Advertisement

                         நெஞ்சம் நிறையுதே 2
முஸ்டாஃபா முஸ்டாஃபா சாங்க் பேக் கிரவுண்ட்…
டிஸ்ப்ளேவில் நான்கு குட்டீஸ் போட்டோ ஸ்லைட் ஷோ…வேற வேற போஸ்ஸில்
பிறகு 
உன்கூடவே பொறக்கனும் சாங்க் பேக் கிரவுண்ட்…
ஒரு கண்ணை மூடி சிரித்து கொண்டு ஒரு ஐந்து வயது சின்ன ஆண் குழந்தை போட்டோ, பிறகு அவனின் வேறு வேறு போட்டோகளின் அணிப்வகுப்பு…
ஸ்ரீயின் பேக்ரவுண்ட் வாய்ஸ் ஓவரில் 
இப்டி ஒரு அப்பாவி பையனு மட்டும் நெனச்சு ஏமாந்தறாதீங்க. இவன் சரியா ரௌடி பையன்ங்க. பேரு கார்தீதீதீதீதீதீகேயன். சின்ன வயசுல என்ன ரொம்ப காண்டாக்குன ஆளு இவன் தான். தங்கச்சி எனக்குனு ஒரு பொம்ம தர மாட்டான். எனக்கு பர்த்டேனா அவனுக்கும் டிரஸ் வேணும்னு அடம்பிடிப்பான். நான் அழகா போனி போட்டா அத கலடிவிட்டு கலாட்டா பண்றது தான் அவன் வேலையே. கொஞ்சம் வளர்ந்ததும் நான் அவன டார்ச்சர் பன்னேன்…ஹா…ஹா…அவன் சட்ட ஒண்ணு கூட நான் போட்டு கிழிக்காமா இருந்ததில்ல. அப்பா கிட்ட கிரிக்கெட் பேட் வாங்க அவன் கெஞ்சுவான் பாருங்க…அட அட அட ஒரு கண்கொள்ளா காட்சிய இருக்கும். பட் எனக்கு கேரம் போர்டுலாம் கேட்ட உடனே கெடச்சிடும். என்னோட கிச்சனோட லாப் ராட் அவன் தான். இப்படி பட்ட என் அண்ணன் ஒரு படிப்பாளி ஆகிட்டான். காலேஜ் முடிச்சு தலையால தண்ணி குடிச்சு பாங்க் ஆபிசர் ஆயிட்டான். சரி எதோ பையன் படிப்பாளியா இருக்கான் நம்ப தான் பொறுப்பா கல்யாணம் பண்ணி வைக்கணும்னு பார்த்த ஒரு நாள் ஒரு பொண்ண லவ்வுறேன் வந்து நின்னுடான். சரி அண்ணன் இப்டி ஒரு சாதனை பண்ணிட்டு வந்துருக்கான், நம்ப சப்போர்ட் பண்ணலாம்னு நெனச்சா, பக்கிபய எனக்கு அந்த சான்ஸே தரல. 
பொண்ணு வேற யாரு, எல்லாம் நம்ப கோதண்டம் மாமா பொண்ணு தான். சரி லவ்வுனு வந்து நின்னா மூவிலெல்லாம் டாடா சுமோல பையன் அண்ட் பொண்ண வெரட்டி புடுச்சு தானங்க கடசில மேரேஜ் பண்ணிவைபாங்க. இவங்க ரெண்டு பேரண்ட்ஸும் இது தான்டா சான்ஸ்னு இப்டி டபாருனு கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டாங்க.
அடுத்து ஒரு மூன்று வயது பெண் குழந்தை போட்டோ… பிறகு அவளின் வேறு போட்டோகளின் அணிப்வகுப்பு…
தேவதை வம்சம் நீயோ தேன் நிலா அம்சம் நீயோ சாங்க் பேக் கிரவுண்ட்…
மக்களே இந்த பாச்சப்புள்ள மொகத்த பாருங்க. நம்ப ஊரு பொண்ணு. 
Myyy Bestieeeeeeeee 
பெஸ்டி அப்டினு ஒரு வார்தைக்கு சூப்பர் எக்ஸாம்பிள். அப்டி என்னனு நீங்க யோசிக்கலாம். சின்ன வயசுல நான் சாப்பிட தான் அவ சாப்பிடுவானுலாம் இல்லைங்க, எனக்கும் சேர்த்து சாப்பிடுவா. ஆனா சரியான ஒல்லிப்பிச்சான். நான் கிளாஸ்ல ஹோம் ஒர்க் பண்ணலைனா எனக்காக மிஸ் கிட்ட எக்ஸ்க்யூஸ் குடுக்கசி‌ச் சொல்லி கெஞ்சும் My doll. என் பக்கதுல உட்கார வச்சா நான் அவகிட்ட பேசிட்டே இருப்பேன்னு எனக்கு கிளாஸ்ல வெளிய நிக்கிற பனிஷ்மெண்ட்லாம் குடுத்துருக்காங்கான பார்துக்கோங்க, ஏன்னா என்னோட எல்லாம் கதையும் கேக்குற காது அவளோடது தான். ஸ்கூல்க்கு வரும்போது டெய்லி எனக்கு ரோஸ் கொண்டுவருவா. எங்க வீடு ஒண்ணும் அவளுக்கு புது வீடு இல்ல, சிக்ஸ்த் வரைக்கும் எங்க வீட்ல தான் ஃபுல் டே இருப்போம். ஒன்லி பாதிங்க் அண்ட் ஸிலீபிங்க் மட்டும் தான் அவ வீடுல. இப்டி தாங்க வளர்த்தோம். அநியாயத்துக்கு என்கூடவே காலேஜ் படிச்சு படாத பாடுப்பட்டா. 
இப்டி இருந்த என் அப்பாவி ஃப்ரெண்ட் ஒரு நாள் அடப்பாவி ஆயிட்டா. ஆமாங்க எங்க அண்ணன் பிரோபோசலுக்கு ஓகே சொல்லிட்டு வந்து எனக்கு சொன்னாள். நான் ஷாக் ஆயிட்டேன், நம்ப கூடவே தான்யா இருந்தா எப்போ இதெல்லாம் நடந்துச்சுனு.  என் பெஸ்டிக்கு சிரிச்சா கன்‌னத்துல குழி விழும் அதுல எங்க அண்ணன் விழுந்துட்டான்.
இப்டி பட்ட என் பெஸ்டிக்கும் என் ரௌடி அண்ணனுக்கும் நாளைக்கு மேரேஜ். So this is gonna be a special gift to them from me…
இவ்வாறு எல்லாம் ஆடியோ விஷுவலில் பேசி விட்டு, தேனுவின் கையில் ஒரு கிஃப்ட் கவர் கொடுத்தாள். இந்த ஆடியோ விஷ்வலை பார்த்து மெய் மறந்து போன தேனு ஸ்கிரீனிலிருந்து கண்ணை எடுக்கவில்லை. அங்க தான் கார்த்தி மற்றும் அவளின் ப்ரி வெட்டின்க் கேண்டிட் போட்டோஸ் அண்ட் ரிசப்ஷன் போட்டோஸ் அழகாக ஓடிக்கொண்டிருந்ததே.  
ரிசப்ஷனில், தேனுவிற்கு வேர்க்கிறது என்று யாரும் அறியாமல் கார்த்தி ஊதிவிட்டுக்கொண்டிருந்தது, மணமக்கள் இருவரும் முன்பக்கம் சொந்த பந்தங்களுடன் போஸ் கொடுத்து கொண்டிருந்தாலும் பின்னே யாரும்  அறியாமல் இருவரின் கைகளும் ஒருவருக்கொருவர்  பிடித்திருந்தது, ஒரு வினாடியே ஆனாலும் இருவரின் பார்வை சம்பாஷணைகள் என்று நேர்தியாக பிறர் யாரும் எளிதாக கணிக்க முடியா ஆங்கிலில் இருந்து போட்டோஸ் எடுத்திருந்தாள் ஸ்ரீ.
“Hey girl, you are really very good at photography.”
“இதையும் கொஞ்சம் பாருங்க அண்ணி” என்று தேனு கையில் கொடுத்த கவரை பிரித்து பார்க்க சொன்னாள் ஸ்ரீ.
ஸ்ரீயை முறைத்து கொண்டே கவரை பிரித்தாள் தேனு. தேனுவின் முகம் வாட்சப்பில் இரண்டு கண்களிலும் ஹார்டினோடு வரும் எமோஜியாய் இருந்தது. கேரளா போட் ஹவுஸ் ஹனிமூன் பேக்கேஜ் டிக்கெட்ஸ் இருந்தது. 
காலேஜ் படிக்கும் போது என்றைக்கோ ஒரு முறை ஸ்ரீயிடம் விளையாட்டாக  சொல்லி இருந்தாள். தேனுவிற்கே மறந்து விட்டது, ஆனால் ஸ்ரீ இப்படி நியாபகம் வைத்து செய்வாள் என்று சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. கண்களில் மிக மிக மெலிதாக படர்ந்த நீருடன் ஸ்ரீயை கட்டிக்கொண்டாள் தேனு. 
தேனுவை ஆசுவாசம் படுத்தும் பொருட்டு
“நான் கார்த்தி இல்லை. இவகிட்ட இருந்து என்ன யாராவது காபாதுங்க.” என்று கத்தினாள் ஸ்ரீ.
ஸ்ரீயின் முதுகில் சில பல அடிகள் விழுந்தது.  
“சரி தூங்கு. இவ்ளோ நேரம் தூங்காம இருந்தா மோர்னிங் மேக்கப் பண்றபோ கொஞ்சம் எக்ஸ்ட்ராவா போட வேண்டி வரும் அப்றோம் யாரு சுண்டெலி ஆச்சிக்கிட்ட திட்டு வாங்குறது.”
“சுந்தரி ஆச்சி பேரு இப்டி டேமேஜ் பண்ணி வச்சிருக்கயே. இதெல்லாம் உனக்கே நியாயமா. எங்க அண்ணா கிட்டயே சொல்றேன்.”
“ஹா…ஹா..ஹா…வாசு கிட்டயா. உங்க அண்ணவே ஒரு பேட் பாய். அவரோட பேச்ச யாரு கேப்பா வீட்ல.
முகம் சுருங்கி விட்டது தேனுவிற்கு, இருந்தாலும் அண்ணனை விட்டு கொடுக்காமல்  “எங்க அப்பாவ தவிர எல்லாரும் கேப்பாங்க.
“ஹேய் கோசிக்காத புள்ள. உங்க அண்ணவ சும்மா சொன்னேன் கேர்ள். இந்த ஊருலயே நான் ரொம்ப ரெஸ்பெக்ட் பண்ற ஆளு உங்க அண்ணா தான்.”
சிறிது மலர்ந்தது தேனுவின் முகம், ஊரில் உள்ளவர்கள் அவள் அண்ணன் மேல் மரியாதை வைத்திருந்தாலும் அவன் செயலை புரிந்து அவனை நம்பிக்கையோடு பார்த்தவர்கள் மிக சிலரே. அதில் முக்கியமானவள் ஸ்ரீ. அது தேனுவிற்கு நன்றாக தெரியும். 
இரவு 2.30 மணி ஆகிவிட்டது. தேனுவிற்கு கண் நிறைய தூக்கம். ஸ்ரீ தேனுவை அப்படிய படுத்து உறங்க சொல்லிவிட்டாள். எப்படியும் கீழே சென்றாள் ஆழ்ந்த தூக்கம் தேனுவிற்கு கிடையாது. இங்கே என்றால் இருக்கும் தனிமையும் சுகமான காற்றும் நிச்சயம் அவளை தூங்க வைக்கும். அதனால் தேனுவின் அருகில் அலாரம் வைத்துவிட்டு, தனியாக வந்த ஸ்ரீ  வீடியோ கால் செய்தாள்.
“டேய் சங்கு தூங்கிடியா“
கேரளா திருவனந்தபுரம்,
நட்ட நடு இரவில் மொபைல் சத்தமிட்டதால் அடித்து பிடித்து எழுந்தான் ஷங்கர். 
“பிசாசு பிசாசு பேய் மாத்ரி நைட் கால் பண்ணிட்டு தூங்கிடியா கேக்குற”
இதெல்லாம் காதிலே வாங்கவில்லை ஸ்ரீ, “டேய் இப்போ கல்யாணம் ஸ்டார்ட்ஸ். ஏதோ இப்போ பண்ணாதான் ஏதோ சாங்கியமாம். அதான் இப்போ கீழ போ போறேன், சரி நீ தான் வர முடியலனாலும் வீடியோ கால்ல பாக்குறேனு சொன்னிய அதான் கால் பன்னேன். சரி டா நீ ஹாஃப் ஸ்லீப்ல இருக்க நீ தூங்கு. மோர்னிங் வீடியோ சென்ட் பண்றேன்.”
“ஹேய் அப்டிய ஒன் மினிட் வைட் பண்ணு நான் ஃபேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு  ஸ்கிரீனில் இருந்து மறைந்தான்.
சரியாக ஒரு நிமிடம் சென்று ஸ்கிரீனில் முகத்தை காட்டினான். நன்றாக முகம் கழுவி, இந்த நேரத்திலும் ஃபேஸ் பவுடர் போட்டு, தலை சீராக வாரி காட்சியளித்தான்.
“நான் ரெடி ஆயிட்டேன் டெடி.” 
“ஹா…ஹா…ஹா…இந்த உலகத்தில நான் என்ன சொன்னாலும் நம்புற டா நண்பா. ஹா..ஹா…யாராவது இந்த டைம்க்கு கல்யாணம் வைப்பாங்களா.”
ஸ்கிரீனில் நல்ல பிள்ளையாக இருந்த முகம் அப்படியா தக்காளி பழத்தால் அடிவாங்கிய முகம் மாதிரி ஆகிவிட்டது. அவன் உட்கார்ந்து இருந்த கட்டில் அருகில் தான் சுவர் இருந்தது அதில் நன்றாக மூன்று முறை முட்டிக்கொண்டான்.
“பிசசே உண்ண பத்தி தெரிஞ்சும் நம்புனேன் பார்தியா, என்ன சொல்லனும்.” இன்னும் சில பல திட்டுகளுடன் கோபத்தில் கத்தி கொண்டிருந்தான் ஷங்கர்.
“சரி சங்கு ரொம்பா ஊதாத. மை காது பாவம் டா.”
அவன் அங்கு கோபத்தில் மூச்சு விட்டுக்கொண்டிருந்தது தெரிந்தது. இவள் இந்த நேரத்தில் இப்படி கல்யாணம் என்று சொல்லவும் அதுவும் நேற்று அனிந்த லெஹெங்கவுடன் கூப்பிடவும் உண்மை என்று நம்பி விட்டான்.
 
சிறிது நேரம் அவனுடன் பேசி அவனை கலாட்டா செய்து பேசி முடித்து வர ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.
ஸ்ரீ, ஷங்கர், அபிதா எல்லாம் ஸ்ரீ உடன் பாங்கில் வேளையில் இருக்கிறாராகள். 
கார்த்தி பாங்கில் சேரும் பொழுது ஸ்ரீக்கு பதினைந்தே வயது தான். அவள் பள்ளி இறுதியில் நல்ல மதிப்பெண் வாங்கவும் மெரிட்டில் கோவையிலே கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் சீட் கிடைக்கவும் அங்கேயே சேர்ந்து விட்டாள். அவள் என்ன படிக்க விரும்புகிறாள் என்று அவளுக்கே புரிபடாத சமயம். ஏதோ சீட் கிடைத்தது என்று சேர்ந்து விட்டாள். இவள் அங்கே சேரவும் தேனுவும் அதே கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் சேர்ந்து விட்டாள். அது இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் என்று சேர்ந்து இருக்கும் பெயர்பெற்ற கல்லூரி. அதனால் ஒரே ஹாஸ்டல் என்று அவர்கள் இருவரும் பிரிந்து இருந்த சமயம் என்று எதுவும் பெரியதாக இல்லை. அதுவும் இந்த இரண்டு வருடம் தான் பிரிவு. 
ஸ்ரீ கல்லூரி இறுதியில் இருக்கும் போதே கார்த்தி அவளிடம் ஃப்யூச்சர் பிளான் பற்றி கேட்டான். மெய்யாகவே அவளுக்கு எந்த எண்ணமும் இல்லை. கேம்பஸ் இன்டர்வியூ பற்றி கூட அவளுக்கு எந்த எண்ணமும் இல்லை. அந்த நான்கு வருட படிப்பில் அவள் உறுபிடியாக செய்ததெல்லாம் இரண்டே விஷயம் தான். ஒன்று இரண்டு அரியர் வைத்தாலும் இறுதியில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாள். இரண்டாவது அவளின் கல்லூரி வாழ்க்கையின் அழகிய நினைவுகளை அவள் காமிராவில் சுட்டதும் தான். 

Advertisement