Advertisement

            ஸ்ரீ, நேற்று இவன் கடைக்கு சென்றுவிட்டு அப்படியே ஆச்சி வீட்டிற்கு சென்று இரண்டு அடி வாங்கி அவர்கள் குடுத்த மருதாணியை கொண்டு வந்தாள்.
வீட்டிற்கு பார்சலோடு வந்ததும் எல்லாரும் சாப்பிட்டு, தேனுவும் ஸ்ரீயும் மேலே மாடியில் உட்கார்த்து மருதாணி வைத்து, அங்கேயே ஸ்ரீயின் அறையிலே படுத்து விட்டனர். வேண்டும் என்று தான் தேனுவை இவளுடனே படுக்க வைத்தாள். 
கார்த்தி இத்தனை நாள் தேனுவை கண்டுக்கொள்ளாமல் இருந்தவன், இன்று ஒரு நாள் அவனுடன் படுக்க வில்லை என்றதும் தான் அவனுக்கு அந்த இரவை கடப்பது எவ்வளவு கடினம் என்று புரிந்தது.
ஒருதர் அருகிலே இருக்கும் போது அருமை தெரியாது அல்லவா, ஒரு சிறு இடைவெளி தான், ஆனால் கார்த்தியால் முடியவில்லை. அன்று அத்தனை வேலை செய்தும் அவனது கருப்பட்டி அழகியின் வாசம் அந்த அறையில் இல்லாமல் இந்த சாக்லேட் பிரௌனியால் உறங்கவே முடியவில்லை.
இவன் அவளை பெரிதாக இந்த மாதம் கவனிக்கவில்லையென்றாலும், அவள் இவனுடன் இயல்பாக வேணும் அருகில் உறங்குவது, இவனே மறந்தாலும் சாப்பிட அழைப்பது, இரவின் ஊடே அவளையும் அறியாமல் இவன் மேல் விழும் தேனுவின் கை என இவன் உணர்வோடு ஒன்றிபோயிருந்தாள்.
நட்டநடு இரவில் எப்படி தங்கையின் அறையை தட்டுவான். அன்று இரவு தான் உணர்ந்தான் தேனுவின் நிலைமையை, இவனுக்கே இவன் மேலே கோபம் வந்தது. 
‘ உனக்கு வேல தான் முக்கியம்னா எதுக்கு டா கல்யாணம் பண்ணிக்கிற ‘ என்ற மனசாட்சி இவனை பாடாய்படுத்த நொந்ததே போய் விட்டான்.
காலையில் இருவரும் கீழே வந்தவர்கள், ஸ்ரீ அவள் அம்மாவிடம் வம்பு செய்ய சமையல் அறை வந்ததும், தேனு அவளது அறையிலும் நுழைந்ததும் பார்த்தது சிவப்பேறி உறங்காமல் கலைந்த தலையுடன் இருந்த கார்த்தியை தான்.
என்னவோ ஏதோ என அவன் அருகில் சென்று நெற்றியை தொட்டு பார்த்தாள். இவளது கரிசனத்தில் கார்த்திக்கு அவளை நேர்கொண்டு பார்க்க இயலவில்லை. இவன் அவளை இடையோடு கட்டிகொண்டு அவள் வயற்றில் அழுத்தமாக முகம் புதைத்திருந்தான். அவனது அழுத்தம் சொன்னது அவனது கருபட்டிக்கான ஏக்கத்தை.
அவனது அணைப்பில் காமம் இல்லை, ஒரு தாய்க்கான சேய்யின் தேடலாய் அவன் அவளுடன்.
ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை தேனுவிற்கு. 
“ என்னாச்சுங்க உடம்பு சரி இல்லையா. இல்ல வொர்க்ல ஏதாவது ப்ராப்ளம்மா.” சிறு தவிப்பு தேனுவின் குரலில்.
அவளை பிடித்த வண்ணமே அவன் இல்லை என்று தலையசைக்க, இவள் இரு கைகளாலும் அவனது முகத்தை மேல உயர்த்திப் பார்த்தாள். 
“ ரொம்ப சாரி ஹனி .“  அவன் கண்களில் அத்தனை யாசிப்பு.
“ ப்ச் என்னது இது. நமக்குள்ள என்ன சாரி தாங்க்ஸ்லாம். என்னாச்சு. “
அப்படியே அவளை மடியில் உட்கார வைத்தான், அவளது கழுத்தில் முகத்தை சாய்த்தன்.
தேனுவிற்கு அவன் சொல்லாமலே புரிந்தது. கூடவே ஒரு சந்தோஷம், ஒரு இரவின் பிரிவிலயே இப்படி ஆகிவிட்டானே. இப்படி யோசித்து கொண்டிருக்க,
“ நான் ரொம்ப சாரி . உன்ன சரியவே கவனிக்கல. நேத்து உன்ன விட்டு என்னால தூங்கவே முடியல . ரொம்ப கில்டியா பீல் பன்னேன். “ என அவளின் இடையை இறுக்கி கழுத்தில் முகம் புதைத்தான் 
“ எனக்கும் ரொம்ப கஷ்டமா தான் இருந்தது. பேபி வந்தப்போ அவ்ளோ ஹாப்பியா இருந்துட்டு, இந்த ஒன் மன்த் என்கூட சரியா கூட பேசல நீங்க.
சாப்டியா, ஸ்கூல் எப்டி இருந்துச்சு, சேர்ந்து ஒரு வாக் இப்படி எதுவுமே இல்ல.
என்ன சுத்தி எல்லாரும் இருந்தும் ஒரு லோன்லி பீல் உள்ளுக்குள்ள.
உங்க பிளஸ்ஸ யாராலும் ரீபிளேஸ் பண்ண முடில. நேத்து ரொம்ப அழுத்துட்டேன். ஸ்ரீ தான் கூடவே இருந்து என்ன சரி பண்ணா. “ 
அவன் முகம் அவள் கழுத்திலே லேசாக கசங்க, அதை உணர்ந்தவள், 
“ இங்க பாருங்க போனது போகட்டும்.
 அதான் இப்போ வந்துட்டேன் இல்ல. வாங்க வேணா இப்போ படுத்து தூங்கலாம். இப்படியே எப்படி ஆஃபிஸ் போவிங்க. சிக் லீவ் சொல்லிடுங்க. நல்ல தூங்குங்க உங்க பக்கத்துலயே இருக்கேன். நான் இன்னைக்கு ஸ்கூல் லீவ் சொல்லிடுறேன். 
உங்க ஹெல்த் ரொம்ப முக்கியம். “
தேனு அவனை தேற்ற,
மறுமுறையும் சாரி படலத்தை ஆரம்பித்தான்.
தேனு எவ்வளவோ சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை.
கடைசியில் அவன் வாயை இவள் கைகளால் மூட, இவன் எடு என்பது போல் தலையை ஆடினான். இவள் மாட்டேன் என தலையாட்ட, இப்படியே இந்த விளையாட்டு தொடர, ஒரு கட்டத்தில் அவள் உள்ளங்கையில் கார்த்தி முத்தம் வைக்க, இவள் கையை எடுக்க, பின் அங்கே முத்தங்களின் சத்தங்கள் மட்டும் கேட்டன.
      ஸ்ரீ சிவகாமியுடன் வழக்காடிக்கொண்டிருந்தாள்.
“ ம்மா இன்னைக்கு நான் மதியம் வெளியே போணும். “ என அனுமதி கேட்டாள்.
“ முதுகுல அப்படியே ரெண்டு போடுவேன். மாசத்துல வர்ரதே ரெண்டு நாளோ மூனு நாளோ, 
வீட்ல இருக்க முடியல, வெளிய சுத்த போறேனா எதுக்கு இன்னைக்கு லீவ் போட்ட, நேத்தே ஃப்ளைட்ல போக வேண்டியது தான. “
“ அதில ம்மா , நான் ஒரு பிசினஸ் பண்ணலாம்னு இருக்கேன், அதுக்கு சில விஷயம் எல்லாம் தெரிஞ்சுக்கணும். அதுக்கு தான் வெளியே போறேன். “
“ அப்படி என்ன பிசினஸ் உனக்கு “
“ நான் சாக்லேட், கேக் எல்லாம் செஞ்சு விக்க போறேன். “ கண்களில் கனவுடன் ஸ்ரீ. உண்மையாலுமே அவளுக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தது. அதில் ஒரு ஆர்வம் இருந்தது. 
அப்படி ஒரு சிரிப்பு சிவகாமிக்கு.
முகம் சுருக்கிய ஸ்ரீ “ என்ன சிரிப்பு உங்களுக்கு. நான் நல்ல செய்வேன். நீங்க எனக்கு ஓகே சொல்லுங்க. அது போதும். நான் ஸ்டார்ட் பண்ணதுக்கு அப்றோம் பாருங்க என் கஸ்டமர் லிஸ்ட்ல உங்கள கொண்டு வரேன். “ 
“ கஸ்டமர் லிஸ்ட்ல கொண்டு வர்றது இருக்கட்டும். எப்போ என்ன மாமியார் லிஸ்ட்ல கொண்டு வரபோர.
உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்க்க சொன்னா, வர்ற வரன் எல்லாம் நீ அது சரி வரல இது சரி வரலனு சொல்லிட்டு இருக்க. எல்லாம் உங்க அப்பாவ சொல்லணும், நீ கேக்கறதுக்கெல்லாம் சரி சரினு தலை ஆட்டுராரு பாரு. அவர சொல்லணும். 
வயசு என்னாச்சு உனக்கு இருபத்தி மூனு தாண்டிடுச்சு. சீக்கிரமா கல்யாணம் பண்ணா தான நாங்களும் உனக்கு எல்லாம் காலகாலத்துல செய்ய முடியும். நானும் உன் குழந்தைய பாக்கணும்ல. “
என சுந்தரத்தை வெங்காயத்துடன் வதக்க ஆரம்பித்தார். 
‘ அடேய்னு கூப்பிட இங்க புருசன காணோம்மா. அதுக்குள்ள புள்ள குட்டிக்கு போயிட்டாங்க ‘ என நொந்த ஸ்ரீ, ” ம்மா இப்போ எதுக்கு அப்பாவா திட்டுர. எனக்கு யார பிடிக்குதோ, அவங்களுக்கு தான் நான் ஓகே சொல்லுவேன்.
இப்போ என்ன நான் உங்களுக்கு நான் கல்யாணம் பண்ணிக்கணும். 
பண்ணிக்கிறேன். ஒரு ஐஞ்சு மாசம் டைம் குடுங்க. அதுக்குள்ள நான் கொஞ்சம் பிசினஸ்ல கொஞ்சம் நின்னுக்குறேன். “
“ இப்போவே நின்னுட்டு தான இருக்க. “ என சிவகாமி மீண்டும் சிரிக்க,
ஸ்ரீபத்மா அவரை முறைக்க,
“ இன்னும் என்ன புதுசா நிக்கணும். அது என்ன ஐஞ்சு மாசம் கணக்கு. “ என பாயிண்ட்டை பிடிக்க, 
ஒரு ஜெர்க் ஸ்ரீயின் நெஞ்சை கவ்வ, அப்படியே பேந்த பேந்த முழித்தாள். 
“ அது தான் புள்ள சொல்லுதுல. ஐஞ்சு மாசம் போக பின்ன பார்ப்போம் சிவகாமி . எப்படியும் தேனு வளகாப்பு முடிஞ்சு பொறுமையா பார்கலாம். “ என சமையல் அறையின் உள் என்ட்ரி கொடுத்தார் சுந்தரம்.
ஒரு தப்பித்த உணர்வு ஸ்ரீயின் நெஞ்சில், “ தேங்க் யு மை லார்ட் “ என சுந்தரத்தின் முன் குனிந்து சொல்லியவள், தப்பித்தோம் பிழைத்தோம் என வெளியே செல்ல பார்க்க, 
“ ஏய் நில்லு. இன்னைக்கு எங்கயோ போறனு சொன்னல அத உங்க அப்பாகிட்ட சொல்லு. “ என சிவகாமி ஆர்டர் போட,
ஸ்ரீபத்மவும் சொல்ல சுந்தரம் சரி என்றார். ஆனால் சிவகாமி எதுவும் சொல்லாமல் இருக்க, 
ஸ்ரீ, “ அம்மா நான் சீரியஸா சாக்லேட், கேக் பத்தி தான தெரிஞ்சுக்க போறேன். நீ ஓகே சொல்லு மா. “ என அவர் கழுத்தை கட்டிகொண்டு அடம் பிடிக்க, அவர் உம் மென்றே சரி என்றார்.
கோபமான ஸ்ரீ, வெளியே சோபாவில் உட்கார, சுந்தரம் இனிமேல் இவர்கள் நடுவில் இருந்தால் அவர் தலை உருளும் என நன்கு தெரிந்தவர் காஃபி எடுத்துக்கொண்டு விலகி அன்று வந்த செய்தித்தாள் எடுத்துகொண்டு வெளியே தப்பித்து விட்டார்.
சிவகாமி வெளியே காஃபி கொண்டு வர, ஸ்ரீ இன்னும் கொண்டையும் தலையுமாய் நைட் பாண்ட் ஷர்ட்டில் சோபாவில் உர்ரென அமர்ந்திருக்க, அவர் மெதுவாக அவள் அருகில் அமர்ந்தவர் அவளிடம் காஃபியை நீட்ட,
“ இந்தா குடி. “
“ ——-“
“ இந்தா குடினு சொல்றேன்ல. “  
“ இப்போ ஏன் மா இப்படி பண்ற, நான் ஃபர்ஸ்ட் ஏதாவது செஞ்சா அவ்ளோ சப்போர்ட் பண்ணுவ. இப்போ இந்த ஒன் மன்த் நா ஃபோன்ல பேசுன கூட, எதுவும் சப்போர்ட்டிவ்வா சொல்ல மாட்டேன்ற. இப்போ சாக்லேட் பிசினஸ் பத்தி கூட சொன்னதுக்கு நிச்சயமா நீ சப்போர்ட் பண்ணுவனு நினச்சேன்.
என்ன மா ப்ராப்ளம். நீ ஏதோ மனசுல வச்சிருக்க. என்கிட்ட சொல்லு. “
சிவகாமி அமைதியாகவே காஃபி அருந்திக் கொண்டிருந்தார். 
“ சொல்லு மா. “ என இவள் அவர் தோளில் சாயவும்,
“ போன மாசம் ஒரு மாப்பிள்ளை வீடு வந்தாங்க. எல்லாம் நமக்கு ஒத்து வர மாதிரி இருந்துச்சு, ஆனா கார்த்திக்கு வேற ஆளுங்க வீட்ல பொண்ணு எடுதிருக்கோம்னு சொன்னத்துக்கு யோசிக்கிறாங்க. 
நமக்கும் சிவசு மாமா வீட்டுக்கும் இருக்கும் பழக்கம் நமக்கு தெரியும், ஆனா அவங்களுக்கு தெரியாது இல்ல. 
இப்படி இனிமே வரவங்க யோசிச்ச என்ன செய்யறது, அதான் டென்ஷன். “
“ ஏன் மா இப்படி, இந்த காலத்துல பொண்ணு மாபிள்ளையும் கிடைக்கிறதே அவ்ளோ கஷ்டம். இதெல்லாம் ஒரு ரீஸன்னா மா. நீ ஏதாவது போட்டு கண்ப்யூஸ் பன்னிக்காத மா.
இதனால தேனுவ எதுனா சொன்னியா. “ என அம்மாவை முறைத்தாள்.
“ அப்படியே ரெண்டு போட்டேன பாரு. நான் நம்ப பாப்பாவ எதுக்கு சொல்றேன். “ என ஸ்ரீயின் மீது பாய்ந்தார்.
“ பின் ஏன் மா உம்னு இருக்க. “
“ உனக்கு இன்னும் எதுவும் அமைய மாட்டிங்குதேனு மனசுல ஒரு நினப்பு. “
” அதெல்லாம் வரப்போ வரும் மா. ஐஞ்சு மாசம் அப்புறம் அப்பா பாக்கலாம்னு சொல்லிட்டாங்க தான. அப்போ எல்லாம் நல்ல மாப்பிள்ளையா வரும். நீ இப்போவே டென்ஷன் ஆகாத மா. “
சிறிது நேரம் அமைதியாக அமர்ந்த சிவகாமி 
” சரி நான் போய் டிஃபேன் ரெடி பண்றேன். என்ன வேணும் உனக்கு சொல்லு.”
இப்போது ஸ்ரீ உம்மென்று இருந்தாள்.
” ஏய் குட்டி நான் தான் கேக்குறேன்ல. “
“ நீங்க சிரிசிக்கிட்டே சரி சொல்லல. “ என குப்புற அடித்து சோபாவில் படுத்துக் கொண்டாள் ஸ்ரீ.
“ ஈஈஈஈஈஈஈஈஈஈஈ நான் சிரிசிக்கிட்டு தான் சரினு சொல்றேன். எங்க போனாலும் பத்திரமா போய்ட்டு வா. அரை மணி நேரத்துக்கு ஒரு தரம் அம்மாக்கு ஃபோன் பண்ணும். மறக்காம பண்ணு தங்கம். “ என தன் சம்மதம் தெரிவிக்க, சோபாவில் இருந்து மடார் என எழுந்தவள், காபியை ஒரு மடக்கில் காலி செய்ய, காஃபி மீசையால் சிவகாமியின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டவள் வெளியே செல்ல தயாராக மேல ஓடிவிட்டாள். 
ஸ்ரீ மேல சென்று வெளியே செல்ல தயாராகி கீழே சாப்பிட வரும் வரை தேனுவும் கார்த்தியும் வெளியே வரவில்லை.
கீழே வந்தவள் தோசையை ஒரு கட்டு கட்ட, எங்கட ஒரு ஜீவனை காலையில் இருந்து காணவில்லை என யோசித்தவள், அம்மாவிடம் சொல்லிவிட்டு புறப்பட வர, சிவகாமியோ இன்னும் தேனு சாப்பிட வில்லையே என அவர்கள் அறையின் கதவை கையால் தட்ட நினைப்பதும் எடுப்பதுமாக இருக்க, அவரை தேடி பின்னே வர, அவரின் நிலை பார்த்து சிரிப்பு வந்துவிட்டது. 
“ அம்மா நீங்க சாப்பிட எடுத்து வைங்க. நைட் அவ சரியா தூங்கல. நான் கூட்டிட்டு வரேன். “
“ ஏன் கண்ணு பாப்பாக்கு உடம்பு சரி இல்லயா. என்கிட்ட சொல்லவே இல்ல. “
“ ம்மா அதில்ல மா. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்து படுத்தோம். அதான். “
சிவகாமி சரி என சமையல் அறைக்கு சென்று விட்டார். 
ஸ்ரீ வாட்சப்பில் தேனுவிற்கு, “ சோறு முக்கியம் அமைச்சரே. “ என மெசேஜ் அனுப்ப, ஒரு இரண்டு நிமிடத்தில் தேனு வெளியே வந்தாள். 
தேனு தலைக்கு குளித்து முகமெல்லாம் மஞ்சள் மின்ன, கண் மையெல்லாம் இப்போது தான் வைத்திருபாள் போல, அதுவும் கொஞ்சம் கலைந்திருந்தது. தலையை குனித்து கொண்டே ஸ்ரீயை கடக்க நினைக்க, 
விழி விரித்து தேனுவின் மாற்றதை சந்தோஷமாக பார்த்த ஸ்ரீ, அவளை விட ஸ்ரீ நன்றாக குனிந்து தேனுவின் முகத்தை பார்க்க, தேனு வெட்கம் வந்து நன்றாக ஸ்ரீயை அடித்து விட்டாள்.
“அம்மாஆஆஆஆஆ” என ஸ்ரீ அலற,
“ ஏ கத்ததா கேர்ள். “ என அடக்கபட்ட குரலில் தேனு சொல்ல,
“ நேத்து யாரு ஒரு பொண்ணு எங்க அண்ணா பேசமாட்டிங்குறான்னு கண்ண கசக்குனாங்களே. அவங்கள பார்த்த பேத்து. “ என ஸ்ரீ அங்கே இங்கே என தலையை திருப்பி தேட 
“ அப்படியா நான் பாக்கலயே. “ என தேனுவும் தேட,
தேனுவை ஸ்ரீ கண்களை சுருக்கி முறைக்க, அவளை கடந்து தேனு சமையல் அறைக்கு சின்ன எட்டுகளில் விரைவாக சிரித்து கொண்டே போய்விட்டாள். 
வீட்டில் இருந்து ஸிகூட்டியில் கிளம்பினாள் ஸ்ரீ,
‘ சரி நம்ப பொலப்ப பாப்போம். இன்னைக்கு நைட் நமக்கு ஃப்ளைட், அதுக்குள்ள நிறைய ஸ்வீட் கடைய இன்னைக்கு திருச்சிக்கு போய் பார்க்கணும். 
இன்னைக்கு மாமஸ்ஸூட ஷெட்யூல் நம்ப கிட்ட இருக்கு.‌ இன்னைக்கும் மாமஸ்க்கும் திருச்சில வேல.
சோ இன்னைக்கு அடுத்து சம்பவம் பண்றோம். நைட் ஹாப்பியா ஃப்ளைட் எறோம். ‘ என ப்ளான் செய்தவள், அவள் வீட்டை விட்டு கிளம்ப, 
அவள் சிறிது தூரம் சென்றதும், இன்னொரு பாதையில் இருந்து பைக்கில் இவள் முன் சிறிது தூரதிற்கு சென்று கொண்டு இருந்த வாசு கண்ணில் பட்டான்.
‘ Oh My Kadavule, மை மாம்ஸ்… ‘ என நினைத்தவள் அவன் பைக்கின் பின்னே இவள் ஸிகூட்டி செல்ல, 
பைக்கில் சிறிது தூரம் வீட்டில் ஆச்சியிடம் பேசியதை நினைத்து கொண்டு சென்று கொண்டிருந்தவன். ஸ்ரீயின் நினைவு வர, உதடு தானாக புன்னகையை தத்து எடுத்தது. 
அது கிராமத்து சாலை, பெரிதாக யாரும் இல்லை, இவன் புன்னகையுடன் எதர்ச்சியாக ரியர் வியூ மிர்ரரை பார்க்க, இன்பமாக உள்ளே ஒரு சாரல்.
ரியர் வியூ மிர்ரர் வழியே தன்னை பார்த்துக்கொண்டிருந்த ஸ்ரீயை சற்று விரிந்த புன்னகையுடன் வாசு பார்த்து வைக்க , அதை அவள் பார்க்காமல், இவனை மிஸ் செய்து விட கூடாது என சீரியஸ்ஸாக அவனை தொடர்ந்து கொண்டிருந்தாள்.
இதை பார்த்தவனுக்கு உள்ளே அருவியில் நனைந்த உணர்வு, இடது கையால் தலையை அழுந்த கோதியவன், வேகம் குறைத்தான். 
சாலையில் ஒருதரும் இல்லை என உறுதி செய்தவன், ஸ்ரீயை நன்றாக ரியர் வியூ மிர்ரரில் கவனித்தான்.
மென் சந்தன நிற எளிய க்ரேப் சல்வார், முலங்காலை தொட்டது, அவள் பப்ளி தோற்றதிற்கு மிகவும் பொருந்தி இருந்தது. 
அதே போனி, இடது நெற்றியில் அவளது ஃப்ரிஞ்ச் மிகை இல்லாமல் வழிய, அது அழகாய் பின் செய்திருந்தாள். நெற்றியில் இருக்கிறதா இல்லையா என தெரியா சிகப்பு நிற பொட்டு. வலது கையில் மிக மெல்லியே இமிடேஷன் ப்ரேஸ்லெட், இடது கையில் ஏதோ பட்டையாய் வாட்ச், காதில் நேற்று அணிந்த தோடு இல்லை வேறு ஏதோ சின்னதாய் தொங்கி கொடிருந்தது. கழுத்தில் மிக மிக மெலிதாய் ஒரு செயின். கால்களில் மென்மையான மரூன் நிற ஷூ. இப்போது தான் எல்லாம் கவனித்தான். 
அவளின் இயல்பை படிக்கும் பார்வை. பார்வையில் கூட வாசு கண்ணியம் தவறவில்லை.    
ஆனால் ஸ்ரீ இவனை மிஸ் செய்து விட கூடாது என்ற நோக்கில் தொடர்ந்தவளுக்கு அவனை படிக்க நேரமில்லை. 
சாலையில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து, வண்டியை நிறுத்தினான். இவளும் நிறுத்தினாள்.
கூலெர்ஸ் எடுத்து கண்களில் அணிந்தான். முகத்தை சிரமப்பட்டு கடினமாக்கினான். அவன் முழு நீள சட்டையின் கைகளை சற்று மேலே சுருட்டினான். ஏதோ சண்டைக்கு வருபவன் போல் வண்டியை விட்டு கீழே இறங்கினான். சரியாக திரும்பி அவள் வண்டியின் அருகே சென்றான். 
ஸ்ரீ இவன் நிறுத்தியதும்,
‘ என்ன மாமஸ் பைக்க நிறுத்திருச்சு. 
அச்சோ சண்ட போடுற மாதிரி வரானே…
பக்கத்துல வந்துட்டானே.. திட்ட போறானோ…
எப்படி சமாளிக்கறது…’
என விழித்து ஸிகூடியில் அமர்ந்து இருந்தாள் ஸ்ரீபத்மா.

Advertisement