Advertisement

 “ நீ எதுக்காக இன்னைக்கு இங்க வந்த ?”      ஸ்ரீயின் கண்களை நேராக பார்த்து கேட்டான் கார்த்தி.
எதற்காக இப்படி கேட்கிறான் என ஒன்றும் புரியவில்லை ஸ்ரீபத்மவிற்கு, ஆனால் அசராமல் பதில் சொன்னாள், 
“ ஹலோ இது என் வீடு. நான் எதுக்காக வேணா வருவேன். இப்போ உன் பொண்டாட்டியே பார்க்கத்தான் வந்தேன். எங்க அந்த பேத்தக்குட்டி “
“ அவள எதுக்கு நீ பார்க்கணும்.” 
இவர்கள் பேசி கொண்டிருக்க, பின்கட்டில் இருந்து உள்ளே வந்த  சிவகாமிக்கும் சுந்தரத்திற்கும் என்ன ஏது வென்று ஒன்றும் புரியவில்லை.
“ டேய் தம்பி. என்ன டா. எதுக்கு இப்படி இவள கேக்குற.” என்று சிவகாமி கேக்க.
“அம்மா அப்பா நீங்கலே இவ என்ன வேல பார்துருக்கானு கேளுங்க.”
“என்ன கண்ணு அண்ண என்ன சொல்லுது.”
ஸ்ரீக்கு உண்மையாகவே ஒன்றும் தெரியவில்லை. வாசுவிடம் இதுவரை ஒரு சிறு பார்வை, ஏன் இவள் எண்ணத்தை பற்றிய பேச்சு என ஒரு சாக்லேட் கவரை கூட அவன் மேல் போட்டதில்லை. 
“ம்மா நான் எதுவும் பண்ணலா மா. அண்ணே ஏதோ உளருது மா.”
இவர்கள் எல்லாம் பேசிக்கொண்டிருக்க, அம்மா வீட்டிற்கு சென்றிருந்த தேனுவும் திரும்பி இருந்தாள். தேனுவை ஸ்ரீ பார்க்க, தேனு இவளை பார்க்காமல் உள் அறைக்கு செல்ல பார்த்தாள்.
“தேனு நில்லு. உன் ஃப்ரெண்ட் கிட்ட ஏதோ காமிக்கணும்னு வச்சிருந்தியே. அது எதுட்டு வா. அவளே பார்க்கட்டும்.” கட்டளையாக சொன்னான் கார்த்தி.
சிவகாமியும் சுந்தரமும் என்ன வர போகிறதோ என பார்க்க,
தேனுவின் கையில் நன்றாக கவர் செய்யபட்ட ஒரு கிஃப்ட் பாக்ஸ், 
ஸ்ரீக்கு எப்போதுமே அவளுக்கு நெருக்கமானவர்களுக்கு சில சமயம் பரிசு கொடுக்கும் பழகம் உண்டு. 
தேனு அதை ஸ்ரீயின் கையில் கொடுத்துவிட்டு அவள் முகத்தையே பார்க்காமல், கார்த்தி அருகே சென்று நின்றாள்.
குரலில் கடுமை ஏற, கார்த்தி, “அத திறந்து பாரு பத்து” என்றான்.
என்னடா இது என்னவென்ற தெரியவில்லையே, சரி போ எது வந்தாலும் பார்துக்கொள்ளலாம் இல்லை என்றாள் இந்த ஸ்ரீ சூனா பானா இல்லையே என நினைதவள் தைரியமாகவே அதை திறந்தாள்.
அதில் ஒரு அழகியே கேக், ஒயிட் ஃபாரஸ்ட் கேக், அதன் மேல்,
“ Am on the way அத்தை “ என எழுதி கீழே ஒரு குழந்தையின் சிறு உருவம் கிரீமில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
அதை பார்ததும் தான் ஸ்ரீக்கு விஷயம் புரிந்தது, 
“ நீ அத்தை அயிட்ட ஸ்ரீ….” என கார்த்தியும் தேனுவும் ஒரே சமயம் சொல்ல,
கார்தியை துரத்தி அடிக்க துடங்கினாள், கார்த்தி அகபடாமல் சிரித்து கொண்டு சுற்றி ஓட அவனை பிடிக்க முடியவில்லை. 
“அடே அண்ண…  நீயும் உன் பொண்டாடியும் பார்த்த வச்ச வேலைக்கு நான் என்னமோ செஞ்சேன்ற ரேஞ்ச்ஜுக்கு என பீல் பண்ண வச்சிடிங்கலே டா…     கப்பி கப்புள். 
இதுல உனக்கு டெர்ரர் லுக் வேற… ” என கார்த்தியின் காதை பிடித்து ஆட்ட, 
“ஹேய் கோச்சிகாத பத்து, விஷயம் தெரிஞ்சதும் தேனு தான் உனக்கு சர்ப்ரைஸ்ஸா இந்த நியூஸ் சொல்லணும்னு சொல்லிட்டா. அதான் இப்படி . 
நீ ஏன் செல்ல தங்கச்சி பாப்பால, உன் கூட விளையாட ஒரு பாப்பா வரபோகுது. அதனால கோபாபடக்கூடாது.
அண்ணே உனக்கு பிடிச்ச கேக் வாங்கிட்டு வந்துருக்கேன்ல. நல்ல புள்ளயா அத சாப்பிட்டு போய் இப்போ உன் ஃப்ரெண்ட் கூட விளையாடு போ …போ மா..” என சொல்லி கார்த்தி ஸ்ரீயின் தலை மேல் கையை வைத்து ஆட்ட,
 “நல்ல செய்றிங்கடா சர்ப்ரைஸ்ஸூ…. போங்க டா…போங்க டா… ஏதோ என்ன அத்தையாகுனதுக்காக உங்கல மன்னிச்சு விடுறேன்.” என்ற சமாதானமாவள் திரும்பி தேனுவை பார்த்தாள்.
விஷயம் அறிந்த சிவகாமியும் சுந்தரமும் மகிழ்ச்சியுடன் அவளுக்கு ஆசீர்வதித்து நெற்றியில் விபூதி பூச, நல்ல பிள்ளையாக அவர்களிடம் விபரத்தை சொல்லிக்கொண்டிருந்தாள்.
அவள் அருகில் விரைந்து சென்ற ஸ்ரீ, அவள் பேசிமுடித்ததும் தனியாக தள்ளிக்கொண்டு சென்றாள்.
“அடியே அண்ணி…மனசாட்சி இருக்கா உனக்கெல்லாம். ஹூஃப்…ஒரு நிமிஷம் நான் என்னலாம் நெனசிட்டேன் தெரியுமா.” என வாயை ஊதி அசுவாசமானவள். பிறகு தேனுவை கட்டி அனைத்து முத்தம் வைத்தாள்.
ஸ்ரீ முகத்தில் மகிழ்ச்சி மின்ன “Really I am Soooo Happieee for you dear” என சொல்லி முடிக்கையில் தேனுவுக்கு அவ்வளவு ஆனந்தம்.
ஸ்ரீயுடன் அங்கே இருந்த கட்டிலில் அமர  “ஒழுங்கா என்ன நல்ல பார்த்துகோ, இல்ல உன்ன என் பாப்பா கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன்.” 
விழி விரித்த ஸ்ரீ, “ என்னாயே போட்டு குடுகுற அளவுக்கு பெரிய ஆள் அயிட்டியா நீ.”
“யெஸ்..இப்போ நான் உன் அண்ணியாக்கும். நியாபகம் வச்சிக்கோ ” என டெர்ரர் வாய்ஸ்ஸில் சொல்ல
தேனுவை மேலிருந்து கீழாக புருவம் உயர்த்தி பார்த்த ஸ்ரீ, “புள்ள பூச்சியெல்லாம் பெர்ஃபார்மன்ஸ் குடுக்குது.”
ஸ்ரீயின் முகத்தை பார்க்காமல் கொஞ்சம் மேல பார்த்து , சிரித்த முகத்துடன் தாடையில் ஆள்காட்டி விரலை வைத்து லேசாக தலையை சாய்த்து ஸ்ரீயை கெத்தாக பார்த்தவள்,
“இனிமே அப்படி தான்” என கண்களை மூடி திறந்து சொன்னாள் தேனு.
“அட பார்ரா”
“என்ன” என புருவம் உயர்த்தி தேனு கேட்க 
“என்ன என்ன” தேனுவை விட புருவம் உயர்த்தி ஸ்ரீ கேட்க 
என இருவரும் கொஞ்சம் சவுண்ட் விட, அப்போது தான் அந்த அறைக்கு வந்த கார்த்தி இருவரும் இருக்கும் தினுசை பார்த்து,
“பத்து வெளியே போ. நீங்க ரெண்டு பெரும் விடுற சவுண்ட்டா கேட்டு என் பேபி ரௌடி பேபியா பொறந்திடும் போல.”
கட்டிலில் விட்டு எழுந்த இருவரும் கையை கட்டி கார்த்தியை நக்கலாக பார்க்க, 
ஸ்ரீ, “அண்ணா உனக்கு இவ வொய்ஃப் ஆக முன்னாடி எனக்கு ஃப்ரெண்ட். So please…” என கதவை கை காட்ட 
என்ன டா அநியாயம் இது என தேனுவை கார்த்தி பார்க்க, அவளும் சேர்ந்து தான் கதவை கை காட்டிக்கொண்டிருந்தாள்.
இருவரையும் பார்த்து நொந்து போனவன், தலையை தொங்க போட்டு கதவை திறந்து வெளியே செல்ல, இருவரின் கைகளும் ஹை – ஃபை குடுக்கும் சத்தம் கேட்டது.
பிறகு இருவரின் அரட்டை முடிந்து ஸ்ரீ வெளியே வர, அப்பாவியாய் கார்த்தி டி‌வி பார்த்துக்கொண்டிருந்தான். 
அவன் அருகே சென்ற ஸ்ரீ, அவனை பார்த்து உதட்டை வளைத்து சிரித்து மேல் அறைக்கு செல்ல, எல்லாம் நேரம் என முகத்தை வைத்தவன் பிறகு தான் தேனுவின் அறைக்கு சென்றான்.
மேல வந்தவள் நினைத்ததெல்லாம்,
‘இன்னைக்கு நம்ப வாசுவ சம்பவம் பண்ணலாம்னு வந்தா. இப்படி நம்பலயே சம்பவம் பண்ணிட்டாயிங்களே. ஏத்தி வச்ச சார்ஜ் எல்லாம் ஏறக்கி விட்டுட்டாயிங்க இந்த கப்பி கப்புள். விஷயம் ஏதாவது வெளியே தெரிஞ்சுடுச்சானு அல்லு விட்டாலும், வெளியே விறைப்பாவே சமாளிச்சோம். இதயே மெயின்டய்ன் பண்ணிறனும்.
பரவால இன்னைக்கு ஒரு நல்ல நியூஸ் கிடச்சது. அதுக்காகவே அவுங்கள மன்னிச்சு விட்டுறலாம். 
இந்த கார்த்தி பையன் அவன் ரொமான்ஸ் பண்றதுக்கு என்ன ரூம் விட்டு தொறத்த பாக்குறான் கேடி பையன், ஆனா என் bestie… நல்ல புள்ள எனக்கா கூட நின்னா. என் தளபதி டா அவ.   
என்ன இந்த வாசு மாமஸ் என்ன சொல்லு போவுது தெரியலயே. எவ்வளவோ பார்த்துட்டோம், இத பார்க்கமாட்டோமா. 
அடடா.. இந்த கலாட்டாவுல கேக் மறந்துட்டோமே. வாசுலாம் அப்றோம், முதல கேக் முக்கியம்.’ 
என முடிவு செய்தவள் கேக்கை நோக்கி பறந்திருந்தாள்.
ஸ்ரீயின் வீட்டில் மதியம் சிறு விருந்து. அதெல்லாம் முடித்து அனைவரும் இளைப்பாற, இவள் ஊர் சுற்றிவிட்டு வருவதாக கூறி கிளம்பி விட்டாள். இவள் விடுமுறைக்கு வருகையில் வயல், தோட்டம், படித்துறை என்று எங்காவது சுற்றி விட்டு வருவது வழகம் தான். அதனால் வீட்டில் ஒன்றும் நினைக்கவில்லை.
வாசுவின் கடை, அவள் வீட்டில் இருந்து பதினைத்து நிமிட நடைபயணம். நடந்து வரும் வழி எல்லாம் யோசித்து கொண்டே வந்தாள். இந்நேரம் கடையில் வாசு இருப்பானா என்று தெரியவில்லை. தேனு அவள் அம்மா வீட்டில் சென்று இருந்த போது தான் விஷயம் தெரிந்ததால், அப்போதே அங்கே கொண்டாடமும் முடிந்திருக்கும் என தெரிந்திருந்தது. அதனால் வாசு காலையில் அங்கே இருந்தாலும் இப்போது இங்கே இருப்பான் என கணித்திருந்தாள். 
மதியம் மூன்று மணி இருக்கும். அந்த ஊரின் நுழைவாயிலில் இருந்த கடை முன்னே நின்றிருந்தாள். அங்கே சற்று தள்ளி உள்ளூர் பஸ் நிற்கும் இடம். அதனால் எப்போதும் பத்து இருபது பேர் வருவர் போவர்.
இப்போது இது தான் அந்த கடையா என்றே முதலில் ஸ்ரீக்கு புரியவில்லை. 
அரிசி, காய்கறிகள், கீரைகள் எல்லாம் சேர்ந்தது போல் ஒரு கடை, அதன் அருகிலேயே ஒட்டினார் போல் ஒரு உணவகம். 
உணவகத்தின் பெயர் படித்துப் பார்த்தாள்.
  ‘உழவன் கைமனம்’
வாசுவை பார்க்க போகிறோம் என்ற தோன்ற கீழே குனிந்து தன்னையே சரி பார்த்தாள். அவள் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த இளம் பிங்க் நிற பருத்தி அனார்கலி சல்வார் அணித்திருந்தாள். அவள் பப்ளியான உடல்வாகிற்கு நன்றாக பொருந்தி இருந்தது, ப்ரீ ஹேர் விடலாம் என்றால் சிவகாமி ஒரு பேச்சு பேசிவிடுவார், அதனால் வேறு வழி இல்லாமல் பிரில்ஸ் மட்டும் முன்னே விட்டு கொஞ்சம் ஏற்றி ஹாஃப் போனி டெய்ல் போட்டிருந்தாள். காலில் ப்ரௌன் நிற மென் கட் ஷூ. பெரியதாக அலங்காரம் எல்லாம் செய்யவில்லை, இயல்பான ஒப்பனையோடு வந்திருந்தாள். இதிலே அழகாய் தெரிந்தாள்.
சாதாரணமாக நின்றால் இவள் அவன் தோள் வரை இருப்பாள். இவள் நல்ல உயரம் தான், ஆனால் அவன் இவளை விட வளர்ந்திருந்தான். அதனால்,  எங்கே முதன் முதலில் இவள் விருப்பத்தை சொல்லும் போது அவன் முகத்தில் தோன்றும் உணர்வுகளை சரியாக படிக்க முடியாதோ என உட்கார்ந்து பேசும் இடமாக இந்த உணவகத்தை தேர்ந்தெடுத்திருந்தாள். 
இதை யோசிக்கும் போதே கொஞ்சம் முட்டாள் தனமாக தான் இருந்தது. எத்தனை பேர் வருவர் போவர். இது சிறு கிராமம் தானே ஒரு வேளை ஆட்கள் பெரியதாக இல்லை என்றால் கடையிலே அமர்ந்து பேசலாம். அப்படி முடியாவிட்டால் கூட அவனுக்கென்று தனியாக கேபின் இருக்கும், அது மட்டும் இல்லாமல் இவள் இவனுக்கு சொந்தம் என ஊருக்கே தெரியும், அதனால் ஏதேனும் பார்சல் வாங்கும் போலாவது அவனிடம் சிறிது தோட்டதில் சந்திக்கவாவது நேரம் கேட்கலாம் என்று யோசித்திருந்தாள்.  நிறைய யோசித்து அதற்கு மேல் யோசிக்க முடியாமல் இங்கு சந்திக்கும் முடிவிற்கு வந்திருந்தாள். 
      கடையின் நுழைவு, நல்ல பளிச்சென வெள்ளை அடுக்குகள் வைத்த கேபின் இருந்தது. அடுக்குகளில் இயற்கை முறையில் தயாரித்த கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், நலங்கு மா, சமையல் மஞ்சள் பொடி, முருங்கை கீரை பொடி, கருவேப்பிலை பொடி, தூதுவளை பொடி, சுண்டை வத்தல், கருப்பட்டி, பனைகற்கண்டு, நாட்டு சர்க்கரை இன்னும் ஏதேதோ இருந்தது. எல்லாம் வரிசையாக அடுக்கி இருந்தது. பார்க்கவே நன்றாக இருந்தது.
       அப்போது மணி கேபின்னில் அமர்திருந்தான். இவள் கார்த்தியின் தங்கை என நன்றாக தெரியும். அதனால் பார்த்த உடன் கண்டுகொண்டான்.
“வாங்கக்கா. ஏதாவது வேணுமா. எல்லாம் நம்ப ரெடி பண்ண ப்ராடக்ட்ஸ் தான். நல்லா இருக்கும் என்ன வேணும்க்கா.” என சொல்லி கொண்டே பொடிகளில் சிலவற்றை எடுத்து இவள் முன் வைத்தான்.
“பரவாலைங்க, போறப்போ வாங்கிக்கிறேன்ங்க.” 
“சரிங்கக்கா. உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க இப்போவே எடுத்து வச்சிடுறேன். நீங்க கிளம்புர அப்போ எடுத்துக்கோங்க ” என இவன் பேச
‘அடேய் நான் என்ன வேலைக்கு வந்தேன்… என்கிட்ட இப்படி பிசினஸ் பாக்குறியே டா. நல்லா வருவிங்க டா எல்லாம்’ என நினைத்தவள், இவ்வளவு சொல்லுகிறானே ஏதாவது வாங்குவோம் என சில பொடிகளை எடுத்து வைத்தாள். அது என்ன என்று கூட அவளுக்கு தெரியாது.
 மணி, அதை சர சர வென அங்கே இருந்த சிறு பனவோலை அலங்கார கூடையில் எடுத்து மூடி தனியாக வைத்தான். அதன் பிறகு தான் அவளை விட்டான். 
“உள்ள போங்கக்கா. இப்போ லஞ்ச் டைம் தான். வாங்க நான் சொல்லிவிட்டு வரேன்.”
“இல்ல பரவாலைங்க. நான் போய்க்கிறேன்.”
“அட இருக்கட்டும்க்கா, நீங்க நம்ப ஃபேமிலி, இது கூட செயலைன்னா எப்படி, வாங்க வாங்க…” என அடம்பிடித்து உள்ளே இவளோட வந்தவன், ஸ்ரீயை ஒரு டேபிலில் அமர ‌வைத்தான்.
டேபிலில் நன்றாக அமர்ந்தவள் சுற்றி பார்த்தாள். 
இப்போது தான் முதன் முதலில் உள்ளே வந்திருக்கிறாள். என்னதான் இந்த கடை இங்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் பக்கம் இருந்தும் இவள் வந்ததில்லை. இப்போது தான் நன்றாக பார்க்கிறாள்.
     உணவகம் மேல முழுதாக மூங்கில் கட்டையின் மேல் தென்னை கூரையால் வேய்ந்திருந்தது. தென்னை கூரை என்றவுடன் சாதாரணமாக இல்லாமல் நல்ல நேர்த்தியாக அமைதிருந்தார்கள்.  அறை நல்லா உயரமாக காற்றோட்டமாக இருந்தது. நாவீனமான சாயலில் கிராமத்து மனம் வீசும் உணவகம் கட்டியிருத்தான். 
சுவர்களில் அனைத்திலும் ஓவியங்கள்.
தாயின் மடியில் பிள்ளை அமர்திருக்க சங்கில் பால் கொடுக்கும் காட்சி. 
காவிரி ஆறு ஆர்ப்பரித்து ஓட, கரையில் துள்ளும் குழந்தைகள், அவர்கள் அருகே நிற்கும் கால்நடைகள். கால்நடைகளின் கொம்புகள், வால் எல்லாம் தனியாக செய்து மாட்டி இருந்தது. 
வயலில் ஏர் உழும் உழவன், அதன் தொடர்ச்சியாக நெல்லில் இருந்து அரிசி உருவாகும் முறைகள்.
திண்ணையில் அமர்த்து பேப்பர் படிக்கும் தாத்தா அவர் அருகே உட்கார்ந்து பூ கட்டும் பாட்டி , பாட்டியின் அருகே அந்த பூக்கட்டுதலை ஆர்மாவமாக பார்க்கும் சிறு பெண் குழந்தை.
இவை அனைத்தம் மிக கலைநயத்துடன் வித விதமான வண்ணங்களில் பார்க்க பசுமையான பின்னனியில் இருந்தது.  
இதை பார்க்கவே ஸ்ரீக்கு கண்கள் போதவில்லை. 

Advertisement