Advertisement

கார்த்தி தான் அவள் இறுதி ஆண்டில் இருக்கும் போது இரண்டு நாள் குடும்பத்தை சென்னை கூட்டி சென்றான். அப்பொழுது அவன் அங்கே தான் வேளையில் இருந்தான். நேஷனலைஸ்ட் பாங்க் ஒன்றில் அசிஸ்டண்ட் மேனேஜராகா பணியாற்றிக் கொண்டிருந்தான். அவனுக்கு இந்த சூழ்நிலையை குடும்பத்திற்கு காட்ட வேண்டும் என்று ஒரு ஆவல். அம்மா, அப்பா, தங்கை என்று அனைவரையும் அவன் வேளை செய்து கொண்டிருந்த கிளை அலுவலகத்திற்கு அழைத்து சென்றான். வாடிக்கையாளர்கள் அமரும் இடத்தில் அமரவைதான். சிறிது நேரம் சென்று மேனேஜரிடம் குடும்பதை அறிமுக படுத்தலாம் என்ற எண்ணத்துடன்.  ‌அங்கே அமர்திருந்த போது தான் ஸ்ரீ அலுவலகத்தை கவனித்தாள் நன்றாக கவனிதாள். ஊரில் இருக்கும் போது அவள் அப்பாவுடன் செல்வது தான், ஆனால் அப்பாவிற்கு ஃபார்ம் பூர்த்தி செய்ய உதவுவது, டெபாசிட் செய்வது, பணம் எடுப்பது என்று ஒரு வாடிக்கையாளர் நோக்கிலே அவள் பார்த்து இருக்கிறாள். 
முதல் முதலாக அவள் அண்ணன் பணி செய்யும் போது ஒரு வங்கி பணியாளர் நோக்கினில் எல்லாவற்றையும் கவனித்து கொண்டிருந்தாள். எத்தனை மக்கள், எல்லாருக்கும் எல்லாம் தெரிந்து விட வில்லை. எத்தனை விளக்கங்கள், எத்தனை கேள்விகள், எத்தனை அவசரம், எத்தனை காத்திருப்புகள். இது ஒரு மக்களை நேராக சந்திக்கும் பணி, சில சமயம் மனதிருப்தி, சில சமயம் சவால்கள் என இருக்கும் பணி. அப்பொழுது தான் ஸ்ரீக்கு பாங்கிங்க் எக்ஸாம் எழுத வேண்டும் ஒரு எண்ணம் எட்டிப்பார்தது.
அந்த பயணம் தந்த மாற்றம் தான் ஸ்ரீயை இறுதி ஆண்டின் பாதியிலே பாங்க் கோச்சிங் கிளாஸ் சேர வைத்தது. ஒரு ஆர்வத்துடன் படிக்க வைத்தது. இறுதி செமெஸ்டெர் எழுதி ஆறே மாதங்களில் பெயர்பெற்ற தனியார் வங்கி ஒன்றில் வேளையில் அமரவைத்தது. அந்த வங்கியின் தலைமை செயலகம் கேரளாவில் இருந்தது. ரிசல்ட் வந்ததும் பிரோபேஷன் பீரியட்காக ஒரு ஆறு மாதம் கொச்சின் அலுவலகதித்தில் ஆர்டர் கிடைத்தது. முதலில் அவள் அம்மா அனுப்பவே பயந்தார். கார்திதான் உறுதியாக இருந்தான்
கேரளாவிற்கு சென்று ஸ்ரீக்கு ஹாஸ்டல் பார்த்து குடுத்து, அவனின் அனுபவங்கள் சிறுது அவளிடம் பகிர்ந்து அவளுக்கு உற்ற துணையாக நின்றான் கார்த்தி. அவன் அப்பா அவனை நம்பி எல்லாம் அவன் பார்த்து கொள்வான் என்று அவர்களுடன் பயனிதார்.
எத்தனை பேர் இத்தனை வருடங்கள் தான் இந்த வேளையில் இருப்பேன் என்று முன் ஏற்பாடுடன் வேளையில் சேருவார்கள் என்று தெரியவில்லை. அவள் சேரும் பொழுதே ஐந்து வருடங்கள் தான் வங்கி வேளையில் இருப்பேன், அதன் பிறகு வேறு செய்யலாம் என்று கார்த்தியிடம் சொல்லிவிட்டாள். அவன் சரி என்று விட்டான். அவன் எதற்கும் அவளை வற்புறுத்தவில்லை. உனக்கு என்ன எண்ணம் அதன்படி செய்கிறாயா, செய் உன்னுடன் நான் இருப்பேன். என்று நம்பிக்கை குடுத்திருந்தான் கார்த்தி. 
அவர்கள் ஊரிலேயே பேங்கிங் துறையில் நுழையும் பெண் என்பதால் அவள் தந்தைக்கு மிக திருப்தி. அவள் சிறு வயதில் பள்ளி சேர்க்கும் போது, அவள் அப்பா முடிவு செய்து விட்டார் பெண் பிள்ளையை பெரிதாக படிக்க வைக்க வேண்டும். அதற்கு அவர் கண் முன்னே இருந்த சாட்சி சீதாலக்ஷ்மி தான்.  
அவளுக்கு கோவையில் படிக்கும் பொழுது தான் இன்னும் வெளியே செல்ல வேண்டும், நிறையே பார்க்க வேண்டும் என்ற ஆசை துளிர் விட்டது. அதனால் கொச்சினுக்கு ஆர்வமுடனே கிளம்பி சென்று பொருந்திவிட்டாள். கேரளாவில் அவளுடன் முதல் நாளிலிருந்து பயணிப்பது ஷங்கர் தான். அவள் அங்கு சேர்ந்து முதல் நாள் போது எதை எப்படி செய்ய வேண்டும் என்று தன்னை போலவே ததகா புதகா என்று எதையாவது செய்து மாட்டிக்கொள்வது என்று ஐஸ் கிரீம்க்கு ஏத்த டாப்பிங்க்ஸாக அவன் வந்து சேர்ந்தான். 
இருவரும் அப்பாவிகளாக இருந்து அடபாவிகளாக மாறின சமயம், அருகிலேயே புதிதாக வேறு கிளைக்கு மாற்றல் பெற்றனர். அந்த கிளை  மேனேஜர் தான் அபிதா.  முதலில் பக்கா மேனேஜராகா இருந்தவரை இவர்கள் சேர்க்கை ஐஸ் கிரீம்க்கு ஏத்த சாக்லேட் சாஸாக மாற்றி விட்டது. அவர்கள் இருவரையும் அண்ணன் திருமணத்திற்கு அழைத்திருந்தாள். ஆனால் திருமணம் திங்கள் கிழமை, ‘வொர்கிங் டே’ ஆக போனதால் அவர்களால் ஒரே நாளில் மூன்று பேரும் விடுமுறை எடுக்கமுடியவில்லை.
இரவு 3.30 மணிக்கு அலார்ம் அடித்தவுடன் தேனுவை உருட்டி பிரட்டி எழுப்பி கீழே சென்று நல்ல பிள்ளைகளாக மணமகள் அறையில் படுத்து விட்டனர்.
காலை 5.30 க்கு முகூர்தம்,
தங்க சரிகையிட்ட அரக்கு நிற பட்டு உடுத்தி பூரிப்புடன் தேவதையாய் கார்த்தியின் அருகில் அமர்ந்திருந்தாள். கார்தியை காட்சில்லா கூட்டம் வெறும் மூன்று மணி நேரம் தான் தூங்கவிட்டது. ஆனால் ஓவராக மேக்கப் போட்டு அதனை தெரியாமல் மறைத்திருந்தனர். புகையால் கொஞ்சம் கண்ணை கசக்க ராகவ் அவன் கண்ணீரை துடைத்து ‘இப்போவே கண்ண கசக்குன எப்படி. இன்னும் எவ்வளவோ இருக்கு’ என சொல்லி இருந்தான். 
ஸ்ரீ ஒரு இளம் வண்ண பிங்க் பட்டுடுத்தி, தலை முன்னே விழுந்த பிரில்ஸ் எல்லாம் அழகாக‌ பின் செய்து, மெலிதான ஆனால் பொருத்தமான நகைகள் பூட்டி, குண்டுமல்லி சூடி எல்லா நிகழ்வுகளையும் லைவாக ஷங்கர்கும், அபிதாவிற்கும் வீடியோ காலில் காண்பித்துகொண்டிருந்தாள். 
சிவசு தாத்தா, சுந்தரி ஆச்சி, வாசு, சீதாலஷ்மி, கோதண்டம், சிவகாமி, சுந்தரம் அனைவரும் ஆசீர்வதிக்க, திருமணம் இனிதே நடந்தது. தேனுவிற்கு மெலிதாக கண்ணீர் கூட எட்டி பார்த்தது. ஏன்னென்றால் அவள் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை இத்தனை எளிதாக திருமணம் கைகூடும் என்று. 
ஆம் அவர்கள் வீட்டில் நெருங்கியே நட்பாய் இருந்தாலும் பெரியவர்கள் பிள்ளைகளுக்குள் கல்யாண அசைகள்ளெல்லாம் வளர்த்துவிடவில்லை. இயல்பாய்த தான் வளர்ந்தனர். ஏன் ஒன்றரை வருடம் முன்னும் கூட கார்தியை காதலிப்போம் கரம்ப்பிடிப்போம் என்றெல்லாம் எண்ணவே இல்லை. 
இதில் அதிகம் கவனம் எடுத்தது கார்த்தி தான். மூன்று தலைமுறை நட்பு இருவரின் காதலால் பிரிந்தது என்று இருந்துவிட கூடாது என்று ஓவ்வுன்றும் பார்த்து பார்த்து செய்தது கார்த்தி தான். வாசுவின் மூலமாகத்தான் எல்லாம் நடந்தது. எங்கும் தேனுவின் பெயர் வெளிவரவில்லை. இவன் மட்டும் விருப்பப்பட்டதாக தான் அனைவருக்கும் தெரியும். ஏன் சிவசு தாத்தாவிற்கே இது கார்தியின் காதல் மட்டும் தான் என்று நினைதிருந்தார். அப்படி நினைக்க வைத்திருந்தான்‌ வாசு. அப்படி தான் சம்பந்தம் பேசினான் வாசு. 
திருமண சடங்குகள் எல்லாம் முடிந்து திருமணத்திற்கு வந்தவர்கள் எல்லாம் வாழ்த்தி சென்று, பந்தி சாப்பாடு முடிந்து ‘அப்பாடா’ என்று மணமக்கள் மேடையில் உட்கார்ந்து இருந்த போது. காட்சில்லா கூட்டம் மேடை ஏறியது. 
“என்னடா நீங்க இன்னும் கிளம்புலயா” என்று சிறிது அதிர்ந்து தான் கேட்டான். 
“அது எப்படி டா ஒரு சம்பவத்த பாதியிலே விட்டுட்டு போறது. அப்புறம் வரலாறு நம்பள தப்பா பேசும் டா. அப்படி ஒரு அவமானத்த உனக்கு தரமாட்டோம் டா.”
“அப்போ சரி மூடுச்சிவிட்டுடுங்க டா. சரி சாப்டிங்களா  ?”
“அதுக்கு தான் வந்ததே. எல்லாம் ஆச்சு. சரி மச்சான் ரெடியா இரு.” என்று சொல்லி விட்டு கீழே இறங்கி வந்துவிட்டனர்.
“டேய் என்னனு சொல்லிட்டு போங்க டா”  மேடையில் மெலிதாக கதறிக்கொண்டிருந்தான் கார்த்தி.
‘என்னனாமோ பெருசா பிளான் இருக்கு’ மனம் ஆபாய மணி அடித்தது கார்திக்கு. தேனு உற்ச்சகமாகி விட்டாள். 
மண்டபத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இருந்தனர். கிட்டதட்ட பாதி கூட்டம் கலைந்து இருந்தது. மீதி பேர் அமர்த்து பேசிக்கொண்டிருந்தனர்.
டன் டன் டன் டன். ம்யூசிக் ஆரம்பித்து விட்டது. 
கூட்டம் அமைதியாகி விட்டது. என்னமோ நடக்க போகிறது என்று ஆவலாக வாயிலை நோக்கினார்.
ஒரு ட்ரெண்டியாக அலங்காரம் செயப்பட்ட ரிக்க்ஷவில் ஒரு பத்து பேர், எல்லாரும் ஒரே மாதிரி ஒயிட் டி‌ஷர்ட் அண்ட் புளு ஜீன் அணிந்து தலையில் சிகப்பு தொப்பி அணிந்து வேற வேற போஸில் அமர்ந்தபடி நின்றபடி வந்தனர்.
அங்க என்ன நடக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை.
காட்சில்லா கூட்டம் ஆர்பரிக்க ஆரம்பித்து விட்டனர்.
பைசா நோட்ட உத்து உத்து பார்த்தேன்                                     காந்தியத்தான் காணோம்                                                        உன் முகம் தான் தெரியுது                                                         என்ன பண்ண நானும் 
என்று ஆரம்பித்த பாடல், ஒரு ஷிமாஷ் அப்பாக மாறி பழைய பாடல், ரெட்ரோ, நைன்டீஸ், பிறகு தற்பொழுது வந்த பாடல் என்ன ஒரு இருபது நிமிடம் ‘mob dance’ நிகழ்ந்தது. 
அடுக்கி வைக்கபட்டு இருந்த பிளாஸ்டிக் இருகையிலிருந்து திடுமென  ஒருவன் குதிததில் ஒரு பாட்டி எங்கே தன் தங்க காதணியை தான் பறிக்கவந்துவிட்டானோ என்று பயந்து விட்டார்.
அந்த சின்ன ஊரில் இதெல்லாம் புதிது. அதனால் மக்கள் மகிழ்ச்சியாகவே பார்த்தனர். அதில் சில டான்சர்ஸ்‌ மக்கள் அமர்ந்த இடத்தில் இருந்து உயரமாக அடுக்கி வைக்கபட்ட பிளாஸ்டிக் சேர்ரில் இருந்து குதிது ஆடும் பத்து பேருடன் ஆட சேர்ந்து விட்டனர். 
அந்த இருபது நிமிடமும், மண்டபம் முழுக்க எவ்வளவு ஆட முடியுமோ அவ்வளவையும் ஆடி விட்டனர். இதில் கார்த்தியை வேறு வம்படியாக ஆட வைத்து விட்டனர். அவன் வெறும் அவர்களுடன் சிறிதாக குதித்து ஆடல் போல் காட்டிவிடலாம் என எண்ணி இருக்க, அந்த மூன்று குதி குதிபதற்குள் வேட்டி அவிழ்ந்து விடாமலிருக்க அவன் பட்ட பாடு அவன் மட்டுமே அறிந்தது. 
தேனுவிற்கு ஒரே கெக்க புக்கே சிரிப்பு தான். 
ஆடல் முடியும் தருவாயில் மணமக்கள் இருவரையும் காட்சில்லா கூட்டம் கேக் வெட்ட வைத்து, பலூன் எல்லாம் பறக்க விட்டு அவர்களை அந்த ட்ரெண்டி ரிக்க்ஷாவில் ஏற்றி விட்டனர்.
டான்சர்ஸ் ஆடிக்கொண்டே ‌அந்த வண்டியை வாயிலுக்கு கொண்டுவந்தனர்.
அங்கே கார்த்தி சற்றும் எதிர்பார்க்கவில்லை அவனுக்கு மிகவும் பிடித்த கார். சிறிய பட்ஜெட் கார் தான் ஆனால் அவனுக்கு பிடித்த நிறம் மற்றும் மாடல். காட்சில்லா கூட்டம் ‘ohhhhhhhh’ என்று கத்தி கொண்டு அவன் கையில் காரின் சாவியை பரிசாக தந்தனர் அனைத்தையும் காமெராவில் விரிந்த புன்னகையுடன் பதிவு செய்து கொண்டிருந்தாள் ஸ்ரீ. அவளுக்கும் அவர்களுடன் சேர்ந்து ஒரு போட்டோ எடுக்க வேண்டும் போல் இருந்தது. திருமண புகைப்படம் எடுக்க வந்தவரிடம் அவள் காமிராவை குடுத்து தன்னுடன் சேர்த்து எடுக்குமாறு சொல்லிவிட்டு காட்சில்லா கூட்டதில் ஐகியமாகி விட்டாள்.
ஒரே கொண்டாட்டம் தான்.
கார்தியை கட்டிப்பிடித்து ஆண்கள் அனைவரும் நின்றிருக்க தேனுவை கட்டிப்பிடித்து பெண்கள் ஆர்பரிக்க, அனைவர் முகத்திலும் குதூகலம் தெரிய அழகிய புகைபடமானது அந்த தருணம். 
 
 

Advertisement