Advertisement

     எப்படியோ இவன் சிவகாமியிடம் தான் பார்த்துக்கொள்வதாய் சொல்லவும் அவருக்கு இவர்கள் குடும்பத்தில் ஒருவர் அவளுடன் இருப்பதாய் ஒரு நிம்மதி. மொபைலை அவளிடம் கொடுக்கும் படி சொன்னவர், அவளுக்கு வாசுவிடம் பார்த்து மரியாதையாக நடக்கும் படி சொல்லிவிட்டு இன்னும் சில அட்வைசை அள்ளி தெளித்துவிட்டு வைத்துவிட்டார்.
வாசு சிவகாமியிடம் பேசியது தொடங்கி, அவன் புன்னகைத்தது, அது இன்னும் விரிந்தது என எல்லாம் கவனித்த ஸ்ரீக்கு பொறுக்கவே முடியவில்லை,
“ இப்போ எதுக்கு இவ்ளோ சிரிப்பு, என்ன பார்த்தா சிரிப்பா வருதா உங்களுக்கு. நான் எல்லாம் கத்தியே இல்லாம பல சம்பவத்த செஞ்சிருக்கேன்.
 உங்க கிட்ட அதெல்லாம் காட்ட வச்சிராதிங்க. சொல்லிட்டேன். அப்புறம் தாங்க மாட்டிங்க“ என அவள் கண்கள் சுருக்கி மிரட்ட, 
கை கட்டி நன்றாக சாய்ந்து அமர்ந்தவனுக்கு ஒரு ஆர்வம், ‘ நேத்து நம்ம அந்த பாடு படுத்தினா. இன்னைக்கு நல்லா அனுபவிக்கட்டும்’ என நினைத்து 
 “ அப்படியா… உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ போ. “
“ மாமா அப்புறம் பின்னாடி அழக்கூடாது  நல்லா யோசிச்சிக்கோங்க. “
பார்த்துக்கலாம் என்பது போல் கண்ணை மூடி திறந்த்தான். 
பிறகு சிறிது நேரம் அங்கே இங்கே சுற்றி பார்த்துக்கொண்டு அமைதியாக அமர்த்திருந்தனர்.
வாசுவிற்கு ஒரு உணவாக தொழில் அதிபனாய் ஹோட்டலை ஆராயும் பார்வை, ஆனால் ஸ்ரீக்கு இவனை ஆராயும் பார்வை.  
ஸ்ரீக்கு அவனிடதில் கேட்டே ஆக வேண்டும் போல் இருந்தது, மெதுவாக ஆரம்பித்தாள், 
“ என்ன ஆச்சு, நான் என்ன கவனிக்கலனு சொன்னிங்க. எனக்கு நிஜமா புரில. “ என இவள் பொறுமையாக கேட்க, இவன் எழுந்து வெளி சென்றுவிட்டான. ஏன் டா இந்த பேச்சை விட மாட்டேன் என்கிறாள் என உள்ளே அழுத்தியது. 
இவன் இப்படி பண்ணுவான் என எண்ணாதவள், உட்கார்ந்த இடத்திலயே அப்படியே அமர்ந்து விட்டாள். 
‘ இப்போ நான் என்ன கேட்டுட்டேன். ஃபர்ஸ்ட் என்னமோ சொல்ல வந்த மாதிரி இருக்கு, சரி அப்போ ஏதோ மூட் சரி இல்லனு நினச்சு இப்போ பொறுமையா கேட்டா. இப்படி பண்றான். நான் என்ன தப்பு பண்ணேன். “ என நினைத்தவளுக்கு ஏதோ தனியாய் இருபது போல் ஒரு உணர்வு .
வாசு முதலில் இருந்தே அப்படித் தானே, ஏதாவது உடனே பேசமுடியா பேச்சென்றால் வெளியே தனியாக வந்து விடுவான். பிறகு கொஞ்சம் நிதானித்து தான் எதுவும் உள்ளே வந்து பேசுவான்.
வார்த்தைகளை விட்டுவிட கூடாது என்று பார்ப்பான். எல்லாரிடமும் இப்படி இல்லை, மிகவும் நெருங்கியவர்களிடம் அல்லது நெருங்கிய பேச்சு வரும் போது மட்டும் தான் இப்படி. இது அவனது இயல்பு, அதை கவனிக்க தவறினாள் ஸ்ரீ.
இந்த பேச்சே அவனுக்கு பிடிக்கவில்லை, இவன் ஏதாவது சொல்ல போய் ஸ்ரீ அவள் மீதே ஏதோ தவறு என மருகக் கூடாது என நினைத்து அவளுக்கு எதுவும் தெரிய கூடாது என நினைத்து சற்று தணிந்தே பொறுமையாக உள்ளே சென்றான்.
அவள் அமர்ந்த வாக்கிலயே, தலை குனிந்து மொபிலை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளிடம் இது வரை யாரும் இவ்வாறெல்லாம்  நடந்தது கிடையது. இதுவெல்லாம்  இவளுக்கு புதிது.
அவன் வருவான் என எதிர்பார்ர்க்க வில்லை போல, சென்றே விட்டான் என நினைத்தவள், யாரோ எதிரே அமர்வது போல் இருக்கவும் நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் கண்களில் மெல்லியே நீர் படலம் தெரிய, என்ன டா இது என்றாகி விட்டது வாசுவிற்கு, இப்போது தான் முதல் முறை சேர்ந்து வந்திருக்கிறோம், அதற்குள் இப்படியா என தோன்ற,
“ ப்ச் ஸ்ரீ. இப்போ எதுக்கு கண்ணுல தண்ணி வருது “ இவனுக்கு மனது கேட்கவில்லை.
“ பின்ன நான் கேட்டா எதுவும் சொல்லவும் மாட்டேன்றிங்க. நீங்க தான ஏதோ சொல்ல வந்திங்க.
நான் அழுத்தி கேட்ட, கோபமா சாப்பிடமா எழுந்து போறேன் சொல்றிங்க.
சரி பொறுமையா கேட்டா எழுந்தே போயிடிங்க. 
நான் உங்க பின்னாடியே வர்ரதால, என்ன ஈசியா நினச்சிடிங்க. “ என இவள் யோசித்த காரணத்தை இவனை பார்க்காமல் வேறு எங்கோ பார்த்துப் பேச,
“நான் உன்ன ஈசியான பொண்ணுனு நினைக்கல ஸ்ரீ . 
இங்க என்ன பாரு, இப்போ நான் இங்க தான உட்காந்து இருக்கேன். நீ என்ன ஆர்டர் சொன்னியோ அத தான் சாப்பிடப் போறேன். 
ஏதோ சொல்ல ஆரம்பிச்சேன் தான் ஆனா அந்த பேச்சு பிடிக்கல, அதான் விட்டுட்டேன். இப்படியெல்லாம் கண்ணுல தண்ணி வைக்காத “ என அவள் கண்களில் கண்ணீர் எட்டிபார்ப்பது பிடிக்காமல் அந்த பேச்சு போதும் என்பது போல் முடித்து விட்டான்.
இவள் இன்னும் மலை இறங்கவில்லை போலும், பார்வையை இவன் பக்கம் திருப்பவில்லை, கன்னங்கள் எல்லாம் சிவந்து மூக்கு விடைக்க அமர்ந்திருந்தாள்.
ஏதோ கையில் இருந்து சாக்லேட் பறித்த குழந்தையாய் இவள் இருக்க, அவளை எப்படி சமதான படுத்தவது என வாசுவிற்கு தெரியவில்லை. 
அவள் கைகளை கட்டி நன்றாக இருக்கையில் சாய்ந்து மெனு கார்டில் தலையை விட்டாள். இவன் அவளிடம் என்ன சொல்வது என தெரியாமல் அங்கே இருந்த நீரை எடுத்து பருகினான். பருகி கொண்டே அவளிடம் ஏதாவது பேசுவோம் என முடிவு செய்து, மெதுவாக முன்னே சாய்ந்தான்,
“ ஸ்ரீ..” மெல்லமாக அழைக்க,
“ நான் உங்கள எதுவுமே கேட்க மாட்டேன் மாமா. இப்போ லஞ்ச் வந்திடும். சாப்பிட்டு நம்ப ரெண்டு பேரும் கிளம்பலாம். “ என இவள் மெனு கார்டை பார்த்து சீரியஸாக சொல்லி கொண்டிருக்கும் போதே இவர்கள் ஆர்டர் செய்தது வர. 
இவனுக்கு இலையும், இவளுக்கு பௌலும் வட்டமாக இலை ப்ளேட்டும்  கொண்டு வந்திருந்தனர், அதில் தான் எல்லாம் பரிமாறினர். இருவரும் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தனர். 
ஸ்ரீ தான் அவனுக்கு பார்த்து பார்த்து பரிமாறினாள். கோபத்தில் அவன் முகத்தை கூட பார்க்க வில்லை, அவன் விரும்பி சாப்பிடும் வகைகள் என்ன என்று அவன் சாப்பிட சாப்பிடவே பார்த்து அங்கே சப்ளை செய்ய இருந்தவரிடம் கேட்டு எடுத்து வர சொன்னாள்.
வாசு எதுவும் சொல்லவில்லை, இது வரை வீட்டில் அம்மா, ஆச்சி, என எல்லாரும் இவன் விருப்பம் அறிந்து நிறைவாக பரிமாறுவர். அவர்கள் எல்லாம் இவனை சிறுவயதில் இருந்தே பார்த்தவர்கள், அன்பு காட்டியவர்கள். ஆனால் ஸ்ரீ இப்போது தான் பழக்கம், ஆனால் இவன் சுவை அறிந்து பரிமாறுவது அவ்வளவு இதமாக இருந்தது. 
அவள் வெறுமனே கொறித்து கொண்டிருந்தாள். இவன் என்ன இப்படி கொஞ்சமாக சாப்பிடுகிறாள் என பார்க்க, அவள் கண்கள் இவன் அப்பளத்தில் இருந்தது.
வாசுவிற்கு புன்னகை மீண்டிருந்தது. இவன் இன்னும் அப்பளத்தையே தொடவில்லை.
“ ஸ்ரீ அப்பளம் எடுத்துக்கோ. நான் அவ்வளவா சாப்பிட மாட்டேன். “
“ எனக்கு ஒன்னும் வேணாம். “ முறுக்கினாள் ஸ்ரீ.
“ சரி விடு நீ அப்பளம் எடுத்துகிட்ட உன்னோட புலாவ் கொஞ்சம் வாங்கலாம்னு பார்த்தேன். முடியாது போல. “ 
“ நான் எடுத்துகிறேன் மாமா. “ என விரைவாக அப்பளத்தை எடுத்தவள் அவனுக்கு இவள் பௌலில் இருந்து புலாவ் அள்ளி வைத்தாள்.
“ ஹேய் போதும்…நீ நல்லா சாப்பிடு முதல. அப்புறோம் வீட்டுக்கு போரத்துக்குள்ள இளச்சிட போற. “ என இவனுக்கு புன்னகையுடன் இயல்பாக பேச்சு வந்தது. 
டேபிலில் ஸ்பூன், ஃபோர்க் இருந்த கப்பில் இருந்த ஃபோர்க்கை எடுத்தவள், 
“ இங்க பாருங்க மாமா இன்னொரு தடவ என்னோட வெயிட் பத்தி பேசுனிங்க. இதலயே நல்லா கோடு போற்றுவேன். 
நீங்களும் ஒரு பைசன் தான். ஏதோ என்ன விட கொஞ்சம் உயரமா இருக்கரதால, வெளியே தெரியல. ரொம்ப அடாதிங்க. “ என ஃபோர்க்கை இடது கையில் வைத்து கண்களை சுருக்கி மிரட்டிக்கொண்டிருந்தாள்.
“ என்னை பார்த்து காட்டெருமனு சொல்லிட்டு என்ன பேச்சு பேசுற ராங்கி நீ. “ என புன்னகைத்தை கொண்டே வினவினான்.
ஸ்ரீயும் அவளை அறியாமலே மீண்டிருந்தாள், 
“ என்னது நான் ராங்கியா. அப்போ என்ன பார்த்த அப்படி தான் தெரியுதா. உங்க ஃபோன்ல கூட அப்டி தான் சேவ் பண்ணிருக்கிங்க. நானும் உங்க பேர மாத்துறேன். “ என கோபத்தில் உளறியவள், இவள் மொபைலை எடுத்து என்னமோ மாற்றினாள். பிறகு உர்ரென அவனை பார்க்க, அவன் கூர்மையாக முறைத்து இவளை பார்த்துக்கொண்டே அவன் தாடையை தடவ. 
“  என்ன முறப்பு இங்க. ஆமா உங்க ஃபோன்ன பார்த்துட்டேன். உங்கனாள ஆனத பார்த்துகோங்க. பெரிய இவரு. “ என அவனுக்கு நன்றாக கேட்கும் படி சொல்லிவவிட்டு நன்றாக அப்பளத்துடன் புலாவை காலி செய்ய ஆரம்பித்தாள், அவனும் விரைவாக உண்டான். ஸ்ரீக்கு கொஞ்சம் விக்கல் வர, வாசு பொறுமையாக தண்ணி எடுத்து கொடுத்தான்.
“ எனக்கு கை இருக்கு, நானே எடுத்துப்பேன். “ என முறுக்கியவள் அவள் வீட்டில் இருந்து கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீர் குடித்தாள்.  
இருவரும் சாப்பிட்டு முடித்து எழுந்தனர். இவள் பில்லை வம்படியாக கொடுக்க, வாசு அமைதியாக அவள் பணத்தை வாங்கி இவன் பாக்கெட்டில் வைத்தவன், அவன் பணத்தில் பில்லை கொடுத்தான். 
வெளியே வந்தும் இவள் இன்னும் ஊர்ரென இருக்க, “ ஏற்கனவே மணி 1.30 ஆயிடுச்சு. நான் 2.30 மணிக்கு கான்பரன்ஸ் நடக்குற இடத்தில இருக்கணும் .
கிளம்புர அப்போ முகத்த தூக்கி வச்சிருந்தனா, எப்படி போறது. “ இவன் அதையும் முறைத்து கொண்டே கேட்டான்.
“ _____” இவள் ஒன்றும் சொல்லாமல் நிற்க,
“ ப்ச் ஸ்ரீ. நான் இங்க ஒருத்தன் சொல்லிட்டு இருக்கேன்ல. “
“ நானும் தான் முக்கியமான வேலைக்கு போகணும். ஃபர்ஸ்ட் டைம் வெளியே வந்துருக்கோம். பக்கத்துல அங்க பிள்ளையார் கோவில் இருக்கு, அங்க போயிட்டு போலாமானா, வரப்போறேனு சொல்ல போறிங்களா என்ன, எப்படியும் முதுகில டின்னக்கட்டிக்கிட்டு கிளம்ப போறிங்க. அதுக்கு எதுக்கு இந்த அக்கற “ என இவள் எங்கோ பார்வை வைத்து வீம்பாக கேட்க, 
இவள் எண்ணம் இவனுக்கு புரிந்தது, இவன் புன்னகைத்துக்கொண்டே “ சரி “ என தலையாட்டி சொல்ல, 
இவன் சிரிப்பை நம்ப முடியாமல் பார்த்தவள், “ உங்களுக்கு என்கிட்ட சிரிக்கெல்லாம் தெரியுமா. அப்போ கூட பள்ளு தெரில, சரியான கொம்பு வச்ச பைசன் தான் நீங்க, நடங்க. “ என அப்போதும் தாளித்தாள். அவள் பேச்சிற்கு இணங்கி அவளுடன் கோவிலுக்கு நடந்தான்.
அது சிறு கோவில் தான் அங்கே சென்று இருவரும் எதிரெதிர் வரிசையில் நின்று இறைவனிடத்தில் கைகூப்பி நின்றனர். மனதுக்குள் ஒரு அமைதி பரவ, தரிசனம் முடிந்து இருவரும் வெளியே வந்தனர், ஒரு இதமான மனநிலையில் அப்படியே சாலையில் நடந்தனர் .
“ உனக்கு எவ்ளோ நேரம் வேல. “ என வாசு கேட்க, 
“ இன்னும் ஒன் ஹவர் இருப்பேன். அப்புறம் கிளம்பிடுவேன். “
வாசுவிற்கு அவளை தனியாக பஸ்ஸில் அனுப்ப மனமில்லை. 
“ எனக்கு கான்பரன்ஸ்ல ஒன் அண்ட் ஹவர் தான் வேல, நீ முடிச்சிட்டு இங்க எங்கயாவது வைட் பண்ணிறியா. நானும் வந்துறேன், சேர்ந்து பஸ்ல போலாம். “
ஸ்ரீ வாயில் கையை வைத்தாள், “ மாமா நீங்களா, இப்படி பேசுறிங்க. “
“ ஏய் வாயில இருந்து கைய எடு. யாராவது பார்த்த என்ன நினைபாங்க. உங்க வீட்ல சொன்ன என்ன பண்ணுவ.  “ இவன் அடிக்குரலில் அழுத்தம் கூட்ட,
அசரவே இல்லை அவள் சாதாரணமாகவே பதில் சொன்னாள், “  ஃபர்ஸ்ட் அப்பா கிட்ட சொல்லுவேன். அப்புறம் அம்மா, கார்த்தி தேனு எல்லார்கிட்டயும் சொல்லணும். “ 
இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது, எப்படி இப்படி சாதாரணமாக சொல்கிறாள். 
“ அது என்ன ஃபர்ஸ்ட் அப்பா. “ என இவன் தெரிந்து கொள்ள ஆர்வமாக கேட்க, 
“ அது, அப்பா கிட்ட நான் சொன்ன தான் கரெக்ட்டா இருக்கும். சின்ன வயசுல இருந்தே நான் என்ன சொன்னாலும் சரியோ தப்போ காது குடுத்து கவனிப்பாங்க. 
இதே மத்தவங்க பார்த்து வீட்ல சொன்னா, அப்பாக்கு கஷ்டமா இருக்கும். என்னை திட்ட மாட்டாங்க ஆனா நம்ப கிட்ட பொண்ணு முதல சொல்லலயேனு ஃபீல் பண்ணுவாங்க. 
இதே நானே சொன்னா, அது தனி தானே. தேனு என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்னாலும்,  என்னோட ஃபர்ஸ்ட் ஃப்ரெண்ட் எங்க அப்பா தான். “    
என சுந்தரத்தை பத்தி ஆர்வமாக சொல்லிக்கொண்டடு இவனுடன் நடந்து வந்தாள். 
சற்று இடைவெளி விட்டு இவள் அருகில் நடந்து வந்த வாசுவின் கண்களில் தெரிந்த வலியை அவள் படிக்கவில்லை, அவனுடய அப்பா இப்படி இல்லையே என ஒரு ஏக்கம் அந்த நொடி அவனுள் விரவியது.
இந்த நிமிடம் இவனுக்கு சுந்தரத்தை அவ்வளவு பிடித்தது. மகளுக்கு எந்த அளவு நம்பிக்கை கொடுத்திருக்கிறார் என உள்ளுக்குள் ஒரு மெச்சுதல். 
அதையும் விட இவனது ராங்கி மேல் உள்ள பிரியம் ஒரு புதிய வேர் விட்டு இவன் நெஞ்சின் அடிவாரத்தை நோக்கி தன் முதல் பயணத்தை ஆரம்பித்தது. 
இவன் இதையெல்லாம் யோசித்து மெதுவாக நடந்து கொண்டிருந்ததால், இவனது ராங்கி அதற்குள் பேசிகொண்டே முன்னே சென்று இவனை விட்டிருந்தாள்.  
திரும்பி பார்த்தவளுக்கு, அந்த கூட்டதில் இவனை காணவில்லை. இவன் மெதுவாக நடந்து வருவதை பார்த்துவிட்டு, உஷ்ண மூச்சுகள் வெளியிட்டு நின்றிருந்தாள். வாசு அருகில் வந்ததும்,
“ நீங்க லேட் ஆச்சு லேட் ஆச்சுனு குதிச்சிக்கிட்டு இருந்திங்க. இப்போ லேட் ஆகாத, நான் சொன்னதே கவனிக்கல நீங்க, அப்படியே பராக்கு பார்த்துட்டு வரிங்க. “ என இவள் சன்ன குரலில் திட்ட, 
“ ஆமா அப்படித்தான் வருவேன். என்னன்ற இப்போ. “ என எகிறினான்.
“ சரி அப்போ நான் என் வேல முடிஞ்ச உடனே கிளம்புறேன், நான் வைட் பண்ண மாட்டேன். “ என இவள் பதில் பேச,
வாசு சட்டையின் கையை மேல ஏற்றியவன் “ போ, போய் தான் பாரேன். 
எங்க யார்கிட்ட பேசனுமோ அவங்க கிட்ட பேசிக்கிறேன். “ என மிரட்ட
ஆச்சர்யமாக அவனை தான் பார்த்து நின்றாள். எப்படி உரிமையாக பேசுகிறான். ஆனால் வாயை திறந்து இவன் விருப்பத்தை சொல்ல மாட்டேன் என்கிறான் என தான் அவனை விழி விரித்து பார்த்திருந்தாள்.
அவள் முகத்தை பார்த்த வாசுவிற்கு தான் மிகவும் உரிமையாக பேசுகிறோம் என தெரிந்தது.
“ சரி ஸ்ரீ நான் ஆட்டோல கிளம்புறேன். “ என இவளிடம் தலையசைத்து கிளம்ப  சற்று தூரம் சென்று திரும்பி வந்தான். 
இவள் அவன் செல்லும் போதும் பார்த்து தான் நின்றிந்தாள், இப்போதும் அப்படியே தான் நின்றிருந்தாள்.
“ நான் வரத்துக்குள்ள உனக்கு லேட் ஆச்சுனா நீ கார்த்தி ஆஃபிஸ் போய்டு. அதான் சேஃப். எப்படியும் அவன் ஏழு மணி பக்கம் தன் கிளம்புவான். தனியா பஸ்ல போகாத. இங்க இருந்து ஜஸ்ட் 10 மினிட்ஸ் தான் கார்த்தி ஆஃபிஸ் . ஒரு நிமிஷம் இரு ” என சொல்லியவன் யாருக்கோ மொபிலில் அழைத்தான், ஒரு ஆட்டோ இவன் அருகில் வந்தது.
வாசுவிற்கு மிகவும் தெரிந்தவர் போல, வயதானவர், வந்ததும் இவனுடன் நன்றாக பேசினார். இவளை அருகில் அழைத்தவன்,
“ அண்ணா இவங்க என் ரிலேஷன். அவங்க எங்க எல்லாம் போணுமோ அங்க பார்த்து கூட்டிட்டுபோய்ட்டு வாங்க. உங்க நம்பர் அவங்க கிட்ட தரேன். நான் ஈவினிங் குள்ள வந்துடுவேன், அப்டி லேட் ஆச்சுனா  இந்த  **** பேங்க் இருக்குள்ள அங்கே இவங்களா விட்டுடுங்க. “ என அவருக்கு சொல்லியவன் அவர் வேண்டாம் என மறுக்க மறுக்க அப்போதே அதற்கான பணத்தை கொடுத்தவன், அதே போல் அவர் மொபைல் நம்பரை ஸ்ரீயிடம் தந்தான். பிறகு கார்த்திக்கு அழைத்து விவரம் சொன்னான், அவரின் அழைப்பேசி எண்ணையும் கார்த்திக்கு அனுபினான்.
இத்தனை செய்தும் அவள் அருகில் வந்தவன், “ பத்திரமா இருந்த்துக்கோ “ என கண்ணில் அக்கறையை தேக்கி சொன்னான்.
வாசுவின் இத்தனை ஏற்ப்பாட்டைப்  பார்த்தவளுக்கு வாயே வரவில்லை, உள்ளம் வரை நனைந்தது. இவளால் சரி என மட்டும் தான் தலையாட்ட முடிந்தது.
பிறகு வேறு ஒரு ஆட்டோவில் ஏறி சென்றுவிட்டான். செல்லும் அவனை தான் கண்களில் நேசத்துடன் பார்த்து நின்றிருந்தாள் ஸ்ரீபத்மா. இன்னும் இந்த நாள் இருவருக்கும் என்ன சுவாரசியங்களை வைத்திருக்கிறது என அவர்கள் இருவருக்கும் தெரியவில்லை.  

Advertisement