Advertisement

    “ என்ன பண்ணிட்டு இருக்க நீ ?” ஸ்ரீயை பார்த்து வேண்டும் என்றே சண்டை கோழியாய் காண்பித்து கொண்டு அடிக்குரலில் கேட்டான்.
“ நான் டவுன் வரைக்கும் போய்ட்டு இருக்கேன் மாமா. “ என வெளியே பயத்தையே காட்டாது சாதாரணமாக சொன்னாள் ஸ்ரீ.
“ எதுக்கு ? “ கூர்மையாக கேட்டான், இன்று இவனும் அங்கே தான செல்கிறான், அதனால் ஒரு முன் எச்சரிகைக்காக கேட்டான்.
“ நான் ஒரு புது பிசினஸ் ஸ்டார்ட் பண்ண போறேன். அதுக்கு கொஞ்சம் விஷயம் தெரிஞ்சிக்கணும். அதுக்கு தான் திருச்சி வர போறேன். “
“ அதுக்கு எதுக்கு என்ன ஃபாலோ பண்ற மாதிரி வர. “
“ ஆமா மாமா, உங்களயும் தான் ஃபாலோ பண்றேன், வேல முக்கியம் அளவுக்கு வாழ்க்கை முக்கியம் தானே, சோ அதான் இப்படி. “ பயம் எல்லாம் பறந்து விட்டது போல அசராமல் சொன்னாள்.
வாசுவிற்கு தாடையெல்லாம் இருக்கியாதோ, “நான் தான் டைம் வேணும் சொன்னேன்ல. 
இது வரைக்கும் பின்னாடி வந்த ஓகே. இனிமே ஃபாலோ பண்ணாத, நான் ஒரு முக்கியமான கான்பரன்ஸ்க்கு போய்ட்டு இருக்கேன்.
இதுக்கு மேல பின்னாடி வந்தேனா தொலச்சிடுவேன் உன்ன “ கடினமாக சொன்னான். எங்கே இப்படி பின்னால் வந்தால் யாராவது பார்த்து இவள் வீட்டிலோ அல்லது இவன் வீட்டிலோ சொல்லிவிடுவார்களோ என்ற எண்ணம். இவன் வீடலாவது தெரிந்தால், இவன் எல்லாம் தான் செய்ததாய் சொல்லி விடுவேன். ஆனால்  ஸ்ரீயின் வீட்டில் என்ன நினைப்பர்.
ஸ்ரீக்கு கோபம் வந்து விட்டது, “ நான் வருவேன். உங்கனால முடிஞ்ச தொலசிக்குங்க. “ என ஸ்‌கூடியை  எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.
வாசுவிற்கு தலை முழுவதும் வெப்பம், இவள் செயல்கள் சிறுபிள்ளை தனமாய் தெரிந்தது. 
   ஸ்ரீக்கு இவன் என்ன கான்பரன்ஸ் செல்கிறான் என தெரியும், வாட்சப்பில் கிருபா மெசேஜ் செய்திருந்தான். ஸ்கூடியில் அவன் கடையை நோக்கி சென்றவளுக்கு அவ்வளவு கோபம்.
‘ மாமா எங்க போன என்ன, நான் என் வேலையே பாக்க போறேன், போற முன்னாடி சும்மா கடையிலே ஏதாவது செய்யலாம்னு பார்த்த, இப்படி பேசுறான். ’ 
கோபத்துடனே வாசுவின் கடையின் அருகே சென்றவளுக்கு அதற்கு மேல் வண்டி நகரவில்லை, டாங்க் காலியாகி இருந்தது. 
அதற்குள் வாசுவும் இவனின் கடைக்கு வந்துவிட்டிருந்தான். வந்தவன் இவள் நிற்பதை பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமலே உள்ளே சென்று விட்டான். 
‘ போச்சு டா. என்ன பண்றது. ‘ என யோசித்தவள், வெளியே இருந்தே கிருபாவிற்கு மெசேஜ் அனுப்பினாள். 
“ அண்ணி வாங்க ஏன் வெளியேவே நிக்குறிங்க. வெளிய வர சொல்லி மெசேஜ் அனுப்புனிங்க. என்னாச்சு. “
“ ஹாய் வெப்பன் சப்லயர். ஒரு சின்ன ஹெல்ப். டாங்க் காலியாயிடுச்சு நான் டவுன் வரைக்கும் போறேன், நான் வரவரைக்கும் கடைக்கு முன்னாடி வண்டி நிக்கட்டுமா. “
“ என்ன அண்ணி என்கிட்ட போய் பர்மிஷன் கேக்குறிங்க. இது உங்க கட. நீங்க வண்டிய விடுங்க நான் பார்த்துக்குறேன் . “
“ ரொம்ப தாங்க்ஸ்ங்க. “
“ அட போங்க அண்ணி. இதுக்கு போய் தாங்க்ஸ் சொல்லிக்கிட்டு. சூடா வட இருக்கு, வாங்க வந்து சாப்பிட்டு போங்க. “
“ இருகட்டும்ங்க, இன்னைக்கு ஒரு முக்கியமான வேல, இன்னொரு நாள் வரேன். “
இவனிடம் சொல்லிவிட்டு அருகே பஸ் நிறுத்துமிடம் சென்றாள்.
ஒரு அரசமரம், அதன் அடியில் ஒரு பத்து பேர் நின்றிருபர், அவ்வளவே. அந்த சிறிய ஊர் தானே அதனால் இவ்வளவு தான் மக்கள் அங்கே வருவர் போவர். ஆனால் மினி பஸ் போக்கு வரத்து நிறைய உண்டு.
ஸ்ரீபத்மா அரசமரத்தடியில் நின்றாள். அங்கே நிற்பவர் எல்லாருக்கும் இவளை தெரியும். எல்லாம் சுற்றி முற்றி சொந்தம் பந்தம் தான். 
அதில் ஒருவர், “ என்ன கண்ணு, எப்படி இருக்க, எப்போ ஊருக்கு வந்த.
 வரப்போ வண்டில வந்த, இப்போ உங்க மாமா கடையில வண்டிய போட்டு வர. “ என அடுக்காய் கேள்வி கேட்டார்.
ஸ்ரீக்கு இவர்களை போன்றவர்களை மிகவும் பிடிக்கும். எதுவும் பின்னால் சென்று பேசாமல் தம்மிடமே கேட்கின்றாரே. 
“ நான் நல்லா இருக்கேன்க்கா. ஞாயிற்று கிழம வந்தேன்க்கா. 
டவுன் வர போலாம் பார்த்தேன். வண்டி டாங்க் காலியாயிடுச்சு. கட பக்கம் வந்ததும் தான் பார்த்தேன். அதான் மாமா கடையில போட்டு வரேன். “ 
அங்கே இருந்த பத்து பேருக்கும் கேட்டிருக்கும், அமைதியான சூழல் தானே, அதனால், அனைவரும் இவர்களின் பேச்சை தான் பார்த்திருந்தனர்.
பின் ஒருவர் மாற்றி ஒருவர் இவளை நலம் விசாரிக்க, தேனுவின் கல்யாணம் பின் இப்படி அனைவரிடமும் பேசுவது ஸ்ரீக்கு சந்தோஷமாக இருந்தது.    
கிருபா உள்ளே செல்ல,  வாசு அவனிடம் என்னவென்று கேட்க, அவன் காரணத்தை சொன்னான். சரி என கேட்டுக்கொண்ட வாசு, ஸ்ரீ பஸ்ஸில் செல்கிறாள் என்றதும் வாசுவிற்கு யோசனை .
எப்போதும் இங்கே ஊரில் அவள் அப்பாவுடன், இல்லை அண்ணனுடன், இல்லை தேனுவுடன் இப்படி தான் செல்ல பார்த்திருக்கிறான். அவ்வப்போது தனியாக செல்வாள் தான், ஆனால் இப்போது தனியாக விட மனமில்லை. ஏதோ அவள் பாதுகாப்பு முக்கியம் என பட்டது. 
மணியை அழைத்த வாசு எதோ நாளை மறு நாள் செய்யும் கல்யாண ஆர்டர் இருப்பதால் பைக்கை எடுத்துக்கொண்டு சில தேவையான பொருள்கள் மட்டும் வாங்கி வரும் படி சொல்லி அனுப்பிவிட்டான் .
சற்று நேரம் பிறகு வாசு அவனது பையை எடுத்துக்கொண்டு மெதுவாக பஸ் ஸ்டாப் வந்தான்.  அதற்குள் அங்கே மூவர் மட்டும் தான் இருந்தனர். மற்றவர்கள் எல்லாரும் அப்போது தான் வேறு பஸ்ஸில் சென்றிருந்தனர். கூட்டமாக இருந்ததால் ஸ்ரீ அப்போது ஏறவில்லை. 
ஸ்ரீயுடன் ஒரு பெண்மணி குழந்தையுடன் நின்று பேசிக்கொண்டு இருந்தார். இவன் சென்றதும், பைக் இருந்தும் எதற்காக இவன் வந்தான் என யோசித்தாள் ஸ்ரீ. புரிந்து கொண்டவளுக்கு நம்பவே முடியவில்லை.
அந்த விரட்டு விரட்டினான், இப்போது வந்து நிற்கிறான், இந்த அக்கறையை வாயை திறந்து சொன்னால் என்ன என்று தான் தோன்றியது. 
பஸ் வந்து விட்டது.
சிறிது கூட்டம் கம்மியாக தான் இருந்தது. எல்லாரும் பஸ் ஏறிவிட்டனர்.
ஸ்ரீக்கும் அந்த பெண்மணிக்கும் உட்கார இடம் கிடைத்து விட்டது. ஆனால் வாசுவிற்கு இடம் கிடைக்கவில்லை. பின்னே கண்டக்டர் உடன் பேசி நின்று கொண்டு தான் வந்தான். முதுகில் இருக்கும் பேக்கை கூட கழட்டவில்லை.
டிரைவர் இருக்குமிடம் ஸ்ரீ அமர்ந்து இருப்பதால் அங்கே இருந்த கண்ணாடியில் வாசு நிற்பது நன்றாக தெரிந்தது. 
கண்டக்டரிடம் பேசிக்கொண்டு வந்தவன் முகத்தில் அத்தனை சிரிப்பு. இப்படியெல்லாம் ஸ்ரீயுடன் சிரித்ததில்லை, அங்கே இருக்கும் இலகு தன்மை இயல்பாக கூட ஸ்ரீயிடம் வெளிபடுத்தவில்லை. கார்த்தியின் திருமானத்தின் போது காட்சில்லா கூட்டத்தோடு இருந்த மலர்ச்சி கூட தன்னிடம் காட்டவில்லை என தோன்ற ஸ்ரீக்கு உள்ளே ஏதோ குறைவதாய் ஒரு எண்ணம். ஆனால் முகத்தில் ஒன்றும் காட்டவில்லை. எல்லாம் போக போக சரியாகி விடும் என தேற்றிக்கொண்டாள்.  
பிறகு கூட்டம் வெகுவாக குறைய, வாசு நடுவில் ஏதோ இருக்கையில் அமர்ந்து கொண்டான். இப்போது ஸ்ரீ மட்டும் தான் தனியாக அமர்ந்திருந்தாள்.
ஜன்னல் ஒர பயணங்கள் வாசுவிற்கு மிகவும் பிடித்தமானவை. பஸ்ஸில் ஒரு பத்தே பேர் தான் இருந்தனர். இப்போது வாசுவின் பார்வை முழுவதும் ஸ்ரீயின் மீது தான். 
         காலையில் வீட்டில் நடந்த பேச்சுகளில் அப்பவே தன்னை நம்பவில்லை, அந்த பேச்சு பேசுகிறார், இன்னும் இவனை ஒரு ஆளாய் கூட வீட்டில் அவர் மதிப்பதில்லை. 
ஆனால் ஸ்ரீ எத்தனை நம்பிக்கையோடு இவனிடம் வந்து விருப்பத்தை சொல்லிவிட்டாள். என்ன தெரியும் அவளுக்கு இவனை பற்றி சொந்தம் என்பதை தாண்டி இவன் என்ன செய்கிறான், என்ன செய்யவிருக்கிறான் ஸ்ரீபத்மாவிற்கு பெரிதாக எதுவுமே தெரியாது. 
இதெல்லாம் யோசித்தவனுக்கு அவளது நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என ஒரு எண்ணம். இன்னும் இன்னும் பெரிதாக உழைக்க வேண்டும், ஸ்ரீபத்மாவை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என ஒரு எண்ணம் மிக ஆழமாய் வேர் விட தொடங்கியது. 
சில உறுதியான முடிவுகள் ஜன்னல் ஓரங்களில் தானே பூக்கின்றது. 
அப்படியே கண்கள் மூடி பின்னே சாய்ந்தான், 
கோடி சுகம் வாராதோ 
நீ எனை தீண்டினால் 
காயங்களும் ஆறாதோ
நீ எதிர் தோன்றினால் 
என பஸ்ஸில் பாடிக்கொண்டிருக்க, வாசுவின் கண்கள் தானாக திறந்து ஸ்ரீயை தான் பார்த்தது. ஆனால் ஸ்ரீயோ பஸ்ஸில் இருந்த டி‌வியில் படிக்கொண்டிருந்த பாடலை சின்சியராக பார்த்துக்கொண்டிருந்தாள். 
அந்த பாடல் முடியும் வரை வாசுவின் கண்கள் ஸ்ரீயை விட்டு நகரவில்லை. அவளை பார்த்தாலே உள்ளுக்குள் ஒரு நிம்மதி. தன்னை தனக்காகவே நேசிக்க, வாழ்க்கை முழுவது பயணிக்க தயாராய் இருக்கும் ஒரு பட்டாம்ப்பூச்சி.
அடுத்த நிறுத்ததில் ஏதோ திபு திபு வென காலேஜ் கூட்டம் ஏற, வாசுவிற்கு பாதியிலேயே ஏதோ நின்ற உணர்வு. பெருமூச்சுடன் திரும்பி கொண்டான். 
பூக்கூடையுடன் வயதான ஒரு பெண்மணியும் ஏற, ஸ்ரீ உதவ சென்றாள், இவள் இடம் பறிபோனது.
பூக்கூடையை உள்ளே இறக்கியே ஸ்ரீயின் மருதாணி கரங்களை தன் கைக்குள் பொத்தி வைத்து பாதுக்காக வேண்டும் போல் வாசுவிற்கு ஒரு உணர்வு . 
ஸ்ரீயும் படியின் அருகே நின்றுகொண்டாள். யாரோ ஒருத்தன் மெல்லமாய் ஏதோ முன்னே பின்னே சென்று கொண்டிருந்தான். வாசு முதலில் கவனிக்கவில்லை, இறங்கும் படியின் அருகே ஸ்ரீ நிற்பதால் அவளும் கவனிக்கவில்லை. ஆனால் எப்படியோ ஸ்ரீ அருகே வந்துவிட்டான்.
இப்போது தான் வாசுவின் கண்ணில் பட்டான். பார்க்க நிச்சயமாக கல்லூரியில் படிப்பவன் போல் இல்லை. பார்த்த மாத்திரத்திலே ஏதோ அவன் சரி இல்லை என பட வாசு எழுந்து ஸ்ரீயின் அருகே எப்படியோ முந்தி சென்று விட்டான். 
ஸ்ரீயின் அருகே அவள் கை மேல் தெரியாதது போல் கை வைக்கச் சென்றான் அந்த புதியவன். அவன் வைக்க போகும் அடுத்த நொடி அவன் கை வாசுவின் கையில் சிக்கியது, யாரும் பார்க்காதவாரு.
ஸ்ரீக்கு இப்போது தான் திரும்பி பார்த்தாள். வாசு மிக அருகில் இருந்தான். ஸ்ரீக்கு ஒரு ஆச்சர்யம், வாசுவா இத்தனை அருகில், ஆனால் வாசுவின் முகம் சாதாரணமாக இருந்தது. அதனால் அவள் திரும்பி கொண்டாள். ஆனால் அவள் மனதில் வாசு அப்படி ஒன்றும் கண்டுகொள்ளாமல் இல்லை என தோன்ற, தானாக ஒரு முறுவல் அவளிடம். அவளுக்கு நடந்தது எதுவும் தெரியவில்லை.
வாசுவின் முகம் சாதாரணமாக வெளியே பார்த்திருந்தது. அருகில் நின்று பார்பவருக்கு கூட ஒன்றும் தெரியாது. ஆனால் வாசுவின் கைகள் ரௌத்திரம் காட்ட அந்த புதியவனை தான் வாசுவை பார்த்து பயத்தில் நின்றிருந்தான். அவன் கை வாசுவின் கையில் சிக்கிக்கொண்டிருந்தது. புதயவனின் கை விரல்கள் அத்தனையும் வாசுவின் கைவிரல்கள் பதம் பார்த்தன. புதியவனின் கண்கள் வாசுவை பார்த்து கண்களால் கெஞ்ச, வாசு இவனை பார்த்தால் தானே. ஒரு கட்டத்தில் முடியாமல் கத்தியே விட்டான் அந்த புதியவன்.
டிரைவர் வண்டியை நிறுத்தி விட்டார். இன்னும் இரண்டு நிமிட தூரத்தில் தான் ஸ்டாப். எல்லாரும் என்னப்பா என கேட்க, அவன் காலை யாரோ மிதித்துவிட்டதாக கூறி எப்படியோ சமாளித்து இறங்கிவிட்டான். 
அடுத்த இரண்டு நிமிடத்தில் நிறுத்தம் வந்துவிட்டது. ஸ்ரீயும் வாசுவும் இருவரும் கூட்டதோடு இறங்கி விட்டனர்.  இறங்கியதும் வாசு இன்னமும் அந்த புதியவன் இறங்கிய இடத்தை தான் சீற்றத்தோடு  பார்த்துக்கொண்டிருந்தான். ஸ்ரீக்கு எதுவுமே தெரியவில்லை. 
ஸ்ரீக்கு நம்பிடவே முடியவில்லை. இப்படி ஒரு எதிர் பார பயணம் வாசுவுடன் அமையும் என்று இன்று காலை கூட நினைத்ததில்லை. எல்லாம் தானாய் அமைந்தது. வாசு வெளியே சொல்லாவிடிலும் இவளுக்காக தான் வந்தான் என ஸ்ரீயால் யூகிக்க முடிந்தது. ஸ்ரீக்கு உள்ளே ஒரு மகிழ்ச்சி இளையோடியது. அப்படியே அந்த உற்சாகமாய் அவள் முகத்தில் பிரதிபலித்தது.
மணி ஒன்றை நெருங்கி இருந்தது. அவளுக்கு பசித்தது. அதுவும் வாசுவுடன் இருப்பதால் சேர்ந்து சாப்பிடலாம் என தோன்ற, வாசுவை பார்த்தாள். அவன் கூப்பிட்டால் வருவான் என நம்பிக்கையே இல்லை, இருந்தாலும் ஒரு முயற்சி செய்து பார்போம் என தோன்ற, அவன் கவனம் இங்கே இல்லை என தெரிய, அவன் அருகில் சென்றாள், 
“ மாமா…”
என்ன என்பது போல் இப்போது தான் இவள் புறம் திரும்பினான். அவன் கண்களில் என்ன பார்த்தாளோ, 
“ ஏன் மாமா டென்ஷன்னா இருக்கிங்க. அன்னைக்கு மாதிரி நான் உங்கள ஒன்னும் உங்கள பண்ணமாட்டேன். ப்ரீயா இருங்க “ என இவள் சக்கரையாய் அக்கறை காட்ட,  
வாசு இருந்த நிலை மாறி அப்படி ஒரு சிரிப்பு அவனுக்கு, அவன் அதை மறைக்க, இவளை விட்டு சிரிப்புடன் முன்னே நடக்க, 
‘ இப்போ என்ன சொல்லிட்டோம் இவன் ஓடுரான். ‘ என தோன்ற வாசுவின் பின்னே ஆட்டுக்குட்டியாய் சென்றாள். அவனது வேகத்திற்கு இவள் நடக்க முடியவில்லை, ஓட தான் முடிந்தது. இவளுக்கு மூச்சு வாங்கியது, 
“ மாமா ஒரு நிமிஷம். உங்க அளவுக்கெல்லாம் என்னல ஓட முடியாது ஸ்லோவா போங்க. அப்றோம் நான் மயக்கம் போட்டு விழுந்தா, மக்கள் எல்லாம் கூடிருவாங்க.
என் முகத்துல தண்ணி தெளிச்சு கேட்டா, ஒரு தெளிவில்லாம நீங்க தான் என் ஹேண்ட் பேக் எடுத்து ஓட பாத்திங்கனு சொல்லிட்டா, அப்றோம் உங்கள புடிச்சுகுவாங்க. 
இதெல்லாம் தேவையா உங்களுக்கு. அதனால் நம்ப ஃபர்ஸ்ட் சாப்பிடலாம். அப்றோம் ரன்னிங் ரேஸ் விடலாம். ஓகே. “ என ஸ்ரீ வாசுவுடன் நடந்து கொண்டே ஆர்வமாய் கேட்க, 
“ உடம்பு பூரா கொழுப்பு உனக்கு.” என இவன் அவளை முறைத்து நடந்தான். 
“ அட ஆமா, எனக்கு கொழுப்பு தான், யாரு இல்லைனு சொன்னா.
எப்படியும் அத கரைக்க தான் உங்க கூட கடைசில ரன்னிங் ரேஸ் வரேன் சொல்றேன்ல. அப்றோம் என்ன.
சீரியஸ்ஸா பசிக்குது மாமா…ஏதாவது ஹோட்டல் போலாமா. “ என இவள் பாவமாய் சொல்ல, 
அவனுக்கும் ஒரு காஃபி குடித்தால் பரவாயில்லை என தோன்ற சரி என தலையாட்டினான். ஸ்ரீக்கு இதுவும் நம்பிடவே முடியவில்லை. ஆச்சர்யம் மேல் ஆச்சர்யம் என அவனை தொடர்ந்து சென்றாள்.
இருவரும் அங்கே அருகில் இருந்த ஒரு ஹோட்டலுக்கு சென்றனர். இதுவே வாசு மட்டும் என்றால் எங்காவது அருகிலயே காஃபி அருந்திவிட்டு சென்றிருப்பான், இப்போது ஸ்ரீ பசிக்குது எனவும் அவளுடன் வந்துவிட்டான். 
ஃபேமிலி டேபிலில் அமர, ஸ்ரீ மெனு கார்ட்டை ஆராய, வாசுவின் முகம் ஏதோ தீவிரமாய் யோசிக்க, நிமிர்ந்து பார்த்த ஸ்ரீ என்ன யோசனை என்று கேட்க ஒன்றும் இல்லை என்று விட்டான். 
வாசு காஃபி அருந்த,
ஸ்ரீ, “ மாமா என்ன லஞ்ச் சாப்பிடுறிங்க . “
“ இல்ல. வேணாம். “
“ மாமா..என்ன இது ரெண்டு பேரும் சேர்ந்து தான சாப்பிட வந்தோம். இப்போ இப்படி சொல்றிங்க. “
“ நீ உன்ன சுத்தி என்ன நடக்கதுனு நல்ல கவனிக்கணும் ஸ்ரீ. “
“ நான் இப்போ என்ன கவனிக்கல. “
“ நான் அப்டி சொல்லல. சரி விடு. நானும் சாப்பிடுறேன். ஏதாவது ஆர்டர் பண்ணு. “
“ மாமா இப்படி சொன்ன எப்படி, என்னனு டீடெயிலா சொல்லுங்க. “ என இப்போது இவள் குரலில் உறுதியாக கேட்க, இவனுக்கு ஏன் டா இதை ஆரம்பிதோம் என்றிருந்தது.
இருந்திருந்து இப்போது தான் இருவரும் ஒன்றாக சந்தர்பவசத்தால் வெளியே வந்திருக்கின்றனர். எடுத்ததும் ஒரு அசவுகரியமான பேச்சு கொண்டு போக அவன் விரும்பவில்லை. இந்த அளவிற்கும் ஸ்ரீயின் மீது தவறு இல்லை என தெரியும் , இருந்தும் சுற்றி ஒரு கவனம் இல்லாமல் இருந்து விட்டாள் என ஒரு எண்ணம்.
“ இப்போ நான் சாப்பிடரத வேணாமா. “ என அவன் எழ போக, 
“ எழுந்திங்கன்னா தெரியும். இந்த ஜக்ல இருக்க தண்ணி முழுசும் உங்க மேல தான் ஊத்துவேன். 
நான் என்னனு கேட்டது ஒரு தப்பா. நான் எதுவும் கேட்கல என்கிட்ட தான் உங்க கோபம் எல்லாம். 
கண்டக்டர் கிட்டலாம் நல்ல சிரிச்சிக்கிட்டு தான பேசுரிங்க. “ என இவனை மிரட்டிய படி அவள் ஆதங்கத்தை காட்ட,
 . இப்போது வாசுவின் கண்ணில் சுவாரசியம் வர அப்படியே அமர்ந்தான். அதை ஸ்ரீயை கவனிக்க விடாமல் ஆர்டர் எடுக்க ஹோட்டல் ஊழியர் வரவும், அவரிடம் ஸ்ரீ அவள் அவனுக்கு மீல்ஸ்ஸும் இவளுக்கு வெஜ் புலாவ்வும் ஆர்டர் செய்து விட்டு திரும்புவதற்குள் இவன் பார்வையை மாற்றியிருந்தான். 
 ஆர்டர் செய்துவிட்டு இவள் மொபைல் எடுத்து சிவாமிக்கு அழைத்தாள், எங்கே இருக்கிறாள், எப்போது வந்தாள், என்ன செய்கிறாள் என சொல்லியவள், வரும் போது வாசுவை பஸ்ஸில் சந்தித்து, இப்போது சாப்பிட அமர்த்திருப்பதாய் சொல்லிவிட்டாள்.
வாசுவிற்கு தான் சிறிய அதிர்ச்சி, எப்படி இப்படி வீட்டில் சொல்லிவிட்டாள். இவன் வீட்டில் தெரிந்தால் கூட பரவாயில்லை, ஸ்ரீக்கு ஒரு சொல் வருகிறது என்றால் இவனால் வீட்டில் பேசமுடியும். ஆனால் இவளை சிவகாமி அத்தை தவறாக நினைத்துவிட்டால், சரி எதுவென்றாலும் எல்லாம் தான் செய்ததாய் சொல்லிவிடுவோம் என்ற எண்ணம் வர அமைதியாகவே அமர்ந்திருந்தான்.. . 
இவன் இவ்வாறு நினைத்துக்கொண்டு அமர்ந்திருகையிலே, ஸ்ரீ இவனை முறைத்து கொண்டு மொபைலை இவன் புறம் நீட்டினாள். 
சிவகாமி இவன் நினைத்த அளவு கூட இவனை தவறாக நினைக்கவில்லை. பிள்ளைகள் அனைவரையும் ஒன்றாய் நினைப்பவர் , இவனுடன் ஸ்ரீ இருப்பது பாதுக்காப்பு என்ற எண்ணம் தான் அவருக்கு. அது அவரின் பேச்சில் நன்றாக தெரிந்தது. இவனுக்கு தான் சிறிது குற்ற உணர்வாய் போனது.
இவள் ஒரு வங்கியில் பொறுப்பான பதவியில் இருப்பவள் என்பதை மறந்து ஏதோ பள்ளிக்கு செல்லும் பிள்ளையை நன்றாக பார்த்துக்கொள்ள சொல்வது போல் சிவகாமி சொல்ல இவனுக்கு புன்னகை தான் வந்தது. எத்தனை வளர்ந்தாலும் சிவகாமிக்கு இவள் குழந்தை தான் என்ற எண்ணம்.  
வாசுவிற்கு யாராவது இவனை இவளிடம் இருந்து சேதாரம் இல்லாமல் காப்பாற்றினால் நன்றாக இருக்கும் என தோன்ற இன்னும் புன்னகை விரிந்தது.  
ஸ்ரீக்கு சிவகாமியிடம் எதுவும் மறைத்து பழக்கமில்லை. சிறு வயதில் இருந்தே அப்படிதான். தப்பே செய்தாலும் வீட்டில் சொல்லி திட்டு வாங்கிகொள்வாளே தவிர, எதையும் மறைக்க மாட்டாள். ஆனால் இவள் இப்போது மறைப்பது வாசுவின் மேல் உள்ள விருப்பத்தை மட்டும் தான். அவன் அன்றே சரி என சொல்லி இருந்தால், இவள் வீட்டில் சொல்லியிருப்பாள். ஆனால் கிராதகன் வாயை இன்னும் திறக்கவில்லை. 
 
     

Advertisement