னைகையுடன் வாசு , “ இதெல்லாம் நிச்சயமா என் ரிசயர்ச் இல்ல ஸ்ரீ , நம்ப ஊருலயே சில பேரு நல்லா  பண்றாங்க. அவங்க ஆர்டிகில்ஸ் எல்லாம் ரெப்புடட் அக்ரிகல்ச்சர் மேகஸின்ல வருது. அதெல்லாம் படிச்சு தான் தெரிஞ்சு கிட்டேன். “
வாசு இதெல்லாம் சொல்லி, ஆமாம் நான் தான் செய்தேன் என சொன்னாலும் ஸ்ரீ நம்பும் இடத்தில் தான் இருந்தாள். அவளுக்கும் ஒரு மகிழ்ச்சி வந்திருக்கும். ஆனால் அப்படி எல்லாம் செய்ய அவன் விரும்பவில்லை. அவன் மனதுக்கு அவன் உண்மையாக நடந்துகொண்டான்.   ‌
“ மாமா இங்க வர முன்னாடி என்ன வொர்க் பண்ணிட்டு இருந்திங்க ? “
“ சிங்கப்பூர்ல ஒரு ரெப்புடட் பிரைவேட் கண்ஸ்ட்ரக்ஷன்ல வொர்க் பண்ணிட்டு இருந்தேன். உனக்கு தெரிஞ்சிருக்குமே. “
“ தெரியும் மாமா. ஆனா இப்படி ஒரு கொஸ்டீன் கேட்டதுக்கு, ஒரு பக்க அளவு எக்ஷ்ப்லைன் பண்ணிங்கல, சான்ஸே இல்ல மாமா, 
உங்க கிட்ட வொர்க் பண்ண வொர்கர்ஸ் எல்லாம் உங்க கிட்ட ஒரு கொஸ்டீன் கேட்டா சட்டைய கழட்டிகிட்டு தெறிச்சு ஓட விட்டு இருபிங்கள. ஹா..ஹா… “ என சிரித்து சொல்ல, 
கடுப்பானவன் “ நீ ரொம்பபப  பார்த்த.  ஆளும் வாயும் பாரு. நல்லா எனக்குனு வந்து சேர்ந்திருக்க. 
உன் வீட்ல தேட மாட்டாங்க. கிளம்பு முதல. “ என சொல்லி மீதம் இருந்த கேக்கை கொஞ்சம் வாயில் போட்டான்.  
“ மாமா, யாரோ மதியம் வைட் பண்ணு, யாரு கிட்ட பேசுனுமோ, அவங்க கிட்ட பேசிக்கிறேன்னு சொன்னாங்க. அவங்கள பார்த்திங்களா . “
“ யார் அவன். எத சொன்னாலும் நம்புதுனு உன்ன மாதிரி ஒரு பேக்கு பொண்ணு கிட்ட அவன் உளறிருப்பான். 
அதயும் நம்பி வைட் பண்ணிருக்க பார்த்தியா. அங்க நிக்குற ஸ்ரீ…நீ அங்க நிக்குற… ஓஹ் சாரி இப்போ உக்காந்து இருக்கல்லா…பார்த்து சேர் உடஞ்சிட போகுது”
என கேக்கின் கடைசி துண்டை வாயில் போட்டு கொண்டே இவளை வாரினான். 
ஸ்ரீயின் டேபிள் அடியில் இருந்து அவள் கால்களால் ஒரு ஏத்து விழும் என எதிர்பார்த்தான். அதற்காக கால் எல்லாம் வேறு புறம் நகட்டி வைத்திதிருந்தான்.
என்ன இவள் ஒன்றும் செய்யவில்லை என அவளை சந்தேகமாக பார்க்க, 
அவன் யோசனையை படித்தவளைப் போல்,
“ மிஸ்டர் பைசன், இங்க சுத்தி குழந்தைங்க எல்லாம் இருக்காங்க அவங்க முன்ன நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் பண்ண மாட்டேன்.  
என்னோட பிளான்னே வேற.“ என கெத்தாக தலையை ஒரு புறம் சாய்த்து, கண்களை மூடி திறந்து சொன்னாள் ஸ்ரீ. 
“ ஆஆஆஆ….ஸ்‌ஸ்‌ஸ்…ம்மா… “ மெல்லமாக கத்தினான்.
“ஹா….ஹா…ஹா…”  
“ அம்மாஆஆஆ…..ஏய் என்ன பண்ணி வச்சிருக்கா…ஸ்‌ஸ்ஸ்‌ஸ்…” புரை ஏற இரும்பிக்கொண்டே மெலிதாக வாசுவிற்கு கண்ணில் கண்ணீர். கண்கள் எல்லாம் சிவப்பு ஏறியது.
“ நான் தான் மதியமே சொன்ன இல்ல மாமா..அழக்கூடாதுனு…சும்மா டாப்பின்ஸ் போடுற அப்போ ஒரு பச்ச மிளகா நறுக்கி கேக் அடியில வச்சதுக்கு…இந்த அழு அழரிங்க…ஹா.. ஹா…” என ஸ்ரீ சிரிக்க,
“ ஏய் ராங்கி, என்னை பச்ச மொளகா குடுத்து கொள்ள பாக்குற. உன்ன எல்லாம் நம்பி எப்டி கல்யாணம் பண்றது…. “ என இரும்பிக்கொண்டே சொன்னான் .
“ அப்போ கல்யாணம் பண்ணலாம்னு யோசிச்சிருக்கிங்க. “ என இவள் கண்கள் மின்ன கேட்க,
இவன் பேசாமல் அவளை முறைத்து பார்த்து, அங்கே இருந்த தண்ணி கேன் அருகே எழுந்து சென்றான்.  
‘ போச்சு டா. மறுபிடியும் மலை எறிட்டான். இவன இப்படியே விட்ட, வீட்டுக்கு போற வர மௌன விரதம் தான் இருப்பான் போலயே. இப்படி எல்லாம் விட்டா நமக்கு சரி வராது. ‘ என முடிவு செய்தவள் கிளம்பலாம் என மூன்று பேக்கையும் சரி பார்த்துக்கொண்டிருந்தாள். 
வாசு தண்ணீர் குடித்து பில் கொடுக்கலாம் என அங்கே கவுண்ட்டர் சென்றால், அவள் ஏற்கனவே கொடுத்து விட்டதாக சொல்லிவிட்டனர். 
ஸ்ரீ அமர்ந்திருந்த இடம் வேகமாக வந்தவன், அவளை பார்க்காமல், எங்கே பார்த்தால் ஏதாவது உளறிவிடுவான் என எண்ணினானோ என்னமோ, வேறு எங்கோ பார்த்து, பின் பக்க தலையை கோதிக்கொண்டே, 
“ எந்திரி கிளம்பு. லேட் ஆயிடுச்சு. “ ஐந்து மணி நெருங்கி இருந்தது.
“ நான் கையிலே இத்தன பேக் வச்சிருக்கேன்ல. ஒன்னு எடுத்துக்காலம்ல. “ அவள் தோளில் ஒரு ஹேண்ட்பேக், இரண்டு கைகளிலும் தலா ஒரு ஜிப் போட்ட ஷாப்பிங் துணி பேக்கில் அவள் வாங்கியே எல்லாம் சேர்ந்து உப்பி இருந்தது. அவள் ஷாப்பிங் செய்த போது தான் பச்சை மிளகாய் வாங்கி இருபாள் போல, அது ஒன்று வெளியே ஜிப்பின் வெளியே நீட்டிக்கொண்டிருந்தது.
அதை பார்த்தவனுக்கு இன்னும் காண்டாக, “ இந்த பேக் தூக்குற வேலை எல்லாம் என்கிட்ட நடக்காது. 
ஒழுங்கா நீயே தூக்கிட்டு வா. “ என முறைத்து சொல்லியவன், வேகமாக வெளி ஏற, 
“ ரொம்ப தான் பண்றான். இப்படியே விட கூடாதே “ என முனகிக்கொண்டே வெளியே வந்தாள் ஸ்ரீ.
அது சின்ன சந்து, அதனால் ஆட்டோ சிறிது நடந்து சென்று ஏறும் தூரத்தில் இருந்தது.
அவன் செல்லும் வேகத்திற்கு, கொஞ்சமாக ஓடி வந்து, அவன் வேகத்திற்கு வர, 
“ மாமா…”
அவன் திரும்பினால் தானே,  அவன் வேகத்தை அதிகப்படுத்த, 
“ மாமா நீங்க மக்குனு தெரியும், ஆனா இவ்ளோ மக்குனு தெரியாது. “  என இவன் சிரிப்பை அடக்கி இவனிடம் வாயை பிடுங்க பார்க்க,
நடந்து கொண்டே ஏகத்துக்கும் முறைத்துகொண்டு அவள் புறம் திரும்பியவன், “ வாய தொறந்த, அப்படியே போற வழில, ஆத்துல உருட்டிவிட்டு போய்ட்டே இருப்பேன். “ என எச்சரிக்க,
அந்த எச்சரிக்கையை தூக்கி தூர போட்டவள், “ நீங்க உருட்டி விட்ட, நான் ஸ்விம் பண்ணி வந்துடுவேன் மாமா. காவிரி கரையில வளர்ந்திருக்கேன், இதெல்லாம் தெரியாம இருக்குமா. 
பிளான் கூட மொக்காய்யா போடுறிங்களே.
ஒருத்தி உங்கள வாண்டெட்டா  இன்டர்வியூ எடுக்குறாள, என்ன விஷயம்னு யோசிக்காம களத்துள இறங்குறிங்க.  
இதுல என்ன பேக்குனு சொல்றிங்க…ஹா…ஹா…”
கடுப்பான வாசு, “ உன் கூட எல்லாம் மனுஷன் பேசுவான. உன்னால ஒழுங்கா வர முடியாதா. இப்படியே பேசிட்டு வந்தேனு வையேன், கார்த்தி ஆஃபிஸ்ல விட்டுருவேன். அப்புறோம் அவன் கூட போய்கோ. “
“ ஹா…ஹா…அதெப்படி மாமா என்கிட்ட பேசிக்கிட்டே, மனுஷன் என் கூட பேசுவானனு கேக்குரிங்க. 
அப்போ நீங்க மனுஷன் இல்லாயா. “
“ ஆமா, நீ தானா என்ன கொம்பு வச்ச பைசன்னு சொன்ன, அப்றோம்  பைசன் எப்படி அட்டாக் பண்ணுமோ. அப்படி உன்ன அட்டாக் பண்ணிடபோறேன். பார்த்து இருந்துக்கோ. “ என விறைப்பாக சொல்லி முன்னே சென்றான். 
எல்லாவற்றையும் உள்ளே வைத்துவிட்டு திரும்பி பார்க்க, வாசுவை காணவில்லை.
‘ நமக்கு முன்னாடி வந்தான், ஆள காணோம் ’ என இவள் திரும்பி வந்த வழியே பார்த்து ஒரு சில வினாடிகள் தேடி நின்றாள். இரண்டு மூன்று பேரை தவிர வேறு யாரும் பெரிதாக இல்லை. 
‘ எங்க போனான், இப்போ அப்படியே நம்பள நடுவுல விட்டுட்டான. ‘ என நின்ற இடத்தில் இருந்து ஒரு இரண்டு அடி முன்னே வைத்து கண்களில்  தேடலுடன் அங்கே இங்கே பார்க்க அவனை தேடிக் கொண்டிருந்தாள். 
இதே தனியாக வந்திருந்தால் இதெற்கெல்லாம் அசரமாட்டாள். அவனும் இத்தனை நேரம் கூட இருந்ததால், தீடிர் என இப்போது காணாமல் போகவும், என்னாச்சு என்ற தேடல் தான். ஆனால் தைரியமாய் தான் நின்றிருந்தாள்.
ஆட்டோகாரர்,
“ என்ன மா, இன்னும் யாராவது வர்ராங்களா .”
ஸ்ரீ, “ இல்லண்ணா அது…இன்னும் அவரு… “ என சொல்லிக்கொண்டே  திரும்பியவள் வாசு அவர் அருகில் அமைதியாக அமர்ந்திருப்பதை பார்த்ததும், இவளுக்கு  மூக்கு விடைத்தது.
வாய்க்குள் சிரிப்பை அடக்கி , தாடியை தடவிகொண்டே சிரிப்பை மறைத்து டிரைவர் பக்கத்தில் சாலையை நேராக பார்த்து நல்ல பையன் போல் அமர்ந்திருந்தான் வாசு. 
‘ அடேய் ‘ என நினைத்தவள், “ போலாம்ண்ணா. “ என சொல்லி இவனை முறைத்துக்கொண்டே உள்ளே அமர்ந்தாள்.
இருவரையும் தாங்கி அந்த ஆட்டோ பஸ் நிறுத்தம் நோக்கி பயணித்தது.
‘ பஸ்ல என்கூட தான வரணும் அப்போ உன்ன பார்த்துக்குறேன் மாமஸ்’ 
என புஸ் புஸ்சென மூச்சு விட்டு அடுத்தப் டாஸ்க்கில் இறங்கி இருந்தாள் ஸ்ரீ. ஆனால் பஸ் இவர்களுக்கு நினைத்தே பார்க்காத வேறு ஒரு டாஸ்க் வைத்திருந்தது. 
      

Advertisement