Advertisement

                   திங்கள் காலை 11.30 மணி. வாசுவின் வீடு. சிவசு தாத்தா டி‌வியில் மாயாபஜார் படத்தில் மூழ்கி இருந்தார. சோபாவில் உட்கார முடியாவில் அவரால். 
“ சுண்டலி அங்க பாரேன். என்னா பாட்டு பாரேன். இப்போ தட்டெலாம் தான வரும் பாரேன். “ என சிறு குழந்தையாக குதூகலித்து கொண்டிருந்தார்.
“ ஒன்னா டி‌வி இல்ல சின்ன ராசா ஃபோன்னு ஏதாவது விடுறிங்களா நீங்க. படுத்து உறங்குங்கனு சொன்ன கேக்குரிங்களா “
      கால் நீட்டி கீழே அமர்த்து அரிசி புடைத்து கொண்டிருந்தார். பின் கட்டில் இருந்து உள்ளே வந்த இரண்டு கோழி குஞ்சு, மெல்ல இவர் அருகில் வரவும், அதற்கு கொஞ்சம் அரிசியை எடுத்து அப்படியே போட்டார். அது இரண்டும் அதை உண்ண ஆரம்பித்தன.
     பின் கட்டில் இருந்து குளித்து விடு விடு உள்ளே வந்த வாசு அவசரமாக அணிந்த சட்டை, பாண்ட் அணிந்து கொண்டிருந்தான். 
“ ஏன் ஆச்சி எத்தன தடவ சொல்லிருக்கேன். என் டிரஸ் எல்லாம் பின்கட்டுல இருக்கட்டும், உள்ள நிறைய எடுத்துட்டு வராதிங்கனு. இன்னைக்கு எல்லாத்தையும் கொண்டு வந்து இங்க போட்டுருக்கிங்க. அவசரமா வெளியே கிளம்புனும்னா, எல்லாம் மாத்தி மாத்தி வச்சு, என்னையே அலைய விடுறிங்க. “ என அச்சியிடம் கத்திக்கொண்டிருந்தான் வாசு.
“ கோவிச்சுக்காதாயா… என் சின்ன ராசா ஏன் இவ்ளோ கோவம் வருது…நேத்து ஒரே மழை அதான் இங்க உள்ளே வச்சேன். அது தப்பா, ஆச்சி கிட்ட நீயே கோச்சிக்கிட்டா…ஆச்சி எங்க போவேன். “ என வாசுவை சின்ன குழந்தையை சமாதான படுத்துவது போல் சமாதானப்படுதினார்.
“ ப்ச் நான் அதுக்கு சொல்லல. ஒரு அவசரத்துக்குனா, இப்போ தேட வேண்டியதா இருக்குள்ள. “ இவருக்கு புரியவைக்க முடியவில்லையே எனும் குரலில் வாசு. 
“ காலையில இருந்து தோப்பு வயல்னு ஒடிட்டே இருக்க, ஒரு வாய் சாப்பிட்டு போ ராசா. “
“ போறப்போ நம்ப கடைல சாப்பிட்டுகிறேன் ஆச்சி.”
“ நீ சும்மா இரு. ஆச்சி இப்போ வந்தரேன் ” என்றவர் சமையல் அறையின் உள் சென்றார். 
சீதாவுக்கு சிறிது காலத்துக்கு முன்பே கர்ப்பப்பை சார்ந்த சிகிச்சை சில  நடந்திருபதால், இன்றைக்கு அவரும் கோதண்டமும் வருடா வருடம் செல்லும் வழக்கமான பரிசோதனைக்கு கிளம்பிக்கொண்டு இருந்தனர். சீதா இப்போது நன்றாக தான் இருக்கிறார்.  கோதண்டம் வாசுவிற்கு எப்படியோ ஆனால் சீதாவிற்கு அன்பான கணவர், அக்கறையான மன்னவன்.
ஒரு பொழுது சீதாவிற்கு கர்ப்பப்பை எடுத்துவிடலாம் என்ற நிலை வந்த பொழுது கூட நம்பிக்கை விடாமல் அங்கே இங்கே என அலைந்து, இயற்கை மருத்துவதிற்கு மாநிலத்திலே பெயர் பெற்ற ஒரு இயற்கை மருத்துவரிடம் அழைத்து சென்று கூடவே இருந்து நன்றாக பார்த்துக்கொண்டார். சீதாவின் உடலை சுத்தம் செய்வது வரை எல்லாம் கோதண்டம் செய்தார்.   
அங்கே முடிந்து மறுமுறை எப்போவும் பார்க்கும் டாக்ரிடம் வந்து காட்டவும், அவரே சிறிது ஆச்சர்யம் அடைந்துவிட்டார். பிறகு எப்போவும் போல் சில மருந்துகள் என சீராக இப்போது சீதா நன்றாக இருக்கிறார். 
பிள்ளைக்கு எப்படியோ ஆனால் மனைவிக்கு இணையற்ற கணவன் கோதண்டம். வாசுவிற்கு அவர் மேல் மிகுந்த மரியாதை உண்டு, சில ஆற்றாமை உண்டு ஆனால் கோபமமும் உண்டு. அவனின் கோபம் வித்யாசமானது. கோதண்டதிற்கு புரியாது. 
அவரவர் அவர்கள் வேலையில் பரபரப்பாக தயாராகி கொண்டிருக்க, வாசு அவனது லாப் டாப்பை முதுகில் மாட்டும் பேகில் எடுத்து கொண்டவன், இன்னும் சில செடி, கொடி, ஏதோ சாம்பல் நிற உரப்பொடி என சாம்பிள்களாக ஏதோ தனித்தனியாக கவரில் எடுத்து வைத்தான், ஆச்சி இன்னும் வெளியே வரதாததைக்கண்டு, 
“ ஆச்சிசிசிசிசிசிசிசிசி …… “ என கத்தினான் வாசு.
“ இந்தா வரேன் “ என்றவர், காலையில் சுட்ட இட்லியை துண்டு துண்டாக வைத்து அதன் மேல் சாம்பரை ஊற்றி நெய் விட்டு எடுத்து வந்தார். 
அவர் எடுத்து வரவும், கோதண்டமும் சீதாவும் அவர்கள் அறையை விட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது. 
இவன் அவரை பார்க்காமல், சீக்கிரமாக சாப்பிட்டு கொண்டு இருந்தான், பார்த்தால் நிச்யமாக ஏதாவது பேச்சு வரும். 
ஆச்சி கூட உள்ளே பயந்துகொண்டே இருந்தார். இப்போது தான் பேரன் சாப்பிடுகிறான், மகன் ஏதாவது பேசிவைப்பானோ என்ற தவிப்பு. 
சீதா சாமி கும்பிட சாமி அறைக்கு சென்றதும்,
“ ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும். நீங்க இன்னும் ரெண்டு இட்லி சேத்தி வைங்க. நல்லா உள்ள தள்ளட்டும், துரை எங்க கிளம்பிட்டாராம். 
ஏதாவது உறுபிடியாகாத கூட்டதுக்கு போரராம, பின்னாடி பையெல்லாம் தொங்குது. 
உங்க பேரனுக்கு பொண்ணு தேடுறிங்களே. விவாசயினா எவன் நம்பி பொண்ணு குடுப்பான் . நல்லா வெளிநாட்டுல பார்த்துகிட்டு இருந்த வெளியவிட்டுட்டு இங்க வந்து என்ன பண்ணாரு உங்க பேரன்.
அட பொண்ணு குடுக்கறது இருக்கட்டும். இவரே போய் விரும்பினா கூட எந்த பொண்ணு நம்பி வருவா. “ அப்படி இப்படி என பேசிக்கொண்டே போனார்.
இவ்வளவோ பேச்சு வாங்கிக்கொண்டே, அதை கண்டுகொள்ளாமல்  அவசரமாக இட்லி விழுங்கி கொண்டிருந்தவனுக்கு அவர் கடைசியில் சொன்னது கேட்டதும், கை நின்று விட்டது.
சிவசு தாத்தாவிற்கு பேரன் பேச்சு வாங்குவது பிடிக்கவில்லை, இவர் ஏதாவது வாசுவின்‌ பக்கம் பேசினால், அதற்கும் அவனுக்கு தான் இன்னும் பேச்சு விழும். அதனால் எழுந்த வேகத்தில் வெளி திண்ணைக்கு சென்று விட்டார்.
ஆச்சி பயந்தே விட்டார், ‘ போச்சு இன்னைக்கு ராசா சாப்பிடாப்புல தான் ‘ என பயந்து கொண்டே அவனை பார்க்க, 
வாசுவிற்கு ‘ எந்த பொண்ணு நம்பி வருவா ‘ என்ற கோதண்டதின் வாக்கியம் இவனை தாக்கிய நேரம்
‘ அதான் என்ன நம்பி வந்துட்டாளே என் செல்ல முயல் குட்டி ஸ்ரீ,  அடங்காத ராங்கி ‘ என மனதில் கொஞ்சலும் மிஞ்சலுமாய் நினைதவனுக்கு உதட்டில் சிறு முறுவல் பூக்க, அதை அவன் தாடைய கடினபட்டு மறைக்க பார்க்க, அவனது மீசையும், தாடியும் அதற்கு ஒத்துழைத்தது. கடினமான முகத்தில் கூட ஒரு இளக்கம். விறைத்து கொண்டு நின்ற முதுகு கூட சற்று இளகிற்று. 
இத்தனை ரணகாலதிலும் ஒரு குதூகலமாய் அவனின் ராங்கி அவன் நெஞ்சில் இனித்தாள். 
எங்கே பேரன் சாப்பிடாமல் போய்விடுவானோ என்று அவனை விடாமல் பயந்து பார்த்துக் கொண்டிருந்த ஆச்சிக்கோ இது எதுவும் கண்களில் இருந்து தப்பவில்லை, மயக்கம் போட்டு விழாத குறை தான்.  அதற்குள் சாப்பிட்டு முடித்திருந்தான் வாசு. அவன் சாப்பிட்ட நெய், சாம்பார், இட்லி என நாவில் இப்போது அவ்வளவோ ருசிதது. 
இதற்குள் சாமி அறையில் இருந்து வந்த சீதா கோதண்டதை பார்வையால் அடக்கி, இழுத்து கொண்டு மருத்துவமனைக்கு கிளப்பிக்கொண்டு சென்று விட்டார்.  
வாசு கை கழுவி வந்து அவன் பேக்கை எடுத்துகிக்கொண்டு கிளம்பினான். வெளியே செல்லும் முன் அவன் முன் வந்த ஆச்சி, அவர் கையில் வைத்திருந்த உப்பும் வரமிளகாய்யும் வைத்து அவன் முகத்தை மூன்று முறை சுற்றினார். 
“ ஏன் ஆச்சி இப்படியெல்லாம் பண்றிங்க. “ 
“ இரு வரேன் ராசா. “
என்றவர் அதை பின்கட்டில் எரிந்து கொண்டிருந்த மண் அடுப்பில் போட்டு விட்டு வாசுவிடம் வந்தார். 
வாசு என்னவென்று பார்க்க, ஆச்சிக்கு எப்படி இவனிடம் கேட்பது என தெரியவில்லை,
“ ராசா நான் ஒன்னு கேட்பேன் நீ உன் மனசுல பட்டத அப்படியே சொல்லணும். “
“ சொல்லுங்க ஆச்சி. “
“ நீ யாரையாவது கட்டிகணும்னு மனசுல நினச்சு வச்சிருக்கியா ? “ 
ஒரு நிமிடம் கண்களில் ஆச்சர்யம் காட்டியவன், எப்படி இப்படி கணித்தார் என யோசனையா நின்ற சமையம், 
“ நீ யாரு நினச்சிருந்தாலும் சரி, நான் உங்க தாத்தா கிட்ட சொல்லி பொண்ணு கேக்குறேன். பொண்ணு வீடு வேற ஆளுங்களா இருந்தாலும் பரவாலா. 
பொதுவுல ரெண்டு வீட்டுக்கும் தெரிஞ்சவங்கல வச்சு பேசிக்கலாம். 
உங்க அப்பா சொல்ற மாதிரி வேலை இல்லனு யோசிக்காத, நீ தான் ஹோட்டல் வச்சிருக்கல, நீ நல்லா தான அத பார்த்துகுற.
உழைப்பு தான் கண்ணு முக்கியம். உன்கிட்ட அது நிறையா இருக்கு சாமி. இன்னைக்கு இல்லைனாலும் பின்னாடி நீ நல்லா வருவ. அது எனக்கு தெரியும். 
நீ என்கிட்ட தைரியமா சொல்லு. நான் எல்லாம் பார்தூக்குறேன். “ என எதிர்பார்ப்போடு அவனை நோக்க, உள்ளம் உருக்கிற்று வாசுவிற்கு. 
ஆச்சிக்கு எழுபத்தி மூன்று வயது, இந்த வயதில் தன் முகம் பார்த்து ஏங்கி நிற்கிறார். ஒரே வினாடி சொல்லிவிடுவோமா என்று நினைத்தான். 
ஆனால் அப்படி சொல்லிவிட்டால் அவ்வளவு தான். அடுத்த முறை ஸ்ரீ ஊருக்கு சென்று திரும்பி வரும் நாள், இவர்கள் திருமண நாளாக தான் இருக்கும் என இவனுக்கு தெரியும்.
வெளி ஆட்கள் என்றால் கூட நேரம் எடுக்கும். இப்போது சொந்தத்துக்குள் தான் என்று தெரிந்தால், அதுவும் ஸ்ரீ என்று தெரிந்தால், அவரை கையிலே பிடிக்க முடியாது. 
அதனால், “ நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல ஆச்சி. “ என்று விட்டான்.
ஆச்சியின் முகம் கூம்பி விட்டது. 
அவரின் இருக்கன்னத்தையும் இரு கைகளாலும் பிடித்தவன் இருபக்கமும் ஆட்டி, “ இவ்ளோ நாள் வைட் பண்ணிங்க தான இன்னும் கொஞ்ச நாள் வைட் பண்ணுங்க, நம்ப நல்ல மருமகளா புடிச்சிடலாம். 
அப்புறோம் ரெண்டு பேரும் நல்லா கோவில் குளம்னு ஊர் சுத்துங்க, நான் சட்னிக்கு பூண்டு உரிக்கிறேன். சரியா. “ என அன்று ஆச்சி சொன்னதை நினைவு படுத்த, 
“ போடா கிறுக்கு பயலே.” என்று சொல்லிவிட்டு சமையல் அறைக்கு திரும்பி விட்டார். அவருக்கு ஏமாற்றம் வரும் போது தான் வாசுவை இப்படி அழைப்பார். அதனால் அவரின் பின்னாலே சமாதான படுத்த சுற்றி கொண்டு இருந்தான். அவர் சிறிது சமாதானம் ஆனதும் தான் கிளம்பினான்.
வீட்டில் இருந்து பைக்கில் கிளம்பி கடைக்கு செல்லும் வரை இதே யோசனை தான்.       
      ஆச்சிக்கு மட்டும் தெரிந்தது, இன்று இரவு ஸ்ரீ ஊருக்கு கிளம்புகிறாள் முடிந்தால் இன்றே கூட நிச்சயம் செய்து அவளை ஊருக்கு அனுப்பி வைப்பார், வாசுவின் திருமணம் என்றால் அவ்வளவு ஈடுபாடு இருக்கும். 
ஆனால் அப்படி திருமணம் கூட செய்துக்கொள்ளலாம். ஆனால் அதன் பின் இவனது மனைவியின் நிலைமை. 
இவன் எவ்வளவு பேச்சை வேண்டுமென்றாலும் தாங்கிக்கொள்ளலாம், ஆனால் ஸ்ரீக்கு பேச்சு விழுந்தால், என்ன செய்வான்.
 இன்னும் ஐந்தே மாதம் தான், அது வரைக்கும் பொறுமை காத்தால், அதன் பிறகு இவன் மனைவியானால் கோதண்டம் என்ன ஊரில் யாரும் அவனை ஒரு வார்த்தை சொல்லமுடியாது அப்படி பட்ட செயல்த்திட்டம் வைத்திருக்கிறான். அது மட்டும் அல்ல அதை தொட்டே ஒரு பெரிய விஷயம் ஒன்றை நினைத்திருக்கிறான், அதெல்லாம் நிறைவேறினால் பிறகு திருமணம் தான். இவ்வாறு மனதை சமாதானப்படுத்தி இவனது உணவகத்தை நோக்கி பயணமானன்.
          
  
  
 
 
    
   
  
    
     
   
   

Advertisement